Monday, May 08, 2006

பூ...பயமே பூதம், பேய், பிசாசு எல்லாம்- Paranormal Studies!!

இந்த சாமி, ஜோஸ்யம் மாதிரி, இன்னொரு சப்ஜெக்ட், பேய், பிசாசு, பூதம் எல்லாம். இதெல்லாம் இருக்கா, பேய் உண்டா, இல்லையான்னு ஏகப்பட்ட சர்ச்சை நடக்கிறதை பார்த்திருப்பீங்க.அது இந்த ஊருல ஒரு பெரிய சப்ஜெக்ட், அதை 'Paranormal Studies' ன்னு சொல்லி, அதைஆராயறத்துக்கும், அதில நிபுணர் ஆவறதுக்கும் இங்கே நிறைய காலேஜ்ங்க உண்டு. அப்புறம் டிஸ்கவரி, நேஷனல் ஜியிகரப்பி சேனல்ன்னு இந்த பேய் கதைகள் சொல்லி அதன் பின்னால் இருக்கும் சயின்ஸ் பத்தி விளக்கி வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்க பார்த்திருக்கீங்களா? அதில சில பேருக்கு நிறைய ஆர்வம் இருக்கும். இந்த மாதிரி இதில டிப்ளமா எல்லாம் வாங்கி என்ன வேலை செய்ய போறாங்கன்னு ஆச்சிரியமா இருக்கும். ஆனா இது எவ்வளவு பெரிய இண்டஸ்டரி தெரியுமா? சரி அதை பத்தி கொஞ்சம் பீராஞ்சி பார்ப்போமேன்னு தான் இந்த பதிவு. தையரியம் இல்லாத, கொஞ்சம் நெஞ்சுக்காரங்க, அதாவது திட மனசு இல்லாதவங்க மேற் கொண்டு படிக்க வேணாம், ஏன்னா கபர்ஸ்தான், சுடுகாடு, கிரீப்பு, புகைன்னு ஏகப்பட்ட ஆவி விஷயம் கீழே வரும்... பூ... பயமில்லாம கீழே படிக்க வாங்க!

இந்த பதிவு போட காரணத்தை சொல்லிடறேன், அது நேத்து ஹிந்தி படம் ஒன்னு, நம்ம ராம்கோபால் வர்மாவோடது, 'டர்னா சரூரி ஹே!' அப்படின்னு. இந்த படத்தோட தீம்மே, பேயாவது, பிசாசாவது எல்லாம் மனுசனுக்கு உண்டாகிற பயம் பீதி, அது தான் காரணம். அந்த சூழ்நிலைகளில், பயந்து போய், திட மனசில்லாம செத்து போற சம்பவங்கள் இருக்கு. அதை வச்சு கதை கட்டி இங்க பேய் பிசாசு உலாத்துதுன்னு கதை கட்டி விடுவாங்க. இந்த கதை கட்டி விடற சம்பங்கள் நிறைய காரணத்துக்காக இருக்கும். இந்த சந்திரமுகி படத்தில வர்ற பங்களா மாதிரி பேய் பங்களா, ஏன்னா அப்படி போட்டு உட்டா, அதன் மதிப்பு கொறஞ்சு அடிமாட்டு விலைக்கு விக்கதான்! அதே மாதிரி ஏதாவது மறைச்சு வச்சு அந்த இடங்களுக்கு ஆளு நடமாட்டம் இருக்க கூடாதுன்னு, பேய், பிசாசு கதை கட்டி விட்டு ஆளுங்கள வரவிடாம பண்றது. அந்த காலத்தில சிவாஜி நடிச்ச நீதின்னு ஒரு படத்தில நம்ம முதல்வரு செயலலிதாம்மா, தான் சம்பாரிக்கிறதை ஒரு ஆலமரத்துக்கடியிலே புதச்சு வச்சு அங்க பேயிருக்குன்னு கதை கட்டி விட்டு, அப்புறம் சிவாஜி ராத்தியில தனி ஆளா போயி மரத்தை வெட்டிசாய்ச்சு புடுவாரு, அப்புறம் செயலலிதாவையும் கையும் களவுமா புடிச்சு புடுவாரு! ஆக எல்லாமே அந்த திடமான பயமில்லாம அந்தந்த சூழ்நிலையை கையாண்டமனா பேயாவது, பிசாசாவது! அதை வலியுறுத்தி சின்ன சின்ன கதைகளின் தொகுப்பா இந்த ஹிந்திபடம் நல்லா வந்திருக்கு, சமயத்தில சீட்டு நுனிக்கு போவேண்டிருந்தது!, எல்லாமே பயம்! ஒன்னுமில்லை! இதை பத்தி ஒரு பட்டி மன்றம் மாதிரி விவாதம் இந்த சுட்டீயில 'பட்டிமன்றம் - பேய் இருக்கிறதா? இல்லையா?', போய் பாருங்க வேணும்னா!

நம்ம ஊர்ல மந்திரம், தாந்தீரீகம், பில்லி, சூன்யம்னா, ஏழுகாத தூரம் ஓடி பயம் உண்டாகிற ஒன்னு. ஆனா இங்கே அது ஒரு பெரிய ரிசர்ச் சப்ஜெக்ட், அப்படி படிக்கிறவங்களுக்கு 'Paranormal Investigator Certification' கிடைக்கும். இதில ஆராய்ச்சி பண்றதெல்லாம், பேய் தென்படும் இடங்கள், ஆத்மா பத்தி, விநோத சப்தங்கள் எழுப்பி ஓடித்திரியும் பேய்கள் பற்றியும், அது மாதிரி பேச்சு, சிரிப்பு சப்தங்கள், புகைப்பட ஆதாரங்கள் எல்லாம். இந்த ஆராய்ச்சிக்குன்னு 'sophisticated electronic ghost hunting device' எல்லாம் இருக்குன்னா பார்த்துக்கங்களேன்! இது எல்லாமே சொல்லி தந்து ஆதாரங்களோட பேய் புடிக்க உதவுவாங்களாம்! எப்படின்னு கேளுங்க! அதாவது பேய்கள் எழுப்பும் சஞ்சாரங்களை அப்படியே புடிச்சு ரிக்கார்டு பண்ண ஒரு 'electronic EMF meter' இருக்காம்! அது மாதிரி வெறிச்சோடி கிடக்கிற ஆஸ்பத்திரி, பங்களா, லைட் ஹவுஸ் அப்படின்னு எங்கெல்லாம் பேய் உலாவுதோ அங்க எல்லாம் அதுக எழுப்பற சப்தம் சமிக்ஞைகள் எல்லாம் கேட்டு பேய் இருக்கிறதை ஊர்ஜிதம் செய்வாங்களாம். அதாவது இந்த மாதிரி புரளிகிளிப்பிவுட்டு நான் மேலே சொன்ன மாதிரி நிறைய சொத்துகள் மதிப்பு குறைஞ்சா, இந்த மாதிரி சர்டிபிகேட் வாங்கனவங்கள உபயோகிச்சு, ஆதாரங்களோட பேய் உண்டா இல்லையான்னு கண்டுபிடிச்சு, அதன் மதிப்புகளை கணக்கிடத்தானாம். நம்ம ஊர்ல மந்திரிச்சு உடறது, தண்ணி தெளிச்சுவுடுறதுன்னு கேள்விப்ப்ட்டிருக்கீங்களா, பேய் வீட்டை விட்டு ஓடறதுக்கு! அந்த கதையா இருக்கு! என்ன சொல்றீங்கீங்க. இதில அனுபவம் இருக்கிறவங்க யாராவது சொல்லுங்களேன்!

அடுத்து இன்னொரு விஷயம் இந்த Unidentified Flying Object(UFO) பத்தினது! நம்ம ஊர்ல இதபத்தி அவ்வளவா பேசி கேள்விபட்டதில்லை. இங்கே, அதை பத்தி பெரிய ஆராய்ச்சி, அதுக்குன்னு 'UFO Investigator Certification'ன்னு கோர்ஸே இருக்கு தெரியுமா? இது அந்த வேத்து கிரக ஆளுங்க ஓட்டிக்கிட்டு வர விமானம்(alien spacecraft) வந்து பூமியில இறங்கிறதாகவும், அது சில பேருக்கு கண்ணுல தெரிஞ்சதாகவும், அது என்னான்னு நிறைய ஆராய்ச்சி. இங்கே 'Los Vegas'போறவங்க, பக்கத்தில அந்த மாதிரி UFO வந்து போன இடங்கள்ன்னு பார்க்க போயிருந்தாலும் போயிருப்பீங்க! அது வந்திறங்கி அதிலருந்து வேத்து கிரக ஆளுங்க வந்து ஆடு மாடுன்னு கால்நடைகளை கொன்னுபோட்டுட்டு போனதாவும் அதை கண்டுபிடிக்க, இந்த படிப்பு படிச்சவங்களை அமர்த்தி, அது என்னான்னு கண்டுபிடிக்கிறாங்களாம். நம்ம நாட்ல, நம்ம ஊர்ல வந்தெறங்க மாட்டேங்கிறாங்க இந்த வேத்து கிரகத்தாளுங்க! அப்படி ஏதும் நம்மாளுங்களுக்கு யாருக்கும் உறவு முறை இருந்தா கொஞ்சம் சொல்லுங்க! இதவச்சு ஹிந்தியிலே படம் வந்துச்சு பார்த்தீங்களா, 'கொயி மில்கையான்னு', இப்ப அதோட சீக்குவல்னு 'கிரிஷ்'ன்னு ஒரு படம் வரப்போவது, அதே ராகேஷ் ரோஷன், ரித்திக் ரோஷன் கோஷ்டி தான் படம் எடுத்திருக்கு! எல்லாம் இந்த வேத்துகிரகம் சூப்பர்மேன் கதை தான், வந்தா பார்ப்போம்!

அடுத்து நம்ம ஆடுபுலி ஆட்டமாதிரி, கட்டம் கட்டி ஆவிங்களை வரவழைக்கிறது தெரியுமா, அதுக்கு ஒரு தனி கோர்ஸ், 'Parapsychologist Certification', இதில்ல படிக்கிறது இயற்கைக்கு ஒவ்வாத அனுபவங்கள், மனதுக்கு புலப்படாத எண்ணங்கள், டெலிபதி, போன ஜென்ம ஞாபகங்கள், சாகும் தருவாயில் வரப்போகும் அனுபங்கள் (Near Death experiences), அடிமனதில் கேட்கும் பேச்சுக்கள், கண்ணுக்கு புலப்படாத பொருட்களை, மனிதர்களை, நிகழ்ச்சிகளை பார்ப்பது, பேசுவது, ஆவிகளை வரவழைத்து பேசுவது இப்படின்னு ஏகப்பட்டது. சித்த பிரம்மை, மரகழண்டவுங்க, பேய்பிடிச்சவங்களுக்குன்னு, இந்த முறையில, அதாவது சைக்கோ ட்ரீட்மெண்ட் மாதிரி. இதில படிச்சு இந்த உத்தியோகம் போகத்தான்! பார்த்தீங்களா, நம்ம ஊரு ஏர்வாடி கணக்கா, இங்கேயும் இந்த மாதிரி மேற்கத்திய மருத்துவம், அதுக்குண்டான கோர்ஸ்கள். நம்ம சித்தர்கள், அப்ப காட்ல உட்கார்ந்து ஆராஞ்சு செஞ்ச விஷயங்கள், பேய் ஓட்றது எல்லாம் நவீன முறையில் படிச்சு அதை எப்படி செய்றாங்கன்னு பார்த்தீங்களா!

இந்த பேய் படம் பார்த்துட்டு வந்த வினை, இது எல்லாம் என்னான்னு ஆராய போயி இந்த மாதிரி இங்க இருக்குன்னு விவரம் தெரிஞ்சது. அப்ப அப்ப சில சமயம் டிவி சேனல்ல இந்த ஒடி ஒளிஞ்ச மிருகங்கள், காட்டோரமா இருக்கிற வீட்டு பகுதிகள்ல, இதை 'bigfoot' சொல்வாங்க, அதை பத்தி படிச்சு பட்டம் வாங்கனும்னா, அதுக்கு'Cryptozoology Certification' பேரு. அதாவது அதிக மனித நடமாட்டம் இல்லாத உலக பகுதிகள்ல இந்த மாதிரி வினோத மிருகங்களின் நடமாட்டங்கள் இருந்ததாகவும், அதனால வந்த ஆராய்ச்சி தான் இதுன்னு சொல்றாங்க. இது இந்த கனடா நாட்டில, அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகள்ல அடிக்கடி நடக்கிற விஷயம். நம்ம ஊர்லயும் இமயமலை அடிவாரத்தில இந்த மாதிரி ஓடி ஒளியும் மிருகங்கள் நிறைய இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன். ஆனா என்ன, இந்த ஊர்ல இருக்கிற அளவுக்கு அதை பத்தி ஆராய்ச்சி நடக்குமான்னு, அது இல்லைன்னு தான் தெரியும்! இங்கே அந்த மிருகங்கள் தடத்தை மோல்ட் செஞ்சு அளவெடுத்து, அப்புறம் உருவம் எல்லாம் பத்தி கணக்கெடுத்து ஆராய்ச்சிகள், நான் நிறைய இந்த டிஸ்கவரி சேனல்ல பார்த்திருக்கேன்!

கடைசியில இந்த Paranormal நம்பிக்கை, அதான் பேய், பிசாசான்னு அதன் மேல் இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அதிகமா டிவி பார்க்கிறதாலே வரதுன்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. நம்ம ஊர்லயும் வெள்ளக்குதிரை, விடாது கறுப்பு, மர்மதேசம் மாதிரி சீரியல் பார்க்கிறதாலே கூட அதன் மீது நம்பிக்கை நிறைய வளரலாம்! இந்த ஊர்லயும் 'The X-Files', 'Touched By an Angel and Unsolved Mysteries' ங்கிற மாதிரி டிவி புரோகிராம் தான் காரணம்னு சொல்றாங்க!அதிலயும் இந்த நம்பிக்கை அதிகம் வக்கிறவங்க நம்ம பெண்கள் தானாம். அதுவும் கல்வி வீச்சு எங்கே அதிகம் இல்லையோ அங்கெல்லாம் இந்த பேய் பயம் உண்டாம், அப்புறம் முக்காவாசி பேருக்கு நம்பிக்கை அடுத்தவங்க மனசை இந்த டெலிபதி, கட்டம் போட்டு பேசறதாலே படிச்சிடலாம்னு நம்பிக்கையாம். 45 சதவீதத்துக்கு மேல இந்த வேத்து கிரக ஆளுங்க அப்புறம் அந்த UFO மேல் நம்பிக்கை இருக்காம். எப்பாடி, இப்படின்னா, இந்த கோர்ஸ் எல்லாம் படிச்சா நல்லா சம்பார்த்தியம் பண்ணலாம் போல! ம்.. கடைசியா ஆம்பிள்ள பேயை பேய்ன்னும், பொம்பள்ள பேய்யை பிசாசுன்னு சொல்வாங்களாமே, உண்மையா? அதான் காதல்பிசாசுன்னு பாட்டு போட்டாங்களா!

25 comments:

said...

வேப்ப மர உச்சியில் நின்னு
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க - அந்த
வேலையற்ற வீணர்களின்
முளையற்ற வார்த்தைகளை
வேடிக்கை யாகக் கூட
நம்பி விடாதே

said...

ஹிந்திப் படங்களோட பெயரை எல்லாம் தப்புத் தப்பாக எழுதி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்." Darna Jaruri hai" என்றும் " Khoyi mil gaya" என்றும் உச்சரிக்கப்படவேண்டும். நீங்கள் டர்னா சரூரி ஹெ என்றும் கொயி மில்கையா என்றும் எழுதுகிறீர்கள். மற்றபடி இந்தப் பின்னூட்டம் ஒரு ஆவியுடையது. நீங்கள் பார்த்த படங்களின் ஆவி.

said...

பட்டிமன்ற சுட்டி சரியாக வேலை செய்யாததால், அதன் தொகுப்பு, கீழே!

முத்தமிழ் மன்றம்

பட்டிமன்றம் - பேய் இருக்கிறதா? இல்லையா?

--------------------------------------------------------------------------------
சின்னமருது - அக் 24, 2005 - 10:52 PM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
அன்பர்களே,

ஒருசிலர் என்னிடம் சொல்ல நான் கேள்விப் பட்டதுண்டு. நள்ளிரவு 1 மணிக்கு எங்கள் கதவைப் பிறாண்டியது பேய் என்பார்கள். அல்லது பனைமரம் உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்தது கொள்ளிவாய்ப் பிசாசென்பர். நேற்று இந்த வழியா கருப்பா ஒரு உருவம் போக நம்ம எல்லை காத்தான் சாமி வெள்ளைக் குதிரையேறி ஜல்ஜல்லென்று ஒலியுடன் அதனை விறட்டிச் சென்றதை என் ரெண்டு கண்ணால பார்த்தேன் என்பார்கள்.

பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு; இரவில் அதுவும் பேசாதே, காரணம் பேய் இரவில் ஒட்டுக் கேட்கும் என்று பயமுறுத்தி இருக்கின்றனர் என்னை. இறைச்சி, கோழி போன்று அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டு நடுமதியம் யாருமில்லாத இடங்களுக்கு தனியா செல்லாதே! காத்து கருப்பு அடிக்கும் என்பார்கள். அதற்காக அடுப்புக்கரி, வேப்பிலை, எலுமிச்சை போன்ற ஐட்டங்களை அந்த பையினுள் போட்டுக் கொடுத்து அனுப்புவார்கள்.

இருக்கு என்பவர்களுக்கு இருக்கிறது. இல்லை என்பவர்களுக்கு இல்லை. எனவே உங்கள் மனதில் நினைப்பவற்றை தாராளமாக எழுதுங்களேன்.
--------------------------------------------------------------------------------
pradeepkt - அக் 25, 2005 - 12:00 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
சிறு வயதில் நாம் எல்லாரையுமே இப்படி பயப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சில சமயம் குழந்தைகள் எங்காவது போகக்கூடாது அல்லது ஏதாவது செய்யக் கூடாது என்றால் இந்தப் பேயை வைத்துப் பயமுறுத்துவார்கள்.
என் கல்லூரி விடுதிகளில் சில பல தற்கொலைகள் (?!) அவ்வப்போது நடந்ததுண்டு. அப்போதெல்லாம் பயந்த பயல்கள் அடுத்த ஓரிரண்டு மாதங்களுக்குத் தனியாக வராண்டாவுக்கு வருவதையே தவிர்ப்பார்கள். இறந்தவன் வந்து கொடுத்த கடனையும் நோட்ஸ்களையும் கேட்டதாகச் சொல்வார்கள். ராத்திரி கெட்ட வார்த்தையில் திட்டுவதாகச் சொல்வார்கள். அதே நேரம் காஷ்மீர் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இவற்றையெல்லாம் நம்பாமல் அவன் வந்தால் பம்ஸில் நாலு மிதி பாக்கி இருக்கிறது என்று சொல்லித் திரிவார்கள். இன்னும் பேய்களுடன் எனக்கு நேரடி அனுபவம் இல்லை.

பேய் என்று ஒன்று இருந்தால் ஆண்டவன் ஒருவன் நம்மை அதனிடமிருந்து காக்க இருக்கின்றான் அல்லவா?

எனவே இருக்கு என்பாருக்கு இருக்கு, இல்லை என்பாருக்கு இல்லை.
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 25, 2005 - 02:11 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
என்னுடைய வாக்கு பேய் இருக்கிறது.
--------------------------------------------------------------------------------
pradeepkt - அக் 25, 2005 - 02:22 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
சரி அப்ப எங்க இருக்கு, எப்படி இருக்கு...
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 25, 2005 - 02:24 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
pradeepkt எழுதியது:
சரி அப்ப எங்க இருக்கு, எப்படி இருக்கு...

ஏன் தம்பி, உங்களுக்கு இத்தனை ஆர்வம்?

கூட்டணி அமைக்க போறீங்களா?
--------------------------------------------------------------------------------
muthukumaran - அக் 25, 2005 - 03:33 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
பேய் இருக்கா இல்லையான்னு எங்கள மாதிரி சின்னப்பசங்ககிட்ட கேட்டா எப்படி? கல்யாணம் ஆனவங்கதான் சொல்லணும்
--------------------------------------------------------------------------------
சின்னமருது - அக் 25, 2005 - 05:04 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
இந்த பேய்ச் சமாச்சாரத்தினைப் பற்றி மிகவும் விரிவாக அலசவேண்டும். அதற்குமுன் பேயின் திருவிளையாடல்கள் மற்றும் படங்களை இங்கே படித்துப் பாருங்கள்.

Code:
http://www.sfogs.com

--------------------------------------------------------------------------------
gragavan - அக் 25, 2005 - 05:04 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
muthukumaran எழுதியது:
பேய் இருக்கா இல்லையான்னு எங்கள மாதிரி சின்னப்பசங்ககிட்ட கேட்டா எப்படி? கல்யாணம் ஆனவங்கதான் சொல்லணும்
அதாவது நம்ம வாலாட்டிச் சித்தர் என்ன சொல்றார்னா...மனைவியிடம் பேய் கண்டார் பேயே கண்டார். தாய் கண்டார் தாயே கண்டார்.

(சும்மா காமெடிக்குச் சொன்னதுங்க. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க)
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 25, 2005 - 06:30 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
சின்னமருது எழுதியது:
இந்த பேய்ச் சமாச்சாரத்தினைப் பற்றி மிகவும் விரிவாக அலசவேண்டும். அதற்குமுன் பேயின் திருவிளளயாடல்கள் மற்றும் படங்களை இங்கே படித்துப் பாருங்கள்.

Code:
http://www.sfogs.com

ஆமாம், இங்கே பேய் சம்சாரத்தை பேசக்கூடாது ஆமாம்.
--------------------------------------------------------------------------------
திருநிலவன் - அக் 25, 2005 - 09:17 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
வேப்பமர உச்சியில் நின்னு
பேயோன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலயற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பிவிடதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடதே - நீ
வெம்பி விடதே!.

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை பின்பற்றலாம்...

அல்லது

கடவுள் என்று ஒன்று இருக்கும் போது, தீய சக்தி ஒன்னு இருக்கும், நம் மூதாதாயர்கள் என்ன முட்டாளா எவ்வளவு கண்டு பிடித்தவர்கள் ஏண் இதை பற்றி சொல்லி இருக்கிறார்கள், அப்படியானால் இருக்கு என்று தானே அர்த்தம் என்றும் கூரலாம்.

ஆனால் என்னை பொருத்தவரை இயற்கை என்னும் மாபெரும் சக்தி ஒன்று உள்ளது, அதன் நல்விளைவு கடவுளாகவும், எதிர் விளைவு பேயாகவும்( தீய சக்தி) தோன்றுகிறது. இந்த வயதில் இது தான் தோன்றுகிறது, இன்னும் வயதாக வயதாக அந்த இரு விளைவுகளை பற்றி சிந்திக்களாம்.

அண்ணா பேய் என்று தலைப்பு வைத்துள்ளீர்கள், பேய் தனியாக இருக்காது அது பிசாசு கூடத்தான் இருக்கும்.
பேய் --- ஆண் பால்
பிசாசு --- பெண் பால்...
காதல் பிசாசு( ரன் படத்தில்) என்ற பாட்டின் வருகயின் போது நாளேடில் படித்தேன்.

திருநிலவன்
பட்டுக்கோட்டை
--------------------------------------------------------------------------------
gragavan - அக் 25, 2005 - 09:49 AM
Post subject: பேய் இருக்கிறதா? இல்லையா?
--------------------------------------------------------------------------------
அருமையாகச் சொன்னீர்கள் திருநிலவன். அருமை.....அருமை...........
--------------------------------------------------------------------------------
raaj - அக் 25, 2005 - 05:10 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
இனிய மருது, பேய் என்பது ஒன்றுமில்லை,சிலர் சில காரணங்களுக்காக சொல்லிவைத்திருக்கலாம். அதேநேரம்,சிவபெருமானின் கதைகளைப் படித்தால் பேய் பூதம், என்பது வருகிறது. இருந்தாலும் நவீன காலத்திற்க்கேற்ப விஞ்ஞான ரீதியில் எந்தவிதத்தில் சிந்திதுப்பார்தாலும் அது உண்மை என்பதுக்கு ஆதாரமில்லை. யாரும் பார்த்ததுமில்லை,மனபிரமையாக அல்லது சிலரின் சுய லாபத்திற்காக சொல்லியிருக்கலாம்.பழங்காலத்தில் மின் விளக்குகள் அதிகம் இல்லை,படித்தவர்களும் குறைவு எனவே அது நம்பப்பட்டிருக்கலாம்.
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 26, 2005 - 01:43 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
திருநிலவன் சொன்னது மிகச் சரியே!

நமக்கு தெரியாத விசயங்கள் எவ்வளவோ இருக்குது, அதில் ஒன்று பேய் சமாச்சாரங்கள்.
--------------------------------------------------------------------------------
முத்தமிழ் - அக் 26, 2005 - 03:13 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
திருநிலவன் அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். மனிதனை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகத்தில் உண்டு. அதன் பெயர் இறைவன். இறைவழிபாடு இவ்வாறாகத்தான் வந்தது. உலகில் நல்லதை மனிதன் செய்யும்போது பாராட்டுவார்கள் பலர். தெய்வம் நமக்குக் காவல் இருக்கிறது என்று சொல்லி நம் மனதில் நம்பிக்கையை வளர்த்தார்கள். அதனால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் அதே மனிதன் தவறுகள் செய்ய முற்பட்டபோது அவனை மிரட்ட அல்லது பயங்கொள்ளச் செய்ய ஒரு சக்தி இருப்பதாக உருவகப் படுத்தி கதை கூறினார்கள். அப்படி ஏற்பட்டவைதான் பேய்கள். தவறு செய்த மனிதன் மட்டுமல்ல பலரும் பேய் என்றாலே பயங்கொள்ளச் செய்தனர். அதன்பின் இரவில் அல்லது தனியாக நடக்கப் பயப்பட்டனர். அதனையே நினைத்துக் கொண்டு தூங்கியதால் நம் எண்ண அலைகளால் உந்தப்பட்டு கனவிலும் பேய்கள் வந்து அவர்களைப் பயமுறுத்தின.

மற்றபடி பகலில் நடக்கும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. இரவில் நடக்கும் குற்றங்கள் இந்த பேய்களால் ஓரளவு குறைந்தன என்று சொன்னால் அது உண்மை.

இதே பேய்க்கதைகளை தவறுகள் செய்யும் குழந்தைகளிடமும் சொல்லி மிரட்டி அடக்கி வைத்தனர். அதன்பிறகுதான் திருநிலவன் சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் பாட்டெழுதினார். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.
--------------------------------------------------------------------------------
gragavan - அக் 26, 2005 - 06:20 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
சிவபெருமான் கதையில் வரும் பேய்கள் நல்ல பேய்களாக இருக்கும். அதாவது அது இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்று சொல்ல வந்த கருத்து. கந்தரநுபூதியிலும் இறைவன் தன்னை வணங்காததால் ஒருவரைத் தண்டிக்க மாட்டான் என்று சொல்லும் கருத்துகளும் உண்டு.
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 26, 2005 - 07:09 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
அந்த காலத்தில் முருங்கை மரம், புளியமரத்தில் பேய் இருந்தது என்று சொல்லக் காரணங்கள் உண்டு.

மேலும் சிறுவர்கள் அதன் மேலே ஏறவே, கீழே நிற்கவோக் கூடாது என்பதற்காக பெரியவர்கள் அவ்வாறு சொன்னார்கள்.

பொதுவாக முருங்கை மரமானது பலவீனமானது அதன் மீது ஏறினால் கிளை முறிந்து விழுந்துவிடக்கூடும், மேலும் அதில் கம்பளிபூச்சிகள் இருக்கும்.

புளியமரமானது அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைட் வெளியிடுமாம், அது உடலுக்கு கேடு, அதனாலேயே புளியமரத்தில் கீழே படுக்ககூடாது, விளையாடக்கூடாது என்பார்கள்.

பெரியவர்கள் சொன்னது குழந்தைகளை நல்லவழியில் செல்லத் தான், மேலும் வீரத்தை கதைகளின் வழியாக ஊட்டினார்கள்.
--------------------------------------------------------------------------------
ENNAR - அக் 26, 2005 - 11:16 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
50 வயதில் இறக்கவேண்டியவர்கள் 25 வயதில் இறந்துவிட்டால் மீதமுள்ள 25 ஆண்டுகள் வரை அவர்களது ஆவி இங்குதான் சுற்றிவரும் இப்படி பலர் கூறியதுண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் கூட ஆப்ரஹாம் லிங்கன் ஆவியிருந்ததாக எங்கோ எப்போவோ படித்த ஞாபம்
--------------------------------------------------------------------------------
சின்னமருது - அக் 26, 2005 - 11:11 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
வேறு யாரும் வெள்ளை மாளிகைக்குப் போகக்கூடாது என்றெண்ணி ஆபிரகாம் கட்சிக் காரர்கள் கொழுத்திப் போட்ட வெடிகுண்டாக இருக்கலாம். பேய் இருக்கிறது என்ற கூற்றெல்லாம் பொய்!
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 27, 2005 - 01:42 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
சமீபத்தில் கூட குவைத் சிறைச்சாலையில் பணி புரியும் பெண்கள், இரவு நேரங்களில் பேய் தொந்தரவு இருக்கிறது என்று சொல்லி, வேலை செய்ய மாட்டோம் என்று போராட்டம் நடத்தினார்கள். அது பற்றிய விசாரணை நடக்கிறது, முடிவு என்னாச்சு என்பதை பார்த்து சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------
திருநிலவன் - அக் 27, 2005 - 04:48 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
என்னார் அவர்கள் கூரியது போல் நிறைய கதைகள் கேட்டுள்ளேன், குறைந்த வயதில், செயற்கையாக( தற்கொலை, கொலை) இறந்தவர்கள் இங்கையே அலைவார்கள் என்றும் கேள்விபட்டுள்ளேன்,
இது போன்றவைகள் சமூக விரோதிகள் பயபடுத்தி இருக்கவேண்டும்....

திருநிலவன்
பட்டுக்கோட்டை.
--------------------------------------------------------------------------------
raaj - அக் 27, 2005 - 03:23 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
இனிய திருநிலவன்,பேய் என்பதை சிலர் பார்த்ததாகவும் , அதனை கண்டுபயந்ததாகவும் சொல்வது,மனபிரமை. ஆனால் தீய சக்தியென்பது நாம் செய்யும் செயல்களே தவிர அதற்கு உருவம் கிடையாது. துர் பழக்கவழக்கங்கள் தான் தீய சக்தி. அப்படி பார்த்தால் இறையென்பதும் அப்படிதானா? என்றகேள்வி தொடங்கும். அதுவும் ஒரு உணர்வு தான். என்றாலும் பேய் என்பது கற்பனையே. குழம்ப தேவையில்லை.
--------------------------------------------------------------------------------
araja - அக் 27, 2005 - 06:08 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு !

இது தான் எனது முதல் பதிவு. இந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது, அதனாலேயே இந்த தளத்தில் பதிந்து கொண்டேன். பேய் என்பதைப் பற்றி பல மதங்கள் பலவற்றை சொல்லியிருந்தாலும் நான் சார்ந்துள்ள இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை உங்கள் அனைவருக்கும் விளக்க கீழ்காணும் முகவரியில் உள்ள உரை உதவும் என்று நம்புகிறேன்.

http://www.angelfire.com/tv2/read24/

அன்புடன்
ராஜா
--------------------------------------------------------------------------------
சின்னமருது - அக் 27, 2005 - 11:17 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய ராஜ,

உங்களின் வரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு. தாங்கள் கொடுத்த இணைப்பின் மூலம் பலவற்றினை மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. எங்களுக்கு இந்த இணைப்பினை வழங்கிய தங்களுக்கு என் சிறப்பு நன்றி. தங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் மேலும் சொல்லுங்களேன். அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------
ENNAR - அக் 28, 2005 - 09:17 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
நன்றாக உள்ளது திரு.ராஜா
--------------------------------------------------------------------------------
பரஞ்சோதி - அக் 29, 2005 - 01:43 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
மன்றம் வந்த ராஜாவை வருக வருக என்று வரவேற்கிறேன்.
--------------------------------------------------------------------------------
Nanban - அக் 29, 2005 - 03:28 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
பேய் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்பதை விட, அது என் முன்னே வராது என்பது தான் உண்மை.

எல்லோரையும் போல இளம் வயதில் சில கற்பனைகளால் பேயை நினைத்து பயந்தது உண்டு. னால், அறிவு தெளிவு பெற்ற வயதில் - பேயைக் காண வல் கொண்டு அதைப் பற்றிய விளக்கத்திற்காக பல புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். னால் எவையுமே தெளிவாகப் பேயைப் பற்றிய தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை. மனதில் பயம் உள்ள மனிதர்களால் மட்டுமே பேயைக் காண முடியும்.

னால் இறைவனின் இருப்பையே கேள்விக்குறியதாக க்கி வினாக்கள் எழுப்பும் அளவிற்குத் தெளிவுபட்ட பின் பேயைப் பற்றி பேசுவது நகைப்புக்குள்ளாக்கிறது.

ஒரு முறை என் பையன் என்னிடம் கேட்டான் - ‘அப்பா பேய் உண்டா? பார்த்திருக்கிறீர்களா?’

என்னை முந்திக் கொண்டு அருகிலிருந்த மனைவி சொன்னாள் ‘பேய் என்ற ஒன்று இருந்தாலும் அப்பாவைக் கண்டு பயந்து அதெல்லாம் ஒளிஞ்சுக்கும்டா’

காரணம் - நேரம் காலம் தெரியாம இரவில் வருவது தான். கிட்டத்தட்ட அனைத்து நேரத்திலும் பயணித்திருக்கிறேன். ஒருநாள் இரவு 12 என்றால் வேறொரு நாள் அதிகாலை 2 அல்லது 3 மணி என்று. முன்னே எல்லாம் ஸ்கூட்டர் என்பதால் கொஞ்சம் பயம் இருக்கும் - பேய்க்கு அல்ல. விரட்டி வரும் தெரு நாய்களுக்கு. சில சமயம் கண் மண் தெரியாம விரட்ட வேண்டியதிருக்கும். னால் கார் வாங்கிய பின்னே அந்தப் பயம் கூட போய்விட்டது. அதே போல பயணிக்கும் சாலைகள் கூட அசாதரணமானவை. ம் - இருபக்கமும் இடுகாடுகள். நடுவே பாதை. மைசூர் சர்க்கிளைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் வலது பக்கம் ஒரு சாலை திரும்பும். அதிலே போனால் ர்பிசி லே அவுட் வந்து விடும். அந்த சாலையில் வலது பக்கம் முஸ்லிமகளது அடக்கஸ்தலம். இடது பக்கம் இந்துக்களுடையது. நடுவே சாலை. என்றைக்குமே பயந்தது கிடையாது.

சில சமயங்களில் தோன்றும் பயம் கூட - வழிப்பறி கொள்ளை காரர்களுக்குத் தானே தவிர வேறு யாருக்கும் அல்ல.
--------------------------------------------------------------------------------
araja - அக் 29, 2005 - 08:42 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
அன்பிற்கினிய நண்பர்களின் வரவேற்பில் மகிழ்ந்தேன். மிகுந்த நன்றி !

பேய் இல்லை என்ற கருத்தை விளக்க நான் அனுப்பிய வலைதளம் பயன்பட்டிருக்குமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

என்னை பற்றிய அறிமுகம் :

கணிணித் துறையில் பொறியாளராக அமெரிக்காவில் பணியாற்றுகிறேன். மனைவி, ஒரு மகன் என்று குடும்பம்.

தமிழ் தொடர்பான நிகழ்வுகள், செய்திகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு.

அன்புடன்
ராஜா
--------------------------------------------------------------------------------
sivastar - அக் 30, 2005 - 05:38 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
பேய் இருப்பது உண்மைதான் நண்பர்களே????
யாரெல்லாம் பேய் பார்த்தேன் என்று சொல்கிறார்களோ அவர்களெல்லாம் ராட்சஷ கணத்தில் பிறந்தவர்கள். அவர்க. அவர்களுக்கு மட்டுமே பேய்களை நேரில் காணும் பொன்னான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பேய் என்பது எல்லாம் கட்டுக்கதை (சரி அப்ப எங்க இருக்கு, எப்படி இருக்கு...) என்று சொல்பவர்களெல்லாம் தேவ கணத்தில் பிறந்தவர்கள். அவர்களுக்கு பேய்களை காணும் அரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவேதான் அவர்கள் பேய் இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஒரு பாதி மக்கள் பேய் இருக்கிறது என்பதற்கும் மற்றொரு பாதி மக்கள் பேய் இல்லை என்பதற்கும் இதுதான் காரணம்.
இதுவே என் இறுதி தீர்ப்பு.........

மலேசியாவிலிருந்து
சிவகுமார் சுப்புராமன்
--------------------------------------------------------------------------------
திருநிலவன் - அக் 30, 2005 - 08:25 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
ராட்சஷ கணணம், தேவ கணம், கொஞ்சம் விளக்குங்கள் அண்ணா...........
--------------------------------------------------------------------------------
சின்னமருது - நவ 08, 2005 - 08:28 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
மலேசியாவில் பேயை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு ஒரு பெரிய கும்பலே உலவுகிறது. பேய் ஓட்டுகிறேன், பில்லி சூன்யம் எடுக்கிறேன், மலையாள மாந்திரீகம், பட்டுநூல்காரர், இந்தோனேசிய பாபா என புரூடாவெல்லாம் விடுவார்கள். சாதாரணமாக நாம் எடுக்கும் புகைப்படங்களில் பின்புறம் வரும் வெள்ளை நிறத்தினைக்கூட பேய் என்பார்கள்!!!
--------------------------------------------------------------------------------
சுபன் - மார்ச் 05, 2006 - 10:08 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
ஒருவர் பிறக்கும் போது அவர் பிறந்தநேரத்தை வைத்து அவரின் பிறந்த நட்ச்சத்திரத்தினை அறிவது போல கணமும் அறியலாம்
--------------------------------------------------------------------------------
Thanara - மார்ச் 06, 2006 - 02:51 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
என்னதான் கூறினாலும் தனிமையில் இருக்கும் போதும்,கும்மிருட்டு நேரங்களிலும்
பேய் பயம் இருக்கத்தான் செய்யும்.

தனரா
--------------------------------------------------------------------------------
சுபன் - மார்ச் 06, 2006 - 05:53 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
Thanara எழுதியது:
என்னதான் கூறினாலும் தனிமையில் இருக்கும் போதும்,கும்மிருட்டு நேரங்களிலும்
பேய் பயம் இருக்கத்தான் செய்யும்.

தனரா
நீங்களும் ராஷத கணமா?????????????
--------------------------------------------------------------------------------
சின்னமருது - மார்ச் 06, 2006 - 10:26 PM
Post subject:
--------------------------------------------------------------------------------
இருட்டில் ஆடும் இலை, கிளை, மரம்கூட பிசாசு போலத் தோன்றலாம். அதே சம்பவங்கள் பகலில் நடைபெற்றால் யாரும் பயம்கொள்ள மாட்டார்கள். எனவே பயத்தையும் பேயையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பேய் என்ற ஒன்று பொய். பயம் என்ற ஒன்று உண்மை.
--------------------------------------------------------------------------------
Manjusundar - மார்ச் 07, 2006 - 01:46 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
கடவுள் என்கின்ற கூற்று உண்மையானால், பேய், பிசாசு போன்றவைகளும் உண்மையாகத் தான் இருக்கக் கூடும்.

கடவுளை எங்கேயும் தேட வேண்டாம், உங்களுக்குள்ளே கடவுள் தன்மை இருக்கிறது. நீங்கள் அதை உணர்வது இல்லை என்று பல பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அன்பே சிவம் என்று கூறுகிறார்கள். அப்பொழுது அன்பிற்கு எதிர்பதமாக இருக்கும் நம்முடைய தீய எண்ணங்களை பேய் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா..?

அதே போல, அப்படி தீய எண்ணத்துடனே வாழ்ந்து, இறக்கும் போதும் ஒரு ஆற்றாமை, இயலாமை, கோபம், பொறாமை, போன்ற மனநிலையில் இறப்பவர்களின் ஆத்மாக்கள் தான் பேயாக இருக்குமோ?

கடவுளைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள், அதே மாதிரி தான் பேய் விஷயமும், புரளிகள் தான் அதிகம்...

அன்புடன்,
மஞ்சுளா சுந்தர்.
--------------------------------------------------------------------------------
kumaran - மார்ச் 07, 2006 - 02:26 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
எல்லாம் மனப்பேய்....
--------------------------------------------------------------------------------
சின்னமருது - மார்ச் 07, 2006 - 02:36 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
தீய எண்ணங்களை வேண்டுமானால் பேயாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பேய் என்ற ஒரு உருவம்/அருவம் இருப்பது உண்மை அல்ல. நமக்கு மேற்பட்ட நம்மையும் மீறிய சக்தி ஒன்று உண்டென்றால் அது இறைவன்தான்.

முதலில் பேய்க்கதைகள் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டது என்பது சிறுவர்களை, குழந்ததகளை நல்வழிப்படுத்த மட்டுமே. அதோ அங்கே மேட்டுப் பக்கம் செல்லாதே என்றால் செல்வார்கள். அங்கே சென்றபின்னர் தலைகுப்புற விழுந்து தாடையில் அடிபட்டதும்தான் திருந்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் அங்கே பில்லிசூன்யம், மந்திரம், பேய் போன்ற கதைகளைச் சொன்னால் நம்பி விடுவார்கள் சொல்ல மாட்டார்கள். காரணம் பேய்கள் என்பவை அரக்கர் போன்றவை என்று நமது பண்டைய கடவுளர் காலத்தில் இருந்து எழுத்து வடிவில் சொல்லி வந்திருக்கிறோம்.

சிறுவர்கள் வேண்டாத செயல்களை செய்ய அஞ்சினர். நற்பழக்கங்களை கற்றுக் கொண்டனர். பிற்பாடு இதே பேய்க்கதையை கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பரப்பினார்கள். பெரியவர்களையும் பயமுறுத்தினார்கள். நள்ளிரவு 1மணிக்கு கோயிலுக்குப் போகாதே, அங்கே கொடுவாசாமி அரிவாளோடு நிற்கும் என்றார்கள், ஐந்து தலை நாகம் சுற்றிச் சுற்றி வரும் என்றார்கள். காரணம் மனிதர் சென்று இறைவனின் நகைகளைத் திருடிவிடக் கூடாதே என்பற்காக மட்டுமே.

கன்னிப்பெண்களை எங்கள் பக்கம் தனியாகச் செல்லாதீர்கள், பேய் அடிக்கும் என்பார்கள். காரணம் ஒன்றுமில்லை. தளதளவென நடக்கும் தக்காளி மாந்தர்களைக் கண்டு எந்த காமுகனாவது சிதைத்துவிடுவானோ என்றஞ்சிய கிராமத்துப் பெரிசுகள் கட்டிவிட்ட கதை அது.

இப்படித்தான் எங்கள் ஊரில் நண்பனின் தலையில் பெரிய போர்வையைப் போட்டு பேய்போல் நடிக்கச் செய்து சக தோழியரை விரட்டிவிட்டு அவனது காதலியுடன் பேசச் சொல்வோம்.

பிணம் கொழுத்தும் பிணக் கொட்டகை பக்கம் போகக் கூடாது, மீறிப்போனால் பேய் அடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில் பிணம் எரியும்போது வெளிப்படும் புகை நமது உடல்நலத்திற்கு தீங்கை விளைவிக்கக் கூடியது. அதனால் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். எரியும் பிணம் எழுந்து உட்காரும் என்பார்கள். ஆமாம் உண்மைதான். பிணம் எரியும்போது அதன் நரம்புகள் சூட்டால் இழுக்கப்பட்டு பிணம் எழும். அதற்காக பிணத்துக்கு உயிர் வந்து விட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்.

கதைகதையாம் காரணமாம், காரணத்தைக் கூறனுமாம்!
--------------------------------------------------------------------------------
kumaran - மார்ச் 07, 2006 - 03:11 AM
Post subject:
--------------------------------------------------------------------------------
அருமை அண்ணா..நீங்கள் சொன்னது உண்மைதான்..

said...

இந்த முத்தமிழ்மன்றப் பட்டிமன்றத்தில் ஒரு குமரன் பேசியிருக்கிறார். அந்தக் குமரன் அடியேன் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :-)

said...

வெளிகண்ட நாதரே, பேயும் கடவுளும் மனிதனின் மன வெளிபாடுகளே. நல்லதை நினைத்து நல்லதை செய்பவன் கடவுளைக் காண்கிறான்.

அமெரிக்காவில் 51 வது வட்டம்(Area 51) என்று ஒன்று இருக்கிறதாமே அதில் பறக்கும் தட்டு வெளிகிரக வாசிகள் இவர்களைப் பிடித்து வைத்திருப்பதாக என் மகன் அடக்கடி சொல்லுவான். இப்போது அதெல்லம் புருடா என்கிறான். அதைப் பற்றி ஏதாவது......

ஆமா, நீங்களும் மானேஜர் ஆயிட்டிங்களா? அடிக்கடி பதிவுகள் வருதே

said...

பட்டணத்து ராசா, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு இன்னும் மக்கள் கண்ணை திறக்கலைன்னு தான் இந்த பதிவே! வந்ததுக்கு நன்றி!

said...

கீதாம்மா, இப்படி ஆவியா வந்து பயமுறுத்தாதீங்க!

said...

குமரன், அது சரி, பதிவை பத்தி ஒன்னும் சொல்லலியே, நீங்களும் நம்புற கேஸா?

said...

ஹிஹி... வழக்கமா சொல்லும் பதில் தான். இன்னும் இந்தப் பதிவைப் படிக்கலை. பின்னூட்டங்களைப் பாக்கிறப்ப குமரன்னு பாத்தவுடனே சொல்லணும்ன்னு சொல்லிட்டேன். பதிவைப் படிச்சுட்டு அப்புறம் நானும் நம்புற கேஸா இல்லையான்னு சொல்றேன். சரியா?

said...

சர்தான் சிவா, பேய், கடவுள், ஜோஸ்யம்னு நம்புற கும்பலு ஜாஸ்தியா தான் இருக்கு!

ஆமா Area 51 தான் நான் சொன்ன அந்த 'Los Vegas' பக்கத்திலே இருக்கிறது. இப்படி ஒரு ட்ரிப் அடிக்கிறது, பசங்களுக்கு விளையாட நிறைய கேஸினோவும் இருக்கு சுத்து முத்து பார்க்க இந்த UFO siteங்களும் இருக்கு!

//ஆமா, நீங்களும் மானேஜர் ஆயிட்டிங்களா? அடிக்கடி பதிவுகள் வருதே//வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு சொல்லிட்டீங்க, எங்க ஆளுங்களுக்கு தெரியறதுக்குள்ள, இந்தோ கிளம்பிட்டேன், SISக்கும் DCSக்கும் வந்த RFIஐக்கு பதில் சொல்ல;)

said...

///அதாவது நம்ம வாலாட்டிச் சித்தர் என்ன சொல்றார்னா...மனைவியிடம் பேய் கண்டார் பேயே கண்டார். தாய் கண்டார் தாயே கண்டார்///

வாலாட்டிச் சித்தர் கம்பரை மிஞ்சி விட்டார் :-)).

said...

வெளிகண்டநாதர்,
உங்களுக்குப் பிரியமான இவ்வுலகைவிட்டுப் பிரிந்த யாருடனாவது தொடர்புகொள்ள விரும்புகிறீர்களா?. இங்கே முயற்சித்துப் பாருங்கள்.
http://devathai.blogspot.com/

said...

முத்து, இதில நமக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லே, சும்மா படம் பார்த்திட்டு வந்து இதுக்கு பின்னாடி இருக்கிற சயின்ச் பத்தி எழுதலாமேன்னு தான்! ஒன்னு பண்ணுங்க, போய்ட்டு வந்து உங்க அனுபவத்தை சொன்னீங்கன்னா போறதா வேணாமான்னு பார்க்கிறேன்!

said...

நல்ல பதிவு! பதிவின் ஆரம்பதில் பயம் எற்படுத்தீடீங்க!
எதோ course படிபதற்க்கு endorse செய்த மாதிரி இருக்குதே!! Just Kidding.

Good Blog!!

said...

வெளிகண்ட நாதர்,
இதில் நிறையவே எனக்கு ஆர்வம் உண்டு. ஒருவேளை ஆவியோ, பேயோ இருந்தால் அதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று.

மேலேயுள்ள சுட்டியைப் பொருத்தவரையில் ஆவியுடன் பேசுவது போன்ற விஷயங்கள் நேரடியாய் அவருக்குப் பக்கத்தில் இருந்து அதை முயற்சி செய்து பார்ப்பதே பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் ஆவியுடன் பேசிய நண்பர்கள் நமது வலைப்பதிவு வட்டத்திலேயே உண்டு. நான் முயற்சி செய்தேன் எனக்கு பெரிதாய் அதில் வெற்றி கிடைக்கவில்லை. கொஞ்சம் இது சம்பந்தமான பதிவு.

ஆவி, பேய் பற்றிய எனது சொந்த அனுபவங்கள் பெரிதாய் ஏதுமில்லை, எனவே இதுபற்றி என் சொந்தக் கருத்து, அனுபவங்கள் ஏதுமில்லை. மற்றபடி நள்ளிரவில் சுடுகாட்டுக்குப் போய்வருவதில்கூட எனக்குப் பயம் இல்லை. முடிந்தால் ஊருக்குப் போகும்போது அவ்வாறு போய்ப்பார்க்கலாம், எதாவது கண்ணுக்குத் தென்படுகிறதா என்று பார்க்கத்தான். :-).

said...

வாங்க சிவபாலன், தமிழ்ல அடிக்க கத்துக்கிட்டீங்க, good, கடைசியில நான் சொன்னமாதிரி படிச்சா நல்லா சம்பாத்தியம் பண்ணலாம் போல! By the way, என் மனைவிக்கு இதெல்லாம் படிக்கணும்னு ஆர்வம்:)

said...

முத்து, மேலே சொன்ன மாதிரி நமக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது.ஆனா இங்கே இவ்வளவு ஆர்பாட்டமா, அதை ஒரு சயின்ஸா படிக்கறப்ப, உண்மையில என்னதான்னு ஆராய்ச்சி பண்ணி பார்க்க தோணுது!

said...

//By the way, என் மனைவிக்கு இதெல்லாம் படிக்கணும்னு ஆர்வம்:) //

நீங்க இவ்வளவு தெளிவா couse பற்றி சொல்லும்போதே நினைத்தேன்!!

said...

இந்தப் பேய் நம்பிக்கை இங்கேயும் இருக்குங்க.

நாங்க ஒரு வீட்டை வாங்கி அங்கே போய் ஒரு வருசம் கழிச்சு ஆட்டீக் சுத்தம்
செஞ்சப்ப ஒரு அருமையான மாதா சிலை கிடைச்சது. கொண்டு வந்து நம்ம 'ஷோ கேஸ்'லே
வச்சுக்கிட்டேன்.

அதுக்கும் ரொம்ப நாள் கழிச்சு ஒரு தோழியோட வெள்ளைக்கார ஃப்ரெண்ட் ( பாட்டி)
சொன்னாங்களாம், எங்க வீட்டுலே பேய் இருக்குன்னு அதுக்கு ஸ்பெஷலா ஒரு க்ரூப் ஆளுங்க வந்து
ஜெபம் பண்ணி என்னென்னவோ செஞ்சாங்களாம்.

தோழி எங்கிட்டே இதையெல்லாம் சொல்லி, 'எதாவது' பார்த்தியான்னு கேட்டாங்க.

நானே ஒரு பெரிய பேய். என்னைப் பார்த்து அது பயந்து எப்பவோ ஓடியிருக்குமுன்னு சொன்னேன்.

அப்படியே இருந்தாலும், நம்ம சாமி என்னைக் காப்பாத்திறாதா?
சாமி இருக்கற இடத்துலே பூதம் இல்லை.

தோழிக்குத்தான் ரொம்ப ஏமாற்றம்.

said...

துளசி, அது மாதா சிலை தானே, அப்ப அது பேய் இல்லை, பிசாசு;)

said...

// ஆம்பிள்ள பேயை பேய்ன்னும்....//

அட, ஆமாம். அதான் 'பேய்க்கு வா(ழ்)க்கப்பட்டா புளியமரத்துலே ஏறணுமுன்னு சொல்லி இருக்கு:-))))

அந்தப் பேயோ பிசாசோ திரும்ப வராம இருக்கத்தான் அந்த மாதாசிலையை வச்சாங்கன்னு கேள்வி.

said...

பேயில்லாம மனுசன் எப்படீங்க வாழமுடியும்... எனக்கென்னமோ எல்லாருமே பேய நம்பித்தான் இருக்கமோன்னு தோனுது.. அதுவும் மாச ஆரம்பத்துல payய பத்தி பேசாம எப்ப பேச ;)

சுகா

said...

பதிவும் நன்றாய் இருந்தது. முத்தமிழ்மன்ற உரையாடலும் நன்றாய் இருந்தது. :-)

Paranormal Studies பத்தி நிறைய படிச்சிருக்கேன். இங்க வந்த பின்னும் அந்த ஆர்வம் தொடருது.

said...

Hi,

Actually i want to tell you onething. First peole will believe on me or not i wont care. you said about Unidentified Flying Object(UFO). You have to believe me. The day december 25th 2004(flying saucers) tsunami happend, before that day afternoon i saw that flying saucers from my hostel. I saw like that in the movie mars attack. so i identified suddenly. but on one noticed that one. later on one believed me. i tried a lot to post for NASA sight. but i did not get the way also. that was maroon color. ok what your thinking now..
mail me your comments to sampoo@oneindia.in

said...

நன்றி சம்பூரணா,
தங்களால் படிக்காமல் தவறவிடப்பட்டிருந்த பதிவு வெகுகாலத்திற்குப் பின் மீண்டும் கிடைத்துள்ளது.

அருமையான பதிவு வெளிகண்டநாதர் சார்.