Wednesday, June 21, 2006

உஷ்ணமே உயிரின வகைக்கு காரணம்?

நம்ம ஊர்ல பார்க்கிற சில மிருகங்களை இந்த பக்கம்,அதாவது துருவ பிரதேசத்தில பார்க்க முடியாது, அது மாதிரி நம்ம ஊர்ல பார்க்கிற அநேக வகையான தாவரங்கள், செடி, கொடி எல்லாம் இந்த துருவபிரதேசப் பக்கம் பார்க்க முடியாது? இது ரொம்ப நாளா மண்டைய போட்டு அரிச்சிக்கிட்டிருந்த விஷயம். என்னடா நம்ம ஊர்ல பார்க்கிற சிங்கம், புலி, யானை எல்லாம் இங்கே விலங்கியல் பூங்கால்ல தான் புடிச்சி வச்சிருக்காங்க, நம்மலும் காடு, மலைன்னு இந்த தேசத்திலே சுத்திட்டமே ஒன்னும் கண்ணுக்கு அகப்பட மாட்டேங்கிதேன்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்துக்கிட்டே இருந்தது! சரி இதுக்கு என்னா காரணம், எப்படின்னு ஆராஞ்சப்ப தான், இந்த 'Ecology and Evolution theory' படிச்சா கொஞ்சம் விளங்குமான்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் தென்பட்டது! சரி அது என்னா தான்னு தேடி பார்த்தா, இங்கே ஒரு பட்டி மன்றமே நடக்குது, எல்லாத்துக்கும் காரணம் உஷ்ணம் தான்னு. அதாவது உலகத்திலே தேவை அதிகமா போற உஷ்ணம், குளோபல் வார்மிங், பத்தி நான் சொல்ல வர்றல்லை! பொதுவா நம்ம பூமத்திய ரேகைக்கு பக்கத்திலே இருக்கிற கடக ரேகை, மகர ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டல நாடுகள்ல அதிகமா காணப்படும் எல்லா இனங்களும் மேலேயோ இல்ல, கீழயோ கொஞ்சம் துருவ பிரதேசங்கள் பக்கம் நகர்ந்திங்கன்னா, அதிகமா இருக்காது! இதுக்கு காரணம் என்னா, இதெல்லாம் என்னக்கூத்துன்னு கொஞ்சம் பார்ப்போமா?

நான் சொல்ற இந்த டிரெண்டு, அதாவது ட்ராபிக்கல் தேசத்திலேருந்து நகர்ந்து துருவபிரதேசம் போனா, நீரிலும் சரி, நிலத்திலும் சரி இந்த பலவகையான உயிரினங்கள் வாழுவது வேறுபட்டிருக்கும்! இதுக்கு முக்கிய காரணம் உஷ்ணம், மிதமான வெப்ப மண்டலம் தான்! ஆக இந்த எக்காலஜிஸ்ட்ங்க எல்லாம் என்ன சொல்லவர்றாங்கன்னா, இந்த கிளைமேட்ல வர்ற காரணம் தான்னு! ஆனா இந்த மித வெப்ப மண்டலங்கள் எப்படி இந்த மாதிரி வகைக்கு ஒன்னா, பலதரப்பட்ட உயிரினங்கள் உருவாக காரணமா இருக்குதுங்கிறதை பத்தி சரியான விளக்கம் இல்லை, ஆனா இதுவே காரணம்ங்கிறது ஒரு மறுக்கமுடியாத உண்மையா இருக்குது!

ஒரு வாதம் என்னான்னா, அதிகமா சூரிய ஒளி கிடைப்பதால் உண்டாகும் இந்த 'போட்டோசிந்தசிஸ்'ங்கிர தாவர உணவு சேகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கிறதாலேயே இந்த மாதிரி வகைக்கு பல தாவரங்கள் உருவாகி இருக்குதுன்னு சொல்றாங்க! மேற்கொண்டு இந்த மித வெப்பமான சீதோஷ்ணநிலை அதிகமான உயிரினங்கள், தாவர வகைகளை உருவாக்கினாலும், அதிலெ எப்படி இவ்வளவு வெரைட்டியா இந்த தாவர, உயிரினங்கள் உருவாக்கப்படுது அப்படிங்கிற விளக்கம் இன்னும் தெளிவா வரவில்லை! ஒன்னுவேனா உண்மையா இருக்கலாம், எப்பவும் சீரா மாறாத சீதோஷ்ண வெப்பநிலை இருப்பதால், இந்த தாவரம் மற்ற உயிரினங்கள் அவ்வளவு சுலபமா அழிஞ்சு போவதில்லை! ஆனா துருவ பிரதேசங்களின் சீரா சீதோஷ்ணவெப்பநிலை இல்லாத காரணத்தால், அவ்வாறு தோன்றும் உயிரினங்களோ, தாவரவகைகளோ அவ்வாறு உயிர்வாழ முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், இல்லை பூமியின் சுத்தும் விசை ('centrifugal force') பூமியின் மத்தியரேகைக்கு அருகில் ஈர்ப்பதால், இந்த இட மாற்றம் ஏற்பட்டு அங்கே, அதிக வகை உயிரினங்கள், மற்றும் தாவர வகைகள் இருப்பதாக இன்னொரு தத்துவ உண்மையாக கூறுகிறார்கள்!

எந்த தத்துவம் உண்மையானாலும், ஒரு முக்கிய காரணம் என்னான்னா, இந்த வெப்ப மண்டலத்தில் மாறும் இந்த சீதோஷ்ண நிலைகளே இந்த உயிரின மாற்றங்களுக்கு காரணம், அதனால் தான் இத்தனை வகை உயிரினங்களும், தாவரங்களும் தோன்றி இருக்கலாம் என்கிற உண்மையை முன் வைக்கின்றனர்!

இந்த உண்மைகளை கண்டறிய ஒரே மாதிரியான தாவர வகை ஒன்று இந்த வெப்ப மண்டலத்தில் இருந்தும், துருவபிரதேசத்திலும் இருந்தும் எடுக்கப்பட்டு அதனுடய 'டிஎன்ஏ' ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது, அதாவது இந்த 'Molecular Evolution' என்கிற இந்த உரு மாற்ற முறைகளை சோதித்து பார்த்த பொழுது ஒரு உண்மை விளங்கியது! அதாவது வெப்பமண்டல பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தாவர வகையின் அந்த 'டிஎன்ஏ'க்குள் இருக்கும் 'nucleotides' என்றழைக்கப்படும் நுண்ணனு துகள்களின் மாற்றம் இரட்டிப்பாக இருந்தது, துருவப்பிரதேச பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட அதே இன தாவரத்தின் 'டிஎன்ஏ' உருவமாற்றம் பார்க்கும் பொழுது என்று அறியப்பட்டது! இந்த உரு மாற்றம் ஆராய்ச்சி நேராக ஒரு உண்மையை விளக்கி உள்ளது, அதாவது உஷ்ணப்பிரதேசத்தில் இந்த மாற்றம் அதிவேகத்தில் நடைபெறுவது!

இந்த உண்மைக்கான விளக்கம் என்னவென்றால் இந்த உஷ்ண மண்டலத்தில் அந்த ரசாயண மாற்றம் அதி வேகமாக நடை பெருவதாலும், பிறகு 'மெட்ட்பாலிக் ரேட்' என்று சொல்லக்கூடிய உட்கொள்ளும் உணவை மாற்றி சக்தியாக எடுத்துக்கொள்ளும் முறை தாவரங்களிலிருந்து, மிருகங்கள், மனிதர்கள் வரை அதிகமாக உள்ளது இந்த வெப்பமண்டலத்தில் வசிப்பவர்களுக்கு, இருப்பவைகளுக்கு! இந்த அதிரிகப்பட்ட இந்த மெட்டபாலிஸம் என்ற மாற்றம் ஆக்ஸிஜன் சத்துடன் கூடிய இந்த ஃப்ரி ரேடிக்கல்ஸ் என்றழைக்கப்படும் இந்த நுண்ணனுக்கள் (Molecules) உருவாவதால், அதுவே இந்த உரு மாற்றத்துக்கு முக்கிய காரணம் என்பதால், வகை வகையான தாவரங்களும்,உயிரினங்களும் நீரிலும், நிலத்திலும் காணமுடிகிறது!

இந்த அதிக வகையான தாவரங்கள் அதிகம் இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றினாலும் அதன் மொத்தம் தோன்றி உள்ள கூட்டுத்தொகை எண்ணிக்கையை பார்க்கும் பொழுது அது கம்மியாக இருக்கிறது, இதே இன தாவர வகைகளையோ, இல்லை உயிரினங்களையோ குளிர் பிரதேசத்தில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது! ஆனால் உங்களுக்கு அதே இனத்தை சேர்ந்தவைகளின் வகைகள் அதிகம் இருக்கும்! உதாரணத்துக்கு ஊர்வனவை என்று பார்க்கும் பொழுது எத்தனை வகையான பாம்புகளிலிருந்து கரப்பான், பல்லி, பூரான், தேள் என்று ஏகப்பட்டதை அடுக்கி கொண்டே போகலாம்! இந்த வெப்பத்தினால் மாற்றங்கள் ஏற்பட்டு இந்த மாலிக்கியூலர் ப்ராஸஸ் என்கிற மாற்றம் ஏற்பட்டலாம், அதை வெவ்வேறு வகை இனங்களாக உரு மாற்றும் ('Mutation') நடைப்பெறுவதால் உங்களுக்கு அந்த இனத்திலேயே பலவகையான ஜந்துக்களை பார்க்க நேரிடுகிறது! இதே இனம் குளிர் துருவ பிரதேசப்பகுதிகளில் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான், ஆனால் அந்த இனத்தில் மாறுபட்ட வகைகள் கொஞ்சம் கம்மியாக இருக்கும்!ஆக மாற்றங்களின் வேகம் கூடுவதால், வகைகளின் மாறுபாடும் அதிகம் என தெரியவருகிறது!

ஆக உருமாற்றத்திற்கு காரணம் இந்த வெப்பம், ஆதலால் இன வகைகளும் அதிகம்!

இந்த காரணத்தால் தான், இந்த குளிர் பிரதேசங்களில், பாம்பு, பல்லி, பூரான், தேள் என்று ஒன்னும் இருப்பதில்லை! ஆனா நம்ம ஊர்ல இது ஜாஸ்தி! இது விலங்குகளுக்கு ன்னு இல்லை, தாவரவகைக்கும் பொருந்தும்! அதனால தான், இதெல்லாம் அதிகம் பார்க்காம நம்மல பாம்பாட்டிங்கன்னு இவளவு நாளா சொல்லிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரு பசங்க, பார்த்தீங்களா? குளிர்பிரதேச உண்மைகள் இன்னும் எவ்வளவு இருக்கோ, நம்ம ஊரு ஜனத்தொகை மாதிரி இங்கே அதிகம் இல்லையே, அதுக்கும் உஷ்ணம் தான் காரணமோ-:)

5 comments:

said...

உஷ்ணமே உயிர். உஷ்ணம் போச்சுன்னா செத்துப் போச்சு.

இன்னிக்கு 3 டிகிரி.

said...

இன்னிக்கு 3 டிகிரி.//கம்பளி இழுத்து போத்தி படுக்காம, தமிழ்மணத்தை சுத்திக்கிட்டிருந்தா உஷ்ணம் தான் அதிகமாகும்!

உஷ்ணமே உயிர். உஷ்ணம் போச்சுன்னா செத்துப் போச்சு.//இப்ப தான் ஏன்னு தெரியுது-:)

said...

சார்

விசயம் உள்ள உபயோகமான பதிவு!!

மிக்க நனறி!!

said...

வணக்கம் வெ.நாதர்!

தங்களை ஆறு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பங்குகொள்ளுங்கள்.

http://vovalpaarvai.blogspot.com/2006/06/blog-post_115098459923649714.html

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!
நல்ல பதிவு.
இந்த சந்தேகம் எனக்கும் நீண்ட நாளாக இருந்தது. பூமியில் கிழக்கிலிருந்து, மேற்கே செல்லும் போது, சில தாவர வகைகளும், ஜந்துக்களும் (மனிதனும் கூட) எடையில் அதிகமாகத்தான் இருக்கின்றன (ஓரெகோன் ல இருக்கிற ராட்சச பூசனிக் காய், கிழக்கே உள்ள நாடுகளில் விளைவது இல்லை). இதற்கு நீங்கள் சொல்லும் Metabolism கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

//ஒன்னுவேனா உண்மையா இருக்கலாம், எப்பவும் சீரா மாறாத சீதோஷ்ண வெப்பநிலை இருப்பதால், இந்த தாவரம் மற்ற உயிரினங்கள் அவ்வளவு சுலபமா அழிஞ்சு போவதில்லை! ஆனா துருவ பிரதேசங்களின் சீரா சீதோஷ்ணவெப்பநிலை இல்லாத காரணத்தால், அவ்வாறு தோன்றும் உயிரினங்களோ, தாவரவகைகளோ அவ்வாறு உயிர்வாழ முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும்//

சீதோஷண இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், துருவ இடத்திற்கு வாழ வரும் போது, அவர்கள் ஆயுள் குறைகிறது என கேள்விப்பட்டேன். அதாவது, உதாரணத்திற்கு இந்தியாவில் ஒருவர் வாழ்ந்தால் அவர் ஆயுள் 90 வயதென்றால், அவர் அமெரிக்கா வில் வாழும் போது அவர் ஆயுள் 60 (அ) 70 ஆக குறைகிறது. இது உண்மைதானா??. இதற்கும் மண்டல வேறுபாடிற்கும் அதிக தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன். இது பற்றிய தங்கள் கருத்து என்ன?
நன்றி!!