Showing posts with label பிரயாணம். Show all posts
Showing posts with label பிரயாணம். Show all posts

Saturday, July 08, 2006

ஜஸ்பர் காடுகளில் கோடை விடுமுறை இம்முறை!

என்னடா ரொம்ப நாள் ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருந்திருப்பீங்க! போன வாரம் ஒரே வேலைப்பளு! அதற்கப்பறம் விடுமுறைன்னு சொல்லி நடுவில கண்டம் சுத்திப் பார்க்க கிளம்பியாச்சு! அதான் வட அமெரிக்காவை தான் சொல்றேன்! நான் சின்னப்பிள்ளையா இருந்தப்பவே இந்த சரித்திர, பூகோளம் பாடம் படிக்கிறப்ப எனக்கு ரொம்ப புடிச்ச கண்டங்களோட மேப்புகள்ல இந்த அமெரிக்கா கண்டம் என்னை அதிகமா ஈர்த்ததுண்டு. அதுவும் அந்த வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் ஒன்னுக்கொன்னு ஒட்டிக்கிட்டு அழகா இருக்கும் பார்க்க. அதிலே இருக்கிற அத்தனை இடங்களும் எனக்கு அத்துப்படி, அழகா, நாடுகளையும், பெரிய ஊர்களையும் குறிச்சிடுவேன் சரியா! எப்பவும், இந்த பூளோக பரிட்சையிலே கடைசியா மேப்பு கொடுத்து இடத்தை, நாடுகளை குறிக்க சொல்றப்ப, அதை சரியா குறிச்சு, அப்படியே பத்து மார்க்கும் வாங்கினவன். அதுவும் அந்த காலத்திலே, எஸ் எஸ் எல் சியிலே இந்த சரித்திர, பூகோளப் பாடத்திலே 98 மார்க்கு வாங்கினவன். இப்ப அந்த கண்டத்திலே இருந்துக்கிட்டு எல்லா இடங்களையும் சுத்திக்கிட்டு இருக்கேன், கேட்கவா வேணும், எல்லாத்தையும் விளாவாரியா போய் பார்த்துட்டு வந்தாச்சு!

வட அமெரிக்காவில கிழக்குப்பகுதிகள் எப்படி புரட்சிகரமா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்குதோ அதே மாதிரி மேற்கு பகுதிகள் இந்த கற்பாறைகள் நிறந்த மலைத்தொடர்கள் ரொம்ப பிரசித்துப் பெற்றது! நம்ம இந்தியாவிலே எப்படி மலைத்தொடர்கள் ரொம்ப முக்கியமான ஒன்னோ அது மாதிரி இங்கேயும்! நம்மல்ல நிறைய பேரு அந்த மாதிரி குன்றுகள், மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியிலே இருந்து வந்திருப்போம். அதுவும் இந்தியாவின் தெற்கு மாகாணங்கள்ல இருக்கிற கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் எவ்வளவு பேமஸோ, அதே மாதிரி மத்தியிலே இருக்கிற விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள், அப்புறம் வடக்கிலே இருக்கிற இமயமலைத் தொடர்கள் போல, இந்த அமெரிக்க கண்டத்திலே இந்த ராக்கி மவுண்டன் ரேஞ்சஸ்ன்னு, வட அமெரிக்காவின் தெக்காலெ இருக்கிற 'சாண்டியகோ' அதுக்கு கீழே இருக்கிற மெக்ஸிகோவிலருந்து ஆரம்பிக்கிற இந்த கருங்கல் மலைத்தொடர் வடக்கே அலாஸ்கா வரை வியாபித்துருக்கக் கூடிய ஒரு மலைத்தொடர்! அதுள்ள முக்கியமா இந்த கனடியன் ராக்கீஸ்னு சொல்லக்கூடிய மலைத்தொடர்கள் நீங்க எல்லாரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். இந்த ஊர்பக்கம் எங்கயாவது, அதாவது அமெரிக்காவிலேயோ, இல்ல கனடாவிலேயோ எங்க இருந்தாலும், ஒர் எட்டு இந்த பக்கம் வந்து பார்த்துட்டு போங்க! முக்கியமா கனடால இருக்கிற ஆல்பர்ட்டா என்கிற மாகாணத்திலே இருக்கிற இந்த மலைத்தொடர்கள் பார்க்க வேண்டிய ஒன்னு!

அதாவது கனடாவில் இருக்கும் இந்த மேற்கு பகுதி மாகாணங்கள்லான ஆல்பர்ட்டா, பிரிட்டீஸ் கொலம்பியா எல்லைகள்ல ஒட்டி இருக்குக் கூடிய மலைத்தொடர்கள், கனடியன் ராக்கீஸ்ன்னு ரொம்ப பிரசித்து பெற்றது. அதாவது இந்த மலைத்தொடர்கள் வடக்கில் ஆர்டிக் பகுதியின் அருகில் இருப்பதால, வருஷத்திலே ஒன்பது மாசமும் பனிமழை தான். அதனாலே இப்படி பனி விழுந்து ஆயரக்கணக்கான வருஷமா உறைஞ்சு போன பனி மலைகள் அப்படியே அழுத்ததாலே இருந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்து அப்படியே முழுசுமா மலைத்தொடர், பள்ளத்தாக்குகள் எல்லாம் வியாபித்து இருக்கும். இப்படி நகரும் பனிபடலங்களுக்கு 'கிளேசியர்ஸ்னு' ('glaceiers') ஆங்கிலத்திலே பேரு! இந்த நகரும் பனிப்பாறைகள் பத்தி நான் ஏற்கனவே பதிவுப் போட்டுருக்கேன், முடிஞ்சா அந்த பதிவு, 'ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!' போய் படிச்சுப் பாருங்க! அது கடல்ல மிதக்கும் 'iceberg', பனிப்பாறைகள் பத்தி! ஆனா நான் சொல்றது மலைகள்ல இருந்து நகர்ந்து வரும் இந்த பனிபாறைகள்! அது நிறைய இந்த பகுதிகள்ல பார்க்கலாம்!

நீங்க முதல்ல வர்ற வேண்டிய இடம் 'கால்கரி'. அப்படி வரணும் நினைக்கிறவங்க எனக்கோ இல்ல கால்கரி சிவாவையோ தொடர்பு கொள்ளுங்க! வேணும்னா ஒரு பதிவர் மாநாடும் போட்டுட்டு அப்புறம் ஜாலியா நீங்க இந்த கனடியன் ராக்கீஸ்ங்கீற மலைக்காடுகள்ல சுத்தி பார்க்க போகலாம்! இந்த கால்கரிங்கிறது நம்ம நாட்ல இருக்கிற காஷ்மீர் பள்ளத்தாக்குப் போல! சுத்தி நீங்க பனி படர்ந்த மலைகள்ல பார்க்கலாம்! 'வெள்ளி பனி மலை மீதுலாவுவோம்'னு பாரதியார் பாட்டு பாடிக்கிட்டு அழகா நீங்க போய் வரலாம்! இங்கிருந்து ஆரம்பிச்சா பக்கத்திலே பேன்ஃப் ('Banff') அப்படின்னு ஒரு இடம்! இதை சுத்தி இருக்கக் கூடிய காடுகளை பேன்ஃப் நேஷனல் பார்க்குன்னு சொல்வாங்க! அது போலே கொஞ்சம் வடக்கால போனீங்கன்ன ஜஸ்பர்னு ஒரு இடம்! அதை சுத்தி இருக்கக்கூடிய காடுகள் தான் ஜஸ்பர் நேஷனல் பார்க்! இதை சுத்தி அழகான கற்பாறைகளால் சூழப்பட்ட அழகிய மலைகள், அதன் மீது படர்ந்து இருக்கும் பனி படலங்கள், பிறகு அழகிய பள்ளத்தாக்குகள், அதறகு அருகிலே விரைந்து ஓடி வரும் நதிகள், நீர் நிலைகள், ஏரிகள், ஊசியிலைக்காடுகள், பிறகு மலைசரிவுகள், அதற்க்கிடையில் ஓடி வரும் நீர்வீழ்ச்சிகள் அப்படின்னு கண்ணையும் மனசையும் பரிக்கக்கூடிய அழகிய இயற்கை வனங்கள்! வந்தா உங்களையே மறந்து போய்டுவீங்க!

பனிநிலம்னு ஒரு பகுதி ஜஸ்பர் போகும் வழியில் உள்ளது. இதற்கென பிரத்தியோகமான பெரிய வண்டிகள்ல நீங்க போய் அந்த 'ice Field', அதாங்க அந்த பனிநிலத்தை பார்க்கலாம்! இந்த பனிநிலம் பல வருடங்களா குளிர்காலத்திலே விழும் பனி மழையின் காராணமா, இந்த பனி சறுகுகள் அப்படியே நாள்பட நாள்பட கெட்டியாகி அப்படியே ஒரு பெரிய படர் போல இருக்கும், அப்பறம் அதுவே இறுகி போயி அப்படியே பனிபடிகங்கள் போலாகிவிடும்! இந்த கற்பாறைகளில் இருக்கும் இந்த பனிபடர்கள்,நீங்க போட்டவிலே பார்க்கிறது பல நூறு வருஷங்களுக்கு முன்னே, ஏன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே விழுந்த பனி மழை துகள்கள், அப்படியே கெட்டியாகி கொட்டிக்கிடக்கது! அப்படி படிகம் படிகமா ஒன்னுக்கு மேலே ஒன்னா இருப்பதால, அடியில் இருக்கும் படிகங்கள் அழுத்தத்தின் காரணமா கொஞ்சம் கொஞ்சமா இருக்கும் இடத்தை விட்டு நழுவி கீழே ஆத்து தண்ணி ஒடுவது போல மலைச்சரிவுகளில் கீழே நோக்கி நகர்கின்றன! அப்படி நகரும் பனிகளின் மூலமா அப்படியே நிலத்திலே படர்ந்து ஒரு பனிநிலமாகி போகுது. இந்த மலைக்கு மேலே இருக்கும் பனிபடர்நிலங்களுக்கு பேரு கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்('Columbia IceField'), அப்படியே மலைச்சரிவுகளில் படர்ந்திருக்கும் பனிநகர்வுகளுக்கு பேரு ஆத்தெபெஸ்கா கிளேசியர்('athabasca galcier')அப்பறம் அதிலிருந்து கீழே உருகி படர்ந்து வந்த ஐஸ் கால்விரல்களுக்கு பேரு 'Toe', அங்கிருந்து உருகி நீரா ஒடி கடைசியிலே அது ஏரியை வந்தடையுது! இப்படி வியாபித்து இருக்கும் ஐஸ்ங்க உருகுவதும், பிறகு குளிர்காலத்திலே பனியாவதும் தொன்று தொட்டு நடப்பது! ஆனா இப்ப உலக உஷ்ணமாவாதாலே இந்த பெரிய பனி கிளேசியர் எல்லாம் இருந்த இடம் தெரியாமா பின்னோக்கி(Retreat) ஒடி விட்டன! ஆக இது தான் இந்த கிளேசியர்னு சொல்லக்கூடிய பனிபடர், நகர்வுகளின் கதை! போய் பார்த்தீங்கன்னா , அப்படியே ஜில்லுன்னு இருக்கும்!

அப்புறம் நம்ம ஊருங்க மாதிரி மலைச்சரிவுகள், நீர்வீழ்ச்சிகள், பாயந்து வரும் நதிகள், பூந்தோட்டங்கள், ஊசியிலைக்காடுகள் எல்லாம் நீங்க பார்க்கலாம். நீங்க இந்தியாவிலே வடக்கே ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், வடமேற்கு உத்திரபிரதேச மலைக்காடுகள்னு எல்லா இடங்களுக்கும் வடக்கே ரஜினிகாந்து போறமாதிரி, இந்த இமயமலை அடிவாரம் போய் வந்திருந்தீங்கன்னா இதெல்லாம் உங்களுக்கு பரிட்சியமான ஒன்னா இருக்கும். என்னா ஐஸ் அதிகம் பார்க்கனும்னா, அங்கெல்லாம் கொஞ்சம் உச்சிக்கு போகணும், இங்க அப்படி இல்ல, கீழே நிலங்களிலேயே பார்க்கலாம்! இன்னென்னு பார்க்க கிடைக்காதது இங்கே என்னான்னா, மலைச்சரிவுகள், நதி ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் அருகே சிறு மலை இடுக்குகள் நடுவே தபம் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடிய சடா முனிவர்களும், தடுக்கி விழுந்தா கிடைக்ககூடிய சின்ன சின்ன கோவில்கள், காளிமாதா, தேவின்னு மலைக்கோவில்கள் இங்க இல்லே! நம்ம ஆளுங்க அந்த காலத்திலே வந்திருந்தா இந்த மாதிரி ஏதாவது கோயில் கொடின்னு மலை இடுக்குகளில் இல்லே உச்சிகளில் கட்டி பிரசாதம் கொடுத்திக்கிட்டிருப்பாங்க! அது கொஞ்சம் இங்க விட்டுப்போச்சு! மற்றபடி எல்லாம் நம்ம இமயமலை அடிவாரத்தில் கிடைக்கக்கூடிய காட்சிகளே! அதிகம் தூரம் போகலேன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி தான்! ஆனா எல்லாத்தைவிட கற்பாறகளான மலைகள் அதன் சரிவுகளில் படர்ந்த பனி படலங்கள் பார்க்க இரண்டு கண்ணு போதாது இங்கே!

Wednesday, June 14, 2006

எனது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்!

என்னென்னமோ எழுதியாச்சு, பயணக்கட்டுரை எழுதிலயேன்னு எப்பவும் ஒரு ஏக்கம் இருந்திச்சு, இதோ, கொஞ்சம் எழுதலாமுன்னு உட்கார்ந்தா, எதப்பத்தி எழுதறதுன்னு பார்க்கிறப்ப, சரி நம்ம போய் வந்த ஆஸ்திரேலியா, நியுசிலாந்து பத்தி எழுதுவோம்னு தோணுச்சி! அதுக்கு கொஞ்சம் காரணமும் இருக்கு, ஏன்னா நியுசிலாந்து பத்தி உங்களுக்கு நிறையா சரித்திரம் சொல்லி பாடம் கத்துக்கொடுக்கிற டீச்சர் தமிழ்மணத்திலே இருக்கிறதால, அது கொஞ்சம் உங்களுக்கு பரிச்சியமா இருக்குங்கிறதாலே, சரி அதை எடுத்துக்குவோம்னு இந்த டூரைப் புடிச்சேன்!

பொதுவா இந்த டூர் போறது எங்க வீட்ல, என் மனைவி, மகளுக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு! நான் டில்லியிலே இருந்த சமயத்திலே, ஒரு மூணு மாசத்துக்கு அப்புறம் எங்கேயாவது டூர் போறது பெரும்பாலும் எங்க வழக்கம்! அதுவும் டில்லி சரியான இடம், ஏன்னா எல்லாத்துக்கும் சென்டர்! வடக்காலே நீங்க இமயமலை அடிவாரம் போகணும்னாலும் சரி, மேற்காலே ராஜஸ்த்தான் பாலைவனம் போறதா இருந்தாலும் சரி, கிழக்காலே காசி, இலகாபாத்ன்னு புண்ணிய தரிசனம் பண்ண போகனாலும் சரி, இல்லே தெக்காலே, தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் பார்க்க போகனாலும் சரி போய்ட்டு வந்திடலாம்! நாங்க இந்த எல்லா இடத்துக்கும் போய் வந்தவங்க!

சரி உள்நாடு சுத்தி பார்த்து போரடிச்சு போச்சுன்னு, வெளி நாடு போகலாமுன்னு போனது தான் இந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம். நான் முதல்ல வேலை பார்த்த கம்பெனியிலே சேரும் போது, அந்த HRல எல்லா பேப்பரையும் கை எழுத்து வாங்கிக்கிட்டு இருந்த ஒரு அம்மாக்கிட்ட, ஆமா இந்த கம்பெனியிலே 'பாரத் தர்ஷன்' போக எல்லாம் வழி இருக்கான்னு கேட்டுட்டேன்! ஏன்னா அதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த மத்திய அரசாங்க நிறுவனத்திலே, அந்த மாதிரி ஒன்னு இருந்திச்சு, அதான் LTC ன்னு சொல்றது! அந்த அம்மா சிரிசிக்கிட்டே, பக்கத்திலே இருந்தவருக்கிட்டே, இதப்பாருடா, புது சேரவந்தவரு 'பாரத் தர்ஷன்' போக முடியுமான்னு கேட்கிறாரு சொல்லி சிரிச்ச கதை இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது!

எங்க வெளி நாட்டு பயணம் 15 நாளைக்குன்னு சரியா ரூட்டெல்லாம் போட்டு திட்டமிட்டு பண்ணுனது நானே தான், வேறே டிராவல் ஏஜண்ட் யாருமில்லை! அப்பவும் எல்லாத்துக்கும் இந்த இணையம் தான் கை கொடுத்தது! எல்லாமே உட்கார்ந்த இடத்திலே இருந்து முடிக்கிற விஷயம். அதே மாதிரி ஏர் டிக்கெட்டுக்கும், பக்கத்து காம்பிளக்ஸ்ல இருந்த டிராவல் ஏஜண்ட்டை பாடா படுத்தி டிக்கெட்டும் ரொம்ப மலிவா வாங்கியாச்சு. இந்த பயணம் நான் ஒரு இரண்டு வருஷம் முன்னே இந்தியாவிலே இருந்து போனது! அப்புறம் போனா எங்க தங்கறதுன்னு யோசிச்சப்ப, இந்த ஹோட்டல் எல்லாம் கட்டுபட்டு வராதுன்னு நினைச்சப்ப, நமக்கு கைக்கொடுத்தது 'YWCA', 'YMCA' தான்! பொதுவா வெளி நாட்ல, அதுவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்ல எல்லா பெரிய ஊர்லயும் இது இருக்கு! இங்கே தேடி கண்டுபிடிச்சு போய் தங்கினீங்கன்ன மலிவு, இந்த தந்திரம் எங்கிட்ட கேட்டு வாங்கிங்க,ரொம்ப கைக்கொடுக்கும்! சரி அதில போய் தங்கினாலும் செலவாகுமுன்னு, வேறே என்ன வழின்னு பார்த்தா, இந்த கேம்பர்வேன், அதாவது நீங்க கேள்விபட்டிருப்பீங்களே, நடிகர் நடிகைகள், படுத்து தூங்க, மேக்கப் போடன்னு அவங்களுக்கும்னு ஒரு தனி வேன் இருக்கும் இல்லே, அது தான், அத்தனை வசதிகளோட படுத்து, தூங்கி குளிச்சு, எல்லாம் பண்ண வேன்னு குள்ளேயே வசதி இருக்கும்! அப்புறம் அதை நீங்களே ஓட்டி எல்லா இடத்தையும் சுத்தி பார்த்திடலாம்! அதிலே போய் தங்கிக்கிட்ட இந்த வண்டி சத்தம் மிச்சம், தங்கிறதுக்கும் செலவில்லைங்கிற கதையாயிடும்!

அப்படி கேம்பர்வேன் வாடகைக்கு கொடுக்கிற கம்பெனி நியூசிலாந்திலே 'Brit' இல்லே, 'Maui' ன்னு இருக்கு, அதை இணையத்திலே தேடிபுடிச்சி புக் பண்ணியாச்சு, வாடகை செலவு ஜாஸ்தி இல்லை, இன்ஸ்யீரன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு 7-8 நாளைக்கு 1000 நியூசிலாந்து டாலர்குள்ள வந்திடும், அதுக்கு சீசனுக்குன்னு போனா கொஞ்சம் வாடகை ஜாஸ்தி, நாங்க போனது குளிர்காலம் தான், அதாவது கடுங்குளிர் குறஞ்சிருந்த நேரம், செப்டம்பர்ல, வாடகை கம்மி தான் (டீச்சர் கிட்ட பாடம் படிச்சீங்களா, சீதோஷ்ண நிலை, நம்ம ஊருக்கும், அங்கேக்கும் உல்ட்டான்னு! நமக்கு கோடைன்னா, அங்க குளிர், தெரியுமில்லை!) ஆக இப்படி போட்ட திட்டத்தோட பயணம் ஆரம்பமாச்சு!

முதல்ல சிங்கப்பூர், வழியிலே நின்னு போகணும், பிறகு நேரா சிட்னி! ஆகா, என்ன அழகான ஊரு தெரியுமா, ஏர்போர்ட்டு விட்டு வந்தோன்ன ஒரு சில்லு காத்து உடம்பை கிழிக்கும்! இந்த சிட்னியை நிறைய படத்திலே பார்த்திருப்பீங்க, சமீபத்திலே வந்த படம் திருட்டுபயலே, மெல்போர்ன்ல எடுத்தது, கிட்ட திட்ட அப்படி தான் இருக்கும்! இல்லேன்னா, 'சலாம் நம்ஸ்த்தே' ஒரு ஹிந்திப்படம் வந்ததுல்ல, அதை போய் பாருங்க, ஏன் நம்ம ஷங்கர் இந்தியன் எடுத்தாருல்ல, டெலிபோன் மணி பாட்டு, அது முழுக்க சிட்னியிலே எடுத்தது தான்! இங்கே பார்க்க வேண்டியது 'சிட்னி பிரிட்ஜ்' 'ஓப்ரா டவர்' அப்புறம் கடலை சுத்தி குரூஸ் போய் அழகா கட்டி போட்டுறக்க வீடுகள்! அப்புறம் சிட்டியில்லே நீங்க நடந்து ஜாலியா பார்த்துக்கிட்டே போகாலாம்! அதுவும் பொம்பளங்க மார்லருந்து கீழே நழுவி எப்ப விழும்ங்கிற மாதிரி போட்டுக்கிட்டு போற ஃபிராக், கவுன் அழகிகள் அதிகம்!

சிட்னில இருந்து புறப்பட்டு நேரே 'க்ரைஸ்ட்சர்ச்' போய் இறங்கியாச்சு! ஒரே குளிர்! ராத்திரி YMCAல தங்கிட்டு காலையிலே 'Brit' கடைக்கு போய் நம்ம கேம்பர் வேன்னை வாடகைக்கு எடுத்தாச்சு! வழக்கம்ப்போல எது வண்டில எங்க இருக்குன்னு சொல்லிக்கொடுக்க ஒரு பொண்ணு வந்தா, கேஸ் சிலண்டர் இருந்ததாலே சமச்சுக்கலாம், ஓவன் வச்ச சமயல் செய்ய குக்கிங் ரேஞ், பாத்ரூம் படுக்கை, சோபா எல்லாம் சொல்லி கொடுத்துட்டு கடைசிலே கீழே இறங்கி தண்ணி எப்படி ரொப்பரது, அப்புறம் சூவெஜ் எப்படி ட்ரைன் பண்றதுன்னு விலாவாரியா சொல்லிக் கொடுத்தா! எல்லாம் சரி, செஞ்சுப்புடலாம், ஆனா நம்ம கழிஞ்சதை, அதான் அந்த செப்டிக் டேங்க்கை எடுத்தி கழுவி அதிலே திருப்பி கெமிக்கலகலந்து திருப்பி மாட்ரது இருக்கே, உவ்வே! 'பீயள்ள போகிறார் சுஜாதா' ன்னு நம்ம முத்துக்குமரன் ஒரு பதிவு போட்டார்ல, அது மாதிரி நம்ம அனுபவத்தை இன்னொரு பதிவா போட்டாகணும்! எல்லாம் முடிச்சிட்டு, வண்டியை எடுத்திட்டு கிளம்பியாச்சு! இந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலே எல்லாம், நம்ம ஊர் மாதிரி ரைட் ஹேண்ட் ட்ரைவ் தான், அதனாலே ஓட்ட சிரமமில்லை! மேற்கொண்டு இங்கே ஓட்ட நீங்க வச்சிருக்கிற இந்தியன் ட்ரைவின் லைசென்ஸ் போதும்!

இந்த க்ரைட்ஸ்சர்ச் இருக்கிறது தெற்கு தீவுல, அதாவது நியூசிலாந்து இரண்டு தீவுகள் கொண்டது, வடக்குத்தீவுல தான் வெலிங்டன், அதோட தலைநகரம், அப்புறம் அக்லேண்ட், எல்லாம், நீங்க கிரிக்கெட் பார்த்திருப்பீங்க இங்கெல்லாம் விளையாடி! நாங்க சுத்தினது தெற்கு தீவு முழுக்க! க்ரைஸ்ட்சர்ச் கிழக்கு கடற்கரையிலே இருக்கிற ஒரு அழகான நகரம், முதல்ல நாங்க அதை சுத்தி பார்க்கலை, நேரா கிளம்பியாச்சு கீழே தெக்க பார்க்க போய்ட்டோம்! குவுன்ஸ்டவுன்னு நம்ம ஊரு ஊட்டி மாதிரி, அப்புறம் அங்கிருந்து மில்ஃபோர்ட் சவுண்ட்ன்னு, அதாவது மலைகளின் நடுவே வியாபித்திருக்கும் கடல், இதையே ஃபிஜார்ட்ன்னு சொல்லுவாங்க! நார்வேயிலேயும் அதிகம்! அப்புறம் எங்க சுத்தினாலும் மலைகளும் ஏரிகளும் தான், இயற்கையை உண்மையிலே கண்டு களிக்குனும்னா போய் ஒரு எட்டு நியுசிலாந்து பார்த்திட்டு, அப்படியே நம்ம துளசியையும் பார்த்துட்டு வந்திடுங்க! அப்புறம் ஃபிரான்ஸ் ஜோஸப் கிளேசியர்னு நகரும் பனிப்பாறைகள் பார்த்திட்டு, அப்புறம் அழகா ஆங்கில படத்திலே வர்ற கண்னை பறிக்கும் காட்சிகள் கொண்ட இடங்கள் முக்கியமா 'The Lord of the Rings' ல வர்ற அத்தனை இடங்களையும் பார்த்திட்டு வந்தோம்! அதுக்குன்னே கூட்டிக்கிட்டு போக நிறைய டூர் இருக்குது! அப்பறம் பங்கி ஜம்பிங்ன்னு மேலேந்து கீழே குதிக்கிறது! என் பொண்ணு நான் குதிக்க போகணும் ஒரே குதி, ஆனா எங்களுக்கு கொஞ்சம் பயம், போகவிடலை, அப்பறம் கணவாய்கள், மலைக்குகைகள், மேற்கு கடற்கரை பகுதி மலைகளும், அழகிய பள்ளத்தாக்குகளும் கொண்ட பகுதி! இயற்கையை அணு அணுவா ரசிக்கனும்னா, நியூசிலாந்து போய் பார்த்துட்டு வாங்க! இப்படி சுத்தி முடிச்சி திருப்பி க்ரைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்தோம்!

பிறகு அங்கிருந்து வடக்கு தீவு போய், அங்க இருந்த கந்தக பூமியை பார்த்திட்டு வந்தோம்! இந்த பகுதிகள் எல்லாம் ஒரு காலத்திலே எரிமலைகளா இருந்த பகுதிகள், எல்லாம் சூடு தனிஞ்சு போச்சு இப்ப, இருந்தும் அங்கங்க நீராவி ஊற்று, கொதிக்கும் களிமண் எல்லாத்தையும் நீங்கப் பார்க்கலாம்! இந்த இடத்தக்கு பேரு 'ரோட்ருவொ'ன்னு! அப்படி சுத்தி முடிச்சு அந்த பக்கம் இருந்த பண்ணைங்க நிறைய பார்த்தோம். நம்ம ஊரு மாதிரி மாட்லருந்த பால் கையிலே கறக்கிரதெல்லாம் இல்லை! எல்லாமே மெசின்னு தான்! மாட்டு பால்காம்பை கப்புன்னு புடிச்சி அதுபாட்டுக்கு அமுத்தி எடுத்து பாலை குழாய்ல கொண்டு வந்து கடைசிலே ரெஃப்ரிஜிரேட்டட் டேங்க்ல சேகரிக்க எல்லாம் மெக்கனைஸ்ட் தான் போங்க! அப்படியே சுத்திட்டு வர்றப்ப தான் கடைசியா இந்த முடிவளர்ந்த கடா ஆடுங்களை பார்த்துட்டு அது தோல் உரிக்கிரது எல்லாம் பார்த்துட்டு வந்தோம். இந்த சின்னபுள்ளையிலே மிரட்டுவாங்களே, 'படவா தோலை உறிச்சுடுவேன்னு', அதே மாதிரி 'தோலுறுத்து காட்டுகிறார்'ங்கிற சொற்றொடர் வருமே, அதே மாதிரி தோல் உரிச்சு காம்பிச்சாங்க! உங்களுக்காக அந்த வீடியோ இங்கே!



இப்படி நியுசிலாந்து முடிச்சிட்டு பிறகு வர்றப்ப திரும்ப ஆஸ்திரேலியாவுக்கு பயணம்! திரும்ப வந்தறங்கினது பிரிஸ்பென்! அங்கேந்திருந்து 100 கிமீ தூரத்திலே இருக்கிற 'Gold Coast' கடற்கரைக்கு போனோம்! இது ஒரு ஜாலியான விடுமுறை கழிக்கிற ஸ்தலம்! நீச்சல், ஸர்ஃப்பிங், பீச்சிலே வெட்டியா பொழுதை கழிக்க இந்த ஊரு! அப்புறம் ஃபுளோரிடால இருக்கிற ஓர்லோண்டோ மாதிரி ஒரே தீம் பார்க்குங்க! இங்கே வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவும் இருக்கு! என் விதியை பார்த்தீங்களா, 'எனை ஆண்ட அரிதாரம்' னு தொடர் எழுதி நான் சினிமால சேர துடிச்ச சோகக் கதையை சொன்னேன் இல்ல, ஆனா ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவிலே, இருக்கு! ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்!

இதெல்லாம் சுத்திட்டு, அங்கிருந்து ஹாங்காங் போய் இரண்டு நாளு சுத்திப்பார்த்துட்டு, கடைசியா டில்லி வந்து சேர்ந்தோம்! ஆனா எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத சுற்றுலா,ஒரு இன்ப உலா! நீங்களும் எப்பவாது எஙகேயாவது அப்படி சுத்தனும்னு வெளிநாடு போகனும்னா இந்த இரண்டு நாட்டுக்கும் போய் சுத்திட்டு வாங்க! மறக்க முடியது, முக்கியமா, நியுசிலாந்து போய்யிட்டு வாங்க! அப்படியே செடியக்காவை சந்திச்சு பதிவர் மாநாடு ஓன்னும் போட்டுட்டு போட்டோ புடிச்சி போடுங்க முடிஞ்சா!