Monday, June 19, 2006

துளசி காட்டுல (மழை) காத்து!!

என்ன தலைப்பை பார்த்தோன என்னடா நம்ம செடியக்கா காட்ல மழைங்கிறதை அடிச்சிட்டு காத்துன்னு எழுதிருக்கே, என்னா அதுன்னு குழப்பமா இருக்கா! அவங்க காடல தான் எப்பவும் மழையாச்சே, எந்த குறச்சலும் இல்லியே! நான் பேசபோறது தமிழ்மண துளசி இல்லை! இது வேற துளசி, அதாவது 'துளசி தண்ட்டி'ன்னு ஒருத்தரு! இவரு யாருன்னு கேட்கிறீங்களா, ஒலகமகா பணக்காரர்கள் லிஸ்ட் போட்டு இந்த 'Forbes'ன்னு ஒரு அமெரிக்க பத்திரிக்கை வெளியிடுமே, அந்த பத்திரிக்கை, போன மே மாசம் இவரை ஏழாவது மனிதனா காமிச்சிருக்கு! அதாவது ஏழாவது இந்திய பணக்காரன்னா சொல்லி இருக்குங்காங்க! இவரு அறுநூறு கோடிக்கு அதிபதி! உலகத்திலே பெரிய பணக்காரர்கள்ல லிஸ்ட்ல உள்ள இந்தியர்கள் வருசையிலே இப்ப இவரும் ஒருத்தரு! முத பணக்காரரு, லட்சுமி மித்தல், இவரு ஐரோப்பாவிலே இரும்பு காய்ச்சு உருக்கியே, பல ஆயிரம் கோடிக்கு அதிபதி, அப்பறம் நம்ம ரிலெயன்ஸ் சகோதரர்கள், முகேஷ் பையாவும், அனில் பையாவும், பிறகு விப்ரோ அதிபர், ஆஸிம் பிரேம்ஜி, இவரு கம்ப்யூட்டர், மென்பொருள், உலக சேவை, எல்லாம் விக்கிறதுக்கு முன்னே சூரிய காந்தி எண்ணெய் வியாபரம் பண்ணிக்கிட்டிருந்தார்! இவங்களோட இப்ப துளசியும் சேர்ந்திட்டாரு! சரி யாரு இவரு, என்ன பண்ணுனாரு, பெரிய பணக்காரரானாருன்னு கேட்கிறீங்களா? அதை சொல்லத்தானே இந்த பதிவு, வாங்க கீழே பார்க்கலாம்!

இந்த துளசிக்கு போன செப்டம்பர்ல அடிச்ச காத்துதான் அது! அதாவது காற்றாலைகள் பண்ணி விக்கக்கூடிய இவரு கம்பெனி, சுஷ்லான் ('SuZlon Energy') நம்ம பங்கு சந்தையிலே போடு போடுன்னு போன வருஷம் போட்டதிலே, இந்தோ தம்மாத்தூண்டு தான் பங்குக்கு வச்சிருந்த ஷேர்ங்க கொஞ்சத்தை வித்ததாலே இவரு டாப்ல போயிட்டாரு! இவரு பண்ணது நான் ஏற்கனவே சொல்லிக்கிட்டிருந்து மாற்று சக்திக்கான உபகரணங்கள் பண்ணக்கூடியது , அதுவும் சரியான நேரத்திலே, இந்த சரியான வியாபாரம் பண்ண போயி இப்ப உலகத்தில உள்ள இந்திய பணக்காரர்கள்ல இவரு ஏழாவது மனிதன்! நீங்க பங்கு சந்தையிலே விட்டு புடிக்கிற ஆளா இருந்தா, அதுவும் இந்த கம்பெனியிலே ஷேர் வாங்கி இருந்திங்கன்னா, நீங்களும் கொஞ்சம் டாப்ல போயிருப்பீங்க! (இப்ப ஏக இறக்காமாமில்ல இருக்கு, காசை எதும் இந்த ஆட்டையிலே ஜூதாடி உட்ருந்தீங்கன்னா, சாரி, ஆனா இந்த கம்பெனி ஸ்டெடியா நிக்குதுன்னு கேள்வி, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க!) இந்த கம்பெனி பேலென்ஸ் ஷீட் ரொம்ப நல்லாவே இருக்குது! இவரு கம்பெனி உலகத்திலே அஞ்சாவது இடம்! இந்த காற்றாலைகள் மின்சாரம் செய்யக்கூடிய, 'wind turbine generators' பண்ணக்கூடிய கம்பெனி!

நான் ஏற்கனவே மாற்றுசக்தி வேணும்கிறதை பத்தி பதிவு போட்டுருக்கேன், அப்புறம் இன்னைக்கு அதிகம் விலை விக்கக் கூடிய இந்த கச்சா எண்ணெய், எரிவாய், மற்றும் நிலக்கரி போன்ற விரைவில் அழிஞ்சுப்போக்கூடிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரசக்தியால, காசும் ஜாஸ்தியாகுது, சுற்றுப்புற சூழ்நிலையும் மாசுப்படுது! ஆனா இந்த காற்றலைகளால உறபத்தி பண்ணக்கூடிய மின்சாரம் மலிவானது, சுற்றுப்புற சுழல் மாசுப்படாது!! அதுவும் இப்ப வளர்ந்து வரும் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப இந்த வகையான மாற்று சக்தி ஒரு வரப்பிரசாதம்! அதுவும் இப்ப இந்த காற்றாலைகளால உற்பத்தி பண்ணக்கூடிய மின்சாரம் 4500 மெகாவாட் தான், அதுவும் இந்தியா பலவகைகளிலும் உற்பத்தி பண்ற மொத்த மின்சாரத்தில் வெறும் 3.4 சதவீதம் தான்! அதுவே பெருகி பன்மடங்காச்சினா இன்னும் நல்லா இருக்கும்!

சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலே கட்டி வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பீங்க, சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்பீங்க! அது இப்ப நம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('vertical shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, அப்புறம் நான் சொன்ன மாதிரி கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!

இந்த காத்தாடி வந்து இன்னைக்கு வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! இதை இப்ப வர்ற சினிமாவிலே, ராட்சச காற்றாலை பின்னனியிலே காட்சிகள் அமைத்து பாட்டு சுட்டுட்டு வர்றாங்க அந்த நாட்லருந்து! அந்நியன் படத்திலே வர்ற பாட்டு 'குமாரி, என் காதல் குமாரி'ன்னு, அதில் நீங்க பார்த்திருக்கலாம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! நிறைய அந்த பழைய கெளபாய் படங்கள் பார்க்கிறப்ப, அந்த பண்ணை தோட்ட வீடுகளை காமிக்கிறப்ப இந்த காற்றாலையை காமிப்பாங்க! (இப்பவும் எல்லா வீடுகள்லயும் 'scale down verson wind mills' அழகுக்காக வச்சிருப்பாங்க, அப்படி பெரிய ஆலை வச்சிருக்கிரவங்க பெரிய பண்ணைன்னு அர்த்தம்! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க!) ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழியபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டிருக்காங்க!

சரி நம்ம துளசி கதைக்கு வருவோம்! இவரு நேரா இந்த காற்றாலை உபகரணங்கள் பண்ணும் தொழிலுக்கு வந்துடலை! முதல்ல இவரு குஜராத்திலே துணி நெய்யும் ஆலைகள் வச்சிருந்தாரு, எல்லம் பவர் லூம்ஸ், ஆனா சரியா மின்சாரம் கிடைக்காம, அப்ப அப்ப வெட்டு விழுந்த தாலே, தன்னுடய மில்லுக்கு இரண்டு காற்றாலை வாங்கி அதவச்சு மின்சாரம் உற்பத்தி பண்ணி துணி நெஞ்சாரு! கடைசியிலே இதோட மகிமை பார்த்து இதையே செய்யும் தொழிலா எடுத்துக்கிட்டு செஞ்சு இன்னைக்கு ஏழாவது மனிதன் ஆயிட்டாரு! அங்க கணக்கு எப்படின்னா,ஆளுக்கு ஒரு காத்தாடி வாங்கி ஓட்டி, அதில உற்பத்தி பண்ற மின்சாரத்த எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கே வித்துட்டா, பிறகு எப்ப எப்ப வெட்டு விழுதோ, அப்ப உங்களுக்கு மட்டும் வெட்டு இல்லை! இப்படி ஒரு திட்டம் வந்த தாலே, அங்கே இருக்கிற சின்ன சின்ன கம்பெனிங்க இந்த மாதிரி ஒன்னு இரண்டு காத்தலையை நிர்மானிச்சு எலெக்ட்ரிசிட்டி உற்பத்தி பண்ணி மின்சார வாரியத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு, வெட்டு விழுவறப்ப ஜாலி மின்சாரம் வாங்கிக்கிறாங்க, இது எப்படி இருக்கு?

அப்படி அந்த காற்றாலைகள் செய்ய போய் இன்னைக்கு இவரு கம்பெனி, 'SuZlon Energy' செஞ்சுக் கொடுத்த காற்றாலகளை வச்சி மின்சாரம் உற்பத்தி பண்ற வாடிக்கையாளர்கள் 300க்கும் மேலே! இவரு இந்தியா மட்டுமில்லமா, இந்த காற்றாலைகளை வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்றார். இவருக்கு உறபத்தி பண்ணி தரக்கூடிய தொழிற்சாலைகள் இங்கே அமெரிக்காவிலே, மினசோட்டாவிலே இருக்கு! அப்பறம் சைனாவிலேயும் முதலீடு பண்ணி காற்றாலை அலகுகள் செய்யும் தொழிற்சாலை வச்சிருக்கிறாரு! பிறகு பெல்ஜியத்திலே இருக்கிற கம்பெனி ஒன்னையும் விலை கொடுத்து வாங்கிட்டாரு! அது இந்த விண்ட் டர்பைன் கியர் பாக்ஸ் பண்ற கம்பெனி! இப்படி தொழில அபிவிருத்தி பண்ணி பெரியாளாயி இன்னைக்கு ஏழாவது மனிதனாயிட்டாருன்னா, கேட்கறத்துக்கு அப்படியே ஜில்ல்லுன்னு இருக்கில்ல!

இதிலே விஷேஷம் என்னான்னா, இந்த காற்றாலை வாங்கி நிர்மானிச்சா வரி விலக்கு உண்டு! அதாவது இதை வாங்கி ஒரே வருஷத்திலே இந்த முதலீடுக்கான டிப்ரிசியேசன் 80 சதவீதம், அதால வர்ற வரி விலக்கு தான் இந்த காற்றாடிகளை ஈர்க்கும் சக்தி! உலக அழகி ஐஸ்வர்யா ராய்லருந்து , சச்சின் டெண்டூல்கர் வரை தாங்க சம்பாரிக்கிறதை இந்த மாதிரி காத்திலே பறக்கவிட்டு காசு பார்க்கிறாங்க! ஆக இந்த வழியா, ஆளுக்கு ஒரு காத்தாடி விட்டாலே போதும், நம்ம பாதி மின்சாரத்தேவை பூர்த்தியாயிடும், இதுக்கு எல்லா மாநிலமும் வரி சலுகை கொடுத்து ஊக்குவிச்சா, உங்க வீட்டு பின்னாடியே மின்சாரம் தயாரிச்சு , மின்வாரியத்துக்கு வித்துடலாம், பிறகு உங்களுக்கு மின் வெட்டு இல்லாம மின்சாரம் வரும்! அப்புறம் அக்னிநட்சத்திரத்திலே, கரெண்ட் இல்லாம, உஸ் புஸ்ன்னுட்டு இருக்க வேணாம் பாருங்க!

இப்ப தெரியுதா இவருக் காட்ல ஏன் மழை, இல்லே காத்துன்னு!

17 comments:

said...

தமிழ்மணம் பாத்தப்ப ரமணியோட தமிழ்நண்டு முகப்பு வந்து 'மேலும்'னதுக்கு அடுத்த வரி துளசி.
என்னடான்னு ஆடிப் போயிட்டேன். வந்து பார்த்தா ஏழாவது பணக்கா(ரி)ரர்னு இருக்கு. ஹூம்....
அப்புறம் ஏண்டா, இதுக்கு ஏன் நம்ம ஐஸ்வர்யாராய் காத்தாட சட்டைப் போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு
பார்த்தாத்தான் தெரியுது அம்மணிக்கு(ம்) காத்தாடி இருக்குன்னு.

said...

வணக்கம் வெ.நாதர்!

அப்பவே மக்கா சோளம் அரைத்தாங்களா , இப்போ கூட இதை வின்ட் மில் என்று கிராமத்துல சொன்ன முதல்ல நெல் அவிச்சு வச்சு இருக்கேன் அரிசி அரைச்சு தரியா தான் கேட்பாங்க.:-))

தமிழ் நாட்டிலே தென் மாவட்டங்களில் நிறைய இருக்கு இது போல.ஆனால் மகாராஷ்டிரா தான் இந்தியாவிலே காற்றாலை மின்சாரத்தில் முதலிடம் ,அடுத்து தமிழ் நாடு.

காற்றாலைகளால் பக்கவிளைவு இல்லை என்றீர்கள் ஆனால் மகாராஷ்டிராவில் இதன் மீது புதிதாக ஒரு புகார்,காற்றாலைகள் மேகத்தை கலைத்து மழை வர விடாமல் செய்கிறதுனு :-))

நடிகர் சூர்யாவுக்கு கொஞ்சம் போல சொந்தமா காற்றாலைகள் இருக்காம்.அவருக்கு தான் தமிழ் நாடெங்கும் காத்தாடிகள் இருக்கேனு சொல்றிங்களா? :-))

said...

ஏன் நம்ம ஐஸ்வர்யாராய் காத்தாட சட்டைப் போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு// புரிஞ்சிக்கிட்டிங்கில்ல, காத்தாட இருக்கிற தான் நல்லா இருக்கு:-) காசு பார்க்கிறாங்க பாருங்க!

said...

காற்றாலைகளால் பக்கவிளைவு இல்லை என்றீர்கள் ஆனால் மகாராஷ்டிராவில் இதன் மீது புதிதாக ஒரு புகார்,காற்றாலைகள் மேகத்தை கலைத்து மழை வர விடாமல் செய்கிறதுனு :-))// எல்லாம் சும்மா ஒரு ஹம்பக், வவ்வால், இதுனால எந்த பாதிப்பும் இல்லை, இது ஒரு எதிரிப்பு பிராபகண்டா! இது பற்றி அப்புறம் எழுதுறேன்!

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்.
நல்ல உபயோகமான பதிவு. நம்ம ஊர்ல காத்தடி காலம்னு ஒன்னு இருக்கு இல்ல. இந்த காலத்திலே தான் காதாடிகள் நல்ல பயன் அளிக்குமா இல்ல எல்லா காலத்திலேயுமா?
பொதுவா நம்ம ஊரு ஆறுல தண்ணி ஓடாம நல்ல காத்து வீசும். தண்ணி ஓடுதோ ஓடலையோ, இது மாரி ஆறுகள் நடுவுல காத்தாடிகள் வெட்சா, மின்சாரதுக்கு மின்சாரம், ஆறுக்கு ஆறு...ஆமா...தண்ணீர் லெ காத்தாடி மின்சாரம் பரவிடுமா??

said...

is this thulasi is owner of suzlon energy?

தமிழ்நாட்ல இப்ப இவரோட ஒரு, ஆசியாவின் மிக பெரியதுன்னு சொல்றாங்க, காற்றாலை விபத்துக்குள்ளாகி சில கோடி நஷ்டமாம்.

துளசியாக்கா நீங்க நியுசிலாந்தின் ஏழாவது பணக்காரியா இருக்கலாம்.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதியிலும் காற்றாலை காணலாம்.

ஷேர் பற்றின்னா குப்பண்ணா தான் வரனும்.

said...

அருமையான துளசி கட்டுரை.

காத்தாடி வியாபாரம் செய்ய இனி எல்லோரும் காத்தா பறப்பாங்க.

said...

வெளிகண்ட நாதர்,
நல்ல பதிவு.

//நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலே கட்டி வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பீங்க, சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்பீங்க! //

அய்யய்யோ, இந்த சங்கதியை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி, நினைத்தாலே இனிக்கும் அனுபவங்கள் இவை.

//இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழியபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டிருக்காங்க!
//

ஈழத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சிங்கள அரசு போதிய மின் விநியோகம் செய்வதில்லை. அதனால் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பலர் ஒன்று கூடி இந்த காற்றாடிகளை வாங்கி ஈழத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் இவற்றை தமிழ்ப்பகுதிகளுக்குச் செல்ல விடாது அவற்றை சிங்கள அரசு கொழும்பில் முடக்கி வைத்துள்ளது. இவற்றை சிங்கள அரசு அனுமதித்தால் தமிழ்ப்பகுதிகள் விவசாயம், மற்றும் தொழிற்சாலைகள் போன்ற துறையில் முன்னேற்றம் காணும்.

//உலக அழகி ஐஸ்வர்யா ராய்லருந்து , சச்சின் டெண்டூல்கர் வரை தாங்க சம்பாரிக்கிறதை இந்த மாதிரி காத்திலே பறக்கவிட்டு காசு பார்க்கிறாங்க! //

ஜஸ்வர்யாவின் படத்தைப் பார்த்த போது, என்னடா இந்தப் பதிவுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் என எண்ணினேன். கடைசிப் பந்தியில் ஒரு வரியில் விளக்கமும் தந்துள்ளீர்கள். நன்றி.

said...

காற்றையும் காசாக்கும் கலிகாலம் டோய் :))

நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
உங்களுக்கு பிடித்தவற்றை பட்டியலிடுவீர்கள் என நம்புகிறேன்.

said...

சார்,

மிக நல்ல பதிவு.

ஒரு இந்திய வெற்றியாளரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி.

said...

நரியா, காத்தாடி ஓட்டவிட தண்ணிக்கு போகணும்னு இல்லை, நல்ல காலி நிலத்திலே, ஏன் மலைகளுக்கு நடுவிலேயும் நிர்மானிக்கலாம். காத்து அடிக்கனும், அவ்வளவு தான்!

said...

மனசு, துளசி, சுஷ்லென் என்ர்ஜி கம்ப்னியோட ஓனர் தான்! காற்றலை விபத்து பத்தி எனக்குத் தெரியாதே, விவரம் கிடைச்ச சொல்லுங்க!

said...

வாங்க மஞ்சூர் ராசா, கரெக்டா சொன்னீங்க, காத்தடி ராம்மூர்த்தி ஆக வேண்டியது தான் எல்லாரும்!

said...

அய்யய்யோ, இந்த சங்கதியை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி, நினைத்தாலே இனிக்கும் அனுபவங்கள் இவை.// வெற்றி, பழைய ஞாபகங்களை நினைச்சாலே ஒரு சுகம் தான்!

ஈழத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சிங்கள அரசு போதிய மின் விநியோகம் செய்வதில்லை. அதனால் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பலர் ஒன்று கூடி இந்த காற்றாடிகளை வாங்கி ஈழத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் இவற்றை தமிழ்ப்பகுதிகளுக்குச் செல்ல விடாது அவற்றை சிங்கள அரசு கொழும்பில் முடக்கி வைத்துள்ளது.// தமிழர்களின் முன்னேறவிடாம அடக்கி எத்தனை நாள் தான் வச்சிருக்க போறங்க இந்த சிங்கள் அரசு??

said...

நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
உங்களுக்கு பிடித்தவற்றை பட்டியலிடுவீர்கள் என நம்புகிறேன்.// இது என்னா புது விளையாட்டு, நீங்க சொல்லிட்டீங்கல்ல, பட்டியல் இஅட வேண்டியது தான்!

said...

வாங்க சிவபாலன், நீங்க ரெண்டு காத்தாடி வாங்கி விட வேண்டியது தானே-:)

said...

Fire at windmill (From Hindu 19.06.06)

TIRUNELVELI. A major fire broke out at a windmill at Chettikulam near here on Sunday evening causing extensive damage. According to the police, there was no casualty and the cause of the fire was under investigation. The Rs. 12.5-crore project, inaugurated by the former Chief Minister, Jayalalithaa, is located a few km away from Koodankulam Nuclear Power Project site. It is claimed to be the largest in Asia as it was the first Wind Turbine generator to produce 2 MW electricity. — Staff Reporter

also, dinamalar e-paper page # 12