Saturday, January 19, 2008

வரவு எட்டணா செலவு பத்தணா- இன்றைய அமெரிக்கா!

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! புது வருஷத்திலே எல்லாரும் சந்தோஷமா ப்ளாக் எழுதிருப்ப, நானும் அப்ப அப்ப வந்து போற மாதிரி தொடர்ந்து எழுதலாமுன்னு யோசிச்சப்ப என்ன எழுதலாமுன்னு பார்த்தா, இந்தோ இந்த வாரத்தோட முக்கியமான ஹைலைட்டா அமெரிக்க சந்தையிலே பங்குங்களின் சரிவை தொடர்ந்து பார்க்க முடிஞ்சது. எல்லா ஸ்டாக்கும் அம்பேல். இந்த வியாபாரத்திலே போன வருஷம் என்ன சம்பாதிச்சாங்களோ எல்லாம் கபால்னு போயே போச்சு! எல்லா ஸ்டாக் எக்ஸேஞ்சுலேயும் ட்ரிபுள் டிஜிட் இறக்கம் அடின்னா அடி செம அடி! அதில காசு போட்டவன் கதி கந்தரகோலங்கர கதை தான்! மொத்ததிலே அமெரிக்கா பொருளாதாரம் சரிவு அடஞ்சிடுச்சு! இது இப்படியே போனா அவ்வளவு தான் அமெரிக்கா படுத்து தூங்க வேண்டியது தாங்கிற நிலைமை வந்துடுச்சோன்னு ஒரே பீதி! இதெல்லாம் பார்த்து பயந்து இந்த சரிவை சரி பண்ண, அப்பறம் இறங்கு முகமா இருக்கிற பொருளாதாரத்தை சரி பண்ண அமெரிக்க அரசாங்கமே மக்களுக்கு காசு கொடுத்து அதை சரி கட்ட போறதா நேத்து ஒரு பிரகடணம்! இதெல்லாம் என்னான்னு தெரியுமா மக்களே!இந்த அமெரிக்க பொருளாதார வீச்சாலே அவங்களுக்குதான் நட்டமுன்னுட்டு இல்லை அதை சார்ந்திருக்கிற அனைத்துலக நாடுகளுக்கும் இந்த தாக்கம் இருக்கும்! இதுக்கெல்லலம் என்ன காரணமுன்னு யோசிச்சிங்களா கணவான்களே! இல்லேன்னா இந்தோ நான் மேலே போட்ட பதிவோட தலைப்பு தான்!

அப்பவே 60கள்ல வந்த பாமா விஜயத்திலே இதை பாடிட்டாங்க! வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரெண்டணா கடைசியிலே துந்தணா! அது எவ்வளவு பொருத்தம் இந்த ஊருக்குத் தெரியுமா! இந்த சரிவுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமே வரவுக்கு மீறின செலவு தான்! எப்படிங்கிறீங்களா! இதே இங்க ஆரம்பிக்கிது கதை, அதாவது இந்த அடிக்கு எல்லாம் காரணம் இந்த 'சப் ப்ரைம்' (Sub Prime) தான்! என்னாது வீடு வாங்க கொடுத்த கடன் தான்! அதாவது வருமானம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கு தகுந்த மாதிரி தான் கடன்ன்னு உண்டு, அது ப்ரைம்(Prime), ஆனா அதிகம் சம்பாதிக்கனும் ஆசைப்பட்ட பாங்குங்க, அந்த கடன் வாங்க தகுதி இல்லாதவனுக்கும் கடனை கொடுத்து, கடைசியிலே போண்டி ஆன கதை தான் இந்த கதை! அது மட்டுமில்லை சொந்த வீடு வச்சிருந்தவங்கிட்டேயும் உன் வீட்டு விலை இன்னைக்கு இவ்வளவு போகுது அதனாலே உன்னோட வீட்டு மதிப்பு அதாவது ஈக்குவுட்டிம்பாங்க! அதத வச்சி கடன் வாங்கி உனக்கு தேவை இருக்கோ இல்லையோ பொருளையும் வசதிகளையும் வாங்கி தள்ளிக்கோன்னு கடனை தூக்கி கொடுத்து அதை அவனுக்கு கட்ட வழியில்லாம போயி போண்டி ஆனதாலே வந்த வினை தான் கடைசியிலே பங்கு சரிவு!

அதெல்லாம் சரி பங்கு சரிவுக்கும் கடங்கட்டாதுதுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேட்பீங்க! அங்க தான் இருக்கு பொருளாதார அடிப்படையே! சராசரி மனுசன் செலவளிச்சாதான் உற்பத்தி பெருகும், பணம் புரளும் அப்பறம் திருப்பி பணம் கிடைக்கும் முதலீடு செய்யலாம் எல்லாருக்கும் வேலை கிடைக்கும் திரும்ப பணம் கிடைக்கும் செலவு பண்ணுவாங்க, திரும்ப முதலீடு பண்ணுவாங்க, திரும்ப வேலை, திரும்ப பணம், இது தான் பொருளாதரத்தோட இந்த் சக்கர சுழ்ற்சி! எங்கயாவது எதாவது ஒன்னு நின்னு போனா, அப்ப தான் அடி! அப்படிதான் இப்ப ஆச்சு! அதாவது தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கடங்கொடுத்து, அவன் கட்டமுடியாம போய் பேங்குகளுக்கெல்லாம் பில்லியன் டாலர்களுக்கு அடி, அவங்கிட்ட இருந்தா தானே முதலீடு செய்ய பணம் கொடுக்க முடியும்! கடங்கட்ட முடியாம, கையிலே காசு கம்மியாயி செலவு பண்ண முடியாம போக உற்பத்தி எல்லலம் முடங்க, வேலை இல்லாம, பணம் புரளாமா போனதாலா, சந்தையிலே அவனவன் பதறி போயி போட்ட காசை எடுத்தா போதும்னு எல்லாத்தியும், அதாவது எல்லா ஸ்டாக்குகளையும் விக்க போயி சரிவு, நட்டம்! பொருளாதார வீழ்ச்சி, இப்ப புரிஞ்சிதா! (அப்பா ஒரு படி பாலு குடிக்கணும்!)


சரி இப்படியே போன கதை கந்தல் தான்னு நேத்து அமெரிக்கா அதிபர் புஷ் 140-150 பில்லியன் டாலர், அதாவது அவங்க GDPயிலெ 1% மக்களுக்கு தானமா கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க! அதாவது மக்களுக்கு அரசாங்கமே பணத்தை கொடுத்து செலவு பண்ணுங்கடான்னு சொல்றதுக்கு! நான் மேலே சொன்ன மாதிரி சராசரி மனுசன் செலவளிச்சாதான் பொருளாதார சுழற்சி இயங்கி அது விரிவடையும்! அவங்க பொருளாதார அடிப்படையே எல்லாரும் செலவளிக்கனும்! இது சரிதான், ஆனா வரவுக்கு மேலே போச்சுன்னா அங்க தான் வம்பே!

இதே கணக்கிலே தான் நாமும் இந்தியாவிலே போய்கிட்டிருக்கோம்! வரவுக்கு மீற்ன செலவு, எல்லாம் ப்ளாஸ்டிக் கார்டு, வாழ்நாள் முழுக்க உங்க உடல் உழைப்பை கடங்காரணுக்கு கொட்டி கொடுத்து தண்ணியா செலவுன்னு! ஆனா இது மாதிரி எங்கயாவ்து கொண்டி வுட்டா நமக்கு 145 பில்லியன் தந்து செலவு பண்ணுங்கன்னு சொல்ல யாரும் இல்லை! ஆக கணவான்களே சமர்த்தா இருந்தா ஆச்சு இல்லை கடைசியிலே துந்தனா தான்! ஆக அப்ப நம்ம சினிமாவிலே எவ்வளவு பொருத்தமா ஆடி பாடி நமக்கு மெஸேஜ் சொல்லி இருக்காங்க பாருங்க!

இந்த பாட்டை முதல்ல ஒரு தடவை பதிவா போட்டு, இந்த கருத்து இந்த காலத்து நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்னு, இருக்கறவரைக்கும் கவலையில்லா மனிதனா வாழ வழி கொடுக்கிறது இன்றைய காலகட்டம்! ஆக சில நீதிகள் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி மாறனும் சொல்ல நினைச்சேன் ஆனா இது எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும்னு இப்பல்லவா தெரியுது!

சரி இப்ப மேலே சொன்ன பாட்டை பாருங்க! அதிகம் செலவு பண்ணாதீங்க வரவுக்கு மீறி!

8 comments:

said...

வாழ்நாள் முழுக்க உங்க உடல் உழைப்பை கடங்காரணுக்கு கொட்டி கொடுத்து தண்ணியா செலவுன்னு //

அப்படித்தான் ஆகிப் போச்சு கதை.

அப்ப எனக்கு இந்த புஷ் கொடுக்கிற பணத்தில ஏதாவது கிடைக்குமின்னு சொல்லுங்க, நாதரே! :D

பதிவிற்கு நன்றி!

said...

நல்ல பாட்டு. நல்ல பாடம். எல்லாருக்கும் தெரிய வேண்டிய பாடம்.

said...

//வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரெண்டணா கடைசியிலே துந்தணா! //

துண்டணா? துண்டு as in shortfall?

said...

இந்த சப்-பரைம் க்ரிஸிஸ் அங்க மாதிரி இங்க இந்தியாலயும் வந்தாதான் நான்லாம் வீடு வாங்க முடியும்.

நல்லா எழுதியிருக்கீங்க!

said...

இந்த வருசம் மார்ட்கேஜை ரீபைனான்ஸ் பண்ணணும், இந்நேரம் பார்த்து வட்டி ஏறிப்போச்சுன்னு ஏற்கனவே டென்சனா இருக்கேன்.. இப்படி டைமிங் பதிவு போட்டு சோகக்கதையெல்லாம் ஞாபகப்படுத்தறீங்களே நியாயமா... ஆனாலும்... நல்ல பாட்டு, அதனால பொழச்சுப்போங்க...

said...

எல்லா காலத்துக்கும் பொருந்தும் பாட்டு...

//துந்தணா! //

ஒரு வகையான நரம்பு இசைக்கருவி..வீணை போல்..கோவிந்தா பாடி மார்கழியில் வருபவர்கள் கையில் இருக்கும்..கிட்டத்தட்ட நாரதர் கையில் உள்ளது போல்.
பணம் கோவிந்தா என்பதைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

said...

வாங்க வாங்க சார், ரொம்ப நாளாச்சு, அருமையான தகவலுடன் கூடிய நிதர்சனமான உண்மை. எனக்கு தினம் வரும் போன் அழைப்புகளில் 80% கார்டு லோன் அழைப்புகள் தான்... இந்தியா ஒளிரும்...ஆனால் இந்திய மக்கள் இன்னும் கொஞ்ச நாளில் கடனிருட்டில் மூழ்கித்தான் போவார்கள்

said...

வெ.நாதர்,
என்ன ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்ததும் வராததுமா பொருளாதார ஆய்வில் இறங்கிட்டிங்க!

பண சுழற்சி , அதன் விளைவுகளை பாட்டு வைத்து சொல்லிட்டிங்க. பணம் ஒரு இடத்தில் இல்லாமல் சுழன்று வந்துக்கொண்டிருக்க வேண்டும்.

//அது மட்டுமில்லை சொந்த வீடு வச்சிருந்தவங்கிட்டேயும் உன் வீட்டு விலை இன்னைக்கு இவ்வளவு போகுது அதனாலே உன்னோட வீட்டு மதிப்பு அதாவது ஈக்குவுட்டிம்பாங்க! அதத வச்சி கடன் வாங்கி//

ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகள் எந்த உற்பத்தியையும் பெருக்காமல் முடங்கும் ஒன்று. நில விலை ஏறி லாபம் வருமே எனலாம், ஏறிய விலையில் வாங்க ஆள் வேண்டுமே, அவனுக்கு பணம் வேண்டுமே, அதுக்கு வருமானம் ?

வெளியில் இருந்து "inflow of money" இருக்கணும் அப்போ!அதாவது அன்னிய முதலீடுகள் வரணும், அமெரிக்காவில் அன்னிய முதலீடுகள் குறைந்து வருவதை காட்டுகிறது அங்குள்ள ஷேர்கள் சரிவது.

வங்கிகள் சில ஆதயங்களை கணக்கில் எடுத்து வீடு கட்ட, வாங்க பணம் அளிப்பதால் உற்பத்தி முடங்குவது மறைமுக விளைவு.

நிலத்தில்போடும் பணம் அதோடு முடங்கி விடும். நிதி நிறுவனங்கள் (banks) நிலம் சம்பந்தமாக, கார் , இன்ன பிற வாங்க அதிகம் முதலீடு அளித்தால் இப்படித்தான் திவாலாகும்(தனி நபருக்கு கடன் அளிப்பதன் மூலம் தான்).