Wednesday, May 03, 2006

ஜோதிடம் இனி பலிக்குமா?- புது கிரகம் கண்டுபிடிப்பு!

இந்த சாமி இருக்கா, இல்லையான்னு கேட்டு ஏகப்பட்ட சர்ச்சை நடக்கிற மாதிரி, இந்த ஜோஸ்யமும் பலிக்குமா, பலிக்காதான்னு நிறைய பேருக்கு கேள்வி இருந்திக்கிட்டு இருக்கும். அதிலயும் ஜாதகம் கணிச்சு, பலன் பார்க்கிறவரங்க, எப்போதும் ஜோஸ்யர் வீட்டுக்கு ஜாதக்கட்டு தூக்கிக்கிட்டு அலையறவங்களுக்கு, இப்போ நான் கேட்கபோற கேள்வி, இனி ஜோதிடம் பலிக்குமாங்கிறது. ஏன்னு கேட்கிறீங்களா, இப்ப புதுசா கிரகம் ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்களே, அந்த கிரகத்தை கணக்கில சேக்காம ஜோதிட கணக்கெல்லாம் தப்பாயிடாது, அதான்! அது என்னா புதுசா கிரகம் தானே கேட்கிறீங்கா, ஆமா, புளூட்டோக்கு அப்புறம் கொஞ்சம் தள்ளி சுத்திக்கிட்டுருக்கிற ஒரு புது பிளானெட், கிரகம் ஒன்னை போன இரண்டு வருஷம் முன்னே கண்டுபிடிச்சாங்க, அது என்னான்னு கொஞ்சம் பார்ப்போமா?

இந்த ஜோஸ்யர்கிட்ட போய் உட்கார்ந்தா, இராகுவும் கேதுவும் எதிர்த்த எதிர்த்த வீட்ல உட்கார்ந்திகிட்டு இருக்காங்க, குரு இரண்டாம் இடத்தில இருக்கிறதானாலே கொஞ்சம் கஷ்டம், பணவிரையம், இல்லேனா உங்களுக்கு ஏழரை நாட்டு சனி அது இதுன்னு ஏதாவது சொல்லி பயமுறுத்துவாங்கெ! அதுவும் கல்யாணம் கச்சேரின்னு பொண்ணு மாப்பிள்ளை ஜாதகம் பொருத்தம் பார்த்து அங்க சரியில்லை, இங்க சரியில்லை, புத்திர பாக்கியம் இல்லை அது இதுன்னு மனசு ஒத்து புடிச்சிருந்தாலும் இந்த ஜோஸ்யகாரங்க அலும்பு தாங்காது போங்க. அதில்லையும் மெத்த படிச்சவங்களும் இதை நம்பிக்கிட்டு, 'டேய் என் பிளேனட்டரி பொஸிசன் சரியில்லடா' அப்புடி ஆயிடும் இப்படி ஆயிடும்னு சொல்லி புலம்பி தள்ளிக்கிட்டிருப்பாங்க! அப்புறம் இதில் ஒரு கணக்குப்போட்டு அந்தந்த கிரகங்கள் இருக்கும் நிலை, நீங்க பொறந்தப்ப இருந்த நிலை, இப்ப அது மாறி வரும் நிலையை வச்சு, கணிச்சு, வரக்கூடிய பலன், கண்டம், துன்பம், சச்சரவுன்னு அடுக்கிட்டே போவாங்க. இவெங்கெளுக்கெல்லாம் நான் கேட்கிற கேள்வி, இப்ப புதுசா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிட்டாங்களே,ஏற்கனவே இருந்த கிரகங்களை வச்சை குறி சொல்லிக்கிட்டிருந்தீங்க இப்ப உங்க கணக்கெல்லாம் என்னாவறது, இந்த குரு சந்திரமேட்ல உட்கார்ந்திருக்கிறான், சூரியமேட்ல உட்கார்ந்திருக்கான்னு சொல்லிக்கிட்டு திரிவீங்களே (முக்காவாசி பேருக்கு இந்த நாலம் வீடு, இரண்டாம் வீடு, எதிர்த்த எதிர்த்த வீடு, இராகு கேதுவை பார்க்குதுன்னு இந்த ஜோஸ்யகாரங்க சொல்றது ஒரு மண்ணும் தெரியாது, புரியாது, எந்த கணக்கில சொல்றாங்கன்னு, அதையே அடுத்தவங்ககிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருப்பாங்க!)

அது மாதிரி நம்ம கோவில்ல காலாகாலமா இந்த நவக்கிரகங்கள்ன்னு இந்த ஒன்பது தெரிந்த கிரகங்களைதான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இப்ப இந்த சூரியகுடும்பத்திலே புதுசா பிளேனட் கண்டுபிடிச்சிட்டாங்க, இதுக்கும் புது கிரகச்சிலை வச்சாவனும், நவக்கிரகம்ங்கிரதுக்கு பதிலா தசக்கிரகம்னு சொல்லனும் இனிமே! சரி விஷயத்துக்கு வருவோம்.

அமெரிக்காவில கலிஃபோர்னியாவில உள்ள 'California Institute of Technology' க்கு சொந்தமான பலொமர் வானிலை ஆராய்ச்சிக்கூடத்தில ('Palomar Observatory') பணிபுரியும் மைக் ப்ரவுன் (Mike Brown) என்கிற வானவியல் நல்லுனர்(astronomer) கண்டுபிடிச்ச இந்த புதுக்கிரகம் தான் ஷீனா("Xena")ங்கிறது! இவரு கண்டுபிடிச்சது கிரகம் தானா இல்ல வேற எரிநட்சத்திரம், வால்நட்சத்திரம், வின்மீன்கள் மாதிரியான்னு ஒரு சர்ச்சை நடந்துக்கிட்டு இருக்கு! ஆனா இது புளூட்டோ கோளத்தை விட பெரிசுங்கிறாதாலே இதை ஒரு புதுக்கிரகம்னு தான் சொல்றாங்க! இதுக்கு அந்த வானிலை ஆராய்ச்சிபடி வச்ச பேரு '2003UB313' இந்த புதுக்கிரக மட்டுமில்லாம, இன்னொரு புது கிரகமும், அதை சுத்தும் நிலவுகளையும் புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க! இன்னொரு புதுசா கண்டுபிடிச்ச கிரகம், அதாவது ஷீனாவோட அளவுல கம்மி, அது பேரு சான்டா ("Santa"), இதோட வானவியல் பேரு, 2003 EL61. இதை சுத்துற நிலவு பேரு "Rudolph", அதே மாதிரி இனொன்னு, "Easterbunny" (2005 FY9). அப்புறம் அந்த ஷீனா("Xena")வை சுத்துற இரண்டு நிலாக்கள் பேரு "Flying Dutchman" (Sedna), and "Gabrielle" (the moon of 2003 UB313). இப்படி கண்டுபிடிச்ச புது புது நகரும் கோள்களை இந்த மாதிரி பேரிட்டு அழைக்கிறாங்க, ஆனா அது எல்லாம் கிரகத்தின் வகைக்குள்ள வருமா வராதான்னு இப்பதான் பெரிய சர்ச்சை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த 2003, 2005 எல்லாம் அந்த வானவியல் பேருகளோட தொக்கி நிக்கிறதுல்ல, அது கண்டுபிடிச்ச வருஷத்தை குறிக்குது! அதாவது சூரிய குடும்பத்தில நாம் இவ்வளவு தான்னு தெரிஞ்சுக்கிட்ட ஒன்பது கிரகங்களுக்கு அப்பால் புதுசா கண்டுபிடிச்ச இந்த கோள்கள் மேலே இப்ப நிறைய ஆர்வம் வந்திருக்கு வானவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு! அது எப்படின்னு பார்ப்போமோ?

இந்த மாதிரி வானவியல் ஆராயச்சியில அப்ப அப்ப வரும் சேதிகள் என்னான்னா, பூமியை நோக்கி வரும் இந்த வால்நட்சத்திரங்கள் தான், அதை ஆங்கிலத்தில 'Near Earth Objects'ம்பாங்க. இதை வச்சு பல கதை கட்டிவிடுவாங்க, அதாவது இன்ன தேதியில உலகம் அழியப்போகுதுன்னு! ஒரு பெரிய வால்நட்சத்திரம் நம்மள நோக்கி வந்துக்கிட்டுருக்கு , அது வந்து முட்டி மோதினிச்சினா, அவ்வளவு தான், நாமெல்லாம் அம்பேல், அதுக்கு முன்னாடி அனுபவிக்கிறதெல்லாம் அனுபவிச்சிக்கங்க, ஷகீலா பிட்டு படம் இன்னம் பார்க்கலேன்னா பார்த்து முடிச்சிடுங்கன்னு நிறைய அனுமாஷம் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுவும் அந்த ஜோதிடம் மாதிரி தான்! இந்த ஊர்ல, அதுவும் நாகரீகம் கண்ட மேலை நாடுகள்ல, பைபிள்ல சொன்ன மாதிரி உலகம் 9/11, 2006ல அழியப்போகுது இந்த astroids வந்து தாக்கின்னுட்டு போட்டு நம்ம ஊரு நக்கீரன் மாதிரி பத்திரிக்கைகள் நிறைய இங்கே விக்கும், வாங்கி படிச்சி பார்த்துட்டு சரி அவங்க சொன்ன மாதிரி அந்த 'Near Earth Objects' பத்தி NASA வெப் சைட்ல தேடி பார்த்தீங்கன்னா, ஒரு மன்னும் கிடைக்காது எல்லாம் ஹம்பக்! இப்படியும் காசு பார்க்க சில பத்திரிக்கைகள் உண்டு. இந்த மேல்நாட்டு உலகம் ரொம்ப விசித்திரமானது, ஒன்னு அழகா விஞ்ஞான ஆராய்ச்சி அது இதுன்னு அறிவு பூர்மா நடக்கிற கும்பலு, இன்னொன்னு ஜீஸஸ், பைபிள்ன்னு அந்த விஞ்ஞான சாமாச்சாரத்தையே மதரீதியா ஏதாவது சொல்லி மக்களை பயமுறுத்திக்கிட்டு அலையறது, லேட்டஸ்ட்டா, இந்த 'குளோபல் வார்மிங்', அதை பத்தி மதத்தலைவர்கள் என்னா சொல்லி எப்படி பயமுறுத்தறாங்கன்னு ஒரு பதிவு அப்புறம் போடுறேன்!

இந்த 'Near Earth Objects' ரொம்ப சுவாரசியமான ஒன்னு, இந்த வருஷம் ஜனவரியில்ல, நம்ம பூமியை ஒட்டி போன அந்த வால் நட்சத்திரத்தோட ஒரு பெரிய ஆப்ஜக்ட்டை, அந்த நட்சத்திரம் வர்ற பாதையிலே திருப்பி மோதவச்சு அதை போட்டோ எல்லாம் எடுத்து NASA வில ஆராய்ச்சி செஞ்சாங்களே( Deep Impact), ஞாபகம் இருக்கா, அது மாதிரி இப்ப ஒரு பெரிய ரூமர், வதந்தி இந்த இணையத்திலேயே சுத்திக்கிட்டிருக்கு, என்னான்னா, இந்த ஒரு வால்நட்சத்திரம், பேரு '73P/Schwassmann-Wachmann 3' அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் பூமி சுத்தும் பாதையில் குறுக்கிடுது, அது இப்ப சூரியனின் ஈர்ப்பு விசையாலே, நாலு துண்டாகிப் போயி அந்த துண்டுகள் நம்ம உலகத்தை தாக்க போகுது, அதுக்கு வெள்ளோட்டமா தான் இந்த சுனாமி, புயல், பூகம்பம் காட்டுத்தீ எல்லாம், அப்புறம் மிகப்பெரிய அழிவு, வரபோவுதுன்னு ஒரே பீலா போங்க, அதுவும் சில வெப்சைட் சயிண்டிபிக்கலா, அந்த உடைஞ்ச துகள்ல இருந்த வந்த போட்டான்ஸாள தான் இத்தனை இயற்கை கொடூரமும் நடந்துச்சுன்னு ஹேஸ்யம் சொல்லிக்கிட்டிருக்காங்காங்க! ஆனா NASA வோட அறிக்கையின்படி இதெல்லாம் ஒன்னுமில்லை, அது உடைஞ்ச துண்டுகள், பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பாலதான் கடந்துக்கிட்டிருக்கு, அதுனால நம்ம பூமிக்கோ, இல்ல மேலே சுத்திக்கிட்டிருக்கிற 'International Space station' க்கோல்லாம் எந்த ஆபத்துமில்லை, அப்படின்னு சொல்லியிருக்காங்க. ஆனா இது போல உடைஞ்சு சிதறிய துண்டுகள் விழுந்த கதையும் இருக்கு. 1992ல, இதே மாதிரி சுத்திக்கிட்டிருந்த வால்நட்சத்திரம் உடைஞ்சு சிதறி 17 துண்டுகளா ஜீபிடர் கிரகத்தில விழுந்த கதை உண்மையானது அதுனால தான் இந்த பீதி! பாத்தீங்களா, விஞ்ஞானத்திலேயும் எவ்வளவு ஜோஸ்யம்னு!

சரி இந்த புது கிரகத்தை பத்தி பார்ப்போம். நெப்ட்யூன்க்கு அப்புறம் கண்டுபிடிச்சது தான் புளூட்டோ, இது எங்க சுத்திக்கிட்டிருக்குன்னா, நம்ம சூரிய மண்டலத்தின் வெளி சுற்று மண்டலம் இருக்குல்ல, அதுக்கு பேரு 'Kuiper belt' அதாவது நெப்ட்யூன் கிரகத்துக்கு அப்பால வெளியில 100 AU (Astronomical Units ) (1 AU ங்கிறது சூரியனுக்கும் பூமிக்குள்ள தூரம்) தூரத்தில இருக்கிற மண்டலம் தான் இந்த 'Kuiper belt', அந்த மண்டலத்தில இந்த புது கிரகத்தை கண்டுபிடிச்சிருக்காங்க! இந்த மண்டலத்தில தான் 10 கோடி வின்மீன்கள் சுத்திக்கிட்டிருக்கு, அங்கே இருந்து வரக்கூடிய வின் மீன்கள் (உடைஞ்ச பாகங்கள்) தான் நம்ம பூமி சுத்திக்கிட்டிருக்கிற மண்டலத்தில வரக்கூடியது, நான் மேலே சொன்ன மாதிரி! சரியா சொல்லனும்னா 10 பில்லியன் மைல் சூரியன்லருந்து இந்த கிரகம்! இது ஒரு பனிக்கிரகம், எல்லாமே ஐஸ்!இது சூரியனை சுற்றும் பாதையின் அளவும் புளூட்டோ கிரகத்தின் சுற்று பாதையை போல இரண்டு மடங்கு பெரிது! புளூட்டோ சூரியனை சுத்தி வர 250 வருஷமாச்சுன்னா, இந்த புதுக்கிரகம் சூரியனை சுத்தி வர பிடிக்கும் வருடங்கள் 560! இந்த கோளத்தின் அளவு குறுக்காக 2400 +/- 100 km, இதனுடய வெளிப்பரப்பு மலைகளாலும் பனிகளாலும் சூழப்பட்டது. செவ்வாய் கிரகம் சிவப்பாய் இருப்பதால் ரெட் பிளானட்ன்னு சொல்றமாதிரி, இது வொயிட் பிளானட்! இன்னொன்னு தெரியுமா இந்த கிரகத்தோட தட்பவெப்ப நிலையின் மாறுதல் 60oF லிருந்து 360oF, அதுவும் நம்ம பூமி கணக்குபடி ஒரு ஆறு மாச காலத்துக்குள்ள!

இந்த புது கிரகத்துக்கு வச்ச பேரு ஷீனா('Xena') தற்காலிகமானது, இதுக்கு என்ன பேரு வைக்கலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க! பொதுவா கிரேக்க கடவுள் இல்லேன்னா ரோமக்கடவுள் பேரைதான் இந்த புதுசா கண்டுபிடிச்ச கோள்கள், வின்மீன்களுக்கு, வால்நட்சத்திரங்களுக்கு வைக்கிறது வழக்கம், அது மாதிரி ஏதாவது அந்த கடவுள்கள்ல ஒரு பேரை வைக்க யோசிச்சிக்கிட்டிருக்காங்க! இன்னொரு வாதம் என்னான்னா, கண்டுபிடிச்ச இந்த புது கோள் கிரகம் தானா அப்படின்னு! எதை கிரகங்கள்னு சொல்றது? வானத்தில புதுசா கண்டுபிடிக்கிற கோள்களை எல்லாம் கிரகங்கள்னு சொல்லிடமுடியுமா? கிரகம்ங்கிறது உருண்டையாய், தன்னுடய ஈர்ப்பு விசையால் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றதோ அதுவே கிரகம் ஆகும்!
ஆனால் சரித்திர கூற்றுபடி ஒன்பது கிரகங்கள் தான் (Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, and Pluto are planets. Nothing else in the solar system is a planet). இது விஞ்ஞான விளக்கத்திற்கு சற்றும் பொருந்தாத கூற்று! அதே சமயம் புளோட்டா கிரகத்தின் அளவை விட சற்று பெரிதாக இருக்கும் கோள்கள் அனத்தும் கிரகங்களாகும், இந்த விளக்கபடியும் கிரகங்களை சொல்லிவிடமுடியுமா என்ற வாதம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோள் சரித்திர, விஞ்ஞான் விளக்கத்திற்கு பொருத்தமாக இருப்பதால் இது ஒரு புது கிரகமே என்பது வாதமாகிறது. ஆக அப்படியான இந்த புது கிரகம் ஷீனாவை கணக்கில் எடுத்துக்கொண்டு நமது ஜோதிடர்கள் இனி ஜோதிடம் கணிப்பார்களா என்பது தான் என் கேள்வி?

அப்படி கணிக்காத ஜோஸ்யம் இனி பலிக்காது, எப்படி? இதபத்தி நம்ம ஜோஸ்யக்கார அண்ணாச்சிங்க எண்ண சொல்றாங்க? இது மாதிரி இனி யாரும் ஜோஸ்யம் பார்க்க போனீங்கண்ணா தவறாம இதகேட்டு தெரிஞ்சுக்கங்க! அப்புறம் நம்ம ஊரு கணக்குப்படி இந்த புது கிரகம் எந்த கதையிலும் வந்திருக்கான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கோ! ஆக இனி ஜாதககட்டம் கூட்டு கழித்தல், அப்புறம் ஜாதக கணக்கு எல்லாத்திலேயும் இந்த பத்தாவது கிரகத்தையும் கணக்கில எடுத்துக்குவாங்களா? புதுசா வந்த நம்மூர் பஞ்சாங்கத்தில இது போட்டாச்சா?? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!

61 comments:

said...

உதயகுமார்,

உங்க ஜாதகப்படி இப்பக் கொஞ்சம் கிரகக்கோளாறு.
அதான் ஜோசியம் கேக்கலாமுன்னு போய்க்கிட்டு இருக்கேன்:-)))

said...

சிறப்பான பதிவு

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

வெளிகண்ட நாதர் ஐயா. நான் இன்னும் இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் என்ன கேட்டிருப்பீர்கள் என்று புரிகிறது. என் பதில் வேண்டுமென்றால் இதோ என் பதில் : இது வரை ஜோதிடம் எந்த அளவிற்குப் பலித்ததோ அதே அளவிற்கு இந்த புதிய கிரகம் (இன்னும் அது கிரகம் தானா இல்லையா என்று முடிவாகவில்லை என்று தான் டிஸ்கவரில் படித்ததாக நினைவு) வந்தபின்னும் பலிக்கும். புதிதாகக் கண்டுபிடித்தார்களே ஒழிய புதிதாகத் தோற்றுவிக்கவில்லை. அதனால் ஜோதிடப் பலனில் வேறுபாடு ஏற்படாது இந்தப் புதியக் கண்டுபிடிப்பால். :-)

said...

//ஜோதிடம் இனி பலிக்குமா?- புது கிரகம் கண்டுபிடிப்பு//

புதுக் கிரகம் கண்டுபிடித்தால் என்ன நாங்க பின் வாங்கிடுவோமா என்ன ?
புதுப் பரிகாரம் கண்டுபிடிச்சிட மாட்டோமா ?

said...

சரியா சொன்னீங்க துளசி, இந்த கிரகக் கோளாறுன்னு சொல்லிக்கிட்டு அலையறவங்க பாவம் ஜோஸ்யர் சொல்றதை நம்பிக்கிட்டு காலம் கழிக்கிறாங்களே! அதான்..!

இப்ப புது கிரகத்தாலா எனக்கு ஏதும் நன்மை தீமை உண்டான்னு கேட்டு சொல்லுங்க!

said...

வருகைக்கு நன்றி ஆரோக்கியம்!

said...

குமரன்,
பதிவை முழுசா படிங்க! இல்லாத ஒன்னு இல்லை, ஆனா எல்லா பலன் கணிப்பு இருக்கிற ஒம்போது கிரகத்தை வச்சு தான், அதற்கிடையே உள்ள ரிலேஷனல் தூரத்தை வச்சு தான். அதனால செலஸ்டியல் பவர்ன்னு சொல்லுவாங்கல்ல, அது மாறுபடுமாங்கிறதான் கேள்வி? உங்களுக்கு ஜோஸ்யம் பண்ண வரும்னா விளக்கமா பதில் கொடுங்களேன்;)

said...

ஓ... பரிகாராம் பண்ணீடிவீங்களாக்கும்! சர்தான்;)
வருகைக்கு நன்றி சம்மட்டி!

said...

Another very informative blog.

// ஜோஸ்யக்கார அண்ணாச்சிங்க// do they really know about the term "Galaxy". If so, then they will try a good & honest job to survive.

I am not against Astronomy.

Very nice blog!! Keep up!!

said...

வெளிகண்ட நாதர்,
இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் சோதிடர்களும், சோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும் மட்டும்தான். உங்களுக்கென்ன ?? :-).

எனக்குத் தெரிந்த கொஞ்ச விஷயங்கள்படி, இந்திய சோதிடம் சனிக்குப்பின்னால் உள்ள யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்றவைகளையே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. காரணம் யாமறியேன். நவக்கிரகம் என சோதிடம் சொல்பவற்றில் சூரியனைச் சுற்றிவரும் ஒன்பது சூரியக்கிரகங்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து மட்டுமே அடக்கம். இதைத்தவிர, சூரியன், சந்திரன் கிரகங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், நிழல் கிரகங்களான, கணிதவியல் புள்ளிகள் ராகு, கேது ஆகியவையும் சோதிடத்தின் நவக்கிரகங்களில் அடக்கம். இதைத்தவிர, வியாழன், சனியின் பல துணைக்கோள்கள் இந்திய சோதிடத்தில் வரவில்லை. கிரகம் என்பதற்கு இன்றைக்கு நாம் வரையறுத்திருக்கும் வரையறைக்கும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சோதிடம் கிரகம் என்று வரையறுத்திருப்பதற்கும் ஒற்றுமை "கிரகம்" என்ற பெயர் மட்டுமே. :-).

ஆனால், மேற்கத்திய சோதிட முறை இந்திய சோதிட முறைகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது. அதில் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ மட்டுமல்லாது புதிதாகக் கண்டறியப்பட்ட 2003UB313 ஐயும் கூடச் சில சோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். பத்தாவதாக மட்டுமல்ல 20 ஆக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதையும் கூடச் சில மேற்கத்திய சோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எனவே, உங்களுக்கு இந்தக் கவலையே வேண்டாம்.

இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கூகிளின் துணையை நாடுங்கள். பத்தாம் கிரகத்தை வைத்து எப்படிப் பலன் சொல்வது என்பது வரை விஷயங்கள் கிடைக்கின்றன. :-).

said...

என் சோதிடம் பற்றிய 12வது பதிவில் இதே கேள்விகளை வைத்தேன் - உங்கள் அளவு விஞ்ஞான உண்மைகளை மேற்கோளாகக் காட்டாமல். அதற்கு வந்த பதில்களையும் பாருங்களேன்.

said...

Thanks Sivabalan!

said...

வாங்க முத்து, தங்கள் வரவு நல்வரவாகுக!

//இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கூகிளின் துணையை நாடுங்கள். பத்தாம் கிரகத்தை வைத்து எப்படிப் பலன் சொல்வது என்பது வரை விஷயங்கள் கிடைக்கின்றன. :-).// சரியாப் போச்சு, எனக்காவா இந்த கேள்வி கேட்டேன்!

said...

நான் வந்து சொல்றதுக்கு முன்னாடி முத்து வந்து புட்டுப் புட்டு வச்சுட்டார். பல கருத்துக்கள் ஒத்துப் போகின்றன.

வெளிகண்ட நாதர் சார். இன்னும் இந்தப் பதிவை முழுக்கப் படிக்கலை. படிச்சுட்டு மெதுவா பதில் சொல்றேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

இன்னும் உங்க முந்தைய அறிவியல் பதிவுகளும் படிக்கவேண்டிய பட்டியலில் இருக்கின்றன.

said...

ரொம்ப சூடா விவாதம் பண்ணி இருக்கீங்க தருமி! என்ன சொல்லி என்ன பயன், அது நடக்கிற கதை நடந்துக்கிட்டு தான் இருக்கு, ம்.. திருத்தவே முடியாது!

said...

// இவரு கண்டுபிடிச்சது கிரகம் தானா இல்ல வேற எரிநட்சத்திரம், வால்நட்சத்திரம், வின்மீன்கள் மாதிரியான்னு ஒரு சர்ச்சை நடந்துக்கிட்டு இருக்கு!//
எதுக்கும் ஒரு முறை வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய் அந்த மைக் ப்ரவுனோட சுவடி எடுத்துப் பாக்கச் சொல்லுங்க.. அது கிரகமா இல்லையான்னு சொல்லிடுவாங்க ;)

said...

வெளிகண்டநாதர் ஐயா. இந்தப் பதிவை முழுமையாகப் படித்துவிட்டேன். ஒரு நல்ல அறிவியல் கட்டுரை இது. ஆனால் முதல் பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் அடிப்படையே இல்லாத கேள்வியைக் கேட்டு இதன் பெருமையைக் குலைத்துவிட்டீர்கள். :-)

//ஏன்னு கேட்கிறீங்களா, இப்ப புதுசா கிரகம் ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்களே, அந்த கிரகத்தை கணக்கில சேக்காம ஜோதிட கணக்கெல்லாம் தப்பாயிடாது, அதான்! //

தப்பாகாது. ஏன் என்று கீழே விளக்குகிறேன்.

ஒரு டிஸ்கிளைமர்: தப்பாகுமா என்பதற்கு நான் அறிந்த வரை சொல்லும் பதில் தப்பாகாது என்பது தானே ஒழிய நீங்கள் யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களோ அவர்களில் ஒருவன் அன்று நான். எப்போதும் ஜோஸ்யர் வீட்டுக்கு ஜாதக்கட்டு தூக்கிக்கிட்டு அலைபவன் இல்லை. :-)

நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ சோதிடரிடம் சென்ற போது வரும், வரப்போகும் துன்பங்கள் பற்றி மட்டுமே பேசியிருப்பார்கள் போலும். அதனைப் பற்றி மட்டுமே ஒரு தனிப் பத்தி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் சோதிடத்தில் இனிமேல் நடக்கப் போகும் நன்மைகளைப் பற்றியும் சொல்லமுடியும். சொல்லுவார்கள். :-)

//முக்காவாசி பேருக்கு இந்த நாலம் வீடு, இரண்டாம் வீடு, எதிர்த்த எதிர்த்த வீடு, இராகு கேதுவை பார்க்குதுன்னு இந்த ஜோஸ்யகாரங்க சொல்றது ஒரு மண்ணும் தெரியாது, புரியாது, எந்த கணக்கில சொல்றாங்கன்னு, //

நீங்களும் அந்த புரியாத முக்கால் வாசி பேரில் அடங்குவீர்களா இல்லை உங்களுக்கு அந்த நாலாம் வீடு, இரண்டாம் வீடு என்றெல்லாம் சோதிடத்தில் சொல்லப்படும் வீடுகள் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தெரியுமா? நீங்க சொன்ன தொனியைப் பார்த்தால் உங்களுக்கு சோதிடத்தில் கரை கடந்த அறிவு இருப்பதைப் போல் அல்லவா தெரிகிறது?

எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் இந்த வீடுகளைப் பற்றியும் சோதிடத்தைப் பற்றியும் தெரியும். அது கொஞ்சமே கொஞ்சம் தான். அதனை வைத்துத் தான் இந்தப் பதில்கள். அதனால் ஏதேனும் தவறு இருந்தால் சோதிடம் நன்றாய் அறிந்தவர்கள் (நீங்கள் உட்பட) திருத்துங்கள்.

said...

//அது மாதிரி நம்ம கோவில்ல காலாகாலமா இந்த நவக்கிரகங்கள்ன்னு இந்த ஒன்பது தெரிந்த கிரகங்களைதான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இப்ப இந்த சூரியகுடும்பத்திலே புதுசா பிளேனட் கண்டுபிடிச்சிட்டாங்க, இதுக்கும் புது கிரகச்சிலை வச்சாவனும், நவக்கிரகம்ங்கிரதுக்கு பதிலா தசக்கிரகம்னு சொல்லனும் இனிமே! //

அடிப்படைப் புரிதலில் தவறு. நவக்கிரகங்கள் என்று நம் கோவில்களில் ஒன்பது கிரகங்கள் இருப்பதும் தற்கால வானவியலில் ஒன்பது கிரகங்கள் இருப்பதும் தற்செயலே. அந்தக் கிரகங்கள் தான் இந்தக் கிரகங்களா என்றால் இல்லை என்பதே பதில். முத்து, தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நம் கோவில்களில் இருக்கும் சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் தற்கால வானவியலில் கிரகங்கள் இல்லை. அவை முறையே விண்மீனும் (நட்சத்திரமும்) துணைகிரகமும் என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை நவக்கிரகங்களில் சேர்த்தது தவறு என்றும் அதனால் சோதிடமே குறையுள்ளது என்றும் தருமி ஐயா சொல்லியிருந்தார். ஆனால் அப்படிச் சொல்லும் போது சோதிடத்தில் இருக்கும் நவக்கிரகங்களும் தற்கால வானவியல் நவக்கிரகங்களும் ஒன்றே என்ற தவறான நம்பிக்கையில் எழுந்த கேள்விகளே அவை. அது அடிப்படையிலேயே தவறு.

அதனால் தான் சொல்கிறேன்; வானவியலில் எத்தனைப் புதிய கிரகங்கள் கண்டுபிடித்தாலும் சோதிடத்தில் சொன்ன பலன்கள் எந்த அளவுக்கு இதுவரைப் பலித்ததோ அந்தளவுக்கு இனிமேலும் பலிக்கும். வானவியல் கிரகங்களின் definition வேறு; சோதிடத்தின் கிரகங்களின் definition வேறு; இரண்டையும் குழப்ப வேண்டாம்.

said...

நாசாவின் வலைத்தளத்தில் எல்லாமே சொல்லியிருப்பார்கள் என்றும் அதில் சொல்லாதவை தவறான செய்திகள் என்றும் ஒரு தொனி உங்களின் பதிவில் இருக்கிறது. அது சரியா? நாசா எல்லாவற்றையும் அவர்கள் அறிந்த எல்லாவற்றையும் வெளியிடுகிறார்களா?

இந்தக் கேள்வியைக் கேட்பதால் கேலிக்கூத்தாக செய்திகள் வரவில்லை என்று சொல்லவில்லை. அவை மிகுதியாக இந்த மேற்குலகில் வந்து கொண்டு தான் இருக்கின்றன - நீங்கள் சொன்னது போல.

said...

Kuiper beltல் இன்னும் நூற்றுக் கணக்கான கிரகங்கள் இருக்கலாம் என்று திரு. ப்ரௌன் சொன்னதை டிஸ்கவரில் படித்தேன். அந்த நூற்றுக் கணக்கான கிரகங்களைக் கண்டுபிடித்தாலும், விண்மீனான ஆதவனையும் துணைக்கிரகமான நிலவையும் கிரகங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் சோதிடம் பலன் தருவதில் வேறுபாடு இருக்காது.

//இந்த மண்டலத்தில தான் 10 கோடி வின்மீன்கள் சுத்திக்கிட்டிருக்கு//

விண்மீன்கள் என்று சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைத் தான் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள் சூரியனைச் சுற்றி க்யூபர் பெல்டில் சுற்றும் ஆப்ஜெக்ட்களைக் குறித்திருக்கிறீர்கள். இது சரியா தவறா என்று தெரியவில்லை.

நான் நிலவை துணைக்கிரகம் என்றேன். அதுவும் தமிழில் பயன்படும் சொல்லே ஒழிய ஆங்கிலத்தில் எந்தக் கிரகத்தின் நிலவையும் சப்-ப்ளானெட் என்றோ கம்பானியன் - ப்ளானெட் என்றோ சொல்லுவதில்லை. மூன் (நிலவு) என்று தான் எல்லாவற்றையும் குறிக்கிறார்கள்.

said...

//இன்னொன்னு தெரியுமா இந்த கிரகத்தோட தட்பவெப்ப நிலையின் மாறுதல் 60oF லிருந்து 360oF//

இங்கு ' - ' விட்டுப் போய்விட்டதா?

இன்னும் பின்னூட்டங்கள் இருக்கின்றன. இப்போது அலுவலகம் செல்லும் நேரம் ஆகிவிட்டது. அதனால் பின்னர் இடுகிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள். எல்லாப் பின்னூட்டங்களும் முடிந்த பின் உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

said...

புது கிரக கண்டு பிடிப்பு - ஜோதிடத்தின் பலன் மாறாது -ஏன்

http://yennottam.blogspot.com/

Some control chars are prohibiting from posting my reply as comment to your blog. So I have published it in my blog.

said...

சூப்பர் சுப்ரா அவர்களின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம்:

நன்றாய் விளக்கினீர்கள் சூப்பர் சுப்ரா. மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல் நமக்கு ஒன்று புரியாததால் அது தவறென்றோ, ஒன்றை மற்றொன்றாய்ப் புரிந்து கொண்டு மற்றவர் திருந்தமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதோ தவறு. அந்தத் தவறை இந்த விடயத்தில் நான் செய்யாவிட்டாலும் வேறெங்காவது செய்திருப்பேன். இனிமேல் கவனமாய் இருக்கவேண்டும்.

said...

இனித் தொடர்கின்றன என் பின்னூட்டங்கள்:

:-)

நான் படித்தவரை ப்ரௌன் சொல்வது ஒன்று இந்தப்புதிய ஆப்ஜெக்டையும் கிரகம் என்று ஒத்துக் கொள்ளவேண்டும் - ஏனென்றால் அது சூரியனைச் சுற்றிவருகிறது, புளுட்டோவை விட பெரியது, உருண்டையாய்த் தன்னைத் தானே சுற்றிவருகிறது. இல்லை புளுட்டோவும் கிரகம் இல்லை என்று அதனை வெறும் ஆப்ஜெக்டாக பதவியிறக்கம் செய்யவேண்டும். இரண்டில் ஒன்று வானவியலார் செய்யவேண்டும் என்று சொல்கிறார். வானவியலார் அப்படி புளுட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லிவிட்டால் அப்போது எட்டு கிரகம் தான் இருக்கும். அப்படியிருக்கும் போது தனியாக 'புளுட்டோ இனிக் கிரகம் இல்லை. சோதிடம் இனிப் பலிக்குமா?' என்று நீங்கள் பதிவு போட வேண்டி வரலாம். :-)

said...

கடைசிப் பத்தி முழுக்க முழுக்கக் கிண்டல் என்பதால் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.

said...

என்னுடைய முதல் பின்னூட்டத்தில் சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிவை முழுமையாகப் படித்தப் பிறகும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

சம்மட்டியார் சொன்னது கிண்டலாகத் தோன்றுவதால் எந்தப் பதிலும் இல்லை.

//இப்ப புது கிரகத்தாலா எனக்கு ஏதும் நன்மை தீமை உண்டான்னு கேட்டு சொல்லுங்க!
//

மீண்டும் சொல்கிறேன். இது புது கிரகம் இல்லை. ஏற்கனவே இருந்தது தான். அதனைப் புதிதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். அவ்வளவு தான். அதனால் இதுவரை எந்த பலன்கள் சொதிடம் சொன்னதோ அதே பலன்கள் தான் சோதிடம் சொல்லும். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னாலேயே புவியீர்ப்பு விசை இருந்தது போன்ற விவகாரம் இது.

said...

//பதிவை முழுசா படிங்க! இல்லாத ஒன்னு இல்லை, ஆனா எல்லா பலன் கணிப்பு இருக்கிற ஒம்போது கிரகத்தை வச்சு தான், அதற்கிடையே உள்ள ரிலேஷனல் தூரத்தை வச்சு தான். அதனால செலஸ்டியல் பவர்ன்னு சொல்லுவாங்கல்ல, அது மாறுபடுமாங்கிறதான் கேள்வி? உங்களுக்கு ஜோஸ்யம் பண்ண வரும்னா விளக்கமா பதில் கொடுங்களேன்;)
//

பலன் கணிப்பு எல்லாம் ஒன்பது கிரகங்களை வைத்துத் தான் - அது சரி; ஆனால் அந்த ஒன்பது கிரகங்கள் நீங்கள் சொல்லும் ஒன்பது கிரகங்கள் அல்ல. அதனால் உங்கள் லாஜிக் இங்கே செல்லுபடியாகாது. அவற்றுக்கிடையேயான தூரத்தை வைத்து பலன் கணிக்கப் படவில்லை. ஒருவன் வாழ்நாளில் அந்த கிரகங்கள் சுற்றிவரும் காலங்களை வைத்துத் தான் கணக்கிடப் படுகிறது. அதனால் தான் சூரியனும் சந்திரனும் இதில் சேருகிறார்கள். உடனே இது ஜியோ சென்ட்ரிக் தியரியை வைத்து வருவது; அது தவறென்று நிறுவியாயிற்று. அதனால் சோதிடம் தவறு என்ற புதிய வாதத்தை நீங்கள் எடுத்து வைக்கலாம். சோதிடத்தில் ஜியோ சென்ட்ரிகோ சோலார் சென்ரிக்கோ (அதுக்கு என்ன சரியான பெயர்?) அடிப்படை இல்லை. சூரியனையும் சந்திரனையும் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வரும் காலங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. சந்திரn பூமியைச் சுற்றிவரும் காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வரும் காலம் சூரியன் சுற்றிவருவதாக எடுத்துக் கொள்ளப் படுகிறது - அது ஓடும் வாகனத்தில் இருந்து பார்க்கும் போது மரங்கள் ஓடுவது போல் தோன்றும் காட்சிப் பிழை என்றாலும் கணக்கில் தவறு இல்லை.

said...

Sivabalan,

//I am not against Astronomy.
//

I think you meant Astrology.

said...

முத்து, தெளிவாய் சொன்னதற்கு மிக்க நன்றி.

said...

//என்ன சொல்லி என்ன பயன், அது நடக்கிற கதை நடந்துக்கிட்டு தான் இருக்கு, ம்.. திருத்தவே முடியாது!
//

காலம் வரும் போது திருந்த வேண்டியவர்கள் தானாகத் திருந்துவார்கள் வெளிகண்ட நாதர் ஐயா & தருமி ஐயா. எல்லாம் அறிந்தவர்கள் யார்? நான் இறைவன் என்று சொல்வேன். வெளிகண்ட நாதர் ஒத்துக் கொள்ளலாம். தருமி ஐயா அதுகூட ஒத்துக் கொள்ள மாட்டார். அதனால் எல்லாம் அறிந்தவர் எவரும் இல்லை; அதனால் ஒருவர் பார்வையில் தவறாய்த் தெரிந்து மற்றவர் திருந்த வேண்டும் என்று எண்ணும் ஒரு விடயம் திருந்தாத அந்த மக்களின் பார்வையில் சரியாக இருக்கலாம். யாரிங்கு அனைத்தும் அறிந்தவர், மற்றவரைத் தவறென்று அறுதியிட்டுச் சொல்ல?

said...

பொன்ஸ், வைத்தீஸ்வரன் கோவில் வரைக்கும் செல்லவேண்டாம். வலைப்பதிவுக்கே வந்து சொல்லிட்டாங்க. புதிதாய் கண்டுபிடித்திருப்பது (புதிய கிரகம் இல்லை; புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்) நம் இந்திய சோதிடத்தில் வரையறுக்கப்பட்ட 'நவக்கிரகங்களில்' ஒன்று இல்லை. மாந்தியை இங்கே இழுக்கவில்லை.

said...

வெளிகண்ட நாதர் ஐயா. எனக்கு சோதிடம் பண்ண வருமா என்று கேட்டிருக்கிறீர்கள். சோதிடம் பார்க்கத் தெரியுமா என்று கேட்பதாக புரிந்து கொள்கிறேன். ஆமாம். எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். என் ஜாதகத்தை என் பெற்றோர்களே ஒரு சோதிடரிடம் சென்று கணித்துவைத்திருந்தனர். அந்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு குடும்ப சோதிடம் என்ற புத்தகம் மூலம் என் ஜாதக பலன்களை கல்லூரியில் (பி.ஈ. படிக்கும் போது) கணித்தேன். இது வரை சரியாகத் தான் நடந்து வருகிறது. இரண்டு மூன்று நண்பர்களுக்கும் மேலோட்டமாகப் பார்த்துச் சொல்லியிருக்கிறேன், அந்த புத்தகத்தின் துணையுடன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

எனக்கு நம்பிக்கை உண்டா சோதிடத்தில் என்றால் சோதிடம் சொல்லும் கணக்குகளிலும் அந்தக்கணக்குகள் சரியாகப் போடப்படும் பட்சத்தில் அது சொல்லும் பலன்களிலும் நம்பிக்கை உண்டு. என்னைப் பற்றிய கணிப்பு செய்த போது அதில் தீய பலன்கள் சொல்லியிருந்தால் அதனை மேற்கொண்டு தொடர்ந்திருப்பேனா என்பது சந்தேகமே. நான் பார்த்த வரை நல்ல பலன்களே வந்தன. அதனால் அது பிடித்தது. ஆனால் அது தீய பலன்கள் சொல்லி என் தன்னம்பிக்கையைச் சிதைத்திருந்தால் அதனைத் தள்ளிவைத்து 'சோதிடந்தனை இகழ்' என்று சென்றிருப்பேன். இந்தக் காலத்தில் சோதிடம் மூலமாக தன்னம்பிக்கை பெறுபவர்களை விட தன்னம்பிக்கை இழப்பவர்களே அதிகமாக இருப்பதால் சோதிடத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணமும். எதற்கெடுத்தாலும் சோதிடத்தை நாடுவது (அது எந்த உருவத்தில் இருந்தாலும்) அது நம் தன்னம்பிக்கைக்கு அழிவு தான். அந்த வகையில் சோதிடந்தனை இகழ் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அதே நேரத்தில் சோதிடமே பொய் என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எப்படி சோதிடம் சரி என்று நினைப்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறதோ அது போல் சோதிடம் தவறு என்று நினைப்பதும் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.

said...

இத்துடன் பின்னூட்டங்கள் முடிந்தன. எல்லாத்தையும் ஒரே பின்னூட்டமாய்ப் போட்டிருக்கலாமே என்று கேட்கிறீர்களா? இந்த வாரம் தான் பின்னூட்ட மழை வாரமாய் இருக்கிறதே. உங்களுக்கும் அந்த மழையின் சாரல் அடிக்கட்டும் என்று தான் :-)

said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரன், பின்னோட்டங்கள் முடிஞ்சுதா.. இன்னும் இருக்கா?

said...

தருமி சார், ஜோஸ்யகாரங்கள்ளாம் ஒன்னா சேர்ந்துக்கிட்டாங்க, எங்க போய்ட்டீங்க, இப்படி வாங்க ஒரு புடி புடி போப்போம்!

said...

Mr.Kumaran,
I said Astronomy. I can understand the science behind the astrology.

But, I cannot accept, planets can direct me in my life. If it is so, I am not bothered.

I have read your comments. It is really good. You are analyzing the topic in a nice way. And it makes me as your fan.

But you are in the wrong side. Please come to this side. So that we will have another great persons to fight against this ஜோஸ்யக்கார அண்ணாச்சிங்க .

It is my request. Please consider it. Just, think, do you believe God has created everything?.

No, kumaran.

I know, one fine day you will know this. That day, you will emerge a great person to fight against all social evils that we are facing now.

I respect you. By any chance, If I hurt you, please ignore it.

Thanks

said...
This comment has been removed by a blog administrator.
said...

"இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் சோதிடர்களும், சோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும் மட்டும்தான். உங்களுக்கென்ன ?? :-). // சும்மா ஒரு ஸ்மைலி போட்டுட்டா ஆச்சா, முத்து!
உங்களுக்கென்ன -அப்டின்னு சொல்லிட்டு பிறகு என்ன அவ்வளவு விளக்கம். ஒன்று அந்த 'உங்களுக்கென்ன' கேட்காமல் விளக்கம் கொடுத்திருக்கணும்; இல்லை அந்த வார்த்தைகள் இல்லாம் விளக்கம் கொட்த்திருக்கணும். அதுதான் மரியாதை.

said...

குமரன்,
"அந்த ஒன்பது கிரகங்கள் நீங்கள் சொல்லும் ஒன்பது கிரகங்கள் அல்ல. "// ஒரு விவாதத்திற்கு அப்படி வைத்துக்கொண்டால், how come some real and some-not-real celestial bodies are taken into account?அந்த உண்மையான் கிரஹங்களின் தாக்கம் இல்லாமல் போய், கணக்கில் எடுக்கப்பட்ட கிரக்ஹங்கள் மட்டும் தாக்கம் அளிப்பது ஏன்? எப்படி?

"அந்தக்கணக்குகள் சரியாகப் போடப்படும் பட்சத்தில் அது சொல்லும் பலன்களிலும் நம்பிக்கை உண்டு."// தயவு செய்து என் 12வது சோதிடப் பதிவின் பின்னூட்டங்களில் தொப்புளான் என்பவர் கொடுத்த பின்னூட்டத்தைப் பாருங்களேன்.

சோதிடம் தவறு என்று நினைப்பதும் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.//are we not arguing with scientific facts as our background.
பைபிளில் 'எதையும் தீர்ப்பிடாதே' என்று இருக்குமாம். அது எனக்கு உடந்தையானதில்லை.

உங்கள் முடிவுரை எனது முடிவுரைக்கு ஒத்து வருகிறது.(சோதிடம் மூலமாக தன்னம்பிக்கை பெறுபவர்களை விட தன்னம்பிக்கை இழப்பவர்களே அதிகமாக இருப்பதால் சோதிடத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணமும். ) ஆனால் அதனால் நாம் எடுத்துள்ள முடிவுகள் conclusions மற்றும் வேறாக உள்ளது!

said...

மீண்டும் முத்துவுக்கு - திருத்தங்களோடு:

"இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் சோதிடர்களும், சோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும் மட்டும்தான். உங்களுக்கென்ன ?? :-). //

- சும்மா ஒரு ஸ்மைலி போட்டுட்டா ஆச்சா, முத்து!
உங்களுக்கென்ன -அப்டின்னு சொல்லிட்டு பிறகு என்ன அவ்வளவு விளக்கம்? அந்த வார்த்தையோடு நிறுத்தியிருக்கணும்.இல்ல, அந்த 'உங்களுக்கென்ன' என்று சொல்லாமல் விளக்கம் கொடுத்திருக்கணும்; அதுதானே மரியாதை.

said...

are we not arguing with scientific facts as our background.
- குமரன், இதில் உள்ள we என்னையும், வெ.க.நாதரையும் போன்ற சோதிடத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிப்பதெனக் கொள்க.

said...

//how come some real and some-not-real celestial bodies are taken into account//

தருமி ஐயா. நீங்கள் சூப்பர் சுப்ராவின் பதிவைப் படித்தீர்களா? அதில் உங்கள் கேள்விக்கு ஒரு விளக்கம் தந்திருக்கிறார். எனக்கு அது சரியாகப் படுகிறது. உங்களால் ஒத்துக் கொள்ள முடிகிறதா பாருங்கள்.

//அந்த உண்மையான் கிரஹங்களின் தாக்கம் இல்லாமல் போய், கணக்கில் எடுக்கப்பட்ட கிரக்ஹங்கள் மட்டும் தாக்கம் அளிப்பது ஏன்? எப்படி?
//

மீண்டும் நீங்கள் குழப்புகிறீர்கள். உண்மையான கிரகங்கள் என்று நீங்கள் சொல்பவை வானவியலில் சொல்லப்படும் கிரகங்கள். பெயர் பெற்ற வானவியலாளர்கள் ஒன்று சேர்ந்து சில அளவுகோல்களை வைத்துக் கொண்டு ஒரு விண்வெளிப் பொருள் கிரகமா இல்லையா என்று வரையறுக்கிறார்கள். அவை உங்கள் பார்வையில் 'உண்மையான கிரகங்கள்' என் பார்வையில் 'வானவியலாளர்களால் கிரகங்கள் என்று வரையறுக்கப்பட்ட விண்ணகப் பொருட்கள்'. கணக்கில் எடுக்கப்பட்ட கிரகங்கள் என்று நீங்கள் சொல்பவை இந்தியச் சோதிடத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்கள் + மாந்தி. அவை வானவியலாளர்களால் வரையறுக்கப்பட்டவை அன்று. நம் முன்னோர்களால் கிரகங்கள் என்று வரையறுக்கப்பட்டவை. இரண்டையும் சேர்த்துக் குழப்பவேண்டாம்.

சரி. இந்தியச் சோதிடத்தில் கணக்கில் இருக்கும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவை எல்லாம் வானவியலாளர் சொல்லும் விண்ணகப் பொருளா இல்லையா; அவற்றின் தாக்கம் மனிதனுக்கு இருக்கும் போது இவை போக வானவியலாளர்களால் தற்போது கிரகங்கள் என்று வரையறுக்கப்பட்ட மற்ற மூன்று (இங்கே பூமியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை - அதனையும் சேர்த்தால் தான் வானவியலாளர் சொல்லும் ஒன்பது கிரகங்கள் வரும்) மட்டும் எப்படி மனிதனுக்குத் தாக்கம் ஏற்படுத்தாது என்று கேட்கிறீர்கள் என்றால் சூப்பர் சுப்ராவின் பதிவைப் படித்துப் பாருங்கள். அங்கே அந்தக் கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார்.

said...

//தயவு செய்து என் 12வது சோதிடப் பதிவின் பின்னூட்டங்களில் தொப்புளான் என்பவர் கொடுத்த பின்னூட்டத்தைப் பாருங்களேன்.
//

உண்மையைச் சொன்னால் உங்கள் சோதிடப் பதிவுகளை மட்டும் அச்சுப் பிரதி எடுத்துப் படித்துவிட்டேன். ஆனால் எந்தப் பதிவிலும் பின்னூட்டங்களை முழுதாகப் படிக்கவில்லை. விரைவில் அவற்றைப் படிக்கிறேன். முதலில் தொப்புளான் அவர்களின் பின்னூட்டத்தைப் படிக்கிறேன். 12வது சோதிடப் பதிவின் பொருள் (Subject) என்ன? இல்லை தலைப்பாவது சொல்லுங்கள்.

said...

//சோதிடம் தவறு என்று நினைப்பதும் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.//are we not arguing with scientific facts as our background.
பைபிளில் 'எதையும் தீர்ப்பிடாதே' என்று இருக்குமாம். அது எனக்கு உடந்தையானதில்லை.
//

நீங்கள் அறிவியல் உண்மைகளை வைத்துத் தான் வாதிடுகிறீர்கள். ஆனால் அந்த அறிவியல் உண்மைகளையும் (அதில் கிரகம் என்ற சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு) நம் முன்னோர் வகுத்த சோதிடத்தில் வரையறுக்கப்பட்ட கிரகத்தையும் ஒன்றென நினைத்து அங்கேயும் ஒன்பது, இங்கேயும் ஒன்பது என்ற ஒரு தற்செயலான எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு வாதிடுகிறீர்கள். அங்கு தான் தீர விசாரிக்காமல் வரும் வாதங்கள் வருகின்றன. அவற்றைத் தான் நான் நம்பிக்கை என்கிறேன்.

சோதிடம் என் வாழ்வில் பல நன்மைகளைச் செய்திருக்கிறது. அதனால் அது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்ற பார்வையில் நான் அணுகுகிறேன். அதனை நீங்கள் வெறும் நம்பிக்கை எனலாம். அதே போல் சோதிடம் என்பது பொய்; பல இடங்களில் அது பலிக்காததை நான் பார்த்திருக்கிறேன்; அதற்கு அறிவியல் அடிப்படை இல்லை என்ற பார்வையில் நீங்கள் (தருமி ஐயா + உதயகுமார் ஐயா + சிவபாலன்?) அணுகுகிறீர்கள். ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் அறிவியல் வாதங்கள் சில குழப்பமான புரிதல்களால் இருப்பதைக் கண்டு அதனை நான் வெறும் நம்பிக்கை என்கிறேன்.

முன்முடிவு எடுத்துவிட்டு ஒரு விடயத்தை அணுகுவதா கூடாதா என்ற வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அது உங்கள் தேர்வு. (பரிட்சை என்ற பொருளில் சொல்லவில்லை. சாய்ஸ் என்ற பொருளில் சொல்கிறேன்).

said...

சோதிடம் மூலமாகத் தன்னம்பிக்கை பெறுபவர்களை விட தன்னம்பிக்கை இழப்பவர்களே அதிகமாய் இருப்பதற்கு இன்னொரு காரணமும் நான் காண்கிறேன். சோசியரை யாரும் சாதாரணமாக அணுகுவதில்லை. துன்பம் வரும் போது தான் 'கொஞ்சம் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள். ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்' என்று சோதிடரிடம் போகிறார்கள். அப்போது அவர்களால் அணுகப் படுபவர்கள் தேர்ந்த நேர்மையான சோதிடராய் இருக்கும் பட்சத்தில் உண்மையான பலன்களைக் கணித்துச் சொல்கிறார்கள். அது பெரும்பான்மையான நேரங்களில் கெட்ட பலனாக இருக்கிறது; அதனால் சென்றவர்கள் மேன்மேலும் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். நல்ல பலனாக இருந்து அதனை அந்த சோதிடர் மறைக்காமல் சொல்லுவாரே ஆனால் அது தன்னம்பிக்கை வளர ஏதுவாகும். கெட்ட பலனே ஆனாலும் அதனை மனம் வருந்தாத வண்ணம் சொன்னாரே ஆனால் அப்போதும் தன்னம்பிக்கை கெடாது. ஆனால் இதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கும். செயற்பாட்டில் வராது - ஏனெனில் இந்தக் காலத்தில் தேர்ந்த நேர்மையான சோதிடரைப் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இருப்பவர்கள் 99.99% வியாபாரிகளாய் இருக்கிறார்கள். இந்த நிலையில் சோதிடம் பார்ப்பது வீண் வேலை. ஆனால் சோதிட சாத்திரமே பொய் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

எதற்கும் அறிவியல் அடிப்படை இருந்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்ற கட்சி நீங்கள். அறிவியல் அடிப்படைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அதனால் வருங்காலத்தில் சோதிடமும் அறிவியல் அடிப்படை ஆனது என்று நிறுவப்படலாம். அதுவரை இது ஒரு கலையாக இருக்கட்டும் என்ற எண்ணம் எனக்கு.

மற்றபடி என் தனிப்பட்ட ஆர்வத்தால் சோதிடம் கற்றேன். முழுமையாகத் தேறவில்லை. புத்தகத்தின் உதவியுடன் எனது ஜாதகப் பலனைக் கணித்துள்ளேன். அது நன்றாக நடந்து வருகிறது. உளவியல் ரீதியாக அந்தப் பலன்களின் படி நானே என்னை அறியாமல் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் எனக்கு அது தன்னம்பிக்கையை ஊட்டியது. மற்றவர் பலனைக் கணிப்பதில் ஆர்வமில்லை. அதனால் என்னை ஜோசியக்காரன் என்று அழைக்கவேண்டாம்.

said...

//are we not arguing with scientific facts as our background.
- குமரன், இதில் உள்ள we என்னையும், வெ.க.நாதரையும் போன்ற சோதிடத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிப்பதெனக் கொள்க.

//

Dharumi Sir, This comment was moderated and published just now. But I gave my responses earlier before reading this comment. Fortunately, I understood the 'we' in your statement to mean everyone including yourself and Udhayakumar Sir who do not believe Astrology.

said...

Congratulations Sir for the 50th Comment. You may not publish this if you do not want to. :-)

said...

//சோதிடம் மூலமாக தன்னம்பிக்கை பெறுபவர்களை விட தன்னம்பிக்கை இழப்பவர்களே அதிகமாக இருப்பதால் சோதிடத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணமும்.//
குமுதத்தில் சோதிடம் பற்றி எழுதும் பெரியவர், அக் ஷ்ய திரிதியைக்கு நகை வாங்கச் சொல்கிறார்.
வருத்தமாக இருக்கிறது. பலர் இவர் சொல்வதைக் கேட்டு விட்டு கடன் வாங்கி நகை வாங்குவார்கள்
என்று தெரியாதா? இவரே ஒரு ராசிக்காரருக்கு மூன்று மாதம் கடன் கூடாது என்று சொல்கிறார்.
அவரும் நகை வாங்கலாமா?
இவருடைய வார ராசி பலனை விளையாட்டாகப் படித்தால் கூட தலை சுற்றுகிறது. எல்லாருக்கும் பொதுவாக பலன் சொல்லக்கூடாதென்று இவருக்குத் தெரியாதா? இவர் சோதிடத்தைப் பற்றி அதிகம்
படித்தவராகத் தெரிகிறது.

சன் டி.வியில் தொடரில் வரும் சோதிடர் ஒருவர், மாமியாரிடம் மருமகள் முன்னாலேயே, இவருக்குப்
பிறக்கும் குழந்தையால் தாத்தா பாட்டிக்கு ஆபத்து என்கிறார். மருமகள் கர்ப்பமாக இருக்கிறார்.
கேட்டால் தொழில் தர்மம். பார்த்ததைச் சொல்ல வேண்டும் என்பார்கள். உண்மையிலேயே
சோதிடம் பார்க்கத் தெரிந்தவராய் இருந்தால் கூட, எதை எப்போது சொல்ல வேண்டும், சொல்லக் கூடாது என்று தெரிந்து இருக்க வேண்டும்.

இவர்களைக் கணக்கில எடுத்துக் கொண்டு சோதிட சாத்திரமே பொய் என்று சொல்லி விட முடியாது. என் வீட்டில் ஒருவருக்கு ஆஸ்த்துமா நோய் இருக்கிறது. அடிக்கடி இன்கேலரைத் தேட வேண்டியிருக்கிறது.
இதற்கு சோதிடத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்றால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? ( என்
வீட்டில் யாருக்கும் ஆஸ்த்மா இல்லை). பரிகாரத்திற்காக சொல்லப்படும் மந்திரங்கள் என்பது
அதிர்வுகள். இந்த மந்திரங்கள் உடலில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. சோதிடம் கலை என்ற
நிலையைத் தாண்டி அறிவியல் ஆய்வுக்கு உள்ளாக்கப் படுகிறது. இதைத் தொடங்கி வைத்தவர்
m.i.t யில் brain and cognitive scienceயில் பி. எச். டி பட்டம் பெற்றவர்.

அன்புடன்
சாம்

said...

///சோதிட சாத்திரமே பொய் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
எதற்கும் அறிவியல் அடிப்படை இருந்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்ற கட்சி நீங்கள். அறிவியல் அடிப்படைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அதனால் வருங்காலத்தில் சோதிடமும் அறிவியல் அடிப்படை ஆனது என்று நிறுவப்படலாம். அதுவரை இது ஒரு கலையாக இருக்கட்டும் என்ற எண்ணம் எனக்கு. மற்றபடி என் தனிப்பட்ட ஆர்வத்தால் சோதிடம் கற்றேன். முழுமையாகத் தேறவில்லை. ///

குமரன்,
என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட இதுவே. சோதிடத்தின் உண்மை நிலையை அறிய நிறைய மெனக்கெட வேண்டும், அதைக் கொஞ்சமாவது கற்று அதன் உண்மை நிலையை அறிந்தவர்களுக்கே அதன் அருமை புரியும். இது தவிர அனுபவப்பூர்வமாய் கண்டு நம்புபவர்களும் உண்டு. இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே நிலையை எடுத்துவிட்டு அதே நிலையில் விவாதம் செய்பவர்களே பலர். இன்னும் சொல்லப்போனால் விவாதம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் அது பற்றிய அடிப்படைப் புரிதல்கள்கூட இல்லாதவர்கள், அவர்களிடம் விவாதம் செய்வது வெட்டியான வேலை. மேலும், இந்த விஷயங்களில் ஒரு புரிதலை அடைதல் என்பது ஒரு செல்வத்தை அடைவது போலத்தான், எனவே, இதற்கு அவர்களாக நேரடியாக இறங்கித் தெளிவுபெறாதவரை அடுத்தவர்களால் அந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவ இயலாது.

அறிவியலை விட்டு விலகியிருக்கும் விஷயங்களில் எனக்குக் கொஞ்சம் ஆர்வம் உண்டு. சோதிடத்தைப் பொருத்தவரை அது வெறுமனே கட்டுக்கதை என்று சொல்வது மிக எளிது, ஒரு சிறுகுழந்தையால்கூட அப்படிச் சொல்ல இயலும். ஆனால், உண்மை என்ன என்று அறிவது அனைவராலும் சாத்தியம்தான் என்றாலும் அதற்கான சிரத்தையும், ஆர்வமும் அனைவருக்கும் இருப்பதில்லை. இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல கோள்களை வைத்துச் சொல்லும் சோதிடர்கள் அனைவரும் வெறுமனே தொழிலுக்காகச் செய்பவர்கள் மட்டுமல்ல, இதில் என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்று இறங்கி அதன் அருமையை உணர்ந்த பல பட்டம் பெற்ற விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மற்றும் பொறியாளர்களும் அடங்குவர்.

இது போன்ற விஷயங்களின் மிகப் பெரிய பலமும் பலவீனமும் என்ன வென்றால் ஒருவர் பெற்ற அனுபவம் அடுத்தவருக்கு நேரடியாய் உதவுவதே இல்லை. அவரவர் பசிக்கு அவரவர் சாப்பிட்டாக வேண்டும் என்பது போலத்தான் ஆகிவிடுகிறது. இது தொடர்பான என்னுடைய இருபதிவுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
பதிவு 1
பதிவு 2

ஒரு வேடிக்கையான விஷயம் பாருங்கள், இந்தப் பின்னூட்டம்கூட சோதிடத்தை நம்பாதவர்களுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை, சோதிடம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கும், ஒரு புரிதல் உடையவர்களுக்கும் இப்பின்னூட்டத்தில் எந்தப் புதிய விஷமும் இல்லை. :-)). இதுதான் உலகம்.

said...

ஜோதிடத்தில் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டு வாழ்வை பாழ்படுத்தகூடாது, முயற்சியைக் கைவிடக்கூடாது என்பது என் கடுமையான நம்பிக்கை.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்


ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உழற்றுபவர்.

கண்ணதாசன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. விதியை மதியால் வெல்லாம் நீ அவ்வாறு வெல்லலாம் என்று விதிக்கப்பட்டிருந்தால் என்று.

சோதிடம் மூலம் நிகழ்வுகளை மாற்ற முடியாது. ஆனால் நிகழ்வுகளின் தாக்கத்தை குறைக்கலாம். மோசமான சாலை என்று (கோவையில் மேடுப்பாளையம் சாலை போன்று) தெரிந்திருந்தால் (செயல்) வேகத்தை குறைப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம். சோதிடம் அது போன்ற ஒரு முன்னறிவிப்பு கலை தான்.

சோதிடத்தை நம்பாத நண்பர்களுக்கு
புள்ளியியல் ரீதியாக உங்கள் வாழ் நாளில் ஏழரைச்சனியின் ஆதிக்கம் வந்த 7 1/2 வருடத்தை மற்ற வருடங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை உணர்வீர்கள். இதில் சிலர் தப்பியிருக்கலாம். ஆனால் நான் கூறுவது பெரும்பாலான மக்களை.

said...

சோதிடத்தை நம்பாதவர்கள்
திரு ஞானவெட்டியான் அவர்களின் இந்த பதில் படிவையும் படிக்கவும்

http://njaanam.tamil.net/?cat=7

said...

///சும்மா ஒரு ஸ்மைலி போட்டுட்டா ஆச்சா, முத்து!
உங்களுக்கென்ன -அப்டின்னு சொல்லிட்டு பிறகு என்ன அவ்வளவு விளக்கம். ஒன்று அந்த 'உங்களுக்கென்ன' கேட்காமல் விளக்கம் கொடுத்திருக்கணும்; இல்லை அந்த வார்த்தைகள் இல்லாம் விளக்கம் கொட்த்திருக்கணும். அதுதான் மரியாதை.//

தருமி அவர்களே,
ஒரு பெரிய பின்னூட்டத்தைப் பதித்தபின் இப்போதுதான் உங்களின் இப்பின்னூட்டத்தைப் பார்க்கிறேன். நான் எதையும் வேண்டுமென்று சொல்லவில்லை. நான் விளையாட்டாகச் சொன்ன விஷயம் வேண்டுமென்றே தவறானதாக, ஆணவமாகச் சொன்னதாகப் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது(எனக்கு 2-ஆமிடத்தில் வாக்குத் தோஷமுன்னு ஒருத்தர் சொன்னது பலமுறை பலித்திருக்கிறது, நீங்களாவது வெளியே நேரடியாய்ச் சொல்லிவிட்டீர்கள், இன்னும் எத்தனை பேர் என் மேல் கடுப்பாயிருக்கிறார்களோ தெரியவில்லை... :-) ). இதனாலேயே என்னைவிட கொஞ்சம் மூத்தவர்களிடம் சிறிதும் நான் விளையாட்டாக எதையும் சொல்வதில்லை, வெளிகண்டநாதர் எனக்குச் சகவயதுடையவர் என்ற நம்பிக்கையில் மறந்து கொஞ்சம் விளையாட்டாகப் பதித்துவிட்டேன்( அதுவும் அவர் பெயரைத் தெளிவாகப் போட்டுத்தான்). அது உங்களை எந்த விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால், மரியாதைக் குறைவாகத் தோன்றியிருந்தால் தவறுக்காக இந்தச் சின்னப்பையனை மன்னித்துவிடவும் என நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். வெளிகண்ட நாதரிடமும் இதையே கேட்டுக்கொள்கிறேன். மேலே நான் இட்டிருக்கும் பெரிய பின்னூட்டத்திலும் ஏதாவது ஆணவமாகவோ, குத்தலாகவோ தோன்றினாலும் பிழைத்துப்போகிறேன் என்று விட்டுவிடுங்கள்.

said...

Dear Sivabalan,

The study of celestial objects is called Astronomy and it is considered scientific, not Astrology. I thought you meant you are not Astrology but said Astronomy. In your explanation (2nd comment) also you indicated that by saying you understand the science behind the Astrology - I assume you meant you understand the science behind the Astronomy. Please correct if I am wrong in my understanding. I would be surprised if you really meant you understand the science behind the Astrology - because even I am not sure whether Astrology is based on Science.

Again, I do not say Planets (which are in real celestial objects defined by Scientists/Astronomists/Cosmologists as Planets) can direct men. Astrology is based on the observations made for many years by many people and they tried to make a correlation between the movement of celestial objects known to them at that time with the changes happens in men's life. It might be total fluke. But if it is working well for many people, I cannot believe it can be total fluke or coincidence. So, in my view, even in Astrology the planets (the celestial objects defined in Astrology - the five planets defined by Scientists + Sun + Moon + Rahu + Ketu) do not influence the life of men. It is just that they tried to correlate the movements of these objects to the happenings in an individual's life.

It is very popular to say 'I do not believe that God exists. Even He exists, I do not care'. You statement which says 'I cannot accept planets can direct me in my life. If it is so, I am not bothered' is like that statement only. So, basically yours can be said indifference to the idea of Astrology - you do not either believe or unbelieve that planets can influence your life. Is that correct?

Thanks for your kind words about my analysis.

I might be on the wrong side. But you are not in either side :-) by your own statement. Just kidding. I am also like you I guess. Both of us are in the gray area. You are more white (in the sense you think you are more scientific) and I am more dark (in the sense even after reading all the scientific things, I have chosen to stay on the believers side).

None of us can fight the Joshyakkaara annaachchis. It is just like trying to fight the politicians. Both are in the same category.

The question 'do you believe God has created everything' is irrelevant to the topic of this posting. So, I am refraining from answering that question. We may discuss this question in someother place where it is more relevant.

I do not consider myself to be a revolutionary who fights against all the social evils. Instead of talking about fighting against any evil, I believe more in doing, which I have been doing all along my life, in my own ways.

You have not hurt me. Do not worry a bit about that. If I have hurt you, please forgive me. The intention was not hurting you; but driving the point.

I too respect you for your humility, which is very much wanted in me. :-)

said...

Kumaran,
I did mention science behind Astrology. I broad sense I did mention science. If it is wrong we can ignore it. As you said it is irrelevant to this topic.

Just a cut & Paste).
1. //
a. The observation, identification, description, experimental investigation, and theoretical explanation of phenomena.
b. Such activities restricted to a class of natural phenomena.
c. Such activities applied to an object of inquiry or study.
2. Methodological activity, discipline, or study: I've got packing a suitcase down to a science.
3. An activity that appears to require study and method: the science of purchasing.
4. Knowledge, especially that gained through experience.
5. Science Christian Science. //

// It might be total fluke // See people, I am talking about in general, are visiting Astrologer’s place, to know about their future/present deeds. (Correct me if I am wrong). So if you said it is fluke, then Astrologers comments are also fluke.
I want to give example of current situation. JJ, she is totally controlled by so called astrologer (fluke). As she is following the astrology many people do the same thing. This leads to social evil, which I feel, people should fight against it.

//It is very popular// If it is popular, then It must be popular. Even it is not popular I am going to follow this. That’s why I also want to you to follow (Just Kidding)//Thanks for your kind words about my analysis. // You welcome Kumaran.//I might be on the wrong side. // No, You are on the wrong side.//But you are not in either side // I do agree. That’s what I really want. That’s what the human being was, when it was evolved.


//None of us can fight the Joshyakkaara annaachchis. It is just like trying to fight the politicians. Both are in the same category. // 100% true words kumaran.//The question 'do you believe God has created everything' is irrelevant// No kumaran, It is relevant. (Parikaram, god .. etc etc)


//I do not consider myself to be a revolutionary who fights against all the social evils. Instead of talking about fighting against any evil, I believe more in doing, which I have been doing all along my life, in my own ways. / / which itself a great fight against social evil, (Many do not do this)

It is Very nice to share with you. We will meet soon.

said...

Thanks Mr. வெளிகண்ட நாதர் for allowing me to post my comments.

said...

குமரன் ஏதோ ஒரு பிரச்சினை காரணமா பி ன்னூட்டத்தினை ஆங்கிலத்தில் தந்திருக்கலாம். அதற்காக, சிவபாலனும் அதே வழியில் தான் பதிலூட்ட வேண்டுமா?

தமிழ்மணத்தில் வந்து ஆங்கிலவாடை வீச செய்வதை கூடுமானவரை தவிர்க்கலாமே?

said...

நாகு,
மன்னிக்கவும். எனக்கு தமிழில் எழுத சொல்லி link (http://www.suratha.com/leader.htm)சொன்னவர் திரு.குமரந்தான்.

Till yesterday, I did not know this link.

இனிமேல், தமிழில் எழுதுவேன்!!

//தமிழ்மணத்தில் வந்து ஆங்கிலவாடை வீச செய்வதை கூடுமானவரை தவிர்க்கலாமே? //
மன்னிக்கவும்!!

said...

நாகு,
மன்னிக்கவும்.