Saturday, May 20, 2006

தானிய பெட்ரோல்-விவசாயம் தரும் மாற்று சக்தி!

எத்தனை பேரு என்னுடய 'வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!' படிச்சீங்களோ, எனக்கு தெரியாது. அதிலே மாற்று சக்திகளுக்கு என்னென்ன வழி முறைகள் இருக்கோ, அதுக்கெல்லாம் அதிகமா செலவழிச்சு, ஆராய்ஞ்சு, மாற்று வழிகள்ல சக்தியை உருவாக்க அமெரிக்கா முனைப்பா இருக்குன்னும், அதில மாற்று பெட்ரோல் "Cellulosic Ethanol" மூலம் இனி வாகனங்கள் எல்லாத்தையும் ஓட்ட வைக்க முயற்சி செய்ய போகுதுன்னு சொல்லி இருந்தேன். அந்த மாதிரி 'Bio-Fuel'ங்கிற மாற்று தானிய எரிபொருள் பத்தி கொஞ்சம் பார்போமேன்னு தான் இந்த பதிவு.

அதுவும் கொஞ்ச நாளைக்கு முன்னே நம்ம ஊர்ல மூலிகையிலருந்து பெட்ரோல் எடுக்கிறேன்னு ராமர்னு ஒருத்தரு போட்டுத் தள்ளிக்கிட்டிருந்தாரு. அது மூலம் பெட்ரோல் எடுத்து நம்ம தமிழ்நாட்டை இன்னொரு துபாய் ஆக்கி காட்றேன்ட்டெல்லாம் சொன்னாரு! இப்ப அது என்னாச்சு, அவரு என்னானுருன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கோ! அதை விஞ்ஞான முறையிலே நிருபிச்சா எல்லாரும் உதவுறேன்னு சொல்லியும், கடைசியிலே அப்பீட்டு ஆனா கதை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். ஆனா நிஜமாலுமே, நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம் தெரியுமா. அப்படி தயாரிக்கிற நாடுகள்ல, பிரேஸில் தன்னுடய 30 சதவீத எரி பொருள் தேவையை இந்த கரும்புலிருந்து தயாரிக்கும் அந்த எரி பொருள் மூலமா பூர்த்தி செஞ்சுக்கிறதுன்னா, ஆச்சிரியமா இல்லை! அது என்னா எப்படின்னு விவரமா கீழே பார்க்கலாம் வாங்க!

வில்லி நெல்சன் ('Willie Nelson) ஒருத்தரு இந்த டெக்ஸாஸ் மாகாணத்திலே, அவரு தோட்டத்தில விளைஞ்ச தானியங்களை வச்சி தயாரிச்ச பெட்ரோல்ல, அவருடய மெர்ஸீடிஸ் காரை ஓட்டுறாருன்னா பார்த்துக்கங்க! அவரு தயாரிக்கிற இந்த பெட்ரோலுக்கு "BioWillie" பேர் எல்லாம் வச்சு அதை ஒரு ஏழு எட்டு இடத்திலே விநியோகம் வேறே பண்றார்னா பார்த்துக்குங்க! அமெரிக்கா காரங்களுக்கே உண்டான வியாபார தன்மையோட அமெரிக்கா முழுக்க விக்கப்போறாராம். இது எப்படி இருக்கு. இந்த தானிய பெட்ரோல்ல அவங்க விவசாயிங்களுக்கு, லாரி ஒட்டுறவங்களுக்கு, ஏன் சுற்றுபுறசுழல் மாசுபடாம இருக்கவும் இது உதவும்ங்கிறாரு. ஏன், இனிமே அமெரிக்கா இந்த பெட்ரோலுக்குகாக தட்டுதூக்கிட்டு மத்திய ஆசிய நாடுகள்ல எல்லாம் அலையவேணாங்கிறாரு!

மேற்கொண்டு ராக்கெட் வேகத்தில ஏறிக்கிட்டு போயிகிட்டுருக்கிற இந்த கச்சா எண்ணைய் விலையால, வேற ஏதாவது முறையிலே இந்த எரி சக்தி கண்டுபிடிக்கமுடியுமான்னு பார்த்து, அதுக்காக பைசா செலவளிச்சு சோயாபீன்ஸ், கனோலா, சோளம், ஏன் புல்லுலருந்தும் எண்ணெய் எடுக்கமுடியாதான்னு, இந்த 'எதை தின்னா பித்தம் தெளியுங்கற கதையா' எல்லா ஆராய்ச்சியும் முடிக்கிவிட்டுட்டாங்க! அதனால கண்டுபிடிச்சது, இந்த எத்தனால் ('ethnol'), அதாவது பெட்ரோலுக்கு மாற்று எரிசக்தி, அப்புறம் பையோடீசல் ('Bio Diesel'), என்கிற ஒரு எரி பொருள்! இப்படி, பேசாம காசை கொண்டி சவுதிஅரேபியால கொட்டாம, அப்படி கொட்றதால, அங்க தீவிரவாதத்துக்கு கிடைக்கும் பணம் போக இருக்க, இந்த இரண்டு எரி பொருளையும் வச்சு காரு, வாகனம் ஓட்ட முயற்சி செய்றது எவ்வளவோ மேல்னு கருதி,இதில எறங்கலாமுன்னு தீவிரமாயிட்டாங்க. ஏற்கனவே அமெரிக்காவில விக்கற காருங்க எல்லாத்திலேயும் 10 சதவீதம் இந்த மாதிரி எத்தனால் கலந்து ஓட்டறமாதிரி தான் காருங்கெல்லாம் தயாரிச்சிக்கிட்டிருக்காங்க. அதனால அதை 10 சதவீதத்திலருந்து 85 சதவீதம் வரை உயர்த்தி இந்த மாதிரி எரி பொருள்ல ஓடுற வாகனம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் இங்கே ஏற்கனவே வளர்ந்திருக்கிறதாலே, இப்ப இதில தீவிர ஆராயச்சி! இதுல நம்மூரு கதை என்னான்னு தெரியல. நம்மூர்ல தயாரிக்கிற காருங்க எத்தனை சதவீதம் இந்த மாற்று எரி பொருளை எடுத்துக்கும்ங்கிற விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கோ!

முதல்ல இந்த எத்தனால்('ethnol')பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதான் நம்ம ஊர்ங்கள்ள காயச்சர சாரயம் தான்! ஊரலு, பேரலுன்னு சினிமா சண்டை காய்ச்சிகள், சாரி காட்சிகள் எல்லாம் பார்த்திருப்பீங்க. ஆமா அதே தான், தானியங்கள், பழவகைகள் எல்லாத்தையும் ஊறபோட்டு அதை வடிகட்டி எடுக்கபடற சாரயம்('alcohol') தான் அது! அதனுடய உபயோகங்கள்னா, முதல்ல 'Alcoholic beverages' ன்னு நம்ம ஊர்ல சாப்பிடற பட்டை சாரயத்திலருந்து, ரம், விஸ்கி, பிராந்தி, ஜின்னு, வோட்கான்னு அடுக்கிக்கிட்டே போகலாம். (இந்த ரம், விஸ்கி, பிராந்தி, எது எது எந்த தனியம், பழத்திலருந்து செய்யறதுன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா இதோ இந்த விக்கிபீடியா சுட்டிக்குப் போயி பாருங்க!) அதற்கப்புறம் பெட்ரோலோட கலந்து வாகனங்கள் ஒட்டறதுக்கு பயன்படுது.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இதில முன்னனில இருக்கிறது பிரேஸில் நாடு! அமெரிக்காவிலேயும் 14 பில்லியன் லிட்டர் எத்தனால் வருஷத்துக்கு தயாரிக்கிறாங்க, அது இப்ப 28 பில்லியன் லிட்டரா, 2012ல அதிகரிக்க எல்லா முயற்சியும் எடுத்துக்கிட்டிருக்காங்க! இன்னும் நிறைய நாடுகள் இந்த ரூட்ல போயி எத்தனால் காரு ஓட்டப்போறாங்க, ஏன் நம்ம இந்தியாவும் இதில முயற்சி பண்ணிக்கிட்டிருக்கிறதா கேள்வி, எவ்வளவு தூரம்னு அறிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் சில கெமிக்கல்ஸ், இந்த எஸ்தர், வினீகர், எதிலமைன்ஸ்ன்னு ஏகப்பட்டது நம்ம அன்றாடம் உபயோகிக்கிற பொருட்கள்ல,அதாவது பெயின்ட்டை கரைக்கிறதுக்கு, பாலீஸ் போடறதுக்கு, அப்படின்னு அடுக்கிக்கிட்டே போகலாம். ஒரு விஷயம் தெரியுங்களா, இந்த கெமிக்கல்ஸ், பெட்ரோலிய பதார்த்தங்கள்ல இருந்தும் உற்பத்தி பண்ணலாம்! அதனால தான், இதனுடய உற்பத்தி மேலை நாடுகள்ல, பெட்ரோலியத்திலருந்து வரும் பதார்த்த பொருட்கள் செய்யும் பெட்ரோகெமிக்கல்ஸ்ங்கிற அந்த தொழில்நுட்பத்திலருந்து வருவது. ஆனா விவசாயத்தையே அதிகமா நம்பி இருக்கும் நம்ம நாட்ல அந்த பெட்ரோகெமிக்கல்ஸ் தொழில்நுட்பத்தை விட இந்த தானியங்கள்லருந்து மலிவா உற்பத்தி பண்ணலாம்!

சரி எல்லாம் சரி, நாம் ஏன் இந்த எத்தனால்ல மாற்று எரி பொருளா உபயோகிக்கக்கூடாதுன்னு கேட்கிறீங்களா? நல்ல கேள்வி, இது உருவாவது நம்ம சாப்பிடும் தானியங்கள், பழங்கள் இருந்து செய்யக்கூடியது. பிறகு அதுக்காக விவசாயம் பண்ண போனா, அது பொருளாதார ரீதியா கட்டுபடியாகுது. அப்ப என்ன பண்ணலாமுன்னு யோசிச்சப்ப வந்தது தான் இந்த "Cellulosic Ethanol" ங்கிற ஒன்னு. அதுதான் நான் மேலே சொன்னமாதிரி நம்ம கடிச்சு துப்பின கரும்பு சக்கை, தூரப்போட்ட சோளக்கருது கச்சை, அப்புறம் புல்லு, மரம் மட்டைன்னு, இதில்லருந்து உருவாக்கக்கூடியது தான் அந்த "Cellulosic Ethanol". அதாவது இதெல்லாம் தின்னா மனுசனுக்கு செரிக்காது. அதையே ஆடு, மாடுங்க தின்ன செரிச்சுடும் ஏன், ஆங்.. அங்க தான் இருக்கு சேதி, ஏன்னா அது உடம்புல்ல இருக்கிற ஒரு என்ஸைம் ('cellulase enzyme') அந்த பாடியில்ல இருக்கிற தடபவெப்ப நிலையிலே இந்த கச்சை, புல்லு, எல்லாத்திலேயும் இருக்குற குளுக்கோஸ் தனியா பிரிச்சுடும். அது தான் சங்கதி. இந்த எத்தனால் உற்பத்தி பண்றது அந்த குளுக்கோஸ், சர்க்கரைத்தண்ணி, வடிக்கட்டிதான். இப்ப புரிஞ்சதா. இந்த புல்லு, கச்சை மூலப்பொருளை கொண்டு, அதில் உள்ள சர்க்கரையை உடச்சி, பிறகு அதை ஊரபோட்டு, வடிகட்டி எடுத்தா வந்துடும் இந்த எத்தனால்! இந்த சர்க்கரையை உடைக்கும் முறைக்கு ஆங்கிலத்திலே பேரு 'Hydrolysis'. அதே மாதிரி இன்னொரு முறையும் இருக்கு. இந்த கச்சா பொருள் எல்லாத்தையும் வாயுவாக்கி ('Gasification ') அப்புறம் அதில்ல இருந்து வரக்கூடிய உபப்பொருளை ஊர வச்சி, பிறகு வடிக்கட்டினா வரும் எத்தனால். ஆக இப்படி வீனா போற பொருள்ல இருந்து வரக்கூடிய இந்த மாற்று எரிசக்தி தான் நாளைய நம்பிக்கை! இதுக்காக அமெரிக்கா, மற்றும் உலகெங்கும் நிறைய கம்பெனிகள் தங்கள் ஆராயச்சியை முடுக்கி விட்டு, இந்த எத்தனால் உற்பத்தி அளவை ('Yeild') எந்த முறையிலே அதிகபடுத்தலாமுன்னு முயற்சி பண்றாங்க!

இப்ப புரிஞ்சுதா, இந்த தானிய பெட்ரோல் எப்படி ஒரு மாற்று சக்தியா வரப்போகுதுன்னு! அமெரிக்காவில அதிகமா இந்த மிட்வெஸ்ட்ங்கிற பகுதியில விளையக்கூடிய ஒரு புல்லு ('Switch grass') தான் இன்னைக்கு நம்பிக்கை நட்சத்திரம்! இப்படி இங்கு அதிகமா விளையக்கூடிய மக்காசோளம், சோயா பீன்ஸ், இந்த மாதிரி தானியங்கள் இதுக்கெல்லாம் மூலம். இது மட்டுமில்லாம் பன்னியோட சானத்திலருந்தும் கச்சா எண்ணெய் எடுக்கலாமுன்னு கண்டுபிடிசிருக்காரு 'Yuanhui Zhang'ங்கிற விவசாய இஞ்சினியர். (ஏற்கனவே நமக்கு எல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான் இந்த சாணம் வயலுக்கு நல்ல உரம்னு!) விஷயம் தெரியனும்னா, இதோ சுட்டி. அவரு கண்டுபிடிச்ச அந்த செயல் முறை மாட்டு சாணம், மற்றும் ஆட்டு சாணத்துக்கும் பொருந்துங்கிறார், ஏன் மனுசன் போடும் கழிவிலருந்தும் முடியும்ங்கிறாரு!(ஒரு படத்திலே, விவேக் சொம்ப தூக்கிக்கிட்டு காலைகடன் கழிக்க போறப்ப யாரோ கேப்பாங்க, எங்க போறேன்னு, அதுக்கு அவரு சொல்லுவாரு, நிலங்களுக்கு உரம் போடப்போறேன்னு, அது மாதிரி இனி வரபடத்திலே,'ங்.. பெட்ரோல் உற்பத்தி பண்ண போறேன்னு சொல்லி காமடி பண்ணாலும் ஆச்சிரியப்படவேணாம்!) பார்த்தீங்களா, மாற்று சக்தியை நம்மகிட்ட வச்சுக் கிட்டு எங்கெங்கேயோ போய் தேடி அலையறோமுன்னு!

26 comments:

said...

//இப்ப அது என்னாச்சு, அவரு என்னானுருன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கோ!//

அந்த 420 மனுசன் போலிசு கேசுன்னு திரியறார் :).

said...

நம்மூரு காட்டாமணக்கு செடியோட விதையிலிருந்து எடுக்கும் எண்ணையிலும் (விளக்கெண்ணை ?) பயோடீசல் தயாரிக்கமுடியுமாம்.

ரிலையன்ஸ் நிறுவனம் இதில் 2000 கோடியை முதலீடு செய்யப்போகிறார்கள்.

http://us.rediff.com/money/2005/aug/23ril.htm

said...

சமுத்ரா, போலி கேசுன்னு உள்ளே போட்டுட்டாங்களா, இல்லை வெளியிலே தான் திரியிராரா?

said...

வாங்க பெத்த ராயுடு, பரவாயில்லையே, ஆமணக்குள்ளயிருந்து Bio-diesel எடுக்க திட்டமா? இனி அதுமாதிரி மாற்று சக்தி வழிகள்ல இறங்க வேண்டியதுதான். அதுவௌம் நம்மல மாதிரி தேசத்துக்கு ரொம்ப தேவை, நம்மலால வெற்றிகரமா செய்ய முடியும், ஏன்னா அடிப்படையில நாம மொத்தமா நம்பியிருப்பது விவசாயத்தை. இத்ன் மூலம் இன்னொரு புரட்சி பண்ணினா, அடுத்தவன் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லை பாருங்க!

said...

வணக்கம் வெளிகண்டநாதர்!

நல்ல தகவல் செறிந்த பதிவு! உங்கள் பதிவை தற்போது தான் பார்க்கிறேன். மாற்று எரிசக்தி பற்றி எனது கருத்துகள் சிலவற்றை கூற விரும்புகிறேன். மாற்று எரிசக்தி என்பது காலத்தின் கட்டாயம்.பூமிக்கடியில் உள்ள பெட்ரோலிய இருப்பு வெகு வேகமாக குறைந்து வருகிறது. முதன் முதலாக பெட்ரோலியம் கண்டறிந்த நாள் முதல்(AD 1853) எத்தனைக்காலம் எண்ணைக் கையிருப்பு இருக்கும் எனக்க்கிட்டுள்ளார்கள் அதன் காலக்கெடு 342 ஆண்டுகள்.இதில் 153 ஆண்டுகள் கடந்தாகி விட்டது ,இன்னும் ஒரு 189 ஆண்டுகள் உள்ளது.அத்தனை ஆண்டுகள் உள்ளதே என மகிழ வேண்டாம் ஏன் எனில் தற்போதைய காலத்தில் பெட்ரோலிய உபயோகம் பெருக்கு தொடர் விகிதத்தில் வளர்ந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது எனவே சுமாராக இன்னும் ஒரு 50 ஆண்டுகள் வரைத் தான். தற்போது உள்ள எண்ணை வளத்தை வைத்து காலம் தள்ள முடியும்.இதிலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல் என்னவெனில். இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வரை எடுப்பது மட்டுமே பொருளாதார ரீதியாக லாபகரமானது,அதன் பின்னர் எண்ணை எடுக்க ஆகும் செலவு இரட்டிப்பாகும். எனவே பெட்ரோலில் கார் ஓட்டுவது அடுத்த 20 ஆண்டுகளுக்கே சாமன்யனுக்கு சாத்தியப்படும்.

உலக அளவில் மாற்று எரிசக்திக்காக பெரிய அளவில் ஆராய்ச்சி நடைப்பெற்று வரும் வேளையில் இந்தியாவில் பெரிதாக எந்த முயற்சியும் நடைப்பெறவில்லை.தற்போது தான் விழித்து கொண்ட ரயில்வே துறை 10 சதம் ஆமணக்கு எண்ணைக் கலந்து ரயில்களை இயக்க முன்வந்துள்ளது.மேலும் காலியாக கிடக்கும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் ஆமணக்கு என லாலு பிரசாத் சொல்லியுள்ளார்.இன்னும் இந்த திட்டம் சரியாக நடைமுறைக்கு வரவில்லை.

உலக அளவில் எண்ணை தேவை அதிகம் உள்ள நாடாக இந்தியா,மற்றும் சீனாவை குறிப்பிட்டு வருங்காலந்தில் நாம் தான் அதிகம் எரிக்க இருக்கிரோம்.
அது கவலையளிக்கும் விகிததில் செல்லும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.அது உண்மை தான் அன்மை காலத்தில் இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது.மேலும் டாடா ஒரு லட்சம் ரூபாயில் கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மேற்கு வங்கத்தில் அடிக்கல் நாட்டியுள்ளது.ஏன் டாடா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தற்போது தயாரிக்க துவங்க கூடாது?தற்போது சீனஇறக்குமதி மின்கார்கள் ,
ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இறக்கு மதி செய்யப்பட்டு ஓட்டப்படுகிறது ஆனால் இறக்குமதி ஆயதீர்வை வரி 100% இருப்பதால் 20000 விலையில் சீனாவில் இருந்து வருவது 40000 ரூபாய்கு விற்கப்படுகிறது எனவே பெருமளவில் மக்களைப் போய் சேரவில்லை.இந்தியாவிலே தயாரித்தால் விலைக்குறையுமே.

நீங்கள் கூறியது போல மற்ற நாடுகளில் வேண்டுமானல் எத்தனால் தயாரிப்பு செலவு கூடலாம்.இந்தியாவில் மலிவாக செய்யலாம்.உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான் மொத்தம் 21 மில்லியன் டன் சர்கரை.பிரேசில் இரண்டாம் இடம் தான்.நம் நாட்டில் மது தயாரிப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால் மொலாசஸை அனைத்தையும் உபயோகிக்காமல் மிக குறைந் அளவே பயன்படுகிறது.மீதம் வீணாக்கப்படுகிறது.முழு அளவில் உபயோகித்தால் நாம் தயாரிக்கும் எத்தனால் மட்டும் நாட்டின் மொத்த தேவையில் 20 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தும்.அதே போல் பல முறை சமைத்த தாவர எண்ணையை சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு வாலைவடித்தால்(distillation) கார்களில் பயன்படுத்தலாம் என அமெரிக்கர் ஒருவர் கண்டு பிடித்துள்ளர்.அவர் மக்டொனால்ட் உணவகங்களில் பயன்படுத்திய கழிவு எண்ணை இலவசமாக வாங்கியே தன் கார் ஓட்ட எரிப்பொருள் தயாரிபதாக கூறியுள்ளார்.

எதிர்காலத்தை கணக்கில் கொண்டு நாமும் விறைவாக மாற்று எரிப்பொருள் உற்பத்திக்கு மாற வேண்டும்.அதற்கேற்ற வாகனத்தயாரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

said...

அருமையான பதிவு.

said...

வவ்வால், வருகைக்கு நன்றி!

//தற்போது தான் விழித்து கொண்ட ரயில்வே துறை 10 சதம் ஆமணக்கு எண்ணைக் கலந்து ரயில்களை இயக்க முன்வந்துள்ளது.மேலும் காலியாக கிடக்கும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் ஆமணக்கு என லாலு பிரசாத் சொல்லியுள்ளார்.இன்னும் இந்த திட்டம் சரியாக நடைமுறைக்கு வரவில்லை.// இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ரயில்வேயின் எரிசக்தி தேவையை 40 சதவீத்துக்கு மேல் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று படித்திருக்கிறேன்!

//அதே போல் பல முறை சமைத்த தாவர எண்ணையை சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு வாலைவடித்தால்(distillation) கார்களில் பயன்படுத்தலாம் என அமெரிக்கர் ஒருவர் கண்டு பிடித்துள்ளர்.அவர் மக்டொனால்ட் உணவகங்களில் பயன்படுத்திய கழிவு எண்ணை இலவசமாக வாங்கியே தன் கார் ஓட்ட எரிப்பொருள் தயாரிபதாக கூறியுள்ளார்.// இதை பற்றிய சுட்டி கிடைத்தால் அனுப்பவம்!

said...

ம்.

நம்ம நெலமெல்லாம் ஆமணக்கு தோட்டமா
மாறிட்டா அப்புறம் சாப்பாட்டுக்கு vitamin
pillஆ, இல்ல புல்லா இல்ல பெட் ரோலா?

said...

தேசாந்திரி, வருகைக்கு நன்றி!

said...

அய்யா ஆதிரை, இருக்கிற நெலமெல்லாம் ஆமணக்கு தோட்டமாக்க வேணாம்! ஆனா நம்ம சாப்பிட்டு தூர போடற சக்கை, ஏன் நம்ம கழிவு போதும்னு சொல்றாங்க! பெட் ரோலாவறதுக்கு-;)

said...

சார்,


மிகவும் உபயோகமான பதிவு!!

மிக்க நன்றி!

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்,

மிகவும் உபயோகமுள்ள பதிவு.

வாகனத்திர்கு தேவைப்படும் எறிபொருள் ஆராய்ச்சி போலவே சாமயலுக்கும் தேவைப்படும் எறிபொருள் ஆராய்ச்சி இந்தியாவில் நடக்கிறதா? ஒரு காஸ் சிலின்டரின் விலை ரு.300/- தாண்டி விட்டது என கேள்விப்பட்டேன்!.

நன்றி,
நரியா

said...

சமயலுக்கு எரிவாயும் மாட்டு சாணத்திலிருந்தும் மற்றும் மக்கிய தாவரங்களை கொண்டும் தயாரிக்கும் முறை தொடர்ந்து ஆராய்ச்சி செய்யபட்டு வருகிறது!

கச்சா எண்ணெய் மற்றும் எரி வாயு விலைகளின் தாக்கம் சமயல் எரிவாயுவில் தெரிகிறது!

said...

வெளிகண்ட நாதர்,

பிரேசலின் பொருளாதாரம் உயரக் காரணம் அவர்கள் பெட்ரோலிய இறக்குமதியை 70% குறைத்து விட்டார்கள். அதற்கு பதிலாக எத்தானால் அல்லது எரிசாராயம் (சரக்கு தாங்க) உபயோகிக்கிறார்கள்.

இந்த சரக்கடிக்கும் கார்களை செய்வது அமெரிக்காவின் பெரிய கார் உற்பத்தியாளார்கள் ஜி.எம் மற்றும் ஃபோர்ட்.

இதை ஏன் அமெரிக்காவில் செய்ய முடியாது என ஆண்டர்சன் கூப்பர் கூப்பாடுப் போட்டு சி என் என் ல் கேட்கிறார். புதர் கேட்பாரா?

அப்படி எத்தானலுக்கு மாறினால் நாமும் சர்க்கரை தொழிற்சாலை கருவியியலைக் கையில் எடுத்துக் கொண்டு நம்ம பொழப்பை நடத்த வேண்டியதுதான்.

said...

இந்தியாவில் எத்தனால் பயன்பாடு சோதனை முயற்சியில் இருக்கிறது.5% எத்தனால் கண்டிப்பாக கலக்க வேண்டும் என அரசு உத்தரவே இருக்கிறது.இதை 25% அல்லது 50% வரை உயர்த்தினால் அதன் பிறகு நமக்கு அன்னிய செலாவணி கணிசமாக மிச்சமாகும்.கரும்பு விலையும் உயர்ந்து விவசாயிகளும் சந்தோஷமாக இருப்பார்கள்.

வவ்வாலின் பின்னூட்டம் மிக அருமையாக இருந்தது.என் பாராட்டுக்கள்

said...

//அப்படி எத்தானலுக்கு மாறினால் நாமும் சர்க்கரை தொழிற்சாலை கருவியியலைக் கையில் எடுத்துக் கொண்டு நம்ம பொழப்பை நடத்த வேண்டியதுதான்.//நீங்க செய்ற உத்யோகம் எங்க வேணும்னாலும் சோறு போடும்! நாங்க எல்லாம் துபாய், அபுதாபி, குவைத்னு எண்ணெய் கம்பெனி பார்த்து வேலை தேடி போயிகிட்டு இருந்தப்ப, எங்களோட வேலை செஞ்ச ஒருத்தரு போனா துபாய் தானெ போவேன்னு அடம் புடிச்சு சுகர் ஃபேக்டரியில இன்ஸ்ட்ருமென்ட்ஸன் இஞ்சினியர் வேலே தேடி போனாரு ஒருத்தரு, அது ஞாபகம் வந்துச்சு, நீங்க போட்ட பின்னூட்டத்தை பார்த்துட்டு!

said...

//இந்தியாவில் எத்தனால் பயன்பாடு சோதனை முயற்சியில் இருக்கிறது.5% எத்தனால் கண்டிப்பாக கலக்க வேண்டும் என அரசு உத்தரவே இருக்கிறது.இதை 25% அல்லது 50% வரை உயர்த்தினால் அதன் பிறகு நமக்கு அன்னிய செலாவணி கணிசமாக மிச்சமாகும்.கரும்பு விலையும் உயர்ந்து விவசாயிகளும் சந்தோஷமாக இருப்பார்கள்// நானும் இதைத் தான் கேட்கிறேன், நம்ம ஊர்ல உற்பத்தி ஆகிற காருங்க எத்தனை சத்வீதம் எத்தானை எடுக்கும்? விவரம் தெரியுமா?

said...

மாற்று எரிபொருளைப் பற்றிய ஒரு நல்ல பதிவு வெளிகண்ட நாதர். உங்களுக்கே தெரியும் இந்தத் தலைப்பில் எழுத இன்னும் நிறைய இருக்கிறதென்று. இது சும்மா முன்னுரை மட்டும் தானே? :-)

said...

ஆமாம் குமரன், நிறைய விஷயங்கள் இன்னும் இருக்கிறது, அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். எண்ணெய் என்பது எதுவரை(1),(2) படித்துவிட்டீர்களா?

said...

இல்லை வெளிகண்டநாதர். எண்ணெய்ப் பதிவுகள் இனிமேல் தான் படிக்கவேண்டும்.

said...

ஆதிரை,

// நம்ம நெலமெல்லாம் ஆமணக்கு தோட்டமா
மாறிட்டா அப்புறம் சாப்பாட்டுக்கு vitamin
pillஆ, இல்ல புல்லா இல்ல பெட் ரோலா? //

நமது வானம் பார்த்த தரிசு நிலதை ஆமணக்குவுக்கு முழுமையாக உபயோகபடுத்தினாலே இந்தியா எண்ணையில் தன்னிறைவடைந்து விடும் என்பது என் கணிப்பு.

said...

அன்புடன்,
தரிசு நிலங்களை பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை.
bio fuel இந்தியாவின் தேவைகளுக்கு ஓரளவுதான்
பயன்படும்.

எத்தனால் உணவு பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும்
side effect சமீபத்தில் படித்த செய்தி. அமெரிக்காவில்
எத்தனால் தயாரிப்புக்கு சோளம் பயன்படுத்துவதால் சோளத்தின்
விலை 3 டாலரிலிருந்து 3.75 ஆக உயர்ந்துவிடது. இதனால்
இங்கு மாட்டுத் தீவனம் விலை உயர்ந்துவிட்டது. இதனால் பால்,
மாட்டுக்கறியின் விலையும் உயரும்.

இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாட்டில்
உணவு சப்ளை பாதிக்கப்படக்கூடாது.

said...

ஆதிரை, முதலில் அவர்கள் எத்தனால் எடுக்கும் தொழில்நுட்பம் அறிந்து கொள்ளுங்கள்! மக்கா சோளத்தை நேரடியாக உப்யோகிப்பதில்லை! அவர்கள் இந்த எத்தானாலுக்கு உபயோகிப்பது சக்கை!

இந்த மாற்று சக்தி தரும் தாவர பெட்ரோலால் உணவுக்கு பஞ்சம் வராது!

said...

எத்தனாலை பயன்படுத்த வாகனங்களில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டியதில்லை.

நம்நாட்டில் எத்தனால் உற்பத்திதான் குறைவாக உள்ளது. தற்போதைய அளவான 8 கோடி லிட்டரிலிருந்து 20 கோடி லிட்டராக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெட்ரோலில் கலக்கத் தேவைப்படுவது 60 கோடி லிட்டர்கள்.

பார்க்க: http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=128657

போற போக்கில, குடிமகன்கள் பாடு ஒரே திண்டாட்டம்தான்...

Jokes apart..., இது ஒரு குறுகிய காலத் தீர்வு என்றுதான் தோன்றுகிறது. "Fuel cell" எரிபொருள் வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கலாம்.

said...

Corn farmers smile as Ethanol prices rise, but experts
on food supplies worry

http://www.nytimes.com/2006/01/16/national/16ethanol.html?ex=1295067600&en=0c5651f7be5c13dd&ei=5090&partner=rssuserland&emc=rss


'cellulosic ethanol' ok. eppadiyum veenaga pogum paagangalai payanpaduthuvadhal prachinai irukadhendru ninaikiren.

said...

நல்ல பதிவுகள் நாதரே...

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் , விநோத் கோஸ்லா கூட எத்தனால் ஐ ப்ரமோட் செய்யறதா படிச்ச நியாபகம்.

நீங்க சொன்னமாதிரி பிரேசில் ரெம்ப முன்னோடியா இருக்கு.

ஆனா நாம இதப்பத்தி ரெம்ப நாள்க்கு முன்னாடியே.. கிட்டத்தட்ட 15 வருஷம் முன்னாடியே யோசிச்சுட்டொம் தெரியுமா... இல்லைன்னா "பாட்டி சொல்லைத் தட்டாதே" படம் பாருங்க :)

சுகா