Tuesday, April 11, 2006

அமெரிக்க முதலாளித்தவமும் வந்தேறிகுடிகளும்!

அமெரிக்கா வந்து இறங்கினோன, எல்லாமே ஒரு புதிய உலகமா தெரியும். அது கனடாவா இருந்தாலும் சரி, இல்ல யூஎஸ்ஸா இருந்தாலும் சரி. ஆனா இன்னு ஒரு உண்மை பளிச்சுன்னு தெரியவரும், அதாவது நம்ம ரொம்ப எகத்தாளமா சொல்லிக்கிட்டுத் திரிவோமே, 'மண் தோன்றி கல் தோன்றாமுன் பிறந்த மூத்தக்குடி தமிழ்குடின்னு', அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திறியவரங்க எவனும் இங்கே கிடையாது. அதாவது எல்லோருமே, இந்த பூமிக்கு பொழைக்க வந்தவுங்க. தாங்கள் சமய ரீதியாவோ, இல்ல கொடுங்கோலர்களின் ஆட்சியில் இழைக்கப்பட கொடுமையிலிருந்தோ தப்பிக்கவோ, இல்லை பஞ்சம் பட்டனியை விட்டுட்டு நல்லதொரு வாழ்க்கை வாழவோ வந்தவங்க. ஏன்னா இந்த பூமியிலே அப்ப அந்த மாதிரி சாதி சமய கொடுமைகளோ, இல்ல கொடுங்கோலன்களோ ஆட்சி புரியலை, இது ஒரு இந்திரபுரியாவும் சுததந்திரபுரியாவும் தான் இருந்தது. வற்றாத வளம் கொண்ட அனைத்து பூமி செல்வங்களையும் கொண்டிருந்திச்சு, இந்த பூமி.

ஒரு 500 வருஷத்துக்கு முன்னே, பூமியோட இன்னொரு பக்கத்தை யாருமே பார்க்கல. நம்ம கதையில படிச்சிருப்போமே ஏழு மலைகள் ஏழு சமுத்தரம் கடந்து போய் அதிசயமான உயிர் நிலையை எடுத்துட்டு வர ஹீரோ போயிட்டு வருவாருன்னு, அத கடந்து போறதுக்குள்ள என்னன்ன பிரளயங்களை சந்திக்க வேண்டியிருக்குமுன்னு. அப்படித்தான் ஒரு 1000 வருஷத்துக்கு முன்னே, இந்த உலகத்திலே ஒரு பகுதியில இருந்தவங்களுக்கு, இன்னெரு பகுதியும் ஒன்னு இருக்குன்னு தெரியாம இருந்திச்சாம்! அந்த காலகட்டங்கள்ல திக்கு திசை எதுவும் தெரிஞ்சிக்கிட அறிவையும் பெறல, சாதனங்களும் இல்லை, எதோ போய்பார்ப்போமுன்னு கடல்ல படகு கட்டி ஓட்டி, வடக்கால ஆர்டிக் பக்கத்தில கடல் பிராயாணம் செஞ்சவங்க, 'வைக்கிங்'கிற கூட்டம், நார்வே, சுவீடன் பக்கத்திலன்னு நம்ம சரித்திரம் படிச்சமில்ல! அவங்க கடல்ல மீன்கள் பிடிக்க இந்த அமெரிக்க கரை வர வந்து, திரும்ப போய்ட்டாங்களாம். அப்புறம் கட்டுமரக்கப்பல்கள்ல, அட்லாண்டிக் சமுத்திரத்தில பிராயணம் செஞ்சு, இந்தியா போக ஆசைப்பட்டு, கடைசியிலே மேக்கால போயி தான் கண்டுபிடிச்ச நிலபரப்பை, இந்தியான்னு சொன்ன கொலம்பஸ் பத்தியும் தெரியும்.(இதல விஷேஷம் ஒன்னு தெரியுமா, இப்ப நம்ம அமெரிக்க மோகம் கொண்டு இங்க வந்துபுடனும்னு துடிச்ச மாதிரி, அப்ப ஐரோப்பாவின் குளிர் பிரதேசத்தில இருந்தவெனல்லாம் நம்ம இந்தியாக்கு வந்துப்புடனும் அலைஞ்சாங்களாம். ஏன்னா உரப்பா சாப்பிடறதுக்கு உண்டான விளைபயிர் நம்ம நாட்லதான் கிடைச்சுச்சாம், பிறகு மற்ற வளம் நிறைஞ்சு செழிப்பா இருந்திச்சாம், இன்னும் ஒரு 100 வருஷம் கழிச்சு இந்த சைக்கிள் திரும்பமா, இந்த வெள்ளக்கார பசங்க நம்மூர் வர ஆசைபபடுவாங்களாம், 'கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு'ன்னு பாடபோறாங்கெளாம்! 'சரியா'ன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அப்படி கண்டுபிடிச்ச கண்டம் இது! அதுக்குப்புறம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் அப்படின்னு ஓன்னு ஓன்னா இந்த வட தென் அமெரிக்க கண்டத்தை கூறு போட்டு அவங்க சந்ததியினரால உருவாகி நிக்கிற நாடுகள்தான் அனைத்து வட தென் அமெரிக்க நாடுகள்.

இதில படைபலம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதிகம் பிடிச்ச பகுதி தான் இந்த வட அமெரிக்க பகுதி, அதிலேயும் முதல்ல ஆதிக்கம் செலுத்தின பிரன்சு காலனிகளை காலி பண்ணிட்டு எல்லா பகுதியையும் தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்தவங்க தான் இந்த ஆங்கிலேயர்கள். அதிகமா மதம் பரப்ப வந்த ஸ்பேனியர்ட்ஸ்ங்கிற ஸ்பெயின் நாட்டினரை தெக்கால ஓட விரட்டிட்டு, அவங்க வசம் இருந்த வட மேற்கு, மேற்கு அமெரிக்க பகுதிகளை புடிச்சு போட்டுட்டு, இப்ப அந்த தெக்கால இருந்து வந்து பொழக்க வந்தவங்க, அதாவது மதில் சுவர் ஏறி குதிச்சு ஓடி வந்தவங்களை நாடுவிட்ட துரத்த, அவங்க ஜீவனாம்சத்துக்கு பெரிய இடைஞ்சலா, இன்னெக்கு ஆர்ப்பட்டம் நடத்திக்கிட்டிருக்கிற இந்த 'Immigration Bill', குடியேறு சட்டம் என்னா அதுனால நம்ம ஊர்லருந்த வர மக்களுக்கும் என்னா துன்பங்கள்ன்னு கொஞ்சம் சொல்லலாமேன்னு தான் இந்த பதிவே!

அதுக்கு முன்ன தலைப்பிலே இருந்த முத பாதியை பார்ப்போம். முதலாளித்தவம் பத்தி உங்களுக்குத் தான் தெரியுமே! அதாவது எந்த ஒரு பொருளோட உற்பத்தியோ, இல்லை எந்த ஒரு சேவையோ யாருவேனாலும் செய்யலாம், அதாவது காசு இருந்தா! இதுக்குன்னு அரசாங்கம் எல்லாத்தையும் தான் கையில எடுத்துக்கிட்டு ஒன்னும் செய்யாது எல்லாமே சப்ளே டிமாண்டு கணக்குப்படி, அதவச்சுத்தான் எல்லாத்தோட விலைகளும் நிர்ணயம். அதாவது அரசாங்க கோட்டா, விலை நிர்ணயம்ங்கிற கதையே கிடையாது. உதாரணத்துக்கு சொல்னும்னா, இந்த பெட்ரோல் விலையை நம்ம நாட்ல எடுத்துக்குங்க, அரசாங்கம் நிர்ணயக்கிற விலையில தான் பெட்ரோல் கம்பனிங்க வித்தாவனும், அதுக்குப்பேரு அட்மினிஷேட்ரிவ் ப்ரைஸிங் மெக்கானிசம், இதை நம்ம சிதம்பரம் ஏற்கனவே எடுத்த போட்டுட்டு, மார்க்கெட்டு விலைக்கு இனி பெட்ரோல் விக்கனும்னு 1998ல் திட்டம் போட்டு 2002ல அமுல் படுத்தனாலும் அது சும்மா பேருக்குத்தான் ஓடிக்கிட்டு இருக்கு, இப்பயும் அரசின் ஆளுமை இருந்துக்கிட்டு இருக்கு, ஏன்னா கிருஷ்ணாயில் விலை ஏறி, அப்புறம் ஆட்சி கவுந்துடும்னு, இதில நிறைய சூட்சமங்கள் இருக்கு, அதாவது அரசியல் ஈடுபாடு(ஓட்டு வங்கிக்காக), அப்புறம் ப்ரைஸ் சென்சிட்டிவ்னு ஏழைபாளையை ரொம்ப பாதிக்கும் விஷ்யம்ங்கிறாதால எதிர்பார்த்த மாதிரி இந்த மாற்றுமுறையை (De-regulation)ஐ நம்மலால செயல்படுத்த முடியல. (இதுநாள அந்த கம்பெனிங்களுக்கு வரும் நட்டம், இத பத்தி அப்புறம் ஒரு பதிவு விரிவா போடலாம்).

ஆனா இந்த பிரச்சனை எதுவும் இல்லாத (நான் சொன்னது, பிரச்சனைங்கிறது, ஸோசியலிஸம், சமத்துவம்) முறை தான் இந்த முதலாளித்தவும். அதுக்குன்னு எல்லாத்தையும் அமெரிக்கா அரசாங்கம் விட்டுடறதில்லை, இந்த பேங்கல கடன்வட்டி இருக்கே (prime lending rate) அதை நிர்மாணிச்சு பணவீக்கத்தை சரி பண்ணிகுவாங்க. இதுவும் நம்ம ஊர்ல இருக்கு ஆனா கிச்சடி மாதிரி நம்மக்கிட்ட எல்லா கொள்கையும் இருக்கு, அதாவது கேப்டலிஸம், ஸோசலிஸம் அப்புறம் கொஞ்சம் கம்யூனிசம். எல்லாமே. ஆனா இங்க முழுக்க முழுக்க முதாலளித்துவம்தான்! மொத்ததில சொல்னும்னா சப்ளே டிமாண்டை, ப்ரீ மார்க்கட் எக்னாமின்னும், இந்த பேங்க் இன்வெஸ்ட்மெண்ட், இன்டெரஸ்ட், பங்கு சந்தை, பாண்டு, மியூட்சுவல் ஃபண்டு, இத்யாதி, இத்யாதி.. இப்படி சொல்லிக்கிட்டே போலாம். இப்ப கொஞ்ச காலமா நாம குளோபலைஷேசன்னு இதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கும். (இதை தர்க்கம் பண்ண ஒரு கும்பல் இருக்கு, நம்ம நாட்டுக்கு நல்லதா, இல்லையான்னு, நான் அந்த சர்ச்சைக்கு போகல்லை, just, முதலாளித்தவம் பத்தி விளக்க இது தேவை பட்டுச்சு, அவ்வளவுதான்!) அடுத்து நம்ம எடுத்துக்கிட்ட பதிவோட மையக் கருத்துக்கு போவோம்!

நியுயார்க் நீங்க போயிருந்தா அந்த டார்ச்சு லைட்டை கையில தூக்கிக்கிட்டு அமெரிக்க சுதந்திர தேவி சிலை பார்க்க போயிருப்பீங்க. அப்பிடி போகதவங்க சினிமால நிறைய பார்த்திருப்பீங்க, அப்பிடியும் பார்க்கலைன்ன 'வேட்டையாடு விளையாடு' ன்னு கமல் படம் ஒன்னு வரும் பாருங்க! அது இருக்கிற எல்லீஸ் ஐலேண்ட்ல இருக்கிற மியூசத்துக்கு போனா உங்களுக்கு அந்த காலத்தில அமெரிக்க பொழைக்க வந்த குடியேறிகளை பத்தியும், அப்ப அவங்களை நாட்டுக்குள்ள விட என்னன்ன பரிசோதனை செஞ்சாங்கன்னு பார்க்கலாம். அதாவது 1900த்திலருந்து 1950 வரை அந்த எல்லிஸ் தீவில தான் கொண்டுவந்து விடுவாங்களாம். அதாவது அப்ப ரொம்ப வறுமையிலும் அரசன், சர்வாதிகாரிகள் கொடுமையிலிருந்தும் தப்பிக்க இத்தாலி, ருமேனியா, சோவியத் குடியரசு நாடுகள், முக்கியமா கிழக்கு ஐரோப்பிய நாடுகள்லருந்து அகதியா வந்தவங்கதான் இன்னெக்கு அமெரிக்காவில இருக்கிற குடிமகன்கள். அதுக்கு முன்னே ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில வாழ்ந்தவங்க எல்லாம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டினர் அவங்க வந்து நிர்மாணிச்ச நகரங்கள் தான் இந்த நியுயார்க், நியு ஜெர்ஸி எல்லாம். சரித்திரம் தெரியனும்னா நிறைய சுட்டிகள் இருக்கு இணையத்திலே. இந்த மாதிரி வந்தவங்க எல்லாம் முறையா, சட்டபடி குடிமகனாகி, இன்னெக்கு 98 சதவீத ஜனத்தொகை அமெரிக்காவில வந்தேறி குடிகள் தான், அவங்க வழி வந்த சந்ததிகள் தான்!(நம்ம நாட்ல இருந்து வந்து குடியுரிமை பெற்றவர்களும் இதில அடக்கம்) இதில ஒரு சோகம் என்ன தெரியுமா, இது மாதிரி வந்தேறிகுடிகளுக்கு முன்னேமே இந்த பூமியில வாழ்ந்த சிவப்பிந்தியர்கள், அதாவது அவர்களை அமெரிக்கன் இண்டியன்ஸ்னு அழைப்பாங்க, நம்ம எல்லாம் 'ஈஸ்ட் இண்டியன்ஸ்', அவங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதே, 1925க்கு அப்பறம் தான்! (நல்ல வேளை, ஆங்கிலேயர்கள் வந்து அரசாண்டாலும், அவங்களா பார்த்து நமக்கு குடியுரிமை தரும் நிலை ஏற்படல, நாம கொடுத்து வச்சவங்க!)

அப்புறம் தொடர்ந்து, அமெரிக்காவின் பொருளாதர வளர்ச்சிக்கு என்னைக்குமே ஆளுங்க தேவைப்பட்டாங்க. அதனால தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்களை இங்கு வந்து குடியேற அனுமதிச்சு, அவங்களும் குடியேறினார்கள். அப்படி நம் நாட்டவரும் 1960க்கு அப்புறம் கல்வி கொடுத்த செலவத்தால நிறைய பேர் இங்கு வந்து குடியேறி சமூகத்தின் உயர்மட்ட நிலைகள்ல இருந்துக்கிட்டிருக்கோம் நாம! அதாவது நாம் எப்பவுமே லேபர் கிளாஸ் கிடையாது. நம்ம ஏன் இந்த புது உலகத்துக்கு அந்தகாலத்தில வரமுயற்சிக்கல்ல? ஆசியாவிலருந்து சைனாகாரனும் ஜப்பான்காரனும் மற்ற பலபேரு கணிசமா 1900களிலேயே வந்தப்ப, நம்ம ஏன் அதிகமா இந்த புது உலகத்து சொத்தோ வசதிகளோ தேடி வரலை. அதற்கான காரணங்கள் பல இருக்கு. சுவாரசியமா படிக்குனும்னா, இதோ சுட்டி

சரி இவெங்கெ எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இம்மிகிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லிடுவாங்க. அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்ஸிக்கோவில, நம்ம ஊரு மாதிரி கொஞ்சம் அடிதடி. அதாவது அமெரிக்க மாதிரி சொகுசான வாழ்க்கை கிடையாது. மேற்கொண்டு நல்லா உழைச்சு சாப்பிட போதுமான சந்தர்ப்பங்களை உண்டாக்கி கொடுக்கல்லை அந்த நாட்டு அரசாங்கம். அதனால அங்கிருந்த மக்கள் பக்கத்து நாடான அமெரிக்காவிக்கு சட்ட விரோதமா பொழப்பு தேடி வந்துட்டாங்க. நம்ம ஊர்ல சொல்லுவோமே கள்ளத்தோணி ஏறி. அது மாதிரி சமுத்திரம் கடக்கவேணாம். நிலபரப்பு எல்லையை கடந்தாலே போதும். அப்படி அந்நாட்டு எல்லையிலே இருக்கிற அமெரிக்க மாகாணங்கள், கலிஃபோர்னியா, நியூ மெக்ஸிக்கோ, டெக்ஸாஸ், அரிசோனான்னு அப்படியே ஊடுருவி நியுயார்க், பிலடால்பியான்னு கிழக்கு மாகணங்கள் வரை போய்ட்டாங்க. அப்படி போயி பத்து வருஷ காலத்துக்கு மேலே இங்கேயே தங்கி வசிச்சி வராங்க. இவங்க முழுக்க முழுக்க லேபர் கிளாஸ். அதிகமா திராட்சை தோட்டங்கள்ல வேலை செய்றவங்க, அப்புறம் எல்லா பளுவான வேலை பார்க்கும் தொழிலாளர்கள்! அவங்க குடும்பம், குழந்தைங்களோட இங்கேயே செட்லாயிட்டாங்க. இவங்கதான் இப்ப அண்டாக்குமென்டட் இம்மிகிரண்ட்ஸ்ன்னு அமெரிக்க அரசாங்கம் குறிவச்சு, அவங்கள வெளியேத்த போட போற சட்டம் தான் இந்த 'இம்மிகிரேஷன் பில்'

எதுனால இந்த சட்டம்னு நீங்க கேட்கிறது புரியுது. அதாவது இங்க குடியிரிமை வாங்கறது குதிரை கொம்பு. அதாவது எல்லாருமே வரவங்க எதாவது வேலை மேல வரணும். அப்புறம் அவனுக்கு வேலை கொடுக்கிற கம்பெனி, இவன் இந்த அமெரிக்க கம்பெனிக்கு முக்கியமா வேணும் அப்படின்னு சிபாரிசு செஞ்சா, உங்களுக்கு கிரீன் கார்டுன்னு, அதாவது பச்சை அட்டை. அப்புறம் அஞ்சு ஆறு வருஷம கழிச்சு, நான் இவ்வளவு நாள் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கிறேன். என்னுடய வாழ்க்கை இனி திடமா இங்க அமெஞ்சுடும், அதனால எனக்கு குடி யுரிமை கொடுங்கன்னு அப்ளிகேஷன் போட்டு அதுக்கப்பறம் பரீசலணை பண்ணி கொடுக்கப்படுவது இந்த குடியுரிமை. ஆனா கள்ளத்தோணியில வந்த அந்த அன் டாக்குமெண்டட் இம்மிகிரண்ட்ஸ், வரி வட்டி எதுவும் கட்டிறதில்லை. ஏன்னா அவன் வந்ததே கள்ளத்தனம். அவன் பொழப்பு சம்பார்த்தியதை சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை இதுனால. அதனால அரசாங்க வருமானம் இல்லை. ஆனா ஏதோ ஒரு விதத்தில மனிதாபிமானத்தில இந்த குழந்தைங்க படிப்பு, மருத்துவம்னு செலவ செய்ய வேண்டி இருக்கு (இதுக்கு பலத்த எதிர்ப்பு இருக்கு இங்கே உள்ள குடிமகங்கிட்ட). ஆனா, இந்த தொழிலாளர் கூட்டத்தால சில முதாலாளிக் கூட்டத்துக்கு லாபம். எப்படின்னு கேளுங்க. இங்கே பிறந்த குடிமகனை போட்டு வேலை செஞ்சா, அதிகம் சம்பளம் கொடுக்கனும், ஆனா திருட்டுத்தனமா வந்தவன் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிட்டு போயிடுவான். அதனால குறஞ்ச சம்பளத்தில ஆளுங்க வேலைக்கு கிடைக்கிறாங்க. இதனால அந்த நிலையிலே இருந்தா இந்த முதாலளிகளுக்கு சாதகம். அதனால உள்ளுக்குள்ளயே அரசியல். எப்படின்னா இங்கேயே பொறந்து படிச்ச புள்ளங்கங்க, ஹை-ஸ்கூல் தாண்டாதவங்களுக்கு, அந்த சின்ன சின்ன வேலை வாய்ப்புகள் போய்டுங்கிற பயம். ஆக இதினால பாதிப்பு உண்டும்னும், அவங்களை சட்டபடி தங்க அனுமதிச்சா, சில பொருளாதார பலன்கள் வருமுன்னும் இங்க இரண்டு பங்கா பிரிஞ்சு சண்டை போட்டுகிட்டிருக்காங்க!

பில் இப்ப செனட்டுக்கிட்ட இருக்கு, அம்சம் என்னான்னா, அப்பா, நீங்க எல்லாம் சட்டபடி அமெரிக்காகுள்ள வரலை, ஆனா பரவாயில்லை, நீங்களா வந்து ஒரு 1000 டாலர் ஃபைன் கட்டிட்டு பதிஞ்சுடுங்க, உங்களுக்கு மூணு வருஷம் தங்க அனுமதிக்கறோம், அப்புறம் உங்க நாட்டுக்கு போய்ட்டு திருப்பி ஒரு வருஷம் கழிச்சு வாங்க, பிறகு மூணு வருஷம், அப்புறம் சில வருஷங்கள் கழிச்சு, நீங்க ஒழுங்க வரிகட்டி, இங்கிலீஷ் எழுத படிக்க தெரிஞ்சு, அமெரிக்க அரசியல் சாசன முறை எல்லாம் தெரிஞ்சா உங்களுக்கு குடி உரிமை கொடுக்கிறோம். அதுவும் வருஷத்துக்கு இவ்வளவு கோட்டான்னு!

ஆனா அந்த மாதிரி வந்தேறிய குடியேறிகள், இந்த பத்து பதினைஞ்சு வருஷத்தில இங்க வாழ்ந்து எல்லாம் சொந்தம் பந்தம் அகி போனதால இதல்லாம் ஒன்னு பண்ணாம, எங்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குன்னு போராட்டம் நடத்திகிட்டிருக்காங்க. இதில நம்மல மாதிரி வந்து போற ஆளுங்களுக்கும் பாதிப்புகள் வரலாம். அதுவும் 9/11 பிறகு,இப்ப இருக்கிற கெடுபிடியில, நம்ம ஆளுங்க வரது கம்மியாயி போயிடுச்சி, அப்புறம் அப்படியே வந்து கிரீன் கார்டு வாங்கனாலும், கல்யாணம் பண்ணி பொண்டாட்டி, புள்ளைகளோட சேர்ந்து வாழமுடியாம எத்தனையோ பேரு இந்த அமெரிக்க கனவுகள்ல வந்து கஷ்ட படுறாங்க. திரும்பவும் இந்தியா போயிடறாங்க. இன்னமும் 'Land of Opportunity'ன்னு அழைக்கப் பட்டு அமெரிக்க கனவுகளோட வரதுடிக்கும் இளைஞர்கள்க்கு இந்த கனவுக் கோட்டைக்கு வரது ரொம்ப கஷ்டம். ஆனா மாறி வரும் சூழல்ல நம் தாயகமே நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துக்கிட்டு இருக்குங்கிறதும் மறக்க முடியாத உண்மை!

22 comments:

said...

உதயகுமார்,

அமெரிக்க சரித்திரம் ஆரம்பிச்சுச் சொல்லுங்களேன்.ன் தொடராப் போடலாமே!

said...

தலைப்ப பாத்துட்டு பயந்துகிட்டே வந்து படிச்சேன். நல்ல வேளை தெரிஞ்சிக்கவேண்டிய விஷயங்களைத்தான் போட்ருக்கீங்க.

said...

வெளிகண்ட நாதரே, நானும் கனாடவைப் பற்றி "வந்தேறிகளின் நாடு" என தலைப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். நடத்துங்கள். உங்கள் கட்டுரை உயர்தரமாய் இருக்கிறது.

said...

Man, this is really a good one. I am also in USA, Chicago. I do hear News Talk Radio. But, this is simply a great blog.

Well Done!!

said...

துளசி, சரித்திரம் எழுதலாம் தான், எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்க போவதுன்னு தெரியல்லை? பரவாயில்லை முயற்சி பண்ணுவோம். உங்க நியூசிலாந்து பகுதி என்னாச்சு? இதயம் பேசுகிறது மணியன் மாதிரி தொடர்ந்து 'பயணங்கள் முடிவதில்லையா'?

said...

சாணக்கியன், நீங்க பயப்பட்டதுல நியாயம் இருக்கு. இப்பதான், இந்து, திராவிடம், ஆரியம், அரேபியான்னு வந்தேறி சண்டை நிறைய தமிழ்மணத்தில வருதே. இருந்தாலும், இங்கே, இப்ப போய்கிட்டிருக்க முக்கியமான விஷயமுன்னு தோணுச்சு, அதான்..

said...

அய்யா நாதரே,

வணக்கமுங்க. நல்லா எழுதுறிங்க.

//இதில படைபலம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதிகம் பிடிச்ச பகுதி தான் இந்த வட அமெரிக்க பகுதி,

இதுக்கு என்னோட பிரேசில் கூட்டாளி வேற ஒரு கத சொன்னான். ஐரோப்பாகாரவுங்க இங்கன நிறைய வந்ததுக்கு காரணம் அப்ப அவங்க கண்டத்துல அந்த கால கட்டத்துல அவங்க உயர்ந்த மதகுரு வச்சதுதான் சட்டமாம்.அதனால அவங்க மெயின் பிரிவுல இருந்து புதிய கருந்துகளோட வேறு வழியை பாத்துகிட்டவங்க கொஞ்சம் பாதுகாப்பு, சுகந்திரம் வேண்டி இங்கன வந்தாங்களாம். அதுலையும் அவரு எம்பேச்ச கேக்காத நீங்க எல்லாரும் ஒரு ஸ்கேல எடுத்து வடக்கு பக்கம் , தெக்க எல்லாம் உங்களுக்குன்னு அங்க போய்டுங்கன்னு சொல்லிட்டாராம்.. சரின்னு சனங்களும் ஜிலோன்னு இங்க வந்துட்டங்களாம்.. இதுல அந்த நேரந்துல உலக நட்டாமையா இருந்த ஆங்கிலேய அண்ணமாருக்கு ஒண்ணும் பங்கு கொடுக்கலையாம். என்னா அவங்க எல்லாரும் அப்ப மெயின் பிரிவுல இருந்தாங்களாம்.கொஞ்ச நாள் கழிச்சி பாத்தா என்னாடா இவனுக இங்கன ஜிலோன்னு இருகாங்களேன்னு மண்ட காஞ்சி, இனிமே நாங்களும் மெயின் பிரிவு ஆதரவை ரிவர்ஸ் எடுத்துகிறோம்ன்னு சொல்லிட்டு இங்கன வந்து இருக்குறவங்களை விரட்டு விட்டு இங்கன வந்துடாங்களாம்.

ஆனாலும் முதல்ல வந்த அண்ணன்மாருக கொண்டுவந்த பழக்கவழக்கத்தை (உ.தா
:measurement, english et all) மாத்த முடியலயாம்.

// எல்லீஸ் ஐலேண்ட்ல இருக்கிற மியூசத்துக்கு போனா

எங்க குல தெய்வம் இவா மென்டஸ் அம்பாள் கூட ஹிச் படத்துல இங்க போன மாதிரி ஒரு ஞாபகம்.

//நிலபரப்பு எல்லையை கடந்தாலே போதும். அப்படி அந்நாட்டு எல்லையிலே இருக்கிற அமெரிக்க மாகாணங்கள், கலிஃபோர்னியா, நியூ மெக்ஸிக்கோ, டெக்ஸாஸ், அரிசோனான்னு

ரொம்ப சரியா சொல்லிடீங்க சார். போன வருசம் கூட அரிசோனா வழியா மெக்சிகோவுல இருந்து இங்கன் பஞ்சம் பொழக்க 32 ரா வந்தவுக வெயில் காலத்துல ஒரே நாள்ல செத்துபோனது பெரிய அதிர்ச்சி சார்.

// இந்த கனவுக் கோட்டைக்கு வரது ரொம்ப கஷ்டம்

++ . வந்த பின் அம்மா அப்பா, சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள இல்லாத கூட்டாளிகள் என்று யாருமே இல்லாத வாழ்வு நரகம் சார்.

//நம் தாயகமே நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துக்கிட்டு இருக்குங்கிறதும் மறக்க முடியாத உண்மை!

+++ . இத படிச்சி ஒருத்தராவது நம்ம ஊர் பக்கம் மாறுனா சரிதான். குறிப்பா வெளி நாட்டில் இருப்பதுதான் கவுரவம் என்று நினைக்கும் சொந்தங்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவரும்.

said...

சிவா, நீங்களும் போடுங்க, உங்க கண்ணோட்டத்தில எப்படின்னு!

said...

Sivabalan,
I felt it is appropriate to write this now, since so many hue and cries are going on now on this topic!

said...

கார்த்திக்,
வருகைக்கு நன்றி!
//ஆனாலும் முதல்ல வந்த அண்ணன்மாருக கொண்டுவந்த பழக்கவழக்கத்தை (உ.தா
:measurement, english et all) மாத்த முடியலயாம்.

எதை 'Unit of Measurement'(Imperial System) சொல்றீங்களா? அப்படின்னா, அது ஏன் இன்னும் இங்க தொடர்ந்து உபயோகிக்கராங்க, அதில உள்ள சூட்சமம், அதாவது Industryல பொழங்கற 'US Standards' எல்லாத்தையுமே சொல்றேன், அதை பத்தி உண்டான அரசியல், அதாவது இவங்க 'Market protection' பத்தி கதையே எழுதலாம். அப்புறம் 'english' ன்னு சொல்றது புரியலை, அது ஆங்கிலேயர் தாய் மொழி ஆட்சே! அப்புறம் அதுவும் எப்படி இந்நாட்டு பொழி ஆனுச்சின்னு ஒரு கதை இருக்கு. தெரியுமா உங்களுக்கு?

said...

அப்புறம்,
// எல்லீஸ் ஐலேண்ட்ல இருக்கிற மியூசத்துக்கு போனா

எங்க குல தெய்வம் இவா மென்டஸ் அம்பாள் கூட ஹிச் படத்துல இங்க போன மாதிரி ஒரு ஞாபகம்.-????

said...

Oh sure, Thanx for yor visit, Kirukan

said...

நாதரே,
'Unit of Measurement' இங்க கொஞ்சம் மாத்தி அவசரத்துல மாத்தி எழுதிடேன். நீங்க சொன்ன மாதிரி அதுக்கு ஒரு பதிவே போடலாம். English பத்தி நான் சொல்ல வந்தது Brit English க்கும் இங்க இருக்குற US Englishக்கும் இருக்குற வித்தியாசம், பேச்சு வழக்கு.

//இந்நாட்டு பொழி ஆனுச்சின்னு ஒரு கதை இருக்கு

இது எனக்கு தெரியாது.

//இவா மென்டஸ் அம்பாள் கூட ஹிச் படத்துல இங்க போன மாதிரி ஒரு ஞாபகம்.-????

நான் சொல்ல வந்தது Eva Mendes (ஹி ஹி) Hitch ங்கர படத்துல அந்த மீயுசியத்துக்கு போற மாதிரி ஒரு சீன் வரும் அவ்வளவுதான்.

said...

// இந்த 'Immigration Bill', குடியேறு சட்டம் என்னா அதுனால நம்ம ஊர்லருந்த வர மக்களுக்கும் என்னா துன்பங்கள்ன்னு கொஞ்சம் சொல்லலாமேன்னு தான் இந்த பதிவே!
// நமக்கு என்ன துன்பம்ன்னு சொல்லவேயில்லயே? எங்காவது சொல்லி இருந்தீர்கள் என்றால் Bold / "கட்டம் கட்டி" படிக்கிறவங்க வேலையை சுலபமாக்குங்கப்பா.

said...

இந்திய அமெரிக்கர்கள் என்று எழுதிய கையோடு ஏன் செவ்விந்தியர் என்ற பெயர் வந்தது; கொலம்பஸ் இந்தியா தேடிக் கிளம்ப வேண்டிய காரணம் என்னவென்பதையும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், நாம் கூடச் சொல்லா விட்டால் வேறு யார் சொல்வார்கள்? பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இந்தக்காரணம் தெரியாது; விளக்கியவுடன் வியப்பில் ஆழ்கிறார்கள், especially when they come to know that this "third world" country that is "taking away" most of their white-collar jobs today is at the source of the discovery of their country in the first place.

said...

கார்த்திக்,
இங்கிலீஷ், இங்கே எப்படி common language அச்சுங்கிறதுக்கு சரித்திரம் இருக்கு. அந்த காலத்தில அந்த அந்த நாட்டில இருந்து வந்தவங்க கூட்டம் கூட்டமா German enclave, Italina encalave, dutch enclave ன்னு வசிச்சு வந்தாங்க. ஆனா எல்லாத்துக்கும் தலைக்கூட்டம் இன்கிலீஷ் கூட்டம் ஆச்சே. வேற் மேற்கொண்டு அந்த அப்ப எல்லாமே இன்கிலீஷ் காலனிகள், முதல்ல வந்த 13 காலனியும். அவங்க நடத்தின ஆட்சி மொழி ஆங்கிலம். அப்புறம் Confedaration of colonies தான் federalஆ மாறுச்சு, அந்த கூட்டா சேர்ந்து அரசாங்கம் அமைச்சப்ப, சட்டம் , ஆட்சி மொழி எல்லாம் இன்கிலீஷ்ல தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஜெர்மன், இத்தாலியனும் தங்க மொழியில எல்லா அரசு ஆவணங்களை கொண்டு வரனும் போரடுனப்ப, அப்ப ஓட்டு போட்டு முடிவெடுத்து, குறுகிய மெஜாரிட்ட்டியில இன்கிலீஷ் மொழி ஜெயிச்சது. அதுதான் எல்லாரும் பேசனும்னு ச்ட்டம் வந்தது. அப்புறம் மற்ற மொழிகளை பள்ளியில சொல்லி கொடுக்கிறதே தடை செய்யப்பட்டது.

நீங்க சொன்ன Brit English, american english காரணம், உரு, வழக்கு மாற்றம் தான், அப்ப வந்த ஆப்பிரிக்க அடிமைகளும் இதுக்கு காரணம். கேட்ட Lexicon change ம்பாங்க! நிறைய நீங்க இதை பத்தி இணையத்தில தேடினா படிக்கலாம்.

said...

குறும்பன், துன்பம்னு சொல்லவந்தது, இந்த Immigartion Bill சட்டமான, விசா Cap, அதாவது கோட்டா, அப்புறம் மத்த law, எல்லாம் மாற வாய்ப்பு இருக்கு. அதனால நம்ம ஆளுங்களுக்கு விசா எல்லாம் கிடச்சு வர சிரமம் இப்ப. மேற்கொண்டு, இங்கேயே வந்து செட்டிலான நம் ஆட்கள் கிரீன் கார்டு வாங்கி, கல்யாணம் கச்சேரின்னு இந்தியாவுக்கு போய் சென்சிகிட்டு வந்தாலோ, ஏற்கனவே கல்யாணம் ஆகி பொண்டாட்டி, பிள்ளைங்களை தங்களோட சேர்ந்து இல்லாம, விசா வாங்க முற்பட்டாலோ, ஏகப்பட்ட சிக்கல் இப்ப தெரியுமா, waiting period 6 வருஷம்னு நினக்கிறேன். அதுனால இந்த சட்ட வரதுனால மற்ற சட்ட விதிமுறைகள் இறுக்கபடலாம்ங்கிறது என்னோட வாதம்!

said...

அருணகிரி, வருகைக்கு நன்றி! அதான் சொல்லி இருந்தேனே, உரப்பா சாப்பிடன்னு:-)
//especially when they come to know that this "third world" country that is "taking away" most of their white-collar jobs today is at the source of the discovery of their country in the first place. - you are absolutely right!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!.

said...

நாதரே,

தகவலுக்கு நன்றி..

said...

வெளிகண்ட நாதர் சார். அருமையான கட்டுரை. நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். பல விஷயங்கள் ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் ஒரு கோர்வையா நீங்க எழுதியிருக்கிறது ரொம்ப உதவியா இருக்கு.

நானும் இந்த ஊருக்கு வந்தத் தொடக்கத்துல நூலகத்துல இருந்து அமெரிக்க வரலாற்றைப் பற்றிய நூற்களைப் படித்தேன். அப்போது நிறைய விஷயம் புரிந்தும் புரியாமலும் இருந்தன. இப்போ படிச்சா புரியுமோ என்னவோ?

said...

விஷயம் புரிஞ்சா நல்லது குமரன்! இப்ப போய்கிட்டிருக்கிற 'Immigration bill' சர்ச்சையை பத்தி சும்மா ஒரு பதிவு போடலாமேன்னுதான்!