பெண்ணியம் பத்தி நிறைய பேசினாலும், இன்னைக்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நம்மை போல வளரும் நாடுகள்ல எப்பவும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. அப்படி கொடுமைகளை சந்திக்கிற பெண்களின் கடைசி ஆயுதம் தன்னை தானே அழித்துக்கொள்வது! ஆனா அதையும் மீறி வெற்றி நடை போட்டு சமுதாயத்துக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டா இருக்கக் கூடியவர்கள் ரொம்ப கம்மி. அதுவும் பழமையிலும் மதக்கட்டுபாட்டிலும் பெண்களை அடக்கிவச்சிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்திலே இருந்த வந்த ஒரு பெண்ணை பத்தி நம்ம மக்களுக்கு சொல்லலாமேன்னு தான் இந்த பதிவு. அதுவும் மதங்களிடையே உண்டாக்கும் விறுப்பு வெறுப்புகளை மற்றும் பதிவா போட்டு அதில குளிர் காய்ந்துக்கொண்டு மனித நேயத்தை மறந்த இருக்கும் நம் ஜனங்களே, கொஞ்சம் நேரம் இந்த பதிவை பார்க்க நேரம் ஒதுக்குங்க!
இந்த ஆண்டின் மிகச்சிறந்த செல்வாக்குடய நூறு மனிதர்களை பத்தி டைம்ஸ் பத்திரிக்கையின் இவ்வார பதிவில் வந்த அனத்து சிறப்பு மிக்க மனிதர்களில் என்னை ரொம்ப கவர்ந்த பெண்மணி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முக்தரன் பீபி(مختاران بیبی) என்பவர். இவர் யாருன்னா பாகிஸ்தான் நாட்டின் தலை நகரான இஸ்லாமாபாத்லிருந்து 12 மணி நேரம் தென்கிழக்கா பயணிச்சா வரும் மீர்வாலாங்கிற சிறு கிராமத்தை சேர்ந்த பெண்மணி. இந்த பெண்ணுக்கு நடந்த துயரம் வாழ்க்கையில எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது! ஆனா ஒரு துயரத்தையே சவாலா எடுத்துக்கிட்டு வாழ்ந்துகாட்டி இன்னைக்கு உலகம் முழுக்க அதிகமா பேசபடும் பெண்மணிகளில் ஒருவரா திகழ்கிறார். அப்படி என்ன துயரம், சோகம் இவர் வாழ்க்கையிலேங்கிறீங்களா, அதான் பழிக்குப்பழி, கல்வியின் வீச்சம் இல்லாத சமூகத்தில் வாழும் பெண்களுக்கே உண்டான கேடு, இந்த பொண்ணுக்கு நிகழ்ந்தது! அதுதான் கற்பழிப்பு, அதுவும் ஆண் மிருகங்கள் கூட்டாய் பலவந்தப்படுத்தி பழி தீர்த்துக்கிட்டது!
நடந்தது வேறே ஒன்னுமில்லை, கடந்த வருடம் 2002, ஜீன் 22ம் தேதி, முக்தரனின் தம்பி 12 வயது தம்பி ஷக்கூர், 26 வயசு சல்மா என்கிற மஸ்தோய் (Mastoi)என்கிற உயர்ந்த பழங்குடி பெண்ணிடம் கள்ள தொடர்பு வச்சிருந்தாகவும், அந்த பெண்ணை கெடுத்துவிட்டதாகவும் கருதி அந்த மஸ்தோய் பழங்குடியினர், தங்கள் கீழினமாக கருதிய முக்தரன் தம்பி ஷக்கூரை கடத்தி சென்று மஸ்தோய் இன ஆண்களால் ஓரினசேர்க்கைக்கு உட்படுத்தபட்டிருக்கிறார். அதை கேட்டு தம்பியை காப்பாற்ற சென்ற முக்தரனை, அந்த சல்மா குடும்பத்தை சேர்ந்தோர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து முக்தரனை வீதியில் விட்டனர். அதற்கு பிறகு அந்த கிராமாத்தில் உள்ள இமாம் கட்டபஞ்சாய்த்து செய்து முக்தரனை போலீஸ்க்கும் எல்லாம் செல்ல வேண்டாம் என கூறிவிட்டார். ஆனால் அதையும் மீறி முக்தரன் கோர்ட்டுக்கு சென்று வாதாடி, லாகூர் வழக்குமன்றத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கி இருக்கிறார். இது தான் நடந்தது. இதில இன்னொரு சோகம் என்னான்னா, முக்தரன் குடும்பம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருந்தாங்க, அந்தஅவதூறு நிரூபிக்கப்பட்டால்! அதுவும் ஷக்கூரையே அந்த பெண் மணமுடிக்கட்டுமென்றும், முக்தரை அந்த மஸ்தோய் இனத்தை சார்ந்த ஒரு ஆண்மகனுக்கே திருமணம் செய்யவும் சம்மதித்தனர். மேற்கொண்டு தங்களிடம் இருக்கும் நிலம்புலங்களையும் அவர்களுக்கு தருவதாக கூறினார்கள், அந்த குற்றம் நிரூபிக்க படும் பொழுது! ஆனால் அதையும் மீறி முக்தரன் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி, அப்படி வந்த பெண்ணை கூட்டாய் நாசமாக்கினர்!
இது என்ன நம்ப ஊர்கள்ல நடக்காத ஒன்னா, அப்படின்னு கேட்கிறீங்க. ஆனா இது கொஞ்சம் வித்தியாசமானது. முகமதிய பெண்கள் ஆண் கட்டுபாட்டை உடைத்துக்கொண்டு இது போல் நியாம் கேட்பது இந்தியாவில் கூட சாத்தியமான ஒன்று (இங்கும் பலத்த எதிர்ப்பு உண்டு). ஆனால் மத மூடநம்பிக்கையில் திளைத்து பெண்களை அடக்கி ஆளும் இஸ்லாமிய சமுதாயங் கொண்ட இந்த பாகிஸ்தானில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல! அதையும் மீறி தனக்கு நியாம் தேடி சென்று வாதிட்ட இந்த பெண்மணி உண்மையிலே புரட்சி பெண்மணியே. அதுவும் ஒட்டு மொத்தமாக அனத்து ஊடகங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்த பொழுதும் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்து பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி வைத்த பாகிஸ்தான் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது. ஆனால் அவர் அதையும் மீறி அனத்துலக ஆதரவில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்த சொல்ல, இது போன்ற கொடுமைகள் இனி பெண்ணினத்திற்கே வரக்கூடாது என முழங்க இவர் சந்தித்த முட்டுகட்டைகள் அதிகம்! கடைசியில் உலக முழுவதமிலிருந்த வந்தன கண்டனக்குரலுக்கு அடிசாய்ந்து இவருக்கு ஊக்க தொகை கொடுத்தார் பாகிஸ்தான் அதிபர் முஸ்ரஃப்! அந்த உதவி தொகை அனைத்தும் தன்னை போன்ற நலிந்த பெண்களுக்கும், சிறுவர்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறு பள்ளிகளை அந்த கிராமத்தில் உருவாக்கி கல்விகண்களை திறந்து வைத்தார்.
இப்படி அக்கிராம மக்களுக்கென தொண்டு செய்து கொண்டிருக்கும் இப்பெண்மணிக்கு பலத்த எதிர்ப்பும், மரண அச்சுறத்தலும் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது! ஏனென்றால், இவள் நம் நாட்டின் கலங்கம், சமூக சீர்குலைவுக்கு காரணமாகிறாள் எனக்கருதி பழமையிலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறி திளைத்த மதவாதிகளால் இப்பெண்மணிக்கு எப்பொழுதும் எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் தான் அதிகம் படிக்கவில்லையென்றாலும் இவை அனைத்தையும் மீறி சமூக முன்னேற்ற பொறுப்பெடுத்து பணி புரியும் இப்பெண்ணே புரட்சிக்குரியவர்! இழிந்த உலோகங்களை பொன்னாக்கும் புராதன இரசவாதம் போன்று புறைபட்ட சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடும் இப்பெண்மணி, தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயர் துடைக்கும் மருந்தென இப்பொது சேவை தொடரும் இவர் உண்மையிலேயே புரட்சி பெண்மணி, வாழ்க! முக்தரன் ஜிந்தாபாத்!
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இது தொடர்பாய் முஷாரப் தேவையில்லாமல் வாயைவிட்டாரே..அதை குறிப்பிடவில்லையே. 'பாகிஸ்தானில் இப்போதெல்லாம் கற்பழிப்பு புகார்கள் வெளி வருவதற்கு காரணம் நஷ்ட ஈடு பணத்தின் மேலிருக்கும் ஆசை' என்பது போல ஒரு கருத்து சொன்னார். அதுவும் பலத்த கண்டனத்துக்கு ஆளானது.
இஸ்லாமையும்,இஸ்லாமிய நாட்டையும் இழிவு படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊடகங்களும் வேண்டுமென்றே திரித்துக்கொடுத்துள்ள கதைதான் இது.
எப்படி இன்னும் இப்படி ஒரு பின்னூட்டம் வரவில்லை :-)
தருமி,
ரொம்ப ஓவர்தான்யா உம்ம நக்கல். :-D
வேறொன்றுமில்லை. holocaust பற்றி வலைப்பதிவுகளில் வந்த சில கருத்துக்கள் நினைவுக்கு வந்தது. அதனால் ஏற்பட்ட பின்னூட்டம். வெ.நா.நீக்க நினைத்தால் நீக்கி விடலாம். பிரச்சனை இல்லை.
கீழ்க்கண்ட குரான் வசனங்களை முஸ்லீம் இமாம்கள் கூறி, பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.
Quran- 4:15 “If any of your women are guilty of lewdness, take the evidence of four (reliable) witness from amongst you against them; if they testify, confine them to houses until death do claim them. Or God ordain for them some (other) way.”
Quran-24:2 “The woman and the man guilty of adultery or fornication—flog each of them with hundred stripes: Let no compassion move you in their case, in a matter prescribed by God, if ye believe in God and the last day.”
Quran-17:32 “ Nor come nigh to adultery: for it is a shameful (deed) and an evil, opening the road (to other evils).
Quran-33:33 “stay quietly in your houses, and make not a dazzling display.”
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
முக்தரனுக்கு தைரியம் இருந்த்தது, மனிதநேயம் இருந்த்தது, மனிதர்களின் துணையிருந்தது. அதனால் வென்றார். எல்லாம் வல்ல இறைவனை நம்பியிருந்தால் இன்னேரம் இறைவனை அடைந்திருப்பார்.
தருமியின் எதிர்பார்ப்பு சரிதானே அவருடைய அனுபவம் அதிகமல்லவா
இந்தச் செய்தியை நானும் படித்தேன்.. அந்தப் பெண்ணின் தைரியம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது தான்..
துயரத்தையே வென்று சமூக பொறுப்புடன் வெற்றி நடை போட்ட பெண்மணியை கேள்விபட்ட மாத்திரத்தில் பாதிக்கபட்டு உடனடியாக பதிவிட வேண்டும் என்ற தாக்கத்தினால் வந்த பதிவே இது! இப்படி பொது மேடைகளில் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது, வேறு கண்ணோட்டங்களில் அதை கண்டு அதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விவாத தாக்கத்தால், நல்ல கருத்து பரிமாற்றங்களன்றி போவதால், குதர்க்க எண்ணங்கள் தோன்றி விடுவதுண்டு, அதனால் விளைவாய் வரும் பின்னோட்டங்களும், அதற்கு பதிலடி பின்னேட்டங்களும் வளர்ந்து, மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல. ஆதாலால், இனி இம்மேடையை அதற்கு பயன் படுத்த் வேண்டாம் என என் அன்பு தமிழ் மண நன்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பின் நாரதர்,
மிகச் சிறந்த பதிவு. முஸராஃப் இந்தப் பெண்ணைக் குறித்து உளறியபோதே நான் ஒரு பதிவெழுத எண்ணியிருந்தேன்.
ஆனால், அப்போது அவகாசமின்றிப் போய்விட்டது. அதை நீங்கள் செய்திருப்பது மகிழ்ச்சியே. முக்தரன்கள் இன்னும் நிறைய வெளிப்பட வேண்டும்.
//மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல//
என்று நீங்கள் கூறியிருப்பதால் நான் 'பீடி' விவ்காரத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
சாத்தான்குளத்தான்
அன்பின் வெ.க.நாதர், (ஆசிஃப், கவனிக்க: நாரதர் அல்ல)
முக்தரன்களை வெளிப்படுத்தும் உங்கள் பதிவுக்கு நன்றி.
இஸ்லாம் என்ற வார்த்தையோ, வாடையோ தென்பட்டுவிட்டாலே அங்கு வந்து தன்னுடைய வெறுப்பை கழித்துச் செல்வதை வழக்கமாகக்கொண்ட மனநிலை உடையோரிடையே, உங்களுடைய பதிவின் நோக்கமும், பின்னூட்டமும் நேர்மையானது. ( ஒரு அன்புக் கோரிக்கை: 'முகமதிய' என்று எழுதாமல் 'இஸ்லாமிய' என்று எழுதுங்களேன். - இவ்வார்த்தைகளை வலிந்துப் பயன்படுத்துவதின் அரசியல் ஆய்வுக்குட்பட்டது)
உண்மையில் அநீதிக்கெதிராகப்போராடும் முக்தரன்களைத் தாம் இஸ்லாமியர்களாகப் பார்க்கவேண்டும். ஆனால், வெறுப்பை வலைப்பூக்களில் உமிழ்வோர் அநீதம் புரிவோரை இஸ்லாமியர்களாக நிலைநிறுத்தப் பாடுபடுகின்றனர் - தம் அரசியல் / பிழைப்புச் சார்ந்து.
வருகை தந்த அனைவருக்கும் நன்றி!
திரு ராஜா அவர்களே, எனக்கு தெரிந்து 'முகமதியர்' என்ற சொற்றொடர், நான் சிறுவயது முதற் கொண்டு உபயோகபடுத்தும் சொற்பதம். இதன் அரசியல் ஆய்வு, புரியவில்லை! இருந்தாலும் இனி தவிர்க்க முயற்சிக்கிறேன்!
நல்ல பதிவு. ஒரு துணிவான பெண்மணியை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
எனக்கும் இஸ்லாமியருக்கும் முகமதியருக்கும் உள்ள வேறுபாடு புரியவில்லை. அதில் என்ன அரசியல் என்றும் புரியவில்லை. இஸ்லாமியர் என்பது முஸ்லீம் மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல். முகமதியர் என்பது நபிகள் நாயகம் அவர்களின் வழியைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள். நம் நாட்டை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயர் கொண்டு முகலாயர் என்று இஸ்லாமியரைச் சிலர் குறிப்பது பார்த்திருக்கிறேன். அது தவறு. ஆனால் இஸ்லாமியர், முகமதியர் என்பதில் என்ன வேறுபாடு?
புரட்சி பெண்மணி, வாழ்க! முக்தரன் ஜிந்தாபாத்!
மிக நல்ல பதிவு!!
முந்தையப் பின்னூட்டத்தில் 'இஸ்லாமியருக்கும் முகமதியருக்கும் உள்ள வேறுபாடு எனக்கும் புரியவில்லை' என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். ஒரு சொல் இடம் மாறினால் பொருளும் மாறிவிடுகிறதே.
அதைத் தான் நானும் கேட்கிறேன், குமரன்!
நன்றி சிவபாலன்!
நீதிக்காக போராடிய முக்தரனின் மனவலிமை பாராட்டுக்குரியது. மியான்மரின் சுயி கூட சர்வாதிகார ஆதிக்கத்தில் கொடுக்கப்படும் மிரட்டல்களுக்கு மீறி எதிர்குரல் எழுப்புவது பாராட்டப் பட வேண்டியது. இறுதியில் தர்மமே வெல்லும் என்னும் நம் நம்பிக்கை இவர்களால் வலுப்படுகிறது.
Post a Comment