Monday, August 21, 2006

இந்திய நாடு என் நாடு அதில் இந்தியன் என்பது என் மக்கள்!

அப்பாடா ஒரு வழியா இந்திய பயணம் முடிச்சு திரும்ப வந்தாச்சு! நடுவிலே இந்த ப்ளாக் அது இது எதுவும் மூச்சு விடாம இருந்தாச்சு! யாருக்கிட்டேயும் சொல்லிக்கிட்டு கிளம்பல! இதிலெ போற இடமெல்லாம் ப்ளாக்கர் மாநாடு போட்டு துளசி அக்கா மாதிரி நம்மலால வலம் வரமுடியல்ல. மதுரை போனப்ப, தருமி சாரை பார்க்கலாமுன்னு போயி அதுவும் சொதப்பி போச்சு, பார்க்க முடியுமா, அப்படி பார்க்கலாம்னு போயி முடியாம போன சோகத்தை தருமி ஐயா எனக்கு மடல் போட்டப்ப தான், என்ன எப்படி சொதப்பலாச்சுன்னு தெரிய வந்ததை கீழே படிங்க!

"ஒரு புத்திசாலி காலயில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஃபோன் ஒண்ணு வந்திச்சாம். வெளிநாட்டு நண்பர் ஒருவர் முகவரி சொல்ல, அவரைப் பார்க்க சொன்ன அந்த சாலைக்கு சரியாக சொன்ன நேரத்தில் போய்ச்சேர்ந்தானாம். அங்கே போனால் சொன்ன முகவரியில் குழம்பிப்போய் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியலையாம்.

சரி..என்னன்னு விசாரிக்கிறது? நண்பரோ அங்கே அறிமுகமில்லாதவர். அவரைப்பற்றிச் சொன்னால் அண்டை அயலில் யாருக்குத் தெரியும். அவர் மாமனார் பெயரோ, at least அவரது ஃபோன் எண்ணோ தெரிந்திருக்க வேண்டாமா? காலையில் போன் செய்தவரிடம் எண்ணை வாங்கி வைத்திருக்கக்கூடாதா? போனை கட் செய்ததும் அது நினைவுக்கு வந்தது, நண்பர் ஒருவேளை caller id உள்ள போனாகத்தான் இருக்கும் - அமெரிக்க வழக்கப்படி? - என்று நினைத்திருக்கலாம்,
இருப்பினும் ஒருவேளை ஆளைக்காணோமே என்று மறுபடி வீட்டிற்கு போன் வரலாம் என்ற நினைவில் வீட்டுக்குப் போன் செய்து, போன் வந்தால் கைத்தொலைபேசி எண் கொடுக்கச் சொல்லிவிட்டு, அதற்காக அந்த ஏரியாவிற்குப் பக்கத்தில் இருக்கும் கல்லூரியிலேயே கிடையாய் 12.45 வரை இருந்துவிட்டு திரும்பியாகிவிட்டது. 11\லிருந்து 11.30 வரை இடம் தேடல் .

அங்கிருந்த வாய்ற்காப்போர்கள் இருவர் பேசிக்கொண்டது:
என்ன ஆளு இவரு. ஆளு பேரு, போன் நம்பர், வீட்டு முழு முகவரி எதுவும் இல்லாமல் ஆளத் தேடி வந்திட்டாராம். ம்ம்ம்ம்

--
அன்புடன்..........தருமி "

அதுக்கு நானும் மன்னிப்பு கோறி மறு மடல் போட்டு சங்கதி ஏக சொதப்பலாகி போச்சு போங்க, இப்படி கதை கந்தலாயி வந்தது இதில மட்டுமில்லை, மற்ற ஏகப்பட்ட சங்கதிலேயும்னு வச்சுக்கங்களேன்!

முதமுதல்ல போய் சேர்ந்து டில்லியிலே இறங்குனோன்ன இந்த 'Pre-paid Taxi'ன்னு ஒன்னு இருக்கு பாருங்க, அங்க ஆரம்பிச்ச சோகம், கடைசியிலே திரும்ப வர, விமானம் ஏறி உட்காரும் வர நம்மல துரத்தி துரத்தி அடிச்சது! நானூறு ரூவா கொடுத்து 'Pre-paid Taxi'பில்லு கிழிச்சு, கீழே இறங்குனா முதல்ல அகப்பட்ட டாக்ஸி மாருதி 800ல வந்த கருப்பு மஞ்சள் காரு, நாங்க மூணு பேரு, நாலு சாமான்கள், அதை வக்கலாமுன்னு டிக்கியை திறந்தா அங்கே பெரிய CNG சிலிண்டர், அதுக்கு தான் டிக்கிலே இடம் இருக்கே ஒழிய நம்ம சாமானுக்கு எங்க இடம், சரி இந்த காரு வேணாமுன்னு வேற காரை கொடுக்க சொல்லி டிக்கெட்டு கிழிச்சவருக்கிட்டே போனா, அதுல கேரியரு இருக்குமே, மேலே தூக்கி வச்சிக்கிட்டு போக வேண்டியது தானேன்னு புலம்பிக்கிட்டே மாருதி வேன்னா பார்த்து ஒன்னு எழுதி கொடுத்தாரு, அதிலேயிம் பாதி டிக்கி ஸ்டெப்பினி டயருங்க இரண்டு CNG சிலெண்டர்னு, ஏதோ நம்ம கொண்டு போன லக்கேஜை எங்கெங்கெங்கோ வச்சுட்டு, புறப்படலாமுன்னு ,சுத்தி நிக்குது காலி வண்டிங்க, சவாரி ஏத்த, வழி விட்டால நம்ம போறதுக்கு, பெல்ட்டுல சாமான் வந்து வெளியிலே எடுத்து வர இரண்டு மணி நேரமுன்னா, சுத்தி நின்ன டாக்ஸிங்களை ஒதுக்கி ஏர்போர்ட்டடி விட்டு வெளி வர ஒரு அரை மணி நேரம்!( இந்த ஊர்ல வந்தமா, வரிசையா நிக்கும் கேபை புடிச்சமா, போயிகிட்டே இருந்த மாங்கிற கதை இல்லை அங்கே, எல்லாரும் பாசப்பிணைப்போட அப்படியே கட்டி போட்டுட்டாங்க போங்க!)

அப்படி வெளியிலே வந்தா நம்ம டாக்ஸி டிரைவர் வண்டி ஓட்டினாரா, இல்லை ரோலர் கோஸ்டர் சுத்த வச்சாரான்னு தெரியாத அளவுக்கு அடி வயிரு கலங்க ஓட்டி வந்தாரு! அதுமட்டுமில்லை இந்த லேன் டிரைவிங்னு போட்ட கோடுங்க எதுக்குன்னு தெரியலை, சரியா வண்டி நடுவிலே அந்த கோடு வர்றமாதி பார்த்துக்கிட்டு பாதி இந்த லேன்லயும் பாதி அந்த லேன்லயும் ஓட்டி கலாச்சிட்டாரு. இப்பதான் கஷ்டப்பட்டு இங்கே லைசென்ஸு வாங்கன என் பொண்ணு, என்ன வண்டி இப்படி ஒட்டறாங்க இங்கேன்னா! அதுவுமில்லாம, ஒரு சிக்னல் இல்ல சந்திப்புல திரும்பறப்ப, ஒரு டாட்டா சுமோ அப்படியே முத்தங்கொடுக்கிறமாதிரி வந்துட்டு நின்னு எங்க காருலே இருக்கிறவங்களை நோட்டம் வுட்டுட்டு, அப்படி விருட்டுன்னு எடுத்துட்டு போனாரு! என் பொண்ணு அதுக்கு கேட்டா, ஏம்பா இங்க இந்த சிக்னல் இல்லாத இந்த கார்னர், கர்டஸி கார்னர் மாதிரி, யாரு முதல்ல வந்தாங்களோ அவங்களுக்கு வழி விட்டு போக சொல்லிட்டு மோதாம போமாட்டாங்களான்னு கேட்டா, அதுவும் அந்த ஸ்டாப் ஸைன் எதுவும் நாலு பக்கமும் இல்லையே, அது ஏன்னு கேட்டா! நான் என்னத்த சொல்றது! இந்த ஊர்ல பந்திக்கு முந்துரவன் மாதிரி எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு பூந்து ஓட்டினாதான் உண்டு, இல்லேன்னா நீ அடிபட்டு நொந்து போவேன்னே! பிற்பாடு நினைச்சுக்கிட்டேன், 20 வருஷம் இந்தியாவுல காரு ஓட்டிட்டு வந்தாலும் நம்ம ஆளுங்களை ஏன் இந்த அமெரிக்காகாரன் ஒரு அட்டம்பட்ல பாஸ் பண்ண வைக்க மாட்டேங்கிறான்னு!

அடுத்து நம்ம ஊரு பேங்க் இருக்குங்களே, அங்க உண்டாகிற அனுபவமே தனி! என் பொண்ணு பேர்ல எடுத்த சேவிங்ஸ் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணலாமுன்னு என் பொண்ணையும் கூட்டிட்டு போனேன்! அங்க தான் புடிச்சது சனியன். உங்க பொண்ணோட பர்த் சர்டிபிகேட் கொண்டு வந்தா தான் குளோஸ் பண்ணுவேன்னு அந்த பேங்க் அக்கவுண்டெண்ட் சொல்லிட்டாரு. நான் சொன்னேன், என் பொண்ணுக்கு பதினெட்டு வயசாயுடுச்சு, நான் கார்டியனா இருந்தாலும், இதோ அவங்களையும் கை எழுத்து போட சொல்றேன் குளோஸ் பண்றதுக்கு, ஆக லீகலா நீங்க குளோஸ் பண்ணலாமேன்னேன். அதுக்கு ஏகப்பட்ட வாக்கு வாதம் பண்ணி கடைசியிலே பண்ண ஒத்துக்கிட்டாரு! இருக்கிற மீதி பணத்தை கொடுக்க சொல்லி ஒரு வித்ட்ராயல் சிலிப்பு எழுதி கொடுத்தா, அதை வாங்கின ஒரு பேங்க் அம்மனி, எண்ட்ரி போடறத்துக்கு, அதுக்கு ஓகே சொல்ல ஒரு கை எழுத்து அந்த அக்க்வுண்டண்ட்கிட்ட வாங்கினாங்க, அப்பறம் எனக்கு டோக்கன் கொடுத்து, அந்த வித்ட்ராயல் சிலிப்பை திருப்பி கைஎழுத்து போட்டு பணம் தர்ற கவுண்டருல் உள்ளவருக்கிட்ட போய் சேர ஒரு மணி நேரம், அவரும் டோக்கன் நம்பரை வரிசையா கூப்பிடறேன் ஆசாமின்னு மேலே கீழே வச்சு, டோக்கன் நம்பரு 30 வந்தா, அப்பறம் டோக்கன் நம்பரு 10 வந்து, கடைசியிலே நம்ம நம்பரு வந்து மீதி பணத்தை வாங்கறத்துக்குள்ளே ஒரே புழுக்கம் போங்க! இந்த ஊர்ல பேங்க்ல போயி டீல் பண்ணிட்டு வர்றதுக்கும் அங்கே நடந்துக்கிறதுக்குதுக்கும், ம்.. இன்னும் எத்தனை நூறு ஆண்டாகுமோ இந்த மாதிரி வசதிவர! நம்ம பொது மக்களும் வீணா இது மாதிரி காலவிரயம் செலவு பண்ணமா இருக்க!

அது மட்டுமில்ல, இன்னொரு விநோதமான அனுபவும் ஏற்பட்டுச்சு, அதுவும் நம் அழகு சென்னையிலே! நான் நம்ம படிச்ச படிப்பை ட்ரான்ஸ்கிரிப்ட் வாங்கலாமுன்னு மெட்ராஸ் யுனிவர்சிட்டி போனப்ப, அவங்க டிடி எடுத்துட்டு வாங்க, உங்களுக்கு கொடுக்குறோமுன்னாங்க. அந்த பல்கலைகழக வளாகத்திலே இருந்த் ஸ்டேட் பேங்க் ரொம்ப கும்பலா இருந்ததாலே, பக்கத்திலே இருந்த எழிலகத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரான்சுல போயி எடுக்கலாமுன்னு போனா, பேங்கு வாசல்லயே மிராசு மாதிரி ஒருத்த்ரு உட்கார்ந்துக்கிட்டு, யுனிவர்சிட்டிக்கு டிடி எல்லாம் தரமாட்டோமுன்னு அடாவடி பண்ணிக்கிட்டிருந்தாரு! அப்பறம் நான் சொன்னேன், பேங்க்ன்னு இருந்த இந்த பிஸினஸுக்கு தான் டிடி தருவோங்கிற கட்டுபாடு எல்லாம் இருந்ததா நான் கேள்விபடலேயே, அதெப்படி, அதான் டிடி எடுக்க கமிஷனா பணம் வாங்கிக்கிரீங்கள்ள, அதுக்கு சேவை செய்ய வேணாமான்னு கேட்டோன்ன, அவரு சொல்றாரு, சார் இன்னைக்கு ஸ்டாப்பு கம்மி, அதுவும் டிடி போடறது ஒரு அம்மாதான், இப்ப லஞ்சு டைம், இரண்டரை மணிக்கு மேலே வாங்க, முடிஞ்சா பார்க்கிறோம்முன்னாரு! ஏங்க நாலு மணி வரை உங்க பிஸினஸ் அவர் ஆச்சுங்கெளேன். சாப்பாட்டு சமயத்திலேயும் வேற யாராவது பணம் வாங்க கொடுக்க, டிடி பண்ண டெல்லர் இருக்கனுமேன்னேன். நீங்க என்னா இவ்வளவு சட்டம் பேசிருங்கன்னாரு! நான் சொன்னேன், நான் ஒரு காரியமா வந்திருக்கேம், யுனிவர்சிட்டியிலே மூணு மணிக்கு டிடி கவுண்டரை மூடிடுவேங்கிறாங்க, அதுக்கு முன்னே டிடி எடுத்து கொடுக்கணும் சொல்லி, அவருக்கிட்ட டிடி சிலிப்பை வாங்கி பில்லப் பண்ணி வரிசையிலெ நின்னா, சரியா நம்ம நேரம் வர்றப்ப, உள்ள உட்கார்ந்த டெல்லர் அம்மனி, இது சாப்பாட்டு நேரமுங்க, இரண்டரை மணிக்கு மேலே தான் உங்க டிடி பண்ண முடியுமுன்னு போயிட்டாங்க! எவ்வளவு எடுத்து சொல்லியும், ஒரு பிர்யோசனமில்லை! கடைசியிலே அந்த அம்மா சீட்டுக்கு இரண்டே முக்காலுக்கு வந்து என் டிடியை பண்ணி கொடுத்து, அரக்க பரக்க ஒடி அதை யுனிவர்சிட்டியிலே ஜமா பண்ணி, கடைசியிலே அட்டஸ்டேஷன் வாங்கிட்டு வந்தேன்! எவ்வளவு ஸ்டெரஸ் பார்த்தீங்களா, அந்த நாலு மணி நேரமும் மன அழுத்தத்தோட எல்லா வேலையும் செய்ய முடிஞ்சுச்சு, அதையே இந்த ஊர்ல எப்படி நினைச்சு பார்த்தேன், இந்த மாதிரி ஆளா பறக்க வேணாம், எல்லாம் சொகுசா முடிஞ்சிடும், போயி கஸ்டம்ர் சர்வீஸ் கவுண்டரு முன்னாடி நின்னா நொடிப்பொழுதிலே எல்லா வேலையும் முடிஞ்சுடும்!

ஆக யுனிவர்சிட்டி டிடி பண்ணமாட்டேன்னு அடாவடி பண்ற மிராசுங்களை நம்ம ஊரு பேங்குங்கள்ள தான் பார்க்க முடியும் அதுவும் பொது மக்கள் சேவைக்காக உண்டாக்க பட்ட இந்த வங்கிகள் பொது மக்கள் சேவையை பெரிதுன்னு நினைச்சு செய்றாங்களாங்கிறது சந்தேகம் தான். ஒரு சில சேவையை செய்ய மாட்டேன் போன்னு சொல்றதாலே பேங்குக்கு நஷ்டம் இல்லையா, பாவம், கஷ்டபட்டது நம் மாணவர் செல்வ்ங்கதான். பரீட்சைக்கு பணம் கட்ட டிடி எடுக்க வந்தா இந்த விரட்டு, பணம் எடுக்க வரும் கடைநிலை தொழிலாளிகளை என்னமோ, இவங்க பாக்கெட்ல இருந்து தர்றமாதிரி விரட்டி விரட்டி பணம் தர்றதை எல்லாம் பார்க்கும் போது, படிக்காத பாமற மக்களை எப்படி கஷ்டபடுத்திறாங்கன்னு தெரியுது.

இது பேங்க்ன்னு மட்டுமில்லை, அரசாங்க பொது சேவைகள் எதுவானாலும் அல்லல் படும் நம் இந்திய மக்களுக்கு எப்பொழுது தான் விமோசனம் வர்றப்போகுதோ. இந்த ஊர்ல எல்லாருக்கும் ஆயுசு நீண்டகாலம் ஏன்னு நினைச்சு பார்த்தா, இந்த ஸ்டெரெஸ், மனப்புழுக்கம் இல்லாத நிம்மதியான வாழ்க்கை தான்! அந்த நிம்மதி குலைவதால, மருத்துவ வசதிகள் எவ்வளவு இருந்தும் நம்முடைய ஆவரேஜ் ஆயுசுக்காலம் என்னவோ கம்மி தான் போங்க! இது தான் இந்த தடவை ஊருக்கு போயிருந்தப்ப நான் கண்ட நிதர்சன உண்மை! என்னதான் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றமுன்னு கொக்கரிச்சாலும் நம்முடய அடிப்படை வச்திகள், சேவைகள் என்னவோ இன்னும் அப்படியே தான் இருக்கு! என்ன பண்றது, 'இந்திய நாடு என் நாடு, இந்திய மக்கள் என் மக்கள்!' நம்மவர் விமோச்சனம் வர்ற இன்னும் எவ்வளவு காலம் புடிக்குமோ?

12 comments:

said...

சார்

வாங்க வாங்க.. உங்கள் பதிவுகளைப் ரொம்ப நாளாக பார்க்கமுடியவில்லை..

பதிவு இன்னும் முழுமையாக படிக்கவில்லை.. படித்துவிட்டு மீன்டும் வருகிறேன்,

said...

வெளிகண்ட நாதர்,

வாங்க..வாங்க..தமிழ்மணம் நீங்க இல்லாம வெறிச்சோடி கிடந்தது.

மத்தபடி வேலை செய்யாத சோம்பேறி அரசு ஊழியர்களுக்கு ஆப்படிக்க தனியார் மயம் ஒன்றே சரியான தீர்வு.வேலை செய்யாத இந்த அவலட்சணங்களுக்கு 20,000, 30,000 என சம்பளம் ஒரு கேடு.

said...

வருக வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக

said...

எங்க ஊர்ல உங்களுக்கு அப்படி! உங்க ஊர்ல எனக்கு இப்படி:
DAY – 3 09.02.’02 SATURDAY

12.05 p.m. brahmippu has started. Got up by 8 , took bath for long time in the bathtub. Royal kulipputhan! Lucky to have this bathroom since the bath of the Chinese, Cao does not have a tub. Went into the kitchen wondering what to do. Cao was preparing something and offered me. It was palaiya soru, fried with a little potato pieces and some egg, it seems. It tasted good. Much better than his stew – watery soup made of boiled cabbage.
Went out to the post office to send a parcel. Somehow I expected a dingy building but it was quite grand; small but looked grand with a large stony facade. Went in. what a nice system they have. You have counters and we have to stop a few feet before. there is a yellow line on the floor. You stop there by coming in the queue. only when the person in the counter calls ‘next’ you go to the counter. no 'thallu-mullu'!Postage came to $5.20. I thought they may ask for change and so said ‘sorry, I don't have change’. There was a black young girl inside the counter. With all smiles she said ‘ I will give’. it was all very surprisisng to me in these first days of my stay.

said...

சிவபாலன், நிறைய பதிவுகள் போட ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே! நான் ஒரு மாசம் அப்படியே இந்தியா சுத்தி வர போயிட்டதால, ஒன்னும் எழுத முடியுல, தொடர்ந்து எழுதுறேன்!

said...

செல்வன், தமிழ்மணம் வெறிச்சோடி போயிடுச்சா? எப்படி? அதான் எல்லாரும் அசத்துறாங்களே!

said...

வணக்கம் சிவா, நலமா அங்கே எல்லாம்!

said...

ஆகா தருமியின் அனுபவங்கள் புதுமையோ!

said...

கவலை படாதீங்க
கூடிய சீக்கிரமே வளர்ந்துவிடுவோம்.
நான் போனபோதும் இதில் முக்கால் வாசி அப்படியே நடந்தது.
பழக்கமாயிடுச்சு.

said...

அட, இங்கு வந்திருந்தீர்களா ? அங்கிருந்து இங்கு வந்தால்தான் இந்த மன அழுத்தமெல்லாம். எங்களுக்கு இதுதான் எதிர்பார்ப்பே என்பதால் ஒரு ஸ்ட்ரெஸ்ஸும் இல்லை.:)

said...

அட கசப்பான அனுபவங்கள் போல உங்களுக்கு...மற்றபடி நண்பர், சுற்றத்தோடு நாட்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். :)

said...

உதயகுமார் ஐயா. ஊருக்குப் போயிருந்தீங்களா? அதான் இவ்வளவு நாளா எதுவுமே புதுசா எழுதல.

நம்ம ஊருக்குப் போன போது உங்களுக்கு கல்ச்சுரல் ஷாக் கிடைச்சதா? எனக்கும் அப்படித் தான். முதல் தடவை இங்கே ஒரு வருடம் இருந்துட்டு ஊருக்குத் திரும்பிப் போன போது கல்ச்சுரல் ஷாக் இருந்தது. :-)

கொஞ்ச கொஞ்சமா நம்ம ஊருலயும் மாற்றம் வரத் தொடங்கியாச்சுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு இங்க கிடைக்கிற மாதிரி சேவை நம்ம ஊர்லயும் கிடைக்கும்ன்னு எதிர்பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.