Friday, May 12, 2006

ஆங்கிலேயர் அமைத்த சாதியம்-வரலாறு தொடர்கிறது!!

போன பகுதியில் இந்த சாதிய அமைப்பு முறை ஆங்கிலேயர் ஆட்சியின் காரணமாய் எப்படி நம்மிடையே சாதிய பாகுபாட்டிற்கு வழி வகுத்ததுன்னு பார்த்தோம். அதனுடய தொடர் பாகமா சொல்லவிட்டதை, இனி தொடர்ந்து பார்க்கலாம்!

19ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய சமூக அமைப்புகளில் ஒன்றிபோக, ஆங்கில சமூகம் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். அதாவது அப்பொழுது சமூக மட்டத்தில இருக்கக்கூடிய வித்தியாசங்களை வரையறுக்க சில சொற்றடர் பிரயோகங்களால் சமூகத்தில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டினர். 'உத்தமர்களின் பணக்காரதன்மையும் அவர்தம் சொத்துக்களும் போல', 'கடைநிலை ஊழியர்கள் முதற்கொண்டு அவர்களின் நினப்பும் போல' எனக்கூறி சமுதாய பாகுபாட்டினை விவரித்தனர்! ஆனால் சமூகத்தில் இருக்கும் அந்தஸ்த்து முறைகள் சரியான முறையிலே விவரிக்கபடாமல் இருந்தனவேயொழிய, அதைப் பற்றிய ஏற்ற இறக்கங்களை அவர்கள் அறிந்திருந்தினர். மேற்கூறிய இரு சொற்றொடர் பிரயோகம் இருந்த போதிலும், பொதுவாக சமூக வகுப்புகளை மூன்று பிரிவுகளாக, சமூக நிலைப்பாட்டின் மூலம், பொருளாதார வசதிகளின் மூலம், அறிவுதிறன் மூலம், பிரித்து பார்க்க முற்பட்டனர். இப்பிரிவு அப்பொழுது ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாய் அமைந்த சமூக அந்தஸ்த்து உயர்வுகளை காட்டும் வழியாகவே, அதாவது பிரபுத்துவமில்லாத, வந்தேறிய சமூகமில்லாத, சமூக உயர்வடைந்த ஜார்ஜியன் சமூகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பை இப்பிரிவுகளுக்குட்படுத்தி அமைத்த பிரிவினையாகவே தெரிந்தது! இந்த சமூக வரிசைப்பாடு, மேற்கூறிய இரண்டு சொற்பதங்களுக்குள் அடங்காமல், சமூக நிலை(Social Status) மற்றும் அறிவுதிறன் (mental ability) அடிப்படையில் உண்டாக்கப்பட்டது! நான் முன்னமே கூறிய இந்த மண்டை ஒடு உருவமைப்பு (Phrenology) அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணாதிசியங்கள் மற்றும் திறமை, அவர்களின் தேசீயம் கண்ட முறைகளுடன் பிறகு வந்த புள்ளியியல் கணக்கீட்டு முறைகளுடன் கூடிய கண்டறிந்த மனித நடைத்தை, ஒழுங்கு போன்றவை அறியும் தன்மைகள் சமூக விதிகளின் கீழ் கட்டுபடுத்தபட்டமையால் மனித வளர்ச்சிக்கு எந்த உறுதுணையும் அளித்தாக தெரியவில்லை! இதன் காரணமாக,ஆங்கிலேயர் இந்திய சமூக வளர்ச்சியில் அதிகம் ஈடுபடுத்திகொண்ட போது, மேற்கூறிய மூன்று பிரிவிகளினிடையே இருக்கும் நெருங்கிய தொடர்பின் கீழ் இந்திய சமூகத்தை அராய்ந்து பிரிக்கும் பொருள் விளக்கும் கண்டு, அதன் படி சமூக வரிசையை அமைக்க முற்பட்டனர். இப்படியாக, நமது பாகுபட்ட இந்திய சமூகத்தை உருவாக்க, அவர்கள் சமூகத்தில் கண்டறிந்த சமூகப்பிரிவுகளின் அளவு கோல்படி, நம் இந்திய சமுதாயத்தை அப்பொழுது அறியபட்ட சாதியம் மற்றும் இன அமைப்பு கொண்டு, பாகுபாட்டினையும் இன சாதி வரிசை முறைகளை அமைக்க முற்பட்டனர் என்பதே உண்மை! அதற்காக, இந்த புள்ளிவிபர இயலை அவர்கள் உபயோகித்து சாதிய உருவாக்கத்தை மேற்கொண்டனர் என்பதே இங்கு வைக்கப்படும் முதன்மையான கருத்து!

இந்த புள்ளியியல் முதலில் ஐரோப்பிய சமூகத்தை அறிந்து கொள்ளும் கருவியாகவே உபயோகப்பட்டது. ஏனென்றால், அதை கொண்டு அனைத்து செலவங்களையும், வசதிகளையும், நெருக்கடி காலங்களில் மிதமாக உபயோகபடுத்த ஒரு ஏதுவாக இருந்ததால்! மேற்கொண்டு சமுதாய அமைதியின்மையற்ற, குழப்பமான சூழ்நிலை 19ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் நிலவியதால் ஆங்கிலேய அரசு அதை தவிர்க்க உதவும் கருவியாக இதை உபயோகப்படுத்தியது. அரசியல் மற்றும் சட்ட நிபுணர்கள் தங்கள் நிர்வாக முறையில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகளை நிலைநிறுத்த, சமூக பார்வையில் கண்டறிந்த கட்டுபாடுகளுடய விஞ்ஞான உண்மைகளை கொண்டிருக்கும் புள்ளியியல் கணக்கீட்டினை பெரிதும் உதவியாக கொண்டிருந்தனர்! இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்த புள்ளியியல் கணக்கீடு, கண்டங்களுக்கிடையான சண்டைகள் நெப்போலியன் ஆட்சியை எதிர்த்து நடக்கும் போருக்கு தேவையான ஆட்களை இராணுவத்திற்கு சேர்த்து கொள்வதற்காகவும், பிறகு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், கொந்தளிப்பும், குழப்பமுமாயிருந்த ஐரோப்பிய வலிமையான நாடுகளின் பகுதிகளை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவும் உபயோக படுத்தினர். ஆனால் அவ்வாறு புள்ளியியல் நிபுணர்கள் அதற்காக சேகரித்த பக்குவப்படாத தகவல்கள் பின்பு சமூகப் பிரிவுகள் தத்துவத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்றாலும் மிகையாகாது! ஆனால் இந்த புள்ளியியல் கணக்கீடு கொண்டு வரைபடயிறுக்கும் புதிய விஞ்ஞானத்திற்கு முழு முயற்சி எடுக்க புள்ளியியல் நிபுணர்கள் பாடுபட்டனர், இதன் மூலம் மனித மனத்தில் குடிகொண்டுள்ள சமுதாய விதிமுறைகளை கண்டறிய முற்பட்டனர். அதிலும் மனிதகுலம் மேற்கொள்ளும் நடத்தைகள் இந்த மாறுபடா சமூக விதிகளினால் உண்டாக்கபடுவது என்றும், தனிமனித குணாதிசயங்களாக கருதாமல், பொதுவான தேசத்தின் குணாதிசியங்களாக கண்டறிய இப்புள்ளியியல் கணக்கீடு உதவும் என அவர்களால் பெரிதும் கருதப்பட்டது! அதிலும் மனித வர்க்க முறை என்பது வெறும் சந்தர்ப்பவசங்களாலோ, இல்லை இயற்கை நியதிகளை மீறியோ உண்டாக்கபடும் வளர்ச்சியாக வரத்தேவையில்லை என்பது அப்பொழுது வரையறுக்கப்பட்ட புள்ளியியல் தத்துவத்தின் வாதம்! ஆக இந்த புள்ளியியல் தததுவுமே வர்க்க சரித்திரங்களுக்குண்டான பொது விதியாக கருதப்பட்டது.ஆனால் அதற்கு இடையூறாக அமைந்த மதம் மற்றும் அரசியல் நிறுவனங்கள் இந்த முறையான புள்ளியியல் முறையில் உருவாகும் வர்க்க வளர்ச்சிக்கு தடைகல்லாகவே இருந்தன! சுயமாக சிந்தித்து வளரும் மனித குலவளர்ச்சியை தடுத்து தங்களுடய சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக சமூக பிரிவு வழிநடைத்தும் முறைகளை இவைகள் கடைபிடித்தன. அதன் வடிவமாக அப்பொழுது ஸ்பெயினை ஆண்ட மூன்றாம் சார்லஸ் கொண்டுவந்த சில மக்கள்குல வளர்ச்சி திட்டங்களின் வடிவம், இந்த மதவாதிகளின் ஆளுமையில் கட்டுண்ட மக்களால் இனம் காணமுடியாமல் போனது! ஆக ஒட்டு மொத்தமாக எந்த ஒரு அரசியல் முன்னேற்றங்களும், சமூக சீர்த்திருத்தங்களும் சட்ட முறையலோ இல்லை செயலாற்றங்களாலோ மக்கள் குல வளர்ச்சிக்கு உதவின என்பதை சொல்லிவிட முடியாது, அது போல் சட்டம் இயற்றுபவர் எப்பொழுதும் வளர்ச்சிக்கு துணையாகயிருப்பதைவிட அதன் குறுக்கே நின்றது தான் அதிகம்! ஆக இதை எல்லாம் கண்ட இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், மனித வளர்ச்சிக்கென்று இந்த புள்ளியியல் தததுவத்தை பயன்படுத்தாவிடுனும் சமூக அடக்குமுறைக்கு சரியாக பயன் படுத்தி கொள்ளும் கருவியாகவே இது பயன்பட இருப்பதை கண்டனர். ஏன்னெனில், இவ்வளவு பெரிய மக்கட் தொகைக் கொண்ட நாட்டினை அடக்கி ஆள வெறும் படைபலம் மட்டும் போது, மற்றும் அது மிகவும் அதிகமான செலவீனம் கொண்டதால், ஆட்சி பரிபாலனத்திற்கு இந்த சாதிய பிரிவினைகள், தங்கள் கட்டுபாட்டின் கீழ் மக்களை அதிகாரம் செலுத்த சரியான வழி என எண்ணினர்!

ஆகையால் அப்பொழுது பரவலாக இருந்த சாதி பிரிவினைகள், ஆங்கிலேயரின் அனுபவத்திற்க்கு அப்பாற்பட்டது, ஆதலால், இந்த சாதியெணும் சாவியினை சரியாக உபயோகபடுத்த அதன் அம்சங்களை தெரிந்து கொள்வது முக்கியம் என கருதினர். ஆக அப்பொழுது தங்கள் கையில் இருந்த சமூக வளர்ச்சி விஞ்ஞான கருவி, அவர்கள் தம் வழியில் கண்டறிந்த அனுபவத்தால் வந்த முறை, இந்த புள்ளியியல் கணக்கீடு ஒன்றே! அப்பொழுது பெரிதாக கருதப்பட்ட சமூக விஞ்ஞானங்கள் (social scinces), மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல்(phrenology), உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம்(Physical Anthropology), சமூக தத்வ இயல்(Sociology), மனித பரம்பரை வர்க்கவியல்(eugenics) என்பன. இதன் அடிப்படையில் அவர்களால் நிர்மானிக்கப்பட்ட காலனிகளில் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறைகள் மக்கள் கூட்டத்தினை அடக்கி ஆள பெரிதும் பயன்பட்டன. ஆனால் கடைசியாக வளர்ச்சி அடைந்த சமூக தத்வ இயல்(Sociology), மனித பரம்பரை வர்க்கவியல்(eugenics) விஞ்ஞான வழியன்றி முதல் இரண்டு தத்துவ முறையில் பிரிவுபடுத்தபட்ட முறைகளை சற்று பார்க்கலாமா?

எப்படி வானவியல் சாஸ்திரத்தோடு ஜோதிடம் ஒப்பிடப்படுகிறதோ, அதைப்போல, மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயலும், உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் ஒப்பிட பட்டது! அதாவது மனித மண்டை ஓட்டினையும் உடல்கூறு நிலைபாட்டினையும் இந்த இரண்டுத்துறையை சேர்ந்த தத்துஞானிகளால் இனம் காணப்பட்டது. 1840ம் வருடத்திற்கு பிறகு மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் மறைய தொடங்கிய போது, அதில் கண்டறிந்த உண்மைகள் உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன! இந்த மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக இங்கிலாந்து, அயர்லாஅந்து நாடுகளில் காணப்பட்டனர். இந்த இயல்பியல் அதிகமாக தனிமனித குணாதிசயங்களையும், தேசத்தன்மைகளயும் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. அதாவது மண்டை ஓட்டின் வெளிதோற்றம் கொண்டு மனித மனம் மற்றும் அவர்களின் இயல்பான மனப்பாங்குகளை இனம் கண்டு கொள்ளப்பட்டது. மேற்கொண்டு மண்டை ஓட்டின் தோற்றம் கொண்டு ஒரு நாட்டின் மற்றும் குலத்தின் தனிதன்மைகளை அறிந்து கொள்ள முடியும் என நம்பப்பட்டது! அதாவது ஒவ்வொரு மூளையின் பகுதியும் மனிதனின் அந்தந்த தன்மைகளையும், அறிவுத்திறன்களளயும் கட்டுபடுத்தவாதகவே நம்பபட்டது. ஆக இப்படியாக மனித மண்டை ஓட்டின் வெளித்தோற்றத்தின ஆராய்ந்தாலே, ஓவ்வொரு மனித குலத்தன்மையும், குணாதிசியங்கள் மற்றும் அறிவுத்திறன்களை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது!

இந்த மண்டை ஓட்டு தத்துவமே, ஆங்கிலேயர் ஆட்சி அமைத்த இந்திய மக்களின் இன குல பாகுபாடினை அறிந்த கொள்ள ஒரு அடிகலனாக வழிவகுக்கும் சாதிபிரிவினைகள் முக்கியமாக கருதபட காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகது! ஆக இந்த மண்டை ஓட்டு த்ததுவம் எவ்வளவு தவறானதோ, மனித குல வளர்ச்சியை அறிந்து கொள்ள, அதுவும் மண்டை ஓட்டின் வெளித்தோற்றம் கொண்டு மனித தன்மை, அறிவு, குணாதிசியங்கள் போன்றவற்றை இனம் காண, அவ்வளவு தவறானது ஆங்கிலேயர் வழி நடத்திய சமூக சாதிபிரிவினைகள் கொண்டு இந்திய மக்களின் இனம் காண!

இந்த மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் மறைந்து, உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் வளர்ந்த போதும், அத்தத்துவத்தில் கண்டறிந்த சில நம்பிக்கைகளை உண்மை எனக்கருதி அதை மேலும் சமூக வர்க்கபிரிவினைக்கு வழிவகுத்தனர். அப்படி வழிவந்து ஆராயப்பட்ட தத்துவத்தால் ஆப்பிரிக்க கறுப்பர் இனமான நீக்ரோ இனத்தினை வெள்ளையர் இனத்தை விட தாழ்ந்தது என அளவிட்டு அதனை இழிவுடன் நடத்திய சரித்தரம் நம் அனைவரும் தெரிந்ததே!

இப்படி பெரிதும் நின்று தீர்மானமாக்கப்பட்ட மரணதன்மைக்கூடிய இத்தத்துவமே, 1871ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்திய சட்டத்திற்கு அடிகோலாகும். அதாவது குற்றவாளிகள் கொண்ட பழங்குடி இனத்தவர் சட்டம் (Criminal Tribes Act of 1871) என்பது, அதன் சாராம்சம், குற்றம் புரிவதையே தொழிலாக கொண்ட இனத்தில் பிறந்தவர் குற்றம் இழைப்பவராகவே கருதப்படுவது, குற்ற்ம் புரியும் குலத்தை சார்ந்ததால், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள், அப்படி குற்றம் புரிபவராகவே வாழ்க்கை முழுதும் கருதப்படுவர், இல்லையெனில் எப்பொழுது அந்த முழு இனமும் அழிகிறதோ இல்லை அக்குலத்தை வேறுவகையில் எப்பொழுது மன்னித்து மறந்து மாற்றப்படுகிறதோ அதுவரை அவர்கள் குற்றவாளிகளே! பார்த்தீர்களா, இந்த விநோத சட்டத்தை, ஒருவன் எந்த குற்றம் செய்யாமலும், பிறப்பால் குற்றவாளியாகிறான், சரித்திர காரணங்களால் முன்னோர் செய்த குற்றங்கள் கொண்டு ஒரு வகை மக்களை அடையாளம் கொண்டு அந்த குலம் குற்றக்குலம் என சமூகத்தில் நிலை நிறுத்தப்படுவதால், மேலும் அவனுக்கு விமோச்சனமே இல்லை. அவன் எப்பொழுதும் குற்றம் இழைப்பவனாகவே கருதப்படுகிறான். ஆக இப்படியாக வளர்ச்சி அடையா சமூகத்திற்கு(static Indian society) வித்திட்டவர்கள் இந்த ஆங்கிலேயர்கள் இம்மாதிரி சட்டங்களை இயற்றி! இது போன்ற சட்ட திட்டங்களை கொண்டு வந்ததால், சாதியமே, வகுப்பு பிரிவனைகளை இந்திய மக்களின் இனவரிசைக்கான அடையாளமாக ஆங்கிலேயர் கண்டனர். ஆகவே அவர்கள் ஆரம்பித்த அந்த புள்ளியியல் கணக்கீட்டில் சாதி, இனம் காணல் முக்கிய பங்களிப்பாக கருதப்பட்டது. அதுவே பின் வந்த சமுதாய சீர்கேட்டிற்கு முக்கிய காரணம். ஆக இதுவே இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதிய அரசியல், மற்றும் விறுப்பு வெறுப்புகள் கொண்ட சமுதாயத்தினை உருவாக்க அமைந்த முக்கிய காரணம்... (இன்னும் வரும்!)

9 comments:

said...

நல்ல விவரமான ஆராய்ச்சி. எதில் இருந்து தகவல் பெறுகிறீர்கள்?கூகுளில் தேடச் சுட்டி எதுவும் கிடைக்குமா?

said...

நீங்கள் எழுதும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு சிறு ஆலோசனை:

3-4 சொற்றொடர்கள் மட்டுமே கொண்ட பத்திகள் அமைப்பதும், wordpad-இல் 1 பக்க அளவு அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே ஒரு பதிவு இருப்பதாக வைத்துக்கொண்டு தொடர்பதிவுகளாக வாரம் இருமுறையேனும் வெளியிடுவதும் பதிவின் readability-ஐ improve செய்து வாசக ஈர்ப்பைத் தக்க வைக்கும்.

said...

வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே! இது ஒரு ஆங்கில நாவல் ஒன்றின் பகுதி!

said...

னாவல் என்றாலே கதை, கற்பனை என்ற தோற்றம் வருமே!
இவையெல்லாம் யாரோ ஒருவரின் கருத்தா, இல்லை ஆதாரபூர்வமானதா?
'அருணகிரி'யின் ஆலோசனை மிகத் தேவையான ஒன்று!

said...

உதயகுமார்,

நான் நினைச்சதையே அருணகிரி சொல்லிட்டார் பாருங்க.
அப்புறம் இன்னும் ஒண்ணு சொல்லிடறேன்.
வாக்கியங்கள் எல்லாம் ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா இருக்கறதாலே
படிச்சுக்கிட்டு வர்றப்பவே அதுலே முன்பகுதி மறந்து போறமாதிரி இருக்கு.
இது எனக்குதானா, இல்லே வேற யாருக்காச்சும் இப்படி இருக்கா?

அருமையான பதிவு. படிச்சுக்கிட்டுத்தான் வர்றோம்.

said...

எஸ் கே, இதில் ஒரு பகுதி அவர்கள் நாவலில் சொல்ல வந்த கருத்திற்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு எழுதிய ஆதாரங்கள் உண்டு, அதை நீங்கள் காண வேண்டுமென்றால், இந்த புத்தகங்களில் The British Empire, 1815-1914 மற்றும் British Imperialism 1750-1970 ஆகிய புத்தகங்களில் நீங்கள் காணலாம்!

said...

"வாக்கியங்கள் எல்லாம் ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா இருக்கறதாலே..."

உண்மைதான். நானும் இதனை உணர்ந்தேன்.

மேலும் சில இடங்கள் -ஆங்கிலத்தை (படித்தவைகள் அல்லது எண்ணங்கள்) அப்படியே தமிழாக்க முயல்வதால் -பைபிள் தமிழ் போல் ஒரு நடையில் வந்து விட்டதையும்கூடத் தவிர்த்தால் மேலும் சிறப்புக் கூடும்.
உதாரண வரி: "இப்படி பெரிதும் நின்று தீர்மானமாக்கப்பட்ட மரணதன்மைக்கூடிய இத்தத்துவமே, 1871ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்திய சட்டத்திற்கு அடிகோலாகும்"

வெ.க. நாதரே, உங்களது பதிவின் பின்னே உள்ள கடுமையான படிப்பையும், உழைப்பையும் கண்டுகொள்ளாமல், எழுத்து நடையை காலாட்டிக்கொண்டு விமர்சிப்பதாய்க் கருத வேண்டாம்; உங்கள் உழைப்பின் உன்னதத்தை உணர்ந்ததனாலேயே இதனை எழுதுகிறேன்.

இந்த அருமையான பதிவை மேலும் எடுத்துச்செல்லுங்கள். இந்தக்கட்டுரையில் காணும் கருத்துகளைப்பற்றி எனது பின்னூட்டங்களைப் பிறகு தருகிறேன்.

said...

அருணகிரி மற்றும் துளசி, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. கூடிய மட்ட்டும் சிறிய எழுத்து வடிவம் தர முயல்கிறேன். நீங்கள் கூறியது போல ஆங்கிலத்தில் வந்த விளக்கங்களை தமிழாக்கத்தில் தரும் போது இது போன்ற வடிவம் பெறலாம். ஆனால் சொல்ல வரும் கருத்துக்களை நான் உணர்ந்து அதனை என் புரிவின் ஆளுமைக்குள் அமைத்து வாக்கியம் அமைப்பதில் சில சம்யம் சிக்கல்களும் வந்துவிடுவதுண்டு. மூலத்தில சொல்லப்பட்ட பொருள் சரியாக போய் சேர்வதில்லை. எனினும் என் முயற்சி இனி எளிமையாக சிறு வாக்கியங்களால் வரும்படி இருக்கும். இதற்கு ஒரு பெரிய உதாரணம் சொல்கிறேன். பெரிய தத்துவம் மற்று விஞ்ஞான விளக்கங்களை படித்து இந்த 'புல்லட்டட் லிஸ்டிங்' என மறு படி புணந்து நான் இஞ்சினினியரிங் படிப்பு படித்த போது செய்வேன். அது ஒரு 'காம்பிரிகென்ஷிவ்' அண்டர்ஸ்டாடிங்காக, முயற்சிக்கிறேன் அப்பாணியிலே தர!

said...

சார்,

நல்ல பதிவு

தொட்ர்ந்து எழுதுங்கள்.


சார்,

நல்ல பதிவு

தொட்ர்ந்து எழுதுங்கள்.