Sunday, May 28, 2006

ஏசு (வெளிகண்ட இல்லை) நாதரின் பேத்தியும், மோனோலிஸாவும்!

திடீர்னு கொஞ்ச நாளைக்கு முன்னே, எல்லாரும் பரபரப்பா ஒரு நாவலை இந்த பக்கம் வாங்கி படிச்சிக்கிட்டிருந்தாங்க, பேரு 'டாவின்ஸி கோடு'. சரி நம்முலும் வாங்கி என்னதான்னு படிப்போமேன்னு வாங்கினேன். அப்புறம் சரியா நேரம் கிடைக்காதாலே முழுசா படிக்க முடியல்லை. அப்பதான் இந்த நாவல் படமா வந்து ஒரே களேபரத்தோட ஓடிக்கிட்டிருக்கேன்னு இந்த வாரம் போய் பார்த்தா, அது ஏசுநாதர் பேத்தி பத்தின கதை! அதுக்கென்ன ஒரே களேபரம் அப்படின்னு ஆராஞ்சப்பதான் சொன்னாங்க, ஏசுநாதர் பிரம்மச்சாரின்னுதான் எல்லாருக்கும் தெரியும் ஆனா அவரு அப்படி இல்ல, 'ஓடிப்போயி கண்ணாலந்தான் கட்டிக்கிடலாமா, இல்லே கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா'ங்கிற கதை பண்ணி இப்ப அவருக்குன்னு வாரிசுங்க இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! அப்படி கண்ணாலம் பண்ணதை பரம ரகசியமா வச்சிருந்து, கடைசியிலே அவரு பேத்தி ஒன்னு இப்ப இருக்கறதாகவும், அந்தம்மாவுக்குத்தான் ஆபத்துன்னு சொல்லி வந்த கதை தான் இந்த நாவல், படம் எல்லாம்!

என்னது ஏகப்பட்ட எதிர்பார்ப்போட எல்லாரும் பேசி, இந்த படத்துக்கு கும்பலா போய்கிட்டிருக்காங்கண்ணு நம்மலும் போய் பார்த்தப்ப, பல விஷயம் தெரியக்கிடைச்சிச்சு! நிறையப்பேரு இந்த படக்கதை பத்தி விமர்சனம் எழுதிட்டாங்க, வேணும்னா நம்ம முகமூடி எழுதின விமரிசனத்தை, டாவின்சி கோட் - புதிரா புனிதமா?, படிச்சுப் பாருங்க!

படம் ஆரம்பித்திலேயே படத்தோட கதாநாயகன், ஒரு லெக்சர் குடுப்பாரு, இந்த 'Religious symbology' பத்தி, அதாவது மதகுறியீடுகள், அந்த குறியீடுகள் பத்தி ஆராஞ்சு, அதனுடய அர்த்தம், விளக்கங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டிருக்கிற ஒரு புரபசர் அவரு! அதிலே காமிக்கிற திரிசூலத்துக்கு என்னமோ விளக்கம் கொடுப்பாரு!
இந்த குறியீடுகள் பத்தி சொன்னோன்ன, நம்மூர் பக்கம் அதிகமா பொழங்கற இந்த கலசம், சக்கரம், வேல், சுவஸ்திக், சக்கரா, அப்புறம் 'ஓம்' இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொன்னுக்கும் ஒரு பொருள் இருக்குது! அதுவும் இந்த அதிகமா பொழங்கிற யந்திரம் போன்றதெல்லாம் நம்ம சாமி வகைகளைக்குறிக்கும் குறியீடுகள்! ஆக இதை வச்சு ஏதாவது கோடு துப்பறியும் கதை நாளைக்கு நம்ம ஷங்கர் மாதிரி கோஷ்டிங்க எடுத்தாலும் எடுப்பாங்க சொல்ல முடியாது!

அப்படி டாவின்ஸியின் குறிகளின் குறிப்பு என்னாங்கிறதை கண்டுபிடிக்க இந்த புரபசரை கூப்பிட்டுட்டு வருவாங்க! அதிலெயும் இந்த 'Hexagram (Seal of Solomon)' பத்தி கண்டுபிடிக்க கூப்பிட்டுட்டு வருவாங்க! அதாவது கதைப்படி இறந்து கிடக்கிறவரு உடம்பிலே இந்த மாதிரி குறியீடுகள் எல்லாம் எதைக் குறிக்குதுங்கிறதை கண்டுபிடிக்க! அம்மணமா கொலை செய்யப்பட்ட ஆளோட உடம்பிலே வரைஞ்ச குறிகளை கண்டுபிடிக்க! அதுக்கு உங்களுக்கு கொஞ்சம் அந்த டாவின்ஸியின் குறிகளும் தெரிஞ்சிருக்கனும்!!இந்த 'Hexagram (Seal of Solomon)' ங்கிறது தெய்வீக சங்கமத்தை குறிக்கும் குறியீடு! அதாவது ஆண் பெண், நீரின் முக்கோணம், நெருப்பின் முக்கோணம் அனைத்தும் இணையும் சங்கமம்! அதாவது இயற்கையின் மூலமான நீர், ந்ருப்பு, நிலம், காத்துக்களை குறிக்கும் முக்கோணங்களின் சங்கமம் தான் இந்த 'Hexagram (Seal of Solomon)' என்பது! இந்தக்குறி டாவின்ஸி குறியீடுகளில் வந்தாலும் இது ஒரு பொதுவான குறி! எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுவது! நமது இந்து மதத்திலும் இதை சத்கோணம் என்றழைக்கப்படுவது! அதாவது சிவக்கோணமும்( சிவ பெருமான், நெருப்பு ரூபம்) சக்திகோணமும் (சக்தி, நீரின் ரூபம்), அதாவது ஆண் பெண்ணின் சங்கமம் என்பது! இதுவே யூதர்களுக்கு 'Star of David (Magen David, Shield of David' என்றழைக்கப்படுவது!

இப்படி குறி கண்டுபிடிக்க வந்த புரபொசர், அந்த கொலை நடந்த மியூசியத்திலே இருந்த மோனாலிஸா உருவபடத்திலே பதிந்து கிடக்கும் சில ரகசிய குறியீடுகள் ('Cryptography') ஏதேச்சையா பார்த்து, அங்கன ஆரம்பிக்குது திரில்லர் சேஸிங், அதாவது ஏசு பிரம்மச்சாரி இல்லேங்கிற உண்மை, அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டது கூட இருந்த சீடரான மேரி மெகதலின்னு சொல்ல ஆரம்பிச்சு, அந்த கடைசி விருந்து போட்டாவை அக்கு வேறே ஆணி வேறே கழட்டி போட்டு, அதாவது மேரியம்மாவை அங்கிருந்து இங்கே இடம் மாத்தி ஏசு நாதர் தோள் சாஞ்சு இருந்தெல்லாம் விளக்கி, அவரு கண்ணாலம் கட்டிக்கிட்டவரு தான்னு சொல்ல ஏகப்பிரயத்தனம் பண்ணறாங்க!

இப்படி குறி எழுதி கொலை செஞ்சிட்டு போற ஆளு சரியான நம்மூரு அலகு குத்திக்கிற கோஷ்டி! என்னதான் இந்த மேற்கு பக்கம் எல்லாம் முன்னேறி வளர்ந்தவங்கண்ணு நாம சொல்லிக்கிட்டிருந்தாலும், இந்த ஊர்லயும் தன்னை தானே வருத்திக்கிட்டு சாமி கும்படுற ஆளுங்களை இன்னும் பார்க்கலாம் போல! இந்த கொலைகாரன், ஏசு எப்படி சிலுவையில அறையப்பட்டாரோ, கை, கால்கள்ல முட்களால சுத்தியும், முள்கிரீடத்தை தலையில் சுமந்து இந்த மக்களுக்காக உயிர் விட்டாரோ, அதே வேதனைகளை அனுபவிக்கிற ஆளு தான் இந்த கொலைகாரன். தனக்குத்தானே கசையடி கொடுத்துக்கிட்டு, முட்களான சங்கிலியில கால்ல கையிலே இரத்தக் களரி ஆக்கிக்கிட்டு 'ஏசு கிறித்துவே எனக்கு வலிமைக் கொடு'ன்னு வேண்டிக்கிட்டிருக்கிற ஆளு! அதாவாது மதத்துக்காக என்னவேணாம்னாலும் செய்ற ஆளு!. பார்த்தீங்களா கொடுமையை, தீ மிதிக்கிறது, அலகு குத்திக்கிறது, மண்ணு சோறு சாப்பிடறது, வேப்பிலை அடிக்கிறதுன்னு மூடநம்பிக்கைன்னு சொல்லி காட்டுமிராண்டிங்கன்னு பெரிசா சொல்லி எள்ளி நகையாடும் இந்த சமூகமும் லேசுபட்டதில்லை. கடைசியிலே இராம் நாரயணன் படங்கணக்கா இருந்துச்சு போங்க!

இந்த ஆளு ஏன் கொலை செய்றான்னா, கதை வந்து நம்ம மடாதிபதிங்ககுள்ள இருக்கிற ரகசியம் மாதிரி, அதான் மதுரை ஆதினம், காஞ்சி மடம் அப்படின்னு நம்மூரு கதைகள் இருக்கிற மாதிரி, இங்கேயும் ரகசியங்கள் மிகுந்த இந்த மதம் கிறித்துவமதன்னு சொல்லி கதை வளர்க்கிறாங்க! மொத்ததிலே ஏசு நாதர் கல்யாணம் கட்டி, புள்ளைங்க யெல்லாம் உண்டுன்னு சொல்லிக்கிட்டு , அந்த வம்சத்தை காக்கிறதுக்காக போராடுற குரூப்பு ஒன்னு. இன்னொன்னு, இந்த உண்மைகள் எல்லாம் வெளிய தெரிஞ்சா கிறித்துவ மதத்தோட புனிதம் போயிடும்னு அதை எப்பாடு பட்டும் மறைக்கவோ, இல்லை அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திரியற கும்பலுங்களை வெட்டி சாய்க்கவோ அலையும் இன்னொரு கும்பலு! இதில பழைய சரித்திரங்களை வேறே சொல்றாங்க. நம்ம புராணக் கதையிலே, கம்சன் எங்கே கிருஷ்ணராலே தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு ஊருல இருக்கிற குழந்தைங்களை எல்லாம் வெட்டி சாய்க்கிறமாதிரி, இங்கேயும் ஏசுகிறித்துவின் வாரிசா வந்த பெண் இருக்கிறாள் எனக்கருதி ஊர்ல இருக்கிற எல்லா பெண்களையும் வெட்டி சாய்க்கிர கதை உண்டு! மதம், கடவுள், புராணம்னு வந்துட்டா, எல்லா இடத்திலேயும் ஒன்னு தான், இதிலே பெரிசா ஒன்னும் வேறு பாடே இல்ல போலிருக்கு!

இந்த படத்தோட நாயகி தான் ஏசுவோட கடைசிவழி வந்த பேத்தியாம், அப்படி கதை பண்ணியிருக்காங்க!. ஒரு ஆக்ஸிடண்டிலே தன் குடும்பமே செத்தோன, இவரை தன்னோட தாத்தா தான் வளர்க்கிறாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கிற பொண்ணுக்கு, கடைசியிலே அவர் உண்மையிலே தாத்தா இல்லே, இந்த பேத்தியை காப்பாத்துற அந்த இன்னொரு கும்பலை சேர்ந்தவர்னு கதாநாயகனோட சேர்ந்து அப்புறமா கண்டுபிடிச்சி தெரிஞ்சுக்குது! இதிலே காப்பத்துற குரூப்ல புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எல்லாம் இருக்கிறாராம்!

படம் பார்த்துட்டு வந்து நேத்து டிவியிலே இன்னொரு புரோகிராமும் பார்த்தேன், இந்த 'Illumanati'ங்கிற ரகசிய விஞ்ஞான கும்பலு அந்தக் கால மதகட்டுபாடுகளை தகர்தெரிந்து எப்படி விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த கஷ்டப்பட்டாங்கன்னு சொல்லி வந்த நிகழ்ச்சி! மேற்கோண்டு இன்னொரு நிழலுக ரகசிய அரசியல் கும்பலு (அதாவது புதுமை விரும்பிகள்!) வட்டிகனுக்கு வெடி வச்சு, எப்படி போப் எல்லாம் கொண்ணாங்கன்னு, அதுவும் இந்த டாவின்சி கோடு கதை எழுதின அதே ஆசாமி எழுதின இன்னொரு நாவலான 'Angels & Demons'ங்கிறதிலருந்து ஆராய்ச்சி பண்ணி ஆதாரங்களோட சொல்லிக்கிட்டிருந்தாங்க! கடைசியிலே
ஒன்னு நல்லா தெரியுது இந்த முன்னேறிய மேற்கு பக்கம்னு நாம் சொல்லிக்கிட்டிருந்தவங்களோட மதவெறி கொஞ்சம் நஞ்சம் இருந்ததில்லை! உலக அரசியல் அரங்குல கவுக்கிறதும், ஏத்துறதும்னு ஏகப்பட்டது செஞ்சிருக்காங்க! நம்மூரு பக்கமும் இந்த அரசர்களுக்கு பெரிய வழிகாமிக்கும் மதகுருக்கள் செய்யாத அரசியல் இல்லை தான்! ஆனா இங்கே பார்க்கும் போது நம்மதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு போயிடுச்சு போங்க!

மொத்த களேபரமும் ஏசுக்கு கல்யாணம் பண்ணி வச்சதாலே தான்! நம்மூர்ல பராவாயில்லை நம்ம சாமிக்கெல்லாம் இரண்டு இரண்டு பொண்டாட்டி கட்டி வச்சிட்டோம் ஜாலியா!

12 comments:

said...

டாவின்சி கோட் படிக்கும்போதே என்னடா சிவலிங்க தத்துவம் சொல்றேரேன்னு நினைச்சேன்.பிட்ச்போர்க்(சூலாயுதம்) பத்தி எல்லாம் சொல்லிருக்காரு.யூதர்களோட பெண்தெய்வம் ஒண்ணு முதல்ல இருந்துச்சாம்.ஷகீனான்னு பேராம்.எனக்கு சக்தி நியாபகம் தான் வந்துச்சு

said...

ஓ..நீங்க இயேசு நாதர் அப்படின்னு சொன்ன உடனே நாங்க வெளிகண்ட நாதரையும் இயேசு நாதரையும் வச்சு குழப்பிக்கொள்ள வேணும்...இல்லையா...

கேக்க நாதி இல்லைன்னா எது வேனாலும் எழுதலாம்...இல்லையா நன்பரே..

said...

சரியா சொன்னீங்க செல்வன்! அது தான் இந்த குறிங்களுக்குள்ள விளக்கங்கள் நிறைய வருது!

said...

செந்தழல் ரவி, அதான் கேட்க நீங்க இருக்கீங்களே! சும்மா கேளுங்க காசா பணமா:)

said...

கேக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருக்கேன்

வெளிகண்ட நாதர்ன்னா என்னங்க அர்த்தம்?

said...

'வெளிகண்ட நாதர்' ஒரு சாமி பேரு!

said...

சார்,

// 'ஓடிப்போயி கண்ணாலந்தான் கட்டிக்கிடலாமா, இல்லே கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா'ங்கிற கதை //

வெளிகண்ட நாதர் டச்....


சுவரசியமான பதிவு

நன்றி

said...

சிவபாலன், படிக்க சுவாரசியமா இருந்திச்சா? அப்புறம் நிறைய ஜேம்ஸ்பாண்டு கதைகணக்கா இந்த 'Illumanati'ங்கிற ரகசிய கும்பல் கதைங்க இருக்கு, அப்புறம் ஒரு சமயம் பதிவா போடுறேன்!

said...

இல்லுமினாட்டி அருமையான கதைங்க.டாவின்சி கோடை விட ஏஞெல்ஸ் அன்ட் டிமன்ஸ் நல்லா இருக்கும்.ஆனா சர்ச்சையான தீம் என்பதால் டாவின்சி கோட் பிரபலமாகிவிட்டது

said...

செல்வன், நீங்க இந்த பக்கம் அமெரிக்காவில இருக்கீங்களா? போன சனிக்கிழமை காலையிலே A&Eல அந்த 'Illumanati'பத்தி ஒரு புரோகிராமு போட்டாங்க பார்த்தீங்களா?

said...

புதரகத்துல தான் இருக்கேன்.ஆனா டி.வி பாக்கற பழக்கம் சுத்தமா கிடையாது

said...

TO S. Aravindan Neelakandan

I want say some thing about my points after reading your post
1.Da vinci Code is a fictious novel written by Dan Brown.If you accept this one as a novel then nothing is going to happen.If not, in future some one will write a novel about Lord krishna and his history with his own real look and feel imagination that may be a controversial one.My question here is,At that time Hindu ethnic groups will protest and blame the film( if it is taken as a film)in India?.you agree or disagree.
If you agree and accept their blame ,then you no need to blame the protest in Goa.Ok.
For the publication of cartoon of Muhammed Nabi in a danish newspaper ,worldwide muslims protest and blamed on that magazine.Should you accept that one?
So,Just for publishing the image as cartoon is making controversial in Muslim religion.
Then how you say every christian in this world could not blame a film of controversial and shaking the holyfaith of christianity?

2.You said that hindu religion see Jesus "as a dimension of Brahman "thats all.Its all in your point of view.can you say Allah as universal rather than exclusive?Then definitely you can get comments from Muslim brothers for disagreeing your arguement.

3.So be an Indian dont blame on other religions.It will not affect the religion you blame .But it surely reduce the dignity of your own.Give respect to the religions preeching in India.Dont allow or accept any controversial films(In Any Religion) to keep our nation unity in diversity.