Thursday, June 15, 2006

எனை ஆண்ட அரிதாரம் - நட்சத்திரப்பதிவு!

நீங்க எல்லாம் தொடர்ந்து என்னோட எனை ஆண்ட அரிதாரம் படிச்சிக்கிட்டு வந்திருப்பீங்க! அப்படி படிக்காதவங்களுக்கு எனை ஆண்ட அரிதாரம் -பகுதி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12,13,14 அது இன்னும் தொடரா எழுதிக்கிட்டு இருக்கேன்! இந்த நட்சத்திர வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு பகுதி, பதினைந்தாம் பகுதி! என்னுடய அரிதார வாழ்க்கைக்கு முக்கிய மான பங்கு பாரதிராஜாவோட படங்கள், அதுவும் முதல் ஐந்து படங்கள் முத்துக்கள், அந்த ஐந்து நட்சத்திரங்களும் என்னால மறக்க முடியாதது, ஏன்னா அந்த காலகட்டத்திலே நடந்த நிறைய சம்பங்களை இந்த படப்பாடல்கலை கேட்கிற போது அசை போடுவதுண்டு!

கொசுமருந்து அடிக்கிற இன்ஸ்பெக்ட்ரா இருந்த பால்பாண்டியன் தேனியவிட்டு சினிமா ஆசையிலே சென்னை வந்து டைரக்டர் புட்டண்ணாக்கிட்டே, இவரு அதிகமா கன்னடப் படம் எடுக்கிறவரு, வேலை பார்த்து, பிறகு பாரதிராஜான்னு, அக்காவோட பாதி பேரை வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவையே புரட்டி போட்டாரு அந்த 70 களின் கடைசியில்! எது அப்படியோ, என்னோட பால்யத்துக்கு அப்பறம், விடலை முடிஞ்சு,வாலிபனா மீசை முறுக்கின நேரத்திலே, இந்த ஒரு பெரிய மாற்றங்களோட வந்த தமிழ் சினிமாக்கள் எனக்கு பல இனிமையான வாழ்க்கை நினைவுகளை ஞாபகபடுத்திக்கிட்டே இருக்கும். தமிழனக்கு சினிமாங்கிறது இரண்டற, இல்லை நாலற கலந்த ஒன்னு(உபயம்:செடியக்கா!) அப்படி பயணிச்ச என் வாழ்க்கையின் அந்த முக்கிய கட்டங்கள்ல வந்த முதல் ஐந்து பாரதிராஜா படங்கள் மனதை விட்டு அகலாத ஒன்னு! இன்னைக்கும் அந்த படங்களோட பாடல்களை கேட்டா திரும்ப அந்த காலக்கட்டத்துக்கு நான் போயிடறது என்னவோ வாஸ்தவம் தான்! அப்படி பட்ட அந்த முதல் ஐந்து படங்களையும், அந்த படங்கள் வந்த காலகட்டங்கள்ல நிகழ்ந்த முக்கிய என்னுடய வாழ்க்கை அனுபவத்தைய்ம் எழுதலாமேன்னு தான்!

(எங்க சுத்தியும் கடைசியிலே பழைய நினப்பை அசைப்போட வந்திட்டேன் பார்த்தீங்களா!, இதை கிண்டலா, ஒரு தடவை ஆனந்த விகடன் இந்த ப்ளாக்கர்னா என்னான்னு அவங்க பத்திரிக்கையிலே எழுதனப்ப, நக்கலா, அவங்க அவங்க இணையத்திலே தனியா வீடு கட்டி, அதிலே என்ன வேணும்னாலும் எழுதறது, அவங்க பார்த்தசாரதி கோயில்ல கையொழுக தின்ன பொங்கலை பத்தியும் எழுதுவாங்க, பக்கத்து வூட்டு சரோஜாக்கூட அம்மா அப்பா விளையாண்டதையும் எழுதுவாங்கன்னு கிண்டலடிச்சிருந்தாங்க, எப்பா,எண்ணா, எக்காவ், தமிழ்மண அன்பர்களே, அப்படியா நீங்க எல்லாம், முடிஞ்சா உங்க பார்த்தசாரதி கோயில் மாதிரி அனுபவத்தை பின்னோட்டத்திலே சொல்லுங்க!)

16 வயதினிலே:


இந்த படம் வந்தப்ப உண்டு பண்ண தாக்கத்தை ஒலிப்பேழையா போட்டு இருக்கிறேன்! கேட்டு பாருங்க! கேட்டு பார்த்துட்டு நல்லா இருக்குதுன்னு சொன்னீங்கன்னா மீதி நட்சத்திரங்களின் தாக்கத்தையும் அடுத்தடுத்த பதிவா போடுறேன்!

இந்த பாடலுடன் கூடிய ஒலிப்பேழையை நீங்கள் கேட்பதில் சிரமம் இருப்பதை அறிந்தேன்! இது முழுவதும் இந்த ஃப்ரீ வெப் சைட்களுக்கே உண்டான பேண்ட்வித் லிமிட்டேஷனால், நீங்கள் இதை கேட்க முடியவில்லை, இதோ புது கணக்கு ஏற்படுத்தி உள்ளேன், அந்த கணக்கு ஆயுத்த படுத்தவதில் சிறிது கால தாமதம், அதுவரை இதில் கிளிக்கி ஒலிப்பேழையை கேட்கவும்! விரைவில் நீங்கள் 'ரியல் ப்ளேயரில் கேட்கமுடியும்!


தொடரும்..

18 comments:

said...

சார்

எங்க கிராமம் (இப்ப டவுன்) மருதமலை பக்கம். அப்ப எல்லாம், வைகாசி விசாகத்திற்க்கு எங்க ஊருலிருந்து பால்குடம் எடுத்துட்டு மருதமலை போவாங்க. மற்றவங்க 2 or 3 லாரியில் போவோம். நானும் எங்க அண்ணனும் ஒரு லாரியில் ஏறிட்டோம். அந்த லாரியில் மத்தளம் பாட்டு எல்லாம் இருக்கும். ஆனால் அந்த லாரி டிரைவர் புதுசு.

என்ன ஆயிடுச்சுன்னா, மருதமலை மலை ரோட்டில் கடைசி வளைவுல திருப்ப முடியாம் நிருத்திட்ட்டார். கொஞ்சம் ஆபத்தான இடம்.

அவங்க அவங்க இறங்கி ஓட ஆரம்பிச்சுட்ட்டாங்க..

நானும் குதித்து...

பிறகு கால் முறிவு ஆஸ்பத்திரியில்..

said...

ரொம்ப நல்ல முயற்சி...இந்த வாரத்தின் நட்சத்திரமா பிரகாசமா ஜொலிக்கறீங்க!

said...

வணக்கம் வெளிகண்டநாதர் ,

என்ன நீங்க இந்த வார அரிதாரம் பாதில முடிஞ்சாப்போல சுருக்கமாக போட்டிங்க , செந்தூரப்பூவே பாட்டு அருமையா இருக்கு.கூடவே பாரதிராஜா ஸ்டைல்லா உங்க டாக் வேற :-))

ஆமாம் செந்தூரப்பூவே என்று ஒரு பூ உண்மையிலேவே கிடையாதம் கற்பனையா ஒரு கவி நயத்திற்கு போட்டதாக சொல்வாங்க உண்மையா நாதர்?

said...

வெளிகண்ட நாதர்,
ஒரு வித்தியாசமான பாணியில் உங்களின் இளமைக்கால நினைவுகளை தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்களை இப்போது கேட்டால், மனது இதமாக பள்ளிப்பருவ காலத்தின் இனிமையான பக்கங்களை மீட்டு இன்பமடையும்.
அதுவும் இளையராஜா - பாரதிராஜா கூட்டு முயற்சியில் வந்த பாடல்கள் ... நினைத்தாலே இனிக்கும் இனிமையான கானங்கள்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

பி.கு:- அரிதாரம் என்றால் என்ன பொருள் என்னவென்று தயவு செய்து சற்று விளக்க முடியுமா? அவதாரம் எனும் சொல் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்படவில்லை.
அரிதாரம் = இளமைக்கால நினைவுகள்?
நன்றி.

said...

வாங்க சிவபாலன், இந்த படம் வந்த பீரியட்லயா?

said...

வருகைக்கு நன்றி ப்ரியா! சும்மா வெறும் எழுத்தகள் இல்லாம, மீடியாவை கம்ப்ளீட்டா எக்ஸ்பிளாய்ட் பண்ணுவோமேன்னு நினைச்ச கிரியேட்டிவ் வொர்க்!

said...

வவ்வால், இது அரிதாரத் தொடரை அப்படியே ரிவைஸ் பண்ற ஒரு பதிவு!
இந்த பதிவுக்காக, நான் RJ ஆயிட்டேன், சும்மா வெறும் பாட்டை போடறதை விட ஜாக்கித்தனமா எதாவது பண்ணுவோமேன்னு கொஞ்சம் ஆர்வம் அதான்! ஆடியே எடிட்டிங் மென்பொருள் உபயம்! கூட கொஞ்சம் நம்மலோட அந்தக் காலத்து கிருத்திருவ மூளை:-)) அவ்வளவே!

said...

வெற்றி, அரிதாரமென்பது முகச்சாயம் பூசுவது! அதாவது மேக்-அப் போடுவது! அது மட்டுமில்லை தூய தமிழில் சொல்லப்போனால், அந்தக் காலத்திலெ முகச்சாயம் பூசி, தெருக்கூத்து ஆடுபவர்களை அரிதாரக் கலைஞர்கள் என அழைப்பார்கள்!

said...

வெளிகண்ட நாதர்

//அரிதாரமென்பது முகச்சாயம் பூசுவது! அதாவது மேக்-அப் போடுவது! அது மட்டுமில்லை தூய தமிழில் சொல்லப்போனால், அந்தக் காலத்திலெ முகச்சாயம் பூசி, தெருக்கூத்து ஆடுபவர்களை அரிதாரக் கலைஞர்கள் என அழைப்பார்கள்!//

மிக்க நன்றி.

அன்புடன்
வெற்றி

said...

சும்மா அப்படியே ஒரு கலக்கு கலக்கிட்டீங்க. பாட்டுதான் கேக்க முடியலை.
'ரியல் ஆடியோ ஃபைல் கர்ரப்ட்'ன்னு சொல்லிருச்சு.
செந்தூரப்பூவே பாட்டுன்னு பின்னூட்டங்களிலே இருந்து தெரிஞ்சுகிட்டேன்.

said...

துளசி, இது ஒரு மாதிரி புது முயற்சி. இது அல்மோஸ்ட் ரேடியோ ஸ்டேஷன்ல, இந்த தேன்கிண்ணம் பாட்டு வழங்கிறவங்க மாதிரி, பேசிகிட்டே பாட்டு போடறது! கதை சொல்லிக்கிட்டே சுவராசியமா வழங்கிற மாதிரி, டிவியிலே இது கேம்பெயரியங், 'பெப்ஸி உங்கள் சாய்ஸ் உமா' மாதிரி, அதுவும் பண்ணலாம். இந்த கம்ப்யூட்டர், இணையம் இதில்லை, எல்லாம் பண்ணலாம், ஏற்கனவே இந்த மாதிரி எல்லாம் கிரியேட்டிவா அந்த காலத்திலேயே நாடகத்துக்கு தத்ரூபமா பேக்ரவண்டு ம்யூசிக் வேணும்னு காலங்கார்த்தாலே லாரி போற வர தடத்திலிருந்து வரும் சத்ததை ரெக்கார்டு பண்ண டேப் ரெக்கார்டு கையும்மா அலையுவேன், இப்ப எல்லாம் பெட் ரூம்ல இருந்து இந்த கம்ப்யூட்டர் மூலமா பண்ணலாம் (2026ல் உலக அரசியல்ல எழுதன மாதிரி), இதிலே நம்மலே சினிமாவை குடிசை தொழிலு மாதிரி எடுத்து பிரமிக்க வைக்கலாம், கொஞ்சம் கொஞ்சமா இது மாதிரி புதுசா பண்ண இருக்கேன், இது மாதிரி புதுசா பண்ண இருக்கேன், ஏன் நம்ம இரண்டு பேரும் சும்மானாலும் கதை
பண்ணி, உங்க ஊர்ல சில சின்களை நீங்க எடுத்த வீடியோவை அனுப்பிச்சிங்கன்னா வீடியோ,ஆடியோ ப்ராஸிசிங் பண்ணி புதுசா நிகழ்ச்சிகளை பப்ளிஸ் பண்ணலாம், நிறைய இந்த மாதிரி கிரியேட்டிவா எண்டெர்டைன்மெண்ட் பண்ணலாம்! நான் எழுதிற விஞ்ஞான ஹோஸ்யமெல்லாம் உண்மைன்னு அப்புறம் உங்களை எல்லாம் எப்படி நம்பவைக்கிறது-:) தமிழ்மணத்திலே எல்லாரையும் வந்து பார்க்க சொல்லுங்க, நீங்க தான் நம்ப மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், உங்களுக்கு தமிழ்மணத்திலே ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கு-:)

said...

பதிவு அருமை...

said...

என்ன செந்தழல் ரவி ஒலிப்பேழை கேடீங்களா???

said...

உங்க குரலைக் கேக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரிச்சி...நாலாவது அட்டெம்ப்டில்தான் ஒரு வழியா பாஸானேன்!

said...

எப்படி இருந்துச்சுன்னு சொல்லலியே தருமி சார், இந்த வெட்டி, ஒட்டிற வேலை புடிச்சிருந்துதா?

said...

கல்லூரிக்கால கனவுப்பாடல்கள் என்றும் இனிக்கும் நினைவுப்பாடல்கள்

said...

ஒலிப்பேழையை கேட்கமுடியவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன். நீங்கள் உங்கள் sciptஐயும் எழுத்தில் பதியலாம் :)

said...

மணியன்,
ஒலிபேழை கேட்பதில் சிரமம் என அறியப்பட்டேன்! அதற்காகவே கீழே எழுதி உள்ளேனே அதில் கிளிக்கி கேட்க முயற்சிக்கவும்! இல்லை எனில் உங்களுக்கு ஒலிப்பேழை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்!