Sunday, March 02, 2008

அன்றைய தமிழ் படங்கள்-ஒரு காமடி வீடியோ!

வணக்கம் இணைய நண்பர்களே! நடுவிலே ஜெயமோகன் எழுதின திலகம் பத்தின பகுடி, அங்கதம் பத்தி இணையத்திலே ஒரே பேச்சா இருந்ததை படிச்ச நேரத்திலே தான் அந்த காலத்திலே அவரு நடிச்ச பழைய படமான சிவந்த மண் படம் பார்க்க நேரிட்டது, அதில வந்த காட்சி அமைப்புகள் பார்க்க கொஞ்சம் தமாஷா இருந்தோன்ன, ஒரு வீடியோ பண்ணலாமுன்னு தோணுச்சு அதான் காமடியா ஒன்னு தயாரிப்போமேன்னு கீழே போட்டிருக்கிறேன், நீங்களும் பாருங்க! எப்படின்னு சொல்லுங்க!

இந்த சிவந்த மண் படம் பத்தின பழைய ஃபிளாஷ்பேக்! அதாவது பெரிய ஏஸ் டைரக்டர்னு புகழ் பெற்று கொண்டிருந்த ஸ்ரீதர் அப்ப வெளிநாடு எல்லாம் போய், மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட் திரைப்படம் தான் இது! ஆனா பாருங்க இந்த படம் அப்ப எம்ஜிஆர் நடிச்ச வெளிவந்த வேட்டைகாரன் படத்தோட மோதிச்சு, ரெண்டும் ஒரே நாள் ரிலீஸ்! எம்ஜிஆர் படம் பெரிய வெற்றி, ஆன இந்த படம் அவ்வளவா வெற்றி பெறவில்லை. நான் இந்த படம் அப்ப பார்க்கவில்லை, இப்ப பார்க்க தான் சான்ஸ் கிடைச்சுது! அப்பறம் தான் தெரிஞ்சது இந்த படம் ஏன் வெற்றி பெறல்லைன்னு! அவ்வளவு அபத்த்ங்கள் இந்த படத்திலே!

நிறைய காட்சிகளை பார்க்கிறப்ப ஒரே காமடியா இருந்துச்சு! அது எடுக்கபட்ட விதம், ஏன் சீரியஸான காட்சிகளை எடுத்திருக்கிறதை பார்க்கிறதுக்கு காமடியா இருக்கும்! நீங்களே அதை பாருங்க! 69ல இந்த படம் இப்படி ஃப்ளைட் கீழே விழும் காட்சி, ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் காட்சி, அப்பறம் ப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியான்னு அப்பவே ஐரோப்பிய நாடுகள்ல போய், அதாவது எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கிறதுக்கு முன்னமே எடுத்து வந்து காமிக்க முயற்சி பண்ணுனாலும் எல்லாம் காம்டியா இருந்து போங்க!

சரி இப்ப படத்தை பாருங்க! வர்றட்டா!

13 comments:

said...

Nice. could have taken from different movies though.

appreciate the effort you put in.

said...

Thanks! I will do some time later! Just a start!

said...

தல,
தமிழ் எழுத்து வீடியோல வர என்ன செய்றீங்க? எந்த மென்பொருள்?

said...

Bamini font use பண்ணுங்க, Visual communicator software கூட வர்ற ஒரு Graphic editor tool உதவும்!

said...

:-))))))))

said...

வெகாநா!
முதற் தமிழ் படத்துடன் இன்றைய படத்தை ஒப்பிட்டால், இன்னும் பல அபந்தங்கள் தெரியும்.
இவை எல்லா மொழிப்படங்களிலும் உண்டு. ஆனால் நம் தமிழ்ப் படங்களில் அதிகம்.
ஆனால் இதையெல்லாம் இந்த வெளிநாட்டுக் காட்சிக்காக வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவன்
நான்.
அப்போது ஆங்கிலப் படங்களைப் பார்க்க வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். மொழி புரியாதென்பது வேறு.
இப்படியான அபந்தங்கள் மூலம் தான் நாம், வெளிநாடுகளைப் பார்த்தோம்.
இந்த பாரிஸ் காட்சி ,நான் தினமும் இதனருகால் தான் வேலைக்குச் செல்வேன்.அப்போ இதை நினக்கவில்லை.
ஆனாலும் இவ்வளவு நவீன முன்னேற்றம் வந்த காலங்களில் இன்று வரும் தமிழ்ப்படங்கள், முழுதுமே
அபந்தமாக உள்ளது உங்களுக்குத் தெரியவில்லையா??
நன்கு தயாரித்துள்ளீர்.

said...

வாங்க யோகன்! இன்றைய படங்களிலும் அபத்தம் இருக்க தான் செய்கிறது. முன்பெல்லாம் நம் சாதாரண மக்கள் அதிகம் விவரம் தெரியாதவர்கள், இப்பொழுது அப்படி இல்லை, ரொம்ப அபத்தமா எடுத்தா ஊத்திக்கும், இருந்தும் அபத்தங்கள் வராமல் இல்லை! அதையும் அப்பறமா சொல்றேன்! வருகைக்கு நன்றி!

said...

வெளிகண்டநாதர் ஐயா,
சிவந்தமண் அபத்தத்தை பற்றி பேசும் முன் உங்கள் பதிவில் உள்ள அபத்தத்தை பார்ப்போம்

1.முதலில் வேட்டைக்காரனோடு மோதிய படம் சிவந்த மண் அல்ல .கர்ணன் ..வேட்டைக்காரனோடு மோதி கர்ணன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதிலும் நீங்கள் மகிழ்பவராக இருந்தால் உங்களுக்கு உதவுமே என்று தான் இந்த தகவல்.

2.சிவந்த மண் அபத்தமாக இருக்கலாம் .ஆனால் நீங்கள் சொல்வது போல் தோல்விப்படமல்ல .அது ஒரு வெற்றிப்படம்.

யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் தகவல் பிழைகளை அள்ளி விட வேண்டாம்.

said...

அப்புறம் வீடியோ பார்த்தேங்க ..காட்சிகளை விட அதுக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் ரொம்பவே காமெடிங்க ..ஏதோ காணாததை கண்ட மாதிரி ..சிவந்த மண்ணுலயாவது நாலஞ்சு காட்சிகளை பொறுக்கி எடுத்து காமெடி காட்ட முடிஞ்சது ..அதுல பாருங்க ..இன்னொரு திலகம் நடிச்சு உங்களுக்கு ரொம்ப புடிச்ச் உலகம் சுற்றும் வாலிபன் படத்துல இப்படி தேடிப்பிடிக்க வேண்டியதே இல்ல போங்க ..ஏண்ணா மொத்த படமுமே காமெடி தான் ..எமுச்சியார் அகில உலக விஞ்ஞானி மாநாட்டுல பேசுறதுல இருந்து ,ஆராய்ச்சி முதற்கொண்டு அப்பப்பா ..முழுப்படத்தையும் போட முடியாதுண்ணு இதை போட்டிருக்கீங்க போல .

ஆனால் இதுக்கெல்லாம் ஆனந்த விகடன்ல போட்டு உங்களை பெரியாளாக்க மாட்டாங்க .

said...

ஐயோ ஜோ, ஓடி வந்து சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்க-:) எம்ஜிஆர் படம் வெற்றி பெற்றதுன்னு எழுதனா நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன்னு முடிவு பண்ணிட்டீங்களே! சரி இந்த படத்தாலே ஸ்ரீதருக்கு ஏகப்பட்ட நட்டம்னு படிச்சிருக்கேன், அதை சரி செய்ய பிறகு எம்ஜிஆர் உரிமைக்குரல் நடிச்சு அவரை தூக்கி விட்டதாவும் கேள்வி பட்டேன், அது சரியா தவறா சொல்லுங்க!

என் கேள்வி என்னான்னா நகைச்சுவை நல்ல கதையம்சங்கள் உள்ள படம் எடுத்து தமிழ் சினிமா ட்ரெண்டுக்கு வழி வகுத்தவருக்கு இந்த மாதிரி ஒரு படம் எடுக்கனும்னு ஆசை பட்டு நட்டமாயி அப்பறம் அவரு கஷ்டபட்டு தான் எழுந்திருச்சிரான்னு, அது இல்லைங்கிறீங்களா??

அப்பறம் உ சு வா வந்த காம்டிகளையும் நான் ஏற்கனவே பதிவா போட்ட "பச்சைக்கிளி முத்துச்சரம்-நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!" படிச்சு பாருங்க!

//ஆனால் இதுக்கெல்லாம் ஆனந்த விகடன்ல போட்டு உங்களை பெரியாளாக்க மாட்டாங்க// நீங்களே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சி வச்ச மாதிரியில்ல இருக்கு-:)

said...

Titilesக்கு இன்னம் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம். படிக்கும் முன் ஓடிவிடுகிறது. நல்ல முயற்சி்.

said...

வருகைக்கு நன்றி நக்கீரன், அடுத்த முயற்சியில் நீங்கள் கூறியபடியே செய்து விடலாம், நன்றி!

said...

எனக்கு ரெம்பவும் புடிச்சது -45 டிகிரீல ஏறோப்லன் தண்ணிக்குள்ள பாயுறது தான்...