Wednesday, May 24, 2006

சிலது விட பலது பெரிதா? - விக்கி தத்துவம்!!

முன்ன அந்த காலத்திலே உபயோகிப்பமே தடி தடியா பிரிட்டானிக்கா என்சைக்ளேப்பீடியா, புத்தகம், அது ஞாபகம் இருக்கா! எதை ஒன்னும் விவரம் தெரிஞ்சுக்கணும்னா உடனே ஓடுவோம் லைப்ரரிக்கு, அந்த தடி புத்தகங்களின் வால்ம்யூங்களை, ஆங்கில எழுத்து வாரியா அடுக்கி வச்சிருப்பாங்க, எடுத்து படிச்சிட்டு அர்த்தமோ, இல்லை விஷயமோ தெரிஞ்சுக்குவோமே, ஞாபகம் இருக்கா. காலேஜ் படிக்கிறப்ப, நிறைய ரெஃபரன்ஸ்க்கு இது போல லைப்ரரிக்கு போய் நான் பார்த்ததுண்டு! அப்புறம், இந்த தனிகம்ப்யூட்டர்னு வந்தப்பறம், வீட்டிலயும் அதிகமா புளங்கணப்பையும், இந்த CD யில என்சைக்களோப்பீடியா எடுத்து வச்சுக்கிட்டு விவரம் தெரிஞ்சுக்க முயற்சிப்பண்ணுவோம், அதாவது ஞாபகம் இருக்கா! பிறகு இணையம் வந்தப்பறம், அந்த சைக்ளோப்பீடியான்னா, இப்ப அந்த விக்கிப்பீடியா தான்!

அதாவது விஷயம் தெரிஞ்சவங்களா சேர்ந்து தொகுத்து உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களையும் தொகுத்து வச்சிருக்காங்க! எப்பவாது விஷயம் வேணும்னா போய் பார்த்திருக்கீங்களா! அருமையான அறிவு தங்க சுரங்கம் இந்த கலைக்களஞ்சியம்! இதுல எல்லாம் கிடைக்கும், விஞ்ஞான விஷயமும், பொது அறிவு, அப்படின்னு எதுவேணும்னாலும் கிடைக்கும். ஏன் நம்ம ஊரு கமல்ஹாசன், பாரதிராஜாவிலருந்து, ஜோதிகா வரைக்கும் யாரு, என்னா, நடிச்ச, டைரக்ட் பண்ண முக்கியமான படம் என்னான்னு அத்தனையும் தெளிவா கிடைக்கக்கூடிய அறிவுக் களஞ்சியம்! இது ஆங்கிலம்னு இல்லாம, முக்கியமான உலக மொழிகள் அத்தனையலயும் தொகுத்து வச்சிருக்காங்க, வேணும்னா நம்ம கே. பாலசந்தரை பத்தி தமிழ்ல எழுதி வச்சிருக்கறதை பார்த்துட்டு வாங்க! இது எப்படி வேலை செய்து, யாரு தொகுத்து போடற, இதுக்கு பின்னாடி உள்ள தத்துவம் என்னான்னு பார்ப்போமா?

இந்த விக்கிப்பீடியாங்கிறது உலகெங்கிலும் இருக்கும் இணையதாரர்களா சேர்ந்து, அவர்களின் கூட்டுமுயற்சியால அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம். இதில் இருக்கிற மொத்தக் கட்டுரைகள் ஒரு 40 லட்சத்துக்கிட்ட! யார்வேணும்னாலும், அந்த சொல்லப்படும் விஷயம் தெரிஞ்சா அதை பத்தி எழுதியோ, இல்லை திருத்தங்களையோ செய்யலாம். இதை ஆரம்பிச்சு வச்சவரு ஜிம்மி வோல்ஸ்ங்கிற ஒருத்தர், ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2001!. இதுக்கு எப்படி விக்கிப்பீடியான்னு பேரு வந்துச்சுனா, ஹாவயன் மொழியிலே, விக்கின்னா, 'சீக்கிரம்னும்', 'எனக்கு தெரிஞ்சது என்னான்னா' அப்படின்னு அர்த்தம். அது மாதிரி யாரும் எந்த ஒரு சப்ஜெக்ட்டையும், 'எனக்கு தெரிந்தது என்னான்னு' எழுதி போட்டுட்டா, அது உலகத்தில உள்ள மக்கள் எல்லாரையும் போய் சேர்ந்திடும். தேவை ஒரு கம்ப்யூட்டர், இணயத்தொடர்பு, அவ்வளவுதான், அத்தனை கலைக்களஞ்சியமும் அடுத்த நிமிஷம் நம்ம கையிலே! மேலே நான் சொன்ன மாதிரி, ஆங்கில மொழியிலே மட்டும் 10 லட்சத்துக்கு மேலே கட்டுரைகள் அனைத்து விஷயங்களிலும் எழுதப்பட்டிருக்கு!

இந்த கலைக்களஞ்சியத்திலே ஒரே ஒரு பிரச்சினை என்னான்னு, இதை காப்பதை விட அழிப்பவர்கள் அதிகம், அதாவது வண்டலிஸம் ('vandalism')னு சொல்லக்கூடிய ஒரு தகாத செயல் தான். அதுனாலேயே சில விஷயங்களை திரிச்சு எழுத வாய்ப்பு இருக்கு! உண்மைக்கு புறம்பா அதை எழுதி போட்டுவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கு! ஆனாலும் இது விக்கிப்பீடியா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் கீழ் இயங்குவதால், அதனை உடனுக்குடன் திருத்தியே இல்லை சரியான உண்மைகளை தொகுத்து விடுகிறார்கள், மேற்கொண்டு அதை திருத்திவிட நம் போன்ற இணையம் உபயோகிப்போரிடமிருந்து கருத்துகள் வந்துவிடுவதால் அவைகள் சரி செய்யப்ப்டுகின்றன! இருந்தாலும் இந்த கலைக்களஞ்சியம் மீதும், அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மீதும் சிலருக்கு நம்பிக்கையற்றதன்மை இருப்பது மறுக்க முடியாது ஒன்று, அதிலும் பிரிட்டானிக்கா போன்ற கலைகளஞ்சியங்கள் உபயோகிப்போர், இதன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை!

விஷக்கிருமிகள் விஷப்பேனாக்கள் கொண்டு திரித்து உண்மைக்கு புறம்பாக எழுதிவிடும் வாய்ப்புகள் இருந்த பொழுதும், இந்த விக்கியப்பீடியாவின் புகழ் மென்மேலும் அதிகரித்து கொண்டிருப்பதில் ஆச்சிரியமில்லை. ஏனென்றால் இது மனிதக்குல அறிவுகளை விழித்திட செய்யும் ஒரு அருமையான கருவி, அதுவும் கூட்டு முயற்சியில், எந்த விலையுமின்றி உருவாக்கப்பட்ட களஞ்சியம் பிரிட்டானிக்கா என்றழைக்கப்படும் கலைகளஞ்சியத்தைவிட 12 மடங்கு பெரியது, 200 மொழிகளில், 10000த்துக்கும் மேற்பட்டோரின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட 40 லட்ச பிரசுரங்கள் அடங்கிய களஞ்சியம், மற்ற 'சி என் என்', 'பிபிசி', 'நியூயார்க் டைம்ஸ்' எனும் பத்திரிக்கை மற்ற ஊடக தளங்களை விட இதற்கு விஜயம் செய்யும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம், ஆதலால் தான் இது ரொம்பவும் பிரசித்துப்பெற்றது! நிறைய மக்களுக்கு விஷய ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய சாதனம்! அதுவும் இந்த அசூர வளர்ச்சி இந்த ஐந்தாண்டுகளில் தான்!

சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இதில் தொகுக்கப்பட்டிருந்தாலும், அப்படி சர்ச்சைக்குரிய விஷயமாக குறிப்பிட்டு அதன் உண்மைகள் மக்களின் தீர்மானத்திற்கே விடப்பட்டள்ளது. முக்கியமாக, நம் நாட்டின் காஷ்மீர், எல்லை குறிப்புகள், சீனா ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களை தொகுத்து வழங்கிய பொழுது அதில் அடங்கி இருக்கும் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி அதன் உண்மை, தவறின்மை வேண்டிய அளவு மாற்றி கொள்ள வேண்டியது படிப்பவர்களின் கடமை என்ற எச்சரிக்கை வாசகத்தோடு கட்டுரை வெளிப்படப்பட்டிருக்கும், உதாரணத்துக்கு இந்த மூன்றாம் பானிப்பட்டு யுத்தம் பற்றி வெளியிடப்பட்ட கட்டுரையை பார்க்கவும்! இந்த மக்களுக்கு உதவும் சாதனம் விஷமிகளின் கைகளில் சிக்குண்டால் என்னாகும் என்பதற்கு தினம் நம் இந்திய பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் திரிப்புகள் அதிகம், அதை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

ஆக இந்த பிளாக்கர் குழுமம் எப்படி ஒரு புதிய ஊடகக் கருவியாக, அனைத்து விஷயங்களையும் தரமுற்படுகிறதோ, அதன் குறைகளை நிரப்பும் இன்னொரு ஊடகமாக இந்த விக்கிப்பீடியா உருவெடுத்துள்ளது. பிளாக் என்பது திருத்தமோ, தணிக்கை செய்யப்படாத, ஒரு தனிமனித குரல் மற்றும் அவனின் எண்ணம், அறிவு எனக்கருதப்படும் ஒரு விஷயத்தை விவாதிது கட்டுரையாக வரும், ஆனால் விக்கியின் தத்துவம் அதே பக்கம், விவாதிக்கப்பட்ட விஷயங்களின் பக்கம், திருத்தப்பட்டு, அதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்களால் மாற்றி முழுமையாகப்படுவதால் மீண்டும் வடிவமைக்கப்படுகிறது! அதுவே அதன் சக்தி!

ஆக பழைய பிரிட்டானிக்கா கலைகளஞ்சியத்திற்கும், இந்த பதிய கூட்டு முயற்சியில் உருவான விக்கிப்பீடியா கலைக்களன்சியத்திற்கும் உள்ள வேறுபாடு தவறின்மை, முற்றிலும் உண்மையான கருத்துக்கள், ஆனல் அவ்வாறும் சில நேரங்களில் இந்த தொகுப்பு தவறிவிட வாய்ப்புண்டு என்கிறனர் பிரிட்டானிக்கா பதிப்பகத்தினர். இருந்தும் அவர்களின் தொகுப்பு பெரிதன கூறுகின்றனர். ஆனால் இந்த விக்கிப்பீடியா களஞ்சியம், மாறி வரும் தொழில்நுட்பத்துடன் உலகமே சேர்ந்து உருவாக்கிய ஒன்று. தவறுகள் சில இருந்தாலும் மனிதகுல அறிவுத்திறமை ஒரு சில பேரால் தொகுப்படைவதில்லை, பலரால் தொகுக்கும் பொழுது, அதை எந்த வணிக நோக்கமின்றி உருவாக்கி வழி நடத்தும் பொழுது, உபயோகிப்போரின் தேவை பொறுத்து, அதன் முக்கியத்தவம் உயர்வடைகிறது. ஆனாலும் இந்த கூட்டு முயற்சியின் அறிவுக்களஞ்சிய தன்மையே தனி! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

7 comments:

said...

பலதரம் விக்கிபீடியா பயன்படுத்தியிருக்கேன்.ஆனா இதில் உறுப்பினராவது எப்படி,கட்டுரை எழுதுவது எப்படின்னு தெரியலை.=யாராவது சொன்னா மகிழ்வேன்

said...

நானே கண்டுபிடிச்சு உறுப்பினராயிட்டேன்.
வாழ்க வெளிக்கண்ட நாதர்

said...

செல்வன், நீங்கள் முதலில் உறுப்பினர் ஆக வேண்டும் கட்டுரை தொகுப்பிடன்னு சொல்றதுக்கு முன்னே (கொஞ்சம் வேலையிலே மூழ்கிட்டேன் உங்களுக்கு பதில் போடமா, மன்னிக்கவும்!) நீங்களே ஆயிட்டிங்க வாழ்த்துக்கள், நல்ல விஷயங்கள் பல எழுதுங்கள்!

said...

சிலது விட பலது பெரிதா? கேள்வியில் தெரிவுது முரண்பாடா அல்லது paradox. நல்ல இடுகை.

said...

//அருமையான அறிவு தங்க சுரங்கம் இந்த கலைக்களஞ்சியம்//


நல்ல பதிவு !!

மிக்க நன்றி!!

said...

வாங்க நற்கீரன், சரியா சொல்லுனும்னா, 'Many minds are better than few?'

said...

சிவபாலன் சரியா வந்து காலையிலே நம்ம பேப்பரை (பதிவை) பார்த்துடுறீங்களா, நன்றி! உங்களுக்காகவே பதிவை மிஸ்பண்ணக்கூடதுன்னு பார்க்கிறேன். சிலநேரம் வேலையா இருந்துட்டேனா, முடியறதில்லை!