Sunday, May 14, 2006

அமெரிக்கா அறிவாளிகளை புறக்கணிக்கறதா?

இப்பொழுது லாஸ் ஏஞ்சிலேஸ் நகரிலும், சிகோகா நகரிலும் நடந்து வரும் இந்த சட்டத்தை மீறி வந்த வந்தேறிகுடிகளின் ஆர்ப்பாட்டங்களும், கோபமடைந்து அமெரிக்க எல்லைகளை மூடச்சொல்லி ஆர்பரிக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை பார்க்கும் பொழுது, அமெரிக்காவின் பிம்பம் ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகின்றன. இதுவரை கதவுகளை திறந்து வைத்து இருகரம் கொண்டு உலகெங்கும் இருக்கும் அறிவாளிகளை அழைத்து அனைத்துக் கொண்ட அமெரிக்கா இனி அவ்வாறு செய்யப்போவதில்லை. அதனால் யாருக்கு இழப்பு? அமெரிக்காவிற்கு தான், எப்படி, வாருங்கள் பார்க்கலாம்!

நான் ஏற்கனவே எழுதிய 'அமெரிக்க முதலாளித்தவமும் வந்தேறிகுடிகளும்!' பதிவில் இந்த ஆர்ப்பட்டத்திற்கான காரணத்தையும், அமெரிக்கா எப்படி இந்த சட்டத்தை மீறி வந்த வந்தேறிகுடிகளை வெளி துரத்த முயலுவதையும், அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியலையும் எழுதி இருந்தேன். ஆனால் இப்பொழுது நடைபெறும் இந்த போராட்டத்தால் "Knoweledge workers" என்போரின் கதி என்னவாகும் என்பது தான் பதிவின் நோக்கம்! கம்ப்யூட்டர் புரோகராமர்ஸ் என்றழைக்கப்படும் இந்த அறிவு செல்வங்கள் எவ்வாறு இந்த அமெரிக்காவிலே வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை சற்று பார்ப்போம்! இதில் ஒரு விந்தை என்ன தெரியுமா, இந்த "Knoweledge workers" என்போரின் தேவை, இந்த சட்டத்தை மீறி வந்த வந்தேறிகுடிகளை ("illegal immigrats") விட அதிகம், அதை அமெரிக்கா உணர்ந்திருக்கிறதா என்றால், அது தான் இல்லை. எப்படி என்று பார்ப்போம்!

அமெரிக்காவின் அதி தொழில்நுட்ப தொழிற்சாலைகளை இன்று வழி நடத்துபவர்கள் யார் தெரியுமா? அனைவரும் இந்த அமெரிக்காவில் பிறந்த குடிமகன்ங்கள் அல்ல! அதிலும் சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் வளைகுடா பகுதியிலே, 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடங்கப்பட்ட அதி தொழில்நுட்ப ஸ்தாபனங்கள் 3000க்கும் அதிகம். அதிலும் இந்த தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து ஆரம்பித்து வைத்தவர்கள் நம் இந்திய நாட்டினர் மற்றும் சைனாவை சேர்ந்தவர்கள் . அப்படி தொடங்கபட்ட நிறுவங்களில் 30 சதவீதத்திற்கும் மேல் நிர்வாகிப்பது நம் இந்திய நாட்டு மக்கள்! இந்த அமெரிக்க நாட்டில் உள்ள முன்னனி பல்கலைகழகங்கள் அனைத்திலும் உள்ள விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளை நிரப்புவகர்கள் யார் தெரியுமா? உலகெங்கிலுமிருந்து வந்து சேரும் அறிவாளி மாணவர்கள். அப்படி வந்து இந்த பல்கலைகழகங்களில் படித்து முன்னேறியவர்கள், இங்கேயே தொழிற்கற்று, வெகு மேலே சென்று சொத்து சுகங்களை சம்பாதித்தவர்கள். தாங்கள் மட்டும் செல்வங்களை பெறவில்லை, இந்த அமெரிக்க நாடும் அவர்களால் செல்வங்களை பெற்றது என்பதே உண்மை!

ஆனால் இப்பொழுது அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் மரணபயம், அதாவது நாட்டின் பாதுகாப்பு எனக்கருதியும், மற்றும் அவர்கள் பொருளாதார பாதுகாப்பென்று கருதியும், அமெரிக்கா பயத்தின் விளிம்பிற்கு சென்று மிக அத்தியாவசியமான, நாடு முன்னேற்றம் காண வரும் திறமைகளை புறக்கணிப்பதே! 2001ல், 200,000 பேருக்கு H1B விசாவை அளித்து, அறிவாளிகளையும் அதிதொழில்நுட்ப வல்லுநர்களையும் ஏற்று கொண்ட அமெரிக்கா, 2004ம் ஆண்டிலிருந்து வெறும் 65,000 அறிவாளிகளையும் அதி தொழில்நுட்ப வல்லுநர்களையும் மட்டுமே ஏற்று கொண்டது. அதன் படி, சென்னையிலே இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் விசாவிற்கான நேர்கானல் அழைப்புக்கு காத்திருக்க வேண்டிய நாட்கள் எவ்வளவு நாள் தெரியுமா? 160 நாட்களுக்கும் மேலே! இதைப்பற்றி பில் கேட்ஸ், அமெரிக்க காங்கிரஸக்கு எழுதிய கடித்ததில், இந்த அறிவாளிகளையும் திறமை மிக்கவர்களையும் நாம் இழந்தால் அமெரிக்காவின் போட்டி பன்னாட்டு சந்தையில் பலவீனமாகும், நம் நாட்டின் இழப்பு, அடுத்த வளர்ந்த நாடுகள், அவ்ர்களை பெற்று, சுலபமாக இதனால் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்!
அதில் அவர் தெரிவிக்காத ஒரு உண்மை, அமெரிக்க கம்பெனிகள் இந்த விசாவிற்கென இனி காத்து கிடக்காமல் தங்கள் தொழில்களை அடுத்த நாட்டுக்கு கொண்டு சென்றுவிடுவதை. அதிலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடம் அமெரிக்காவை விடுத்து, நம் பெங்களூரிலும், சைனாவின் பீஜிங்கிளும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜிளும் இயங்குகின்றன. ஆக நஷ்டம் அமெரிக்காவிற்குத்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்!

ஆக இப்பொழுது உள்ள நிலை, அமெரிக்க பொருளாதாரத்துக்குள்ள மிக மோசமான நிலை. அதை கருத்தில் கொண்டு அமெரிக்காவினர் விசா வழங்குவதையும், 'green card' கொடுப்பதையும் அதிகரிக்க வேண்டும், இந்த இம்மிகிரேஷன் பில்லை சட்டமாக்கும் பொழுது! அதிலும் அமெரிக்க கம்பெனிகள் திறமைசாலிகள் தேவை எனும் பொழுது, அவர்கள் சட்டப்படி அத்திறமை சாலிகளை அழைக்கும் பொழுது , வேண்டிய விசாக்களை கொடுத்து அவர்களை ஏற்று கொள்ள வேண்டும் அதிலும் கீழ் நிலை வேலை செய்பவர்களின் போட்டி இந்த சட்டமற்ற முறையில் வந்த வந்தேறிகுடிகளினால் அதிகம் இருந்தாலும், திறமைசாலிகளின் தேவை கொண்டு அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும். இல்லையெனில், அவர்களை கடந்து, முன்னேற்றம் காண பல நாடுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் அமெரிக்காவின் நட்டம் மற்ற நாடுகளுக்குண்டான லாபம்! ஒன்றை அமெரிக்கா ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், அந்நாட்டின் பல்கலைகழகங்களும், அதிதொழில்நுட்ப தொழில்களும் அனைத்துலக திறமைசாலிகளை கவர்ந்த காந்தங்கள்! அதனால் பயனடந்தது அமெரிக்கா மட்டுமல்ல, உலகமும் தான். ஆனால் பயம் என்று ஒன்று இப்பொழுது அவர்களை ஆட்டி படைக்கிறது!

மேற்கொண்டு, உலகிலுள்ள பல நாடுகள், முக்கியமாக,ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இத்திறமைசாலிகளை மிகவும் வெற்றிகரமாக வயப்படுத்தி தன்னாட்டிற்கு அழைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுது இந்தியாவிலும், அமெரிக்க கனவுகளை துறந்து இது போன்று முன்னெறிய நாடுகளில் சென்று மேற்படிப்புத் தொடரும் நிலை இன்று பரவலாக இருக்கிறது! இன்று நம் நாட்டிற்கே உள்ள பலம் நம் மக்கட் தொகை, அதிலும் நன்கு கல்வியறிவு பெற்று, புலமைபடைத்த நம் இளஞ்சிங்கள்!அவை தான் நாளை உலக ஆளப்போகின்றன! ஆம், ஐரோப்பிய நாடுகளில் மக்கட் பெருக்கம் நின்று போய் பல நாட்கள் ஆகிவிட்டன.
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இப்பொழுது உலகத்தின் மற்ற பகுதியிலிருந்து வரும் வந்தேறிகுடிகளை இருகரம் கொண்டு அனைத்துக்கொள்ள தயாராகிவிட்டன. அதிலும் காலங்காலமாக அங்கு சென்று குடியேறிய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் குடிமகன்ளால் ஒரு போராட்டமான நிலை இருப்பதால், அவர்களை விட இந்தியா, சைனா போன்ற நாடுகளின் குடிமகன்களை அதிகம் அனைத்துக்கொள்ள தயாராகிவிட்டன. அவர்கள் கொண்ட தொழிற்புரட்சியின் ஆளுமை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், இந்த இளம் மக்கள் தொகையும், அதிலும் அறிவாளிகளின் தேவை இப்பொழுது அதிகம்! அது அவர்களிடம் இல்லை எனும் போது நம் போன்றோரின் துணையை நாட ஆரம்பித்துள்ளனர். இதனால் நமக்கு லாபமாகுமா?. இது 'Brain Game' என்ற சித்து விளையாட்டே! முன்னேறிய நாடுகள் இப்பொழுது இதில் ஈடுபட்டுள்ளன! முன்பெல்லாம் நாம் சொல்லிகொண்டிருந்த 'Brain drain' என்பது இனி 'Brain Gain' ஆகுமா, அப்படி த்தான் ஆகிக்கொண்டிருப்பதாக சொல்கிறோம், இந்த அமெரிக்க புறக்கணிப்பிற்கு பிறகு! ஆனால் உலகம் வேறு திசையில் போய் கொண்டிருக்கிறதென்பதையும் நாம் அறிந்து செயல்பட்டால் நமக்கு நன்று! வல்லரசு கனவுகளை நனவாக்குமா இனி வரும் நாளை? அதெற்கென நம் கையில் இருக்கும் செல்வங்களின் மதிப்பை நாம் உணர்ந்து செயலாற்றினால் உண்டு! அப்பொழுது தான் நாம் ஆளமுடியும் உலகை, நாளை!

17 comments:

said...

மிகவும் அருமையான பதிவு பாலன்.குடியரசுக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் செய்வார்கள் என நம்பலாம்.அதுவிம் திருமதி கிளின்டன் இந்திய ஆதரவாளர்.கட்டாயம் H1B விசா எண்ணிக்கையை அதிகப்படுத்துவார்.கலிபோர்னியா குடியரசுக்கட்சியினரின் கோட்டை வேறு

said...

//ஆனால் பயம் என்று ஒன்று இப்பொழுது அவர்களை ஆட்டி படைக்கிறது!
//

நிஜம் தான்.ஆனால் இந்த மெக்சிகோ நாட்டுகாரங்க மேல தான் கடுப்ப இருக்கறாங்கன்னு நெனச்சுகிட்டு இருந்தேன்.

said...

//அப்பொழுது தான் நாம் ஆளமுடியும் உலகை, நாளை!//


மிக அருமையான பதிவு!!

மிக்க நன்றி!!

said...

செல்வன், ஸ்ரீநிதி கூறியது போல, திருமதி கிளின்டனின் கட்சியை மாற்றி எழுதிவிட்டீர்கள், உங்கள் கருத்து பலிக்குமானால் நம்க்கு நல்லதே!

said...

சமுத்ரா, மெக்ஸிகோ நாட்டின் மீதல்ல, அங்கிருந்து சட்டத்திற்கு புறம்பாக வந்தேறிய குடிகள் மீது தான்! அதுவும் அவர்களை சட்டத்திற்குட்படவர்களாக மாற்றுவது தான், நான் எழுதிய முந்திய பதிவை பாருங்கள், அதில் உள்ள அரசியலை!

said...

srinidhi, I agreed the issue is related to illegal immigrants. As you said, in the process of setting the things right, the difficulties are being pushed to the genuine skilled workers and Intellects (we, Indians are most affected) who are regularly coming to US to pursue their studies, carrier, and development. Earlier the process was simple and US was open in admitting all talents around the world, and due to that the people came, have not only earned wealth themselves, they made US to earn wealth too. Now America is not open and afraid of themselves in the name of national security and economic insecurity. That's the point I am trying to emphasize!

Secondly, I do not fantasies anything, The lack of work forces in the European Industry is a reality, because of the baby boomers are getting aged and the workforce is not getting replenished from the younger generation of those countries. So they are trying to lure the skilled and intellects from all over the world. Do you need statistics, if you have chance to go through Economist of latest edition, please go through. Even conservative country like France is looking for the immigrants on their problem of getting right people. So, do not drop some anti view of the facts, what I stated and run away. Provide your solid proof. We are debating in an environment where all the facts and Knowledge are readily available. Please state your point with solid support!

said...

சிவ பாலன், நன்றி!

said...

நல்ல பதிவு நாரதரே....

said...

ஸ்ரீநிதி பின்னோட்டத்திற்கு தமிழில் பின்னோட்டம் எழுத முடியாமைக்கு வ்ருந்துகிறேன்! சற்றே ஆங்கிலத்தில் உடனே அளித்தமையால்!

said...

கிளின்டன் டெமாக்ராட் கட்சிக்காரி.டெமாக்ரட்டுக்கு தமிழில் என்ன?

said...

செல்வன், டெமாக்ராட்க்கு தமிழில் ஜனநாயக கட்சி என்று பெயர் அழைக்க வேண்டும்!

said...

இதில் ஜனநாயக கட்சி எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியவில்லை.


ஆனால், கீழே ஒரு செய்தி

" Let us not forget that we are all Immigrants to this land "


இது George Bush, நேற்றைய (15-5-6) தேசிய உரையில்.

said...

yes, sivabalan, 98% are immigrants or immigrant descents here in America! And I was told the native Indians got citizenchip in 1925 only, you know!

said...

So, till such time, native Indians had been treated as aliens?


Oh no!!

said...

//in the process of setting the things right, the difficulties are being pushed to the genuine skilled workers and Intellects (we, Indians are most affected) who are regularly coming to US to pursue their studies, carrier, and development.//

Nathar, I think if India had a terrestrial border like Mexico, even the 'non-intellectual' Indians would be flocking US like the Mexicans do now. I think a lot of perspectives are skewed here. I happened to listen to an NPR program, which interviewed a few Mexican teenagers going to school (illegal immigrants) in the US, who had no clue of the furore they're creating; and then an Indian physician was interviewed immediately after that, who complained about the hardships he has to go through to get a green card. All is fair and fine, and the Indian physician's views are totally justified. But, I guess the media spin here is subtlely pitting a struggling Indian wannabe Green-card holder against illegal Mexican immigrants. The right approach should have been to compare a legal Mexican immigrant to an illegal Mexican immigrant - but you know it goes there. Well, guess who pulled the planks some time ago ;-)

Sorry for the previous deletion; some glitch here :-(

said...

சன்னாசி சொல்றதை ஒத்துக்கணுங்க. நல்ல கட்டுரை பாபா.

said...

ஆமா குமரன், சன்னாசி சொல்றதுள் உண்மை இருக்கு, ஆனா அமெரிக்கா அரசாங்கம் ஒட்டு மொத்தமா எல்லோருக்கும் கடுபடி பண்றது தான், இங்கே பாயிண்டே! வேறே ஒன்னுமில்லை!