Wednesday, May 31, 2006

நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி!

இது கொஞ்சம் பெருசங்களுக்காக போடப்படும் பதிவு, அதாவது அந்தக் காலத்திலே கனவுக் கன்னியா இருந்த நமது நாட்டியப் பேரொளி பத்மினி இவ்வளவு காலம், கணவன் மறைந்தும் அமெரிக்காவிலே இருந்துவிட்டு, அவர் தமிழ்நாடு திரும்புகிறார் அடுத்த மாதம்!அவர் நாடு திரும்புவதை ஒட்டி நியூ ஜெர்சியில் இருக்கும் நம் தமிழர்கள் அவருக்கு மிகப்பெரிய வழியனுப்பு விழா ஒன்றை நடத்துக்கிறார்கள் வரும் ஜீன் 3ம் தேதி! அதைப்பற்றி விவரம் அறிய வேண்டுமென்றால் இதோ சுட்டி! இன்றும் நம் நினைவை விட்டு நீங்காத அவர் நடித்தப்படங்கள் பல! யார் மறக்க முடியும் அந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற அவர் நடித்த உணர்ச்சி மிகுந்த அந்த பாடல்கள் மற்றும் நாட்டியங்களை! அவர் வழியனுப்பு விழாவில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததால் அவருக்காக இந்தப் பதிவு அற்பணம! கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி பார்க்கும் பொழுது 'லலிதா, பத்மனி, ராகினி என்ற திருவாங்கூர் சகோதரிகள் நடனத்தால் நம் பெருசுகளையும், பிறகு நம்மவரையும் கவர்ந்த அவர்களை கொஞ்சம் நினைவுக்கூர்வோமா?

தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.

நடனப் பயிற்சி

மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.

கல்பனா

40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.

ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.

"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.

வேதாள உலகம்

இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.

"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.

"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.

இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.

1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.

வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.

லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.

அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.


பிரசன்னா

1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.

லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.

ஏழைபடும்பாடு

இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.

பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.

படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.

காஞ்சனா

லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)

இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.

பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.

கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.

"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.

காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.

படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.

பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.

இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.

1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்.


சிவாஜிகணேசனுடன் முதல் படம்

1952ல், "பராசக்தி" தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த "பணம்" என்ற படத்திலும் சிவாஜிகணேசன் நடித்து வந்தார். இந்தப்படத்தின் கதாநாயகி பத்மினி.

சிவாஜியும், பத்மினியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட போது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

"பப்பிம்மா! நான் நாடக நடிகனாக இருந்தபோது, உங்கள் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, மணமகள் படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்போதெல்லாம், எதிர்காலத்தில் உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்றார், சிவாஜி.

பத்மினி, சிரித்துக்கொண்டே, "கணேஷ்! இப்போது தமிழ்ப்பட உலகில் இளம் கதாநாயகர்களே அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் `பராசக்தி' படம் பற்றி, இப்போதே பரபரப்பாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் புகழ் பெறுவீர்கள்" என்று கூறினார்.

"பராசக்தி" வெளிவந்த சில நாட்களுக்குப்பின் "பணம்" வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர்.

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராகினி நடித்தார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.

இப்படத்தில் "வெண்ணிலாவும் வானும் போல..." என்ற பாரதிதாசன் பாடலை எம்.எல். வசந்தகுமாரி அருமையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்த பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றது.

தூக்குத்தூக்கி

1954ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "தூக்குத்தூக்கி"யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர்.

"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி பத்மினி.


இந்தப் படத்தில், "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லறஜோதி"யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது.

எதிர்பாராதது

1954 கடைசியில் வெளியான சரவண பவானிட்டி தயாரிப்பான "எதிர்பாராதது", சிவாஜி, பத்மினி இருவரின் திறமைக்கும் சவாலாக அமைந்த படம்.

இப்படத்தின் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார்.

இதில் சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். ஆனால் விபத்து காரணமாக சிவாஜி அடையாளம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்ள, பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும்போது, பத்மினி சித்தி ஸ்தானத்தில் இருக்கிறார்.

உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. கதையின் `கிளைமாக்ஸ்' எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்ள, நமது பண்பாட்டிற்கு ஏற்றபடியே கதை முடிகிறது. இறுதிக் கட்டத்தில் "சிற்பி செதுக்காத பொற்சிலையே" என்ற பாடலை சிவாஜி பாடிக்கொண்டிருக்க, கொட்டும் மழையில் பத்மினி ஓடி வருவார். அவரை கட்டித்தழுவ சிவாஜி முயலும் போது, பத்மினி அவரை அடித்து நொறுக்குவார். மெய் சிலிர்க்கச் செய்யும் கட்டம் அது.

சிவாஜிகணேசன் பலதரப்பட்ட படங்களில் நடித்து, நடிப்பின் இமயமாக உயர்ந்து கொண்டே போனார். இதனால் அவர் பானுமதி, சாவித்திரி, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடனும் நடிக்க நேரிட்டது.

இதேபோல், பத்மினியின் புகழும் உயர்ந்து கொண்டே போயிற்று. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் ஆகியோருடனும் சில படங்களில் இணைந்து நடித்தார். எனினும் சிவாஜி பத்மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மங்கையர் திலகம்

1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும்

இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார்.

பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்."

தேவதாஸ்

லலிதா நடித்த படங்களில் சிறந்தவை "தேவதாஸ்", "கணவனே கண்கண்ட தெய்வம்" ஆகியவையாகும்.

"தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.

"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.

"எனக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்" என்று நடிகை பத்மினி 1961 ஏப்ரலில் அறிவித்தார்.
திரை உலக ராணிகள்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.

பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.

பத்மினியை விட பானுமதி சுமார் 10 வயது மூத்தவர். எனவே நாளடைவில் பானுமதி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும், "நெம்பர்1" இடத்துக்கு பத்மினி உயர்ந்தார்.

பத்மினி, திருமணத்துக்கு முன்னதாக சிவாஜிகணேசனுடன் நடித்த படங்களில் பாக்யவதி (1957), புதையல் (1957), உத்தமபுத்திரன் (1958), தங்கப் பதுமை (1959), தெய்வப்பிறவி (1960), புனர் ஜென்மம் (1961) ஆகியவை முக்கியமானவை.

"புதையல்" படத்தில், சிவாஜி பத்மினி காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தங்கப்பதுமை

கண்ணகி கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் "தங்கப்பதுமை." ஜூபிடர் சோமு தயாரிப்பில், அரு.ராமநாதன் கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

இதில், பத்மினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே, ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் குரலில் சிவாஜி பாடுவது படத்தின் சிறப்பு அம்சம். சிவாஜிகணேசன் கண் குருடாக்கப்பட்டதை அறிந்ததும் பத்மினி "ஆ" என்று அலறித் துடித்தக்காட்சி, "உங்கள் கண்கள் எங்கே அத்தான்?" என்று அழுகையுடன் கேட்டபோது காட்டிய முகபாவம், பத்மினியை நடிப்பின் சிகரத்துக்குக் கொண்டு போயின.

பத்மினியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "தங்கப்பதுமை."

சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்த படங்களில் ஒன்று "தெய்வப்பிறவி." இது ஏவி.எம். தயாரித்த படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம். கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்.

காதலித்து மணந்த பத்மினி மீது சிவாஜி சந்தேகப்படுவார். அதைத்தொடர்ந்து, கணவன் மனைவி இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டத்தை பத்மினி, சிவாஜி இருவருமே நன்கு சித்தரித்தனர்.

சிவாஜியின் மகத்தான படமான "வீரபாண்டிய கட்ட பொம்ம"னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன்.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "மீண்ட சொர்க்கம்" ஆகியவை முக்கியமானவை.

வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட "போட்டி நடனம்", கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், "வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி வைஜயந்திமாலா போட்டி நடனக்காட்சி" என்று தயங்காமல் கூறலாம்.

படம் வெளிவந்து 47 ஆண்டுகள் ஆகியும், இப்போது பார்த்தாலும், இன்று படமாக்கப்பட்டது போல இந்த நடனக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

"மீண்ட சொர்க்கம்" ஸ்ரீதர் டைரக்ஷனில் உருவான படம். கதை அம்சத்தில் உள்ள குறை காரணமாக, இப்படம் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், பத்மினியின் நடனங்களும், நடிப்பும் சிறப்பாக இருந்தன.

மதுரை வீரன்

எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் "மதுரை வீரன்" முக்கியமானது. அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார்.

இந்தப்படம் "சூப்பர்ஹிட்."

ராஜபக்தி

1960ல் வெளியான "ராஜபக்தி" என்ற படத்தில் சிவாஜிகணேசனுடன் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய மும்மணிகள் நடித்தனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சிவாஜிக்கு ஜோடி இந்த மூவரில் எவரும் அல்ல; பண்டரிபாய்தான் சிவாஜிக்கு ஜோடி! பத்மினிக்கு ஜோடி டி.எஸ்.பாலையா!

இந்திப் படங்கள்

இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார்.

இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது. "தமிழில் அற்புதமான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பத்மினி, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாமா?" என்று பலர் கேள்வி எழுப்பினர்.

திருமண ஏற்பாடு

1961 ஏப்ரலில் பத்மினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை சினிமா உலகைச் சேர்ந்தவர் அல்ல என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டன.

பத்மினியை நிருபர்கள் முற்றுகையிட்டு, கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

"எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது உண்மை. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் முடிவான பிறகு, திருமணம் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கிறேன்" என்று பத்மினி கூறினார்.

"திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "நடிக்க மாட்டேன்" என்று பத்மினி பதில் அளித்தார்.


திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" ஒரு திரைக்காவியமாக அமைந்தது.
திருமணத்துக்குப்பின், மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க லண்டன் செல்ல விரும்பினார், டாக்டர் ராமச்சந்திரன்.

திருமணம் நடப்பதற்கு முன்பே இதுபற்றி பத்மினியிடமும், அவர் குடும்பத்தாரிடமும் ராமச்சந்திரன் பேசியிருந்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர்.

லண்டனில் பத்மினி

அதன்படி 1961ம் ஆண்டு பிற்பகுதியில் ராமச்சந்திரனும், பத்மினியும் லண்டன் சென்றார்கள். உயர் மருத்துவக் கல்வி பயில, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ராமச்சந்திரன் சேர்ந்தார். இருவரும் ஒரு பங்களாவில் வசித்தனர்.
படிப்பு முடிந்ததும், ராமச்சந்திரனும், பத்மினியும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அங்கு நிஜெர்சி நகரில் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி தொடங்கினார்.

ஆண் குழந்தை

இதற்கிடையே, பத்மினி ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனுக்கு பிரேம் ஆனந்த் என்று பெயர் சூட்டினார்கள்.

ஒரு முறை பத்மினி தன் கணவருடன் சென்னை வந்திருந்த போது, அவர்களை பட அதிபர்கள் சந்தித்து பத்மினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

சில கேரக்டர்களை பத்மினியால்தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

பத்மினி மீண்டும் நடிப்பதற்கு ராமச்சந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பத்மினி தமிழ் சினிமா உலகில் மறுபிரவேசம் செய்தார்.

தில்லானா மோகனாம்பாள்

பத்மினி மீண்டும் படங்களில் நடிக்க முன்வந்ததை பட அதிபர்களும், ரசிகர்களும் வரவேற்றனர். சில அருமையான படங்களில் பத்மினி நடித்தார்.

குறிப்பாக, ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) ஒரு திரைக்காவியமாக அமைந்தது. பத்மினியின் திரை உலக வாழ்க்கையில், அவருடைய மிகச்சிறந்த 10 படங்களை தேர்ந்தெடுத்தால், அதில் "தில்லானா மோகனாம்பாள்" நிச்சயம் இடம் பெறும்.

நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜிகணேசனும், நாட்டிய தாரகை தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தனர்.

1967ல் வெளிவந்த "இருமலர்கள்" ஒரு காதல் காவியம். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

திருலோக்சந்தர் டைரக்ஷனில், ஆரூர்தாஸ் வசனத்தில், எம்.எஸ்.விசுவ நாதன் இசையில் வெளிவந்த இப்படம், முக்கோணக் காதல் கதையை புதிய கோணத்தில் விவரித்தது.

வியட்னாம்வீடு (1970) படத்திலும், சிவாஜி பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

"தேனும் பாலும்" படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "சித்தி"யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

"திருவருட்செல்வர்", "பேசும் தெய்வம்", "குலமா குணமா" முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.

சிவாஜியுடன் அதிக படங்கள்

தமிழ்க் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர் மஞ்சுளா நடித்த "ரிக்ஷாக்காரன்" படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இதன்பின் பத்மினி அமெரிக்கா திரும்பினார். கணவர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரியை கவனித்துக்கொள்ள, பத்மினி ஒரு நாட்டியப்பள்ளி தொடங்கினார்.

நடிகை பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன், மாரடைப்பால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 50. (பத்மினி வயது 47).
அமெரிக்காவில் உள்ள நிஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார்.

சொந்த வீடு

திருமணத்துக்குப்பின் பத்மினி "தில்லானா மோகனாம்பாள்", "வியட்னாம்வீடு", "இருமலர்கள்" உள்பட சில படங்களில் நடித்தபோதிலும், பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். கணவருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, சிறுமிகளுக்கு நடனப் பயிற்சி அளித்தார்.


பூவே பூச்சூடவா

கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில், 1985ல் "பூவே பூச்சூடவா" என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார்.

நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாசில் நினைத்தார். தன் விருப்பத்தை பத்மினிக்குத் தெரிவித்தார்.

கணவர் இறந்தபின் படத்தில் நடிக்க பத்மினி விரும்பவில்லை. எனினும் குடும்ப நண்பரான பாசில் வேண்டுகோளை தட்ட முடியவில்லை. எனவே, சென்னைக்கு வந்து, "பூவே பூச்சூடவா" படத்தில் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான்.

"இன்னும் சில வருடங்களில் நான் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவேன். என்னுடயை எஞ்சிய காலத்தை இந்த மண்ணில் கழிப்பேன்" என்று ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தபடியே இப்போது தமிழ் நாடு திரும்புகிறார்!

நன்றி: மாலை மலர்

Tuesday, May 30, 2006

மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா?

நம் நாட்டில் எல்லா சேவைகளும் மலிவாக கிடைப்பதால், இந்த 'outsourcing' என்று சொல்கிறார்கிளே, அந்த தொழில்துறையில் நமது அசூர வளர்ச்சி, வெறும் கம்ப்யூட்டர் துறை என்றில்லாமல், எல்லா துறைகளிலும் பீறு நடைப் போட்டு வருகிறது. அப்படி முன்னேறிவரும் தொழில்துறையில் 'மெடிக்கல் டூரிஸம்' என்ற தொழிலானது, அதாவது மருத்து உல்லாசப் பிராயணத் தொழில் என்பது மிகவும் முன்னேறிவரும் ஒரு தொழில் துறை. ஆனால் இந்த தொழில்முறை வளர்ச்சி மிகுந்த சர்ச்சைக்குறிய ஒன்றாக இருக்கிறது நமது மருத்துவர்களிடையே! ஏனென்றால், நம் நாட்டு மக்களுக்கு பொது மருத்துவம் மூலம் சரியான சிகிச்சை முறைகள் கிடைக்காமல் இருக்கும் பச்சத்தில், இந்த மெடிக்கல் டூரிஸத்தை வளர்க்க அரசாங்கம் அளித்து வரும் ஆதரவுக்கு பெரிய போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்கள்! ஆக இந்த மெடிக்கல் டூரிஸம்னா என்னா, அதில் உள்ள சர்ச்சைகள் என்னா இப்போ நடந்துக்கிட்டிருக்கு அப்படின்னு பார்ப்போமா கொஞ்சம்!

உல்லாசப் பிராயாணம்னா, நாலு இடங்களை சுத்தி காமிக்க இந்த வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளை கவர பிரயத்தனம் செஞ்சு ஏகப்பட்ட செலவளிச்சு, அதில வர வருமானத்தை பெருக்க நமது இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசும் பலமுயற்சிகள் எடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனா இந்த மருத்தவ உல்லாசம்ங்கிறது இப்ப கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடிக்குது!. அந்த காலத்திலேருந்து இந்த கேரளாவில் மிகவும் பாப்புலரா இருப்பது இந்த ஆயுர்வைத்திய மூலகை மருந்து மற்றும் மசாஜ் என்பது! அப்ப அப்ப நம்ம நடிகர் நடிகைங்களும் அந்த பக்கம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு ரொம்ப பளிச்னு உடம்பை தேத்திக்கிட்டு வருவாங்க! சமீபத்திலே அந்த மாதிரி சினேகா ஏதோ மலையாள மசாஜ் எடுக்க போய்ட்டு வந்ததாக் கேள்வி. விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் ரஜனிகாந்தும் இமயமலைக்கு வருஷத்துக்கொரு தடவை போய் வரமாதிரி, இந்த மலையாள மண்ணுக்கு போய்ட்டு வருவாரு இந்த மசாஜ் எல்லாம் எடுத்து தேத்திக்க! நான் சொல்லும் இந்த மருத்துவ உல்லாசங்கிறது இது இல்லை!

இந்த மெடிக்கல் டூரிஸம்னா, நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளி நாடுகளுக்கு பிராயாணம் செய்து தங்கள் நோய்களை தீர்க்க செல்வது, இதை ஆங்கிலத்தில் 'elective medical procedures' என்றழைப்பார்கள்! ஏன் அவங்க நாட்ல இல்லாத வசதிகளா, நம்ம நாட்டுக்கு ஏன் வரணும், அப்படி என்ன நம்மக்கிட்ட இருக்கு, நம்ம என்ன அவங்களைவிட மருத்துவ வசதிகள் என்ன அப்படி இருக்குன்னு நீங்க கேட்கிறது புரியது! எல்லாத்துக்கும் காரணம் மலிவான சிகிச்சை முறைகள் தான்! அதாவது அவங்க நாட்டில செஞ்சுக்கிற மருத்துவ செலவுகள்ல பத்தில ஒரு பங்கு தான், நம்ம நாட்ல செஞ்சுக்கிட்டா! அதுவும் அமெரிக்காவில் மருத்துவ காப்பு என்பதும், அது இல்லாவிட்டால் சிகிச்சைக்குண்டான செலவுகள் ஏராளம்! காப்பு எடுத்தாலுமே, அந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் இதுபோன்ற செலவுகள் கம்மியாக இருக்கும் நாடுகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பார்கள். மேற்கொண்டு கனடா மாதிரி நாடுகள்ல அவங்க செஞ்சுக்கப்போற ஆப்ப்ரேஷன், மருத்துவத்துக்காக பல மாதங்கள் காத்துகிடக்கணும்! அது மிட்டுமில்ல, இங்கிலாந்து போன்ற நாடுகள்ல அவங்க நாட்டின் அரசாங்க மருத்து சேவைகளுக்கு காத்து கிடக்கணும், இல்லை பிரைவேட் மருத்துவர்கள் கிட்ட போகணும், அதற்குண்டான வசதிகள் இல்லாம போய்விடுவதால்! சில சமயம் பங்களாதேஷ் மாதிரி நாடுகள்ல நமது நாட்டில கிடைக்கிற அத்தனை மருத்துவமும் கிடைப்பதில்லை, அதனாலே நம் போன்ற மலிவான மருத்துவ வசதிகள் கிடைக்கும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர்!

இந்த மெடிக்கல் டூரிஸம் என்பது மிகவும் பழமையான ஒன்று! அந்த காலத்தில் ஐரோப்பாவில், கிரேக்க நாட்டுக்கு, அதன் புனித தன்மை கருதி, யாத்திரிகர்களும், நோயாளிகளும் மத்திய தரைக்கடல் நாடுகள்லிருந்து சென்றதாக வரலாறு கூறுகிறது! 18ம் நூற்றாண்டில் செல்வந்த சீமான்கள் ஜெர்மனியிலிருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை சென்று வந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போதைய இந்த செலவு குறைந்த விமான மார்க்கம், கண்டம் விட்டு கண்டம் செல்ல ஏதுவாய் இருப்பதால் செல்வந்தர்களன்றி தேவைப்படும் நோயாளிகள் நாடு விட்டு நாடு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர்! ஆக இந்த மருத்துவ உல்லாச பிராயணத் தொழில் க்யூபா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்று அனைத்து நாடுகளும் வளர்ந்து வருகிறது! தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 'மெடிக்கல் சபாரி விஸிட்' என்று இந்த உல்லாசத் தொழில் வளர்ச்சி, மூக்கு சீரமைப்பு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவத்தை முடித்துவிட்டு அப்படியே சிங்கம் யானை கொண்ட காடுகளையும் பார்த்துவிட்டு வர வழி செய்கிறது! எப்படி நம்ம ஊர் நடிகைகள் மூக்கு, இடுப்பை சரி செய்ய வெளி நாடுகள் சென்று சுற்றி பார்த்து விட்டு வருவதைப்போல!

ஆனால் இந்தியா மெடிக்கல் டூரிஸம் என்பதையும் தாண்டி மெடிக்கல் அவுட்சோர்ஸிங் என்ற வளர்ச்சிக்கு வந்துவிட்டது, அதுவும் அதிக சுமையாகிப்போன மேற்கு மருத்துவ வசதி தேவைக்கு துணையாக! எப்படி என்றால் நமது நாட்டின் மருத்துவ சட்டம் இது போன்ற வெளிநாட்டு நோயாளிகளை கவனிக்க அனுமதி அளிப்பதுமில்லாமல் அதற்கு நிதி சலுகைகளயும் 'export earnings' என்கிற முறையில் அளிக்கிறது! இந்த மெடிக்கல் டூரிஸம் என்ற தொழில் துறையானது ஆண்டிற்கு 100 கோடி டாலர்களை வருமானமாக ஈட்டி தருகிறது. இதன் வருமானம் இனி வரும் ஆண்டுகளில் 200 கோடி டாலர்களுக்கு மேல் வருமானம் தரக்கூடிய ஒன்று, அதுவும் வருடத்திற்கு 30 சதவீத வளர்ச்சி! நமது கல்வித்துறையானது வெறும் கம்புயூட்டர் இஞ்னியர்களையும், புரோகிரமர்களையும் மட்டும் ஆண்டுக்கு உற்பத்தி செய்வோதோடு நின்றுவிடாமல், 20,000 த்திலிருந்து 30,000 டாக்டர்களையும் நர்ஸ்களையும் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த அசுர வளர்ச்சி!

இந்த மருத்துவத்துறையில் நமது அப்பல்லோ மருத்துவமனை ஆண்டொண்டிற்கு 60000 வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிக்கைச்சை அளித்து வருகிறது! ஏற்கனவே இந்த மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ப்ஷன் எனும் சேவையை அமெரிக்க காப்பு நிறுவனங்களுக்கு செய்து வருவதுடன், பல அமெரிக்க மருத்துவமனைகளுடனும், மருந்து கம்பெனிகளுடனும் ஆய்வு முறை மருத்துவமும் செய்து வருகிறது! 1990ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமயமாக்கத்தின் பயனாக, புது புது மருத்துவ கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இன்று இந்தியா முழுவதும் 37 மருத்துவ மனைகளும் 7000 படுக்கையுடன் கூடிய வசதியோடு இயங்கி வருகிறது! அது மட்டுமின்றி வெளி நாடுகளான் குவைத், நைஜீரியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பங்குதாரர்களுடன் பெரிய மருத்துவமனைகள் நடத்தி வருகிறது! மேலை நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு பேக்கேஜ் டீல் என்ற வகையில் விமான டிக்கட்டு முதல் கொண்டு தங்க இடம், மருத்துவசிகிச்சை, பிறகு சிகிச்சைக்குபின் உல்லாசம் ('Post operative Vocation') என அனைத்து சாரங்களும் அடங்கிய முழு செலவீன தொகையிலே இந்தியா வந்து சிகிச்சை பெற்று போக வழி செய்கிறது! காசு உள்ளவர்களுக்குத்தான் இங்கே மருத்துவம் என்ற விமரிசனங்களிலிருந்து மீள்வதற்காக சில இலவச சிகிச்சை அளித்து வருகிறது!

ஆனால், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு சில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்! சமீபத்தில் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலில், டாக்டர் சமிரான் நந்தி, மற்றும் டாக்டர் அமித் சென்குப்தா போன்றோர், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி உள்ளனர். அதாவது இந்திய அரசாங்கம் இந்திய குடிமகன்களின் ஆரோக்கியத்தை விடுத்து வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சட்டதிட்டங்களை எதிர்க்க வேண்டும் எனக்கூறி உள்ளனர்! நம் குடிமகன்களில் வருடத்திற்கு 600000த்து மேல் குஷ்டரோக வியாதியாலும், 50 லட்சம் அதிகமானோர் வயிற்றுபோக்கு வியாதியாலும் மரணம் தழுவும் பொழுது, வெளிநாட்டவருக்கு அளிக்கும் சிகிச்சையும், அதற்கு பின் அவர்களை சுற்றி காண்பிக்கும் தாஜ்மஹால் போன்ற வியாபார திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்க சட்டத்திட்டங்கள் தேவையில்லை என எதிர்த்து வருகின்றனர்! பொது மக்களின் மருத்துவ செலவீனங்களுக்கு வழி செய்யாத மருத்துவ சட்டதிட்டங்கள், தனிபட்ட மருத்துவத்திற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் போக்கினை எதிர்த்து அந்த அறிக்கையில் குரல் கொடுத்துள்ளனர்! மேற்கொண்டு இந்த மருத்தவ உல்லாசத் தொழில் வளர்ச்சிக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சலுகை முறையில் அளிக்கும் இடங்களும், மற்ற சட்ட சலுகைகளும், பொது மருத்துவ வசதிகளுக்கு வழி வகுக்காததால், இந்த தொழிலில் வளர்ச்சியை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார்கள்! மேலும் அவ்வறிக்கையில், உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் வெறும் 4 டாக்டர்கள் மட்டுமே ஒவ்வொரு 10000 மக்களுக்கும் இருக்கின்றனர், ஆனால் வளர்ந்த நாடுகளான பிரிட்டன் போன்ற நாடுகளில் 18 டாக்டர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேற்கொண்டு, கிராமப்புற சுகாதார மருத்துவமனைகளின் நிலைமையும், ஏழை மக்களுக்கு கிடக்காத மருத்துவ சிகிச்சைகளும், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலைகள் அதிகம் எனக்கூறி , அரசாங்க சுகாதார சட்ட திட்டங்கள் மக்கள் நலனுக்கு சார்ந்தாக இல்லை என கடுமையாக சாடி உள்ளார்!

ஆனால், இந்த எதிர்ப்பு, இந்திய மருத்தவர்களிடையே பிளவினை உண்டுபண்ணி இருப்பது என்னவோ உண்மை! இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலை ஆதரிக்கும் மருத்தவர்கள், இது நமக்கு உலக நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் அங்கீகாரமே, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ந்த சுகாதார வசதிகளின் நிலை உலகத்தரத்துக்கு இணையாக இருப்பது நமக்கு பெருமையே! இத்தொழிலை நாம் முழுமனதுடன் ஆதரவுக் கொடுத்து வளர்க்க வேண்டுமெனக்கூறுகின்றனர்! டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் ட்ரெகான் கூறுகிறார், நாம் இத்தொழிலை, இங்கு வசிக்கும் மக்களின் சிகிச்சைக்கு பங்கம் விளைவிக்காமல் வெளிநாட்டவருக்கு சிகிச்சை செய்வதில் தவறில்லை என்றும், இது நாம் விண்வெளி பயணம் போவது போன்றது, இங்கு பஞ்சம், பட்டினி, இதனை ஏன் செய்கிறீர்கள் என கேட்கின்றனர், இருந்தும் நாம் ராக்கெட் விடுவதில்லையா, அது போன்று தான் இத்தொழிலும் என்கிறார்!

இது போன்ற எதிர்மறை சர்ச்சைகள் இருந்தாலும், இந்த தொழில் முன்னேற்றம் நமக்கு முன்னேற்றம் தரக்கூடியதே! அதிகமான மருத்துவர்கள் தங்கள் திறமைகளையும் அனுபவங்களையும் பெற்று அதை இந்திய மக்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது! இந்திய சுகாதர நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலின் மூலம் வரும் வருமானம் சுகாதர வசதிகளையும், கிராமப்புற சேவைகளயும் அதிகம் உருவாக்கி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் டாகடர் நந்தி, இத்தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் பொது சுகாதரத்திற்கு செலவிடப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், இந்தியாவில் பணம் இருப்பவர்கள் தனியாரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு விடுவார்கள், அவதிப்படுவது ஏழைபாளைகளே என கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆக இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா என்பதை விஷயம் தெரிந்த அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பின்னோட்டமாகக் கூறுங்கள்!

Sunday, May 28, 2006

ஏசு (வெளிகண்ட இல்லை) நாதரின் பேத்தியும், மோனோலிஸாவும்!

திடீர்னு கொஞ்ச நாளைக்கு முன்னே, எல்லாரும் பரபரப்பா ஒரு நாவலை இந்த பக்கம் வாங்கி படிச்சிக்கிட்டிருந்தாங்க, பேரு 'டாவின்ஸி கோடு'. சரி நம்முலும் வாங்கி என்னதான்னு படிப்போமேன்னு வாங்கினேன். அப்புறம் சரியா நேரம் கிடைக்காதாலே முழுசா படிக்க முடியல்லை. அப்பதான் இந்த நாவல் படமா வந்து ஒரே களேபரத்தோட ஓடிக்கிட்டிருக்கேன்னு இந்த வாரம் போய் பார்த்தா, அது ஏசுநாதர் பேத்தி பத்தின கதை! அதுக்கென்ன ஒரே களேபரம் அப்படின்னு ஆராஞ்சப்பதான் சொன்னாங்க, ஏசுநாதர் பிரம்மச்சாரின்னுதான் எல்லாருக்கும் தெரியும் ஆனா அவரு அப்படி இல்ல, 'ஓடிப்போயி கண்ணாலந்தான் கட்டிக்கிடலாமா, இல்லே கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா'ங்கிற கதை பண்ணி இப்ப அவருக்குன்னு வாரிசுங்க இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! அப்படி கண்ணாலம் பண்ணதை பரம ரகசியமா வச்சிருந்து, கடைசியிலே அவரு பேத்தி ஒன்னு இப்ப இருக்கறதாகவும், அந்தம்மாவுக்குத்தான் ஆபத்துன்னு சொல்லி வந்த கதை தான் இந்த நாவல், படம் எல்லாம்!

என்னது ஏகப்பட்ட எதிர்பார்ப்போட எல்லாரும் பேசி, இந்த படத்துக்கு கும்பலா போய்கிட்டிருக்காங்கண்ணு நம்மலும் போய் பார்த்தப்ப, பல விஷயம் தெரியக்கிடைச்சிச்சு! நிறையப்பேரு இந்த படக்கதை பத்தி விமர்சனம் எழுதிட்டாங்க, வேணும்னா நம்ம முகமூடி எழுதின விமரிசனத்தை, டாவின்சி கோட் - புதிரா புனிதமா?, படிச்சுப் பாருங்க!

படம் ஆரம்பித்திலேயே படத்தோட கதாநாயகன், ஒரு லெக்சர் குடுப்பாரு, இந்த 'Religious symbology' பத்தி, அதாவது மதகுறியீடுகள், அந்த குறியீடுகள் பத்தி ஆராஞ்சு, அதனுடய அர்த்தம், விளக்கங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டிருக்கிற ஒரு புரபசர் அவரு! அதிலே காமிக்கிற திரிசூலத்துக்கு என்னமோ விளக்கம் கொடுப்பாரு!
இந்த குறியீடுகள் பத்தி சொன்னோன்ன, நம்மூர் பக்கம் அதிகமா பொழங்கற இந்த கலசம், சக்கரம், வேல், சுவஸ்திக், சக்கரா, அப்புறம் 'ஓம்' இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொன்னுக்கும் ஒரு பொருள் இருக்குது! அதுவும் இந்த அதிகமா பொழங்கிற யந்திரம் போன்றதெல்லாம் நம்ம சாமி வகைகளைக்குறிக்கும் குறியீடுகள்! ஆக இதை வச்சு ஏதாவது கோடு துப்பறியும் கதை நாளைக்கு நம்ம ஷங்கர் மாதிரி கோஷ்டிங்க எடுத்தாலும் எடுப்பாங்க சொல்ல முடியாது!

அப்படி டாவின்ஸியின் குறிகளின் குறிப்பு என்னாங்கிறதை கண்டுபிடிக்க இந்த புரபசரை கூப்பிட்டுட்டு வருவாங்க! அதிலெயும் இந்த 'Hexagram (Seal of Solomon)' பத்தி கண்டுபிடிக்க கூப்பிட்டுட்டு வருவாங்க! அதாவது கதைப்படி இறந்து கிடக்கிறவரு உடம்பிலே இந்த மாதிரி குறியீடுகள் எல்லாம் எதைக் குறிக்குதுங்கிறதை கண்டுபிடிக்க! அம்மணமா கொலை செய்யப்பட்ட ஆளோட உடம்பிலே வரைஞ்ச குறிகளை கண்டுபிடிக்க! அதுக்கு உங்களுக்கு கொஞ்சம் அந்த டாவின்ஸியின் குறிகளும் தெரிஞ்சிருக்கனும்!!இந்த 'Hexagram (Seal of Solomon)' ங்கிறது தெய்வீக சங்கமத்தை குறிக்கும் குறியீடு! அதாவது ஆண் பெண், நீரின் முக்கோணம், நெருப்பின் முக்கோணம் அனைத்தும் இணையும் சங்கமம்! அதாவது இயற்கையின் மூலமான நீர், ந்ருப்பு, நிலம், காத்துக்களை குறிக்கும் முக்கோணங்களின் சங்கமம் தான் இந்த 'Hexagram (Seal of Solomon)' என்பது! இந்தக்குறி டாவின்ஸி குறியீடுகளில் வந்தாலும் இது ஒரு பொதுவான குறி! எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுவது! நமது இந்து மதத்திலும் இதை சத்கோணம் என்றழைக்கப்படுவது! அதாவது சிவக்கோணமும்( சிவ பெருமான், நெருப்பு ரூபம்) சக்திகோணமும் (சக்தி, நீரின் ரூபம்), அதாவது ஆண் பெண்ணின் சங்கமம் என்பது! இதுவே யூதர்களுக்கு 'Star of David (Magen David, Shield of David' என்றழைக்கப்படுவது!

இப்படி குறி கண்டுபிடிக்க வந்த புரபொசர், அந்த கொலை நடந்த மியூசியத்திலே இருந்த மோனாலிஸா உருவபடத்திலே பதிந்து கிடக்கும் சில ரகசிய குறியீடுகள் ('Cryptography') ஏதேச்சையா பார்த்து, அங்கன ஆரம்பிக்குது திரில்லர் சேஸிங், அதாவது ஏசு பிரம்மச்சாரி இல்லேங்கிற உண்மை, அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டது கூட இருந்த சீடரான மேரி மெகதலின்னு சொல்ல ஆரம்பிச்சு, அந்த கடைசி விருந்து போட்டாவை அக்கு வேறே ஆணி வேறே கழட்டி போட்டு, அதாவது மேரியம்மாவை அங்கிருந்து இங்கே இடம் மாத்தி ஏசு நாதர் தோள் சாஞ்சு இருந்தெல்லாம் விளக்கி, அவரு கண்ணாலம் கட்டிக்கிட்டவரு தான்னு சொல்ல ஏகப்பிரயத்தனம் பண்ணறாங்க!

இப்படி குறி எழுதி கொலை செஞ்சிட்டு போற ஆளு சரியான நம்மூரு அலகு குத்திக்கிற கோஷ்டி! என்னதான் இந்த மேற்கு பக்கம் எல்லாம் முன்னேறி வளர்ந்தவங்கண்ணு நாம சொல்லிக்கிட்டிருந்தாலும், இந்த ஊர்லயும் தன்னை தானே வருத்திக்கிட்டு சாமி கும்படுற ஆளுங்களை இன்னும் பார்க்கலாம் போல! இந்த கொலைகாரன், ஏசு எப்படி சிலுவையில அறையப்பட்டாரோ, கை, கால்கள்ல முட்களால சுத்தியும், முள்கிரீடத்தை தலையில் சுமந்து இந்த மக்களுக்காக உயிர் விட்டாரோ, அதே வேதனைகளை அனுபவிக்கிற ஆளு தான் இந்த கொலைகாரன். தனக்குத்தானே கசையடி கொடுத்துக்கிட்டு, முட்களான சங்கிலியில கால்ல கையிலே இரத்தக் களரி ஆக்கிக்கிட்டு 'ஏசு கிறித்துவே எனக்கு வலிமைக் கொடு'ன்னு வேண்டிக்கிட்டிருக்கிற ஆளு! அதாவாது மதத்துக்காக என்னவேணாம்னாலும் செய்ற ஆளு!. பார்த்தீங்களா கொடுமையை, தீ மிதிக்கிறது, அலகு குத்திக்கிறது, மண்ணு சோறு சாப்பிடறது, வேப்பிலை அடிக்கிறதுன்னு மூடநம்பிக்கைன்னு சொல்லி காட்டுமிராண்டிங்கன்னு பெரிசா சொல்லி எள்ளி நகையாடும் இந்த சமூகமும் லேசுபட்டதில்லை. கடைசியிலே இராம் நாரயணன் படங்கணக்கா இருந்துச்சு போங்க!

இந்த ஆளு ஏன் கொலை செய்றான்னா, கதை வந்து நம்ம மடாதிபதிங்ககுள்ள இருக்கிற ரகசியம் மாதிரி, அதான் மதுரை ஆதினம், காஞ்சி மடம் அப்படின்னு நம்மூரு கதைகள் இருக்கிற மாதிரி, இங்கேயும் ரகசியங்கள் மிகுந்த இந்த மதம் கிறித்துவமதன்னு சொல்லி கதை வளர்க்கிறாங்க! மொத்ததிலே ஏசு நாதர் கல்யாணம் கட்டி, புள்ளைங்க யெல்லாம் உண்டுன்னு சொல்லிக்கிட்டு , அந்த வம்சத்தை காக்கிறதுக்காக போராடுற குரூப்பு ஒன்னு. இன்னொன்னு, இந்த உண்மைகள் எல்லாம் வெளிய தெரிஞ்சா கிறித்துவ மதத்தோட புனிதம் போயிடும்னு அதை எப்பாடு பட்டும் மறைக்கவோ, இல்லை அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திரியற கும்பலுங்களை வெட்டி சாய்க்கவோ அலையும் இன்னொரு கும்பலு! இதில பழைய சரித்திரங்களை வேறே சொல்றாங்க. நம்ம புராணக் கதையிலே, கம்சன் எங்கே கிருஷ்ணராலே தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு ஊருல இருக்கிற குழந்தைங்களை எல்லாம் வெட்டி சாய்க்கிறமாதிரி, இங்கேயும் ஏசுகிறித்துவின் வாரிசா வந்த பெண் இருக்கிறாள் எனக்கருதி ஊர்ல இருக்கிற எல்லா பெண்களையும் வெட்டி சாய்க்கிர கதை உண்டு! மதம், கடவுள், புராணம்னு வந்துட்டா, எல்லா இடத்திலேயும் ஒன்னு தான், இதிலே பெரிசா ஒன்னும் வேறு பாடே இல்ல போலிருக்கு!

இந்த படத்தோட நாயகி தான் ஏசுவோட கடைசிவழி வந்த பேத்தியாம், அப்படி கதை பண்ணியிருக்காங்க!. ஒரு ஆக்ஸிடண்டிலே தன் குடும்பமே செத்தோன, இவரை தன்னோட தாத்தா தான் வளர்க்கிறாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கிற பொண்ணுக்கு, கடைசியிலே அவர் உண்மையிலே தாத்தா இல்லே, இந்த பேத்தியை காப்பாத்துற அந்த இன்னொரு கும்பலை சேர்ந்தவர்னு கதாநாயகனோட சேர்ந்து அப்புறமா கண்டுபிடிச்சி தெரிஞ்சுக்குது! இதிலே காப்பத்துற குரூப்ல புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எல்லாம் இருக்கிறாராம்!

படம் பார்த்துட்டு வந்து நேத்து டிவியிலே இன்னொரு புரோகிராமும் பார்த்தேன், இந்த 'Illumanati'ங்கிற ரகசிய விஞ்ஞான கும்பலு அந்தக் கால மதகட்டுபாடுகளை தகர்தெரிந்து எப்படி விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த கஷ்டப்பட்டாங்கன்னு சொல்லி வந்த நிகழ்ச்சி! மேற்கோண்டு இன்னொரு நிழலுக ரகசிய அரசியல் கும்பலு (அதாவது புதுமை விரும்பிகள்!) வட்டிகனுக்கு வெடி வச்சு, எப்படி போப் எல்லாம் கொண்ணாங்கன்னு, அதுவும் இந்த டாவின்சி கோடு கதை எழுதின அதே ஆசாமி எழுதின இன்னொரு நாவலான 'Angels & Demons'ங்கிறதிலருந்து ஆராய்ச்சி பண்ணி ஆதாரங்களோட சொல்லிக்கிட்டிருந்தாங்க! கடைசியிலே
ஒன்னு நல்லா தெரியுது இந்த முன்னேறிய மேற்கு பக்கம்னு நாம் சொல்லிக்கிட்டிருந்தவங்களோட மதவெறி கொஞ்சம் நஞ்சம் இருந்ததில்லை! உலக அரசியல் அரங்குல கவுக்கிறதும், ஏத்துறதும்னு ஏகப்பட்டது செஞ்சிருக்காங்க! நம்மூரு பக்கமும் இந்த அரசர்களுக்கு பெரிய வழிகாமிக்கும் மதகுருக்கள் செய்யாத அரசியல் இல்லை தான்! ஆனா இங்கே பார்க்கும் போது நம்மதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு போயிடுச்சு போங்க!

மொத்த களேபரமும் ஏசுக்கு கல்யாணம் பண்ணி வச்சதாலே தான்! நம்மூர்ல பராவாயில்லை நம்ம சாமிக்கெல்லாம் இரண்டு இரண்டு பொண்டாட்டி கட்டி வச்சிட்டோம் ஜாலியா!

எண்ணெய் என்பது எது வரை!! --(2)

போன பதிவின் 'எண்ணெய் என்பது எது வரை!!' தொடர்ச்சியா இன்னும் எப்படி எண்ணெய் வளம் இனி வரும் ஆண்டுகளல இருக்கப்போகுதுன்னு பார்ப்பமோ!

ஒன்னு தெரியுமா, சவுதிஅரேபியாவில இருக்கிற கஹவார்('Ghawar')ங்கிற பகுதி எண்ணெய் வயல் (இந்த எண்ணெய் வயல் மட்டும் உற்பத்தி அஞ்சு மில்லியன் பேரல் ஒரு ஆண்டுக்கு!)போன்ற பெரிய எண்ணெய் வள கண்டுபிடிப்பு மாதிரி இதுவரை ஒரு பெரிய ஜாக்பாட்டு இன்னும் அடிக்கலை! ஆனா இந்த எண்ணெய் வயல்லுக்கு அடியிலே இதைவிட பெரிய கறுப்பு தங்க சுரங்கமே இருக்கு! அதை தோண்டி எடுக்கப்படும் தொழில்நுட்ப முறைகளான 'பலதிசையில் குடையும்' ('Multi-lateral drilling') தந்திரம் படி எடுத்தால் எண்ணெய் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு சொல்றாங்க! அப்படி இனி ஒன்னும் எடுக்க முடியாதுன்னு கைவிட்ட வடகடல் பகுதியில் ('North Sea')இந்த முறையில் எடுத்து வந்ததால் இப்பொழுது உற்பத்தியின் உச்சத்துக்கு போய்விட்டது!

உலகத்தில இருக்கிற எல்லா எண்ணெய் கிணறுகளருந்தும் எடுக்கப்படும் எண்ணெய் மூன்றில் ஒரு பாகம் தான் அதனுடய எண்ணெய் கொள்ளளவில் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும், ஏன்னா, இன்னும் இரண்டு பங்கு அந்த கிணறுகளின் 'Reservoir Capacity' அப்படியே இருக்கு இன்னும் எடுக்கப்படாம! புது தொழில்நுட்பமான '4-D Sesmic analysis and electromagnetic direction'ங்கிற முறையில அந்த ஹைட்ரோகார்பன்ங்களை அதிகம் எடுக்கும் திறன் ('recovery rate') உண்டு என்பதால், இதன் மூலமே சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு அதிகரிக்கலாம், இன்னும் அந்த எண்ணெய் எடுக்கப்படாத காஸ்பியன் கடல் மற்றும் வடகடல் பகுதியின் புது எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுப்பதற்கு பதிலாகன்னு சொல்றாங்க!

அப்புறம் இந்த கஹவார்('Ghawar')ங்கிற பகுதி போல ஒரு பெரிய பகுதி எதுவும் கண்டுபிடிக்கப்படாதாலே, எண்ணெய் கண்டுபிடிப்பின் கடைசி எல்லைக்கு போய்விட்டோமுன்னு நீங்க நினைக்கக் கூடாது! இன்னும் அதி நவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டு ஆழ்கடல், கடினமான நிலப்பரப்பு பகுதிகள், ஏன் அதிகம் உலக உஷ்ணத்தாலே உருகும் பனிபாறைகள் கொண்ட ஆர்டிக் பகுதியானது அந்த மாதிரி எண்ணெய் களஞ்சியத்தை கொண்டது, ஆக அதனால் உற்பத்தி ஆகக்கூடிய எண்ணெய் வளம் கணக்கிடலாங்குதுங்கிறாங்க! மேற்கொண்டு சைபீரியா, சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாட்டின் பல பகுதிகள் இன்னும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தோண்டி எடுக்காம இன்னும் எண்ணெய் உறைஞ்சுக்கிடக்குன்னு கணக்கு சொல்றாங்க!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த பெட்ரோல் நம்பிக்கை அற்றிருப்போர் ('Petro-Pessimists') என்னா சொல்றங்கன்னா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் கணிச்ச தங்கள் எண்ணெய் வளம் பற்றி சொல்றதெல்லாம் ஜாஸ்தி, உதாரணத்துக்கு குவைத் மதிப்பிட்டு சொன்ன அளவில,100 பில்லியன் பேரல்கள்ல ஒரு பாதி தான் இருக்கு , அதே மாதிரி சவுதி சொல்றதுலயும் பாதி தான் இப்ப ரிசர்வ்ல இருக்கு, அதாவது 260 பில்லியன் பேரல்கள்ல பாதி தான் இருக்குன்னு ஹேஸ்யம் சொல்றாங்க! இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல்லை! ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, இன்னெக்கு உற்பத்தி பீக்ல போனாலும், அந்த எண்ணெயின் அளவு உடனே குறஞ்சிடாது, ஒரு எண்ணெய் வயல் வெளின்னு எடுத்துக்கிட்டா, அதுவும் கஹவார்('Ghawar') மாதிரி பெரிய தங்க சுரங்கத்தை எடுத்துக்கிட்டா, அதனுடய வளம் தீர நிறைய நாட்கள் பிடிக்கும், ஏன்னா, எல்லா கிணறுகளும் ஒரே நேரத்தில் தோண்டியவை இல்லை அப்படின்னும் சொல்றாங்க! அந்த வளம் குறையும் நேரத்தில புது புது எண்ணெய் வயல்வெளிகளை விருத்தி செய்து மேற்கொண்டு எண்ணெய் தடை இல்லாம் வர ஏதுவாகும்னும் சொல்றாங்க! அதிலயும் சவுதி பெட்ரோலியத்துறை மந்திரி, அலி நயிமி, கொஞ்சம் அதிகப்படியா போயி, சவுதி ஈராக் பார்டர்ல 200 பில்லியன்னுக்கு மேலே இருக்கிற எண்ணெய் வளமிக்க பகுதிகளை தோண்டவே இன்னும் ஆரம்பிக்கிலைங்கிறாரு!

ஒரு வகையில குவைத்ல கிடைக்கும் எண்ணெய் வள கருத்து கொஞசம் அதிகப்படியாவே சொன்னாலும், சவுதியில இருக்கிற எண்ணெய் கிணறுகள் அளவு மதிப்பிட்டு வச்சிருக்கும் வகையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்த கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்க முடியும்னு சொல்றாங்க! இருந்தாலும் இந்த கருத்தில் நம்பிக்கையற்றோர், சவுதியில்லயும் அந்த கதை தான் சொல்லி இதை பத்தி நிறைய புத்தகங்கள், அதிலயும் ஜெர்மி லேகர்ஸ்ங்கிறவரு எழுதிய 'The Empty Tank'ங்கிற புக்கல இதப்பத்தி விவரமா எழுதி இருக்கிறார்! இந்த பாதிப்பினால் உலக பொருளாதாரமே சீர்கெடும் நிலை ஏற்படக் காரணமாகும்னு சொல்றாங்க!

இதினால பொருளாதார நிபுணர்கள் என்னா சொல்றாங்கன்னா, இந்த மாதிரி எண்ணெய் நெருக்கடி 1970ல்கள் வந்தப்ப அமெரிக்கா மற்ற நாடுகளின் அரசாங்கம் செஞ்ச மாதிரி, எண்ணெய் விலை நிர்ணயக் கட்டுப்பாடு, சலுகைகள் பல அளித்ததானல வந்த பொருளாதார சீர்குலைவு, இப்பவும் வரக்கூடும், அரசாங்கங்க அந்த மாதிரி கொள்கையை கடைபிடிச்சா, அதனால எண்ணெய் விலையை சந்தையின் கட்டுப்பாட்டுக்குள்ளவே விட்டுடனும், அதுவே அதன் உச்ச நீச்ச நிலையை சரி செஞ்சுக்கும், மேற்கொண்டு புது புது தொழில்நுட்பங்கள் வந்தும் எண்ணெய் செலவழிப்பதில் சிக்கணத்தை கடைப்பிடித்தும், அதன் தாக்கங்களை சரி செய்து கொள்ளக்கூடும்னு சொல்றாங்க! மேற்கொண்டு, விலை 60 டாலர் ஒரு பேரலுக்கு மேலே போனாலும் தொடர்ந்து 10 வருஷத்துக்கு சந்தையிலே எண்ணெய் கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்கும். நாம 1970ல பண்ண அந்த தப்பை இப்ப பண்ணாம இருந்தாலே போதும்னு சொல்றாங்க!

ஆக இந்த உச்ச நிலையை சமாளிக்க ஒரே வழி மாற்று சக்திகள் தான், அதற்கு தகுந்தாற் போல அனத்து வழிகளிலும் மாற்று சக்தியை உருவாக்க உலகநாடுகள் முனைப்பா இருக்கு! நான் ஏற்கனவே சொன்னமாதிரி பெரிய எண்ணெய் ஜெயிண்ட் கம்பெனிகள் 'expolration'ஐ விட்டுட்டு Manaufaturing முறையில தயாரிக்க வழிமுறைகளை ஆராஞ்சு அதில் வெற்றியும் அடைஞ்சிக்கிட்டிருக்காங்க! இப்ப R-10ங்கிற ஆடிக்காரு ஒரு வகையான டீசல் எரி பொருளை போட்டு ஓட்டி அதிக சக்தியுடன் பந்தியத்தில் வேகமாக வந்து அனைத்து ரேஸ் கண்டிஷனங்களையும் லாவகமாக தாண்டி 'High Endurance Powered Car'ன்னு வந்தது. அந்த காரு ஓட்டின டீசல் இயற்கை எரிவவயுவிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்னு அதை 'Gas to Liquid' (GTL)ன்னு சொல்வாங்க. இந்த் தொழில்நுட்பம் இப்ப 'Shell'ங்கிற எண்ணெய் கம்பெனிக்கிட்ட இருக்கு, அதனாலே இந்த 'GTL' சுத்திகரிப்பு ஆலை கத்தார் என்கிற நாட்டில் பெரிய அளவில் வருகிறது. இந்த இயற்கை எரி வாயு ('Natural gas') அதிகம் கிடைக்கும் நாடுகள் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை விட மத்த நாடுகளே! ஏன் நம்ம இந்தியாவிலே கோதாவரி நதிக்கரையில் ரிலெயன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய இயற்கை வாயு கண்டுபிடிப்பை ஒரு இரண்டு வருஷம் முன்னதான் அறிவிச்சாங்க. ஆக இந்த 'GTL' நுட்பம் நம்க்கு நிறைய பயன் தரும் தங்கு தடை இல்லாம டீசல் கிடைக்க!

ஆக, நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் டீசல் நுட்பம், அமெரிக்காவில் இருக்கும் படிகப்பாறைகள், கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய், மேலே சொன்ன இயற்கை எரிவாய் எண்ணெய் (GTL), நிலத்தடி நிலக்கரியில் உருவான எரிவாயுவிலிருந்து எண்ணெய், அப்படின்னு இது போன்ற தொழில்நுட்பங்களின் வழியாய் கிடைக்கும் எண்ணெய் சக்திகளே, முறையாக வரும் எண்ணெய் சக்திகளை (Conventional energy) விட அதிகமாக இனி வரக்காலங்களில் நாம் பார்க்கலாம்!

ஆக மாற்று சக்தி என்பது நாளையே கிடைத்துவிடக் கூடிய ஒன்னு இல்லே! அதில் செய்யப்பட வேண்டிய முதலீடுகளின் அளவு அதிகம்!ஆனல் அதிகரித்து வரும் எண்ணெய் விலையினைக்கொண்டு இந்த வேற்று தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வருகினறனர் என்பதே உண்மை! OPEC என்கிற இந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஏதேனும் சூழ்ச்சி செய்து (1985,1998களில் செய்ததை போல்) எண்ணெய் விலையை குறைக்காத வரை, இந்த புது தொழில் நுட்ப மூலம் மாற்று சக்தி செய்முறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன!

இது பெரிய எண்ணெய் கம்பெனிகள் தங்களின் முக்கிய தொழிலான எண்ணெய் வியாபரத்திலிருந்து விலகி செல்வது போல் இருந்தாலும், அது வல்ல உண்மைக் காரணம். ஏனென்றால் ம்த்திய கிழக்கு ஆசிய நாடுகளில் புதியதாக கிடைக்க இருக்கும் எண்ணெய் வளங்களில் முதலீடு செய்ய போதுமான் அரசியல் மற்று அனுகூலமான நிலை இல்லை என்பதால், கையில் காசு வைத்துக்கொண்டிருக்கும் அனைத்து கம்பெனிகளும் மாற்று சக்திகளில் செலவழித்து, மாற்று சக்திகளை நிலைநாட்டிவிட்டல், முறையாகக்கிடைக்கும் இந்த Conventional energy என்கிற சக்தி கீழ்நிலைக்கு தள்ளப்படும்! அதன் விலைவாக இன்று சொர்க்கப்புரியாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் நிலமையை யோசித்து பாருங்கள். ஆக எல்லாம் தேவையினை பொருத்து அனைத்து கண்டுபிடிப்புகளும் வர தொடங்கிவிடும். தொழில்நுட்பங்களின் பலமே தனி!
அதற்கு சாட்சியாக அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் பேக்கர்ஸ் வயலை சென்று பார்த்தால் விளங்கும். இது கடந்த 100 வருடங்களாக ஹெவி ஆயில் என்கிற கனகச்சா எண்ணெய்யை 2 பில்லியனுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது, இனியும் அதே 2 பில்லியன் அளவுக்கு வளம் இருக்கிறது! (இந்த கனகச்சா எண்ணெய் என்பதை சுத்த்கரிப்பு செய்யும் விலை அதிகம், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மிகவும் மிருது வானது, பூமியிலிருந்து தோண்டிய எண்ணெய்யை லாரில் போட்டு ஓட்டலாம்,அதனால் சுத்திகரிப்பு விலை கம்மி, ஆனால் கனகச்சா எண்ணெய்யை , அதுபோல் ஓட்ட முடியாது)

இது போன்ற கனகச்சா எண்ணெய் வளம் நிறைய நாடுகளில் உள்ளது! சைனாவிடம் இதன் வளம் அதிகம் உள்ளது. அதே போல், கனடா, அமெரிக்கா, வெனின்ஸ்வேலா போன்ற நாடுகளில் இந்த கனகச்சா எண்ணெய்யின் அளவு சவுதியில் இருக்கும் எண்ணெய் வள அளவைக்காட்டிலும் பன்மடங்கு அதிகம். என்ன, தோண்டி எடுத்து சுத்திகரிப்பின் விலை தான் அதிகம். எல்லாமே பொருளாதார கணக்கின் கீழ் வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் பொருளாதார ரீதியாக மலிவு என்ற குணத்தை கொண்டிருந்ததால், இந்த கனகச்சா எண்ணெய் எடுப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டவில்லல. ஆனால் இன்று வளர்ந்து வரும் விலையின் கணக்கை பார்க்கும் போதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அந்த கஷ்டமான கச்சா எண்ணெய் எடுப்பதிலும் சுத்திகரிப்பதிலும் விலையை வெகுவே குறைப்பதால், இது இப்பொழுது பொருளாதார ரீதியில் (Ecnomic viability)முற்றும் ஏற்று கொள்ளப்பட்டு மூலதனம் இட தயாராக உள்ளனர்!

ஆக இந்த பலகாரணங்களால் இந்த பீக்கிங் என்கிற தன்மை வர பல ஆண்டுகள் பிடிக்கும்! உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இது உலக அரசியலாக்கப்பட்ட ஒன்று! வளர்ந்து வரும் தீவிரவாதம், இது போன்ற லாபம் ஈட்டிக்கொண்டிருந்த இந்த எண்ணெய் வளங்களின் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் போன்ற சூழ்நிலையே இந்த உலக எண்ணெய் உச்சம் அடைந்து விட்டது போல் மாயை உருவாக்கி வைத்து உள்ளன! அதுவும் நன்மைக்கே! இந்த மாற்று சக்தி தொழில்நுட்ப வளர்ச்சி, பூமிக்கடியில் இருக்கும் கறுப்பு தங்கத்தை அளவாக சமன் செய்யும் நிலையாக உருவெடுப்பதால், இந்த தங்கம் பல ஆண்டுகள் தொடர்ந்து கிடைத்து பெட்ரோல் வாகனங்கள் என அழைக்கப்படும் உள் எரி வாகனங்களின் ('Internal Combustion Vehiles') ஆளுமை உலகில் தொடர்ந்து இருக்கும்!

சேரன் சொன்ன மாதிரி நம்ம பேரன் பேத்திகள் குதிரை வண்டிகளை பார்ப்பார்களா என்பது சந்தேகமே, அதற்குப்பிறகு வருபவர்களுக்கு எப்படி என்று சொல்வதிற்கில்லை!

Saturday, May 27, 2006

எண்ணெய் என்பது எது வரை!!

இந்த ஆட்டோகிராப் படத்திலே, சேரன் தன் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணை தேடி, அவ வீட்டுக்கு தன் கல்யாண பத்திரிக்கை வக்க போவாரு, குதிரை வண்டியில், அப்ப அவரு சொல்லுவாரு, 'இன்னும் இது எத்தனைக் காலத்துக்கு இந்த குதிரை வண்டியெல்லாம் இருக்கப்போகுது! இனி வர பிள்ளைங்கெல்லாம் இதை பார்க்கப்போறங்களான்னு' சொல்லி வசனம் பேசற காட்சியை பார்த்துட்டு ஒன்னு சட்டுன்னு சொல்ல வருது. இனி குதிரை வண்டி தான்னு. மனுசுன் எல்லா எரி சக்தி, எண்ணெய், எரிவாயு இதெல்லாம் இன்னும் எத்தனைக் காலத்துக்கு உபயோகிப்பான், எப்ப இதெல்லாம் தீர்ந்து போய், திரும்ப மனுஷன் குதிரை வண்டிக்கு வருவான்ங்கிறதை பத்தி தான் இப்ப பேச்சு! இல்ல வேறே எதாவது சக்தி கொண்ட எரி பொருளை கண்டுபிடிச்சு பொழப்பை நடத்துவானான்னா, எப்படி இருக்க போவது நிலமைன்னு கொஞ்சம் விவரமா பார்ப்போமா?

இந்தக் குதிரைக்கதையை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமுன்னா, 1894, முத முதல்ல பாரீஸ்ல ஒரு ரேஸ் போட்டி நடந்தது, குதிரை இல்லாத எந்த வண்டி நீண்ட நேரம் ஓடக் கூடியதுன்னு! அதுவும் ஒரு 78 மைல் தூரத்துக்கு! அப்ப எல்லாரும் எல்லாவிதமான ஓட்டு சக்திகளை உபயோகிச்சு ஓட்டினாங்க, மின்சாரத்துல இயங்குறதுலருந்து, நீராவியிலயிங்கிறதிலருந்து, அழுத்தமான காத்துலருந்து எல்லா சக்திகலையும் உபயோகிச்சு ஓடின வண்டிகள் அந்த போட்டியில கலந்துக்கிட்டன. ஆனா கடைசியில ஜெயிச்சது என்னமோ, ஒரு புது வாகனஎரிசக்தி எண்ணெய், அது விளக்கெரிக்கறதுக்கு அந்தக்காலத்தில உபயோகத்திலருந்தது, அதாவது சுராமீண் எண்ணெய்க்கு பதிலா, அப்ப கண்டுபிடிச்ச கச்சா எண்ணெய்லிருந்து வந்த பெட்ரோலை, விளக்கெரிக்க உபயோகபடுத்தின எண்ணெய்யை, போட்டு ஓட்டினக் காரு தான் முதல்ல வந்தது!

அப்படி ஓட்டி ஜெயிச்சாலும், பெட்ரோல்லோட எதிர்காலம் அப்ப ரொம்ப ஒன்னும் பெரிசா இருந்திடல! ஏன்னா உள் எரி வாகனங்கள்('Internal Combustion Vehicle') பெரிசா சத்தம் போட்டுக்கிட்டும், புகையை கிளப்பிக்கிட்டும், பயங்கரமா பார்க்க இருந்ததாலே அதில ஆர்வம் இல்ல மக்களுக்கு அப்ப. அதனால 1900 வரை, இந்த வாகங்கள் மின்சாரத்தில் ஓடக்கூடியது கொஞ்சம், நீராவியில் ஓடக்கூடியது கொஞ்சம், பெட்ரோல்ல ஓடறது கொஞ்சம்னு இருந்துச்சு! அப்பறம் ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்த்தீங்கன்னா, பெட்ரோல் வாகனங்கல் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிவிடுட்டு முன்னாடி அது தான் பீறு நடைபோட்டு வலம் வந்தது. ஏன்னா, அந்த உள் எரி வாகனங்கள் மென்மேலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு நல்ல ஓட்டும் சக்தியின் நிரூபிக்கப்பட்டது, அது மட்டுமில்ல அப்ப எல்லாரும் நினச்சது, இந்த கச்சா எண்ணெய் கையிருப்பு (reserve) ஏகப்பட்டது நம்ம கையிலே இருக்குன்னு! ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா, என்ன? வாங்க பார்க்கலாம்!

அப்படி இந்த எண்ணெய்யை வச்சு இந்த நூற்றாண்டிலே வளர்ந்த பொருளாதாரத்துக்கு இப்ப வந்திருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்! இந்த கறுப்பு தங்கம் காய்ஞ்சுப் போச்சுன்னு! ரொம்ப வருஷமா, சில ஜியாலஜிஸ்ட்ங்க சொல்லிக்கிட்டிருந்தாங்க, உலகம் எண்ணெய் சக்தியிலே வளர ஆரம்பிச்சு இப்ப உச்சத்திலே போயிக்கிட்டிருக்கு, அது தீர்ந்து, அதற்கு மாற்று சக்தின்னு ஒன்னு வராத வரைக்கும், இப்ப வளர்ந்து நிக்கிற பொருளாதாரம் அதல பாதளத்துக்கு போயிடும், ஏன்னா உலகம் இப்ப எண்ணெய்யை பூமியிலருந்து உறிஞ்சு எடுக்கிறதுல மிக உச்சத்துக்கு போயிடுச்சுன்னு! போன சில மாதங்கள்ல எங்க பார்த்தீங்கனாலும், டிவியில, மேகஸின்ல, மீடியால 'காலி டப்பா பெருங்காய டப்பா ' ('The Empty Tank'), 'கேஸ் கதை முடிஞ்சு போச்சா?' ('Out of gas?'), 'சரிந்து வீழ்ந்து விழும் பொருளாதாரம்' ('The Coming Economic Collapse'), 'எப்படி வாழ்வோம் நாம் இனி, எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலர் ஆனால்' ('How Can you Thrive when Oil Costs $200 a Barrel') அப்படின்னு கொட்டை எழுத்திலே வந்துக்கிட்டுருக்கு! ( இந்த வாசகம் எல்லாம் இந்த ஊருபக்கம் வர வாசகங்கள், நான் கொஞ்சம் தமிழ்ல வந்தா எப்படி இருக்கும்னு பார்த்து போட்டது, எங்க, நம்மூரு மக்களுக்கு இதெல்லாமா இனிக்கும்? 'ஜெயலட்சுமி போலீஸாரின் மன்மத லீலை', 'காஞ்சி மாமா கன்னி கழிந்தார்', ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புவனேஸ்வரியின் லீலைகள் அம்பலம்', அப்படின்னு வாசகம் வந்தா தானே நமக்கு கிக்கு, 'சமயல் எரி வாயு கேஸ் சிலிண்டெர் ரூபாய் 300க்கு மேல் போனால், இனி காப்பி குடிப்பது எப்படின்னு' யாரவது ஆராஞ்சு கட்டுரை எழுதி சமீபத்திலே பார்த்ததா இருந்தா சொல்லுங்க கொஞ்சம்!)

இப்படி மீடியான்னு இல்லே, இந்த எண்ணெய் கம்பெனிக்காரங்களும் இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு இந்த 'எண்ணெய் என்பது எது வரை'ங்கிற பட்டிமன்றத்துக்கு வந்துட்டாங்க!அதுவும் செவ்ரான் ('Chevron') மாதிரி கம்பெனிங்க , 'நமக்கு முதல் ஒரு ட்ரில்லியன் பேரல் எண்ணெய்யை குடிக்கிறதுக்கு 125 வருஷம் புடிச்சுச்சு,ஆனா, அடுத்த ஒரு ட்ரில்லியன் பேரலை குடிக்க 30 வருஷத்துக்கு மேலே ஆகாது'ன்னு விளம்பரம் கொடுக்கிறாங்க. இந்த பட்டி மன்றம் 'இனி எப்படி நம்மலால எண்ணெய் வாங்க செலவிட முடியுமான்னு' கேள்வி கேட்டவங்க 'எண்ணெய் இருக்கா இனி வாங்கறதுக்கு' ன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு போயிடுச்சு. ஆனா உண்மையிலே இந்த நிலமை வந்திடுச்சா, உலகத்திலே இருக்கிற எல்லா எண்ணெய் வளமும் குன்றி போயிடுச்சா, இதான் இப்பக் கேள்வி! என்னான்னு பார்ப்போம் வாங்க!

உண்மையிலேயே உலகத்திலே எண்ணெய் பஞ்சம் வந்துடுமா? இன்னெக்கு இருக்கிற எண்ணெய் உற்பத்தியின் உச்சம் நிஜமாலுமே இனி வர பொருளாதாரத்தை பாதிக்குமா? அப்படின்னு நடக்கிற சர்ச்சையிலே, உற்பத்தியின் உச்சங்கிறதைவிட, இதே போல மலிவா தொடர்ந்து எப்பவும் நமக்கு பூமிக்கு அடியிலேருந்து எண்ணெய் தடையில்லாம கிடைச்சு, இப்போ ஓடிக்கிட்டிருக்கிற கார், பஸ், விமானங்க தொடர்ந்து ஓடுமாங்கிறதுதான் கேள்வி! இதை மனசுல வச்சி, இந்த எண்ணெய் கம்பெனி எல்லாம் தன்னுடய ரிஸ்க் எடுத்து எண்ணெய் தோண்டும் வேலையை விட்டு வேறே தொழில்நுட்ப வளர்ச்சியிலே காசு கொட்ட முன் வந்திருக்காங்க தான் இப்ப நாம பார்க்கிறது! அதாவது தோண்டி எண்ணெய் தேடறதை விட்டுட்டு, இந்த எண்ணெய் போன்ற மற்ற எரி சக்தியை தொழில் உற்பத்தி மாதிரி பண்ணப் போறோம்னு, செல் ('Shell')ங்கிற கம்பெனி சொல்லிக்கிட்டு திரியுது! அதாவது நான் ஏற்கனவே எழுதின பதிவான 'தானிய பெட்ரோல்-விவசாயம் தரும் மாற்று சக்தி!' மாதிரி கலந்தடிச்சு பெட்ரோல் டீசல் எல்லாம் தயாரிச்சு, இப்ப கிடைக்கிற எண்ணெய் வளத்தை நீண்ட நாளைக்கு வச்சு காப்புத்துவோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க! இந்த ஒரு எரிசக்தி மாற்று வழியானது புது தொழிற்கூடங்கள் வர வழி வகுக்குது.

அமெரிக்காவில இருக்கிற ஜென்ரல் எலெக்ட்ரிக் மாதிரி கம்பெனிங்க ஃபூயல் செல்('Fuel cell')ங்கிற தொழில்நுட்பம் பண்ணக்கூடியவங்க(இந்த ஃபூயல் செல் பத்தி அப்புறம் ஒரு முறை எழுதுறேன்!), இங்கிலாந்தில் இருக்கும் வர்ஜின் ஃபூயல்ஸ்(இந்த 'Virgin' பத்தி பல பேருக்கு தெரிஞ்சிருக்கும், அதாவது 'Virgin Atlantic' விமானக்கம்பெனி இருக்குல்ல, அதான் முதம்தல்ல நம்ம பெங்களூருக்கு விமானம் லண்டன்லிருந்து விட்டப்ப தாடி வச்சுக்கிட்டு, 'Richard Branson'ன்னு ஒருத்தரு நிறைய குட்டிங்களோட ராஜா மாதிரி வந்து இறங்கினாருல்ல! அவரு கம்பெனி ,நான் எழுதின தானிய பெட்ரோல் கட்டுரையில வந்த Cellulosic-ethanolங்கிற எரி பொருளை தயாரிக்க நிறைய செலவளிச்சு பெரிய சுத்திகரிப்பு ஆலை கட்டிக்கிட்டிருக்கு இங்கிலாந்திலே!), அப்பறம் அப்பிரிக்காவில இருக்கிற சசோல்ங்கிற கம்பெனி (இந்த கேஸ்லருந்து பெட்ரோல் பண்றவங்க, 'GTL'ன்னு ஒன்னு தயாரிக்கிறவங்க, இந்த 'GTL'பத்தி கீழே பார்ப்போம்) எல்லாரும் மாற்று கம்பெனிகளாக எண்ணெய் கம்பெனிக்கு நிகரா போட்டி போட்டு இந்த தொழில்நுட்பங்கல் எல்லாத்திலேயும் முதலீடு செய்றாங்க! ஏன் நம்ம ரிலெயன்ஸ் கூட ஆமணாக்கலருந்து டீசல் எடுக்க முதலீடு செய்றதா நம்ம பெத்த ராயுடு சொல்லல!

இதெல்லாம் வச்சு பார்க்கறப்ப, உலகத்தின் எண்ணெய் வளம் குன்றியமாதிரி இருக்கில்ல!. ஆனா பேர்போன ஜியாலஜிஸ்ட்ங்க என்ன சொல்றாங்கன்னா, 1990ல் இந்த எண்ணெய் உற்பத்தி பீக்ல போயிருக்கணும், ஆனா போகல்ல, இந்த 2005ல உச்சம் வரும்னு எதிர் பார்த்தது, அப்படியும் வரலை! ஆனா இப்ப இருக்கற உற்பத்தியிலே (உலக உற்பத்தி இன்னெக்கு 80 மில்லியன் பேரல்லுக்கு மேலே ஒரு நாளைக்கு)இன்னும் ஐந்தாண்டுகள்ல, இது ஒரு தின உற்பத்தியில 15 மில்லியன் பேரல் அதிரிக்க போகுதுன்னு சொல்றாங்க! இப்ப நடந்திக்கிட்டிருக்கிற அத்தனை ப்ராஜக்ட்டையும் கணக்கில எடுத்தா, இந்த அளவுக்கு உற்பத்தி அதிகமாகுமுன்னு சொல்றாங்க! அப்புறம் உங்களுக்கு என்ன சிரமம்னு கேட்கிறாங்க!. ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, முன்ன மாதிரி நம்ம நிறைய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கல! அதாவது ஒரு பேரல் எண்ணெய் வளம் கண்டுபிடிச்சா, நம்ம இரண்டு இல்ல மூணு பேரல் எண்ணெய் குடிச்சுக்கிட்டு இருக்கோம்! இப்ப நம்ம கொண்டாடற இந்த அதிகப்படியான் உற்பத்தி திறன் 30 வருஷம் முன்னே கண்டுபிடிச்ச லாட்டரி தான், இப்ப போய்கிட்டிருக்கு. மேற் கொண்டு அந்த எண்ணெய் கிணறு வளர்ச்சி ஆய்வு திட்டங்களுக்காக செய்யும் செலவு ரொம்ப அதிகமாகி கிட்டிருக்கறதாலே மேற் கொண்டு செலவு செய்ய எண்ணெய் கம்பெனிங்க முன் வரல்லைன்னு சொல்றாங்க!

ஆனா வளர்ந்த பெரிய எண்ணெய் கம்பெனிங்க மூச்சு இப்ப திணறது அவங்க எண்ணெய் கிணறுகளின் உறபத்தி திறனை அதிகரிக்க, மேற்கொண்டு ரிசர்வ்களை அதிகரிக்க! அதற்காக உலக எண்ணெய் கிணறுகள் எல்லாம் காய்ஞ்சு போச்சான்னா, அதான் இல்லை! உலகத்தின் பெரும் பகுதி, ரஷ்யாவில உள்ள சைபீரியா, OPEC என்கிற எண்ணெய் உற்பத்தி பண்ணி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சில பகுதிகள், வடகடல் பகுதி ('North Sea') மற்றும் அலாஸ்காவில் உள்ள பகுதிகள் இங்கே எல்லாம் நாம் சரியாக போய் ஆராய்ந்து தோண்டமல் இருக்கக்கூடிய வளங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு! அதுவும் இப்ப அலாஸ்காவிலும் வடகடல் பகுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் 2015 -2020ல் உற்பத்தியில் பீக்கில் வரும் என எதிர்பார்க்கப்டுகிறது! அதுவும் அமெரிக்காவின் மண் வள ஆராய்ச்சி நிறுவனம் ('United States Geoligcal Survey') அறிவித்த அறிக்கையின் படி உலக எண்ணெய் வளத்தில் மொத்தம் 3 ட்ரில்லியன் பேரல் நாம் மூன்றில் ஒரு பகுதி தான் உபயோகித்திருக்கிறோம், இன்னும் 2 மடங்கு உள்ள வளத்தில் இந்த உச்ச நிலையை அடைய இன்னும் 30 ஆண்டுகள் பிடிக்கும் என்கின்றனர். அதுவும் வழக்கமாக எடுக்கும் எண்ணெய் கிணறுகள் அன்றி, கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய் வளம், மற்றும் 'Oil shale' என்றழக்கப்படும் எண்ணெய் படிக பாறைகளிலிருந்தும் (இது அமெரிக்காவில் அதிகம் உள்ளது, 1.2 ட்ரில்லியன் பேரல் எண்ணெய் வள உற்பத்தி செய்ய முடியும் இப்படிகபாறைகளிலிருந்து!, இதை எல்லாம் விடுட்டு எண்ணெய்காக ஈராக்ல போய் சண்டை போடறாங்க பாருங்க, ஏன்னா முதல்ல உலகத்தில மத்த இடங்கள்ல சீப்பா எண்ணெய் எடுத்துட்டு அப்புறம் இதெல்லாம் எக்ஸ்பிளாய்ட் செய்வாங்க, எப்படின்னு பார்த்துக்கங்க நம் ஜனங்களே!) எடுக்கப்படும் எண்ணெய் வளத்தையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணெய் உபயோகத்தின் உச்ச நிலை என்பதடைய இன்னும் ஒரு 60 இல்லை 70 ஆண்டுகள் பிடிக்கலாம் என்ற கணக்கை கூறுகிறது! ( இது அடுத்த பதிவில் தொடரும்!)

இரண்டாம் பதிவு : எண்ணெய் என்பது எது வரை!! --(2)

Thursday, May 25, 2006

மதுமிதாவின் ஆய்வு பணிக்கு....


வலைப்பதிவர் பெயர்: வெளிகண்ட நாதர்

வலைப்பூ பெயர்: பாலக்கரை பாலனின் பால்ய பார்வை

சுட்டி: http://ukumar.blogspot.com/

நாடு: வட அமெரிக்கா (புலம் பெயர்ந்தது கனடா, தொழில்புரிய இருப்பது: அமெரிக்கா)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே தான், சும்மா இணையத்தை பீராஞ்சப்ப வந்த விழுந்த தமிழ்மணம் பக்கம் இருந்த தமிழை கண்டு ஆர்வமுடன் யுனிக்கோடு, இ-கலப்பை எல்லாம் கத்துக்கிட்டு, பின்னூட்டமிட தொடங்கி, பிறகு வலையை பதித்தது

முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: செப்டம்பர் 26, 2005

இது எத்தனையாவது பதிவு: 75 வது!

இப்பதிவின் சுட்டி(url):http://ukumar.blogspot.com/2006/05/blog-post_114857617418191088.html


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முதல் பதிவில் நான் இட்ட பின்னோட்டமே பதில்! ப்ளாக்கர் ஆரம்பிச்சோன எதையாவது எழுதனுமுனு தோணுச்சி, ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல. சரி அந்தக் கதை இந்தக் கதை பேசறதவிட நம்ம கதை பேசுவோமுனுட்டுதான். இதோ ஆச்சி பாதி வாழ்க்கை வாழ்ந்தாச்சி, திருச்சி பாலக்கரையிலிருந்து இந்த லாஸ் ஏஞ்சலஸ் வரைக்கும் வந்தது வராதது, போனது, போவாதது, உண்டது, கழிஞ்சதுன்னு எவ்வளவோ இருக்கு. எதை எடுப்பது எதை விடுவது. இதை வேணா மறந்த கதைன்னு வச்சிக்கலாமா? (டைரியில் எழுத) வரணும், அண்ணன் வரணும் இந்த பாலக்கரை பாலன் பார்வையை பார்த்து ரசிக்கணும்!

சந்தித்த அனுபவங்கள்: நல்ல அனுபவங்கள் தான்!

பெற்ற நண்பர்கள்: வலை நாட்டுத் தோழ்ர்கள் அனைவரும்!


கற்றவை: அநேகம்! நம்ம படிக்காம விட்டுப்போச்சுன்னு எது எது இருக்கோ அதெல்லாம் தேடி படிச்சு, அதை பிறகு வலைப்பதிவில் பதிந்து, அதற்காகவே கல்லாத கடலளவை கற்றுக்கொண்டிருக்கிறேன்!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஏராளம் ஏராளம்! என்னவேனாலும், எண்ணத்தில் இருக்கும் என்னவேனாலும் எழுத கிடைத்த சுதந்திரம் ஏராளம்! ஏராளம்!

இனி செய்ய நினைப்பவை: விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், புதிய தொழில்நுட்பங்கள் சரித்திரம், கலாச்சாரம் என அனைத்து விஷயங்களும் இணையத்தில் தமிழில் அழகாக பவணி வர முழு முயற்சி!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: நான் ஒரு நாடோடி! பரதேசி! கல்வி செல்வம் அளித்தக் கொடையால் உலகம் சுற்றி வந்த வாலிபன் -:)


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: கருத்துக்களை நல்ல முறையில் பரிமாறி நாகரீகம் கொள்ள வழி வகுக்கும் இந்த தமிழ்மண மேடையில் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது, வேறு கண்ணோட்டங்களில் அதை கண்டு அதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விவாத தாக்கத்தால், நல்ல கருத்து பரிமாற்றங்களன்றி போவதால், குதர்க்க எண்ணங்கள் தோன்றி, அதன் விளைவாய் வரும் பின்னோட்டங்களும், அதற்கு பதிலடி பின்னேட்டங்களும் வளர்ந்து, மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல. ஆதாலால், இனி தமிழ்மண மேடையை அதற்கு பயன் படுத்த வேண்டாம் என என் அன்பு தமிழ் மண நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது!

Wednesday, May 24, 2006

சிலது விட பலது பெரிதா? - விக்கி தத்துவம்!!

முன்ன அந்த காலத்திலே உபயோகிப்பமே தடி தடியா பிரிட்டானிக்கா என்சைக்ளேப்பீடியா, புத்தகம், அது ஞாபகம் இருக்கா! எதை ஒன்னும் விவரம் தெரிஞ்சுக்கணும்னா உடனே ஓடுவோம் லைப்ரரிக்கு, அந்த தடி புத்தகங்களின் வால்ம்யூங்களை, ஆங்கில எழுத்து வாரியா அடுக்கி வச்சிருப்பாங்க, எடுத்து படிச்சிட்டு அர்த்தமோ, இல்லை விஷயமோ தெரிஞ்சுக்குவோமே, ஞாபகம் இருக்கா. காலேஜ் படிக்கிறப்ப, நிறைய ரெஃபரன்ஸ்க்கு இது போல லைப்ரரிக்கு போய் நான் பார்த்ததுண்டு! அப்புறம், இந்த தனிகம்ப்யூட்டர்னு வந்தப்பறம், வீட்டிலயும் அதிகமா புளங்கணப்பையும், இந்த CD யில என்சைக்களோப்பீடியா எடுத்து வச்சுக்கிட்டு விவரம் தெரிஞ்சுக்க முயற்சிப்பண்ணுவோம், அதாவது ஞாபகம் இருக்கா! பிறகு இணையம் வந்தப்பறம், அந்த சைக்ளோப்பீடியான்னா, இப்ப அந்த விக்கிப்பீடியா தான்!

அதாவது விஷயம் தெரிஞ்சவங்களா சேர்ந்து தொகுத்து உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களையும் தொகுத்து வச்சிருக்காங்க! எப்பவாது விஷயம் வேணும்னா போய் பார்த்திருக்கீங்களா! அருமையான அறிவு தங்க சுரங்கம் இந்த கலைக்களஞ்சியம்! இதுல எல்லாம் கிடைக்கும், விஞ்ஞான விஷயமும், பொது அறிவு, அப்படின்னு எதுவேணும்னாலும் கிடைக்கும். ஏன் நம்ம ஊரு கமல்ஹாசன், பாரதிராஜாவிலருந்து, ஜோதிகா வரைக்கும் யாரு, என்னா, நடிச்ச, டைரக்ட் பண்ண முக்கியமான படம் என்னான்னு அத்தனையும் தெளிவா கிடைக்கக்கூடிய அறிவுக் களஞ்சியம்! இது ஆங்கிலம்னு இல்லாம, முக்கியமான உலக மொழிகள் அத்தனையலயும் தொகுத்து வச்சிருக்காங்க, வேணும்னா நம்ம கே. பாலசந்தரை பத்தி தமிழ்ல எழுதி வச்சிருக்கறதை பார்த்துட்டு வாங்க! இது எப்படி வேலை செய்து, யாரு தொகுத்து போடற, இதுக்கு பின்னாடி உள்ள தத்துவம் என்னான்னு பார்ப்போமா?

இந்த விக்கிப்பீடியாங்கிறது உலகெங்கிலும் இருக்கும் இணையதாரர்களா சேர்ந்து, அவர்களின் கூட்டுமுயற்சியால அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம். இதில் இருக்கிற மொத்தக் கட்டுரைகள் ஒரு 40 லட்சத்துக்கிட்ட! யார்வேணும்னாலும், அந்த சொல்லப்படும் விஷயம் தெரிஞ்சா அதை பத்தி எழுதியோ, இல்லை திருத்தங்களையோ செய்யலாம். இதை ஆரம்பிச்சு வச்சவரு ஜிம்மி வோல்ஸ்ங்கிற ஒருத்தர், ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2001!. இதுக்கு எப்படி விக்கிப்பீடியான்னு பேரு வந்துச்சுனா, ஹாவயன் மொழியிலே, விக்கின்னா, 'சீக்கிரம்னும்', 'எனக்கு தெரிஞ்சது என்னான்னா' அப்படின்னு அர்த்தம். அது மாதிரி யாரும் எந்த ஒரு சப்ஜெக்ட்டையும், 'எனக்கு தெரிந்தது என்னான்னு' எழுதி போட்டுட்டா, அது உலகத்தில உள்ள மக்கள் எல்லாரையும் போய் சேர்ந்திடும். தேவை ஒரு கம்ப்யூட்டர், இணயத்தொடர்பு, அவ்வளவுதான், அத்தனை கலைக்களஞ்சியமும் அடுத்த நிமிஷம் நம்ம கையிலே! மேலே நான் சொன்ன மாதிரி, ஆங்கில மொழியிலே மட்டும் 10 லட்சத்துக்கு மேலே கட்டுரைகள் அனைத்து விஷயங்களிலும் எழுதப்பட்டிருக்கு!

இந்த கலைக்களஞ்சியத்திலே ஒரே ஒரு பிரச்சினை என்னான்னு, இதை காப்பதை விட அழிப்பவர்கள் அதிகம், அதாவது வண்டலிஸம் ('vandalism')னு சொல்லக்கூடிய ஒரு தகாத செயல் தான். அதுனாலேயே சில விஷயங்களை திரிச்சு எழுத வாய்ப்பு இருக்கு! உண்மைக்கு புறம்பா அதை எழுதி போட்டுவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கு! ஆனாலும் இது விக்கிப்பீடியா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் கீழ் இயங்குவதால், அதனை உடனுக்குடன் திருத்தியே இல்லை சரியான உண்மைகளை தொகுத்து விடுகிறார்கள், மேற்கொண்டு அதை திருத்திவிட நம் போன்ற இணையம் உபயோகிப்போரிடமிருந்து கருத்துகள் வந்துவிடுவதால் அவைகள் சரி செய்யப்ப்டுகின்றன! இருந்தாலும் இந்த கலைக்களஞ்சியம் மீதும், அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மீதும் சிலருக்கு நம்பிக்கையற்றதன்மை இருப்பது மறுக்க முடியாது ஒன்று, அதிலும் பிரிட்டானிக்கா போன்ற கலைகளஞ்சியங்கள் உபயோகிப்போர், இதன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை!

விஷக்கிருமிகள் விஷப்பேனாக்கள் கொண்டு திரித்து உண்மைக்கு புறம்பாக எழுதிவிடும் வாய்ப்புகள் இருந்த பொழுதும், இந்த விக்கியப்பீடியாவின் புகழ் மென்மேலும் அதிகரித்து கொண்டிருப்பதில் ஆச்சிரியமில்லை. ஏனென்றால் இது மனிதக்குல அறிவுகளை விழித்திட செய்யும் ஒரு அருமையான கருவி, அதுவும் கூட்டு முயற்சியில், எந்த விலையுமின்றி உருவாக்கப்பட்ட களஞ்சியம் பிரிட்டானிக்கா என்றழைக்கப்படும் கலைகளஞ்சியத்தைவிட 12 மடங்கு பெரியது, 200 மொழிகளில், 10000த்துக்கும் மேற்பட்டோரின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட 40 லட்ச பிரசுரங்கள் அடங்கிய களஞ்சியம், மற்ற 'சி என் என்', 'பிபிசி', 'நியூயார்க் டைம்ஸ்' எனும் பத்திரிக்கை மற்ற ஊடக தளங்களை விட இதற்கு விஜயம் செய்யும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம், ஆதலால் தான் இது ரொம்பவும் பிரசித்துப்பெற்றது! நிறைய மக்களுக்கு விஷய ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய சாதனம்! அதுவும் இந்த அசூர வளர்ச்சி இந்த ஐந்தாண்டுகளில் தான்!

சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இதில் தொகுக்கப்பட்டிருந்தாலும், அப்படி சர்ச்சைக்குரிய விஷயமாக குறிப்பிட்டு அதன் உண்மைகள் மக்களின் தீர்மானத்திற்கே விடப்பட்டள்ளது. முக்கியமாக, நம் நாட்டின் காஷ்மீர், எல்லை குறிப்புகள், சீனா ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களை தொகுத்து வழங்கிய பொழுது அதில் அடங்கி இருக்கும் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி அதன் உண்மை, தவறின்மை வேண்டிய அளவு மாற்றி கொள்ள வேண்டியது படிப்பவர்களின் கடமை என்ற எச்சரிக்கை வாசகத்தோடு கட்டுரை வெளிப்படப்பட்டிருக்கும், உதாரணத்துக்கு இந்த மூன்றாம் பானிப்பட்டு யுத்தம் பற்றி வெளியிடப்பட்ட கட்டுரையை பார்க்கவும்! இந்த மக்களுக்கு உதவும் சாதனம் விஷமிகளின் கைகளில் சிக்குண்டால் என்னாகும் என்பதற்கு தினம் நம் இந்திய பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் திரிப்புகள் அதிகம், அதை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

ஆக இந்த பிளாக்கர் குழுமம் எப்படி ஒரு புதிய ஊடகக் கருவியாக, அனைத்து விஷயங்களையும் தரமுற்படுகிறதோ, அதன் குறைகளை நிரப்பும் இன்னொரு ஊடகமாக இந்த விக்கிப்பீடியா உருவெடுத்துள்ளது. பிளாக் என்பது திருத்தமோ, தணிக்கை செய்யப்படாத, ஒரு தனிமனித குரல் மற்றும் அவனின் எண்ணம், அறிவு எனக்கருதப்படும் ஒரு விஷயத்தை விவாதிது கட்டுரையாக வரும், ஆனால் விக்கியின் தத்துவம் அதே பக்கம், விவாதிக்கப்பட்ட விஷயங்களின் பக்கம், திருத்தப்பட்டு, அதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்களால் மாற்றி முழுமையாகப்படுவதால் மீண்டும் வடிவமைக்கப்படுகிறது! அதுவே அதன் சக்தி!

ஆக பழைய பிரிட்டானிக்கா கலைகளஞ்சியத்திற்கும், இந்த பதிய கூட்டு முயற்சியில் உருவான விக்கிப்பீடியா கலைக்களன்சியத்திற்கும் உள்ள வேறுபாடு தவறின்மை, முற்றிலும் உண்மையான கருத்துக்கள், ஆனல் அவ்வாறும் சில நேரங்களில் இந்த தொகுப்பு தவறிவிட வாய்ப்புண்டு என்கிறனர் பிரிட்டானிக்கா பதிப்பகத்தினர். இருந்தும் அவர்களின் தொகுப்பு பெரிதன கூறுகின்றனர். ஆனால் இந்த விக்கிப்பீடியா களஞ்சியம், மாறி வரும் தொழில்நுட்பத்துடன் உலகமே சேர்ந்து உருவாக்கிய ஒன்று. தவறுகள் சில இருந்தாலும் மனிதகுல அறிவுத்திறமை ஒரு சில பேரால் தொகுப்படைவதில்லை, பலரால் தொகுக்கும் பொழுது, அதை எந்த வணிக நோக்கமின்றி உருவாக்கி வழி நடத்தும் பொழுது, உபயோகிப்போரின் தேவை பொறுத்து, அதன் முக்கியத்தவம் உயர்வடைகிறது. ஆனாலும் இந்த கூட்டு முயற்சியின் அறிவுக்களஞ்சிய தன்மையே தனி! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Tuesday, May 23, 2006

16 வயதினிலே!

பாரதிராஜா தமிழ் சினிமாவை ஒரு புதிய தளத்துக்கு எடுத்துட்டு போயி, இன்னைக்கு இருக்கிற சினிமாவுக்கு வித்திட்ட சினிமா இந்த தலைப்பிலே வந்தது 1977ம் ஆண்டு! சரியா எனக்கும் 16 வயசு, இதிலே நடிச்ச ஸ்ரீதேவிக்கும் 16 வயசு! அதாவது தொண்டக்குழி உடைஞ்சு ஒரு ஆம்பிள்ளை தனமான பேச்சு வர ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த வயசு பொட்டப் புள்ளங்கலுக்குன்னு இல்லே, பசங்களுக்கும் ஒரு முக்கியமான வயசு, அதை கடக்கும் பருவம் ரொம்ப சிலு சிலுப்பானது, அப்படி எனக்கு இந்த பருவத்திலே நேர்ந்த சில சிலுசிலுப்பான உணர்வுகள் பத்தி நேத்து நான் அசை போட்டப்ப, இதை ஒரு பதிவா போட்டா என்னான்னு தோணுச்சி, அது தான், இதோ உட்கார்ந்திட்டேன், பதிவு போட!

சரியா எஸ் எஸ் எல் சி பரீட்சை எழுதி பாஸ் பண்ணி காலேஜ் எந்த பக்கம் போறதுன்னு முடிவெடுக்க வேண்டிய நேரத்திலே வந்த படம் இந்த 16 வயதினிலே! சரியா என்னோட 16 வயதினிலே! இந்த படத்திலே தாவணி கட்டி வந்த ஸ்ரீதேவியை ரொம்ப புடிக்கும். பாலியக்கவர்ச்சின்னு சொல்ல முடியாது, அந்த வயசுல பட்னு சில பெண்களை பார்த்த மாத்திரத்திலே புடிச்சிடும்! அதுவுமில்லாம, அப்படி கொஞ்சம் அரசல் புரசலா இந்த தாவணிப் பெண்கள்கிட்ட பழக தொடங்கி இருந்தது அந்த ஒரு காலகட்டத்திலே தான்! அதுவரைக்கும் எனக்கு அதிகமா என் வயசு ஒத்த பெண்ணுகள் கிட்டே பேசினதோ, பழகினதோ கிடையாது, சின்ன வயசிலே ஒரு ஆறு ஏழு வயசு வரை, உறவுக்கார பெண்ணு புள்ளைங்களோட விளையாண்டு பேசினதோட சரி, பிறகு பெரிய இடைவேளை!

முதல் முதலா இந்த 16 வயசிலே தான், எங்க பெரியம்மா வீட்டுக்கு எதிர்ல, ஒரு ஸ்டோர்ல குடியிருந்த பெண்கள்கிட்ட பேசும் வாய்ப்பு கிடைச்சுது! அதுவும் நான் பொதுவா அடிக்கடி போய் வருபவன் தான், ஆனா அந்த வயசிலே அவங்க குடிமாறி இருந்த அந்த பக்கம் சின்ன வயசு பெண்கள் நிறைய எதிர்ல இருந்த ஸ்டோர்ஸ்ல இருந்தது ஒரு கூடுதல் காரணம்! புதுசா ஒரு ஆடவன் வாசனை தெரியுதேன்னு அந்த குடியிருப்பில் இருந்த பழுத்த பெண்கள் என் மேல் கண்பார்வையிட்டு, அதிசியமா பார்த்தது. பிறகு என் பெரியம்மா அவர்களிடம் கொண்டிருந்த நட்பால் என்னை அறிமுக படுத்த ஆரம்பித்தது பேச்சு படலம். அதாவது, வரும் போகும் போதொல்லாம், அந்த பழுத்த பெண்கள், கொஞ்சு வயசானாலும், அக்கா வயதுடையவர்கள், 'நல்லா இருக்கியா ...'ன்னு உரிமையோட குசலம் விசாரித்து ஏதேனும் பேசி என்னிடம் கடலை போட முற்படுவார்கள், எல்லாம் அந்த வயதுக்கே உண்டான கவர்ச்ச்சி, அவர்களையும் சேர்த்து தான்! ஆனால், ஆடவனுக்கு அந்த தைரியம் எல்லாம் வருவது, பார்த்த மாத்திரத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தில், கொஞ்சம் பெண்களிடம் உடனே அப்ரோச் செய்வது டெவலப் செய்வதெல்லாம் இந்த 16 வயதில் வரும் கலை அல்ல, அதற்கு கொஞசம் வயசு கடக்கணும். ஆனா, பெண்களுக்கு அப்படி அல்ல, அந்த ஒரு அசகாய துணிச்சல் இருக்கும் இந்த 16 வயதினிலே! மேற்கொண்டு வயதில் மூத்தவள் என்ற உரிமை எடுத்து பேச துணைவது அவர்கள் சாமர்த்தியம்! வயது வித்தியாசம் ரொம்பவும் அதிகம் இல்லை, ஓரிரண்டாண்டுகள் தான்!

என்னதான் இப்பழுத்த பெண்கள் என்னிடையே பேசினாலும், அல்லது பேச முற்பட்டாலும், நம்மலும் தொடர்ந்து பேசி, பழகி நட்பை பெரிதாக்கி கொள்ள அவ்வளவு ஆர்வம் அதிகம் இருக்கவில்லை! அப்போது கண் பரபரப்பது எல்லாம் நம் வயது ஒத்த பெண் யாரேனும் இருக்கிறாளான்னு ஆராயத்தான், அப்படித்தான், என் படிப்பு படித்த கஸ்தூரி என்ற பெண்ணிடம் சிநேகம் கொண்டேன், அதுவும் 'உங்க ஸ்கூல்ல என்ன சொல்லி கொடுத்தாங்க, உன் நோட்ஸ் எனக்கு குடு, நான் என் நோட்ஸ்ஸை உனக்கு கொடுக்கிறேன்'ங்கிற அளவோட நின்னு போனது தான். அதென்னமோ எனக்கு இந்த பெண்ணின் மேலேயும் கவர்ச்சி இருந்ததில்லை! ஆனா அந்த பெண்ணைவிட அழகான அந்த பழுத்த அக்காவிடமும் மனம் நாடவில்லை, அந்த பெண் மிகவும் சிரத்தை எடுத்து என்னிடம் மிக சிநேகமாக இருக்க முயற்சி செய்தும்! ஆனால் அவர்களை சும்மாவது பார்க்கணும் என்று அடிக்கடி போவேன். ஒருவேளை என்னை அறியாமல் இருந்த பயம் கூட இருக்கலாம், அதிகபிரசிங்கித்தனமாக் அதிகம் இதில் இறங்க வேண்டாமென்று! இது அந்த 16 வயதுக்கே உண்டான விந்தை!

நான் அப்போ ரொம்பவும் சிலாகிச்ச பெண்களின் உடுப்பு இந்த தாவணி, அதுவும் வெள்ளை தாவணி மத்த எந்த கலர் பாவடைக்கும் சரியாக மேட்ச்சா இருக்கும். இந்த காஸ்ட்யூம் விந்தை எப்படி பாரதிராஜாவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா படம் பூரா ஸ்ரீதேவியை அந்த அலங்காரத்தில் காண்பித்திருப்பார். அதற்கப்பறம் எல்லா படத்திலேயும் முத்தி வந்த ஸ்ரீதேவியை கொஞ்சமும் பிடிச்சதில்லை, அதுவும் ஸ்ரீதேவியை ஆ..ஊ..ன்னு வடக்கத்திகாரங்க கொண்டாடுனப்பையும் எனக்கு எரிச்சல் தான் அதிகம் வந்தது. ஏனோ அந்த இயல்பான, கள்ளம் கபடமற்ற, சிறு பிள்ளை முகம், சிரிப்பு, அந்த தாவணி, 16 வயதுக்கே உண்டான இளம் உடல்வாகு, அத்தனையும் பொருந்திய 16 வயசு ஸ்ரீதேவியை ரொம்ப நான் ரசிச்சதும் என்னோட 16 வயசினிலே!

அதற்கப்பறம் சிகப்பு ரோஜாக்கள்ல கொஞ்சம் பெரிய வளர்ந்த பெண்ணா, அழகா வந்தாலும், அதை அருமையா ஸ்ரீநிவாஸ் படம் புடிச்சிருந்தாலும், எனக்கு அது கவர்ச்சியா தோணல! 16 வயதினிலே கண்டது இனி இல்லை என்றாகிவிட்டது, ஸ்ரீதேவிக்கு அன்றே வயதாகிவிட்டது!

இது அந்த 16 வயதுக்கே உரிய சுபாவம்! அடுத்து அந்த வயதிலே என் மனதை கொள்ளை கொண்ட இன்னொரு பெண், என் நண்பனின் தங்கை! உள்ளத்தில் எந்த கள்ளமும் இல்லாமல் நான் அவனிடம் பழகியும், அவன் வீட்டுக்கு சென்றாலும், அவன் என்று என்னை அவன் வீட்டு வாசல், மிஞ்சினால் முற்றம் தாண்டி அனுமதித்தில்லை! அந்த வயதில் அதற்கான காரணம் ஏன் என்று அப்பொழுது அறிந்து கொள்ள மனம் இடங்கொடுக்கவில்லை. என்னை பொறுத்தவரை, நாங்கள் நல்ல நண்பர்கள், பெரும் பொழுது, வீட்டை விட்டு வெளியிலே தான் கழிக்கிறோம், ஆகையால் அதுவரை எனக்கு எந்த பாகுபாடும் தெரியவில்லை. ஆனால், எங்க தோழர் குழுவில் இருந்த இன்னொரு நண்பன், அவன் தங்கையை பற்றி பேசக்கேட்டு, பிறகு கிண்டலாக ஏதோ பேசப்போக, எப்பொழுதோ அவர்களுக்கிடையே நடந்த சண்டையில், என் நண்பனை தடுத்து பத்திரமாக அவன் வீடு கொண்டி சேர்த்த பொழுது, மின்னலாக அவனின் தங்கை வந்து மறைந்ததை அன்று தான் பார்த்தேன்! பிறகு இரண்டொரு சந்தர்ப்பங்களில் அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது! அந்த வயதில், நாம் செய்வது தவறு என்று தெரிந்தும், அவளை பார்க்க மனம் ஆர்பரிக்கும்! ஏதேனும் காரணம் கொண்டு அவளை நான் பார்க்க செல்வதும், அவளும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, முற்றத்தில் காய்ந்த துணிமணிகளை எடுப்பது போலோ, இல்லை வேறு வேலை கொண்டோ என்னை பார்த்து சிரித்துவிட்டு செல்ல தவறுவதில்லை!

இப்படி அடிக்கடி நாங்கள் வெறும் பார்த்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்ததே ஒழிய வேறொன்றும் நடந்ததில்லை. இதை நான் காதல் என்று கொள்ளவில்லை, ஆனால் அந்த 16 வயதுக்கே உரிய பெண்ணிய கவர்ச்சி! அப்பொழுதும் கவர்ந்தது அந்த தாவணி தான். அவள் போட்டு கொண்டிருந்த தாவணியால் அழகான உருவம் மனதில் பதிந்து, ஏற்பட்ட கனவுகள் பல! அவ்வளவே! அதுவும் அந்த காலகட்டத்துடன் முடிவடைந்தது!

ஆக இந்த 16 வயதினை ஒரு இரண்டு கெட்டான் வயசுன்னு சொல்றது எவ்வளவு சரி பாருங்கோ! இப்படி ரம்மியமாக கழிந்த 16 வயதினை கொஞ்சம் அசைபோட்டு பார்த்தேன்! அத்தனை பெண்களும் மனதை விட்டு மறைந்து விட்டனர், ஆனால் இன்னும் மறையவில்லை என் 16 வயதினிலே மயிலு! அது தான் நம் தமிழ் சினிமாவின் தாக்கம் என்பது!

Monday, May 22, 2006

பிரபஞ்சத்தின் மூலம் பரம்பொருளே! -ஓரு விஞ்ஞான உண்மை!

அட நில்லுங்க, எங்க போறீங்க! என்ன ஆன்மீக சொற்பழிவு எதுக்கும் அடிபோடறனோன்னு பயப்படறீங்களா? ஆனா, அப்படி ஆன்மீகம் சொன்ன கருத்தை வலுவாக்கத்தான் இப்ப விஞ்ஞானம் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கு. அண்ட சராசரவெளி, பிரபஞ்சம் இது எல்லாத்துக்கும் முதற்காரணமான பரிபூரணபரம் பொருள் அந்த முதற்கண் கடவுள்ங்கிற ஆன்மீக தத்துவத்திற்கு இன்னும் அர்த்தம் புரிபடலை,ஆனா அதற்கான விஞ்ஞான விளக்கங்கள், விடைகள் இப்ப நிறைய கிடைச்சிக்கிட்டிருக்குன்னு, அப்ப அப்ப இந்த அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்குது. இதெல்லாம் தெரிஞ்சுக்குனும்னா, அணுவுக்கும் அணுவான பெளதீக உண்மைகள் உங்களுக்கு கொஞ்சம் புரிபடணும். அதாவது இதை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானமும், பிரபஞ்சவியலும் ('Cosmology') கொஞ்சம் தெரிஞ்சா, இதெல்லாம் என்னா சொல்ல வர்றாங்கன்னு நமக்குப்புலப்படும். ஆக பொது ஜனங்களே, நமக்கு அடிப்படையா, நம்மூர்ல சொல்ற அந்த அன்மீக கூறலுக்கு உண்டான விஞ்ஞான உண்மை என்னான்னு, இந்த பக்கம் தொடரும் தேடலை, இந்த சயின்ஸ் மூலமா என்ன சொல்லவர்றாங்கன்னு தெரிஞ்சக்கலாம் வாங்க!

நீங்க எல்லாரும் மொட்ட மாடியிலே படுத்து தூங்கி இருந்தீங்கன்னா, ஒரு நிஜத்துக்கு சின்னபுள்ளையிலருந்து அலைஞ்சுருப்பீங்க! அதாவது வானத்திலே நிலா, நட்சத்திரம்னு, அண்டை வெளியை பார்த்து சில நேரம் ரசிச்சிட்டு அப்புறம், இதெல்லாம் என்னா, எங்கிருக்கு, என்னா கிரகம், நட்சத்திரம் அப்படின்னு தெரிஞ்சுக்க ஆசைபட்டிருப்பீங்க! பிறகு கொஞ்சம் மேலே போயி இதெல்லாம் எப்படி வந்தது, நாம் எப்படி பூமிக்கு வந்தோம், அப்படின்னு கற்பனைக்குதிரையை தட்டி விட்டுட்டு அப்புறம் விடை ஏதும் கிடைக்காம, இந்த பிரபஞ்சம், பிதா, பரம்பொருள் அப்படின்னு கோயில் காலச்சேபம் கேட்டுட்டு அதை அங்கனையே விட்டுருப்பீங்க. இல்ல சினிமா படங்கள்ல காமிக்கற நிலவு, பெண்கள், கவிதை, வானவெளி, நட்சத்திரம்னு பார்த்து சிலாகிச்சிட்டு விட்டுருப்பீங்க. இல்ல நிழல்கள் படத்தில வர ராஜேசேகர் மாதிரி , கஞ்சா அடிச்சிட்டு நடசத்திரங்களை பார்த்து மயங்கி, 'இது ஒரு பொன்மாலை பொழுது'ன்னு பாட்டுபாடி அப்புறம் அதை பக்கத்து வீட்டு பொண்ணு கேட்டு மயங்கி, அதை டாவுவுட்டுகிட்டு, இப்படியெல்லாம் பொழுது கழிச்சிருப்பீங்க. ஆனா விஞ்ஞான ரீதியா இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிருக்க மாட்டீங்க. நீங்க இல்லேனா, அட்லீஸ்ட் நான் அந்த மாதிரி விட்டதை கொஞ்சம் படிச்சி தெரிஞ்சுக்கிட்டேன்னு தான் உங்கக்கிட்ட சொல்லிக்கலாமுன்னு இதை எழுதுறேன்!

முதமுதல்ல மக்கள், இந்த உலகம்னு எடுத்துக்கிட்டா, அதற்கு அடிப்படை என்னான்னு இயற்கையை ஆராஞ்சு, பஞ்சபூதங்களாகிய, நீர், நிலம், நெருப்பு, காத்து, வாயுன்னு தெரிஞ்சு அதை கொண்டாட ஆரம்பிச்சாங்க! ஆனா இன்னெக்கு நமக்கு அதை விட அதிகமா தெரியும், விஞ்ஞான ரீதியா! அதாவது எல்லாத்துக்கும் அடிப்படை என்னான்னா அணு, மூலம், பரிபூரண பரம் பொருள்!

இந்த அணுக்கள்னு சொல்ல வந்தாலே நீங்க எல்லாம் படிச்ச அந்த 'periodic table' தான் ஞாபகத்துக்கு வரும். அதாவது இயற்கையா கிடைச்ச கனிம பொருட்களின் மூலவஸ்துக்களை, அதன் அணுவின் அடிப்படை தொகுப்பில் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் எண்ணிக்கை தான் அது! அப்புறம் அதுகளுக்குள்ள இருக்கும் பதம், எதிர்பதம் மின் அணு தொடர்புகள்ல, பதமா இருக்கும் அணுவின்நடுப்பகுதியும்(Nucleus) அதற்கு எதிர்பதமா இருக்கும் மின் அசை(எலெக்ட்ரான்), இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். முதல்ல இதைத்தான் எல்லாரும் அடிப்படை, அணு, அப்படின்னு நினைச்சாங்க, ஆனா 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம், அதுக்கு மேலே போயி அந்த புரோட்டான், நியுட்ரான்கள் இன்னும் சிறிய துகள்களா இருக்குதுன்னும், அதுக்கு ஆங்கிலத்தில 'quarks' ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!
இந்த பெளதீக விஞ்ஞானத்திலே அணு மாதிரி உருவை ('Model') இப்படி சொல்றாங்க, எலெக்ட்ரான் அணுவின்நடுப்பகுதியை(Nucleus) சுற்றி தொடர் சுழற்சியில் சுற்றி வருவதாகவும், இந்த அணுவின் நடுப்பகுதியிலே நியூட்ரான், புரோட்டான்ங்கள் குதியாட்டம் போடறதாகவும், அந்த நியூட்ரான், புரோட்டான் களுக்குள்ள இருக்கும் 'quarks' என்னும் துகள்கள், கிலுகிலுப்பையை ஆட்டுனா அதுக்குள்ள இருக்கும் துகள்கள் எப்படி மேலே கீழே ஆடுமோ, அதுபோல ஆடிக்கிட்டிருக்குன்னு (மொத்ததிலே ஆங்கிலத்திலே இதுக்கு 'jiggle'னு பேரு, அதாவது ஒரு 'irregular motion')

இந்த 'quarks' அளவுன்னு எடுத்துக்கிட்டீங்கண்ணா மிக மிகச்சிறியது. அணுவின் அளவு ஒரு பங்குன்னா, 10000த்தில ஒரு பங்குதான் அணுவின்நடுப்பகுதி(Nucleus), அதே மாதிரி 100000 த்திலே ஒரு பங்கு தான் புரோட்டான், அதுல 'quarks', எலெக்ட்ரான் எல்லாம் 100,000,000 த்திலே ஒரு பங்கு, பார்த்தீங்களா எவ்வளவு சிறிசுன்னு!

சரி இப்ப எதுக்கு இந்த கணக்குன்னு கேட்கிறீங்களா, அதான் தொடர்ந்து அடிப்படையிலே எத்தனை பரம் பொருள் (Particle) இருக்குன்னு கண்டுபிடிக்கிறதுதான் இந்த பெளதீக விஞ்ஞானம்! இது வரைக்கும் 200 க்கும் மேற்பட்ட இந்த பரம் பொருள்கள் இருக்குன்னும்( ஆனா இது அடிப்படை அணுக்கள்இல்லை, அப்படி அடிப்படை அணுக்களின் தொகுப்பு), அதை தொடர்ந்து எந்த வடிவத்திலே இருக்குன்னு கண்டுபிடிச்சா நமக்கு இந்த பிரபஞ்சம் பத்தி கொஞ்சம் அதிகம் தெரிஞ்சக்க முடியும்!. புரியல்லை! சரி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்!

சரி 200க்கும் மேற்பட்ட பரம் பொருள்கள்னு சொன்னா, அதுக்கு அடிப்படையான பொருட்கள் என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது, அதைத்தான் இந்த பரம் பொருட்களை (Particle) கொண்டான உலகம் மற்றும் அதனை பிடித்து கொண்டிருக்கும் தத்துவத்தை விளக்க அவங்க தொகுத்த மாதிரி உரு தத்துவம் தான் 'Standard Model Theory' அதாவது அனைத்து பரம் பொருள்களை விளக்கனும்னா, அதில ஒரு 6 'quarks' துகளும், 6 'lepton' (இது நம்ம எலெக்ட்ரான் மாதிரி துகள்கள்)அவைகளை அனைத்து செல்லும் விசை சாதன பொருட்கள் ('Force carrier particles') அதன் சிக்கலான கட்டமைப்பு விளக்கும் இந்த உரு தத்துவம் தான் இந்த பெளதீக விஞ்ஞானத்தின் மூலம்! அதை இப்ப ஒரு 70 வருஷத்துக்கு முன்னே கண்டுபிடிச்சாங்க. அதுவும் புது புது பரம் பொருட்களை(Paraticle) இப்ப தான் ஒரு 30, 40 வருஷத்துக்கு முன்ன தான் கண்டுபிடிச்சாங்க!

இந்த உலகம்ங்கிறது வேறெ ஒன்னுமில்லை, மலையிலருந்து மடுவரைக்கும் இந்த 'quarks' துகளும், 'lepton' துகள்களுமேன்னு சொல்லி முடிச்சிடலாமா, ஏன்னா அதானே அடிப்படை. ஆங்.. அதான் இல்லை! ஒவ்வொரு பரம் பொருளுக்கும்('matter particle') அதற்கு எதிர் பதமான பரம்பொருள்('antimatter particle')ன்னு ஒன்னு இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க!போச்சுடா இது வேறேயா!

ஆமா, அந்த பரம் பொருளுக்கு இருக்கும் குணாதிசியமாதிரியே அந்த எதிர்பத பொருளுக்கும் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க, ஆனா,எதிர்பத பொருளுக்கு மின்விசை எதிர்மறையா இருக்கும்னு கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த இரண்டும் ஒன்னை ஒன்னு சந்திசிக்கிச்சுன்னா உண்டாகுமய்யா பிரளயம், அதுல இருந்து பிறக்கும் ஒரு புதுசக்தி ( 'When a matter particle and antimatter particle meet, they annihilate into pure energy!') இது தான் இந்த பிரபஞ்சம் தோன்ற மூலக்காரணம்!

இப்படி ஆரம்பமாகி சின்ன சின்ன துகள்கள்,அதற்கிடையே உண்டான விசைகள், பிறகு அதிலிருந்து வரும் பொருட்கள் இதை எல்லாம் ஆராஞ்சு அதன் ஒவ்வொரு போக்கினையும் கண்டறிஞ்சு, அடிப்படை பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதே இந்த பெளதீகம். அதுக்குன்னு அமைக்கப்பட்டிருக்கும் விசை கலங்கள் (Particle accelerator),அதன் மூலமா அனத்து வித பரம் பொருட்கள் அதன் தன்மைகளை கண்டறிந்து கடைசியில் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்கள் ( நம்ம கண்டறிஞ்ச X-ray, போட்டான்ஸ், கதிர்கள், மற்றும் அனைத்து பிரபஞ்ச கதிரியக்கங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது), விசைகள் எல்லாம் ஆராயந்து சில உண்மைகளை தெரிந்து கொள்வது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இப்ப புரிஞ்சுதா இந்த பெளதீக உண்மை. இன்னும் இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, நிறைய தளங்கள் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கலாம்!

சரி இதெல்ல என்ன விஷேசம்னு கேட்கிறீங்களா, ஆமா விஷேசம் சொல்றதுக்கு முன்னே விஷயம் சொல்லுனுமில்ல, நான் பாட்டுக்கு மேட்டர்,ஆன்டி மேட்டர்னு சொல்ல ஆரம்பிச்சு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இப்படி இந்த இரண்டு பொருட்களும் சந்திச்சு முட்டி மோதி உருவான ஒரு சக்தியால் உண்டானது இந்த பிரபஞ்சம்னு ஆரம்பிச்சா என்னை அடிக்க வரமாட்டீங்க, அதனாலதான் அதுக்கு பின்னாடி இருக்கிற இந்த பெளதீகத்தை சொல்லிட்டு மேற்கொண்டு விஷயம் சொல்லலாமுன்னு வந்தேன்!

அதாவது நான் சொன்ன அந்த பரம் பொருள் மற்றும் எதிர் பரம் பொருள் இதுவரைக்கும் கண்டறிந்ததில் சமனாகவும், எதிர்பதமாகவும் முக்கியமா ஒத்திசைவு ('Symmetry') கொண்டதுன்னு தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா இப்ப கண்டுபிடிக்கபட்ட உண்மை என்னான்னா, அந்த பொருட்கள் ஒத்திசைவு தன்மை கொண்டவை அல்ல (Assemytrical)என்பது தான்!

அதாவது சிகாகோவில் இருக்கும் 'Fermilab' என்ற ஆராய்ச்சி நிறுவனம், நான் கூறிய அந்த பரம் பொருட்களில் ஒன்றான, 'B-mesons' எனழைக்கப்படும் பரம்பொருளை இரண்டு ரூபத்திலும், அதாவது மேட்டர், ஆன்டி மேட்டர்களாக மாற்றி, பிறகு பரம்பொருளாக மாற்றும் இந்த 'Mixing' என்ற முறையில் அதன் பரம்பொருள், எதிர் பரம்பொருள் நிலையில் எடை வித்தியாசத்தை கண்டறிந்தனர். அதாவது அது பரம்பொருளாக இருக்கும் பொழுது ஒரு எடையும், அது எதிர்பரம்பொருளாக இருக்கும் பொழுது இன்னொரு எடையாக இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இது தான் நான் சொன்ன அந்த ஒத்திசைவு தன்மையற்ற (Assemytrical) ஒன்று! இதுவரை இந்த அறிவியலில் கூறப்பட்டு வந்த உண்மை சற்று புறம்பாகிறது! அந்த எடை வித்தியாசம் இதுவரை கண்டறியப்பட்ட 'B-mesons' பொருட்களை விட அதிகம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்! இது தான் விஷேஷம்! அதாவது இதுவரை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம் சொல்லி வந்த தத்துவத்திலிருந்து மாறுபட்டது என்றும் அந்த பரம் பொருள், எதிர் பரம்பொருள்களுக்குண்டான சமநிலை தத்துவம் சரிவடைந்து விட்டது இன்னும் சில பிரபஞ்ச உண்மைகளை கண்டறிய துணைபுரியும் என்று கருதுங்கினறனர்

கடைசியிலே எவ்வளவு தான் விஞ்ஞான உண்மைகளை கண்டறிய முற்பட்டாலும் இந்த பிரபஞ்சம் பத்தியும், பரம்பொருள் பத்தியும் என்றுமே நிலைப்பாடான உண்மைகளை கண்டறிந்து இந்த பிரபஞ்சத்தை வெல்ல மனிதனுக்கு எத்தனைக் காலம் புடிக்குமோ? ம்.. தியான நித்திரையில் ஆழ்ந்து இறைவனை நிந்தி, பிரபஞ்சமும் பரம்பொருளும் விளங்கும், யாரோ சாமி தூரத்திலே சொல்ற மாதிரி தெரியுது! -:)