Sunday, June 18, 2006

விடை தருவார் யாரோ!


நட்சத்திர வாரத்தின் அந்திமப்பொழுது! இந்த ஒரு வாரமும், வகைக்கு ஒரு விருந்து படைக்க வேண்டும் என பலவாறு இடுகைகளை இட்டேன்! அனைத்தும் முத்துக்களா இல்லை வெறும் பித்துக்களா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்! ஆனால் நீங்கள் கொடுத்த உற்சாகத்திற்கு அளவே இல்லை! ஒவ்வொரு நாளும் இனிதாகவே முடிந்தது! இது ஒரு இன்பமான வாரம் எனக்கு!

இந்த பதிவுகள் இடுவதில் பல அரிதான முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தேன்! அதற்கான வரவேற்பு மிக நன்றாகவே இருந்தது! ஊடகம் என்று வரும் பொழுது, இன்றைய தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் சக்திகள் அநேகம்! எல்லாவற்றையும் வெறும் எழுத்து வடிவில் படைப்பதை விட, பார்த்து மகிழ, கேட்டு சிறக்க என வழிபடைக்கும் மென்கருவிகள் இருக்கும் பொழுதும், கற்பனை சக்திகளுக்கும் அளவில்லை எனும் போது நல்ல படைப்புகள் வழங்க வழி இருக்கிறது!

இன்று எல்லாம் உள்ளங்கை அளவில்! எதை வேண்டுமானால் ஊடகமாக்கலாம்! அதுவும் இது போன்ற கிடைப்பதற்கரிய சந்தர்ப்ப தருணங்களில் உற்சாகம் பீறிடும் பொழுது வெளிவரும் படைப்புகளின் உருவங்களுக்கும் வடிவங்களுக்கும் அளவுகோல் எதுவுமில்லை!

பதிவுகள் பொதுவாக இலக்கிய சிந்தனையோடு எழுத இலக்கிய அனுபவங்கள் தான் தேவை என யார் சொன்னது! வாழ்நாளிலே நாம் கற்றவை அனைத்துமே இலக்கியங்கள் தான்! அப்படி கற்றது மட்டுமன்றி பார்ப்பது, கேட்பது, படிப்பது என எத்தனையோ விடயங்கள் நம் கண் முன்னே வந்து விழும் பொழுது படைப்புகளுக்கு என்ன பஞ்சம் வந்துவிடவா போகிறது!

தமிழ்மண உறவுகள் நீங்கள் எல்லோரும் நான் அளித்த அனைத்து விருந்தினையும் அன்புடன் ஏற்று கண்டு களித்து மகிழ்வுற்று மறுமொழியினை சமர்ப்பித்து எனை ஆனந்த தாண்டவ கூத்தாட்டம் பெற செய்தீர்கள், மிக்க நன்றி! இது போல் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து எனது எழுத்துருவங்களையும், ஒலிப்பேழைகளையும், ஆடும் பிம்பங்களையும் அழகாய் இந்த தமிழ்மண மேடைக்கு எடுத்து வருவதில் எனது அயராத முயற்சி தொடர்ந்து இருக்கும். இன்று இணைய ஊடகத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இவை அத்தனைக்கும் வழி வகுக்கும் பொழுது, படைப்பு திறைமைகளை ஏன் வெறும் எழுத்துக்குள் பூட்டி வைக்க வேண்டும்!

அடுத்து எனது கல்லூரி காலங்களுக்குப் பிறகு எனது கலைச்சேவை கொஞ்சம் மங்கி இருந்தது என்னவோ உண்மை! இப்பொழுது கிடைத்த மேடையும், பார்க்க வந்த தமிழ்மணக் கூட்டமும் கண்டு நான் அந்த காலத்திற்கு தள்ளப்படுகிறேன்! ஆதலால், இனி அந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறேன், அதுவும் புதுமையான ஒரு கூட்டு முயற்சிக்கு! தமிழ்மண நண்பர்கள் நாம் அனைவரும் இணணந்து இது போன்ற கலை முயற்சிகளில் ஏன் ஈடுபடக்கூடாது! எத்தனையோ நம் தமிழ்மண அன்பர்கள், கல்லூரி பருவம் முடிந்த பின் மூட்டை கட்டி வைத்த தம் திறமைகளை வெளிக்கொணர இது அருமையான வாய்ப்பு! நான் ஒரு திரைக்கதை எழுதி, பல காட்சிகளை விளக்கி பதிவிடுகிறேன்! அதில் யார் எந்த ஒரு காட்சியை நடிப்பதிலும், அல்லது திரைக்கதையை செம்மை படுத்துவதிலும் உங்கள் பங்களிப்பை ஏற்கலாம். பிறகு காட்சிகளை வகையாக பிரித்து, அதை விருப்பமுடையவர் தங்கள் பகுதிகளை தாங்களே ஒளிப்பதிவு செய்து வீடியோ கோப்புகளை எனக்கு அனுப்பினால் வெட்டி ஒட்டி இசை சேர்த்து, வெளியிடுகிறேன். இப்படி குறும்படம் எடுப்பதில் நாம் ஏன் கூட்டு முயற்சியில் ஈடுபடக்கூடாது? இதை 'இணைய சினிமா'('Collaborative Cinema') என அழைக்கலாமே! இந்த முயற்சிக்கு உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்!

நல்லதொரு இனிமையான வாரத்தை எனக்களித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! அது போல் எனது அத்தனை இடுகைகளுக்கும் உங்கள் சிறப்பான வருகையை தந்து எனை ஊக்குவித்த அனைத்து தமிழ்மண நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

சரி எனக்கு விடை தருவார் உண்டோ! இல்லை, 'கபி அல்விதா நா கெஹ்னா'


ஒலிப்பேழைக்கு:

25 comments:

said...

வணக்கம் வெ.நாதர்!,

விடை கூறி வழியனுப்பும் படலம் எல்லாம் கிடையாது உங்களுக்கு . நட்சத்திர வாரம்னு இல்லா விட்டலும் நீங்கள் தமிழ்மணத் வெள்ளித்திரையின் நிரந்தர நட்சத்திரம் .எனவே எப்பொழுதுமே தொடர்ந்து பிரகாசியுங்கள். நல்ல தரமான பதிவுகளை அளித்து அசத்திவிட்டீர்கள் நன்றி!

said...

வெ.நாதர்

நீங்கள் சொல்கின்ற கலை முயற்சி ஒரு புதுமையான புரட்சிகரமான திட்டம். கிளஸ்டர் கம்ப்யுட்டிங் போல தனி தனி வலைப்பதிவரின் ஆற்றல் பயன் படுத்த பட்டு ஒன்றாக ஆக்குவது.துவக்கி வையுங்கள் எதாவது நடக்கிறதா எனப்பார்ப்போம்!

said...

வெளிகண்ட நாதர். நான் விடையெல்லாம் தரப்போவதில்லை. தொடர்ந்து கலக்கிக் கொண்டிருங்கள். ரசித்துப் படிக்க, கேட்க, பார்க்க நாங்களெல்லாம் இருக்கின்றோம்.

said...

வெளிகண்ட நாதர்,
இவ் வாரம் முழுவதும் நல்ல படைப்புக்களைத் தந்தீர்கள். வித்தியாசமாக ஒலி வடிவிலும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை. ஒலிப்பதிவில் கலை எனும் சொல்லை களை என்றும் அனைத்து எனும் சொல்லை அணைத்து எனவும் உச்சரிப்பது போல் எனக்கு கேட்கிறது. தவறாகச் சொன்னால் மன்னித்துக் கொள்ளுங்கள்.


//நான் ஒரு திரைக்கதை எழுதி, பல காட்சிகளை விளக்கி பதிவிடுகிறேன்! அதில் யார் எந்த ஒரு காட்சியை நடிப்பதிலும், அல்லது திரைக்கதையை செம்மை படுத்துவதிலும் உங்கள் பங்களிப்பை ஏற்கலாம். பிறகு காட்சிகளை வகையாக பிரித்து, அதை விருப்பமுடையவர் தங்கள் பகுதிகளை தாங்களே ஒளிப்பதிவு செய்து வீடியோ கோப்புகளை எனக்கு அனுப்பினால் வெட்டி ஒட்டி இசை சேர்த்து, வெளியிடுகிறேன். இப்படி குறும்படம் எடுப்பதில் நாம் ஏன் கூட்டு முயற்சியில் ஈடுபடக்கூடாது? இதை 'இணைய சினிமா'('Collaborative Cinema') என அழைக்கலாமே! இந்த முயற்சிக்கு உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்!//

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வழமையான தமிழ்த்திரைப்படங்கள் மாதிரி இல்லாது நல்ல அறிவியல் படமாக எடுக்க முயற்சி செய்யுங்கள்.
சாமைரை வீசும் கட்டம் அல்லது கொடி பிடிக்கும் கட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் அப் பாத்திரத்தில் நடிக்கிறேன்.

நானும் கடந்த வருடம் ஈழத்தில் எடுத்த ஒளிப்படங்களை[வீடியோ] ஒரு documentary ஆக தொகுத்துப் போடலாம் என்றிருக்கிறேன் [நேரம் கிடைக்கும் போது ]

நன்றி

said...

இப்படி குறும்படம் எடுப்பதில் நாம் ஏன் கூட்டு முயற்சியில் ஈடுபடக்கூடாது? //
இந்த ஆட்டைக்கு நான் ரெடி...(என்னையும் சேத்துக்கிட்டா..?!)

said...

நாதர்
அருமையான அறுசுவை விருந்துக்கு நன்றி.உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மிகுந்த அக்கறை எடுத்து செய்கிறீர்கள் என்பது தெரிகிறது.ஆழமான விஷயத்தை எளிமையான முறையில் சொல்லுவதென்பது உங்களுக்கு மிகவும் எளிதாக வருகிறது.உங்கள் படைப்புக்களை வலைதளத்தில் மட்டும் இடாமல் திண்ணை,நிலாச்சாரல்,தமிழோவியம் போன்ற இதழ்களுக்கும் அனுப்பலாமே?

அருமையான வாரத்துக்கு நன்றி

said...

சார் (அய்யா, சமீபத்தில் ஒரு பதிவில் படித்ததின் விளைவு),


மிக அருமையான பதிவு.

Audio Blog மிக அருமை. நல்ல முயற்சி. Back ground Music தலைவர் பாட்டுக்கு நன்றி.

உங்கள் குரல் மிக அருமை.


'Collaborative Cinema' நல்ல முயற்சி. நிச்சயம் வெற்றியடையும்.


மிக்க நன்றி.

said...

அய்யா,

நட்சத்திர வார பதிவுகளைப் பற்றி சொல்ல மறந்துட்டேன்..


எல்லாப் பதிவுகளும் சூப்பர்.

ஒரு கலக்கு கலக்கிடீங்க...

நன்றி

said...

அருமையான வாரம். எல்லாமே நன்றாக இருந்தன.


நடிப்பா...? இங்கே ஒரு நடிகை ரெடி.
நல்லா 'பாத்திரமா(!)' இருக்கணும். அம்புட்டுதேன்.

said...

சுவாரஸ்யமான பதிவுகள். நன்றி...

said...

நல்ல வாரம். விடாம நடத்துங்க.

said...

கிளஸ்டர் கம்ப்யுட்டிங் போல தனி தனி வலைப்பதிவரின் ஆற்றல் பயன் படுத்த பட்டு ஒன்றாக ஆக்குவது.துவக்கி வையுங்கள் எதாவது நடக்கிறதா எனப்பார்ப்போம்!// பார்ப்போம் என சொல்லிவிட்டு சென்றால் எப்படி நீங்களும் இந்த ஆட்டத்தில்! வந்து கலந்து கொள்வீர்களா, வவ்வால்!

said...

நான் விடையெல்லாம் தரப்போவதில்லை. தொடர்ந்து கலக்கிக் கொண்டிருங்கள். ரசித்துப் படிக்க, கேட்க, பார்க்க நாங்களெல்லாம் இருக்கின்றோம்// குமரன், தொடர்ந்து உண்டு அனைத்துமே! மொத்தமா எல்லா பதிவுகளையும் பார்க்கவில்லையே நீங்கள்! நேரம் இருந்திருக்காது, சரி மெதுவாக பின்னேட்டம் இடுங்கள்!

said...

வெற்றி, தொடர்ந்து நீங்கள் வந்து, இந்த சிறப்பு வாரத்தில், அனத்து இடுகைகளையும் பார்வையிட்டு, பின்னோட்டமிட்டதற்கு நன்றி!. இது இனி வ்ரும் நாட்களிலும் தொடர்ந்து வாருங்கள்!

சாமைரை வீசும் கட்டம் அல்லது கொடி பிடிக்கும் கட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் அப் பாத்திரத்தில் நடிக்கிறேன்// ஏன், நீங்கள் நடிப்பதில் ஆர்வமென்றால் சாமைரை வீசும் கட்டம் ஏற்கவேண்டும், ராஜபாட்டை உங்களுக்குத்தான், கவலை விடுங்கள்!

நானும் கடந்த வருடம் ஈழத்தில் எடுத்த ஒளிப்படங்களை[வீடியோ] ஒரு documentary ஆக தொகுத்துப் போடலாம் என்றிருக்கிறேன் [நேரம் கிடைக்கும் போது ]// நல்ல முயற்சி, என் வாழ்த்துக்கள்!

said...

இந்த ஆட்டைக்கு நான் ரெடி...(என்னையும் சேத்துக்கிட்டா..?!)// என்ன தருமி, நீங்கள் இல்லாமலா! கெளவரம் 'ரஜினிகாந்த்' போல ஒரு பாத்திரம் படைத்து விடலாம்! மேற்கொண்டு எனக்கு திரைக்கதை உதவி செய்ய முடியுமா?

said...

செல்வன், கொஞ்சம் சிரமப்பட்டதென்னவோ உண்மை தான்! பரவாயில்லை, எனது பழைய வேட்கையை, கல்லூரி நாட்களிலே இது போன்ற நாடக விழா, நாடகம் போடுவதில் எந்த் உத்வேகத்துடன் செய்தேனோ, அதே போல் இப்பொழுதும் செய்த பொழுது ஒரு உண்மை விளங்கியது, எனக்கு இஅன்னும் வயதாகவில்லை என்று! இளமையின் ஆட்டம் பாட்டம் தொடர்ந்து நடத்த, இந்த நட்சத்திர வாரம் என்னை நானே புதுபித்துக் கொள்ள உதவியது என்பதே உண்மை!

said...

சிவபாலன், நீங்கள் தொடர்ந்து வந்து என் எல்லா பதிவுகளுக்கும் பின்னோட்டமிட்டதிற்கு மிக்க நன்றி!

said...

தொடர்ந்து முதல் ஆளா ஆஜர் ஆனக்கு நன்றி, துளசி!

நடிப்பா...? இங்கே ஒரு நடிகை ரெடி.
நல்லா 'பாத்திரமா(!)' இருக்கணும். அம்புட்டுதேன்.//எந்த பாத்திரத்தை சொல்றீங்க-:) உங்களை பேஸ் பண்ணி, பாதியில் நின்னு போன 'மணிப்பூர் மாமியார்' படம் ஒன்னு எடுத்துடலாம். நீங்க தான் ஹீரோயின்-:)

said...

வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி சன்னாசி அவர்களே!

said...

கொத்தனார், தொடர்ந்து உண்டு! உங்க நளபாகம் ஒன்னை நான் தொட்டுவிட்டேன்! அதுக்கு காரணமே உங்க பதிவுகள் தான் -:)

said...

வடை தருவார் யாரோ என உங்கள் முந்தைய பதிவின் ஞாபகத்தில் படித்து விட்டேன் :)) உங்களுக்கெல்லாம் விடை கொடுப்பதாவது ? நிரந்தரமாக கலக்குங்க! தமிழ்மணமே விடை கொடுக்காமல் இருக்க வேண்டும் :(
BTW, உங்கள் வாரம் பல்சுவையுடன் இனிமையாக கழிந்தது.

said...

நல்ல திட்டமிட்ட வாரமாக தெரிந்தது. நல்ல பதிவுகள். நன்றி! பல தகவல்களுக்கு.

said...

வாங்க மணியன்!

வடை தருவார் யாரோ என உங்கள் முந்தைய பதிவின் ஞாபகத்தில் படித்து விட்டேன் :))//சாப்பாட்டு ராமன் ரொம்ப தாக்கம் ஏற்படுத்திடுச்சோ! நட்சத்திர வாரத்திற்கு தாமதமாக வந்து அனைத்து இடுகைகளையும் படித்து பின்னோட்டம் இட்டதற்கு நன்றி!

said...

நன்றி நன்மனம் அவர்களே!

said...

சிவராமகணேசன், தொடர்ந்து நட்சத்திர வார இடுகைகளுக்கு வந்து சிறப்பித்தற்கு நன்றி!