கொஞ்ச நாளைக்கு முன்னே நம்ம நுனிபுல்லக்கா ஒரு சர்ச்சைக்குறிய கேள்வியை தமிழ்மணம் மக்களுக்கு முன்னே வச்சாங்க, அது என்னான்னா, "இந்து" என்ற சொல் தவறா? அப்படின்னு! அதிலேயும் "ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாவைப் பிடிப்பதற்கு முன்பு, நாடு பலரிடம் பிரிந்திருந்தது.சட்டதிட்டங்கள் ஏற்படுத்த மக்களை சாதிவாரியாய் ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டியிருக்கலாம். ஆனால் "இந்து" என்ற பெயரை அவர்கள் ஏற்படுத்தியது போல சொல்லப்படுகிறதே?" அப்படின்னு கேட்டு எழுதி இருந்தாங்க! சரி இதை பத்தி கொஞ்சம் பீராய்வோமேன்னு பார்த்தப்ப, எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அதாவது, இந்து மற்றும் சாதியம் அமைத்து கொடுத்தது ஆங்கிலேயர் தான்னு. சரி அதெப்படின்னு போய் பார்த்தப்பதான் நிறைய உண்மை விளங்குச்சு. இன்னைக்கு பலத்த சர்ச்சைக்கிடையே நிறைய விஷயங்கள் இந்த பொது மேடையிலே பேசபட்டு அப்புறம் போலி டோண்டு, அந்நியன், அப்படின்னு ஏகப்பட்ட எதிர்மறை உறவுகள் வரகாரணமாயிடுச்சு! இதுக்கு மூலக்காரணமான அந்த சாதியம் அமைத்த வரலாறு கொஞ்சம் பார்ப்போமா!
ஆங்கிலேயர்கள் நம்ம நாட்டுக்கு முதல்ல 18ம் நூற்றாண்டில வணிகம் பண்ண வந்தப்ப அவெங்க குறிக்கோள் வெறும் லாபம் ஈட்டுவதோட சரி. நாட்டை புடிச்சு அரசாளணும்ங்கிற எண்ணம் எதுவுமில்லை அப்ப! ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவெங்க ஆதிக்கம் இந்தியா முழுக்க பரவனப்ப, எல்லாத்தையும் பொறுப்பா கட்டி காக்கணும்ங்கிற எண்ணம், அப்ப ஆளுமை செஞ்சுக்கிட்டிருந்த ஆங்கிலேயர்களிடம் உருவாச்சு. அதன் காரணமா, அதற்கு முன்னே கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி வியாபாரக்கூட்டம், ஆங்கிலேய சட்டதிட்டத்துக்குட்பட்ட அதிகார வர்க்கத்துக்கிட்ட பொறுப்பை கொடுத்திட்டு ஒதுங்கி போயிடுச்சு! அப்பதான் ஒரு உண்மை விளங்குச்சு! கொள்ளையடிச்ச கூட்டம் பயங்கரமானதா, இல்ல ஆளவந்த அதிகாரவர்க்கம் பயங்கரமானதா, ஏன்னா கொள்ளையில இழந்த செல்வங்களை மீட்டு விடலாம், ஆனால் தாகத முறையில் மாற்றி அமைச்ச நம்ம கலாச்சாரத்தை திரும்ப மீட்க முடியுமா? அதான் இப்பவும் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்!
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகிய ஆங்கிலேய சமூக அமைப்பில் வந்த ஆளுநர்கள் செய்த மிகப்பெரிய சதிதிட்டம் போலான ஒன்று இந்த சமூக நிர்வாக மேம்போக்கு முறை. அது என்னவென்றால், 19ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் போரில் கண்ட வெற்றி, மற்றும் அதிகமான நாடுகளை கைப்பற்றி, உலகை ஆளும் திறன் கொண்டதால் பெற்ற நம்பிக்கையின் காரணமாய், அனத்துலக நாகரீக மேன்மைக்கும், அடிமட்ட இன மக்கள் உயர்வுக்கும் தாங்கள் தான் முன்நின்று வழி நடத்திட வேண்டும் என்ற நம்பிக்கையின் பேரில் அவர்கள் பின்பற்றிய சமூக நிர்வாக மற்றும் மேன்மைக்காக வழிபற்றிய முறைகளில் ஒன்று தான் 'புள்ளிவிவரஇயல் கணக்கீடு' அதாவது இந்த புள்ளிவிவர கணக்கீடு முறைகளில் பயன்படுத்தபட்ட தந்திரங்களில் சில மண்டை ஒடு உருவமைப்பு (Phrenology) மற்றும் பரம்பரை தகவலின் பேரில் ஏற்படுத்தும் இனவளர்ச்சி(Eugenics) போன்றவை! இந்த புள்ளிவிவர கணக்கீடு என்பது ஒரு முறையான வழிகளில் கையாளபட்டு, விஞ்ஞான ரீதியாக நடத்தபட்ட ஒன்றல்ல! அது ஒரு டெமோகிராபிக் டேட்டாவாக, ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதியின் மக்கள் தொகை குணாதிசயங்களான வயது, பால், வருமானம், பின்கோடு போன்ற தகவல்களை ஒட்டி அமைந்ததாக இல்லை, அதற்கென உண்டான விஞ்ஞான வழிமுறைகளோடு கணக்கிடபட்டதல்ல. அதை செய்வதற்கும் இத்தொழில்முறை கல்விகற்றவர்கள் எவரும் இல்லை!(இக்கல்வி முறை எல்லாம் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில வந்தவை!) இந்த கணக்கீட்டிற்கான அனைத்து தகவல்களும் சேகரித்தவர்கள், அரசியல்வாதிகள், பொருளாதாரநிபுனர்கள், அரசாங்க ஊழியர்கள், மருத்துவர்கள், மற்றும் சில கணிதமேதைகள் போன்றோர். இப்படி சேகரித்த தகவல்களின் நோக்கம் அந்த அந்த சமூக அமைப்பை பற்றி தெரிந்து கொண்டு, அதை அரசியல் லாபங்களுக்கும் மற்றும் சமூக மேம்பாட்டு உதவிக்கும் உபயோகிப்பதே! நான் கூறிய அனைத்தும் பிரிட்டன் சாம்ராஜ்யத்தில்(British Isles) அமைந்த சமூக வளர்ச்சிக்கான வழிப்பாட்டு முறைகள்!
இதே வழிமுறையைபின்பற்றி, இந்தியாவிலும் அந்த புள்ளிவிவரகணக்கீடு செய்யபட்டது. அந்த புள்ளிவிவர தயாரிக்கும் பொழுது தான் சில வேறுபாடுகள், குளறுபடிகள் நடந்தன. சில மதசம்பந்தபட்ட தகவல்கள் சேகரிக்கும் பொழுது, அதற்குண்டான கேள்வி பதில்களை சொல்ல, சேகரிக்க தேவையில்லை என்ற நிலை ப்ரிட்டிஷ் என்ற ஆங்கிலேய சமூக பிரிவினருக்கு தனி சலுகை இருந்தது, அதற்கு அரசாங்கமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்குண்டான பதிலை அளிக்க வேண்டுமென்று ஐரிஷ் சமூகத்திற்கு கட்டுபாடு இடப்பட்டிருந்தது. ஏனென்றல் ஐரிஷ் சமூகம் அடக்கபட்ட அடிமை சமூகம் அந்த பிரிட்டன் சாம்ராஜ்யத்தில், அதைப்போலவே, இந்தியாவும் அடிமையாக்கப்பட்ட நாடு, இங்கு பின்பற்றிய சிலமுறைகள், மதம் சம்பந்தபட்ட புள்ளிவிவர கேள்வியும் தகவலும் முக்கியமென கருதப்பட்டு அதை கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளபட்டது, ஏனென்றால் இதை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமை எப்படி அந்த ஐரிஷ் சமூகத்தினருக்கில்லையோ, அது போல இந்திய மக்களுக்கில்லை!
இது தான் முதல் கோணல்! பிறகு இந்த கணக்கீட்டில் மிகப்பெரிய வேறுபாடு பிரிட்டன் மக்கள் தொகையும் இந்திய நாட்டு மக்கள் தொகையும், அதாவது நிர்வாகிக்க கூடிய அளவில் இல்லாத மிகப்பெரிய மக்கள் தொகை அப்பொழுது அரசாண்டவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. மேலும் நம் நாட்டின் நகர அமைப்புகள் சற்றே இங்கிலாந்து நாட்டின் நகர அமைப்பிகளிலிருந்து மாறி இருந்தது, அதாவது வீடுகள், கடைவீதிகள், மிககுறுகலான சந்துகள் அமைந்த தெருக்கள், அதற்குள் அமைந்த கட்டிடங்கள் வீடுகளும் தொழில்நிலையங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் என்று, அதில் வாழும் மக்கள் தொகை இவை எல்லாம் அப்பொழுது ஆண்டவர்களுக்கு மக்கள் பெருக்கம், இந்த புள்ளி விவரங்கள் சேகரிப்புக்கு ஏதுவாக இருக்கவில்லை. அதுவும் அவர்கள் தாய்நாட்டில், இங்கிலாந்தில் கையாண்ட முறைகள் பினபற்றியது போல் சுலபமாக இல்லை. மேற்கொண்டு குத்து மதிப்பின் பேரிலும், ஒரு வீட்டில் ஏழு குடும்பம் வசிக்கிறது என்பதன் பேரில் கொண்ட ஜனத்தொகை மதிப்பீடு சரியானதாக அமையவில்லை. மேற்கொண்டு அதன் அடிப்படையில் தொடர்ந்த வந்த புள்ளிவிபர கணக்கீடு, ஒரு காலகட்டத்தில், பெரிய ஜனத்தொகை நிர்வாகிக்க முடியாத அளவிற்கு போனது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு, சிறு சிறு வகுப்புகளாக பிரிக்க மேற்கொண்ட உத்தியே இந்த சாதியம்!
இந்த சாதியத்திலே(Caste) ஆங்கிலேயருக்கு நம்ம நாட்டுக்கு வந்த புதுசுலருந்தே ஒரு வசீகரம் இருத்திச்சு. அதை அவங்க கொண்டாடும் வர்க்கமுறைக்கு (Class) சமமா நினச்சாங்க. ஆனா அவ்வளவு ஈசியில்லை அந்த மாதிரி சமன்படுத்தி பார்க்கிறது. இந்த வர்க்கம் சாதி எல்லாம் குறிப்பிடறது குடும்ப உறவுகளுக்கிடையிலான பாகுபாட்டை! இந்த வர்க்கப்பிரிவு அரசியல் பொருளாதார நிலைப்பாட்டை கொண்டது, ஆனால் சாதியம் அப்படி இல்லை! ஆனா சாதியத்தை செய்யும் தொழில் மற்றும் சமுக ஏற்ற தாழ்வின் அடிப்படை மூலம் கொண்ட சில வகுப்புகள்ன்னும் சொல்லிடமுடியாது. அது இந்த வர்க்கத்தையும் சார்ந்ததா இல்லை. ஆனா அப்ப இருந்த பெரும் மக்கள் தொகை காரணமா, இந்த சாதியத்தை ஒரு கருவியாக்கி செயல்பட்டது அன்றய ஆங்கில அரசு! அதனாலே அன்றய காலகட்டத்தில் அமைந்த சாதிய இயல்புதன்மை பெரிதும் மாற்றப்பட்டன! எப்படின்னு கேளுங்க!
இந்த குடிமதிப்பீடு ஒரு மிகப்பெரிய கருவியாய் அமைந்தது, ஆங்கிலேயர்கள் இந்திய மக்கள் தொகை பற்றி நன்கு அறிந்து கொள்ள! ஆனா 1872 க்கு முன்னே வரை ஏதும் மக்கள்தொகை கணக்கீடு செய்யாமல், பிறகு இந்தியாவின் பல்வேறு பாகங்களின் மக்கள் தொகை கணக்கீடு செய்யபட்ட முயற்சியே இப்போழுது ஏற்பட்டிருக்கும் சாதிய சமூக சீர்கேட்டிற்கு முழுக்காரணம்! இந்த கணக்கீட்டிற்கான முக்கிய காரணம் என்று கருதப்பட்டது அரசாங்கதை தயார்படுத்துதல் எந்த ஒரு அவசரக்கால நிலையின் போதும். அதற்காக தலையை எண்ணுவதை காட்டிலும் ஆண் பெண் விகிதாசாரத்தை அறிவதை காட்டிலும், வாழ்க்கை தராதரம் தெரிந்து கொள்வதை காட்டிலும், அந்த கணக்கீட்டின் போது சேர்த்துக்கொள்ளப்பட்ட கேள்விகள் எல்லாம் தேசிய இனம், இனம், மொழி, பழங்குடி இனம், மதம், சாதி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளத்தான்! இந்த விபரங்களை அறிந்து கொள்ள மற்ற எந்த நோக்கம் இருந்தாலும், அதன் பயன் எதுவும் இருந்ததில்லை! ஆனால் அப்பொழுதிய ஆங்கில அரசு இந்திய மக்களை நன்கு அறிந்து கொள்ள இந்த சாதியம் ஒரு முக்கியம் என கருதியது, அதுவும் அந்த அந்த வகுப்புகளை கொண்ட மக்களின் திறன் சாதியின் அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட்டது, அதன்படியே மக்களுக்கு சேவைகளும் வழங்கப்பட்டது. அதுவே பிரிவினைவாதத்தினை தூண்ட இட்ட முதல்படி. எப்படின்னு கேளுங்க!
சாதியமே அந்தந்த வகுப்புகளின் தொழில், சமூகநிலைப்பாடு மற்றும் அறிவுத்திறனை பறைசாற்றும் அடையாளமாக கருதப்பட்டது. ஆதலால் அதை புள்ளிவியல் விபரத்துக்கு எடுத்து கொள்ளபட்டு அதை கொண்டு அரசாங்கம் அவர் அவர் தகுதிகளை நிர்ணயம் செய்து அதற்கு தகுந்தாற்போல் அவர்களின் வேலை வாய்ப்பு, மற்றும் அரசாங்க பரிபாலனத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதில் சில முகம்மதியர் வகுப்புகளை கீழ்மட்ட இந்து வகுப்பின் பிரிவினில் மாற்றப்பட்டு அதில் இணைத்ததால் பெரிய போராட்டங்களும் நடந்த கதை உண்டு! அடுத்து இனத்தூய்மை தத்துவம் என்ற நமது இந்திய கருத்துகளும் ஓங்கி நின்றன. இந்த சாதிய பிரிவினை முழுவதும் ஆங்கிலேயர்கள் நடத்திய அந்த செயல்பாட்டிற்கு நாமும் எதிர்ப்புகாட்டமல் அப்படியே ஏற்று கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. அங்கு தான் இந்த இனத்தூய்மை தத்தவம் நம்மிடையே வெளிப்பட்டது. அதாவது சாதியத்தை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டிருந்தது ஒரு மேலோட்டோமாக, அதனால் அவர்கள் தரும் பொருள்விளக்கத்திலருந்து மாறுபட்டது.
நீங்கள் ஒரு உண்மையான இந்துவா என்பது உங்கள் சமூக பொருளாதார வரிசைப்படி அமைந்தது அல்ல. எல்லாம் கடவுளின் கையில் என்ற கொள்கைபாடு, அதாவது நீ அடையவிருக்கும் பரிசுத்ததன்மையானது நீ செய்யும் கர்மங்களை பொறுத்தது என்ற சித்தாந்தில், நீ ஏழு ஜென்மங்கள் எடுத்து அந்த பரிசுத்த நிலை அடையும் பொழுது நீ கடவுளை அடைவாய் என்பதே. அதன்படி இந்த ஜென்மத்தில் உன்பிறப்பில் உண்டான குலம் கோத்திரத்தன்மை உன்னை எப்படிபட்ட இனத்தூய்மையில் உள்ளாய் என தெரிவித்துவிடும். ஆகையால் உயர்குலத்தில் பிறந்தால் கடவுளை உடனே அடையமுடியும், இல்லையினில் ஏழு ஜென்மம் எடுக்கவேண்டும். அதாவது ஒருவன் சமய சடங்கின் மூலமாய் தன் தூய்மை அடைந்து கடவுளை அடைகிறான் என்பது. இந்த தத்துவம் மேற்கத்திய நாகரீகத்திக்கு சற்றும் குறைந்ததில்லை. அங்கே ஏழை, பணக்கார வர்க்கம் இந்த கொள்கையின் கோட்பாட்டில் இயங்குகிறது, அதாவது ஏழை தான் வாழப்போகும் அந்த ஒரு ஜென்மத்திலேயே தன்னை மேம்படுத்தி கொள்வதென்பதே! அது போல இந்தியாவில் ஏழை என்பவென் தன்னை மேம்படுத்திக்கொள்ள பல ஜென்மங்கள் எடுக்கவேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் ஒரு ஏழை வர்க்கம் கொண்ட ஒரு சில வகுப்பு மக்கள் தாங்கள் கீழினத்திலருந்தாலும், மன்னருக்கு பல சேவைகள் செய்து சமூகத்தில தன் வகுப்புகளை உயர்த்தி கொண்ட சரித்திரங்களும் உண்டு. ஆக இனம் என்பது இந்தியாவில் எப்பொழுதும் ஒரு நிலையான ஒன்றல்ல, அது பொருள்மட்டத்திலிருந்து பார்த்தாலும் சரி, இல்லை இறைமட்டத்திலருந்து பார்த்தாலும். ஆனால் இந்த தன்மை சற்றே மாறியது அதுவும் ஆங்கிலேய திட்ட முறைக்கு பிறகு தன்னைதானே மாற்றி கொண்டது! ஆக அந்த மாறி வரும் காலகட்டத்தில் ஆங்கிலேய மருத்துவ விஞ்ஞான முறைகளை, தாங்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் சமூக ஏற்ற இறக்க தாழ்வின் கீழ் கொண்டு வர முற்பட்டதே உண்மை! ஆதலால் தான் அந்த ஏற்ற இறக்கமற்ற சமுதாயத்திற்கு வழி காண, ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தா, மற்றும் ராமகிருஷ்னா ஆகியோர் மக்கள் இயக்கம் தொடங்கினர்.
ஆக அப்பொழுது செய்த இந்த குடிமதிப்பீடு, வெறும் கணக்கீடு மட்டுமல்லாமல், அதுவே புது சமுதாய சமூகங்களை உருவாக்கவும் அதை மாறுபடவும் செய்ய ஏதுவாயிற்று. அதனால் சமூக அந்தஸ்த்தில் தங்கள் வரிசையினை நிலை நாட்ட போராட்டம் நடத்திய சமூகங்களும் உண்டு. ஆனாலும் இந்த மதிப்பீட்டின் போது இந்தியர்களே கணக்கீடு செய்பவராகவும் அலோசனை கூறுபவராகவும் இருந்த பொழுது, சில உயர்குடி மக்கள் அந்த செயல்முறையில் ஈடுபட்டிருந்திருந்த போது தாங்களாகவே தகவல்களை தொகுத்த கதையும் உண்டு, அதில் தன் வகுப்பினர் முன்னேற்றத்திற்காக மற்ற தகவல்களை, முக்கியமாக இந்து மத புனித மூலப்பிரதியின் பொருள்விளக்கங்களை தங்களுக்கு சாதகமாக தொகுத்து வழங்கியது உண்டு. இதில் முக்கியமாக பிராமண தகவல் தெரிவிப்பாளர்கள் பங்கு அதிகம்! முக்கியமாக ஆங்கிலேய குடியேற்றத்துக்கு முன் பிராமணர்கள் தெய்வீக விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தியதை போல், செல்வ செழிப்பில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இல்லை, அதில் சத்ரியர்கள், வைஷ்னவர்களுமே மட்டுமே உயர்ந்த நிலையில் இருந்தனர். ஆதலால் அவர்கள் நிலை ஒன்றும் சொல்லதக்கதாக இருந்ததில்லை. ஆனால் பிற்பகுதியில் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர் ஆதிக்கம் சரிந்து வரும் நிலைகண்டு, தங்களை தாங்களே புதியதாக அரசாளும் கூட்டத்துடன் சார்ந்து கொண்டு , சட்டபூர்வமாக இந்த சாதிய பிரிவு செயல்பாட்டில் தங்களை ஆதிக்கவாதிகளாக நிலை நாட்டினர். அவர்கள் கூற்றுக்கள் பெரிதும் ஏற்று கொள்ளப்பட்டது. அப்போதய ஆங்கில அரசுக்கு எது தேவை என்ற மட்டத்தில் தகவல்களை வடிகட்டி தருவதிலும், தங்களை மென்மேலும் எப்படி உயர்த்தி கொள்ள முடியுமோ அந்த வகையிலும் இருந்து தனது மேன்மையை நிலை நாட்டினர்! அப்படி வடிவமைத்த புள்ளியியல் கணக்கீடுகளில் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள், தங்களது சமூக வரிசைப்பாட்டினை தொகுத்து வெளியிட்டிருந்த அந்த குடிமதிப்பீட்டினை எதிர்த்து போராட்டங்களும் நடத்தின!
ஆக ஆங்கிலேயர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குடி மதிப்பீடு தான் இன்று வளர்ந்து நிற்கும் சாதியத்துக்கு மூல ஆதாரம். இது ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தை தெரிந்து கொண்டு ஆட்சி முறை அமைக்க எவ்வளவு உதவியதோ அந்த வகையில் சாதியின கொடுமைகள் பல நடக்க வித்திட்டு இன்றும் பெரிய ஏற்ற தாழ்வுமிக்க சமுதாயத்தை உருவாக்க காரணமான ஒன்றாக தான் தென்படுகிறது!
இதனெ தொடர்ச்சியை 'ஆங்கிலேயர் அமைத்த சாதியம்-வரலாறு தொடர்கிறது!!' பதிவில் காணலாம்!
Thursday, May 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
// அதான் இப்பவும் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்//
True.
A different blog! A different view!!
Good !!
Keep up!!
சம்பத் அவர்களே வருகைக்கு நன்றி. கலவை வெங்கட்டின் பதிப்பை முழு பின்னோட்டமாக எழுதிவிட்டீர்கள்! ஆனால் இந்த பதிவு பற்றிய கருத்து என்ன?
Thanks Sivabalan
வெளிகண்டநாதர், உணர்ச்சி வசப்படாமல் அழ்ந்து படித்து எழுதிய பதிவு.
தொடரட்டும் உங்கள் சேவை.
உதயகுமார்,
இது என்னங்க தோண்டத்தோண்ட வேற உண்மைகள் எல்லாம் வரும்போல இருக்கே.
இந்த மெகாலே கொண்டுவந்த கல்வி முறையை ஏன் இன்னும் மாத்தாம வச்சுருக்கோம்ன்றது ஒரு புதிர்.இல்லையா?
ஆமாம். கிறிஸ்துவ மதமும், இஸ்லாமும் எப்ப இந்தியாவுலே ஆரம்பிச்சிருக்கும்? எது முதலில் வந்தது?
உதயகுமார், மீண்டும் ஒரு வித்யாசமான பதிவு.
ஆமா, அரிதாரம் என்னாச்சு?
கலைப்படங்களுக்கு நடுவே மசாலாவையும் கொஞ்சம் ஓட்டுங்க!!
//இந்த மெகாலே கொண்டுவந்த கல்வி முறையை ஏன் இன்னும் மாத்தாம வச்சுருக்கோம்ன்றது ஒரு புதிர்.இல்லையா?//
எல்லாம் 'சும்மா இருப்பதே சுகம்' என்ற தத்துவந்தான்.
//ஆமாம். கிறிஸ்துவ மதமும், இஸ்லாமும் எப்ப இந்தியாவுலே ஆரம்பிச்சிருக்கும்? எது முதலில் வந்தது?//
கிறித்தவம்தான் முதலில் வந்ததென்று நினைக்கிறேன்.
இதுல நிறைய நான் சேகரிச்ச விஷயங்கள் இருக்கு சிவா, எழுதுனா நீண்டுக்கிட்டே போகும். அப்புறம் அந்த ஆங்கிலோ யூரோபியன் இனங்களை பிரிச்சு பாகுபாடு கான நான் சொன்ன மண்டை ஓடுகளை படிக்கிற(Phrenology) டெக்னிக் (இப்ப உட்டுட்டாங்க!)ரொம்ப பரிதாபம். வேணும்னா அதை பத்தியே பெரிய பதிவு போடலாம் அம்புட்டு விஷயம் இருக்கு!
//இது என்னங்க தோண்டத்தோண்ட வேற உண்மைகள் எல்லாம் வரும்போல இருக்கே.// ஆமா நிறைய கிடைக்கும் துளசி! மத்த கேள்விக்கு பெத்த ராயுடு பதில் சொல்லிட்டாரு பாருங்க!
வாங்க பெத்த ராயுடு, நீங்க என் அரிதார ரசிகரா, இது தெரியாம போச்சே, இந்தோ எழுதிப்புடுறேன், அதானே மசாலா இல்லேன்னு சுரத்தா இருக்காதே;)
நல்ல பதிவுங்க.
நம்ம நாட்டுல casteஐயும் clanஐயும் கூட நிறைய பேர் குழப்பி இன்னைக்கு எல்லா family clanம் casteஅ மாறி போச்சு!
நல்ல பதிவு, வெளிக்கண்ட நாதர்,
இதை எல்லாம் சொன்னால் உங்களை வேறு மாதிரி, பட்டம் கட்டி, (பிராமண அடிவருடி ..) திட்டித் தீர்த்து விடுவார்கள் நம் தமிழ்மணத்தில்..
பார்த்து எழுதுங்க சார்...
ஷங்கர்.
மிக நல்ல பதிவு. முதல் பின்னூட்டமும் மிக அருமையாக இருக்கிறது.
உதயகுமார் சார். இந்தப் பதிவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சாதியம் நம் நாட்டில் வெள்ளையர் வருவதற்கு முன்னாலேயே இருந்தது என்பதற்கு பற்பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் ஏற்கனவே இருந்த ஏற்றத் தாழ்வுகளை ஆங்கிலேயர் தங்கள் நன்மைக்காக, வசதிக்காக எப்படிப் பயன்படுத்தினர்; அதனால் ஏற்றத் தாழ்வுகள் இன்னும் எப்படி மிகுந்தது; கெட்டிப்பட்டது என்பதனைச் சொல்லும் சான்றுகளாகத் தான் உங்கள் பதிவில் இருக்கும் செய்திகளைப் பார்க்கிறேன்.
முதல் பின்னூட்டத்தில் எல்லா சாதியினரும் (வருணத்தினரும்) அவரவர் மக்கட்தொகைக்கேற்ப பள்ளிகளுக்குச் சென்று கொண்டு தான் இருந்தனர். அதனால் கீழ்ச்சாதிகளுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் கல்வி மறுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லாமல் விடுவது அப்படி அந்தக் காலத்தில் இருந்த பள்ளிகள் சாதிவாரியாகத் தான் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டது என்பது. அவர்கள் படித்ததும் வெவ்வேறாக இருந்தது. இது ஏறக்குறைய குலக்கல்வியைப் போல. அதனால் உயர்வுக்குத் தேவையான கல்வி சூத்திரருக்கு மறுக்கப்பட்டது என்பதற்கு இந்தப் பின்னூட்டத்தில் உள்ள செய்தி தகுந்த மறுப்பு இல்லை. இது மேலோட்டமாகவே இந்த விடயத்தை அணுகியுள்ளது.
சமுத்ரா, நீங்க சொலவாது சரி, அந்த குழப்பம் இருக்கதான் செய்யது!
சங்கர் நாராயணன், வருகைக்கு நன்றி! இருக்கற உண்மை அதான் எப்படி பட்டம் கட்ணா என்னா?
வருகைக்கு நன்றி தேசாந்திரி!
குமரன், நானும் சாதியம் இல்லைன்னு சொல்லலே, அது ஒரு 'Dynamic phenomena' மாதிரி கீழே உள்ளவன் மேலே வந்ததுக்கு நிறைய சாட்சிகள் இருக்கு. ஆனா இது பிரிட்டிஷர் வந்தப்பறம் ஏற்பட்ட பாகுபாடு வேறேன்னு தான்ன் சொல்ல வர்றேன். கோயமபுத்தூர் பக்கம் இருக்கிற சில நாயுடு சாதி அடிமட்ட சாதி, விஜயநகர பேரரசு வரும் முன்னே, ஆனா அந்த இனம் அந்த அரசு தமிழ்நாட்லயும் வியாபிச்சப்ப, அவங்க இங்கே குடியேற ஒத்துக்கிட்டதால அவங்களுக்கு உயர்ந்த அந்தஸ்த்து சமூகத்தில கிடைச்சதுன்னு கேள்விபட்டிருக்கேன், இது மாதிரி கீழ்ஜாதிகாரன் எப்பவும் கீழே இருந்தது கிடையாது! ஆனா, பிரிட்ட்டிஷர் இந்த classஐ போட்டு குழப்பி அப்படி ஒரு status, scheduleன்னு பண்ணதால வந்தது தான் வினையே! அதத்தான் சொல்ல வர்றேன்!
குமரன், நீங்க சொல்ற அந்த பின்னோட்ட கல்வியில பாகுபாடு இருந்தது வாஸ்தவதான், உண்மையும் கூட!
இருக்கலாம் உதயகுமார் ஐயா. நீங்க சொன்ன மாதிரி சமுதாய நிலைபெயர்ச்சி (Social Mobility) நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் வந்த பின்பு அந்த நிலைபெயர்ச்சி மறைந்து ஒரு தேக்கத் தன்மை வந்திருக்கலாம். ஆனால் அதனால் எழுந்தது தான் மறுமலர்ச்சி. சாதியம் என்பது தீமை என்று பேசத் தொடங்கியது அந்த தேக்கநிலை வந்ததாலேயே.
//கோயமபுத்தூர் பக்கம் இருக்கிற சில நாயுடு சாதி - உயர்ந்த அந்தஸ்த்து சமூகத்தில கிடைச்சதுன்னு //
நான் அறிந்த மட்டில், இது உண்மை.
Because, they got mayor ship in Coimbatore municipality (then) frequently. Still we have record for this.
அது மட்டுமில்லை குமரன், இவன் இந்த வேலை செய்ய தான் லாயக்குன்னு நிர்ணயம் பண்ணதாலே, உரிமைகள் மறுக்க பட்டதாலே, அதன் அடிப்படையில எல்லா சேவைகளும் வழங்க பட்டதாலே தான் இந்த சாதியம் மேலே வெறுப்பு. ஒன்னு தெரியுமா, அப்ப இராணுவத்துக்குன்னு ஆள் எடுக்கறப்பகூட சில இனத்தை லாயக்கு இல்லனு ஒதுக்கினப்ப, அவங்க ராஜபுதன warriors னு சொல்லி சண்டை போட்ட கதை எல்லாம் இருக்கு தெரியுமா?
உதயகுமார் ஐயா. இவன் இந்த வேலையைச் செய்யத் தான் லாயக்கு (தமிழ்ப்படுத்த வேண்டிய சொல்) என்று முடிவு செய்ததில் ஆங்கிலேயருக்கு முழு பங்கும் உள்ளதா தெரியவில்லை. இங்கே ஏற்கனவே இருந்த பிரிவினைகளை அவன் நூலில் எழுதி உறுதி படுத்திவிட்டான். நமக்கு அந்த ஆவணங்கள் கிடைப்பதால் ஆங்கிலேயரே அவற்றைக் கண்டுபிடித்துச் செய்ததாக எண்ணக்கூடாது. நீங்கள் சொல்லும் சண்டைகள் நிறைய ஆங்கிலேயரின் காலத்திலும் அதற்கு முன்னும் நடந்திருக்கின்றன. நமக்கு ஆங்கிலேயரின் ஆவணங்கள் மட்டுமே கிடைக்கிறதோ என்னவோ?
//இவன் இந்த வேலையைச் செய்யத் தான் லாயக்கு (தமிழ்ப்படுத்த வேண்டிய சொல்) என்று முடிவு செய்ததில் ஆங்கிலேயருக்கு முழு பங்கும் உள்ளதா தெரியவில்லை// அவர்களுக்கு பங்கு இல்லை எனினும்(அது ஆலோசனை சொன்ன நம் இந்திய உயர்குடி மக்களையே சேரும், அது வேற கதை)அவர்களால் ஏற்படுத்த பட்ட பாகுபாடுகளே ஒரு காரணமாகிறது!
நிஜ ரூபத்தில் ஒரு பொய் என்ற கட்டுரை உள்ள - முதல் பின்னூட்டத்தில், 1825ன் ஆவணங்களில் ஹரிஜன் என்று ஒரு பிரிவின்கீழ் குழந்தைகள் படித்ததாக இருக்கிறது.
காந்தி பிறந்தது எப்போது, 1869ல் தானே? ஹரிஜனம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது அவர் இல்லையோ?
நீங்கள் கூறுவது சரி சன்னாசி, அப்பொழுது அவர்களை ஆதிதிராவிடர் என அழைத்தார்கள்!
வெளிகண்ட நாதர், பார்த்தா: அந்தப் பின்னூட்டத்தில் அது குறித்த விளக்கம் இருப்பதைக் கவனிக்கவில்லை, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
social mobility ன்ன உடனே, எனக்கு ஞாபகத்துக்கு வர்ரது, ராஜஸ்தானில் பல பழங்குடி மக்கள், ராஜபுத்திரர்களாக(க்ஷத்திரியர்களாக) மாறுவது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளது. அக்னிகுல ராஜபுத்திரர்கள் நல்ல உதாரணம்.
ஷங்கர்.
ஷங்கர், நீங்கள் சொல்றது சரி, அங்கே பிரிட்டஷர் காலத்தில மஹோத்தன் பிரிவினர் அந்த மாதிரி நாங்க ராஜபுத்திர வம்சம் சொல்லி சண்டை போட்டு வாங்கன கதையும் உண்டு!
Post a Comment