Thursday, May 25, 2006

மதுமிதாவின் ஆய்வு பணிக்கு....


வலைப்பதிவர் பெயர்: வெளிகண்ட நாதர்

வலைப்பூ பெயர்: பாலக்கரை பாலனின் பால்ய பார்வை

சுட்டி: http://ukumar.blogspot.com/

நாடு: வட அமெரிக்கா (புலம் பெயர்ந்தது கனடா, தொழில்புரிய இருப்பது: அமெரிக்கா)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே தான், சும்மா இணையத்தை பீராஞ்சப்ப வந்த விழுந்த தமிழ்மணம் பக்கம் இருந்த தமிழை கண்டு ஆர்வமுடன் யுனிக்கோடு, இ-கலப்பை எல்லாம் கத்துக்கிட்டு, பின்னூட்டமிட தொடங்கி, பிறகு வலையை பதித்தது

முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: செப்டம்பர் 26, 2005

இது எத்தனையாவது பதிவு: 75 வது!

இப்பதிவின் சுட்டி(url):http://ukumar.blogspot.com/2006/05/blog-post_114857617418191088.html


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முதல் பதிவில் நான் இட்ட பின்னோட்டமே பதில்! ப்ளாக்கர் ஆரம்பிச்சோன எதையாவது எழுதனுமுனு தோணுச்சி, ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல. சரி அந்தக் கதை இந்தக் கதை பேசறதவிட நம்ம கதை பேசுவோமுனுட்டுதான். இதோ ஆச்சி பாதி வாழ்க்கை வாழ்ந்தாச்சி, திருச்சி பாலக்கரையிலிருந்து இந்த லாஸ் ஏஞ்சலஸ் வரைக்கும் வந்தது வராதது, போனது, போவாதது, உண்டது, கழிஞ்சதுன்னு எவ்வளவோ இருக்கு. எதை எடுப்பது எதை விடுவது. இதை வேணா மறந்த கதைன்னு வச்சிக்கலாமா? (டைரியில் எழுத) வரணும், அண்ணன் வரணும் இந்த பாலக்கரை பாலன் பார்வையை பார்த்து ரசிக்கணும்!

சந்தித்த அனுபவங்கள்: நல்ல அனுபவங்கள் தான்!

பெற்ற நண்பர்கள்: வலை நாட்டுத் தோழ்ர்கள் அனைவரும்!


கற்றவை: அநேகம்! நம்ம படிக்காம விட்டுப்போச்சுன்னு எது எது இருக்கோ அதெல்லாம் தேடி படிச்சு, அதை பிறகு வலைப்பதிவில் பதிந்து, அதற்காகவே கல்லாத கடலளவை கற்றுக்கொண்டிருக்கிறேன்!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஏராளம் ஏராளம்! என்னவேனாலும், எண்ணத்தில் இருக்கும் என்னவேனாலும் எழுத கிடைத்த சுதந்திரம் ஏராளம்! ஏராளம்!

இனி செய்ய நினைப்பவை: விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், புதிய தொழில்நுட்பங்கள் சரித்திரம், கலாச்சாரம் என அனைத்து விஷயங்களும் இணையத்தில் தமிழில் அழகாக பவணி வர முழு முயற்சி!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: நான் ஒரு நாடோடி! பரதேசி! கல்வி செல்வம் அளித்தக் கொடையால் உலகம் சுற்றி வந்த வாலிபன் -:)


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: கருத்துக்களை நல்ல முறையில் பரிமாறி நாகரீகம் கொள்ள வழி வகுக்கும் இந்த தமிழ்மண மேடையில் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது, வேறு கண்ணோட்டங்களில் அதை கண்டு அதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விவாத தாக்கத்தால், நல்ல கருத்து பரிமாற்றங்களன்றி போவதால், குதர்க்க எண்ணங்கள் தோன்றி, அதன் விளைவாய் வரும் பின்னோட்டங்களும், அதற்கு பதிலடி பின்னேட்டங்களும் வளர்ந்து, மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல. ஆதாலால், இனி தமிழ்மண மேடையை அதற்கு பயன் படுத்த வேண்டாம் என என் அன்பு தமிழ் மண நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது!

6 comments:

said...

:-)

said...

குமரனே, புன்னகை மன்னனே! வருக வருக! (இது நமட்டுச் சிரிப்புத்தானே-:))

said...

சார்,

// கல்வி செல்வம் அளித்தக் கொடையால் உலகம் சுற்றி வந்த வாலிபன் //

அருமை!!


நன்றி!!

said...

//தமிழ்மணமேடையை //
தமிழ்மண மேடைன்னு பிரிச்சி போட்டிருக்கலாமோ? என்னைமாதிரி சின்னவங்களுக்கு வேற என்னவோ தோணுது :)

said...

சிவபாலன், நீங்க மதுமிதா ஆய்வுக்கு கைகொடுத்தீங்களா?

said...

பொன்ஸ், நீங்க சொன்ன மாதிரி பிரிச்சிட்டேன்! பிழை திருத்தப்பட்டது!