Sunday, May 28, 2006

எண்ணெய் என்பது எது வரை!! --(2)

போன பதிவின் 'எண்ணெய் என்பது எது வரை!!' தொடர்ச்சியா இன்னும் எப்படி எண்ணெய் வளம் இனி வரும் ஆண்டுகளல இருக்கப்போகுதுன்னு பார்ப்பமோ!

ஒன்னு தெரியுமா, சவுதிஅரேபியாவில இருக்கிற கஹவார்('Ghawar')ங்கிற பகுதி எண்ணெய் வயல் (இந்த எண்ணெய் வயல் மட்டும் உற்பத்தி அஞ்சு மில்லியன் பேரல் ஒரு ஆண்டுக்கு!)போன்ற பெரிய எண்ணெய் வள கண்டுபிடிப்பு மாதிரி இதுவரை ஒரு பெரிய ஜாக்பாட்டு இன்னும் அடிக்கலை! ஆனா இந்த எண்ணெய் வயல்லுக்கு அடியிலே இதைவிட பெரிய கறுப்பு தங்க சுரங்கமே இருக்கு! அதை தோண்டி எடுக்கப்படும் தொழில்நுட்ப முறைகளான 'பலதிசையில் குடையும்' ('Multi-lateral drilling') தந்திரம் படி எடுத்தால் எண்ணெய் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு சொல்றாங்க! அப்படி இனி ஒன்னும் எடுக்க முடியாதுன்னு கைவிட்ட வடகடல் பகுதியில் ('North Sea')இந்த முறையில் எடுத்து வந்ததால் இப்பொழுது உற்பத்தியின் உச்சத்துக்கு போய்விட்டது!

உலகத்தில இருக்கிற எல்லா எண்ணெய் கிணறுகளருந்தும் எடுக்கப்படும் எண்ணெய் மூன்றில் ஒரு பாகம் தான் அதனுடய எண்ணெய் கொள்ளளவில் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும், ஏன்னா, இன்னும் இரண்டு பங்கு அந்த கிணறுகளின் 'Reservoir Capacity' அப்படியே இருக்கு இன்னும் எடுக்கப்படாம! புது தொழில்நுட்பமான '4-D Sesmic analysis and electromagnetic direction'ங்கிற முறையில அந்த ஹைட்ரோகார்பன்ங்களை அதிகம் எடுக்கும் திறன் ('recovery rate') உண்டு என்பதால், இதன் மூலமே சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு அதிகரிக்கலாம், இன்னும் அந்த எண்ணெய் எடுக்கப்படாத காஸ்பியன் கடல் மற்றும் வடகடல் பகுதியின் புது எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுப்பதற்கு பதிலாகன்னு சொல்றாங்க!

அப்புறம் இந்த கஹவார்('Ghawar')ங்கிற பகுதி போல ஒரு பெரிய பகுதி எதுவும் கண்டுபிடிக்கப்படாதாலே, எண்ணெய் கண்டுபிடிப்பின் கடைசி எல்லைக்கு போய்விட்டோமுன்னு நீங்க நினைக்கக் கூடாது! இன்னும் அதி நவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டு ஆழ்கடல், கடினமான நிலப்பரப்பு பகுதிகள், ஏன் அதிகம் உலக உஷ்ணத்தாலே உருகும் பனிபாறைகள் கொண்ட ஆர்டிக் பகுதியானது அந்த மாதிரி எண்ணெய் களஞ்சியத்தை கொண்டது, ஆக அதனால் உற்பத்தி ஆகக்கூடிய எண்ணெய் வளம் கணக்கிடலாங்குதுங்கிறாங்க! மேற்கொண்டு சைபீரியா, சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாட்டின் பல பகுதிகள் இன்னும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தோண்டி எடுக்காம இன்னும் எண்ணெய் உறைஞ்சுக்கிடக்குன்னு கணக்கு சொல்றாங்க!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த பெட்ரோல் நம்பிக்கை அற்றிருப்போர் ('Petro-Pessimists') என்னா சொல்றங்கன்னா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் கணிச்ச தங்கள் எண்ணெய் வளம் பற்றி சொல்றதெல்லாம் ஜாஸ்தி, உதாரணத்துக்கு குவைத் மதிப்பிட்டு சொன்ன அளவில,100 பில்லியன் பேரல்கள்ல ஒரு பாதி தான் இருக்கு , அதே மாதிரி சவுதி சொல்றதுலயும் பாதி தான் இப்ப ரிசர்வ்ல இருக்கு, அதாவது 260 பில்லியன் பேரல்கள்ல பாதி தான் இருக்குன்னு ஹேஸ்யம் சொல்றாங்க! இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல்லை! ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, இன்னெக்கு உற்பத்தி பீக்ல போனாலும், அந்த எண்ணெயின் அளவு உடனே குறஞ்சிடாது, ஒரு எண்ணெய் வயல் வெளின்னு எடுத்துக்கிட்டா, அதுவும் கஹவார்('Ghawar') மாதிரி பெரிய தங்க சுரங்கத்தை எடுத்துக்கிட்டா, அதனுடய வளம் தீர நிறைய நாட்கள் பிடிக்கும், ஏன்னா, எல்லா கிணறுகளும் ஒரே நேரத்தில் தோண்டியவை இல்லை அப்படின்னும் சொல்றாங்க! அந்த வளம் குறையும் நேரத்தில புது புது எண்ணெய் வயல்வெளிகளை விருத்தி செய்து மேற்கொண்டு எண்ணெய் தடை இல்லாம் வர ஏதுவாகும்னும் சொல்றாங்க! அதிலயும் சவுதி பெட்ரோலியத்துறை மந்திரி, அலி நயிமி, கொஞ்சம் அதிகப்படியா போயி, சவுதி ஈராக் பார்டர்ல 200 பில்லியன்னுக்கு மேலே இருக்கிற எண்ணெய் வளமிக்க பகுதிகளை தோண்டவே இன்னும் ஆரம்பிக்கிலைங்கிறாரு!

ஒரு வகையில குவைத்ல கிடைக்கும் எண்ணெய் வள கருத்து கொஞசம் அதிகப்படியாவே சொன்னாலும், சவுதியில இருக்கிற எண்ணெய் கிணறுகள் அளவு மதிப்பிட்டு வச்சிருக்கும் வகையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்த கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்க முடியும்னு சொல்றாங்க! இருந்தாலும் இந்த கருத்தில் நம்பிக்கையற்றோர், சவுதியில்லயும் அந்த கதை தான் சொல்லி இதை பத்தி நிறைய புத்தகங்கள், அதிலயும் ஜெர்மி லேகர்ஸ்ங்கிறவரு எழுதிய 'The Empty Tank'ங்கிற புக்கல இதப்பத்தி விவரமா எழுதி இருக்கிறார்! இந்த பாதிப்பினால் உலக பொருளாதாரமே சீர்கெடும் நிலை ஏற்படக் காரணமாகும்னு சொல்றாங்க!

இதினால பொருளாதார நிபுணர்கள் என்னா சொல்றாங்கன்னா, இந்த மாதிரி எண்ணெய் நெருக்கடி 1970ல்கள் வந்தப்ப அமெரிக்கா மற்ற நாடுகளின் அரசாங்கம் செஞ்ச மாதிரி, எண்ணெய் விலை நிர்ணயக் கட்டுப்பாடு, சலுகைகள் பல அளித்ததானல வந்த பொருளாதார சீர்குலைவு, இப்பவும் வரக்கூடும், அரசாங்கங்க அந்த மாதிரி கொள்கையை கடைபிடிச்சா, அதனால எண்ணெய் விலையை சந்தையின் கட்டுப்பாட்டுக்குள்ளவே விட்டுடனும், அதுவே அதன் உச்ச நீச்ச நிலையை சரி செஞ்சுக்கும், மேற்கொண்டு புது புது தொழில்நுட்பங்கள் வந்தும் எண்ணெய் செலவழிப்பதில் சிக்கணத்தை கடைப்பிடித்தும், அதன் தாக்கங்களை சரி செய்து கொள்ளக்கூடும்னு சொல்றாங்க! மேற்கொண்டு, விலை 60 டாலர் ஒரு பேரலுக்கு மேலே போனாலும் தொடர்ந்து 10 வருஷத்துக்கு சந்தையிலே எண்ணெய் கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்கும். நாம 1970ல பண்ண அந்த தப்பை இப்ப பண்ணாம இருந்தாலே போதும்னு சொல்றாங்க!

ஆக இந்த உச்ச நிலையை சமாளிக்க ஒரே வழி மாற்று சக்திகள் தான், அதற்கு தகுந்தாற் போல அனத்து வழிகளிலும் மாற்று சக்தியை உருவாக்க உலகநாடுகள் முனைப்பா இருக்கு! நான் ஏற்கனவே சொன்னமாதிரி பெரிய எண்ணெய் ஜெயிண்ட் கம்பெனிகள் 'expolration'ஐ விட்டுட்டு Manaufaturing முறையில தயாரிக்க வழிமுறைகளை ஆராஞ்சு அதில் வெற்றியும் அடைஞ்சிக்கிட்டிருக்காங்க! இப்ப R-10ங்கிற ஆடிக்காரு ஒரு வகையான டீசல் எரி பொருளை போட்டு ஓட்டி அதிக சக்தியுடன் பந்தியத்தில் வேகமாக வந்து அனைத்து ரேஸ் கண்டிஷனங்களையும் லாவகமாக தாண்டி 'High Endurance Powered Car'ன்னு வந்தது. அந்த காரு ஓட்டின டீசல் இயற்கை எரிவவயுவிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்னு அதை 'Gas to Liquid' (GTL)ன்னு சொல்வாங்க. இந்த் தொழில்நுட்பம் இப்ப 'Shell'ங்கிற எண்ணெய் கம்பெனிக்கிட்ட இருக்கு, அதனாலே இந்த 'GTL' சுத்திகரிப்பு ஆலை கத்தார் என்கிற நாட்டில் பெரிய அளவில் வருகிறது. இந்த இயற்கை எரி வாயு ('Natural gas') அதிகம் கிடைக்கும் நாடுகள் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை விட மத்த நாடுகளே! ஏன் நம்ம இந்தியாவிலே கோதாவரி நதிக்கரையில் ரிலெயன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய இயற்கை வாயு கண்டுபிடிப்பை ஒரு இரண்டு வருஷம் முன்னதான் அறிவிச்சாங்க. ஆக இந்த 'GTL' நுட்பம் நம்க்கு நிறைய பயன் தரும் தங்கு தடை இல்லாம டீசல் கிடைக்க!

ஆக, நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் டீசல் நுட்பம், அமெரிக்காவில் இருக்கும் படிகப்பாறைகள், கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய், மேலே சொன்ன இயற்கை எரிவாய் எண்ணெய் (GTL), நிலத்தடி நிலக்கரியில் உருவான எரிவாயுவிலிருந்து எண்ணெய், அப்படின்னு இது போன்ற தொழில்நுட்பங்களின் வழியாய் கிடைக்கும் எண்ணெய் சக்திகளே, முறையாக வரும் எண்ணெய் சக்திகளை (Conventional energy) விட அதிகமாக இனி வரக்காலங்களில் நாம் பார்க்கலாம்!

ஆக மாற்று சக்தி என்பது நாளையே கிடைத்துவிடக் கூடிய ஒன்னு இல்லே! அதில் செய்யப்பட வேண்டிய முதலீடுகளின் அளவு அதிகம்!ஆனல் அதிகரித்து வரும் எண்ணெய் விலையினைக்கொண்டு இந்த வேற்று தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வருகினறனர் என்பதே உண்மை! OPEC என்கிற இந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஏதேனும் சூழ்ச்சி செய்து (1985,1998களில் செய்ததை போல்) எண்ணெய் விலையை குறைக்காத வரை, இந்த புது தொழில் நுட்ப மூலம் மாற்று சக்தி செய்முறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன!

இது பெரிய எண்ணெய் கம்பெனிகள் தங்களின் முக்கிய தொழிலான எண்ணெய் வியாபரத்திலிருந்து விலகி செல்வது போல் இருந்தாலும், அது வல்ல உண்மைக் காரணம். ஏனென்றால் ம்த்திய கிழக்கு ஆசிய நாடுகளில் புதியதாக கிடைக்க இருக்கும் எண்ணெய் வளங்களில் முதலீடு செய்ய போதுமான் அரசியல் மற்று அனுகூலமான நிலை இல்லை என்பதால், கையில் காசு வைத்துக்கொண்டிருக்கும் அனைத்து கம்பெனிகளும் மாற்று சக்திகளில் செலவழித்து, மாற்று சக்திகளை நிலைநாட்டிவிட்டல், முறையாகக்கிடைக்கும் இந்த Conventional energy என்கிற சக்தி கீழ்நிலைக்கு தள்ளப்படும்! அதன் விலைவாக இன்று சொர்க்கப்புரியாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் நிலமையை யோசித்து பாருங்கள். ஆக எல்லாம் தேவையினை பொருத்து அனைத்து கண்டுபிடிப்புகளும் வர தொடங்கிவிடும். தொழில்நுட்பங்களின் பலமே தனி!
அதற்கு சாட்சியாக அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் பேக்கர்ஸ் வயலை சென்று பார்த்தால் விளங்கும். இது கடந்த 100 வருடங்களாக ஹெவி ஆயில் என்கிற கனகச்சா எண்ணெய்யை 2 பில்லியனுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது, இனியும் அதே 2 பில்லியன் அளவுக்கு வளம் இருக்கிறது! (இந்த கனகச்சா எண்ணெய் என்பதை சுத்த்கரிப்பு செய்யும் விலை அதிகம், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மிகவும் மிருது வானது, பூமியிலிருந்து தோண்டிய எண்ணெய்யை லாரில் போட்டு ஓட்டலாம்,அதனால் சுத்திகரிப்பு விலை கம்மி, ஆனால் கனகச்சா எண்ணெய்யை , அதுபோல் ஓட்ட முடியாது)

இது போன்ற கனகச்சா எண்ணெய் வளம் நிறைய நாடுகளில் உள்ளது! சைனாவிடம் இதன் வளம் அதிகம் உள்ளது. அதே போல், கனடா, அமெரிக்கா, வெனின்ஸ்வேலா போன்ற நாடுகளில் இந்த கனகச்சா எண்ணெய்யின் அளவு சவுதியில் இருக்கும் எண்ணெய் வள அளவைக்காட்டிலும் பன்மடங்கு அதிகம். என்ன, தோண்டி எடுத்து சுத்திகரிப்பின் விலை தான் அதிகம். எல்லாமே பொருளாதார கணக்கின் கீழ் வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் பொருளாதார ரீதியாக மலிவு என்ற குணத்தை கொண்டிருந்ததால், இந்த கனகச்சா எண்ணெய் எடுப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டவில்லல. ஆனால் இன்று வளர்ந்து வரும் விலையின் கணக்கை பார்க்கும் போதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அந்த கஷ்டமான கச்சா எண்ணெய் எடுப்பதிலும் சுத்திகரிப்பதிலும் விலையை வெகுவே குறைப்பதால், இது இப்பொழுது பொருளாதார ரீதியில் (Ecnomic viability)முற்றும் ஏற்று கொள்ளப்பட்டு மூலதனம் இட தயாராக உள்ளனர்!

ஆக இந்த பலகாரணங்களால் இந்த பீக்கிங் என்கிற தன்மை வர பல ஆண்டுகள் பிடிக்கும்! உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இது உலக அரசியலாக்கப்பட்ட ஒன்று! வளர்ந்து வரும் தீவிரவாதம், இது போன்ற லாபம் ஈட்டிக்கொண்டிருந்த இந்த எண்ணெய் வளங்களின் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் போன்ற சூழ்நிலையே இந்த உலக எண்ணெய் உச்சம் அடைந்து விட்டது போல் மாயை உருவாக்கி வைத்து உள்ளன! அதுவும் நன்மைக்கே! இந்த மாற்று சக்தி தொழில்நுட்ப வளர்ச்சி, பூமிக்கடியில் இருக்கும் கறுப்பு தங்கத்தை அளவாக சமன் செய்யும் நிலையாக உருவெடுப்பதால், இந்த தங்கம் பல ஆண்டுகள் தொடர்ந்து கிடைத்து பெட்ரோல் வாகனங்கள் என அழைக்கப்படும் உள் எரி வாகனங்களின் ('Internal Combustion Vehiles') ஆளுமை உலகில் தொடர்ந்து இருக்கும்!

சேரன் சொன்ன மாதிரி நம்ம பேரன் பேத்திகள் குதிரை வண்டிகளை பார்ப்பார்களா என்பது சந்தேகமே, அதற்குப்பிறகு வருபவர்களுக்கு எப்படி என்று சொல்வதிற்கில்லை!

7 comments:

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!
நான் அறிந்த வரையில் எண்ணை தட்டுப்பாடு வெகு அன்மையில் உள்ளதாகவே ஊடகங்கள் தெரிவிக்கிறது.நீங்கள் கூறியது போல் எண்ணை வளம் நீண்ட நாள்கள் வந்தால் சந்தோஷமே

said...

Hello from a blogger down under in NEW ZEALAND.I cannot understand your language, but I had a look at your photos.

said...

வவ்வால், நான் எழுதியது போல இது ஒரு 'geopolitical gimmick', இன்றைய பொருளாதாரம் இந்த எண்ணெய்யில் கட்டுண்டு இருப்பதால், இதன் சிறிய சறுக்கம் எந்த அதாள பாதாளத்திற்கும் போக வாய்ப்பிற்கிறது. அதனால் எண்ணெய் வள மத்திய ஆசிய நாடுகளின் பிளாக்மெயிலை தவிர்க்க இந்த ஒரு propaganda, மற்றும் மாற்று தொழிநுட்ப பதிலடிகளும் 'arm twist' என்ற அரசியலுக்கு வழி வகுக்கும். ஆனால் இதெல்லாம் மனித இனத்திற்கு நன்மைகள் பயணிக்கக்கூடிய ஒன்றாக அமைவதே முடிவில் நன்மையாக உள்ளது! ஆகயால், இதில் நாம் பயப்பட ஒன்றும் தேவையில்லை!

said...

My dear Blogger Kelvin,

I have posetd the article on oil and Gas exploration
in Tamil, a language being spoken/followed in India. I
was trying to explain the reservoir capacities and
availablity of this conventional energy and what are
the alternate energy possibilities. I am also
addressing the oil peaking, is it really happening or
to be happened after howmany years. It is all about
the article. Thanks for your visit

said...

வாங்க கில்லி, இப்படி நான் எழுதுற ஒவ்வொரு கட்டுரைக்கு பேரை மாத்தின என்னாகிறது?

said...

சார்

மிக உபயோகமான பதிவு.

இதுல இந்தியாவுக்கு என்ன தாக்கம் இருக்கும் மற்றும் நம்ம இந்தியாவிடம் உள்ள எண்ணெய் இடங்களின் எதிகாலம் போன்றவை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க சார்.

மிக்க நன்றி.

said...

இந்தியாவில நிறைய எண்ணெய், எரிவாயு கண்டுபிடிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு சிவபாலன். நம்ம ரிலெயன்ஸ்க்கு அடிச்ச ஜாக்பாட் மாதிரி, கோதாவரி ஆத்துக்கரையிலே கிடைச்ச கேஸ் மாதிரி ஒரு நாலு அஞ்சு ஃபீல்டு அமைஞ்சிருச்சினா ரொம்ப நல்லா இருக்கும். ராஜஸ்த்தான் பாலைவன பகுதிகள்ல அப்படி பட்டதுன்னு செஸ்மிக் டேட்டா எல்லாம் சொல்லுது! ஆன எக்ஸ்பொளரேஷன்க்கு முதல் போட வரணும்! அதான்! நம்ம ஆல்ட்ர்னேட் எனெர்ஜின்னு இந்த சக்கையிலேருந்து எடுக்கிற எத்தானால்,ஆமணக்கு எண்ணெய் எல்லாத்திலேயும் கவன்ம் செலுத்தினா பொழச்சிக்கலாம், பார்ப்போம், நம்ம கவர்மெண்ட் என்ன பண்றாங்கண்ணு! இதுக்குண்டான் புது பாலிஸி கொண்டு வராங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும்!