ரொம்ப நாளா இந்த ஊர்லயும், ஏன் நம்ம ஊர்லயும் அதிகமா பேசப்படும் ஒன்னு இந்த டேட்டிங்! அதென்னா டேட்டிங் அப்படின்னு கொஞ்சம் ஆராயத்தோணுச்சு. நமக்கு பருவம் வந்த காலகட்டத்திலே, ஏன் ஆதி தொட்டு சொல்வது, 'கண்டதும் காதல்'ங்கிற கதை தான்! அதுவும் சினிமால கொஞ்சம் மேலே போய் காணமல் காணுவதும் காதல்னு புது புது கான்செப்ட்ல காதல் பத்தி சொல்லி கொடுத்துருக்காங்க. அப்படி இருக்கிறப்ப இப்ப என்னாது இது 'டேட்டிங்'ன்னு ஒன்னு புதுசா இந்த மேலை நாட்டு மக்கள் கத்து கொடுத்த, இல்ல ஜஸ்ட் போட்டு கொடுத்த கான்சப்ட் வச்சக்கிட்டு நம்ம ஊரு சின்னசிறுசுங்க அலையது, அது என்னா உண்மையிலே, அதென்ன வெறும் சின்ன சிறுசுங்களுக்கு மட்டுமா, இல்ல முத்திப்போன பெருசுகளுக்கும் உண்டா, எல்லாத்துக்கும் மேலே நம்ம கலாச்சர பாணிக்கு ஒத்து வரக்கூடிய ஒன்னான்னு யாருக்கும் தெரியுமா? மொத்தத்திலே என்னா இதுன்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் விளங்கிச்சு! ஆக நாம் கொண்டாடும் காதலுக்கு இது முற்றிலும் எதிரான ஒரு கான்செப்ட், நம்ம ஊரு கலாச்சார கண்ணோட்டத்தோட பார்த்தா, ஆனா சில நல்ல உண்மைகளும் தெளிவாகும், இதோட முழு அர்த்தம் புரிஞ்சு, ஐடியலா அதன் சாராம்சம் படி நடந்தா, வெற்றிகரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும்! ஆக அதப்பத்தி கொஞ்சம் பார்ப்போமேன்னு தான் இந்த பதிவு!
(ஒன்னு சொல்லிக்கிறேன், ஏற்கனெவே, நான் ஒரு பதிவில பதில் சொன்ன மாதிரி, திருடுனாதான் திருட்ட பத்தி பேசமுடியும்னு அரத்துறவங்களுக்கு, இது எதுவும் என் அனுபவ முறையில் வந்த கண்ணேட்டமில்லை, படிச்சு, அறிஞ்சு, சில உண்மை மூளைக்கு என்னா எப்படின்னு பட்டதாலே வந்த கண்ணோட்டங்கள் தான்! நமக்கும் இந்த டேட்டிங் எல்லாம் எட்டு காத தூரம்..ஹி,ஹி.., அப்பறம் வீட்ல யாரு அடி வாங்கிறது, அதுனாலே இந்த டிஸ்கிலெய்மர்!)
மொத்தத்திலே இந்த டேட்டிங்க்கு என்னா விளக்கம் கொடுக்கிறாங்கன்னா, இந்த ஆங்கிலத்திலே சொல்லுவாங்களே 'Courtship'ன்னு அதோட அங்கம்கிறாங்க, அதாவது இதை தமிழில், இந்த 'Courtship'ஐ சொல்லனுமுன்னா, 'திருமணத்தை முன்னிட்டு காதலாடுதல்'னு சொல்லலாம். அதாவது திருமணம் செய்ய போற ஒரு ஆணும் பெண்ணும், அதற்கு முன் சந்தித்து கொள்வது, அது நேருக்கு நேராக முக்காவாசி நேரம் அமையும், இல்ல, நம்ம சினிமாவிலே வர கதைகள் படி, இன்டெர்நெட்டில் சந்தித்து காதலாடுவது, இதை நம் கதிர் படம் எடுத்தாரு 'காதலர் தினம்'ன்னு, அப்படி காதலாடுவதுக்கு வர்ச்சுவல் டேட்டிங் ('virtual dating')ன்னு பேராம்! அப்புறம் போனிலே கடலை போட்டு காதலாடுவது, இதைக்கூட வச்சு முரளி நடிச்ச படம் ஓன்னு வந்திச்சே, தெரிஞ்சவங்க ஞாபகமிருந்தா சொல்லுங்க!, அப்புறம் கடுதாசி போட்டே காதாலாடுவது, அகத்தியன் செஞ்ச 'காதல்கோட்டை' சினிமா மாதிரி, அப்புறம் கவிதை, பாட்டு எழுதி காதாலாடுவது, இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு! அப்புறம் வெறும் பரிசுப்பொருட்களா கொடுத்து மனதை கவ்ர்ந்து காதலாடுவது, ஆக இதெல்லாம் வேறு வேறு வழி முறைகள்!
அப்படி பார்க்கிறப்ப, இந்த டேட்டிங் என்பது, இந்த மேற்கத்திய கலாச்சாரத்திலே, தனக்கு பொருந்தி வரக்கூடிய பார்ட்னர்களை நேரில் சந்திச்சு, பேசி, பழகி, பல விஷயங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுங்கிறாங்க! இந்த டேட்டிங்கோட நோக்கம் என்னான்னா, சந்திக்கிற ஆண் பெண் இருவரும் பரஸ்பரம் அறிந்து கொண்டு மேற்கொண்டு உறவுகளை துவக்கலாமா அப்படின்னு யோசிச்சு முடி வெடுக்க தான். ஆனா இதோட மொத்த அர்த்தமும், ஆளை தேத்தி செக்ஸ் வச்சக்கத்தான்னு ஒரு தப்பான அபிப்பராயம் எல்லா மக்கள் கிட்டயும் இருக்கு! குறிப்பா நம்மூரு மக்கள்கிட்ட, சின்னசிறுசங்கள் அந்த நோக்கம் தான் மேலிட்டிருக்கு. மேற்கொண்டு பெரியவர்களும், சின்னசிருசுங்க டேட்டிங்னு போன இந்த மாதிரி போயி வாயிவயிறுமா வந்து தொலைஞ்சிடதான்னு ஒரு தப்பு அபிப்ராயம் வச்சி இருக்காங்க. ஆனா இதன் முக்கிய அம்சம் என்னான்னா, அதுவும் இந்த டேட்டிங் மீட்டிங்ல அவங்க பேச தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க!
அதாவது, இரண்டு பேரும் பேசி பழகி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் என்னானா: ஒருத்தர் ஒருத்தர் குணாதிசியங்கள், நேர்மை, நாணயம் (Character and integrity) போன்றவை, மற்றும் விருப்பு, வெறுப்புகள்(Interests) , பழக்க வழக்கங்கள்(Habits) ! எல்லா விஷயங்களிலும், அது சினிமாவிலிருந்து, கடவுள், ஆன்மீகம், சொந்தம், பந்தம், படிப்பு, அப்படின்னு எல்லாத்திலேயும் தம் தம் மனப்போக்கு (Attitudes), அப்புறம் எது எதுல்ல அவங்க முக்கியத்துவம் (Priority) கொடுக்க ஆசைப்படுவாங்கன்னு! அதுவுமில்லாம அனைத்து கொள்கை மற்றும் செயல்பாடுகளில் தாங்கள் கொண்ட மனமுதிர்ச்சி (Maturity), பிறகு எதில் எல்லாம்,அதுவும் சிலபல வாய்ப்புகள் வரும் பட்சத்தில் எதில் முன்னுரிமை (Preferences) கொடுப்போம் என்பதிலிருந்து, சாமி பூதம் பத்தியும், அரசியல் கண்ணோட்டம், எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், கடமைகள், குடும்ப சுமை, தாம் வழி வந்த பாரம்பரியம், வழிமுறைகள், தம் தம் வயசுக்குண்டான இடைவெளி, அதனால் ஒருவருக்கொருவர் முதிர்ச்சியின் பலனாய் பரஸ்பரம் விட்டு கொடுக்கக்கூடிய தன்மைகளை அறிந்து கொள்வது, அப்புறம் எப்படி முன்னேற வழி அமைத்துக்கொள்வது, மென்மேலும் வளர்ச்சி அடையும் வழிகளில் ஈடுபட உண்டாகும் திட்டங்களை பேசி ஒத்துக்கொள்வது, ஏன் நிதிநிலை சீர்படுத்திக்கொள்வது, ஒருத்தொருகொருத்தர் எப்படி கருத்து வெளிப்படுத்துகொள்ள முற்படவேண்டும் எல்லாம் தெரிந்து கொள்வது. கடைசியா எப்படி செக்ஸ் வச்சிக்கலாம், என்னென்ன ஆசை, காமக்கலை அறுபத்து நாலுல என்ன தெரியும் தெரியாதுன்னு பேசி தெரிஞ்சுக்கிட்டு, கல்யாணம், கச்சேரின்னு கொண்டாடிட்டு, ஏன் எப்ப புள்ள பெத்துக்கலாம்னு திட்டம் போடற வரைக்கும் பேசி தெரிந்து கொள்ள தான் இந்த டேட்டிங். ஆனா, நான் கடைசியா சொன்ன காமக்கலை அதிகம் பேசி, கணக்கு பண்ணி காரியம் முடிக்க தான் டேட்டிங்னு ரொம்ப பேரு நினைச்சிக்கிட்டிருக்காங்க!
ஆக நான் மேலே சொன்ன அத்த்னை விஷயத்தையும் ஆராஞ்சு, ஒத்து வந்தா மேற்கொண்டு உறவுக்கு வழி கொடுப்பது இல்லையேல் 'low compatibility'ன்னு சொல்லி ஒருத்தொருக்கொருத்தர் டாட்டா காட்டிட்டு பிரிஞ்சு போயிடுறது. நம்ம மெளலி ஒரு படம் எடுத்தாரே, சுத்தரவரைக்கும் இரண்டு பேரும் சுத்திட்டு,ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு, அப்புறம் ஒருத்தொருக்கொருத்தர் கர்சீப் மாத்திக்கிட்டு பிரிஞ்சு போவாங்கல்ல, அந்த மாதிரி கதையாயிடுமாம்! அதுவே ஒத்து வந்தா கல்யாணம் குழந்தைன்னு ஆனப்புறமும், டேட்டிங் போய், ஒருத்தொருக்கொருத்தர் அந்நியோயமா இருக்கிறது இன்னும் நல்லதுன்னு சொல்றாங்க! (ஹலோ, நான் சொல்றது கல்யாணம் கட்டிக்கிட்ட புருஷன் பொண்டாட்டிங்க இரண்டு பேரும் கல்யாணத்துக்கப்பறமும் டேட்டிங் போறதை, தேத்தின பார்ட்டிங்களோட இல்லை-:))ஆக டேட்டிங்கிறது சின்னசிறுசுங்களுக்கு மட்டுமில்ல, பெருசுங்களுக்கும் உண்டுன்னு இப்ப புரிஞ்சுதா! ஆக, இந்த டேட்டிங்கிற பதம் எதை குறிக்கிதுன்னா, இரண்டு பேருக்கான உறவுமுறைகள் ஒருத்தொருக்கொருத்தர் ஒரு தேதியில் சந்திப்பதே! அதுவும் 'ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற நம்மூரு கான்செப்டை வழுவாக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி, ஆனா நம்மலை மாதிரி ஆணித்தரமா சொல்லி அடிக்காம! ஆங்கில விளக்கம் அப்படிதான் இருக்கு,'These terms can imply different degrees of commitment and monogamy, but with some ambiguity'
ஆனா இது நம்ம ஊருக்கு ஒத்து வராத ஒரு பணால் விஷயம்! நம்ம கலாச்சாரத்துக்கு, இந்த கல்யாணத்துக்கு முன்னே சுத்திர இந்த 'Courtship'ங்கிற விஷயம் எல்லாம் நடக்காத காரியம் (இப்ப அது கொஞ்சம் மாறிக்கிட்டு வந்தாலும்), ஏன்னா, அப்பன் ஆத்தா பாத்து வைக்கிற பையன் புள்ளையை கட்டிக்கிட்டு, arranged marriages ங்கிற கான்செப்ட்ல வர்ற உறவுமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு, நான் முன்னே சொன்ன அத்தனை விஷயங்களையும் கல்யாணத்துக்கப்பறம் 'explore' செஞ்சு பாத்து, அதில சில சமயம் ஒத்து போய், பெரும்பாலும் ஒத்து போகம, காம்பரமைஸ் பண்ணி வாழ்ந்துக்கிட்டோ, இல்லே, உனக்கு வேணா, எனக்கு வேணான்னு, அறுத்து விட்டுக்கிட்டு போற கதை தான் ஜாஸ்தி. சில சமயம் விளைஞ்சதுங்க, காதல்ங்கிற வலையிலே விழுந்து நான் சொன்ன அத்தனை 'compatibility'கள் எதையும் காதலிக்கறப்ப 'explore'பண்ணாம , 'உணர்ச்சி குளிகைகளின் உச்சம்', 'கணக்கு பார்த்து வருவதா காதல்'னு சொல்லி திரிஞ்சுக்கிட்டு கடைசியிலே கல்யாணம் பண்ணி, மறுபடியும் காம்பரமைஸ் இல்லை, வெட்டிக்கிட்டு போற ஒன்னு தான் ஜாஸ்தி நடக்கிறது!
ஆனா அதுவே இந்த டேடிங்கிற கான்செப்ட், இப்ப நம்ம ஊர்ல கொஞ்சம் கொஞ்சமா வேறே நோக்கத்திலே போறதும் சரியில்லை! சரி இதெல்லாம் சரி, இவ்வளவு பார்த்து பேசி அடுக்கி, எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிக்கிற மேலை நாட்டு கலாச்சாரத்திலே, அப்ப ஏன் பெரும்பாலும் கல்யாணங்கள் வெற்றியாவதில்லை, அங்கேயும் இந்த டைவர்ஸ் ரேட், நம்மலை விட அதிகமா இருக்கே,ஏன், அப்படின்னு நீங்க கேட்கிறது புரியது. என்ன தான் 'compatibility match'ன்னு பார்த்து தெரிஞ்சு, அறிஞ்சாலும், கடைசியிலே அது 'workout' ஆகிறதில்லை! பிறகு நம்ம பண்ணிக்கிற காம்பரமைஸ் அவங்க பண்ணிக்கிறதில்லை, அது தான் காரணம்! மேற்கொண்டு ஒருத்தொருக்கொருத்தர் சாகும் வரை துணையா இருப்போம், நமக்கு நாமேன்னு இருந்துக்கிறதில்லை, இன்னிக்கு நீ, நாளைக்கு யாரோன்னு தான்! நான் எல்லாரையும் சொல்லல, பெரும்பாலும் அந்த மனோபாவத்தோட நடக்கிறதாலே, அதை இந்த சமூகம் ஒத்துக்கிறதாலே, அடுத்தடுத்து துணை தேட போய்டுறாங்க! திருப்பி டேட்டிங், துணை தேடுவது தேர்ந்தெடுப்பதுன்னு போறதாலே கமர்சியலா டேட்டிங் சர்வீஸஸ் எக்கச்சக்கமா இங்கே தோன்றி, காசு சம்பாரிக்கிறதுல்ல குறியா இருக்காங்க, அதை பார்க்கம் பொழுது இந்த டேட்டிங்கின் அடிப்படை நோக்கம் எதுக்குன்னு இருந்ததோ, அது மாறி வேற விளக்கத்து போயிடுது! ஆனா, இது நமக்கு இது முற்றிலும் ஒத்து வராத ஒன்னு!
ஆனாலும், நாம் கொள்ளும் காதல், இது போன்று கணக்கு வழக்குகளை முன்னின்று அமையாமல், 'வாழ்வோ, சாவோ, ஒருத்தொருக்கொருத்தர் துணையாக இருப்போம், எவ்வளவு கஷ்டம் வந்தாலும்'னு, சொல்லிக் கொண்டு வாழும் காதல்களே கடைசியில் ஜெயிக்கின்றன! ஆக கணக்கு பார்த்து வருவதில்லை காதல், நீங்க என்னா சொல்றீங்க?
Friday, June 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வெளிகண்டநாதரே, இந்த கணக்குக் காதலும் நல்லதிற்கே என தோணுகிறது. அந்த இளம் டேட்டர்கள் ஒரு மெச்சூராக வாழ்கையை ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு தொடங்கும் வாழ்வில் விவாகரத்து அதிகம் ஏன் என விளங்கவில்லை
கணக்குப் பார்க்கும் காதல் நல்லதுங்கிறீங்க! என்ன மெச்சூரிட்டி வந்தாலும், பிரிஞ்சு போறதும் அதிகமா இருக்கே! இதுக்கு முக்கிய காரணம் என்னான்னா, நம்ம ஊர்ல இருக்கிற அந்த Bondingங்கிறது இல்லாம் போறதாலே தான்! அது தாய் தகப்பன்லருந்து ஆரம்பிச்சு எல்லா உறவுகளுக்குமே பிணக்கம்னு இல்லாத தாலேன்னு நான் நினைக்கிறேன். அதுவே இந்த சமூகத்தில் அவன் அவன் அவன் அவன் வழியை பார்த்துட்டு போகனும்ங்கிற கான்செப்டாலக்கூட இருக்கலாம். பட் அதிகம் எதினாலன்னு தெரியல்ல!
சார்,
ஒரு ஜாலியான பதிவு.
டிஸ்கிலெய்மர் சூப்பர். இதையே நான் சொன்னபோது மதுரை ஆட்சியான்னு கேட்டீங்க...
// எவ்வளவு கஷ்டம் வந்தாலும்'னு, சொல்லிக் கொண்டு வாழும் காதல்களே கடைசியில் ஜெயிக்கின்றன! //
சூப்பர்..
பதிவு நல்லா இருக்கு.. நம்மூருக்கு ஒத்துவராத, வராம இருந்த நல்லதுன்னு சொல்லக் கூடிய விஷயம்.. ஆனா நல்லா எழுதி இருக்கீங்க (அனுபவம் இல்லாமலேயே ;))
//டிஸ்கிலெய்மர் சூப்பர். இதையே நான் சொன்னபோது மதுரை ஆட்சியான்னு கேட்டீங்க...//வாங்க சிவபாலன், கரெக்டா காத்திருந்து புடிச்சீட்டீங்க பாருங்க-:)
எந்த கலாச்சாரம் ஒசத்தின்னு பேசுவது இந்த விஷயத்தை பொறுத்தவரை சரியில்லைன்னு தோணுது.ஏன்னா ரெண்டு ஊரிலும் வாழ்க்கை முறை வேறு.டேட்டிங் முறையில் நிறைய தனிமனித சுதந்திரம் இருக்கு.ஆனா குடும்பம் சிதறிப்போகக்கூடிய வாய்ப்பும் இருக்கு.அரேஞ்சுட் மேரேஜில் குடும்பம் சிதறாது.ஆனா பெண்னடிமைத்தனம் எப்படியோ புகுந்துடுது.
நம்மூர் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறது best of both worldsநு தோணுது
//(அனுபவம் இல்லாமலேயே ;)) // டிஸ்கிலெமைர் போட்டும் பார்த்தியாம்மா.. இது தான் பொம்பளங்க குறும்புங்கிறது-:)
செல்வன், நான் கலாச்சாரங்கள் எது ஒசத்திங்கறதுக்காக எழுத வர்றல! இதனுடய சரியான கான்செப்ட் நம்மூர்ல சரியா தெரியறதில்லைங்கிறது தான் என்னோட விளக்கம்!
பார்த்தீங்களா, பட்டிமன்ற தலைவர் மாதிரி தீர்ப்பு கொடுத்திட்டீங்க-:)
//நம்மூர் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறது best of both worldsநு தோணுது// ஒரு objectivityயோட தான் இருக்கீங்க ! வாழ்த்துக்கள்!
//அப்புறம் போனிலே கடலை போட்டு காதலாடுவது, இதைக்கூட வச்சு முரளி நடிச்ச படம் ஓன்னு வந்திச்சே, தெரிஞ்சவங்க ஞாபகமிருந்தா சொல்லுங்க!//
"காலமெல்லாம் காதன் வாழ்க"?
அருமையான பதிவுகளை போடுறிங்க வெளிகண்ட நாதர் தரமான பதிவுகள் குறைவான பார்வையாளர்களையே ஈர்க்கும் என்பதற்கு உங்கள் பதிவும் விதிவிலக்கல்ல என தெரிகிறது! உங்களது பழைய பதிவுகளை எல்லாம் கொஞ்சம் பார்த்துகிட்டு இருக்கிறேன் அருமையாகக இருக்கின்றன. அதற்கு எல்லாம் பின்னர் மொத்தமாக கருத்து சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் சீரிய முறையில்!
சீனு, "காலமெல்லாம் காதல் வாழ்க!" வா??
எவ்வளவுதான் பேசி ,பறிமாற்றங்களின் முதிர்ச்சியில் திருமணம் நடந்தாலும், கல்யாணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை வேறுதான்.
காதலுக்கும் கல்யாண வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. அன்றாட வாழ்வில் பிரச்னைகள், கடந்த கால காதலைப் புறம் தள்ளிவிட்டு யாதார்த்தத்தின் அடிப்படையில்தான் செல்லும். திருமணம் என்பதே சங்கடங்களின் வரவேற்பறைதான். யாருக்கு யார் கூட நடந்தாலும் மனச் சிதைவுகளும் வருத்தங்களும் தவிர்க்க முடியாதது. அதையெல்லாம் மீறி சக உயிரிடத்தில் உள்ள காதல் தக்க வைத்துக் கொள்ளப்படும்போது தோல்விகள் அரிது.
பத்துப் பதினைந்து வருடங்கள் காத்திருந்து, காதலித்து, கல்யாணம் செய்பவர்களுக்குக் கூட பதினைந்து நாட்களில் மன வேறுபாடு ஏற்பட்டு மணமுறிவு வரை போய்விடுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் ஏற்படும் டேட்டிங் விபரங்கள் எந்த மூலைக்கு.
மேலை நாடுகளில் marriage is between individuals& tend to break at the instant of controversies. In our country, marriage is between two families& it takes much effort to break. டேட்டிங் , தெரியாத இருவருக்கிடையிலான சுமுகமான அறிமுகத்துக்கு பயனளிக்கலாமே தவிர, ஆதாரமான வாழ்க்கைக்கு அடிகோலுமா என்பது சந்தேகமே.
வவ்வால், பதிவுன்னு எழுதறப்ப, 'varied subject' எல்லாம் தொட்டு கண்ணோட்டங்கள், கருத்துக்கள் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம். எல்லாமே ஆர்வத்தின் அடிப்படை, சில பேருக்கு லைட்டா எதாவது எழுதி பின்னோட்டம் எழுதி விளையாடுவதிலே ஆர்வம் அதிகம் இருக்கலாம்! பின்னேட்டங்களே, நல்ல பதிவுகளுக்கு 'figure of merit' ஆகிவிடுவதில்லைங்கிறாது என்னோட அபிப்ராயம்!
தாணு, வாழ்க்கையின் எதார்த்தம், நீங்க சொல்றது தான்! இருந்தாலும், இந்த டேட்டிங் னா என்னான்னு ஒரு தடவை நீங்க சரியா புரிய வைக்கனும்னு படிச்சதா ஞாபகம், அதான் உங்களை இங்க வ்ந்து படிக்க சொன்னேன்!
Post a Comment