Thursday, March 06, 2008

ஷகீலாவுக்கு பிரியாணி பிடிக்கும்!

வணக்கம் என் இனிய தமிழ் மக்களே! இப்படி அட்டகாசமான தலைப்பிலே ஒரு பதிவு போட முக்கிய தூண்டுதல், குமுதத்திலே வந்த ஷகீலாவின் பேட்டி, அதை பார்த்துட்டு ஒரே காம்டியா இருந்தோன்ன சரி இதை பத்தி பதிவு போடலாமேன்னு இது! அதாவது ஷகீலான்னாவே உடனே கூட ஞாபகத்து வர்றது பிட்டு படங்கள் தான்! பிட்டு படங்கள் ஒரு காலகட்டத்திலே, அதாவது நான் சொல்றது ஒரு 20 வருஷத்துக்கு முன்னே, அதுக்கு ஒரு தனி கிராக்கி இருந்த நேரம். இப்ப இண்டெர்னெட், யூட்யூப் எல்லாம் இருக்கிற இந்த காலத்திலே அது ஒன்னும் அவ்வளவு கிரேஸ் இல்லை. நினைச்ச மாத்திரத்திலே பார்த்திடலாம் ஆனா அப்ப அதுக்குன்னு இருக்கிற தியேட்டர்கள்ல் போய் பார்த்தா தான் உண்டு! நான் அதிகமா இந்த பிட்டு படங்கள் பார்க்க போறது கோயம்புத்தூர்ல டவுன் ஹால் பக்கத்திலே இருக்கிற தியேட்டர்களுக்கு! அதுவும் மலையாள படம்னு பார்த்து பார்த்து போகனும்! அப்ப தான் கிடைக்கும். ( அப்படி போய் எக்கு தப்ப பார்க்க போய் சில நல்ல படங்கள் நான் பார்த்துண்டு! அதிகமா அப்ப ஜெயபாரதி, விதுபாலான்னு மலையாள நடிகைகள் நடிச்சு வந்த படங்கள் அதிகம்!

ஆனா நான் பார்த்த காலகட்டத்திலே வந்த நடிகை இல்ல இந்த ஷகீலா, அதுக்கு பின்னே வந்த அம்மணி! இந்த அம்மா போய் மலையாளத்திலே கலக்கி அங்க இருந்த ஹீரோக்களுக்கு வயத்திலே புளியை கரைச்சவங்க! அதாவது இந்த அம்மணி நடிச்சு வர்ற படத்தோட முன்னனி ஹீரோக்கள் நடிச்ச படங்கள் மோதி தோல்வி நிறைய அடைஞ்சதா சரித்திரம் இருக்கு! நாலஞ்சு சீன் நச்சுன்னு நடிச்சுட்டு சும்மா படம் தூக்கு தூக்குன்னு ஓடி ஏகபட்ட ரகளை பண்ணின நடிகை! இந்ததம்மணி நடிச்ச சாஃப்ட் போர்னோ படங்கள் எக்கச்சக்க பாப்புலர்! அதிலே சில படங்கள் நீங்க நிறைய பேரு பார்த்திருக்கலாம், பார்க்கதவங்க மட்டும் உண்மையா கமெண்ட் எழுதுங்க, நம்மகிட்ட இருக்கிற பிரத்தியோக வீடியோ லைப்பரரியிலிருந்து உங்களுக்கு வேணும்னா அனுப்பிச்சி வைக்கிறேன்!

இப்படி எக்கசக்க பாப்புலரா இருந்த இந்த அம்மணியை ஓட ஓட அங்கிருந்து துரத்திவிட்டதா கேள்வி! ஆக இப்ப அவ்வளவு அந்த மாதிரி படங்கள் நடிக்கிறதில்லேன்னு கேள்வி பட்டேன், ஆனா எப்படின்னு தெரியலை! ஆனா ஷகீலாவே நடிச்சு அப்படி இப்படின்னு காம்டி பண்ணி வந்த அழகிய தமிழ் மகன் படம் நீங்க எல்லாம் பார்த்திருப்பீங்க! இருந்தாலும் இந்தம்மா கொடுத்த இந்த வீடியோ இண்டர்வியூல உங்களுக்கு என்ன புடிக்கும்னு கேட்க பளிச்ன்னு எனக்கு பிரியாணி புடிக்கும்னு சொன்னது நான் ரொம்பவே ரசிச்ச ஒன்னு அதான் உடனே உங்க கிட்ட வந்துட்டேன், ஓடோடி வந்து சொல்றதுக்கு! அந்த வீடியோ கிளிப்பு இப்ப நீங்களும் பார்த்து மகிழ, இதோ கீழே!

Sunday, March 02, 2008

அன்றைய தமிழ் படங்கள்-ஒரு காமடி வீடியோ!

வணக்கம் இணைய நண்பர்களே! நடுவிலே ஜெயமோகன் எழுதின திலகம் பத்தின பகுடி, அங்கதம் பத்தி இணையத்திலே ஒரே பேச்சா இருந்ததை படிச்ச நேரத்திலே தான் அந்த காலத்திலே அவரு நடிச்ச பழைய படமான சிவந்த மண் படம் பார்க்க நேரிட்டது, அதில வந்த காட்சி அமைப்புகள் பார்க்க கொஞ்சம் தமாஷா இருந்தோன்ன, ஒரு வீடியோ பண்ணலாமுன்னு தோணுச்சு அதான் காமடியா ஒன்னு தயாரிப்போமேன்னு கீழே போட்டிருக்கிறேன், நீங்களும் பாருங்க! எப்படின்னு சொல்லுங்க!

இந்த சிவந்த மண் படம் பத்தின பழைய ஃபிளாஷ்பேக்! அதாவது பெரிய ஏஸ் டைரக்டர்னு புகழ் பெற்று கொண்டிருந்த ஸ்ரீதர் அப்ப வெளிநாடு எல்லாம் போய், மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட் திரைப்படம் தான் இது! ஆனா பாருங்க இந்த படம் அப்ப எம்ஜிஆர் நடிச்ச வெளிவந்த வேட்டைகாரன் படத்தோட மோதிச்சு, ரெண்டும் ஒரே நாள் ரிலீஸ்! எம்ஜிஆர் படம் பெரிய வெற்றி, ஆன இந்த படம் அவ்வளவா வெற்றி பெறவில்லை. நான் இந்த படம் அப்ப பார்க்கவில்லை, இப்ப பார்க்க தான் சான்ஸ் கிடைச்சுது! அப்பறம் தான் தெரிஞ்சது இந்த படம் ஏன் வெற்றி பெறல்லைன்னு! அவ்வளவு அபத்த்ங்கள் இந்த படத்திலே!

நிறைய காட்சிகளை பார்க்கிறப்ப ஒரே காமடியா இருந்துச்சு! அது எடுக்கபட்ட விதம், ஏன் சீரியஸான காட்சிகளை எடுத்திருக்கிறதை பார்க்கிறதுக்கு காமடியா இருக்கும்! நீங்களே அதை பாருங்க! 69ல இந்த படம் இப்படி ஃப்ளைட் கீழே விழும் காட்சி, ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் காட்சி, அப்பறம் ப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியான்னு அப்பவே ஐரோப்பிய நாடுகள்ல போய், அதாவது எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கிறதுக்கு முன்னமே எடுத்து வந்து காமிக்க முயற்சி பண்ணுனாலும் எல்லாம் காம்டியா இருந்து போங்க!

சரி இப்ப படத்தை பாருங்க! வர்றட்டா!

Tuesday, February 19, 2008

ஜோதா அக்பர்!

என்ன மக்களே செளக்கியமா! பார்த்து ரொம்ப நாளாச்சே ஏதாவது கதைச்சுட்டு போலாமுன்னு வந்தேன்! சுகம் தானே! இந்த வார கடைசியிலே ஒரு புராணப்படம் பார்த்துட்டு வந்தேன், அதுவும் ஹிந்தி படம்! இந்த படம் மூன்றை மணி நேரத்துக்கு மேலே ஒடி என்னமோ அந்த காலத்திலே ஏபி நாகராஜன் படம் பார்த்துட்டு வர்ற மாதிரி! ஆனா சும்மா சொல்லக்கூடாது படம் சும்மா கிச்சுன்னு இருந்துச்சு! என்ன படங்கிறீங்களா, அதான் இப்ப புதுசா வந்திருக்கிற 'ஜோதா அக்பர்' ன்னு ஹிந்தி படம்.

அதாவது நம்ம சரித்திரம் படிச்சோமில்லை, அதிலே அதிகமா யாருக்கும் தெரியாத சப்ஜெக்ட், அதாவது மொகலாயர்கள் சாம்ராஜ்யத்திலே, அக்பரோட அத்தியாத்திலே சின்னதா அப்ப அவரு இந்து மதத்தை சேர்ந்த ராணியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா கொஞ்சம் கதை படிச்சதுண்டு, அப்பறம் இந்த வடக்கு பக்கம் குப்ப கொட்ட போனப்ப ஆக்ரா தாஜ்மஹாலை பாத்துட்டு அதுக்கு பக்கத்திலே இருந்த ஆக்ரா ஃபோர்ட்டையும் பார்த்துட்டு வந்தப்ப, அங்க சின்னதா உள்ளுக்குள்ள இந்து ராணி வாழ்ந்த அரண்மனைன்னு பார்த்துட்டு வந்ததோட முடிஞ்சிதுன்னு பார்த்தா அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காதல் கதை இருக்கும்னு தெரியலை, அப்பா என்ன பிரமாண்டமா இருந்துச்சு, இந்த படம் பார்த்துட்டு வந்தா! (உங்களுக்கு எப்படியோ தெரியாது அந்த காலத்திலே சரித்திரம் படிச்சப்ப, மொகலாயர்கள் சாம்ராஜயம் பத்தி வழி வழியா வந்த மொகலாய அரசர்களில் அத்தியாத்தில் எனக்கு ரொம்ப புடிச்ச அத்தியாயம் அக்பரோட அத்தியாயம் தான், ஏன்னா மக்களுக்கு நல்லது பண்ணின பேரரசர்னு, அவரு காதல் கதைன்னு தெரிஞ்சதும் ரொம்பவும் தான் லயிச்சு போயிட்டேன்! ரொம்ப மோசமான பேரரசர் ஒளரங்கசீப் ன்னு உங்களுக்கு சொல்லிதான் தெரியணுமா?)

இந்த படம் எடுத்த டைரக்டரை உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியாது, அதாவது கொஞ்சம் நாளைக்கு முன்னே கிரிக்கெட்டு பட்ம் ஒன்னு வந்தது ஞாபகம் இருக்கா? அதான் அந்த காலத்திலே பிரிட்டிஷ்காரன் நம்மளை ஆண்டப்ப 'என்னோட கிரிக்கெட்டு விளையாடி ஜெயிச்சா உங்களுக்கு வரியை தள்ளிபோடறேன் இல்லேன்னா மூணு பங்கு வரி கட்டணும்'னு போட்டி போட்டு கடைசியிலே ஜெயிச்சப்பாங்களே ஒரு கிராமத்திலே, அதான் அமீர்கான் நடிச்ச 'லகான்'னு ஒரு படம் எடுத்தாரே, அதே டைரக்டரு 'அஷ்வத்தோஷ் கவரிக்கர்' எடுத்த படம் தான் இந்த படம்! நடுவிலே நாசாவிலே வேலை செஞ்சதை வுட்டுட்டு இந்தியா வந்து கிராமத்துக்கு மின்சாரம் பண்ண வழி பண்ணி கொடுப்பாரே ஹீரோ, அதான் 'சுவதேஷ்'ன்னு இன்னொரு படம் எடுத்த அதே டைரக்டர் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

படம் பிரம்மாண்டாம வந்திருக்கு, படத்தோட முக்கிய கருவே அரசியல் லாபத்துக்காக ராஜபுதன இளவரசியை, அவங்க பேரு தான் ஜோதா, அதாவது ஜோத்பூர் நகர இளவரசிங்கிறதாலே இந்த பேரு, 16ம் நூற்றாண்டில் இந்திய மொகலாய பேரரசரா இருக்கும் இளம் அக்பருக்கு கல்யாணம் கட்டி கொடுத்து அவங்க எப்படி காதல் வயபட்டாங்கன்னும், இந்து மதத்தை சேர்ந்த ராஜ்புதன இளவரசியை எப்படி மொகலாய பேரரசர் அக்பர் அன்போடும் பரிவோடும் அப்போது இருந்த அந்த முகலாய மதவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி அன்பு செலுத்தி மதநல்லிணக்கத்துக்கு அடிகோலா இருந்தாருங்கிறதை அழகா அதுவும் இந்த காலத்துக்கு தேவையான ஒரு சமாச்சாரத்தை ரொம்ப நேர்த்தியா படம் புடிச்சு காமிச்சிருங்காங்க!

படத்தோட முக்கிய அம்சமா அக்பரா ரித்திக்ரோஷனும், இளவரசி ஜோதாவா, ஐஸ்வர்யா ராய் பச்சனும் நடிச்சிருக்கிராங்க! சும்ம சொல்லக்கூடாது கல்யாணத்துக்கு பின்னே வெவ்வேறு சூழ்நிலைகளிருந்து வந்த தம்பதியர் எப்படி காதல்வயப்படறாங்கன்னு எத்தனையோ சமூகப்படங்கள் வந்தாலும் இந்த சரித்திரப்படம் கவிதை மாதிரி அழகா சொல்லி இருக்காங்க! பாஷை புரியதோ இல்லையோ, போய் பாருங்க, அப்படியே ரித்திக்ரோஷனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் உள்ள கெமிஸ்ட்ரியை அழகா படம் புடிச்சி காமிச்சிருக்கங்க! நமக்கே ஆர்வம் வந்து அந்த காலகட்டத்திலே, ஒரு அஞ்சாறு நூற்றாண்டுகளுக்கு முன்னே பொறந்து இப்படி காதல்வயபட்டிருக்க கூடாதான்னு தோணுகிற அளவுக்கு காட்சி அமைப்புகள்ல உள்ளத்தை பறி கொடுத்தது என்னவோ வாஸ்தவம் தான்!

இது இப்படி இருக்க, புராண உண்மைகள் பத்தி அடிதடி நடந்துக்கிட்டிருக்கு! ஆமா உண்மையிலே, இந்து இளவரசி ஜோதான்னு சொல்லக்கூடிய ராணி அக்பரோட மகன் சலீம் காலத்திலே பொறந்து வளர்ந்தவங்க, ஆக படத்திலே சொன்ன கதை நெஜமில்லைன்னு சொல்லி, ராஜபுதன கதையை டைரக்டர் திரிச்சிட்டாருன்னு சொல்லி, ராஜஸ்தான், குஜராத் பக்கம் எல்லாம் இந்த படத்துக்கு ஒரே எதிர்ப்பு கிளம்பி, படமே அங்கெல்லாம் ரிலீஸாகல்லையாம்! இந்த மாதிரி காண்டெர்வர்ஸியை வச்சே மார்க்கெட்டிங் பண்றதும் இன்னொரு யுத்தி, அது வேறே கதை!

அதே மாதிரி அக்பர் என்னமோ இந்து ராணியை கல்யாணம் பண்ணது என்னமோ உண்மைதான், ஆனா அதெல்லாம் இந்த தெய்வீக காதலும் இல்லை கத்திரிக்காயுமில்லை அவருக்கு இருந்த 34 மனைவிகள்ல இந்தம்மாவும் ஒன்னு, சும்மா படத்துக்காக இந்த காதல் கதை உண்டு பண்ணிருக்காங்க்ன்னும் பேசிக்கிறாங்க! அவரு அப்படி காதல் மீது இவ்வளவு மதிப்பு வச்சிருந்தவரா இருந்த அவரு பையன் சலீம் ராஜசபையிலே ஆட்டம் போட்ட அனார்கலியை மணக்க ஏன் ஒத்துக்கல்லைனும் தர்க்கம் பண்ற கூட்டம் ஒன்னும் இருக்கு! (இந்த சலீம், அனார்கலி கதையை வச்சு 60 களில் வெளிவந்த ஹிந்தி படம் தான் 'மொகலே-ஆசாம்', அந்த படம் வந்தப்பவும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணி ரகளை பண்ண சரித்திரம் உண்டு, அப்ப சொன்னது என்னான்னா, இந்த அனார்கலின்னு ராஜ்யசபையிலே ஆடுன பொண்ணே இல்லை, அதுவும் ஜோடிக்கப்பட்ட கற்பனை தான்னு சொல்ற கூட்டம் இன்னைக்கும் நிறைய இருக்கு! சரித்திரம் தெரிஞ்ச புண்ணியவாங்கே யாரவது வந்து விளக்கம் சொன்னா சரி!)

இந்த படத்திலே இன்னொரு முக்கியமான அம்சம் என்னான்னா நம்ம ரஹமான் ம்யூசிக்! சும்மா பட்டையை கிளப்பிட்டாரு, அதுவும் அக்பருக்கும் ஜோதா இளவரசிக்கும் கல்யாணம் முடிஞ்சி சுஃபி ஸ்டைல்ல ஒரு பாட்டு இருக்கு பாருங்க, சும்மா கேட்கவே சுகமா இருக்கும்! அவரு போட்ட நிறைய தமிழ் பாட்டுங்க அந்த ஸ்டைலில் இருக்கும்! வேணும்னா அந்த பாட்டை கேளுங்க, உங்களுக்காக இதோ இங்கே! இந்த சுஃபி பாடல்கள் இஸ்லாமிய பாடல்களின் ஒரு வகை! இந்த கவாலி பாடல்கள் மாதிரி, அதாவது இஸ்லாமிய இறைப்பாடல்களின் வகைகள் பல பிரிஞ்சிருக்கு அதிலே இது ஒன்னு! தனக்காக கம்போஸ் பண்ணி பாடின இறைவன் பாட்டு இந்த படத்துலே உபயோக படுத்த கொடுத்ததா கேள்வி!


இவ்வளவு அம்சா, பிரம்மாண்டமா, ஆமா ஷங்கர் படங்களுக்கு நிகரா எடுத்திருக்கிற இந்த படம் சும்மா சொல்லக்கூடாது, கிளாஸா இருக்கு, நம்ம ஊர் பக்கம் வந்திருந்தா போய் பாருங்க, இங்கே அமெரிக்காவிலே பட்டையை கிளப்பிகிட்டு ஓடிக்கிட்டிருக்கு! சரி நான் அப்ப வர்றட்டா, பிறகு பார்க்கலாம்!

Saturday, January 19, 2008

வரவு எட்டணா செலவு பத்தணா- இன்றைய அமெரிக்கா!

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! புது வருஷத்திலே எல்லாரும் சந்தோஷமா ப்ளாக் எழுதிருப்ப, நானும் அப்ப அப்ப வந்து போற மாதிரி தொடர்ந்து எழுதலாமுன்னு யோசிச்சப்ப என்ன எழுதலாமுன்னு பார்த்தா, இந்தோ இந்த வாரத்தோட முக்கியமான ஹைலைட்டா அமெரிக்க சந்தையிலே பங்குங்களின் சரிவை தொடர்ந்து பார்க்க முடிஞ்சது. எல்லா ஸ்டாக்கும் அம்பேல். இந்த வியாபாரத்திலே போன வருஷம் என்ன சம்பாதிச்சாங்களோ எல்லாம் கபால்னு போயே போச்சு! எல்லா ஸ்டாக் எக்ஸேஞ்சுலேயும் ட்ரிபுள் டிஜிட் இறக்கம் அடின்னா அடி செம அடி! அதில காசு போட்டவன் கதி கந்தரகோலங்கர கதை தான்! மொத்ததிலே அமெரிக்கா பொருளாதாரம் சரிவு அடஞ்சிடுச்சு! இது இப்படியே போனா அவ்வளவு தான் அமெரிக்கா படுத்து தூங்க வேண்டியது தாங்கிற நிலைமை வந்துடுச்சோன்னு ஒரே பீதி! இதெல்லாம் பார்த்து பயந்து இந்த சரிவை சரி பண்ண, அப்பறம் இறங்கு முகமா இருக்கிற பொருளாதாரத்தை சரி பண்ண அமெரிக்க அரசாங்கமே மக்களுக்கு காசு கொடுத்து அதை சரி கட்ட போறதா நேத்து ஒரு பிரகடணம்! இதெல்லாம் என்னான்னு தெரியுமா மக்களே!இந்த அமெரிக்க பொருளாதார வீச்சாலே அவங்களுக்குதான் நட்டமுன்னுட்டு இல்லை அதை சார்ந்திருக்கிற அனைத்துலக நாடுகளுக்கும் இந்த தாக்கம் இருக்கும்! இதுக்கெல்லலம் என்ன காரணமுன்னு யோசிச்சிங்களா கணவான்களே! இல்லேன்னா இந்தோ நான் மேலே போட்ட பதிவோட தலைப்பு தான்!

அப்பவே 60கள்ல வந்த பாமா விஜயத்திலே இதை பாடிட்டாங்க! வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரெண்டணா கடைசியிலே துந்தணா! அது எவ்வளவு பொருத்தம் இந்த ஊருக்குத் தெரியுமா! இந்த சரிவுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமே வரவுக்கு மீறின செலவு தான்! எப்படிங்கிறீங்களா! இதே இங்க ஆரம்பிக்கிது கதை, அதாவது இந்த அடிக்கு எல்லாம் காரணம் இந்த 'சப் ப்ரைம்' (Sub Prime) தான்! என்னாது வீடு வாங்க கொடுத்த கடன் தான்! அதாவது வருமானம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கு தகுந்த மாதிரி தான் கடன்ன்னு உண்டு, அது ப்ரைம்(Prime), ஆனா அதிகம் சம்பாதிக்கனும் ஆசைப்பட்ட பாங்குங்க, அந்த கடன் வாங்க தகுதி இல்லாதவனுக்கும் கடனை கொடுத்து, கடைசியிலே போண்டி ஆன கதை தான் இந்த கதை! அது மட்டுமில்லை சொந்த வீடு வச்சிருந்தவங்கிட்டேயும் உன் வீட்டு விலை இன்னைக்கு இவ்வளவு போகுது அதனாலே உன்னோட வீட்டு மதிப்பு அதாவது ஈக்குவுட்டிம்பாங்க! அதத வச்சி கடன் வாங்கி உனக்கு தேவை இருக்கோ இல்லையோ பொருளையும் வசதிகளையும் வாங்கி தள்ளிக்கோன்னு கடனை தூக்கி கொடுத்து அதை அவனுக்கு கட்ட வழியில்லாம போயி போண்டி ஆனதாலே வந்த வினை தான் கடைசியிலே பங்கு சரிவு!

அதெல்லாம் சரி பங்கு சரிவுக்கும் கடங்கட்டாதுதுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேட்பீங்க! அங்க தான் இருக்கு பொருளாதார அடிப்படையே! சராசரி மனுசன் செலவளிச்சாதான் உற்பத்தி பெருகும், பணம் புரளும் அப்பறம் திருப்பி பணம் கிடைக்கும் முதலீடு செய்யலாம் எல்லாருக்கும் வேலை கிடைக்கும் திரும்ப பணம் கிடைக்கும் செலவு பண்ணுவாங்க, திரும்ப முதலீடு பண்ணுவாங்க, திரும்ப வேலை, திரும்ப பணம், இது தான் பொருளாதரத்தோட இந்த் சக்கர சுழ்ற்சி! எங்கயாவது எதாவது ஒன்னு நின்னு போனா, அப்ப தான் அடி! அப்படிதான் இப்ப ஆச்சு! அதாவது தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கடங்கொடுத்து, அவன் கட்டமுடியாம போய் பேங்குகளுக்கெல்லாம் பில்லியன் டாலர்களுக்கு அடி, அவங்கிட்ட இருந்தா தானே முதலீடு செய்ய பணம் கொடுக்க முடியும்! கடங்கட்ட முடியாம, கையிலே காசு கம்மியாயி செலவு பண்ண முடியாம போக உற்பத்தி எல்லலம் முடங்க, வேலை இல்லாம, பணம் புரளாமா போனதாலா, சந்தையிலே அவனவன் பதறி போயி போட்ட காசை எடுத்தா போதும்னு எல்லாத்தியும், அதாவது எல்லா ஸ்டாக்குகளையும் விக்க போயி சரிவு, நட்டம்! பொருளாதார வீழ்ச்சி, இப்ப புரிஞ்சிதா! (அப்பா ஒரு படி பாலு குடிக்கணும்!)


சரி இப்படியே போன கதை கந்தல் தான்னு நேத்து அமெரிக்கா அதிபர் புஷ் 140-150 பில்லியன் டாலர், அதாவது அவங்க GDPயிலெ 1% மக்களுக்கு தானமா கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க! அதாவது மக்களுக்கு அரசாங்கமே பணத்தை கொடுத்து செலவு பண்ணுங்கடான்னு சொல்றதுக்கு! நான் மேலே சொன்ன மாதிரி சராசரி மனுசன் செலவளிச்சாதான் பொருளாதார சுழற்சி இயங்கி அது விரிவடையும்! அவங்க பொருளாதார அடிப்படையே எல்லாரும் செலவளிக்கனும்! இது சரிதான், ஆனா வரவுக்கு மேலே போச்சுன்னா அங்க தான் வம்பே!

இதே கணக்கிலே தான் நாமும் இந்தியாவிலே போய்கிட்டிருக்கோம்! வரவுக்கு மீற்ன செலவு, எல்லாம் ப்ளாஸ்டிக் கார்டு, வாழ்நாள் முழுக்க உங்க உடல் உழைப்பை கடங்காரணுக்கு கொட்டி கொடுத்து தண்ணியா செலவுன்னு! ஆனா இது மாதிரி எங்கயாவ்து கொண்டி வுட்டா நமக்கு 145 பில்லியன் தந்து செலவு பண்ணுங்கன்னு சொல்ல யாரும் இல்லை! ஆக கணவான்களே சமர்த்தா இருந்தா ஆச்சு இல்லை கடைசியிலே துந்தனா தான்! ஆக அப்ப நம்ம சினிமாவிலே எவ்வளவு பொருத்தமா ஆடி பாடி நமக்கு மெஸேஜ் சொல்லி இருக்காங்க பாருங்க!

இந்த பாட்டை முதல்ல ஒரு தடவை பதிவா போட்டு, இந்த கருத்து இந்த காலத்து நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்னு, இருக்கறவரைக்கும் கவலையில்லா மனிதனா வாழ வழி கொடுக்கிறது இன்றைய காலகட்டம்! ஆக சில நீதிகள் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி மாறனும் சொல்ல நினைச்சேன் ஆனா இது எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும்னு இப்பல்லவா தெரியுது!

சரி இப்ப மேலே சொன்ன பாட்டை பாருங்க! அதிகம் செலவு பண்ணாதீங்க வரவுக்கு மீறி!