Friday, February 02, 2007

மரத்துக்கு தாலி கட்டிய ஐஸ்வர்யா!

அந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு, எப்படி கட்றது? அந்த பையனுக்கு மூலம், அது தெரியாம கண்ணாலம் கட்டி இப்ப அப்பனை தூக்கிடுச்சு! இப்படி புலம்பும் மக்களை நிறைய பார்த்திருப்பீங்க! அது மாதிரி ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வா தோஷம் இருக்குன்னு மரத்து தாலி கட்டின கதை தெரியுமா உங்களுக்கு! அப்படி மரத்துக்கு தாலி கட்டினதை எதிர்த்து அவரு மேலே கேஸு போட்டு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கும் காம்டி காட்சி இப்ப நடந்தேறியிருக்கு!

நம்ம கனவு கன்னி ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே இரண்டு பேரை காதலிச்சு, அம்போன்னு வுட்டுட்டு மூணாவதா அமிதா பச்சன் மகன் அபிஷேக் பச்சனை அமுக்கி இப்ப கல்யாணம் வரை வந்தாச்சு, ஆனாலும் ஒரு சிக்கல் என்னான்னா, அம்மாவுக்கு செவ்வா தோஷமா, அதை போக்கணும்னா, அவங்க முதல்ல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அபிஷேக்கை கல்யாணம் பண்ணின அந்த தோஷம் போயிடுமா, அதனாலே தான் சமீபத்திலே, வாராணாசியிலே போய் அரச மரத்துக்கு தாலி கட்டி தோஷம் கழிச்சிட்டு அப்பறமா பெங்களூர் வந்து வாழை மரத்து தாலி கட்டி தோஷம் கழிச்சாங்களாம்!

பீகார் மாநிலத்திலே இருக்கும் 'ஸ்ருதி சிங்'னு ஒரு அம்மணி ஐஸ் மேலேயும் அமிதாப் மேலேயும் ஒரு பொது வழக்கு ஒன்னு போட்டு வச்சிருக்காம், அதாவது ஐஸ்வர்யாக்கு எல்லா ஐஸ்வர்யமும் இருந்தும் செவ்வா கிரகத்து அனுகூலம் ஜாஸ்தி இருக்கிறதாலே அது அவங்களை கட்டிக்கப் போற புருஷனுக்கு ஆகாதுன்னும், இது மாதிரி தோஷம் நீங்கணும்னா, மரத்தையோ இல்லை சாமி சிலையையோ, இல்லை எதாவது ஒரு மிருகத்தையோ முதல்ல கல்யாணம் பண்ணி, அப்பறமா தான் கட்ட போற ஆடவன் கைபிடிச்சா அந்த தோஷம் எல்லாம் நீங்குங்கிற ஐதீகம் வடக்குல அதுவும் இந்த பீகார், உபி மாகாணத்திலே ரொம்பவே பார்த்து செய்வாங்களாம்! ஏன் நம்ம ஊர்லேயும் இது உண்டு என்னா, எனக்கு தெரிஞ்சு 48 வெள்ளிக்கிழமை செவ்வா புள்ளையாரு கோவிலுக்கு விளக்கு போடு , எல்லாம் சரியாயிடுங்கிற கதை வரைக்கும் தான் கேட்டிருக்கேன், இந்த அரசமரம், வாழை மர சங்கதி பாரதிராஜா பட ஐதீக சங்கதி மாதிரி இருக்கு!

இதுக்கு தான் அமிதாப் குடும்பம் சகிதமா காசி போயி இருந்திருக்காங்க, மொத்திலே தோஷம் கழிக்க! அந்த கேஸ் போட்ட அம்முணி என்னா சொல்லிருக்குன்னா, இது தீண்டாமையை உருவாக்குது! அப்பறம் மக்களிடையே இந்த மூட நம்பிக்கை மேற்கொண்டு வழுப்பெற, இந்த மாதிரி புகழ் பெற்ற நட்சத்திரங்களே முன்மாதிரியா இருக்கக்கூடாதுன்னு சொல்லியும், அப்பறம் பீகார்ல பாட்னாவிலே இருக்கக்கூடிய ஷிட்லா கோயில், ஃபாட்வாங்கிற ஊர்ல இருக்கிற பைகதிபூர் கோவில் பிறகு தியோகர்ங்கிற ஊர்ல இருக்கிற சிவா கோவில், இங்கெல்லாம் இந்த செவ்வா தோஷ கல்யாணம் நடத்துறதை தடை செய்யனும்னு இந்த அம்முணி கேஸ் போட்டிருக்கு!

அது சரி இப்ப நம்ம ஊர்ங்கள்ல இந்த செவ்வா தோஷக் கதை எப்படி இருக்கு? நான் ஊரை விட்டு வந்து ஒரு முப்பது வருஷமாச்சு, இது மாதிரி செவ்வா தோஷத்தாலே கன்னி கழியாம பொண்ணுங்க இன்னும் அவஸ்தை படறாங்களான்னு கொஞ்சம் நம்ம ஊர்ல இருக்கவங்க சொல்லுங்க! அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே இது எல்லாம் தேவையான்னு தோணுது, இருந்தாலும் ஜோதிடத்திலே நம்பிக்கை வைக்கும் வலைப்பதிவர்கள் நம்ம கிட்ட அதிகம், ஏற்கனவே எனக்கு புது கிரகம் புடிச்சப்பவே வந்து கலாச்சுட்டு போனவங்க இருக்காங்க, இந்த விஷயத்தையும் கொஞ்சம் பீராஞ்சி தான் சொல்லுங்களேன் எப்படின்னு!

12 comments:

said...

சார்

ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள்!!

நன்றி

said...

அது சரி. அந்தமரம்தானே ஐஸுக்குத் தாலி கட்டணும். இவுங்க கட்டுனா எப்படி?
ஒண்ணூம் பிரியலையே(-:

said...

வாங்க சிவபாலன், இந்த செவ்வா தோஷ சங்கதி பத்தி விவரம் தெரியுமா??

said...

வாங்க துளசி, ரொம்ப நாள் ஆளையே காணோம், அது சரி பசங்க பின்னாடி ஓடறது பத்தாதா, மரஞ்செடி கொடி எல்லாம் ஐஸ் பின்னாடி ஓடணுமா? கதையா இருக்கே-:)

said...

அது இல்லீங்க. இப்பெல்லாம் ஆம்பிளைங்களுக்குப் பொம்பளைங்க தாலி கட்டுற வழக்கம் வந்துருச்சோன்னு ஒரு சந்தேகம்தான்.

ஐஸு பொம்பளைன்னா மரம்?

யோசிக்க யோசிக்க விவகரமாப் போகுதே(-:

said...

வெ.நா,
சுவாரசியமான பதிவு.

/* நான் ஊரை விட்டு வந்து ஒரு முப்பது வருஷமாச்சு, இது மாதிரி செவ்வா தோஷத்தாலே கன்னி கழியாம பொண்ணுங்க இன்னும் அவஸ்தை படறாங்களான்னு கொஞ்சம் நம்ம ஊர்ல இருக்கவங்க சொல்லுங்க! */

நாதரே, 30 என்ன இன்னும் 3000 வருசங்கள் போனாலும் நம்ம சனங்கள் இதையெல்லாம் விடுவார்கள் என்று எதிர்பாக்கிறீங்களா? (::
எத்தனை அப்பாவிப் பெண்களின் வாழ்வு இப்படி நாசமாகிப் போகுது.

said...

//யோசிக்க யோசிக்க விவகரமாப் போகுதே(-://இதுக்குத் தான் வில்லங்கம்மா ரொம்ப யோசிக்காதிங்கன்னு சொல்றது-:)

said...

வாங்க வெற்றி,

//எத்தனை அப்பாவிப் பெண்களின் வாழ்வு இப்படி நாசமாகிப் போகுது//ரொம்ப சத்தமா சொல்லாதீங்க, இந்த ஜோஸ்யக்கார கும்பலுங்க ஒன்னா சேந்தா, கதை கந்தல் தான்!

said...

இதைப் பத்தி ஜெஸிலா எழுதினாங்க.. அவங்க பதிவுல பின்னூட்டங்கள் ஒரே காரசாரமாப் போச்சு.. கவனிச்சீங்களா?

http://jazeela.blogspot.com/2006/12/blog-post_27.html

said...

//அந்தமரம்தானே ஐஸுக்குத் தாலி கட்டணும். இவுங்க கட்டுனா எப்படி? ஒண்ணூம் பிரியலையே(-://

டெக்னிகல்லி கரெக்ட் :)

said...

//இதைப் பத்தி ஜெஸிலா எழுதினாங்க.. அவங்க பதிவுல பின்னூட்டங்கள் ஒரே காரசாரமாப் போச்சு.. கவனிச்சீங்களா?// நான் படிக்கலையே, படிச்சி பார்க்கிறேன், பிறகு எங்கருத்தை சொல்றேன்!

said...

//டெக்னிகல்லி கரெக்ட் :)// மரம் பெண்பாலா, ஆண்பாலா? அரசமரம் ஆண்பால்ன்னு நினைக்கிறேன், வாழை பொண்ணா??

ரொம்ப கஷ்டமான ஆராச்சி தான்!