Tuesday, December 04, 2007

வேட்டையாடு வேலைத்தேடு!

இப்ப தான் போன வாரம் டிசம்பர் மாச குளிர் ஆரம்பிச்சோன நம்ம கால்கரி மன்றத்திலே விழா நடத்தி முடிச்சோம், நம்ம ஊரு பக்கம் நடக்கிற டிசம்பர் சங்கீத விழா மாதிரின்னு வச்சுக்கங்க! அப்ப போட்ட ஒரு காமடி குறு நாடகம்! இதோ உங்கள் பார்வைக்கு கீழே! இந்த நாடகம் போடறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு! முக்கியமா நடிச்ச எல்லாருமே ஒன்னயிருந்து ரிகர்சல் பார்த்ததா சரித்திரமில்லை, கடைசி நாளு வரை எல்லாரும் ஏதாவது டைல்லாக்கஒ மறந்து சொதப்பிக்கிட்டே இருந்தோம். கடைசியிலே நாடகம் போட்ட அன்னைக்கு இந்த மைக்குங்ககளும் சரியா எடுக்காம சவுண்டு சிஸ்டம் எல்லாம் சொதப்பி ஏதோ போட்டு முடிச்சோம்! முக்கியமா என்னை சொல்லனும், ஒவ்வொர்ய் ரிகர்சல்லையும் டைலாக்கே வுட்டுட்டு வுட்டுட்டு சொதப்பிக்கிட்டே இருந்தேன். ஆனா நாடகம் போட்ட அன்னைக்கு எல்லாரும் சொன்னங்க, நான் கிளப்பிட்டேன்னு! நமக்கு இந்த மேடை கூட்டம்னு இருந்தா தான் களை கட்டும். என்னமோ போங்க! பதிவு போட நேரம் கிடைக்கலை,ஆனா டிராமாவை மட்டும் ஏத்திட்டியான்னு நீங்க எல்லாம் சத்தம் போடறது கேட்குது. கவலை படாதீங்க தொடர்ந்து மாசம் ஒன்னாவது எதையாவது எழுதி போடணும், இல்லை இந்த கூகுள் காரங்களுக்கும் சந்தேகம் வந்து என்னடா இவன் ப்ளாக் சைட் அப்படியே டார்மெண்டா இருக்கே, இது ஸ்பேம்மா இருக்குன்னு ப்திவு எழுதவுடாம பண்ணிட்டாங்க. அவங்க கையிலெ கால்லவுழுந்து கெஞ்சி கூத்தாடி நம்ம சைட்டை தொறக்க சொல்லி இந்த பதிவை போடறேன். ஆக தொடர்ந்து நீ எழுதுனா தான் உன்னை ஆட்டத்துக்கு சேத்துக்குவேன்னு சொல்லிட்டாங்க! அதனால அய்யா இனி உங்க கழுத்து அறுபட போகுது, சரி நம்ம நாடகத்தை பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க!

நம்ம தமிழ் நாட்டைவுட்டுட்டு வந்து கனடாவுல்ல இந்த மாதிரி நம்ம ஆளுங்க கூத்தடிச்சுக்கிறது சுகமா தான் இருக்கு! எனக்கும் 23 வருஷத்தக்கப்பறம் இந்த மாதிரி சின்ன தா மேடை ஏறுகிற வாய்ப்பு கிடைச்சது என்ன தான் சீரியலா எனை ஆண்ட் அரிதாரம்னு அந்த கால கதையை எழுதியிருந்தாலும், இவ்வளவு நாளைக்கப்பறம் அரிதாரம் பூசி (எங்க பூசினேன், சும்மா தொப்பியை மாட்டிக்கிட்டா அரிதாரம் பூசினது மாதிரி ஆயிடுமா?) நடிச்சதை நீங்க பார்க்க வேணாமா? சும்மா நாடகம் அந்த காலத்திலே நடிச்சேன், ஸ்டியோவிலே எல்லாரையும் பார்த்தேன் அந்த சர்க்கியூட்லேயே சுத்தினேன் எத்தனை பதிவு எழுதி போரடிச்சேன். இப்ப போட்ட இந்த "வேட்டையாடு வேலைத்தேடு" குறுநாடகத்தை பார்த்துட்டு உங்க கமென்ட்டை எழுதுங்க, வர்ட்டா!

1 comments:

said...

வெ.நா,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ஒலிபெருக்கிகள் சரியாக வேலை செய்யாததாலோ என்னவோ சில வசனங்கள் தெளிவாகக் கேட்கவில்லை.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு அவர்களை உங்கள் பாத்திரம் நினைவுபடுத்தியது. மிகவும் இயல்பாகவே நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.

மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களூம்.