Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Wednesday, June 21, 2006

உஷ்ணமே உயிரின வகைக்கு காரணம்?

நம்ம ஊர்ல பார்க்கிற சில மிருகங்களை இந்த பக்கம்,அதாவது துருவ பிரதேசத்தில பார்க்க முடியாது, அது மாதிரி நம்ம ஊர்ல பார்க்கிற அநேக வகையான தாவரங்கள், செடி, கொடி எல்லாம் இந்த துருவபிரதேசப் பக்கம் பார்க்க முடியாது? இது ரொம்ப நாளா மண்டைய போட்டு அரிச்சிக்கிட்டிருந்த விஷயம். என்னடா நம்ம ஊர்ல பார்க்கிற சிங்கம், புலி, யானை எல்லாம் இங்கே விலங்கியல் பூங்கால்ல தான் புடிச்சி வச்சிருக்காங்க, நம்மலும் காடு, மலைன்னு இந்த தேசத்திலே சுத்திட்டமே ஒன்னும் கண்ணுக்கு அகப்பட மாட்டேங்கிதேன்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்துக்கிட்டே இருந்தது! சரி இதுக்கு என்னா காரணம், எப்படின்னு ஆராஞ்சப்ப தான், இந்த 'Ecology and Evolution theory' படிச்சா கொஞ்சம் விளங்குமான்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் தென்பட்டது! சரி அது என்னா தான்னு தேடி பார்த்தா, இங்கே ஒரு பட்டி மன்றமே நடக்குது, எல்லாத்துக்கும் காரணம் உஷ்ணம் தான்னு. அதாவது உலகத்திலே தேவை அதிகமா போற உஷ்ணம், குளோபல் வார்மிங், பத்தி நான் சொல்ல வர்றல்லை! பொதுவா நம்ம பூமத்திய ரேகைக்கு பக்கத்திலே இருக்கிற கடக ரேகை, மகர ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டல நாடுகள்ல அதிகமா காணப்படும் எல்லா இனங்களும் மேலேயோ இல்ல, கீழயோ கொஞ்சம் துருவ பிரதேசங்கள் பக்கம் நகர்ந்திங்கன்னா, அதிகமா இருக்காது! இதுக்கு காரணம் என்னா, இதெல்லாம் என்னக்கூத்துன்னு கொஞ்சம் பார்ப்போமா?

நான் சொல்ற இந்த டிரெண்டு, அதாவது ட்ராபிக்கல் தேசத்திலேருந்து நகர்ந்து துருவபிரதேசம் போனா, நீரிலும் சரி, நிலத்திலும் சரி இந்த பலவகையான உயிரினங்கள் வாழுவது வேறுபட்டிருக்கும்! இதுக்கு முக்கிய காரணம் உஷ்ணம், மிதமான வெப்ப மண்டலம் தான்! ஆக இந்த எக்காலஜிஸ்ட்ங்க எல்லாம் என்ன சொல்லவர்றாங்கன்னா, இந்த கிளைமேட்ல வர்ற காரணம் தான்னு! ஆனா இந்த மித வெப்ப மண்டலங்கள் எப்படி இந்த மாதிரி வகைக்கு ஒன்னா, பலதரப்பட்ட உயிரினங்கள் உருவாக காரணமா இருக்குதுங்கிறதை பத்தி சரியான விளக்கம் இல்லை, ஆனா இதுவே காரணம்ங்கிறது ஒரு மறுக்கமுடியாத உண்மையா இருக்குது!

ஒரு வாதம் என்னான்னா, அதிகமா சூரிய ஒளி கிடைப்பதால் உண்டாகும் இந்த 'போட்டோசிந்தசிஸ்'ங்கிர தாவர உணவு சேகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கிறதாலேயே இந்த மாதிரி வகைக்கு பல தாவரங்கள் உருவாகி இருக்குதுன்னு சொல்றாங்க! மேற்கொண்டு இந்த மித வெப்பமான சீதோஷ்ணநிலை அதிகமான உயிரினங்கள், தாவர வகைகளை உருவாக்கினாலும், அதிலெ எப்படி இவ்வளவு வெரைட்டியா இந்த தாவர, உயிரினங்கள் உருவாக்கப்படுது அப்படிங்கிற விளக்கம் இன்னும் தெளிவா வரவில்லை! ஒன்னுவேனா உண்மையா இருக்கலாம், எப்பவும் சீரா மாறாத சீதோஷ்ண வெப்பநிலை இருப்பதால், இந்த தாவரம் மற்ற உயிரினங்கள் அவ்வளவு சுலபமா அழிஞ்சு போவதில்லை! ஆனா துருவ பிரதேசங்களின் சீரா சீதோஷ்ணவெப்பநிலை இல்லாத காரணத்தால், அவ்வாறு தோன்றும் உயிரினங்களோ, தாவரவகைகளோ அவ்வாறு உயிர்வாழ முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், இல்லை பூமியின் சுத்தும் விசை ('centrifugal force') பூமியின் மத்தியரேகைக்கு அருகில் ஈர்ப்பதால், இந்த இட மாற்றம் ஏற்பட்டு அங்கே, அதிக வகை உயிரினங்கள், மற்றும் தாவர வகைகள் இருப்பதாக இன்னொரு தத்துவ உண்மையாக கூறுகிறார்கள்!

எந்த தத்துவம் உண்மையானாலும், ஒரு முக்கிய காரணம் என்னான்னா, இந்த வெப்ப மண்டலத்தில் மாறும் இந்த சீதோஷ்ண நிலைகளே இந்த உயிரின மாற்றங்களுக்கு காரணம், அதனால் தான் இத்தனை வகை உயிரினங்களும், தாவரங்களும் தோன்றி இருக்கலாம் என்கிற உண்மையை முன் வைக்கின்றனர்!

இந்த உண்மைகளை கண்டறிய ஒரே மாதிரியான தாவர வகை ஒன்று இந்த வெப்ப மண்டலத்தில் இருந்தும், துருவபிரதேசத்திலும் இருந்தும் எடுக்கப்பட்டு அதனுடய 'டிஎன்ஏ' ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது, அதாவது இந்த 'Molecular Evolution' என்கிற இந்த உரு மாற்ற முறைகளை சோதித்து பார்த்த பொழுது ஒரு உண்மை விளங்கியது! அதாவது வெப்பமண்டல பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தாவர வகையின் அந்த 'டிஎன்ஏ'க்குள் இருக்கும் 'nucleotides' என்றழைக்கப்படும் நுண்ணனு துகள்களின் மாற்றம் இரட்டிப்பாக இருந்தது, துருவப்பிரதேச பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட அதே இன தாவரத்தின் 'டிஎன்ஏ' உருவமாற்றம் பார்க்கும் பொழுது என்று அறியப்பட்டது! இந்த உரு மாற்றம் ஆராய்ச்சி நேராக ஒரு உண்மையை விளக்கி உள்ளது, அதாவது உஷ்ணப்பிரதேசத்தில் இந்த மாற்றம் அதிவேகத்தில் நடைபெறுவது!

இந்த உண்மைக்கான விளக்கம் என்னவென்றால் இந்த உஷ்ண மண்டலத்தில் அந்த ரசாயண மாற்றம் அதி வேகமாக நடை பெருவதாலும், பிறகு 'மெட்ட்பாலிக் ரேட்' என்று சொல்லக்கூடிய உட்கொள்ளும் உணவை மாற்றி சக்தியாக எடுத்துக்கொள்ளும் முறை தாவரங்களிலிருந்து, மிருகங்கள், மனிதர்கள் வரை அதிகமாக உள்ளது இந்த வெப்பமண்டலத்தில் வசிப்பவர்களுக்கு, இருப்பவைகளுக்கு! இந்த அதிரிகப்பட்ட இந்த மெட்டபாலிஸம் என்ற மாற்றம் ஆக்ஸிஜன் சத்துடன் கூடிய இந்த ஃப்ரி ரேடிக்கல்ஸ் என்றழைக்கப்படும் இந்த நுண்ணனுக்கள் (Molecules) உருவாவதால், அதுவே இந்த உரு மாற்றத்துக்கு முக்கிய காரணம் என்பதால், வகை வகையான தாவரங்களும்,உயிரினங்களும் நீரிலும், நிலத்திலும் காணமுடிகிறது!

இந்த அதிக வகையான தாவரங்கள் அதிகம் இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றினாலும் அதன் மொத்தம் தோன்றி உள்ள கூட்டுத்தொகை எண்ணிக்கையை பார்க்கும் பொழுது அது கம்மியாக இருக்கிறது, இதே இன தாவர வகைகளையோ, இல்லை உயிரினங்களையோ குளிர் பிரதேசத்தில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது! ஆனால் உங்களுக்கு அதே இனத்தை சேர்ந்தவைகளின் வகைகள் அதிகம் இருக்கும்! உதாரணத்துக்கு ஊர்வனவை என்று பார்க்கும் பொழுது எத்தனை வகையான பாம்புகளிலிருந்து கரப்பான், பல்லி, பூரான், தேள் என்று ஏகப்பட்டதை அடுக்கி கொண்டே போகலாம்! இந்த வெப்பத்தினால் மாற்றங்கள் ஏற்பட்டு இந்த மாலிக்கியூலர் ப்ராஸஸ் என்கிற மாற்றம் ஏற்பட்டலாம், அதை வெவ்வேறு வகை இனங்களாக உரு மாற்றும் ('Mutation') நடைப்பெறுவதால் உங்களுக்கு அந்த இனத்திலேயே பலவகையான ஜந்துக்களை பார்க்க நேரிடுகிறது! இதே இனம் குளிர் துருவ பிரதேசப்பகுதிகளில் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான், ஆனால் அந்த இனத்தில் மாறுபட்ட வகைகள் கொஞ்சம் கம்மியாக இருக்கும்!ஆக மாற்றங்களின் வேகம் கூடுவதால், வகைகளின் மாறுபாடும் அதிகம் என தெரியவருகிறது!

ஆக உருமாற்றத்திற்கு காரணம் இந்த வெப்பம், ஆதலால் இன வகைகளும் அதிகம்!

இந்த காரணத்தால் தான், இந்த குளிர் பிரதேசங்களில், பாம்பு, பல்லி, பூரான், தேள் என்று ஒன்னும் இருப்பதில்லை! ஆனா நம்ம ஊர்ல இது ஜாஸ்தி! இது விலங்குகளுக்கு ன்னு இல்லை, தாவரவகைக்கும் பொருந்தும்! அதனால தான், இதெல்லாம் அதிகம் பார்க்காம நம்மல பாம்பாட்டிங்கன்னு இவளவு நாளா சொல்லிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரு பசங்க, பார்த்தீங்களா? குளிர்பிரதேச உண்மைகள் இன்னும் எவ்வளவு இருக்கோ, நம்ம ஊரு ஜனத்தொகை மாதிரி இங்கே அதிகம் இல்லையே, அதுக்கும் உஷ்ணம் தான் காரணமோ-:)

Monday, June 12, 2006

உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?

இங்கே அமெரிக்காவிலே ஒரு படம் 'AN INCONVENIENT TRUTH' முக்கியமான சில தியோட்டர்கள்ல ஓடிக்கிட்டிருக்கு! என்னா படம் இது அப்படின்னு கேட்கிறீங்களா, அதான் தலைப்பிலே சொன்னேன்னே அதை பத்தி தான் இந்த படம் எடுத்து சொல்லுது! அதாவது படத்தோட கதாநாயகன் 'Al Gore' ன்னு! இவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க, இவரு அமெரிக்காவிலே ஜார்ஜ் புஷ் முதோ தடவையா போட்டியிட்டு ஜெயிச்சாருல்ல, அந்த போட்டியிலே ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து நின்னு தோத்துப்போனவரு! அதுக்கு முன்னே அமெரிக்காவின் இணை குடியரசுத் தலைவரா இருந்தவரு! தோத்துப்போயி நம் ஊரு அரசியல்வாதிங்க மாதிரி கொடி புடிச்சு தர்ணா, மறியல், பாத யாத்திரை அப்படின்னெல்லாம் போகாம அவரு முன்னே ஆராய்ச்சி செய்துக்கிட்டிருந்த உலக உஷ்ணமாதலை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய போய்ட்டாரு! அப்படி அவரு ஆராய்ச்சி செய்த உண்மைகளை உலகத்திலே எல்லா முக்கிய நாடுகளுக்கும் சென்று பகிர்ந்துக்கிட்டு, இன்னெக்கு உலகத்தோட தட்பவெப்ப நிலை அதிகமாயிகிட்டே போகுது, அதால, சில பாகங்கள்ல வர இருக்கும் இயற்கை சீற்றம், வறட்சி, தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்கள், அதனால மனித குலத்துக்கு ஏற்படும் அழிவுகளை பத்தி விலாவாரியா விளக்கி, இது எல்லாத்துக்கும் காரணம் நாம தான், இந்த வளர்ந்த புது உலகிலே நம்ம செஞ்ச வினையே நமக்கு எமனா வரப்போகுதுன்னு எடுத்து சொல்லி, அதை களையவும் , இந்த உலக உஷ்ணத்திலே இருக்கிற அரசியல் தன்மைகளையும் சொல்லி, ஒவ்வொரு நாட்டு குடிமகனும் என்ன செஞ்சா இந்த உலகத்தை குளிர்விக்கலாம்னு சொல்லி வர்றாரு! அப்படி அவரு எடுத்து சொன்ன அந்த உண்மைகளை அவர் மூலமே பேச வச்சு, எல்லாரும் சரியா புரிஞ்சிக்கிற மாதிரி வந்த சினிமா படம் தான் அது! நம்ம ஊர்ல வந்திருச்சான்னான்னு தெரியாது, அப்படி வந்தா கண்டிப்பா போய் பாருங்க! இதே அதோட டிரையிலர் கொஞ்சம் ஓட்டிப்பாருங்க!



உலக உஷ்ணத்தை தான் குளோபல் வார்மிங் ('Global Warming')ன்னு சொல்றது! இதை பத்தி தெக்கிட்டான் ஏற்கனவே கொஞ்சம் சொல்லி இருந்தாரு அவரு பதிவான '*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?' விலே. ஆனா உலகம் சூடாவறதும் குளிர்ந்துவிடுவதும் பல வருஷங்களா தொன்று தொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, இதிலே என்னா இருக்கு, இதெல்லாம் சும்மா வெட்டிக்கதைன்னு சொல்லி ஒதுக்கிற சில கும்பலுங்க உண்டு. அதுக்கு பதிலு சரியா சொல்லுறாரு அந்த 'Al Gore'! சரி இது எப்படி உஷ்ணமாகுதுன்னு தெரியாதவங்களுக்கு, எப்படின்னு கீழே பார்ப்போம்!

உலகப்பந்தை சுற்றி ஒரு வளையம் போல இருப்பது தான் காற்றுவெளி மண்டலம், அதாவது 'atmoshphere'ன்னு ஆங்கிலத்திலே சொல்லுவாங்க. இதிலே கொஞ்சம் போல இருக்கிர கரிஅமில வாயுவாலதான் நமக்கு ராத்திரியிலேயும் கொஞ்சம் வெப்பமா, மிதமா இருக்க வைக்குது. இந்த கரிஅமிலவாயு அதிகமாகிறதும் குறையிறதும் ஒரு நிகழ்ச்சி, ஆனா சராசரி அளவு இப்ப சில வருஷங்களா அதிகமாயிட்டு வருது! அது பூமியின் கடந்த பனிவயதின் போது 180 ppm (இந்த ppm ங்க்றது ஒரு அளவு) அதுவே கொஞ்சம் பனிபாறைகள் உருகி கடல் கலந்து, நம்ம வளர்ந்த உலகமாகுமுன் 280 ppm ஆகி போச்சு. இந்த 280 ppm அளவு நாம் சுகமா இருக்க, அதாவது அதிக வெப்பமும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமா இருக்க செய்ய, ஆனா நம்ம தொழிற்புரட்சி செஞ்சு, அதை 381 ppm க்கு உயர்த்திட்டோம்! அப்படி உயர்த்தினது உயர்ந்துக்கிட்டே தான் இருக்கேவொழிய குறைய மாட்டேங்கிது, அதுனால இந்த ஒரு 20 வருஷமா, இது வரை பார்க்காத வெய்யிலு மண்டையை பொளக்குது இப்ப! அதுவும் போன வருஷம் ஆந்திராவிலே ராமகுண்டத்திலே 50oC மேலே, இதுக்கெல்லாம் காரணம் இந்த கரிஅமில மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் தான்!

இதிலே ரொம்ப கஷ்டமான ஒன்னு என்னான்னா, துருவப்பிரதேஷத்திலே இருக்கிற ஐஸ்ங்க எல்லாம் கரையறது தான். அதாவது ஆர்டிக், அண்டார்டிக்ல இருக்கும் பனிபாறைகள் உருகுவது தான். இதுனால புண்ணியம் என்னான்னா, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பலவற்றை திருப்பி அனுப்பிச்சிடும் இந்த பனிபாறைகள், ஆனா கடல் தண்ணி அப்படியே கிரகிச்சு, உஷ்ணமாக்கிடும் அது தான் காரணம்! இந்த கரி அமில வாய்வுகளால் சூழப்பட்ட அந்த காற்று மண்டலம், அளவா கரிஅமில வாய்வு இருந்தா, நான் மேலே சொன்ன மாதிரி சூரியக்கதிர்களை திருப்பி அனுப்பிச்சிடும், ஜாஸ்தியான, அந்த ஒளிக்கதிர்களால பூமியின் பரப்பிலே அடக்கி உஷ்ணம் தான். இப்ப தெரியுதா எப்படி பூமி உஷ்ணமாகுதுன்னு!

நீங்க எல்லாம் படிச்சிருப்பீங்க, இந்த கரிஅமில வாயுவை நம்மை சுவாசத்திலே வெளிவிடுறோம் அதை தாவரங்கள் சுவாசிக்கதுன்னு, அப்புறம் என்னா அது சுவாசிச்சா எல்லாம் குறஞ்சிடாதான்னு! எல்லாம் சரிதான், வெறும் மனுஷன் விட்டா பரவாயில்லையே, நாம போட்டு எரிச்சு வெளியிடுறோமே, அதான் நமது வாகனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் வெளியேறும் கழிவு வாய்கள் தான் இந்த கரிஅமில வாயு காற்று மண்டலத்திலே கூடக் காரணம்! அது அதிகமாக அதிகமாக நமக்கு கண்டம் தான்! ஏன்னா எல்லாத்தையும் தாவரங்கள் உபயோகப் படுத்துவதில்லை!

இதுவரைக்கும் கண்டுபிடிச்ச கோள்கள் நட்சத்திரங்கள்ல நமக்கு கிடைச்சிருக்கும் வரப்பிரசாதமான இந்த காற்று மண்டலம் எந்த கோள்லயும் இல்லை! அது இருந்தா தான் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ முடியும்! ஆனா நாம அது என்னான்னு தெரியாம பாழ் பண்ணிக்கிட்டிருக்கோம்!

சரி இந்த உஷ்ணம் கோடையிலே தானே, அதுபாட்டுக்கு கழுதை வந்திட்டு போது, நான் ஏசி ரூம்ல உட்கார்ந்து காலம் தள்ளிட்டு போறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, உங்களுக்கு விவரம் பத்தலைன்னு அர்த்தம். இந்த உலக உஷ்ணம் எமகாதது! அது எப்படின்னு கேளுங்க! பூமியை இரண்டா பொளந்தீங்கன்னா, அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்காலதான் நிறைய நிலப்பரப்பு, தெக்காலே எல்லாம் வெறும் தண்ணி தான்! அதுனாலே தெக்கிலேருந்து வடக்கா உஷ்ண காத்து, அதாவது சூரியகதிர்ல கிரகிச்ச சூட்டை கடல் தண்ணி மேலால எடுத்துட்டு போய் வடக்கு துருவத்துப் பக்கம் போய் அங்கே குளிர்ந்து திரும்பி தெக்காலே வந்து சேர்ந்திடும்! இது தான் பருவங்கள் ஏற்படக்காரணம். பூகோளம் படிச்சி, தெரிஞ்சிருந்தீங்கண்ணா இது உங்களுக்குப்புரியம். நம்ம பூமத்திய ரேகையிலேருந்து வடக்காலே கொஞ்சம் தள்ளி இருக்கிறதாலே இந்த பருவ வெப்பம் சரியா வர்றதாலே தான், புயல், மழை எல்லாம். அது உலகத்திலே வெவ்வேறு பாகத்திலே அந்த மாதிரி பருவப்புயல் வரும், அமெரிக்காவிலே கல்ஃப்ன்னு சொல்ற கரீபியன் தீவுகள்ல இந்த புயல் உருவாகும், நம்ம ஊரு மாதிரியே! அதுவே வடக்கால ஆர்டிக் பக்கமோ, இல்ல தெக்கால அண்டார்டிக் பக்கமே குளிர்ந்த பகுதிங்கிறதாலே அங்கே இந்த புயல், மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது( அய், துளிசி இருக்கிற நியுசிலாந்து பக்கம் எல்லாம் புயல் எதுவும் கிடையாது, அவங்களுக்கு ஜாலி தான்!)

நான் சொன்ன இந்த காற்று மண்டல அழுத்தங்கள் அப்புறம் கடல் நீர் அழுத்தங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலே வர்றது தான், எப்பவும் வெதர் சானல் பாத்திட்டு வெள்ளை மேகங்களை மேப்க்கு மேலே ஒட்டி காமிப்பாங்களே, எளவு ஒன்னும் புரியாதில்லை! அது தான் இது, அதுக்கு ஆங்கிலத்திலே பேரு 'Current', கடல்ன்னா, 'sea current', காற்று மண்டலத்துக்கு 'air Current'. இதெல்லாம் உலக உஷ்ணம் ஒரே சீரா இருந்தா சரி, இந்த வெப்பம் அதிகமாயிகிட்டு இருக்கிறதாலே, இந்த அழுத்தங்கள் எல்லாம் தாறுமாறாகி, அதுனால வர்றது தான் அடிக்கடி இந்த புயல் வெள்ளம், மழை எல்லாம். போன வருஷம் அடிச்ச புயல், மழை பாம்பேயிலே 37 இன்ச்சுக்கு ஒரே நாள்ல மழை, அதே மாதிரி கேத்ரீனாங்கிற புயலாலே அமெரிக்காவே ஆட்டம் கண்டுடிச்சு! (இந்த புயலுக்கு எல்லாம் அழகா பொமபள பேரு வைப்பாங்க, ஏன் தெரியுமா அந்த காலத்திலே கப்பல்களை பெண்பால் கொண்டு அழைப்பாங்களாம், அதனால கடல் வர்ற புயலுக்கும் பொம்பளங்க பேரு! அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஆம்பள பேரும் வைக்க ஆரம்பிச்சாட்டாங்க, நம்ம ஊர்லயும் இப்படி வச்சா ஜாலியா இருக்கும் இல்ல, 'கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட செல்வியின் சீற்றம் குறைந்தது'ன்னு ரேடியோல கேட்டா எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க! அப்புறம் பலவீனமான புயல், பலம் பொருந்திய புயலா மாறி, அதாவது அதை வகையா பிரிக்க category வச்சிருக்காங்க, கேட்டகிரி-1 ன்னா பலவீனம், கேட்டகிரி-5ன்னா பலம்!) அது தான் இப்ப எல்லாரும் இந்த குளோபல் வார்மிங் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க! (பிறகு, ஒரு குவிஸ், ஹரிக்கேன், சைக்குளோன், டைஃப்பூன், டோர்னோடோ, இது எல்லாம் என்னான்னு சரியா பதில் பின்னோட்டம் போடறவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கு!)

இந்த தாறுமாறான அழுத்தங்கள்லால் வெறும் புயல்,மழை மட்டுமில்லை, உலகத்தின் சிலபாகங்கள்ல சொல்ல முடியா வறட்சி. ஒரு 200 வருஷத்துக்கு முன்னே இருந்த ஒரு பெரிய ஏரி, இந்த சூடான் நாட்டுக்கும் சேட்ங்கிற நாட்டுக்கும் இடையே உள்ள அந்த ஏரி இப்ப சுத்தமா காஞ்சி வெறும் களிமண்ணு கபாளங்களா இருக்கு! ஏன் நம்ம ஊர்லயே சில ஏரிகள், ஆறுகள், அந்த மாதிரி தான் ஆகி போச்சு. நம்ம சின்ன வயசிலே நீச்சலடிச்ச ஏரி, இப்ப கிரிகெட்டு மைதானமாகிப்போச்சு! இதுக்கெல்லாம் காரணம் நான் முன்ன சொன்ன கரி அமிலவாயு! இந்த மாதிரி வெப்பமான இந்த புயல் வறட்சி மட்டுமில்லை, ஏகப்பட்ட தொடர் நோய்கள், மலேரியா மாதிரி நோய்கள் வந்து எல்லாரும் சாக வேண்டியது தான்! இப்படி அந்த சினிமாவிலே நிறைய இடங்கள் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னேயும் , இப்பவும் உள்ள நிலமையையும் அழகா படம் புடிச்சி காட்றாங்க!

சரி இதுக்கு காரணம் என்னா? எல்லாம் நாம சுகமா வாழ கத்துக் கிட்டதாலே தான்! அதுவாது எல்லாமே மிஷனை நம்பி போயிட்டதாலே! அடிபைப்பு, ஆத்தங்கரையிலே துணி துவைக்கிறது அப்படின்னு அந்தகாலத்திலே நாம் கையிலே செஞ்ச காரியம் எல்லாம் இப்ப மெஷின்னு போய், அதுக்காக தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்றேன்னு, இந்த பூமியிலே கிடைச்ச கச்சா எண்ணெய், எரிவாயுவை கண்டமேனிக்கு எரிச்சு, கழிவு வெளியேற்றம் செஞ்சதாலே வந்த வினை தான். அதுவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவைகளால்! பத்தாததுக்கு இப்ப வளர்ந்து வரும் நம் இந்தியா, சைனா போன்ற நாடுகள் கண்ணா பின்னாவென்று எரிக்கும் சக்திகளால், நிலமை இன்னும் மோசமாகி, அடுத்த 50 வருஷத்திலே மொத்த தடபவெப்ப நிலையிலே 1oCலருந்து 2oC வரை ஏத்திவிட வாய்ப்பு இருக்கு! அப்புறம் தெரியும் நம்ம டப்பா எப்படி டான்ஸ் ஆடும்னு!

சரி இப்படி போய்கிட்டு இருக்கேன்னு சொல்லி உலக நாடுகள், ஐநா சபை சார்பா, எல்லாம் ஒன்னா சேர்ந்து. 1997ல், ஜப்பானில் உள்ள க்யோட்டாங்கிற இடத்திலே ஒன்னாக்கூடி ஒரு ஒப்பந்தம் போட்டாங்க, அதுக்கு பேரு 'Kyoto Accord'ன்னு. அந்த ஒப்பந்தப்படி 165 நாடுகள் கை எழுத்துப்போட்டு, இனி இந்த கரிஅமிலம் மற்றும் கிரீன்ஹவுஸ் கேஸ் எல்லாம் கம்மி பண்ணுவோம், அதாவது பிப்ரவரி 16, 2005லருந்து தொடக்கம். அப்படி கம்மி பண்ணாத நாடுங்க, கம்மி பண்ண நாடுங்கக்கிட்ட கப்பம் கட்டி அதை அவங்க கணக்கிலே ஏத்தி மொத்த கழிவு உலகத்திலே கம்மி ஆகிறமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இதுக்கு பேரு 'கிரிடிட்ஸ்' இதை ஆமோதித்து சட்டம் இயற்றினாங்க எல்லா நாட்டிலேயும், அதாவது 163 நாடுகள்ல, ஆனா அமெரிக்கா, உலக நாட்டாமை, நான் ஒன்னும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க ஏன்னா, வளர்ந்து வரும் இந்தியா, சைனா, எங்களவிட கழிவை அதிகமா வெளியேத்தறப்ப, அவங்களுக்கு நீங்க சலுகை கொடுத்த தாலே இதை நாங்க ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க! என்னா சலுகைன்னா, இந்தியா, சைனாவுக்கு இது 2012க்கு மேலே தான் அமுலுக்கு வரும், ஏன்னா உலகளவில் பெரிய வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிடற கழிவு வெளியாக, இந்நாட்டிற்கு சில காலம் பிடிக்கும்ங்கிறதாலே இந்த சலுகை! அதையே காரணம் சொல்லி அமுல்படுத்தாத இன்னொரு நாடு ஆஸ்திரேலியா! இதிலெ கூத்து என்னான்னா, உலக கரிஅமில,கிரீன்ஹவுஸ் வாய்க்கள் கழிவு செய்வதில் அமெரிக்கா முன்னனி, அதாவது 30 சதவீதம், இந்த கரிமிலவாய்வை வெளிவிடுவது அவங்க தான், நாம வெறும் 0.7 சதவீதம் தான், இந்த கூத்தை எங்க போய் சொல்றது?

இந்த கழிவு வெளிப்படும் கட்டுபாட்டை கொண்டு வந்தால், அமெரிக்காவின் பல தொழில்கள் நசுக்கப்படும்னு பயந்து இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, இந்த குளோபல் வார்மிங் எல்லாம் ஒரு ஹம்பக்னு சொல்லித்திரியற கும்பல் ஒன்னு இங்கே இருக்கு! அதுக்கு பின்னாலே உள்ள விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள்னு ஏகப்பட்ட ஊழல் கொண்ட ஒரு பெரிய மாஃபியா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரு தடவை நம்ம நாரயண் இந்த சிரியானா படத்தை பத்தி விமரிசனம் எழுதறப்ப, இப்ப நம்ம இந்தியாவிலே இந்த அமெரிக்க கார்ப்புரேட் நிறுவனங்கள் பண்ணும் ஊழல், அதாவது நம்ம நாட்டு பாலிசிகளை அவங்களுக்கு சாதகமா கொண்டு வர்றதுக்கு செய்யப்படும் லாபி போன்ற லஞ்சங்கள், நம்ம வழிவழியா கொண்டாடுற ஊழலை விட கொடுமையானது என்ற ஒரு காலமனிஸ்ட் எழுதின லிங்க் கொடுத்திருந்தாரு, வேணும்னா போய் பாருங்க அதை! இதோ சுட்டி! அதே போன்ற அரசியலில் சிலரின் லாபத்திற்காக, உண்மைகளை மாற்றி சொல்வதும், புரம்பாக பேசி திரிவதும் அமெரிக்க அரசியலில் சகஜம்! இதை தான் 'Al Gore' அந்த படத்தில் தோலுறித்து காண்பிக்கிறார்! இதற்காக ஒரு விழிப்புணர்வை கொண்டு வர இந்த பப்ளிக் ப்ராபகண்டாவை கையிலெடுத்து, இந்த சினிமாவை வெளி இட்டிருக்கிறார் (இதற்கு நேர் எதிரா, மைக்கல் கிரட்டன்ங்கிற ஒரு ஆளு இதெல்லாம் ஹம்பக்க்னு சொல்லிகிட்டு ஒரு நாவல், 'State of Fear'ன்னு எழுதி இருக்கிறார், எத்தனை பேரு படிச்சிருக்கீங்களோ எனக்குத் தெரியாது! இவரு சைன்ஸ்பிக்ஷன் படம் எடுக்கிர ஆளு, 'ஜுராஸிக் பார்க்'னு ஒரு படம் வந்திச்சில்ல, அது இவரு எழுதுனது தான்!)

ஆக இது போன்று இந்த உலக உஷ்ணமாவதின் பேரழிவை அழகாக படம் பிடித்து காட்டுகின்றனர். அது சரி, இதுக்கெல்லாம் காரணம் தொழிற்சாலை கூடங்கள், நமக்கு என்ன வந்திருக்கு, நாம என்ன செய்ய முடியும்னு 'ஆம்ஜனதா', ம்.. பொதுமக்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது! முதல்ல அமெரிக்க வாழ்க்கை முறையை விடுத்து நம்ம ஊர் வாழ்க்கை முறை வாழ்ந்தாலே போதும், இதன் அழிவினை தடுத்துவிடலாம்! எப்படின்னா, வீட்ல, நீங்க வெளியே போகும் போது , லோக்கலா, நாடு முழுக்க, ஏன் உலகமுழுக்க, உங்களாலான உதவி பண்ணலாம்! எப்படின்னா,

வீட்ல சரியான பல்பு உபயோகிக்கிறதிலருந்து, உபயோகப்படாத நேரங்கள்ல எல்லா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸையும் பிளக்லருந்து எடுத்து வைக்கிறதிலருந்து, சரியா எல்லா பில்டர்ங்களையும் அது நேரம் வர்றப்ப மாத்திரதிலருந்து, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இதெல்லாம் செய்யுங்கன்னு, அமெரிக்க வாழ் மக்களுக்கு சொல்லி கொடுக்குது இந்த படத்திலே, அதை விவரமா படிச்சி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!

இது அமெரிக்காவுக்கு மட்டுமில்ல, நமக்கும் தான். இன்னும் 25,30 வருஷத்திலே, நம்ம வெளியேற்றும் கழிவு உலகத்தின் கழிவில் 70 சதவீதமாகிடும், ஏன்னா, இப்ப அந்த வேகத்திலே போய்கிட்டிருக்கோம்! அதுக்காக வளர்ச்சியே வேணாமுன்னு இல்லை, ஆனா விவேகமா, கட்டுபடுத்தும் வழிமுறைகளை கையாண்டு வந்தால் கண்டிப்பா கழிவு குறைய வாய்ப்பு உண்டு! அதுவும் இந்த க்யோட்டோ ஒப்பந்தம், நம்மலை 2012 வரைக்கும் ஒன்னும் பண்ணிக்காது! ஆக தொழில் வளர்ச்சி, எங்கெயோ போய்கிட்டிருக்கு! ஆக சக்திகளுக்கான வேறு வழிமுறைகளை கையாண்டால் உண்டு, அதாவது நான் கன்வென்ஷனல் எனர்ஜின்னு சொல்ற மற்ற வழிமுறைகள்! இதெல்லாம் செஞ்சா உண்டு, இல்லை அக்னி நட்சத்திரம் நம்மை பதம் பார்த்துடும்! முக்கியமா அமெரிக்காவை பார்த்து வாழ கத்துக்காம இருந்தா சரி!

இந்த படம் பார்த்துட்டு, சில உண்மைகள் நிறைய விளங்கினதாலே, ஏற்கனவே நியூஸ்ல படிச்சி அப்ப அப்ப தெரிஞ்சிக்கிட்டாலும், சும்மா தாக்கம் வந்து இந்த பதிவு போட்டேன்! நம்மலும் இப்படி படிப்பினை தரக்கூடிய படங்கள் ஏன் எடுக்கிறதில்லை! சும்மா காதல், அம்மா, தங்கச்சி அப்படின்னு திருப்பி திருப்பி உறவுகளையே சொல்லி எடுத்து படம் எடுத்துக்கிட்டிருக்கோம்! நான் ஏற்கனவே சொன்னமாதிரி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அழகா கையாள தெரிஞ்ச நமக்கு, இன்னும் நம்மல நாமே தாண்ட முடியாம உலக ரீச்சுக்கு ஏன் போகல, இதை பத்தி அடுத்த பதிவிலே விவரமா பார்க்கலாம்!

Sunday, May 28, 2006

எண்ணெய் என்பது எது வரை!! --(2)

போன பதிவின் 'எண்ணெய் என்பது எது வரை!!' தொடர்ச்சியா இன்னும் எப்படி எண்ணெய் வளம் இனி வரும் ஆண்டுகளல இருக்கப்போகுதுன்னு பார்ப்பமோ!

ஒன்னு தெரியுமா, சவுதிஅரேபியாவில இருக்கிற கஹவார்('Ghawar')ங்கிற பகுதி எண்ணெய் வயல் (இந்த எண்ணெய் வயல் மட்டும் உற்பத்தி அஞ்சு மில்லியன் பேரல் ஒரு ஆண்டுக்கு!)போன்ற பெரிய எண்ணெய் வள கண்டுபிடிப்பு மாதிரி இதுவரை ஒரு பெரிய ஜாக்பாட்டு இன்னும் அடிக்கலை! ஆனா இந்த எண்ணெய் வயல்லுக்கு அடியிலே இதைவிட பெரிய கறுப்பு தங்க சுரங்கமே இருக்கு! அதை தோண்டி எடுக்கப்படும் தொழில்நுட்ப முறைகளான 'பலதிசையில் குடையும்' ('Multi-lateral drilling') தந்திரம் படி எடுத்தால் எண்ணெய் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு சொல்றாங்க! அப்படி இனி ஒன்னும் எடுக்க முடியாதுன்னு கைவிட்ட வடகடல் பகுதியில் ('North Sea')இந்த முறையில் எடுத்து வந்ததால் இப்பொழுது உற்பத்தியின் உச்சத்துக்கு போய்விட்டது!

உலகத்தில இருக்கிற எல்லா எண்ணெய் கிணறுகளருந்தும் எடுக்கப்படும் எண்ணெய் மூன்றில் ஒரு பாகம் தான் அதனுடய எண்ணெய் கொள்ளளவில் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும், ஏன்னா, இன்னும் இரண்டு பங்கு அந்த கிணறுகளின் 'Reservoir Capacity' அப்படியே இருக்கு இன்னும் எடுக்கப்படாம! புது தொழில்நுட்பமான '4-D Sesmic analysis and electromagnetic direction'ங்கிற முறையில அந்த ஹைட்ரோகார்பன்ங்களை அதிகம் எடுக்கும் திறன் ('recovery rate') உண்டு என்பதால், இதன் மூலமே சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு அதிகரிக்கலாம், இன்னும் அந்த எண்ணெய் எடுக்கப்படாத காஸ்பியன் கடல் மற்றும் வடகடல் பகுதியின் புது எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுப்பதற்கு பதிலாகன்னு சொல்றாங்க!

அப்புறம் இந்த கஹவார்('Ghawar')ங்கிற பகுதி போல ஒரு பெரிய பகுதி எதுவும் கண்டுபிடிக்கப்படாதாலே, எண்ணெய் கண்டுபிடிப்பின் கடைசி எல்லைக்கு போய்விட்டோமுன்னு நீங்க நினைக்கக் கூடாது! இன்னும் அதி நவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டு ஆழ்கடல், கடினமான நிலப்பரப்பு பகுதிகள், ஏன் அதிகம் உலக உஷ்ணத்தாலே உருகும் பனிபாறைகள் கொண்ட ஆர்டிக் பகுதியானது அந்த மாதிரி எண்ணெய் களஞ்சியத்தை கொண்டது, ஆக அதனால் உற்பத்தி ஆகக்கூடிய எண்ணெய் வளம் கணக்கிடலாங்குதுங்கிறாங்க! மேற்கொண்டு சைபீரியா, சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாட்டின் பல பகுதிகள் இன்னும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தோண்டி எடுக்காம இன்னும் எண்ணெய் உறைஞ்சுக்கிடக்குன்னு கணக்கு சொல்றாங்க!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த பெட்ரோல் நம்பிக்கை அற்றிருப்போர் ('Petro-Pessimists') என்னா சொல்றங்கன்னா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் கணிச்ச தங்கள் எண்ணெய் வளம் பற்றி சொல்றதெல்லாம் ஜாஸ்தி, உதாரணத்துக்கு குவைத் மதிப்பிட்டு சொன்ன அளவில,100 பில்லியன் பேரல்கள்ல ஒரு பாதி தான் இருக்கு , அதே மாதிரி சவுதி சொல்றதுலயும் பாதி தான் இப்ப ரிசர்வ்ல இருக்கு, அதாவது 260 பில்லியன் பேரல்கள்ல பாதி தான் இருக்குன்னு ஹேஸ்யம் சொல்றாங்க! இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல்லை! ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, இன்னெக்கு உற்பத்தி பீக்ல போனாலும், அந்த எண்ணெயின் அளவு உடனே குறஞ்சிடாது, ஒரு எண்ணெய் வயல் வெளின்னு எடுத்துக்கிட்டா, அதுவும் கஹவார்('Ghawar') மாதிரி பெரிய தங்க சுரங்கத்தை எடுத்துக்கிட்டா, அதனுடய வளம் தீர நிறைய நாட்கள் பிடிக்கும், ஏன்னா, எல்லா கிணறுகளும் ஒரே நேரத்தில் தோண்டியவை இல்லை அப்படின்னும் சொல்றாங்க! அந்த வளம் குறையும் நேரத்தில புது புது எண்ணெய் வயல்வெளிகளை விருத்தி செய்து மேற்கொண்டு எண்ணெய் தடை இல்லாம் வர ஏதுவாகும்னும் சொல்றாங்க! அதிலயும் சவுதி பெட்ரோலியத்துறை மந்திரி, அலி நயிமி, கொஞ்சம் அதிகப்படியா போயி, சவுதி ஈராக் பார்டர்ல 200 பில்லியன்னுக்கு மேலே இருக்கிற எண்ணெய் வளமிக்க பகுதிகளை தோண்டவே இன்னும் ஆரம்பிக்கிலைங்கிறாரு!

ஒரு வகையில குவைத்ல கிடைக்கும் எண்ணெய் வள கருத்து கொஞசம் அதிகப்படியாவே சொன்னாலும், சவுதியில இருக்கிற எண்ணெய் கிணறுகள் அளவு மதிப்பிட்டு வச்சிருக்கும் வகையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்த கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்க முடியும்னு சொல்றாங்க! இருந்தாலும் இந்த கருத்தில் நம்பிக்கையற்றோர், சவுதியில்லயும் அந்த கதை தான் சொல்லி இதை பத்தி நிறைய புத்தகங்கள், அதிலயும் ஜெர்மி லேகர்ஸ்ங்கிறவரு எழுதிய 'The Empty Tank'ங்கிற புக்கல இதப்பத்தி விவரமா எழுதி இருக்கிறார்! இந்த பாதிப்பினால் உலக பொருளாதாரமே சீர்கெடும் நிலை ஏற்படக் காரணமாகும்னு சொல்றாங்க!

இதினால பொருளாதார நிபுணர்கள் என்னா சொல்றாங்கன்னா, இந்த மாதிரி எண்ணெய் நெருக்கடி 1970ல்கள் வந்தப்ப அமெரிக்கா மற்ற நாடுகளின் அரசாங்கம் செஞ்ச மாதிரி, எண்ணெய் விலை நிர்ணயக் கட்டுப்பாடு, சலுகைகள் பல அளித்ததானல வந்த பொருளாதார சீர்குலைவு, இப்பவும் வரக்கூடும், அரசாங்கங்க அந்த மாதிரி கொள்கையை கடைபிடிச்சா, அதனால எண்ணெய் விலையை சந்தையின் கட்டுப்பாட்டுக்குள்ளவே விட்டுடனும், அதுவே அதன் உச்ச நீச்ச நிலையை சரி செஞ்சுக்கும், மேற்கொண்டு புது புது தொழில்நுட்பங்கள் வந்தும் எண்ணெய் செலவழிப்பதில் சிக்கணத்தை கடைப்பிடித்தும், அதன் தாக்கங்களை சரி செய்து கொள்ளக்கூடும்னு சொல்றாங்க! மேற்கொண்டு, விலை 60 டாலர் ஒரு பேரலுக்கு மேலே போனாலும் தொடர்ந்து 10 வருஷத்துக்கு சந்தையிலே எண்ணெய் கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்கும். நாம 1970ல பண்ண அந்த தப்பை இப்ப பண்ணாம இருந்தாலே போதும்னு சொல்றாங்க!

ஆக இந்த உச்ச நிலையை சமாளிக்க ஒரே வழி மாற்று சக்திகள் தான், அதற்கு தகுந்தாற் போல அனத்து வழிகளிலும் மாற்று சக்தியை உருவாக்க உலகநாடுகள் முனைப்பா இருக்கு! நான் ஏற்கனவே சொன்னமாதிரி பெரிய எண்ணெய் ஜெயிண்ட் கம்பெனிகள் 'expolration'ஐ விட்டுட்டு Manaufaturing முறையில தயாரிக்க வழிமுறைகளை ஆராஞ்சு அதில் வெற்றியும் அடைஞ்சிக்கிட்டிருக்காங்க! இப்ப R-10ங்கிற ஆடிக்காரு ஒரு வகையான டீசல் எரி பொருளை போட்டு ஓட்டி அதிக சக்தியுடன் பந்தியத்தில் வேகமாக வந்து அனைத்து ரேஸ் கண்டிஷனங்களையும் லாவகமாக தாண்டி 'High Endurance Powered Car'ன்னு வந்தது. அந்த காரு ஓட்டின டீசல் இயற்கை எரிவவயுவிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்னு அதை 'Gas to Liquid' (GTL)ன்னு சொல்வாங்க. இந்த் தொழில்நுட்பம் இப்ப 'Shell'ங்கிற எண்ணெய் கம்பெனிக்கிட்ட இருக்கு, அதனாலே இந்த 'GTL' சுத்திகரிப்பு ஆலை கத்தார் என்கிற நாட்டில் பெரிய அளவில் வருகிறது. இந்த இயற்கை எரி வாயு ('Natural gas') அதிகம் கிடைக்கும் நாடுகள் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை விட மத்த நாடுகளே! ஏன் நம்ம இந்தியாவிலே கோதாவரி நதிக்கரையில் ரிலெயன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய இயற்கை வாயு கண்டுபிடிப்பை ஒரு இரண்டு வருஷம் முன்னதான் அறிவிச்சாங்க. ஆக இந்த 'GTL' நுட்பம் நம்க்கு நிறைய பயன் தரும் தங்கு தடை இல்லாம டீசல் கிடைக்க!

ஆக, நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் டீசல் நுட்பம், அமெரிக்காவில் இருக்கும் படிகப்பாறைகள், கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய், மேலே சொன்ன இயற்கை எரிவாய் எண்ணெய் (GTL), நிலத்தடி நிலக்கரியில் உருவான எரிவாயுவிலிருந்து எண்ணெய், அப்படின்னு இது போன்ற தொழில்நுட்பங்களின் வழியாய் கிடைக்கும் எண்ணெய் சக்திகளே, முறையாக வரும் எண்ணெய் சக்திகளை (Conventional energy) விட அதிகமாக இனி வரக்காலங்களில் நாம் பார்க்கலாம்!

ஆக மாற்று சக்தி என்பது நாளையே கிடைத்துவிடக் கூடிய ஒன்னு இல்லே! அதில் செய்யப்பட வேண்டிய முதலீடுகளின் அளவு அதிகம்!ஆனல் அதிகரித்து வரும் எண்ணெய் விலையினைக்கொண்டு இந்த வேற்று தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வருகினறனர் என்பதே உண்மை! OPEC என்கிற இந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஏதேனும் சூழ்ச்சி செய்து (1985,1998களில் செய்ததை போல்) எண்ணெய் விலையை குறைக்காத வரை, இந்த புது தொழில் நுட்ப மூலம் மாற்று சக்தி செய்முறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன!

இது பெரிய எண்ணெய் கம்பெனிகள் தங்களின் முக்கிய தொழிலான எண்ணெய் வியாபரத்திலிருந்து விலகி செல்வது போல் இருந்தாலும், அது வல்ல உண்மைக் காரணம். ஏனென்றால் ம்த்திய கிழக்கு ஆசிய நாடுகளில் புதியதாக கிடைக்க இருக்கும் எண்ணெய் வளங்களில் முதலீடு செய்ய போதுமான் அரசியல் மற்று அனுகூலமான நிலை இல்லை என்பதால், கையில் காசு வைத்துக்கொண்டிருக்கும் அனைத்து கம்பெனிகளும் மாற்று சக்திகளில் செலவழித்து, மாற்று சக்திகளை நிலைநாட்டிவிட்டல், முறையாகக்கிடைக்கும் இந்த Conventional energy என்கிற சக்தி கீழ்நிலைக்கு தள்ளப்படும்! அதன் விலைவாக இன்று சொர்க்கப்புரியாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் நிலமையை யோசித்து பாருங்கள். ஆக எல்லாம் தேவையினை பொருத்து அனைத்து கண்டுபிடிப்புகளும் வர தொடங்கிவிடும். தொழில்நுட்பங்களின் பலமே தனி!
அதற்கு சாட்சியாக அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் பேக்கர்ஸ் வயலை சென்று பார்த்தால் விளங்கும். இது கடந்த 100 வருடங்களாக ஹெவி ஆயில் என்கிற கனகச்சா எண்ணெய்யை 2 பில்லியனுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது, இனியும் அதே 2 பில்லியன் அளவுக்கு வளம் இருக்கிறது! (இந்த கனகச்சா எண்ணெய் என்பதை சுத்த்கரிப்பு செய்யும் விலை அதிகம், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மிகவும் மிருது வானது, பூமியிலிருந்து தோண்டிய எண்ணெய்யை லாரில் போட்டு ஓட்டலாம்,அதனால் சுத்திகரிப்பு விலை கம்மி, ஆனால் கனகச்சா எண்ணெய்யை , அதுபோல் ஓட்ட முடியாது)

இது போன்ற கனகச்சா எண்ணெய் வளம் நிறைய நாடுகளில் உள்ளது! சைனாவிடம் இதன் வளம் அதிகம் உள்ளது. அதே போல், கனடா, அமெரிக்கா, வெனின்ஸ்வேலா போன்ற நாடுகளில் இந்த கனகச்சா எண்ணெய்யின் அளவு சவுதியில் இருக்கும் எண்ணெய் வள அளவைக்காட்டிலும் பன்மடங்கு அதிகம். என்ன, தோண்டி எடுத்து சுத்திகரிப்பின் விலை தான் அதிகம். எல்லாமே பொருளாதார கணக்கின் கீழ் வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் பொருளாதார ரீதியாக மலிவு என்ற குணத்தை கொண்டிருந்ததால், இந்த கனகச்சா எண்ணெய் எடுப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டவில்லல. ஆனால் இன்று வளர்ந்து வரும் விலையின் கணக்கை பார்க்கும் போதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அந்த கஷ்டமான கச்சா எண்ணெய் எடுப்பதிலும் சுத்திகரிப்பதிலும் விலையை வெகுவே குறைப்பதால், இது இப்பொழுது பொருளாதார ரீதியில் (Ecnomic viability)முற்றும் ஏற்று கொள்ளப்பட்டு மூலதனம் இட தயாராக உள்ளனர்!

ஆக இந்த பலகாரணங்களால் இந்த பீக்கிங் என்கிற தன்மை வர பல ஆண்டுகள் பிடிக்கும்! உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இது உலக அரசியலாக்கப்பட்ட ஒன்று! வளர்ந்து வரும் தீவிரவாதம், இது போன்ற லாபம் ஈட்டிக்கொண்டிருந்த இந்த எண்ணெய் வளங்களின் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் போன்ற சூழ்நிலையே இந்த உலக எண்ணெய் உச்சம் அடைந்து விட்டது போல் மாயை உருவாக்கி வைத்து உள்ளன! அதுவும் நன்மைக்கே! இந்த மாற்று சக்தி தொழில்நுட்ப வளர்ச்சி, பூமிக்கடியில் இருக்கும் கறுப்பு தங்கத்தை அளவாக சமன் செய்யும் நிலையாக உருவெடுப்பதால், இந்த தங்கம் பல ஆண்டுகள் தொடர்ந்து கிடைத்து பெட்ரோல் வாகனங்கள் என அழைக்கப்படும் உள் எரி வாகனங்களின் ('Internal Combustion Vehiles') ஆளுமை உலகில் தொடர்ந்து இருக்கும்!

சேரன் சொன்ன மாதிரி நம்ம பேரன் பேத்திகள் குதிரை வண்டிகளை பார்ப்பார்களா என்பது சந்தேகமே, அதற்குப்பிறகு வருபவர்களுக்கு எப்படி என்று சொல்வதிற்கில்லை!

Saturday, May 27, 2006

எண்ணெய் என்பது எது வரை!!

இந்த ஆட்டோகிராப் படத்திலே, சேரன் தன் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணை தேடி, அவ வீட்டுக்கு தன் கல்யாண பத்திரிக்கை வக்க போவாரு, குதிரை வண்டியில், அப்ப அவரு சொல்லுவாரு, 'இன்னும் இது எத்தனைக் காலத்துக்கு இந்த குதிரை வண்டியெல்லாம் இருக்கப்போகுது! இனி வர பிள்ளைங்கெல்லாம் இதை பார்க்கப்போறங்களான்னு' சொல்லி வசனம் பேசற காட்சியை பார்த்துட்டு ஒன்னு சட்டுன்னு சொல்ல வருது. இனி குதிரை வண்டி தான்னு. மனுசுன் எல்லா எரி சக்தி, எண்ணெய், எரிவாயு இதெல்லாம் இன்னும் எத்தனைக் காலத்துக்கு உபயோகிப்பான், எப்ப இதெல்லாம் தீர்ந்து போய், திரும்ப மனுஷன் குதிரை வண்டிக்கு வருவான்ங்கிறதை பத்தி தான் இப்ப பேச்சு! இல்ல வேறே எதாவது சக்தி கொண்ட எரி பொருளை கண்டுபிடிச்சு பொழப்பை நடத்துவானான்னா, எப்படி இருக்க போவது நிலமைன்னு கொஞ்சம் விவரமா பார்ப்போமா?

இந்தக் குதிரைக்கதையை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமுன்னா, 1894, முத முதல்ல பாரீஸ்ல ஒரு ரேஸ் போட்டி நடந்தது, குதிரை இல்லாத எந்த வண்டி நீண்ட நேரம் ஓடக் கூடியதுன்னு! அதுவும் ஒரு 78 மைல் தூரத்துக்கு! அப்ப எல்லாரும் எல்லாவிதமான ஓட்டு சக்திகளை உபயோகிச்சு ஓட்டினாங்க, மின்சாரத்துல இயங்குறதுலருந்து, நீராவியிலயிங்கிறதிலருந்து, அழுத்தமான காத்துலருந்து எல்லா சக்திகலையும் உபயோகிச்சு ஓடின வண்டிகள் அந்த போட்டியில கலந்துக்கிட்டன. ஆனா கடைசியில ஜெயிச்சது என்னமோ, ஒரு புது வாகனஎரிசக்தி எண்ணெய், அது விளக்கெரிக்கறதுக்கு அந்தக்காலத்தில உபயோகத்திலருந்தது, அதாவது சுராமீண் எண்ணெய்க்கு பதிலா, அப்ப கண்டுபிடிச்ச கச்சா எண்ணெய்லிருந்து வந்த பெட்ரோலை, விளக்கெரிக்க உபயோகபடுத்தின எண்ணெய்யை, போட்டு ஓட்டினக் காரு தான் முதல்ல வந்தது!

அப்படி ஓட்டி ஜெயிச்சாலும், பெட்ரோல்லோட எதிர்காலம் அப்ப ரொம்ப ஒன்னும் பெரிசா இருந்திடல! ஏன்னா உள் எரி வாகனங்கள்('Internal Combustion Vehicle') பெரிசா சத்தம் போட்டுக்கிட்டும், புகையை கிளப்பிக்கிட்டும், பயங்கரமா பார்க்க இருந்ததாலே அதில ஆர்வம் இல்ல மக்களுக்கு அப்ப. அதனால 1900 வரை, இந்த வாகங்கள் மின்சாரத்தில் ஓடக்கூடியது கொஞ்சம், நீராவியில் ஓடக்கூடியது கொஞ்சம், பெட்ரோல்ல ஓடறது கொஞ்சம்னு இருந்துச்சு! அப்பறம் ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்த்தீங்கன்னா, பெட்ரோல் வாகனங்கல் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிவிடுட்டு முன்னாடி அது தான் பீறு நடைபோட்டு வலம் வந்தது. ஏன்னா, அந்த உள் எரி வாகனங்கள் மென்மேலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு நல்ல ஓட்டும் சக்தியின் நிரூபிக்கப்பட்டது, அது மட்டுமில்ல அப்ப எல்லாரும் நினச்சது, இந்த கச்சா எண்ணெய் கையிருப்பு (reserve) ஏகப்பட்டது நம்ம கையிலே இருக்குன்னு! ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா, என்ன? வாங்க பார்க்கலாம்!

அப்படி இந்த எண்ணெய்யை வச்சு இந்த நூற்றாண்டிலே வளர்ந்த பொருளாதாரத்துக்கு இப்ப வந்திருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்! இந்த கறுப்பு தங்கம் காய்ஞ்சுப் போச்சுன்னு! ரொம்ப வருஷமா, சில ஜியாலஜிஸ்ட்ங்க சொல்லிக்கிட்டிருந்தாங்க, உலகம் எண்ணெய் சக்தியிலே வளர ஆரம்பிச்சு இப்ப உச்சத்திலே போயிக்கிட்டிருக்கு, அது தீர்ந்து, அதற்கு மாற்று சக்தின்னு ஒன்னு வராத வரைக்கும், இப்ப வளர்ந்து நிக்கிற பொருளாதாரம் அதல பாதளத்துக்கு போயிடும், ஏன்னா உலகம் இப்ப எண்ணெய்யை பூமியிலருந்து உறிஞ்சு எடுக்கிறதுல மிக உச்சத்துக்கு போயிடுச்சுன்னு! போன சில மாதங்கள்ல எங்க பார்த்தீங்கனாலும், டிவியில, மேகஸின்ல, மீடியால 'காலி டப்பா பெருங்காய டப்பா ' ('The Empty Tank'), 'கேஸ் கதை முடிஞ்சு போச்சா?' ('Out of gas?'), 'சரிந்து வீழ்ந்து விழும் பொருளாதாரம்' ('The Coming Economic Collapse'), 'எப்படி வாழ்வோம் நாம் இனி, எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலர் ஆனால்' ('How Can you Thrive when Oil Costs $200 a Barrel') அப்படின்னு கொட்டை எழுத்திலே வந்துக்கிட்டுருக்கு! ( இந்த வாசகம் எல்லாம் இந்த ஊருபக்கம் வர வாசகங்கள், நான் கொஞ்சம் தமிழ்ல வந்தா எப்படி இருக்கும்னு பார்த்து போட்டது, எங்க, நம்மூரு மக்களுக்கு இதெல்லாமா இனிக்கும்? 'ஜெயலட்சுமி போலீஸாரின் மன்மத லீலை', 'காஞ்சி மாமா கன்னி கழிந்தார்', ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புவனேஸ்வரியின் லீலைகள் அம்பலம்', அப்படின்னு வாசகம் வந்தா தானே நமக்கு கிக்கு, 'சமயல் எரி வாயு கேஸ் சிலிண்டெர் ரூபாய் 300க்கு மேல் போனால், இனி காப்பி குடிப்பது எப்படின்னு' யாரவது ஆராஞ்சு கட்டுரை எழுதி சமீபத்திலே பார்த்ததா இருந்தா சொல்லுங்க கொஞ்சம்!)

இப்படி மீடியான்னு இல்லே, இந்த எண்ணெய் கம்பெனிக்காரங்களும் இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு இந்த 'எண்ணெய் என்பது எது வரை'ங்கிற பட்டிமன்றத்துக்கு வந்துட்டாங்க!அதுவும் செவ்ரான் ('Chevron') மாதிரி கம்பெனிங்க , 'நமக்கு முதல் ஒரு ட்ரில்லியன் பேரல் எண்ணெய்யை குடிக்கிறதுக்கு 125 வருஷம் புடிச்சுச்சு,ஆனா, அடுத்த ஒரு ட்ரில்லியன் பேரலை குடிக்க 30 வருஷத்துக்கு மேலே ஆகாது'ன்னு விளம்பரம் கொடுக்கிறாங்க. இந்த பட்டி மன்றம் 'இனி எப்படி நம்மலால எண்ணெய் வாங்க செலவிட முடியுமான்னு' கேள்வி கேட்டவங்க 'எண்ணெய் இருக்கா இனி வாங்கறதுக்கு' ன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு போயிடுச்சு. ஆனா உண்மையிலே இந்த நிலமை வந்திடுச்சா, உலகத்திலே இருக்கிற எல்லா எண்ணெய் வளமும் குன்றி போயிடுச்சா, இதான் இப்பக் கேள்வி! என்னான்னு பார்ப்போம் வாங்க!

உண்மையிலேயே உலகத்திலே எண்ணெய் பஞ்சம் வந்துடுமா? இன்னெக்கு இருக்கிற எண்ணெய் உற்பத்தியின் உச்சம் நிஜமாலுமே இனி வர பொருளாதாரத்தை பாதிக்குமா? அப்படின்னு நடக்கிற சர்ச்சையிலே, உற்பத்தியின் உச்சங்கிறதைவிட, இதே போல மலிவா தொடர்ந்து எப்பவும் நமக்கு பூமிக்கு அடியிலேருந்து எண்ணெய் தடையில்லாம கிடைச்சு, இப்போ ஓடிக்கிட்டிருக்கிற கார், பஸ், விமானங்க தொடர்ந்து ஓடுமாங்கிறதுதான் கேள்வி! இதை மனசுல வச்சி, இந்த எண்ணெய் கம்பெனி எல்லாம் தன்னுடய ரிஸ்க் எடுத்து எண்ணெய் தோண்டும் வேலையை விட்டு வேறே தொழில்நுட்ப வளர்ச்சியிலே காசு கொட்ட முன் வந்திருக்காங்க தான் இப்ப நாம பார்க்கிறது! அதாவது தோண்டி எண்ணெய் தேடறதை விட்டுட்டு, இந்த எண்ணெய் போன்ற மற்ற எரி சக்தியை தொழில் உற்பத்தி மாதிரி பண்ணப் போறோம்னு, செல் ('Shell')ங்கிற கம்பெனி சொல்லிக்கிட்டு திரியுது! அதாவது நான் ஏற்கனவே எழுதின பதிவான 'தானிய பெட்ரோல்-விவசாயம் தரும் மாற்று சக்தி!' மாதிரி கலந்தடிச்சு பெட்ரோல் டீசல் எல்லாம் தயாரிச்சு, இப்ப கிடைக்கிற எண்ணெய் வளத்தை நீண்ட நாளைக்கு வச்சு காப்புத்துவோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க! இந்த ஒரு எரிசக்தி மாற்று வழியானது புது தொழிற்கூடங்கள் வர வழி வகுக்குது.

அமெரிக்காவில இருக்கிற ஜென்ரல் எலெக்ட்ரிக் மாதிரி கம்பெனிங்க ஃபூயல் செல்('Fuel cell')ங்கிற தொழில்நுட்பம் பண்ணக்கூடியவங்க(இந்த ஃபூயல் செல் பத்தி அப்புறம் ஒரு முறை எழுதுறேன்!), இங்கிலாந்தில் இருக்கும் வர்ஜின் ஃபூயல்ஸ்(இந்த 'Virgin' பத்தி பல பேருக்கு தெரிஞ்சிருக்கும், அதாவது 'Virgin Atlantic' விமானக்கம்பெனி இருக்குல்ல, அதான் முதம்தல்ல நம்ம பெங்களூருக்கு விமானம் லண்டன்லிருந்து விட்டப்ப தாடி வச்சுக்கிட்டு, 'Richard Branson'ன்னு ஒருத்தரு நிறைய குட்டிங்களோட ராஜா மாதிரி வந்து இறங்கினாருல்ல! அவரு கம்பெனி ,நான் எழுதின தானிய பெட்ரோல் கட்டுரையில வந்த Cellulosic-ethanolங்கிற எரி பொருளை தயாரிக்க நிறைய செலவளிச்சு பெரிய சுத்திகரிப்பு ஆலை கட்டிக்கிட்டிருக்கு இங்கிலாந்திலே!), அப்பறம் அப்பிரிக்காவில இருக்கிற சசோல்ங்கிற கம்பெனி (இந்த கேஸ்லருந்து பெட்ரோல் பண்றவங்க, 'GTL'ன்னு ஒன்னு தயாரிக்கிறவங்க, இந்த 'GTL'பத்தி கீழே பார்ப்போம்) எல்லாரும் மாற்று கம்பெனிகளாக எண்ணெய் கம்பெனிக்கு நிகரா போட்டி போட்டு இந்த தொழில்நுட்பங்கல் எல்லாத்திலேயும் முதலீடு செய்றாங்க! ஏன் நம்ம ரிலெயன்ஸ் கூட ஆமணாக்கலருந்து டீசல் எடுக்க முதலீடு செய்றதா நம்ம பெத்த ராயுடு சொல்லல!

இதெல்லாம் வச்சு பார்க்கறப்ப, உலகத்தின் எண்ணெய் வளம் குன்றியமாதிரி இருக்கில்ல!. ஆனா பேர்போன ஜியாலஜிஸ்ட்ங்க என்ன சொல்றாங்கன்னா, 1990ல் இந்த எண்ணெய் உற்பத்தி பீக்ல போயிருக்கணும், ஆனா போகல்ல, இந்த 2005ல உச்சம் வரும்னு எதிர் பார்த்தது, அப்படியும் வரலை! ஆனா இப்ப இருக்கற உற்பத்தியிலே (உலக உற்பத்தி இன்னெக்கு 80 மில்லியன் பேரல்லுக்கு மேலே ஒரு நாளைக்கு)இன்னும் ஐந்தாண்டுகள்ல, இது ஒரு தின உற்பத்தியில 15 மில்லியன் பேரல் அதிரிக்க போகுதுன்னு சொல்றாங்க! இப்ப நடந்திக்கிட்டிருக்கிற அத்தனை ப்ராஜக்ட்டையும் கணக்கில எடுத்தா, இந்த அளவுக்கு உற்பத்தி அதிகமாகுமுன்னு சொல்றாங்க! அப்புறம் உங்களுக்கு என்ன சிரமம்னு கேட்கிறாங்க!. ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, முன்ன மாதிரி நம்ம நிறைய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கல! அதாவது ஒரு பேரல் எண்ணெய் வளம் கண்டுபிடிச்சா, நம்ம இரண்டு இல்ல மூணு பேரல் எண்ணெய் குடிச்சுக்கிட்டு இருக்கோம்! இப்ப நம்ம கொண்டாடற இந்த அதிகப்படியான் உற்பத்தி திறன் 30 வருஷம் முன்னே கண்டுபிடிச்ச லாட்டரி தான், இப்ப போய்கிட்டிருக்கு. மேற் கொண்டு அந்த எண்ணெய் கிணறு வளர்ச்சி ஆய்வு திட்டங்களுக்காக செய்யும் செலவு ரொம்ப அதிகமாகி கிட்டிருக்கறதாலே மேற் கொண்டு செலவு செய்ய எண்ணெய் கம்பெனிங்க முன் வரல்லைன்னு சொல்றாங்க!

ஆனா வளர்ந்த பெரிய எண்ணெய் கம்பெனிங்க மூச்சு இப்ப திணறது அவங்க எண்ணெய் கிணறுகளின் உறபத்தி திறனை அதிகரிக்க, மேற்கொண்டு ரிசர்வ்களை அதிகரிக்க! அதற்காக உலக எண்ணெய் கிணறுகள் எல்லாம் காய்ஞ்சு போச்சான்னா, அதான் இல்லை! உலகத்தின் பெரும் பகுதி, ரஷ்யாவில உள்ள சைபீரியா, OPEC என்கிற எண்ணெய் உற்பத்தி பண்ணி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சில பகுதிகள், வடகடல் பகுதி ('North Sea') மற்றும் அலாஸ்காவில் உள்ள பகுதிகள் இங்கே எல்லாம் நாம் சரியாக போய் ஆராய்ந்து தோண்டமல் இருக்கக்கூடிய வளங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு! அதுவும் இப்ப அலாஸ்காவிலும் வடகடல் பகுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் 2015 -2020ல் உற்பத்தியில் பீக்கில் வரும் என எதிர்பார்க்கப்டுகிறது! அதுவும் அமெரிக்காவின் மண் வள ஆராய்ச்சி நிறுவனம் ('United States Geoligcal Survey') அறிவித்த அறிக்கையின் படி உலக எண்ணெய் வளத்தில் மொத்தம் 3 ட்ரில்லியன் பேரல் நாம் மூன்றில் ஒரு பகுதி தான் உபயோகித்திருக்கிறோம், இன்னும் 2 மடங்கு உள்ள வளத்தில் இந்த உச்ச நிலையை அடைய இன்னும் 30 ஆண்டுகள் பிடிக்கும் என்கின்றனர். அதுவும் வழக்கமாக எடுக்கும் எண்ணெய் கிணறுகள் அன்றி, கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய் வளம், மற்றும் 'Oil shale' என்றழக்கப்படும் எண்ணெய் படிக பாறைகளிலிருந்தும் (இது அமெரிக்காவில் அதிகம் உள்ளது, 1.2 ட்ரில்லியன் பேரல் எண்ணெய் வள உற்பத்தி செய்ய முடியும் இப்படிகபாறைகளிலிருந்து!, இதை எல்லாம் விடுட்டு எண்ணெய்காக ஈராக்ல போய் சண்டை போடறாங்க பாருங்க, ஏன்னா முதல்ல உலகத்தில மத்த இடங்கள்ல சீப்பா எண்ணெய் எடுத்துட்டு அப்புறம் இதெல்லாம் எக்ஸ்பிளாய்ட் செய்வாங்க, எப்படின்னு பார்த்துக்கங்க நம் ஜனங்களே!) எடுக்கப்படும் எண்ணெய் வளத்தையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணெய் உபயோகத்தின் உச்ச நிலை என்பதடைய இன்னும் ஒரு 60 இல்லை 70 ஆண்டுகள் பிடிக்கலாம் என்ற கணக்கை கூறுகிறது! ( இது அடுத்த பதிவில் தொடரும்!)

இரண்டாம் பதிவு : எண்ணெய் என்பது எது வரை!! --(2)

Wednesday, May 24, 2006

சிலது விட பலது பெரிதா? - விக்கி தத்துவம்!!

முன்ன அந்த காலத்திலே உபயோகிப்பமே தடி தடியா பிரிட்டானிக்கா என்சைக்ளேப்பீடியா, புத்தகம், அது ஞாபகம் இருக்கா! எதை ஒன்னும் விவரம் தெரிஞ்சுக்கணும்னா உடனே ஓடுவோம் லைப்ரரிக்கு, அந்த தடி புத்தகங்களின் வால்ம்யூங்களை, ஆங்கில எழுத்து வாரியா அடுக்கி வச்சிருப்பாங்க, எடுத்து படிச்சிட்டு அர்த்தமோ, இல்லை விஷயமோ தெரிஞ்சுக்குவோமே, ஞாபகம் இருக்கா. காலேஜ் படிக்கிறப்ப, நிறைய ரெஃபரன்ஸ்க்கு இது போல லைப்ரரிக்கு போய் நான் பார்த்ததுண்டு! அப்புறம், இந்த தனிகம்ப்யூட்டர்னு வந்தப்பறம், வீட்டிலயும் அதிகமா புளங்கணப்பையும், இந்த CD யில என்சைக்களோப்பீடியா எடுத்து வச்சுக்கிட்டு விவரம் தெரிஞ்சுக்க முயற்சிப்பண்ணுவோம், அதாவது ஞாபகம் இருக்கா! பிறகு இணையம் வந்தப்பறம், அந்த சைக்ளோப்பீடியான்னா, இப்ப அந்த விக்கிப்பீடியா தான்!

அதாவது விஷயம் தெரிஞ்சவங்களா சேர்ந்து தொகுத்து உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களையும் தொகுத்து வச்சிருக்காங்க! எப்பவாது விஷயம் வேணும்னா போய் பார்த்திருக்கீங்களா! அருமையான அறிவு தங்க சுரங்கம் இந்த கலைக்களஞ்சியம்! இதுல எல்லாம் கிடைக்கும், விஞ்ஞான விஷயமும், பொது அறிவு, அப்படின்னு எதுவேணும்னாலும் கிடைக்கும். ஏன் நம்ம ஊரு கமல்ஹாசன், பாரதிராஜாவிலருந்து, ஜோதிகா வரைக்கும் யாரு, என்னா, நடிச்ச, டைரக்ட் பண்ண முக்கியமான படம் என்னான்னு அத்தனையும் தெளிவா கிடைக்கக்கூடிய அறிவுக் களஞ்சியம்! இது ஆங்கிலம்னு இல்லாம, முக்கியமான உலக மொழிகள் அத்தனையலயும் தொகுத்து வச்சிருக்காங்க, வேணும்னா நம்ம கே. பாலசந்தரை பத்தி தமிழ்ல எழுதி வச்சிருக்கறதை பார்த்துட்டு வாங்க! இது எப்படி வேலை செய்து, யாரு தொகுத்து போடற, இதுக்கு பின்னாடி உள்ள தத்துவம் என்னான்னு பார்ப்போமா?

இந்த விக்கிப்பீடியாங்கிறது உலகெங்கிலும் இருக்கும் இணையதாரர்களா சேர்ந்து, அவர்களின் கூட்டுமுயற்சியால அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம். இதில் இருக்கிற மொத்தக் கட்டுரைகள் ஒரு 40 லட்சத்துக்கிட்ட! யார்வேணும்னாலும், அந்த சொல்லப்படும் விஷயம் தெரிஞ்சா அதை பத்தி எழுதியோ, இல்லை திருத்தங்களையோ செய்யலாம். இதை ஆரம்பிச்சு வச்சவரு ஜிம்மி வோல்ஸ்ங்கிற ஒருத்தர், ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2001!. இதுக்கு எப்படி விக்கிப்பீடியான்னு பேரு வந்துச்சுனா, ஹாவயன் மொழியிலே, விக்கின்னா, 'சீக்கிரம்னும்', 'எனக்கு தெரிஞ்சது என்னான்னா' அப்படின்னு அர்த்தம். அது மாதிரி யாரும் எந்த ஒரு சப்ஜெக்ட்டையும், 'எனக்கு தெரிந்தது என்னான்னு' எழுதி போட்டுட்டா, அது உலகத்தில உள்ள மக்கள் எல்லாரையும் போய் சேர்ந்திடும். தேவை ஒரு கம்ப்யூட்டர், இணயத்தொடர்பு, அவ்வளவுதான், அத்தனை கலைக்களஞ்சியமும் அடுத்த நிமிஷம் நம்ம கையிலே! மேலே நான் சொன்ன மாதிரி, ஆங்கில மொழியிலே மட்டும் 10 லட்சத்துக்கு மேலே கட்டுரைகள் அனைத்து விஷயங்களிலும் எழுதப்பட்டிருக்கு!

இந்த கலைக்களஞ்சியத்திலே ஒரே ஒரு பிரச்சினை என்னான்னு, இதை காப்பதை விட அழிப்பவர்கள் அதிகம், அதாவது வண்டலிஸம் ('vandalism')னு சொல்லக்கூடிய ஒரு தகாத செயல் தான். அதுனாலேயே சில விஷயங்களை திரிச்சு எழுத வாய்ப்பு இருக்கு! உண்மைக்கு புறம்பா அதை எழுதி போட்டுவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கு! ஆனாலும் இது விக்கிப்பீடியா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் கீழ் இயங்குவதால், அதனை உடனுக்குடன் திருத்தியே இல்லை சரியான உண்மைகளை தொகுத்து விடுகிறார்கள், மேற்கொண்டு அதை திருத்திவிட நம் போன்ற இணையம் உபயோகிப்போரிடமிருந்து கருத்துகள் வந்துவிடுவதால் அவைகள் சரி செய்யப்ப்டுகின்றன! இருந்தாலும் இந்த கலைக்களஞ்சியம் மீதும், அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மீதும் சிலருக்கு நம்பிக்கையற்றதன்மை இருப்பது மறுக்க முடியாது ஒன்று, அதிலும் பிரிட்டானிக்கா போன்ற கலைகளஞ்சியங்கள் உபயோகிப்போர், இதன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை!

விஷக்கிருமிகள் விஷப்பேனாக்கள் கொண்டு திரித்து உண்மைக்கு புறம்பாக எழுதிவிடும் வாய்ப்புகள் இருந்த பொழுதும், இந்த விக்கியப்பீடியாவின் புகழ் மென்மேலும் அதிகரித்து கொண்டிருப்பதில் ஆச்சிரியமில்லை. ஏனென்றால் இது மனிதக்குல அறிவுகளை விழித்திட செய்யும் ஒரு அருமையான கருவி, அதுவும் கூட்டு முயற்சியில், எந்த விலையுமின்றி உருவாக்கப்பட்ட களஞ்சியம் பிரிட்டானிக்கா என்றழைக்கப்படும் கலைகளஞ்சியத்தைவிட 12 மடங்கு பெரியது, 200 மொழிகளில், 10000த்துக்கும் மேற்பட்டோரின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட 40 லட்ச பிரசுரங்கள் அடங்கிய களஞ்சியம், மற்ற 'சி என் என்', 'பிபிசி', 'நியூயார்க் டைம்ஸ்' எனும் பத்திரிக்கை மற்ற ஊடக தளங்களை விட இதற்கு விஜயம் செய்யும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம், ஆதலால் தான் இது ரொம்பவும் பிரசித்துப்பெற்றது! நிறைய மக்களுக்கு விஷய ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய சாதனம்! அதுவும் இந்த அசூர வளர்ச்சி இந்த ஐந்தாண்டுகளில் தான்!

சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இதில் தொகுக்கப்பட்டிருந்தாலும், அப்படி சர்ச்சைக்குரிய விஷயமாக குறிப்பிட்டு அதன் உண்மைகள் மக்களின் தீர்மானத்திற்கே விடப்பட்டள்ளது. முக்கியமாக, நம் நாட்டின் காஷ்மீர், எல்லை குறிப்புகள், சீனா ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களை தொகுத்து வழங்கிய பொழுது அதில் அடங்கி இருக்கும் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி அதன் உண்மை, தவறின்மை வேண்டிய அளவு மாற்றி கொள்ள வேண்டியது படிப்பவர்களின் கடமை என்ற எச்சரிக்கை வாசகத்தோடு கட்டுரை வெளிப்படப்பட்டிருக்கும், உதாரணத்துக்கு இந்த மூன்றாம் பானிப்பட்டு யுத்தம் பற்றி வெளியிடப்பட்ட கட்டுரையை பார்க்கவும்! இந்த மக்களுக்கு உதவும் சாதனம் விஷமிகளின் கைகளில் சிக்குண்டால் என்னாகும் என்பதற்கு தினம் நம் இந்திய பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் திரிப்புகள் அதிகம், அதை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

ஆக இந்த பிளாக்கர் குழுமம் எப்படி ஒரு புதிய ஊடகக் கருவியாக, அனைத்து விஷயங்களையும் தரமுற்படுகிறதோ, அதன் குறைகளை நிரப்பும் இன்னொரு ஊடகமாக இந்த விக்கிப்பீடியா உருவெடுத்துள்ளது. பிளாக் என்பது திருத்தமோ, தணிக்கை செய்யப்படாத, ஒரு தனிமனித குரல் மற்றும் அவனின் எண்ணம், அறிவு எனக்கருதப்படும் ஒரு விஷயத்தை விவாதிது கட்டுரையாக வரும், ஆனால் விக்கியின் தத்துவம் அதே பக்கம், விவாதிக்கப்பட்ட விஷயங்களின் பக்கம், திருத்தப்பட்டு, அதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்களால் மாற்றி முழுமையாகப்படுவதால் மீண்டும் வடிவமைக்கப்படுகிறது! அதுவே அதன் சக்தி!

ஆக பழைய பிரிட்டானிக்கா கலைகளஞ்சியத்திற்கும், இந்த பதிய கூட்டு முயற்சியில் உருவான விக்கிப்பீடியா கலைக்களன்சியத்திற்கும் உள்ள வேறுபாடு தவறின்மை, முற்றிலும் உண்மையான கருத்துக்கள், ஆனல் அவ்வாறும் சில நேரங்களில் இந்த தொகுப்பு தவறிவிட வாய்ப்புண்டு என்கிறனர் பிரிட்டானிக்கா பதிப்பகத்தினர். இருந்தும் அவர்களின் தொகுப்பு பெரிதன கூறுகின்றனர். ஆனால் இந்த விக்கிப்பீடியா களஞ்சியம், மாறி வரும் தொழில்நுட்பத்துடன் உலகமே சேர்ந்து உருவாக்கிய ஒன்று. தவறுகள் சில இருந்தாலும் மனிதகுல அறிவுத்திறமை ஒரு சில பேரால் தொகுப்படைவதில்லை, பலரால் தொகுக்கும் பொழுது, அதை எந்த வணிக நோக்கமின்றி உருவாக்கி வழி நடத்தும் பொழுது, உபயோகிப்போரின் தேவை பொறுத்து, அதன் முக்கியத்தவம் உயர்வடைகிறது. ஆனாலும் இந்த கூட்டு முயற்சியின் அறிவுக்களஞ்சிய தன்மையே தனி! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Monday, May 22, 2006

பிரபஞ்சத்தின் மூலம் பரம்பொருளே! -ஓரு விஞ்ஞான உண்மை!

அட நில்லுங்க, எங்க போறீங்க! என்ன ஆன்மீக சொற்பழிவு எதுக்கும் அடிபோடறனோன்னு பயப்படறீங்களா? ஆனா, அப்படி ஆன்மீகம் சொன்ன கருத்தை வலுவாக்கத்தான் இப்ப விஞ்ஞானம் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கு. அண்ட சராசரவெளி, பிரபஞ்சம் இது எல்லாத்துக்கும் முதற்காரணமான பரிபூரணபரம் பொருள் அந்த முதற்கண் கடவுள்ங்கிற ஆன்மீக தத்துவத்திற்கு இன்னும் அர்த்தம் புரிபடலை,ஆனா அதற்கான விஞ்ஞான விளக்கங்கள், விடைகள் இப்ப நிறைய கிடைச்சிக்கிட்டிருக்குன்னு, அப்ப அப்ப இந்த அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்குது. இதெல்லாம் தெரிஞ்சுக்குனும்னா, அணுவுக்கும் அணுவான பெளதீக உண்மைகள் உங்களுக்கு கொஞ்சம் புரிபடணும். அதாவது இதை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானமும், பிரபஞ்சவியலும் ('Cosmology') கொஞ்சம் தெரிஞ்சா, இதெல்லாம் என்னா சொல்ல வர்றாங்கன்னு நமக்குப்புலப்படும். ஆக பொது ஜனங்களே, நமக்கு அடிப்படையா, நம்மூர்ல சொல்ற அந்த அன்மீக கூறலுக்கு உண்டான விஞ்ஞான உண்மை என்னான்னு, இந்த பக்கம் தொடரும் தேடலை, இந்த சயின்ஸ் மூலமா என்ன சொல்லவர்றாங்கன்னு தெரிஞ்சக்கலாம் வாங்க!

நீங்க எல்லாரும் மொட்ட மாடியிலே படுத்து தூங்கி இருந்தீங்கன்னா, ஒரு நிஜத்துக்கு சின்னபுள்ளையிலருந்து அலைஞ்சுருப்பீங்க! அதாவது வானத்திலே நிலா, நட்சத்திரம்னு, அண்டை வெளியை பார்த்து சில நேரம் ரசிச்சிட்டு அப்புறம், இதெல்லாம் என்னா, எங்கிருக்கு, என்னா கிரகம், நட்சத்திரம் அப்படின்னு தெரிஞ்சுக்க ஆசைபட்டிருப்பீங்க! பிறகு கொஞ்சம் மேலே போயி இதெல்லாம் எப்படி வந்தது, நாம் எப்படி பூமிக்கு வந்தோம், அப்படின்னு கற்பனைக்குதிரையை தட்டி விட்டுட்டு அப்புறம் விடை ஏதும் கிடைக்காம, இந்த பிரபஞ்சம், பிதா, பரம்பொருள் அப்படின்னு கோயில் காலச்சேபம் கேட்டுட்டு அதை அங்கனையே விட்டுருப்பீங்க. இல்ல சினிமா படங்கள்ல காமிக்கற நிலவு, பெண்கள், கவிதை, வானவெளி, நட்சத்திரம்னு பார்த்து சிலாகிச்சிட்டு விட்டுருப்பீங்க. இல்ல நிழல்கள் படத்தில வர ராஜேசேகர் மாதிரி , கஞ்சா அடிச்சிட்டு நடசத்திரங்களை பார்த்து மயங்கி, 'இது ஒரு பொன்மாலை பொழுது'ன்னு பாட்டுபாடி அப்புறம் அதை பக்கத்து வீட்டு பொண்ணு கேட்டு மயங்கி, அதை டாவுவுட்டுகிட்டு, இப்படியெல்லாம் பொழுது கழிச்சிருப்பீங்க. ஆனா விஞ்ஞான ரீதியா இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிருக்க மாட்டீங்க. நீங்க இல்லேனா, அட்லீஸ்ட் நான் அந்த மாதிரி விட்டதை கொஞ்சம் படிச்சி தெரிஞ்சுக்கிட்டேன்னு தான் உங்கக்கிட்ட சொல்லிக்கலாமுன்னு இதை எழுதுறேன்!

முதமுதல்ல மக்கள், இந்த உலகம்னு எடுத்துக்கிட்டா, அதற்கு அடிப்படை என்னான்னு இயற்கையை ஆராஞ்சு, பஞ்சபூதங்களாகிய, நீர், நிலம், நெருப்பு, காத்து, வாயுன்னு தெரிஞ்சு அதை கொண்டாட ஆரம்பிச்சாங்க! ஆனா இன்னெக்கு நமக்கு அதை விட அதிகமா தெரியும், விஞ்ஞான ரீதியா! அதாவது எல்லாத்துக்கும் அடிப்படை என்னான்னா அணு, மூலம், பரிபூரண பரம் பொருள்!

இந்த அணுக்கள்னு சொல்ல வந்தாலே நீங்க எல்லாம் படிச்ச அந்த 'periodic table' தான் ஞாபகத்துக்கு வரும். அதாவது இயற்கையா கிடைச்ச கனிம பொருட்களின் மூலவஸ்துக்களை, அதன் அணுவின் அடிப்படை தொகுப்பில் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் எண்ணிக்கை தான் அது! அப்புறம் அதுகளுக்குள்ள இருக்கும் பதம், எதிர்பதம் மின் அணு தொடர்புகள்ல, பதமா இருக்கும் அணுவின்நடுப்பகுதியும்(Nucleus) அதற்கு எதிர்பதமா இருக்கும் மின் அசை(எலெக்ட்ரான்), இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். முதல்ல இதைத்தான் எல்லாரும் அடிப்படை, அணு, அப்படின்னு நினைச்சாங்க, ஆனா 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம், அதுக்கு மேலே போயி அந்த புரோட்டான், நியுட்ரான்கள் இன்னும் சிறிய துகள்களா இருக்குதுன்னும், அதுக்கு ஆங்கிலத்தில 'quarks' ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!
இந்த பெளதீக விஞ்ஞானத்திலே அணு மாதிரி உருவை ('Model') இப்படி சொல்றாங்க, எலெக்ட்ரான் அணுவின்நடுப்பகுதியை(Nucleus) சுற்றி தொடர் சுழற்சியில் சுற்றி வருவதாகவும், இந்த அணுவின் நடுப்பகுதியிலே நியூட்ரான், புரோட்டான்ங்கள் குதியாட்டம் போடறதாகவும், அந்த நியூட்ரான், புரோட்டான் களுக்குள்ள இருக்கும் 'quarks' என்னும் துகள்கள், கிலுகிலுப்பையை ஆட்டுனா அதுக்குள்ள இருக்கும் துகள்கள் எப்படி மேலே கீழே ஆடுமோ, அதுபோல ஆடிக்கிட்டிருக்குன்னு (மொத்ததிலே ஆங்கிலத்திலே இதுக்கு 'jiggle'னு பேரு, அதாவது ஒரு 'irregular motion')

இந்த 'quarks' அளவுன்னு எடுத்துக்கிட்டீங்கண்ணா மிக மிகச்சிறியது. அணுவின் அளவு ஒரு பங்குன்னா, 10000த்தில ஒரு பங்குதான் அணுவின்நடுப்பகுதி(Nucleus), அதே மாதிரி 100000 த்திலே ஒரு பங்கு தான் புரோட்டான், அதுல 'quarks', எலெக்ட்ரான் எல்லாம் 100,000,000 த்திலே ஒரு பங்கு, பார்த்தீங்களா எவ்வளவு சிறிசுன்னு!

சரி இப்ப எதுக்கு இந்த கணக்குன்னு கேட்கிறீங்களா, அதான் தொடர்ந்து அடிப்படையிலே எத்தனை பரம் பொருள் (Particle) இருக்குன்னு கண்டுபிடிக்கிறதுதான் இந்த பெளதீக விஞ்ஞானம்! இது வரைக்கும் 200 க்கும் மேற்பட்ட இந்த பரம் பொருள்கள் இருக்குன்னும்( ஆனா இது அடிப்படை அணுக்கள்இல்லை, அப்படி அடிப்படை அணுக்களின் தொகுப்பு), அதை தொடர்ந்து எந்த வடிவத்திலே இருக்குன்னு கண்டுபிடிச்சா நமக்கு இந்த பிரபஞ்சம் பத்தி கொஞ்சம் அதிகம் தெரிஞ்சக்க முடியும்!. புரியல்லை! சரி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்!

சரி 200க்கும் மேற்பட்ட பரம் பொருள்கள்னு சொன்னா, அதுக்கு அடிப்படையான பொருட்கள் என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது, அதைத்தான் இந்த பரம் பொருட்களை (Particle) கொண்டான உலகம் மற்றும் அதனை பிடித்து கொண்டிருக்கும் தத்துவத்தை விளக்க அவங்க தொகுத்த மாதிரி உரு தத்துவம் தான் 'Standard Model Theory' அதாவது அனைத்து பரம் பொருள்களை விளக்கனும்னா, அதில ஒரு 6 'quarks' துகளும், 6 'lepton' (இது நம்ம எலெக்ட்ரான் மாதிரி துகள்கள்)அவைகளை அனைத்து செல்லும் விசை சாதன பொருட்கள் ('Force carrier particles') அதன் சிக்கலான கட்டமைப்பு விளக்கும் இந்த உரு தத்துவம் தான் இந்த பெளதீக விஞ்ஞானத்தின் மூலம்! அதை இப்ப ஒரு 70 வருஷத்துக்கு முன்னே கண்டுபிடிச்சாங்க. அதுவும் புது புது பரம் பொருட்களை(Paraticle) இப்ப தான் ஒரு 30, 40 வருஷத்துக்கு முன்ன தான் கண்டுபிடிச்சாங்க!

இந்த உலகம்ங்கிறது வேறெ ஒன்னுமில்லை, மலையிலருந்து மடுவரைக்கும் இந்த 'quarks' துகளும், 'lepton' துகள்களுமேன்னு சொல்லி முடிச்சிடலாமா, ஏன்னா அதானே அடிப்படை. ஆங்.. அதான் இல்லை! ஒவ்வொரு பரம் பொருளுக்கும்('matter particle') அதற்கு எதிர் பதமான பரம்பொருள்('antimatter particle')ன்னு ஒன்னு இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க!போச்சுடா இது வேறேயா!

ஆமா, அந்த பரம் பொருளுக்கு இருக்கும் குணாதிசியமாதிரியே அந்த எதிர்பத பொருளுக்கும் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க, ஆனா,எதிர்பத பொருளுக்கு மின்விசை எதிர்மறையா இருக்கும்னு கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த இரண்டும் ஒன்னை ஒன்னு சந்திசிக்கிச்சுன்னா உண்டாகுமய்யா பிரளயம், அதுல இருந்து பிறக்கும் ஒரு புதுசக்தி ( 'When a matter particle and antimatter particle meet, they annihilate into pure energy!') இது தான் இந்த பிரபஞ்சம் தோன்ற மூலக்காரணம்!

இப்படி ஆரம்பமாகி சின்ன சின்ன துகள்கள்,அதற்கிடையே உண்டான விசைகள், பிறகு அதிலிருந்து வரும் பொருட்கள் இதை எல்லாம் ஆராஞ்சு அதன் ஒவ்வொரு போக்கினையும் கண்டறிஞ்சு, அடிப்படை பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதே இந்த பெளதீகம். அதுக்குன்னு அமைக்கப்பட்டிருக்கும் விசை கலங்கள் (Particle accelerator),அதன் மூலமா அனத்து வித பரம் பொருட்கள் அதன் தன்மைகளை கண்டறிந்து கடைசியில் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்கள் ( நம்ம கண்டறிஞ்ச X-ray, போட்டான்ஸ், கதிர்கள், மற்றும் அனைத்து பிரபஞ்ச கதிரியக்கங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது), விசைகள் எல்லாம் ஆராயந்து சில உண்மைகளை தெரிந்து கொள்வது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இப்ப புரிஞ்சுதா இந்த பெளதீக உண்மை. இன்னும் இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, நிறைய தளங்கள் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கலாம்!

சரி இதெல்ல என்ன விஷேசம்னு கேட்கிறீங்களா, ஆமா விஷேசம் சொல்றதுக்கு முன்னே விஷயம் சொல்லுனுமில்ல, நான் பாட்டுக்கு மேட்டர்,ஆன்டி மேட்டர்னு சொல்ல ஆரம்பிச்சு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இப்படி இந்த இரண்டு பொருட்களும் சந்திச்சு முட்டி மோதி உருவான ஒரு சக்தியால் உண்டானது இந்த பிரபஞ்சம்னு ஆரம்பிச்சா என்னை அடிக்க வரமாட்டீங்க, அதனாலதான் அதுக்கு பின்னாடி இருக்கிற இந்த பெளதீகத்தை சொல்லிட்டு மேற்கொண்டு விஷயம் சொல்லலாமுன்னு வந்தேன்!

அதாவது நான் சொன்ன அந்த பரம் பொருள் மற்றும் எதிர் பரம் பொருள் இதுவரைக்கும் கண்டறிந்ததில் சமனாகவும், எதிர்பதமாகவும் முக்கியமா ஒத்திசைவு ('Symmetry') கொண்டதுன்னு தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா இப்ப கண்டுபிடிக்கபட்ட உண்மை என்னான்னா, அந்த பொருட்கள் ஒத்திசைவு தன்மை கொண்டவை அல்ல (Assemytrical)என்பது தான்!

அதாவது சிகாகோவில் இருக்கும் 'Fermilab' என்ற ஆராய்ச்சி நிறுவனம், நான் கூறிய அந்த பரம் பொருட்களில் ஒன்றான, 'B-mesons' எனழைக்கப்படும் பரம்பொருளை இரண்டு ரூபத்திலும், அதாவது மேட்டர், ஆன்டி மேட்டர்களாக மாற்றி, பிறகு பரம்பொருளாக மாற்றும் இந்த 'Mixing' என்ற முறையில் அதன் பரம்பொருள், எதிர் பரம்பொருள் நிலையில் எடை வித்தியாசத்தை கண்டறிந்தனர். அதாவது அது பரம்பொருளாக இருக்கும் பொழுது ஒரு எடையும், அது எதிர்பரம்பொருளாக இருக்கும் பொழுது இன்னொரு எடையாக இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இது தான் நான் சொன்ன அந்த ஒத்திசைவு தன்மையற்ற (Assemytrical) ஒன்று! இதுவரை இந்த அறிவியலில் கூறப்பட்டு வந்த உண்மை சற்று புறம்பாகிறது! அந்த எடை வித்தியாசம் இதுவரை கண்டறியப்பட்ட 'B-mesons' பொருட்களை விட அதிகம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்! இது தான் விஷேஷம்! அதாவது இதுவரை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம் சொல்லி வந்த தத்துவத்திலிருந்து மாறுபட்டது என்றும் அந்த பரம் பொருள், எதிர் பரம்பொருள்களுக்குண்டான சமநிலை தத்துவம் சரிவடைந்து விட்டது இன்னும் சில பிரபஞ்ச உண்மைகளை கண்டறிய துணைபுரியும் என்று கருதுங்கினறனர்

கடைசியிலே எவ்வளவு தான் விஞ்ஞான உண்மைகளை கண்டறிய முற்பட்டாலும் இந்த பிரபஞ்சம் பத்தியும், பரம்பொருள் பத்தியும் என்றுமே நிலைப்பாடான உண்மைகளை கண்டறிந்து இந்த பிரபஞ்சத்தை வெல்ல மனிதனுக்கு எத்தனைக் காலம் புடிக்குமோ? ம்.. தியான நித்திரையில் ஆழ்ந்து இறைவனை நிந்தி, பிரபஞ்சமும் பரம்பொருளும் விளங்கும், யாரோ சாமி தூரத்திலே சொல்ற மாதிரி தெரியுது! -:)

Saturday, May 20, 2006

தானிய பெட்ரோல்-விவசாயம் தரும் மாற்று சக்தி!

எத்தனை பேரு என்னுடய 'வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!' படிச்சீங்களோ, எனக்கு தெரியாது. அதிலே மாற்று சக்திகளுக்கு என்னென்ன வழி முறைகள் இருக்கோ, அதுக்கெல்லாம் அதிகமா செலவழிச்சு, ஆராய்ஞ்சு, மாற்று வழிகள்ல சக்தியை உருவாக்க அமெரிக்கா முனைப்பா இருக்குன்னும், அதில மாற்று பெட்ரோல் "Cellulosic Ethanol" மூலம் இனி வாகனங்கள் எல்லாத்தையும் ஓட்ட வைக்க முயற்சி செய்ய போகுதுன்னு சொல்லி இருந்தேன். அந்த மாதிரி 'Bio-Fuel'ங்கிற மாற்று தானிய எரிபொருள் பத்தி கொஞ்சம் பார்போமேன்னு தான் இந்த பதிவு.

அதுவும் கொஞ்ச நாளைக்கு முன்னே நம்ம ஊர்ல மூலிகையிலருந்து பெட்ரோல் எடுக்கிறேன்னு ராமர்னு ஒருத்தரு போட்டுத் தள்ளிக்கிட்டிருந்தாரு. அது மூலம் பெட்ரோல் எடுத்து நம்ம தமிழ்நாட்டை இன்னொரு துபாய் ஆக்கி காட்றேன்ட்டெல்லாம் சொன்னாரு! இப்ப அது என்னாச்சு, அவரு என்னானுருன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கோ! அதை விஞ்ஞான முறையிலே நிருபிச்சா எல்லாரும் உதவுறேன்னு சொல்லியும், கடைசியிலே அப்பீட்டு ஆனா கதை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். ஆனா நிஜமாலுமே, நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம் தெரியுமா. அப்படி தயாரிக்கிற நாடுகள்ல, பிரேஸில் தன்னுடய 30 சதவீத எரி பொருள் தேவையை இந்த கரும்புலிருந்து தயாரிக்கும் அந்த எரி பொருள் மூலமா பூர்த்தி செஞ்சுக்கிறதுன்னா, ஆச்சிரியமா இல்லை! அது என்னா எப்படின்னு விவரமா கீழே பார்க்கலாம் வாங்க!

வில்லி நெல்சன் ('Willie Nelson) ஒருத்தரு இந்த டெக்ஸாஸ் மாகாணத்திலே, அவரு தோட்டத்தில விளைஞ்ச தானியங்களை வச்சி தயாரிச்ச பெட்ரோல்ல, அவருடய மெர்ஸீடிஸ் காரை ஓட்டுறாருன்னா பார்த்துக்கங்க! அவரு தயாரிக்கிற இந்த பெட்ரோலுக்கு "BioWillie" பேர் எல்லாம் வச்சு அதை ஒரு ஏழு எட்டு இடத்திலே விநியோகம் வேறே பண்றார்னா பார்த்துக்குங்க! அமெரிக்கா காரங்களுக்கே உண்டான வியாபார தன்மையோட அமெரிக்கா முழுக்க விக்கப்போறாராம். இது எப்படி இருக்கு. இந்த தானிய பெட்ரோல்ல அவங்க விவசாயிங்களுக்கு, லாரி ஒட்டுறவங்களுக்கு, ஏன் சுற்றுபுறசுழல் மாசுபடாம இருக்கவும் இது உதவும்ங்கிறாரு. ஏன், இனிமே அமெரிக்கா இந்த பெட்ரோலுக்குகாக தட்டுதூக்கிட்டு மத்திய ஆசிய நாடுகள்ல எல்லாம் அலையவேணாங்கிறாரு!

மேற்கொண்டு ராக்கெட் வேகத்தில ஏறிக்கிட்டு போயிகிட்டுருக்கிற இந்த கச்சா எண்ணைய் விலையால, வேற ஏதாவது முறையிலே இந்த எரி சக்தி கண்டுபிடிக்கமுடியுமான்னு பார்த்து, அதுக்காக பைசா செலவளிச்சு சோயாபீன்ஸ், கனோலா, சோளம், ஏன் புல்லுலருந்தும் எண்ணெய் எடுக்கமுடியாதான்னு, இந்த 'எதை தின்னா பித்தம் தெளியுங்கற கதையா' எல்லா ஆராய்ச்சியும் முடிக்கிவிட்டுட்டாங்க! அதனால கண்டுபிடிச்சது, இந்த எத்தனால் ('ethnol'), அதாவது பெட்ரோலுக்கு மாற்று எரிசக்தி, அப்புறம் பையோடீசல் ('Bio Diesel'), என்கிற ஒரு எரி பொருள்! இப்படி, பேசாம காசை கொண்டி சவுதிஅரேபியால கொட்டாம, அப்படி கொட்றதால, அங்க தீவிரவாதத்துக்கு கிடைக்கும் பணம் போக இருக்க, இந்த இரண்டு எரி பொருளையும் வச்சு காரு, வாகனம் ஓட்ட முயற்சி செய்றது எவ்வளவோ மேல்னு கருதி,இதில எறங்கலாமுன்னு தீவிரமாயிட்டாங்க. ஏற்கனவே அமெரிக்காவில விக்கற காருங்க எல்லாத்திலேயும் 10 சதவீதம் இந்த மாதிரி எத்தனால் கலந்து ஓட்டறமாதிரி தான் காருங்கெல்லாம் தயாரிச்சிக்கிட்டிருக்காங்க. அதனால அதை 10 சதவீதத்திலருந்து 85 சதவீதம் வரை உயர்த்தி இந்த மாதிரி எரி பொருள்ல ஓடுற வாகனம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் இங்கே ஏற்கனவே வளர்ந்திருக்கிறதாலே, இப்ப இதில தீவிர ஆராயச்சி! இதுல நம்மூரு கதை என்னான்னு தெரியல. நம்மூர்ல தயாரிக்கிற காருங்க எத்தனை சதவீதம் இந்த மாற்று எரி பொருளை எடுத்துக்கும்ங்கிற விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கோ!

முதல்ல இந்த எத்தனால்('ethnol')பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதான் நம்ம ஊர்ங்கள்ள காயச்சர சாரயம் தான்! ஊரலு, பேரலுன்னு சினிமா சண்டை காய்ச்சிகள், சாரி காட்சிகள் எல்லாம் பார்த்திருப்பீங்க. ஆமா அதே தான், தானியங்கள், பழவகைகள் எல்லாத்தையும் ஊறபோட்டு அதை வடிகட்டி எடுக்கபடற சாரயம்('alcohol') தான் அது! அதனுடய உபயோகங்கள்னா, முதல்ல 'Alcoholic beverages' ன்னு நம்ம ஊர்ல சாப்பிடற பட்டை சாரயத்திலருந்து, ரம், விஸ்கி, பிராந்தி, ஜின்னு, வோட்கான்னு அடுக்கிக்கிட்டே போகலாம். (இந்த ரம், விஸ்கி, பிராந்தி, எது எது எந்த தனியம், பழத்திலருந்து செய்யறதுன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா இதோ இந்த விக்கிபீடியா சுட்டிக்குப் போயி பாருங்க!) அதற்கப்புறம் பெட்ரோலோட கலந்து வாகனங்கள் ஒட்டறதுக்கு பயன்படுது.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இதில முன்னனில இருக்கிறது பிரேஸில் நாடு! அமெரிக்காவிலேயும் 14 பில்லியன் லிட்டர் எத்தனால் வருஷத்துக்கு தயாரிக்கிறாங்க, அது இப்ப 28 பில்லியன் லிட்டரா, 2012ல அதிகரிக்க எல்லா முயற்சியும் எடுத்துக்கிட்டிருக்காங்க! இன்னும் நிறைய நாடுகள் இந்த ரூட்ல போயி எத்தனால் காரு ஓட்டப்போறாங்க, ஏன் நம்ம இந்தியாவும் இதில முயற்சி பண்ணிக்கிட்டிருக்கிறதா கேள்வி, எவ்வளவு தூரம்னு அறிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் சில கெமிக்கல்ஸ், இந்த எஸ்தர், வினீகர், எதிலமைன்ஸ்ன்னு ஏகப்பட்டது நம்ம அன்றாடம் உபயோகிக்கிற பொருட்கள்ல,அதாவது பெயின்ட்டை கரைக்கிறதுக்கு, பாலீஸ் போடறதுக்கு, அப்படின்னு அடுக்கிக்கிட்டே போகலாம். ஒரு விஷயம் தெரியுங்களா, இந்த கெமிக்கல்ஸ், பெட்ரோலிய பதார்த்தங்கள்ல இருந்தும் உற்பத்தி பண்ணலாம்! அதனால தான், இதனுடய உற்பத்தி மேலை நாடுகள்ல, பெட்ரோலியத்திலருந்து வரும் பதார்த்த பொருட்கள் செய்யும் பெட்ரோகெமிக்கல்ஸ்ங்கிற அந்த தொழில்நுட்பத்திலருந்து வருவது. ஆனா விவசாயத்தையே அதிகமா நம்பி இருக்கும் நம்ம நாட்ல அந்த பெட்ரோகெமிக்கல்ஸ் தொழில்நுட்பத்தை விட இந்த தானியங்கள்லருந்து மலிவா உற்பத்தி பண்ணலாம்!

சரி எல்லாம் சரி, நாம் ஏன் இந்த எத்தனால்ல மாற்று எரி பொருளா உபயோகிக்கக்கூடாதுன்னு கேட்கிறீங்களா? நல்ல கேள்வி, இது உருவாவது நம்ம சாப்பிடும் தானியங்கள், பழங்கள் இருந்து செய்யக்கூடியது. பிறகு அதுக்காக விவசாயம் பண்ண போனா, அது பொருளாதார ரீதியா கட்டுபடியாகுது. அப்ப என்ன பண்ணலாமுன்னு யோசிச்சப்ப வந்தது தான் இந்த "Cellulosic Ethanol" ங்கிற ஒன்னு. அதுதான் நான் மேலே சொன்னமாதிரி நம்ம கடிச்சு துப்பின கரும்பு சக்கை, தூரப்போட்ட சோளக்கருது கச்சை, அப்புறம் புல்லு, மரம் மட்டைன்னு, இதில்லருந்து உருவாக்கக்கூடியது தான் அந்த "Cellulosic Ethanol". அதாவது இதெல்லாம் தின்னா மனுசனுக்கு செரிக்காது. அதையே ஆடு, மாடுங்க தின்ன செரிச்சுடும் ஏன், ஆங்.. அங்க தான் இருக்கு சேதி, ஏன்னா அது உடம்புல்ல இருக்கிற ஒரு என்ஸைம் ('cellulase enzyme') அந்த பாடியில்ல இருக்கிற தடபவெப்ப நிலையிலே இந்த கச்சை, புல்லு, எல்லாத்திலேயும் இருக்குற குளுக்கோஸ் தனியா பிரிச்சுடும். அது தான் சங்கதி. இந்த எத்தனால் உற்பத்தி பண்றது அந்த குளுக்கோஸ், சர்க்கரைத்தண்ணி, வடிக்கட்டிதான். இப்ப புரிஞ்சதா. இந்த புல்லு, கச்சை மூலப்பொருளை கொண்டு, அதில் உள்ள சர்க்கரையை உடச்சி, பிறகு அதை ஊரபோட்டு, வடிகட்டி எடுத்தா வந்துடும் இந்த எத்தனால்! இந்த சர்க்கரையை உடைக்கும் முறைக்கு ஆங்கிலத்திலே பேரு 'Hydrolysis'. அதே மாதிரி இன்னொரு முறையும் இருக்கு. இந்த கச்சா பொருள் எல்லாத்தையும் வாயுவாக்கி ('Gasification ') அப்புறம் அதில்ல இருந்து வரக்கூடிய உபப்பொருளை ஊர வச்சி, பிறகு வடிக்கட்டினா வரும் எத்தனால். ஆக இப்படி வீனா போற பொருள்ல இருந்து வரக்கூடிய இந்த மாற்று எரிசக்தி தான் நாளைய நம்பிக்கை! இதுக்காக அமெரிக்கா, மற்றும் உலகெங்கும் நிறைய கம்பெனிகள் தங்கள் ஆராயச்சியை முடுக்கி விட்டு, இந்த எத்தனால் உற்பத்தி அளவை ('Yeild') எந்த முறையிலே அதிகபடுத்தலாமுன்னு முயற்சி பண்றாங்க!

இப்ப புரிஞ்சுதா, இந்த தானிய பெட்ரோல் எப்படி ஒரு மாற்று சக்தியா வரப்போகுதுன்னு! அமெரிக்காவில அதிகமா இந்த மிட்வெஸ்ட்ங்கிற பகுதியில விளையக்கூடிய ஒரு புல்லு ('Switch grass') தான் இன்னைக்கு நம்பிக்கை நட்சத்திரம்! இப்படி இங்கு அதிகமா விளையக்கூடிய மக்காசோளம், சோயா பீன்ஸ், இந்த மாதிரி தானியங்கள் இதுக்கெல்லாம் மூலம். இது மட்டுமில்லாம் பன்னியோட சானத்திலருந்தும் கச்சா எண்ணெய் எடுக்கலாமுன்னு கண்டுபிடிசிருக்காரு 'Yuanhui Zhang'ங்கிற விவசாய இஞ்சினியர். (ஏற்கனவே நமக்கு எல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான் இந்த சாணம் வயலுக்கு நல்ல உரம்னு!) விஷயம் தெரியனும்னா, இதோ சுட்டி. அவரு கண்டுபிடிச்ச அந்த செயல் முறை மாட்டு சாணம், மற்றும் ஆட்டு சாணத்துக்கும் பொருந்துங்கிறார், ஏன் மனுசன் போடும் கழிவிலருந்தும் முடியும்ங்கிறாரு!(ஒரு படத்திலே, விவேக் சொம்ப தூக்கிக்கிட்டு காலைகடன் கழிக்க போறப்ப யாரோ கேப்பாங்க, எங்க போறேன்னு, அதுக்கு அவரு சொல்லுவாரு, நிலங்களுக்கு உரம் போடப்போறேன்னு, அது மாதிரி இனி வரபடத்திலே,'ங்.. பெட்ரோல் உற்பத்தி பண்ண போறேன்னு சொல்லி காமடி பண்ணாலும் ஆச்சிரியப்படவேணாம்!) பார்த்தீங்களா, மாற்று சக்தியை நம்மகிட்ட வச்சுக் கிட்டு எங்கெங்கேயோ போய் தேடி அலையறோமுன்னு!

Saturday, May 13, 2006

குவாண்டம் கம்ப்யூட்டர் செய்வதில் உள்ள சூட்சமம்!

இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்னா என்னான்னு நம்ம மோகன் தாஸ் ஜல்லியடிச்சிருந்ததை கொஞ்சம் நாள் முன்னே அவர் பதிவான 'குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்' ல படிச்சி தெரிஞ்சிருப்பீங்க. அப்புறம் அவரு அந்த குவாண்டம் கம்ப்யூட்டர் பத்தி உளருனது எல்லாம் தப்புன்னு அதுக்கு விளக்கம் கொடுத்து நம்ம ரோஸா வசந்த் எழுதின 'குவாண்ட உளரல்!'யும் படிச்சிருப்பீங்க. பிறகு ரோஸா வசந்த், 'இந்த உளரலை அதிகமா புகழ்ந்து தள்ளிட்டீங்க, நீங்க என்ன தான் 'குவாண்டம் கணணி' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி இருந்தாலும்' சொன்னதுக்கு நம்ம வெங்கட்டும் ஒரு பதில் பதிவு 'மோகன்குமார், ரோசா வஸந்த் - குவாண்டம் கணினி தொடர்பாக' ன்னு போட்டு இருந்ததையும் படிச்சிருப்பீங்க. அப்படி படிக்காதவங்க, அந்த சுட்டியெல்லாம் ஒரு கிளிக் கிளிக்கி படிச்சிட்டு மேலே வாங்க, நான் சொல்லப் போற விஷயத்தை படிக்கிறத்துக்கு முன்னே! அப்படியே நான் ஏற்கனவே எழுதிய 'நேனோ டெக்னாலஜி' விநோதங்களை படிக்காதவங்க, அதையும் கொஞ்சம் ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க!

இந்த கம்ப்யூட்டர்னாலே பிட்டு(Bit)தான் மூலம். அதை வச்சி தான் எல்லாமே! நம்ம தமிழ்ல ஒன்னு சொல்லுவோமே 'வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு'ன்னு அந்த பதத்தின் பொருள் மாதிரி, இந்த பிட்டுங்க ஒன்னுமே இல்லாத வெறும் நிலையில இருக்கிறது '0', இன்னொன்னு உச்சக்கட்டம், அது '1' மத்தபடி வர கணக்கெல்லாம் இத வச்சிதான். இந்த பிட்டுங்களால கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்துங்கிறதை கூகுள்ல தட்டினீங்கன்னா நிறைய தளம் கிடைக்கும். அதிலையும் நீங்க எல்லாருமே கம்ப்யூட்ட்ரில கையை நனைக்கிற ஆளுங்க, அதனாலே உங்களுக்கு அதை பத்தி தெரிஞ்சு இருக்கும், அதுனால மேலே அதை பத்தி எழுதல! இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்ல இந்த இரண்டு பிட்டையும் விட்டுட்டு மூணாவதா, நம்ம தமிழ்ல சொல்ற மாதிரி 'ஆத்தில ஒரு காலு சேத்தில ஒரு காலு'ங்கிற மாதிரி ஒரு பிட்டு இருக்கும் நிலை தான் எல்லாத்துக்குமே முக்கியம். அது தான் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் பண்ண போகும் அதிசியங்களை ஆச்சிரியமா பார்க்க வைக்கிற ஒன்னு. அந்த பிட்டுக்கு பேரு க்யூபிட்டு(qbit), அதாவது அது இந்த '0'ங்கிற கீழ் நிலையிலும் இருக்கலாம், இல்லை அந்த '1'ங்கிற உச்ச நிலையிலும் இருக்கலாம்! அப்படி அந்த நிலையில இருக்கிறதுக்கு ஆங்கிலத்திலே 'Super-Position' பேரு!

ஆக இந்த க்யூபிட்டை உபயோகிச்சு ஒழுங்கா புரோகிராம் எழுதினீங்கன்னா, அந்த கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில போடற கணக்குகள் ஏராளம். ஒரு எக்ஸ்ட்ரா இருக்கிற க்யூபிட்டு கொண்டு இரண்டு கணக்கு போடலாம், இரண்டுனா நாலு கணக்கு போடலாம். அதாவது ஒரு 20 க்யூபிட்டு வச்சிக்கிட்டு ஒரு பத்து லட்ச கணக்கை ஒரே நேரத்திலே போட்டுடலாம். நம்ம ரோஸா வசந்து சொன்ன மாதிரி எவ்வளவு பெரிய இலக்கம் கொண்ட எண்களையும் சும்மா அப்படின்னு சொடக்கு போடற நேரத்திலே அந்த கம்ப்யூட்டரு போட்டு தள்ளிடும். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர்ல அதை போட நமக்கு 200 பேரப்புள்ளைங்க பொறந்து வளர்ந்து வாழ்ந்து முடிஞ்சா தான் முடியும், அப்பக்கூட முடியுமான்னு தெரியல்லைன்னு ரோஸா வசந்து சொல்லி இருந்தார். அதே தான். அதுக்குத்தான் இந்த பாடு! சரி கண்டு பிடிச்சிட்டிங்கள்ள, கம்ப்யூட்டரை செய்ய வேண்டியதானே அப்படிங்கிறீங்க. க்கூம்.. அங்க தான் சிக்கலே! எப்படின்னு கேளுங்க!

இந்த க்யூபிட்டுகளை உருவாக்கிற பொருளை செய்யறதிலே தான் சிக்கலே! அதாவது அந்த நேனோ டெக்னாலாஜியிலே உபயோகப்படுத்திற பொருள்ல இருந்து தான் இதை உருவாக்க முடியும், இப்போதைக்கு! இதில என்னா பிரச்சனைனா இந்த க்யூபிட்டு அந்த 'Super-Position' நிலையில இருக்கிற நேரம் ரொம்ப கம்மி! எல்லாம் நம்ம படிச்ச அணுவில் இருக்கும் எலெக்ட்ரான் சமாச்சாரம் தான். இந்த க்யூபிட்டு நிலையில இருக்குவிடாம சுத்துபட்டு அணுக்கள் சூழ்நிலை அமுக்கிவிடுவதால் இந்த எலெக்ட்ரான், நான் சொன்ன அந்த உச்சம் இல்லன்னா நீச்சத்துக்கு ('1', '0') போய்டுங்க. ஆனா அதுக்கு இடைப்பட்ட அந்த qunatum நிலையில வச்சிருந்தா தான் அது க்யூபிட்டு, இல்லேன்னா அது வெறும் பிட்டு! இப்ப அப்படி அதுங்களை வச்சிக்க முடியும்ங்கிறதான் சமீபத்தில கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவுகள்! அது என்னான்னு பார்க்கலாம் வாங்க!

ஆக்ச்ஃபோர்ட் பல்கலைகழகத்தில், ஆன்ட்ரூ பிரிக்கிஸ் (Andrew Briggs)ங்கிற ஒரு நேனோ மெட்டீரியல் சயிண்டிஸ்ட், இந்த நைட்ரஜன் அணுவை 60 கார்பன் அணுக்களால் சூழப்பட்ட ஒரு கூண்டுக்குள்ள(bucky ball) வச்சு, அந்த நைட்ரஜன் அணுவிலிருக்கும் எலெக்ட்ரானை, க்யூபிட்டா ஒரு 500 நேனோ செக்கண்டுக்கு, நான் மேலே சொன்ன qunatum நிலையில வெற்றிகராமா வச்சிட்டதா சொல்லி இருக்காங்க. ஆனா அதில பிரச்சனை என்னான்னா இந்த 500 நேனோ செக்கண்டு வச்சுக்கிட்டு எந்த கணக்கும் போட முடியாது ( இப்ப கம்ப்யூட்டர்ல இந்த டைமர்ல வர்ற frequency எல்லாம் உங்களுக்கு தெரியும், அதனுடய அளவுகளை விட இது சிறியது). ஆக இந்த க்யூபிட்டை அந்த qunatum நிலையில கொஞ்சம் ஜாஸ்தி நேரம் வச்சிருக்க அந்த க்யூபிட்டை இங்கேயும் அங்கேயும் மைக்ரோ வேவ்ஸ் கொண்டு உதைசிக்கிட்டு இருந்தா, அந்த க்யூபிட்டின் qunatum நிலையை கொஞ்சம் அதிக படுத்தலாமுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுக்கு 'bang bang' டெக்னிக்னு பேரு! ஆக இந்த 'bucky ball' கூண்டு முறையிலே நைட்ரஜன் அனுவை தான் வைக்கணும்னு இல்லை, வேறே பல அணுக்களையும் வச்சு இந்த க்யூபிட்டை கொண்டு வந்திடலாம். ஆனா இந்த ஒரு க்யூபிட்டு பல நூறாகி, கம்பூட்டர்ல பொறுத்தி குவாண்டம் கணனி பண்ண பல ஆண்டுகள் பிடிக்கும். இது ஆரம்பமே!

இன்னொரு முறையில இந்த க்யூபிட்டை உருவாக்கிறதை இந்த ஹிட்சாட்சி (Hitachi)ஆராய்ச்சி நிறுவனம் கண்டு பிடிச்சிருக்காங்க. அது நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச சிலிக்கான் சில்லுல பண்றது. அதாவது 'qunatum dots'ன்னு ஒரு பொருளை அந்த சிலிக்கான் சில்லுகுள்ள இருக்கும் wafer மேற்புறத்தில் வச்சு செய்யக்கூடியது. இது இன்னும் ஆராய்ச்சிக்கூடத்தில தான் இருக்கு, இதை வச்சி கம்ப்யூட்டர் சர்க்க்கூயூட் செஞ்சு அதை நிரூபிக்க இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துக்கிட்டிருக்கு!

மூணாவது வழி முறை, 'Ions'ன்னு சொல்லுவோமே, அதாவது எலெக்ட்ரிகலா சார்ஜ் ஆயி இருக்கிற அணு, அதை அசைஞ்சாடும் 'electromagnetic waves'க்குள்ள வச்சா, அது க்யூபிட்டா வேலை செய்யும்! இதை அந்த 'lithographic techniques' முறையிலே செஞ்சு இந்த 'Ions' கொண்ட 'devices' செய்யப்போறாங்களாம், அதை வச்சு இந்த குவாண்டம் கணனி செய்ய தயாராயிட்டதா சொல்றாங்க!

இது எல்லாம் தெரிஞ்ச, அறிஞ்ச தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்த க்யூபிட்டு உருவாக்கக்கூடிய பொருள்களை செய்ய முயற்சிக்கும் பொழுது, இதை எல்லாம் விடுட்டு ஒரு புது மாதிரியான முறையில தயாரிக்கலாமான்னு யோசிக்கிறாங்க! அது தான், நம்ம ஊரு விஞ்ஞானி போஸ் கண்டுபிடிச்ச போசான் (Boson) கொண்டு, குளிர்ந்த தட்பவெப்ப நிலையில அணுக்களை வச்சிருக்கும் முறையான, 'Bose-Einstein Condensate' ங்கிற முறை. இந்த Condensate என்னான்னு தெரியனும்னா இந்த விக்கிபீடியா சுட்டியிலே போய் பாருங்க! அதாவது இந்த குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் வைத்து இருக்கும் பொழுது அணுக்களில் உள்ள எலெக்ட்ரான், நியூட்ரான் எல்லாம் அந்த qunatum நிலையில இருப்பதே இந்த க்யூபிட்டுகள் சுலபமா உருவாக்க தோதுவா இருக்குது! ஆக இதை வச்சு அந்த குவாண்டம் கணனி பண்ணக்கூடிய பொருட்களை செய்து விடலாமான்னு தீவிர ஆராய்ச்சி நடந்துக்கிட்டிருக்கு.

இப்படி இந்த குவாண்டம் கணனி செய்றதுக்கு தொடர்ந்து அராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கு! ஒரு வேளை இந்த'Bose-Einstein Condensate' ங்கிற முறையிலருந்து தயாரிக்கப்படும் டிரான்ஸிஸ்டர்கள் தான் அடுத்த தலைமுறை டிரான்ஸிஸ்டர்களா இருக்கலாம். ஆனா தெளிவா எந்த ஆராய்ச்சியும் ஒரு முடிவுக்கு வரலை. இருந்தாலும் இந்த குவாண்டம் கணனியை உருவாக்க தீவிரமா தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கும் போது யார் கண்டது அடுத்த பதினைஞ்சு வருஷத்தில இந்த கம்ப்யூட்டர் எல்லாம் எப்படி இருக்க போவதுன்னு!

Monday, May 08, 2006

பூ...பயமே பூதம், பேய், பிசாசு எல்லாம்- Paranormal Studies!!

இந்த சாமி, ஜோஸ்யம் மாதிரி, இன்னொரு சப்ஜெக்ட், பேய், பிசாசு, பூதம் எல்லாம். இதெல்லாம் இருக்கா, பேய் உண்டா, இல்லையான்னு ஏகப்பட்ட சர்ச்சை நடக்கிறதை பார்த்திருப்பீங்க.அது இந்த ஊருல ஒரு பெரிய சப்ஜெக்ட், அதை 'Paranormal Studies' ன்னு சொல்லி, அதைஆராயறத்துக்கும், அதில நிபுணர் ஆவறதுக்கும் இங்கே நிறைய காலேஜ்ங்க உண்டு. அப்புறம் டிஸ்கவரி, நேஷனல் ஜியிகரப்பி சேனல்ன்னு இந்த பேய் கதைகள் சொல்லி அதன் பின்னால் இருக்கும் சயின்ஸ் பத்தி விளக்கி வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்க பார்த்திருக்கீங்களா? அதில சில பேருக்கு நிறைய ஆர்வம் இருக்கும். இந்த மாதிரி இதில டிப்ளமா எல்லாம் வாங்கி என்ன வேலை செய்ய போறாங்கன்னு ஆச்சிரியமா இருக்கும். ஆனா இது எவ்வளவு பெரிய இண்டஸ்டரி தெரியுமா? சரி அதை பத்தி கொஞ்சம் பீராஞ்சி பார்ப்போமேன்னு தான் இந்த பதிவு. தையரியம் இல்லாத, கொஞ்சம் நெஞ்சுக்காரங்க, அதாவது திட மனசு இல்லாதவங்க மேற் கொண்டு படிக்க வேணாம், ஏன்னா கபர்ஸ்தான், சுடுகாடு, கிரீப்பு, புகைன்னு ஏகப்பட்ட ஆவி விஷயம் கீழே வரும்... பூ... பயமில்லாம கீழே படிக்க வாங்க!

இந்த பதிவு போட காரணத்தை சொல்லிடறேன், அது நேத்து ஹிந்தி படம் ஒன்னு, நம்ம ராம்கோபால் வர்மாவோடது, 'டர்னா சரூரி ஹே!' அப்படின்னு. இந்த படத்தோட தீம்மே, பேயாவது, பிசாசாவது எல்லாம் மனுசனுக்கு உண்டாகிற பயம் பீதி, அது தான் காரணம். அந்த சூழ்நிலைகளில், பயந்து போய், திட மனசில்லாம செத்து போற சம்பவங்கள் இருக்கு. அதை வச்சு கதை கட்டி இங்க பேய் பிசாசு உலாத்துதுன்னு கதை கட்டி விடுவாங்க. இந்த கதை கட்டி விடற சம்பங்கள் நிறைய காரணத்துக்காக இருக்கும். இந்த சந்திரமுகி படத்தில வர்ற பங்களா மாதிரி பேய் பங்களா, ஏன்னா அப்படி போட்டு உட்டா, அதன் மதிப்பு கொறஞ்சு அடிமாட்டு விலைக்கு விக்கதான்! அதே மாதிரி ஏதாவது மறைச்சு வச்சு அந்த இடங்களுக்கு ஆளு நடமாட்டம் இருக்க கூடாதுன்னு, பேய், பிசாசு கதை கட்டி விட்டு ஆளுங்கள வரவிடாம பண்றது. அந்த காலத்தில சிவாஜி நடிச்ச நீதின்னு ஒரு படத்தில நம்ம முதல்வரு செயலலிதாம்மா, தான் சம்பாரிக்கிறதை ஒரு ஆலமரத்துக்கடியிலே புதச்சு வச்சு அங்க பேயிருக்குன்னு கதை கட்டி விட்டு, அப்புறம் சிவாஜி ராத்தியில தனி ஆளா போயி மரத்தை வெட்டிசாய்ச்சு புடுவாரு, அப்புறம் செயலலிதாவையும் கையும் களவுமா புடிச்சு புடுவாரு! ஆக எல்லாமே அந்த திடமான பயமில்லாம அந்தந்த சூழ்நிலையை கையாண்டமனா பேயாவது, பிசாசாவது! அதை வலியுறுத்தி சின்ன சின்ன கதைகளின் தொகுப்பா இந்த ஹிந்திபடம் நல்லா வந்திருக்கு, சமயத்தில சீட்டு நுனிக்கு போவேண்டிருந்தது!, எல்லாமே பயம்! ஒன்னுமில்லை! இதை பத்தி ஒரு பட்டி மன்றம் மாதிரி விவாதம் இந்த சுட்டீயில 'பட்டிமன்றம் - பேய் இருக்கிறதா? இல்லையா?', போய் பாருங்க வேணும்னா!

நம்ம ஊர்ல மந்திரம், தாந்தீரீகம், பில்லி, சூன்யம்னா, ஏழுகாத தூரம் ஓடி பயம் உண்டாகிற ஒன்னு. ஆனா இங்கே அது ஒரு பெரிய ரிசர்ச் சப்ஜெக்ட், அப்படி படிக்கிறவங்களுக்கு 'Paranormal Investigator Certification' கிடைக்கும். இதில ஆராய்ச்சி பண்றதெல்லாம், பேய் தென்படும் இடங்கள், ஆத்மா பத்தி, விநோத சப்தங்கள் எழுப்பி ஓடித்திரியும் பேய்கள் பற்றியும், அது மாதிரி பேச்சு, சிரிப்பு சப்தங்கள், புகைப்பட ஆதாரங்கள் எல்லாம். இந்த ஆராய்ச்சிக்குன்னு 'sophisticated electronic ghost hunting device' எல்லாம் இருக்குன்னா பார்த்துக்கங்களேன்! இது எல்லாமே சொல்லி தந்து ஆதாரங்களோட பேய் புடிக்க உதவுவாங்களாம்! எப்படின்னு கேளுங்க! அதாவது பேய்கள் எழுப்பும் சஞ்சாரங்களை அப்படியே புடிச்சு ரிக்கார்டு பண்ண ஒரு 'electronic EMF meter' இருக்காம்! அது மாதிரி வெறிச்சோடி கிடக்கிற ஆஸ்பத்திரி, பங்களா, லைட் ஹவுஸ் அப்படின்னு எங்கெல்லாம் பேய் உலாவுதோ அங்க எல்லாம் அதுக எழுப்பற சப்தம் சமிக்ஞைகள் எல்லாம் கேட்டு பேய் இருக்கிறதை ஊர்ஜிதம் செய்வாங்களாம். அதாவது இந்த மாதிரி புரளிகிளிப்பிவுட்டு நான் மேலே சொன்ன மாதிரி நிறைய சொத்துகள் மதிப்பு குறைஞ்சா, இந்த மாதிரி சர்டிபிகேட் வாங்கனவங்கள உபயோகிச்சு, ஆதாரங்களோட பேய் உண்டா இல்லையான்னு கண்டுபிடிச்சு, அதன் மதிப்புகளை கணக்கிடத்தானாம். நம்ம ஊர்ல மந்திரிச்சு உடறது, தண்ணி தெளிச்சுவுடுறதுன்னு கேள்விப்ப்ட்டிருக்கீங்களா, பேய் வீட்டை விட்டு ஓடறதுக்கு! அந்த கதையா இருக்கு! என்ன சொல்றீங்கீங்க. இதில அனுபவம் இருக்கிறவங்க யாராவது சொல்லுங்களேன்!

அடுத்து இன்னொரு விஷயம் இந்த Unidentified Flying Object(UFO) பத்தினது! நம்ம ஊர்ல இதபத்தி அவ்வளவா பேசி கேள்விபட்டதில்லை. இங்கே, அதை பத்தி பெரிய ஆராய்ச்சி, அதுக்குன்னு 'UFO Investigator Certification'ன்னு கோர்ஸே இருக்கு தெரியுமா? இது அந்த வேத்து கிரக ஆளுங்க ஓட்டிக்கிட்டு வர விமானம்(alien spacecraft) வந்து பூமியில இறங்கிறதாகவும், அது சில பேருக்கு கண்ணுல தெரிஞ்சதாகவும், அது என்னான்னு நிறைய ஆராய்ச்சி. இங்கே 'Los Vegas'போறவங்க, பக்கத்தில அந்த மாதிரி UFO வந்து போன இடங்கள்ன்னு பார்க்க போயிருந்தாலும் போயிருப்பீங்க! அது வந்திறங்கி அதிலருந்து வேத்து கிரக ஆளுங்க வந்து ஆடு மாடுன்னு கால்நடைகளை கொன்னுபோட்டுட்டு போனதாவும் அதை கண்டுபிடிக்க, இந்த படிப்பு படிச்சவங்களை அமர்த்தி, அது என்னான்னு கண்டுபிடிக்கிறாங்களாம். நம்ம நாட்ல, நம்ம ஊர்ல வந்தெறங்க மாட்டேங்கிறாங்க இந்த வேத்து கிரகத்தாளுங்க! அப்படி ஏதும் நம்மாளுங்களுக்கு யாருக்கும் உறவு முறை இருந்தா கொஞ்சம் சொல்லுங்க! இதவச்சு ஹிந்தியிலே படம் வந்துச்சு பார்த்தீங்களா, 'கொயி மில்கையான்னு', இப்ப அதோட சீக்குவல்னு 'கிரிஷ்'ன்னு ஒரு படம் வரப்போவது, அதே ராகேஷ் ரோஷன், ரித்திக் ரோஷன் கோஷ்டி தான் படம் எடுத்திருக்கு! எல்லாம் இந்த வேத்துகிரகம் சூப்பர்மேன் கதை தான், வந்தா பார்ப்போம்!

அடுத்து நம்ம ஆடுபுலி ஆட்டமாதிரி, கட்டம் கட்டி ஆவிங்களை வரவழைக்கிறது தெரியுமா, அதுக்கு ஒரு தனி கோர்ஸ், 'Parapsychologist Certification', இதில்ல படிக்கிறது இயற்கைக்கு ஒவ்வாத அனுபவங்கள், மனதுக்கு புலப்படாத எண்ணங்கள், டெலிபதி, போன ஜென்ம ஞாபகங்கள், சாகும் தருவாயில் வரப்போகும் அனுபங்கள் (Near Death experiences), அடிமனதில் கேட்கும் பேச்சுக்கள், கண்ணுக்கு புலப்படாத பொருட்களை, மனிதர்களை, நிகழ்ச்சிகளை பார்ப்பது, பேசுவது, ஆவிகளை வரவழைத்து பேசுவது இப்படின்னு ஏகப்பட்டது. சித்த பிரம்மை, மரகழண்டவுங்க, பேய்பிடிச்சவங்களுக்குன்னு, இந்த முறையில, அதாவது சைக்கோ ட்ரீட்மெண்ட் மாதிரி. இதில படிச்சு இந்த உத்தியோகம் போகத்தான்! பார்த்தீங்களா, நம்ம ஊரு ஏர்வாடி கணக்கா, இங்கேயும் இந்த மாதிரி மேற்கத்திய மருத்துவம், அதுக்குண்டான கோர்ஸ்கள். நம்ம சித்தர்கள், அப்ப காட்ல உட்கார்ந்து ஆராஞ்சு செஞ்ச விஷயங்கள், பேய் ஓட்றது எல்லாம் நவீன முறையில் படிச்சு அதை எப்படி செய்றாங்கன்னு பார்த்தீங்களா!

இந்த பேய் படம் பார்த்துட்டு வந்த வினை, இது எல்லாம் என்னான்னு ஆராய போயி இந்த மாதிரி இங்க இருக்குன்னு விவரம் தெரிஞ்சது. அப்ப அப்ப சில சமயம் டிவி சேனல்ல இந்த ஒடி ஒளிஞ்ச மிருகங்கள், காட்டோரமா இருக்கிற வீட்டு பகுதிகள்ல, இதை 'bigfoot' சொல்வாங்க, அதை பத்தி படிச்சு பட்டம் வாங்கனும்னா, அதுக்கு'Cryptozoology Certification' பேரு. அதாவது அதிக மனித நடமாட்டம் இல்லாத உலக பகுதிகள்ல இந்த மாதிரி வினோத மிருகங்களின் நடமாட்டங்கள் இருந்ததாகவும், அதனால வந்த ஆராய்ச்சி தான் இதுன்னு சொல்றாங்க. இது இந்த கனடா நாட்டில, அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகள்ல அடிக்கடி நடக்கிற விஷயம். நம்ம ஊர்லயும் இமயமலை அடிவாரத்தில இந்த மாதிரி ஓடி ஒளியும் மிருகங்கள் நிறைய இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன். ஆனா என்ன, இந்த ஊர்ல இருக்கிற அளவுக்கு அதை பத்தி ஆராய்ச்சி நடக்குமான்னு, அது இல்லைன்னு தான் தெரியும்! இங்கே அந்த மிருகங்கள் தடத்தை மோல்ட் செஞ்சு அளவெடுத்து, அப்புறம் உருவம் எல்லாம் பத்தி கணக்கெடுத்து ஆராய்ச்சிகள், நான் நிறைய இந்த டிஸ்கவரி சேனல்ல பார்த்திருக்கேன்!

கடைசியில இந்த Paranormal நம்பிக்கை, அதான் பேய், பிசாசான்னு அதன் மேல் இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அதிகமா டிவி பார்க்கிறதாலே வரதுன்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. நம்ம ஊர்லயும் வெள்ளக்குதிரை, விடாது கறுப்பு, மர்மதேசம் மாதிரி சீரியல் பார்க்கிறதாலே கூட அதன் மீது நம்பிக்கை நிறைய வளரலாம்! இந்த ஊர்லயும் 'The X-Files', 'Touched By an Angel and Unsolved Mysteries' ங்கிற மாதிரி டிவி புரோகிராம் தான் காரணம்னு சொல்றாங்க!அதிலயும் இந்த நம்பிக்கை அதிகம் வக்கிறவங்க நம்ம பெண்கள் தானாம். அதுவும் கல்வி வீச்சு எங்கே அதிகம் இல்லையோ அங்கெல்லாம் இந்த பேய் பயம் உண்டாம், அப்புறம் முக்காவாசி பேருக்கு நம்பிக்கை அடுத்தவங்க மனசை இந்த டெலிபதி, கட்டம் போட்டு பேசறதாலே படிச்சிடலாம்னு நம்பிக்கையாம். 45 சதவீதத்துக்கு மேல இந்த வேத்து கிரக ஆளுங்க அப்புறம் அந்த UFO மேல் நம்பிக்கை இருக்காம். எப்பாடி, இப்படின்னா, இந்த கோர்ஸ் எல்லாம் படிச்சா நல்லா சம்பார்த்தியம் பண்ணலாம் போல! ம்.. கடைசியா ஆம்பிள்ள பேயை பேய்ன்னும், பொம்பள்ள பேய்யை பிசாசுன்னு சொல்வாங்களாமே, உண்மையா? அதான் காதல்பிசாசுன்னு பாட்டு போட்டாங்களா!

Wednesday, May 03, 2006

ஜோதிடம் இனி பலிக்குமா?- புது கிரகம் கண்டுபிடிப்பு!

இந்த சாமி இருக்கா, இல்லையான்னு கேட்டு ஏகப்பட்ட சர்ச்சை நடக்கிற மாதிரி, இந்த ஜோஸ்யமும் பலிக்குமா, பலிக்காதான்னு நிறைய பேருக்கு கேள்வி இருந்திக்கிட்டு இருக்கும். அதிலயும் ஜாதகம் கணிச்சு, பலன் பார்க்கிறவரங்க, எப்போதும் ஜோஸ்யர் வீட்டுக்கு ஜாதக்கட்டு தூக்கிக்கிட்டு அலையறவங்களுக்கு, இப்போ நான் கேட்கபோற கேள்வி, இனி ஜோதிடம் பலிக்குமாங்கிறது. ஏன்னு கேட்கிறீங்களா, இப்ப புதுசா கிரகம் ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்களே, அந்த கிரகத்தை கணக்கில சேக்காம ஜோதிட கணக்கெல்லாம் தப்பாயிடாது, அதான்! அது என்னா புதுசா கிரகம் தானே கேட்கிறீங்கா, ஆமா, புளூட்டோக்கு அப்புறம் கொஞ்சம் தள்ளி சுத்திக்கிட்டுருக்கிற ஒரு புது பிளானெட், கிரகம் ஒன்னை போன இரண்டு வருஷம் முன்னே கண்டுபிடிச்சாங்க, அது என்னான்னு கொஞ்சம் பார்ப்போமா?

இந்த ஜோஸ்யர்கிட்ட போய் உட்கார்ந்தா, இராகுவும் கேதுவும் எதிர்த்த எதிர்த்த வீட்ல உட்கார்ந்திகிட்டு இருக்காங்க, குரு இரண்டாம் இடத்தில இருக்கிறதானாலே கொஞ்சம் கஷ்டம், பணவிரையம், இல்லேனா உங்களுக்கு ஏழரை நாட்டு சனி அது இதுன்னு ஏதாவது சொல்லி பயமுறுத்துவாங்கெ! அதுவும் கல்யாணம் கச்சேரின்னு பொண்ணு மாப்பிள்ளை ஜாதகம் பொருத்தம் பார்த்து அங்க சரியில்லை, இங்க சரியில்லை, புத்திர பாக்கியம் இல்லை அது இதுன்னு மனசு ஒத்து புடிச்சிருந்தாலும் இந்த ஜோஸ்யகாரங்க அலும்பு தாங்காது போங்க. அதில்லையும் மெத்த படிச்சவங்களும் இதை நம்பிக்கிட்டு, 'டேய் என் பிளேனட்டரி பொஸிசன் சரியில்லடா' அப்புடி ஆயிடும் இப்படி ஆயிடும்னு சொல்லி புலம்பி தள்ளிக்கிட்டிருப்பாங்க! அப்புறம் இதில் ஒரு கணக்குப்போட்டு அந்தந்த கிரகங்கள் இருக்கும் நிலை, நீங்க பொறந்தப்ப இருந்த நிலை, இப்ப அது மாறி வரும் நிலையை வச்சு, கணிச்சு, வரக்கூடிய பலன், கண்டம், துன்பம், சச்சரவுன்னு அடுக்கிட்டே போவாங்க. இவெங்கெளுக்கெல்லாம் நான் கேட்கிற கேள்வி, இப்ப புதுசா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிட்டாங்களே,ஏற்கனவே இருந்த கிரகங்களை வச்சை குறி சொல்லிக்கிட்டிருந்தீங்க இப்ப உங்க கணக்கெல்லாம் என்னாவறது, இந்த குரு சந்திரமேட்ல உட்கார்ந்திருக்கிறான், சூரியமேட்ல உட்கார்ந்திருக்கான்னு சொல்லிக்கிட்டு திரிவீங்களே (முக்காவாசி பேருக்கு இந்த நாலம் வீடு, இரண்டாம் வீடு, எதிர்த்த எதிர்த்த வீடு, இராகு கேதுவை பார்க்குதுன்னு இந்த ஜோஸ்யகாரங்க சொல்றது ஒரு மண்ணும் தெரியாது, புரியாது, எந்த கணக்கில சொல்றாங்கன்னு, அதையே அடுத்தவங்ககிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருப்பாங்க!)

அது மாதிரி நம்ம கோவில்ல காலாகாலமா இந்த நவக்கிரகங்கள்ன்னு இந்த ஒன்பது தெரிந்த கிரகங்களைதான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இப்ப இந்த சூரியகுடும்பத்திலே புதுசா பிளேனட் கண்டுபிடிச்சிட்டாங்க, இதுக்கும் புது கிரகச்சிலை வச்சாவனும், நவக்கிரகம்ங்கிரதுக்கு பதிலா தசக்கிரகம்னு சொல்லனும் இனிமே! சரி விஷயத்துக்கு வருவோம்.

அமெரிக்காவில கலிஃபோர்னியாவில உள்ள 'California Institute of Technology' க்கு சொந்தமான பலொமர் வானிலை ஆராய்ச்சிக்கூடத்தில ('Palomar Observatory') பணிபுரியும் மைக் ப்ரவுன் (Mike Brown) என்கிற வானவியல் நல்லுனர்(astronomer) கண்டுபிடிச்ச இந்த புதுக்கிரகம் தான் ஷீனா("Xena")ங்கிறது! இவரு கண்டுபிடிச்சது கிரகம் தானா இல்ல வேற எரிநட்சத்திரம், வால்நட்சத்திரம், வின்மீன்கள் மாதிரியான்னு ஒரு சர்ச்சை நடந்துக்கிட்டு இருக்கு! ஆனா இது புளூட்டோ கோளத்தை விட பெரிசுங்கிறாதாலே இதை ஒரு புதுக்கிரகம்னு தான் சொல்றாங்க! இதுக்கு அந்த வானிலை ஆராய்ச்சிபடி வச்ச பேரு '2003UB313' இந்த புதுக்கிரக மட்டுமில்லாம, இன்னொரு புது கிரகமும், அதை சுத்தும் நிலவுகளையும் புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க! இன்னொரு புதுசா கண்டுபிடிச்ச கிரகம், அதாவது ஷீனாவோட அளவுல கம்மி, அது பேரு சான்டா ("Santa"), இதோட வானவியல் பேரு, 2003 EL61. இதை சுத்துற நிலவு பேரு "Rudolph", அதே மாதிரி இனொன்னு, "Easterbunny" (2005 FY9). அப்புறம் அந்த ஷீனா("Xena")வை சுத்துற இரண்டு நிலாக்கள் பேரு "Flying Dutchman" (Sedna), and "Gabrielle" (the moon of 2003 UB313). இப்படி கண்டுபிடிச்ச புது புது நகரும் கோள்களை இந்த மாதிரி பேரிட்டு அழைக்கிறாங்க, ஆனா அது எல்லாம் கிரகத்தின் வகைக்குள்ள வருமா வராதான்னு இப்பதான் பெரிய சர்ச்சை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த 2003, 2005 எல்லாம் அந்த வானவியல் பேருகளோட தொக்கி நிக்கிறதுல்ல, அது கண்டுபிடிச்ச வருஷத்தை குறிக்குது! அதாவது சூரிய குடும்பத்தில நாம் இவ்வளவு தான்னு தெரிஞ்சுக்கிட்ட ஒன்பது கிரகங்களுக்கு அப்பால் புதுசா கண்டுபிடிச்ச இந்த கோள்கள் மேலே இப்ப நிறைய ஆர்வம் வந்திருக்கு வானவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு! அது எப்படின்னு பார்ப்போமோ?

இந்த மாதிரி வானவியல் ஆராயச்சியில அப்ப அப்ப வரும் சேதிகள் என்னான்னா, பூமியை நோக்கி வரும் இந்த வால்நட்சத்திரங்கள் தான், அதை ஆங்கிலத்தில 'Near Earth Objects'ம்பாங்க. இதை வச்சு பல கதை கட்டிவிடுவாங்க, அதாவது இன்ன தேதியில உலகம் அழியப்போகுதுன்னு! ஒரு பெரிய வால்நட்சத்திரம் நம்மள நோக்கி வந்துக்கிட்டுருக்கு , அது வந்து முட்டி மோதினிச்சினா, அவ்வளவு தான், நாமெல்லாம் அம்பேல், அதுக்கு முன்னாடி அனுபவிக்கிறதெல்லாம் அனுபவிச்சிக்கங்க, ஷகீலா பிட்டு படம் இன்னம் பார்க்கலேன்னா பார்த்து முடிச்சிடுங்கன்னு நிறைய அனுமாஷம் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுவும் அந்த ஜோதிடம் மாதிரி தான்! இந்த ஊர்ல, அதுவும் நாகரீகம் கண்ட மேலை நாடுகள்ல, பைபிள்ல சொன்ன மாதிரி உலகம் 9/11, 2006ல அழியப்போகுது இந்த astroids வந்து தாக்கின்னுட்டு போட்டு நம்ம ஊரு நக்கீரன் மாதிரி பத்திரிக்கைகள் நிறைய இங்கே விக்கும், வாங்கி படிச்சி பார்த்துட்டு சரி அவங்க சொன்ன மாதிரி அந்த 'Near Earth Objects' பத்தி NASA வெப் சைட்ல தேடி பார்த்தீங்கன்னா, ஒரு மன்னும் கிடைக்காது எல்லாம் ஹம்பக்! இப்படியும் காசு பார்க்க சில பத்திரிக்கைகள் உண்டு. இந்த மேல்நாட்டு உலகம் ரொம்ப விசித்திரமானது, ஒன்னு அழகா விஞ்ஞான ஆராய்ச்சி அது இதுன்னு அறிவு பூர்மா நடக்கிற கும்பலு, இன்னொன்னு ஜீஸஸ், பைபிள்ன்னு அந்த விஞ்ஞான சாமாச்சாரத்தையே மதரீதியா ஏதாவது சொல்லி மக்களை பயமுறுத்திக்கிட்டு அலையறது, லேட்டஸ்ட்டா, இந்த 'குளோபல் வார்மிங்', அதை பத்தி மதத்தலைவர்கள் என்னா சொல்லி எப்படி பயமுறுத்தறாங்கன்னு ஒரு பதிவு அப்புறம் போடுறேன்!

இந்த 'Near Earth Objects' ரொம்ப சுவாரசியமான ஒன்னு, இந்த வருஷம் ஜனவரியில்ல, நம்ம பூமியை ஒட்டி போன அந்த வால் நட்சத்திரத்தோட ஒரு பெரிய ஆப்ஜக்ட்டை, அந்த நட்சத்திரம் வர்ற பாதையிலே திருப்பி மோதவச்சு அதை போட்டோ எல்லாம் எடுத்து NASA வில ஆராய்ச்சி செஞ்சாங்களே( Deep Impact), ஞாபகம் இருக்கா, அது மாதிரி இப்ப ஒரு பெரிய ரூமர், வதந்தி இந்த இணையத்திலேயே சுத்திக்கிட்டிருக்கு, என்னான்னா, இந்த ஒரு வால்நட்சத்திரம், பேரு '73P/Schwassmann-Wachmann 3' அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் பூமி சுத்தும் பாதையில் குறுக்கிடுது, அது இப்ப சூரியனின் ஈர்ப்பு விசையாலே, நாலு துண்டாகிப் போயி அந்த துண்டுகள் நம்ம உலகத்தை தாக்க போகுது, அதுக்கு வெள்ளோட்டமா தான் இந்த சுனாமி, புயல், பூகம்பம் காட்டுத்தீ எல்லாம், அப்புறம் மிகப்பெரிய அழிவு, வரபோவுதுன்னு ஒரே பீலா போங்க, அதுவும் சில வெப்சைட் சயிண்டிபிக்கலா, அந்த உடைஞ்ச துகள்ல இருந்த வந்த போட்டான்ஸாள தான் இத்தனை இயற்கை கொடூரமும் நடந்துச்சுன்னு ஹேஸ்யம் சொல்லிக்கிட்டிருக்காங்காங்க! ஆனா NASA வோட அறிக்கையின்படி இதெல்லாம் ஒன்னுமில்லை, அது உடைஞ்ச துண்டுகள், பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பாலதான் கடந்துக்கிட்டிருக்கு, அதுனால நம்ம பூமிக்கோ, இல்ல மேலே சுத்திக்கிட்டிருக்கிற 'International Space station' க்கோல்லாம் எந்த ஆபத்துமில்லை, அப்படின்னு சொல்லியிருக்காங்க. ஆனா இது போல உடைஞ்சு சிதறிய துண்டுகள் விழுந்த கதையும் இருக்கு. 1992ல, இதே மாதிரி சுத்திக்கிட்டிருந்த வால்நட்சத்திரம் உடைஞ்சு சிதறி 17 துண்டுகளா ஜீபிடர் கிரகத்தில விழுந்த கதை உண்மையானது அதுனால தான் இந்த பீதி! பாத்தீங்களா, விஞ்ஞானத்திலேயும் எவ்வளவு ஜோஸ்யம்னு!

சரி இந்த புது கிரகத்தை பத்தி பார்ப்போம். நெப்ட்யூன்க்கு அப்புறம் கண்டுபிடிச்சது தான் புளூட்டோ, இது எங்க சுத்திக்கிட்டிருக்குன்னா, நம்ம சூரிய மண்டலத்தின் வெளி சுற்று மண்டலம் இருக்குல்ல, அதுக்கு பேரு 'Kuiper belt' அதாவது நெப்ட்யூன் கிரகத்துக்கு அப்பால வெளியில 100 AU (Astronomical Units ) (1 AU ங்கிறது சூரியனுக்கும் பூமிக்குள்ள தூரம்) தூரத்தில இருக்கிற மண்டலம் தான் இந்த 'Kuiper belt', அந்த மண்டலத்தில இந்த புது கிரகத்தை கண்டுபிடிச்சிருக்காங்க! இந்த மண்டலத்தில தான் 10 கோடி வின்மீன்கள் சுத்திக்கிட்டிருக்கு, அங்கே இருந்து வரக்கூடிய வின் மீன்கள் (உடைஞ்ச பாகங்கள்) தான் நம்ம பூமி சுத்திக்கிட்டிருக்கிற மண்டலத்தில வரக்கூடியது, நான் மேலே சொன்ன மாதிரி! சரியா சொல்லனும்னா 10 பில்லியன் மைல் சூரியன்லருந்து இந்த கிரகம்! இது ஒரு பனிக்கிரகம், எல்லாமே ஐஸ்!இது சூரியனை சுற்றும் பாதையின் அளவும் புளூட்டோ கிரகத்தின் சுற்று பாதையை போல இரண்டு மடங்கு பெரிது! புளூட்டோ சூரியனை சுத்தி வர 250 வருஷமாச்சுன்னா, இந்த புதுக்கிரகம் சூரியனை சுத்தி வர பிடிக்கும் வருடங்கள் 560! இந்த கோளத்தின் அளவு குறுக்காக 2400 +/- 100 km, இதனுடய வெளிப்பரப்பு மலைகளாலும் பனிகளாலும் சூழப்பட்டது. செவ்வாய் கிரகம் சிவப்பாய் இருப்பதால் ரெட் பிளானட்ன்னு சொல்றமாதிரி, இது வொயிட் பிளானட்! இன்னொன்னு தெரியுமா இந்த கிரகத்தோட தட்பவெப்ப நிலையின் மாறுதல் 60oF லிருந்து 360oF, அதுவும் நம்ம பூமி கணக்குபடி ஒரு ஆறு மாச காலத்துக்குள்ள!

இந்த புது கிரகத்துக்கு வச்ச பேரு ஷீனா('Xena') தற்காலிகமானது, இதுக்கு என்ன பேரு வைக்கலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க! பொதுவா கிரேக்க கடவுள் இல்லேன்னா ரோமக்கடவுள் பேரைதான் இந்த புதுசா கண்டுபிடிச்ச கோள்கள், வின்மீன்களுக்கு, வால்நட்சத்திரங்களுக்கு வைக்கிறது வழக்கம், அது மாதிரி ஏதாவது அந்த கடவுள்கள்ல ஒரு பேரை வைக்க யோசிச்சிக்கிட்டிருக்காங்க! இன்னொரு வாதம் என்னான்னா, கண்டுபிடிச்ச இந்த புது கோள் கிரகம் தானா அப்படின்னு! எதை கிரகங்கள்னு சொல்றது? வானத்தில புதுசா கண்டுபிடிக்கிற கோள்களை எல்லாம் கிரகங்கள்னு சொல்லிடமுடியுமா? கிரகம்ங்கிறது உருண்டையாய், தன்னுடய ஈர்ப்பு விசையால் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றதோ அதுவே கிரகம் ஆகும்!
ஆனால் சரித்திர கூற்றுபடி ஒன்பது கிரகங்கள் தான் (Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, and Pluto are planets. Nothing else in the solar system is a planet). இது விஞ்ஞான விளக்கத்திற்கு சற்றும் பொருந்தாத கூற்று! அதே சமயம் புளோட்டா கிரகத்தின் அளவை விட சற்று பெரிதாக இருக்கும் கோள்கள் அனத்தும் கிரகங்களாகும், இந்த விளக்கபடியும் கிரகங்களை சொல்லிவிடமுடியுமா என்ற வாதம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோள் சரித்திர, விஞ்ஞான் விளக்கத்திற்கு பொருத்தமாக இருப்பதால் இது ஒரு புது கிரகமே என்பது வாதமாகிறது. ஆக அப்படியான இந்த புது கிரகம் ஷீனாவை கணக்கில் எடுத்துக்கொண்டு நமது ஜோதிடர்கள் இனி ஜோதிடம் கணிப்பார்களா என்பது தான் என் கேள்வி?

அப்படி கணிக்காத ஜோஸ்யம் இனி பலிக்காது, எப்படி? இதபத்தி நம்ம ஜோஸ்யக்கார அண்ணாச்சிங்க எண்ண சொல்றாங்க? இது மாதிரி இனி யாரும் ஜோஸ்யம் பார்க்க போனீங்கண்ணா தவறாம இதகேட்டு தெரிஞ்சுக்கங்க! அப்புறம் நம்ம ஊரு கணக்குப்படி இந்த புது கிரகம் எந்த கதையிலும் வந்திருக்கான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கோ! ஆக இனி ஜாதககட்டம் கூட்டு கழித்தல், அப்புறம் ஜாதக கணக்கு எல்லாத்திலேயும் இந்த பத்தாவது கிரகத்தையும் கணக்கில எடுத்துக்குவாங்களா? புதுசா வந்த நம்மூர் பஞ்சாங்கத்தில இது போட்டாச்சா?? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!

Saturday, April 29, 2006

கருவிலே உருவான அற்புதம்!

அந்த காலத்திலே சிவசங்கரி எழுதிய கதை 'ஒரு சிங்கம் முயலாகிறது' படிச்சிருக்கிங்களா? இல்ல அந்த கதையை வச்சு வெளி வந்த படம் 'அவன் அவள் அது' பார்த்திருக்கிறீங்களா? சரி அதுவும் இலேன்னா இப்ப சமீபத்தில வந்த 'கண்டேன் சீதையை' படம், விக்ரம் செளந்தர்யா நடிச்சது பார்த்திருக்கீங்களா? சரி அதுவும் இல்லேன்னா ஹிந்திலே ஒரு படம் வந்துச்சே 'சோரி சோரி சுப்கே சுப்கே' ன்னு சல்மான்கான், ராணிமுகர்ஜி, ப்ரீத்தி சிந்தா எல்லாம் நடிச்சது. ஏன் கேட்கிறேன்னா, நான் மேலே சொன்ன படங்கள், அந்த சிவசங்கரி கதை, எல்லாம் 'வாடகை மனைவி' என்கிற கருவை மையமா கொண்டது. குழந்தை பெறமுடியாம போயி அதுக்காக இன்னொரு பெண்ணின் கருவிலே, வாடகைக்காக அமர்த்தப்பட்ட பெண்ணின் (Surrogate mother) கருவிலே குழந்தை சுமக்க, செயற்கை முறை கருத்தரிப்பால் (artificial insemination) குழந்தை உண்டாக்கி (சில சமயம், நம்ம சினிமாகாரங்க, கதைக்கு சூடு வேணும்னு இயற்கையாவே இணைய வச்சு, சூடேத்தறது வந்து.. அது தனிக்கதை!) அப்புறம் சென்டிமெண்டலா பல முடிச்சோட சிக்கல்களை அவுக்கும் கதையை கொண்ட படங்கள் தான் நான் மேலே சொன்னது. சரி இப்ப அதுக்கென்னான்கிறீங்களா, இருக்கே, இன்னைக்கி பலத்த சர்சைக்கிடையே நடைப் பெற்று வரும் ஆராய்ச்சி எதுன்னா இந்த 'Human Cloning and Embryonic Stem Cell Research', அதாவது கருவிலருந்து எடுக்கப்பட்ட கருவணு('Stem Cell') கொண்டு எப்படி பட்ட அற்புதம் இந்த மருத்துவ உலககுக்கு வரப்போகுது, அந்த ஆராய்ச்சிக்கு ஏன் உலகத்தில இவ்வளவு எதிர்ப்பு இருக்குங்கிற கதை தெரியுமா உங்களுக்கு? தெரியலைன்னா கீழே பார்ப்போம் அது என்னான்னு!

கொஞ்சம் விவரமா உள்ள போகுமுன்னே, நீங்க மகாபாரதம் கதை படிச்சோ இல்ல பார்த்தோ இருந்தீங்கன்னா, அதில் காந்தாரிக்கு 100 கெளரவர்கள் எப்படி பிறந்தாங்கன்னு தெரியுமில்ல. வேணும்னா 'பாலபாரதம்'னு ஒரு படம் வந்தது, அந்த பட கேசட்டு வாங்கி பாருங்க. அதில முனிவர், காந்தாரி கருவுற்றிருந்த வயித்தில இருந்த வந்த பிண்டத்தை ஒரு 100 கூறா போட்டு, அதில மூலிகை ஓமம் எல்லாம் போட்டு முனிவர் ஒரு இரண்டு வருஷம் தபஸ்யம் பண்ணி பொறந்த குழந்தைங்க தான் கெளரவர்கள்! ஆக அந்த மகாபரத்தில விவரிக்கிற முறைகள் இருக்கே, அதே மாதிரி தான் கருவிலிருந்து பிரித்தெடுக்கும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி, வளர்ச்சி எல்லாம் நாம தொலைச்ச அந்த பழயகால விஞ்ஞானம்!

இந்த கருவணு ('Stem Cell') என்னான்னு ஒரு விஷேஷமான தனித்துவம் வாயந்த உயரணு, மத்த உயிரணுக்கள் போல இல்லாம, எந்த உறுப்பையும் சார்ந்தது கிடையாது. அதாவது நம்ம உடம்புல இருக்கிற மூளை, தோல், இருதயம் போன்ற உறுப்புகள்ல இருக்கிற உயரணுக்கள், அந்த அந்த உறுப்புகள் ஒழுங்காக பணிபுரிய உண்டான செயல்கள் மட்டும் செய்யக்கூடிய வகையில் அமைந்தவை. அதற்காக உண்டான ஜீனோம்கள் அமைந்த செல்கள் தான் இந்த உறுப்புகளில் இருக்கும் செல்கள். இந்த ஜீனோம் பத்தி கொஞ்சம் விவரம் வேணும்னா, நான் ஏற்கனவே போட்ட பதிவு, ஜீனோம் - Who is your Daddy? போய் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க!
ஆனா இந்த கருவணுக்கள் எந்த உறுப்புகளையோ, எந்த ஒரு உடம்பின் பாகங்கள் செய்யக்கூடிய செயல்களையும் சார்பற்று இருப்பது தான் இந்த ஸ்டெம் செல் என்பது. இந்த கருவணு குழந்தை தரிச்ச கருமுட்டையில் உள்ள ஒன்னு. அதாவது குழந்தை முழு வளர்ச்சி அடையறதுக்கு முன்னே கருத்தரிச்ச சினைப்பையில இருக்கிற அந்த ஜீவப்பொருள்ல உள்ள அணுதான் இந்த கருவணு, இதை ஆங்கிலத்திலே 'ஸ்டெம் செல்'('Stem Cell')ன்னு சொல்லுவாங்க! மத்த அணுக்கள் மாதிரி, தன்னை பிரதி எடுத்து, தானே பெருகும் திறன் கொண்டவை. ஆனால் இந்த ஸ்டெம் செல்கள், மற்ற செல்களாக மாறக்கூடிய தகுதிபடைத்தவை, அதாவது மனித உடம்பில் இருக்கும் 200 வகை அணுக்களில் எந்த அணுக்களாகவும் மாறக்கூடிய திறன் கொண்டவை!

1998 ம் ஆண்டு, விஞ்ஞானிகள், இந்த கருவணுவை, கருமுட்டையிலிருந்து தனியாக பிரித்தெடுத்து அதை பரிசோதனக்கூடத்திலே வைத்து வளர்ச்சியடைய செய்து, அதை எந்த விதமான அணுக்களாகவும், பழுதுப்பட்ட உறுப்புகளில், இதயமோ, நரம்பு மண்டலங்களோ, இல்லை இரப்பையில் உள்ள சுரப்பியோ ( pancreas), அதற்கு தேவையான அதன் உயிரணுக்களாக மாற்றி அதை புகுத்தி தசைகளாகவும், அந்த நன்கு இயங்கும் உறுப்புகளாக மாற்றும் சிகச்சை செய்ய வல்லமை படைத்த உயிரணு இந்த ஸ்டெம் செல் என அறிந்து கொண்டனர்! இதுவே ஆரம்பம்! மேற்கொண்டு இதை போன்ற இன்னொரு ஸ்டெம் செல், அதாவது ஸ்டெம் செல் போன்ற குணாதிசயத்தை கொண்ட உயிரணுக்கள், வளர்ந்த மனிதனின் இரத்தத்திலிருந்தும் எடுக்கலாம் என்றும், அதற்கு 'adult stem cells' என்று கூறி அதிக காலமாக மருத்துவ சிகிச்சைகளில் உபயோகத்தில் இருந்ததும் தெரிந்ததே!ஆனால் இந்த 'adult stem cells' களையும் அந்தந்த உடல் உறுப்புகளில் சார்ந்த உயிரணுக்களாக மாற்றும் திறனையும் கண்டறிந்தனர். அந்த மாற்றும் முறைக்கு 'adult stem cell plasticity' என்று பெயர்! இந்த இரண்டு வகை ஸ்டென் செல்களுக்கும் அந்த மாற்றும் திறன் இருந்தாலும், இந்த 'adult stem cells' உபயோகிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். மேற்கொண்டு, இந்த செல்களை கொண்டு முழுமையான சிகிச்சை மருத்துவம் ('cell-based therapies' )முழுமை அடைய இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதனை உபயோகத்தில் கொண்டுவர உலகம் எங்கிலும் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்! ஆனால் இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு நிறைய எதிர்ப்புகளும், அந்த ஆராய்ச்சின் குளறுபடிகளும், இன்றைக்கு மிகப்பெரிய செய்திகளாக வருகின்றன. நம்மள்ல எத்தனை பேருக்கு இதுள்ள ஆர்வமா, என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்ப அப்ப CNN,BBCல வர்ற நியூஸை பார்க்கிறீங்களோ எனக்குத் தெரியாது. சில சமயம், நான் இதை பாதி புரிஞ்சும் புரியாமலும் கேனத்தனமா பார்த்துட்டு, அப்புறம் அது விட்டுடறதோட சரி. மேலே என்னான்னு போய் பீராஞ்சப்பதான் நிறைய விஷயமே விளங்குச்சு. நீங்களும் அப்படித்தான்னா, தெரிஞ்சக்க இஷ்டம்னா, வாங்க கீழே பார்ப்போம்!

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில முக்கியமா என்னான்னா, சரியா இந்த உயிரணுக்களை ('Stem Cell') எல்லாம் பிரிச்செடுத்து, அதை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து (culture ல வளர்த்து) அதை ஸ்டெம் செல்லுதான் நிருபிக்கிறதுக்குதுங்கிறது ஒரு பெரிய சவால்! அதுவும் ஆராய்ச்சிக்குன்னு எடுத்துக்கிறது இந்த மிருகங்களோடது தான், அதுவும் மிக்கியமா சுண்டெலியோடது! இதை ஒரு 20 வருஷமாவே பெரும்பாலும் இந்த எலியிலருந்து எடுத்து தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா 1998ம் ஆண்டு,'James Thomson' ங்கிறவரு, அமெரிக்காவில உள்ள விஸ்காஸின் பல்கலைகழகத்தில், மனித கரு முட்டையிலிருந்து எடுத்து உயிரணுவை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து அதை தொடர்ந்து வளர்ச்சி அடைய செய்ய வச்சாரு, அதே மாதிரி 'John Gearhart' ங்கிறவரு 'Johns Hopkins' பல்கலைகழகத்திலயும் வளர்ந்த மனித கருவிலருந்து எடுத்தது 'human embryonic germ cells'ங்கிற வகையை சார்ந்த்து. இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமானது இந்த cell "lines" ன்னு சொல்லக் கூடிய அந்த உயிரணு தொடர்ச்சி முக்கியம், அதவாது செல்களில் பெருக்கம் வளர்ச்சி, நிறைய நாட்களுக்கு இறந்து போகாமல்! அப்பொழுது தான் அதை பற்றி மேற்கோண்டு ஆராய்ச்சி செய்து மத்த செல்களாக மாற்றம் செய்விக்கும் முறையை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கும் முறையை கண்டறியவும் தோதுவா இருக்கும். அப்புறம், நான் சொன்ன அந்த பழுதுபட்ட உடலுறுப்புகளில் இந்த 'cell-based therapies' சிகிசை செய்ய நிறைய இந்த கரு உயரணுக்கள் தேவை! அங்கதான் சிக்கலே!

ஆக இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்னான்னா, சில நோய்கள் என்ன தான் மருந்துக்கள், மாத்திரைகள் சாப்பிட்டாலும், அதை கட்டுபாடில் வைத்து கொள்ள முடிகிறதே தவிர அதை முற்றிலுமாக குணப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்ட நோய் என்னான்னா, முதல்ல சர்க்கரை நோய்(diabetes), பிறகு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் இருதய நோய் (chronic heart disease), பக்கவாதம் இல்ல நரம்பு தளர்ச்சி (Parkinson's disease), கல்லீரல் நோய், கடைசிதருவாயில் இருக்கும் சிறுநீரக நோய், கடைசியா புற்று நோய்.இந்த நோய்களுக்கெல்லாம் இந்த ஸ்டெம் செல் கொண்டு அளிக்க போகும் சிகிச்சை முறை ('cell-based therapies')தான் துயர் தீர்க்கும் மிகப்பெரிய சிகிச்சை! (முக்கியமா மொத்த உலகமும் எதிர்பார்ப்பது இந்த சர்க்கரை நோய் தீர்க்கும், ஆக முற்றிலும் குணமாக்கும் அந்த நோய் தீர்க்கும் சிகிச்சைக்காக!) அதற்காக நடந்துவரும் ஆராய்ச்சிகள் தான் இப்பொழுது இந்த 'Stem Cell Research' என்பது! இன்றைக்கு இருக்கும் சிகிச்சை முறையிலே இந்த மாற்று உறுப்பு பொருத்துதல் ('transplantation') எப்படியொரு வெற்றி பெற்ற சிகிச்சையாக இருக்கிறதோ, இந்த மாற்று ஸ்டெம் செல்களின் முறை ஒரு பெரும் வெற்றியாக வர வாய்ப்பு இருக்கிறது! ஆனால் இன்னைய தேதிக்கு இந்த செல்களை எடுத்து பொருத்தி சிகிச்சை பண்ணினால் நமது உடம்பு ஏற்பதில்லை. ஆக அந்த ஏற்று கொள்ளும் வகையிலே இந்த உயிரணுக்களை மாற்றி அமைத்து சிகிச்சை ஏற்படுத்தி கொள்ள இன்னும் இந்த ஆராய்ச்சியிலே பலகாத தூரம் போக வேண்டி உள்ளது! ஆனாலும் அந்த சிகிச்சை முறை கனிந்து வரும் காலம் அதிக தூரமும் இல்லை!

இப்படி நடந்து வரும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் ஏனென்றால், இந்த ஸ்டெம் செல்களை வளர்ந்து வரும் கருவிலிருந்திருந்து பிரித்தெடுப்பதால், ஒரு ஜீவனை, சிசுவை கொல்ல வேண்டும். அப்படி வளரும் மனித சிசுவைக் கொன்று அதை ஆராய்ச்சியின் உபயோகத்திற்கு உட்படுத்துவது பெரிய பாவம் என்று மதத் தலைவர்கள் கோஷமிடுவதால், ஆராய்ச்சி ஒழுக்கதிற்கே ('Research Ethics') பாதகத் தன்மை விளைவிப்பதாக விஞ்ஞான சமூகத்தில் சிலர் கருதுகின்றனர்! ஆனால் இந்த ஆராய்ச்சியை ஆதிரிக்கும் சிலர், மனித குலத்துக்கே வாழ்வளிக்கக்கூடிய, குணப்படுத்த முடியாத வியாதிகளை குணபடுத்தும் சிகிச்சைகளை வழிகொடுக்கும் ஆராய்ச்சி இது என்று கூறுகின்றனர், அதுவும், நாங்கள் யார் கருகலைப்பில் ஈடுபடிகின்றனரோ அவர்களிடமிருந்து தான் அதை பெறுகிறோம், ஆக இது ஒன்றும் பாவமில்லை என்று வாதிடுகின்றனர். மேற்கொண்டு தனியார் மூலம் நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருந்த நிறுவனங்கள், இப்பொழுது அரசாங்க நிதி உதவி பெற முயற்சிப்பதால், பெரும்பான்மையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன! இப்படியாக சர்ச்சையுடன் சென்று கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியிலே சில குளறுபடிகலும், சில மோசடிகளும் நடந்தவண்ணம் இருக்கினறன.

போன மாதத்திலே தென் கொரியாவிலே, Dr. Hwang என்பவர் இந்த ஸ்டெம் செல் ஆராயச்சி பற்றி ஒரு முக்கியமான உண்மைகளை கண்டுபிடித்ததாக அவர் வெளியிட்ட கண்டுபிடிப்பில், அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளும் படியான கருத்துகளும் சங்கதிகளும்(stem cell lines Data) இல்லை என்றும், அனத்தும் மோசடி என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! இதற்காக, அவர் எடுத்து கொண்ட முட்டைகள் 185 என்று வெளியிட்டார்,ஆனால் இவை 2200 மேற்கொண்டு இருக்கும் என அறியப்பட்டுள்ளது. இதற்காக அவர் முட்டை பெற்ற கர்ப்பம் தரித்த பெண்களுக்கு தலா 1400 டாலர் கொடுத்ததாகவும், இது அந்நாட்டு அவ்வாரய்ச்சியின் சட்ட திட்டத்துக்கு புறம்பானதென்றும், இதிலே அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரு பெண்களும் தங்கள் கருவுற்றிருந்த முட்டைகளை கொடுத்து உதவியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது அந்நாட்டு அரசின் பல லட்ச டாலர்கள் உதவியுடனும், சரியான் ஒழுக்க கட்டுபாட்டுடனும் நடக்க வேண்டிய ஒரு ஆராய்ச்சி. ஆனால் Dr. Hwang அனைத்தையும் மீறி ஒழுக்கமின்றியும், மோசடியுடணும் நடந்த இந்த அராய்ச்சியின் விளைவு பல பாதிப்புகளை இந்த ஆராய்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. அதனால் உலகெங்கும் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இப்படி அநேக எதிர்ப்புகளையும் தாங்கி நடந்து வரும் இந்த ஆராய்ச்சி மனித குலத்துக்கு நல்லது செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல் எடுத்து இப்பொழுது ஆராய்ச்சியில் இருக்கும் நிலை மாறி சிகிச்சை நிலக்கு மாறினால், நிறைய உயிரணுக்கள் தேவை படும் பொழுது இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக்கப்படும், அப்பொழுது ஏழ்மை நிலையில் இருக்கும் கருவுற்ற பெண்கள் தங்கள் சிசுக்களை கொன்று இந்த சிகிச்சைக்கு தேவையான கரு உயிரணுக்கள் தர முன்வந்து, இது எப்படி பட்ட பயங்கரமான நிலைக்கு வரக்கூடும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது!