Sunday, June 11, 2006

என் இனிய தமிழ் மண மக்களே!


நான் உங்கள் வெளிகண்ட நாதர் பேசுகிறேன்! பத்தோடு ஒன்றாக இல்லாமல் முத்தோடு முத்தாய் பதிவிட நட்சத்திர அழைப்பு விடுத்தனர் நம் தமிழ்மண நிர்வாகத்தினர்! இதோ இனி வரும் இந்த ஒரு வாரமும் உங்களோடு அதிகமாக உறவாட போகிறேன். தமிழ்மண வானில் நட்சத்திரமாய் ஜொளிக்க அளித்த வாய்ப்பு! நான் ஓடி ஆடிய பாலத்திற்கும் மண்ணுக்கும், ஆட்ட பாட்டங்களுக்கும், கற்றது கல்லாதது என ஆயிரம் விடயம் பேச உங்களை அழைத்து செல்ல போகிறேன். இதோ என் இனிய ப்ளாக்கரும், இ-கலப்பையும் எனக்கு உதவ, இசைமடுத்து செவி சாய்க்க ராஜாவின் பாடல்கள் சிலவற்றை துணைக்கழைத்து, சினிமாவே முக்கிய அங்கமாக வாழ்ந்து களித்த நாட்கள் கொஞ்சத்தினை திருப்பி புரட்டி, உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்! வாருங்கள் ஆட்டம் காணலாம்!
(இதன் பின்னே வரும் இசை நாதத்தையும், என் முகவுரையையும் கேட்க மறந்து விடாதீர்கள், ஆதாலால் உங்கள் ஒலி பெருக்கியை குறைத்தோ, இல்லை பூட்டியோ வைத்திருந்திருந்தால், அதிகபடுத்தியோ, இல்லை திறந்தோ கேளுங்கள்!)

என்ன ரொம்ப பாரதிராஜா பில்டப் கொடுத்து ஓப்பனிங் ஆரம்பிச்சிட்டேனா! வேறே வழியில்லை, தமிழ் மண முகப்பிலே ஒரு வாரம் நம்ம ஐயிட்டத்தைதான் நீங்க முதல்ல பார்த்தாகணும்! ஒகே மேலே போவோம். இந்த எழுத்துங்கிறதுலே சின்ன புள்ளையிலேயிருந்தே கொஞ்சம் ஆர்வம். அதுவும் பள்ளி நாடகள்ல எதையாவது கிறுக்கி, கதை கவிதை அப்படின்னு எழுதுவேன். சில சமயம் புஸ்த்தகத்திலே வர படத்தை பார்த்து படம் கூட வரஞ்சுக்கிட்டு இருப்பேன்! ஆனா எழுத்திலே ஆர்வமா இருக்க காரணமானது இலக்கியமெல்லாம் படிச்சின்னு சொல்ல மாட்டேன். எல்லாரையும் போல படிச்ச ஆனந்த விகடன், குமுதம் பத்திரிக்கைகள் தான்! இதை பத்தி ஒரு தடவை'இலவுகாத்தக்கிளி' கதை கதச்சப்ப சொல்லி இருந்தேன்!

அதுவும் தமிழ்ல கட்டுரைகள் பத்தாவது, பதினொன்னாம் கிளாஸ் படிச்சப்ப வருமே அந்த தமிழ் இரண்டாம் பேப்பர், அதிலே ஆர்வத்தோட எழுதினது தான் அப்ப ஆரம்பம்! பிறகு நடிக்கரதுல ஆர்வம் வந்ததாலே, நானே நாடகம், கதைகள் எழுத ஆரம்பிச்சேன்! அதுவும் இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்ந்தேன்னோ, அப்ப நாலு பக்கம் எழுதின சிறுகதையை பார்த்த என் ரூம்மேட்டு உனக்கு நல்லாவே எழுத வருதுன்னு உசுப்பு ஏத்த அப்ப ஆரம்பிச்சது இந்த எழுத்து! அதிகமா நாடக வசனங்கள் அப்படியே வந்து விழும், அது நான் பார்த்த் சினிமாக்களின் தாக்கம்ன்னு நினைக்கிறேன். அது தான் சில நல்ல நாடகங்கள் கொடுக்க எனக்கு வழி வகுத்துச்சு. தமிழ் கவிதைகள் அவ்வளவா எழுத மாட்டேன், ஆனா எப்பவுமே கூட்டத்தை அசத்துனும்னு எனோட தமிழ் மன்ற செயலர் ராமனாதன், என்னை தெம்மாங்கு கவிதைகள் எழுத சொன்னதலே, அதை கொஞ்சம் எழுதுவேன். அதிலேயும் எழுத்துகள் அவ்வளவு உக்கிரம் இருக்காது, ஆனா அதை அழகா எதுகை மோனையா மேடையிலே பாடி காட்டினா, எப்பவுமே ஒன்ஸ் மோர் போங்க! இப்படி தான் ஆரம்பிச்சது நம்ம எழுத்து!

பிறகு இஞ்சினியரிங் முடிச்சு வடக்கே வேலைக்கு போனோன்ன தமிழே மறந்து போச்சு. நாடகம், கூத்து, பாட்டுன்னு திரிஞ்ச நான் பொண்டாட்டி புள்ளை, வேலைன்னு ஐக்கியமாயிட்டேன். பிறகு வந்தது இணையம், அதில முரசு அஞ்சல் முறையிலே தமிழ் தட்டெழுத்து எழுதி பார்த்ததோட போச்சு. இப்ப தான் இந்த யுனிக்கோடு, இகலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம்னு வந்தோன்ன நம்ம பழைய ஆர்வம் திரும்ப தூக்கிக்கிச்சு! இடைப்பட்ட காலத்திலே ஆங்கிலத்திலே, படிச்சு, செம்மை பண்ணிக்கிட்ட சில அறிவு விஷயங்கள் அதிகமா தமிழ்ல பார்க்கமுடியலேயேங்கிற ஆதங்கம் இருந்துச்சு. அதையும் அழகா, புரிபடும் மாதிரி சொல்லி தமிழ்ல கட்டுரைகள் போட முயற்சி பண்ணி, அதுவும் சொல்லு தமிழ்ல சொல்லி வந்த என் பதிவுகள் நிறைய வரவேற்பு இருந்த தாலே அதையே இன்னும் நிறைய பயன்படக்கூடிய விஷயங்கள் நிறைய எழுதனும்னு தோணுச்சு!

ஆரம்பத்திலே ப்ளாக்கர் என்னமோ ஆரம்பச்சது சும்மா நம்ம பால்ய பருவ நினைவுகள் எவ்வளவோ குறும்புடன் கழிந்ததை பதிவு பண்ணலாமுன்னு!. அதுவும் அந்த காலத்திலே என்னை பாதித்த பல விஷயங்களை எழுதலாமுன்னு ஆரம்பிச்சது. பிறகு பால்யம் மட்டுமில்ல என்னை எது எது பாதிக்கிதோ, ஆர்வமுடன் விஷயம் சொல்ல முடியுதோ, அதையும் தொடர்ந்து எழுதுவோமின்னு, இதோ எழுத ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷம் கூட ஆகல்லை, ஆனா நூறு பதிவுகள் வரை போட்டாச்சு ! அதிலேயும் சும்மா வெறுமன வெட்டியா அதிகம் பேசமா, நல்லபடியா நல்ல கருத்துக்கள் கொண்ட சப்ஜெக்ட்கள், விஞ்ஞான விஷயங்கள் அப்படின்னு தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்றேன். அதனால நட்சத்திர வாரத்துக்குன்னு தனியா ஒன்னும் அதிகம் உழைக்கப் போறதில்லை!

சும்மா இது ஒரு போக்கஸ் லைட் நம்ம மேல விழுந்த வாரம். நாடகங்கள்ல கும்பலா வசனம் பேசிக்கிட்டே நிறைய காட்சிகள் நகரும், சில சமயம், அது கிளைமாக்ஸாக்கூட இருக்கலாம், திடீர்னு போக்கஸ் லைட்டு மட்டும் விழுந்து உணர்ச்சியா வசனம் பேசி நடிக்கனும், ஏன்னா சீன்னு முக்கியமா எல்லாரையும் கவர்ந்து, சில திருப்பங்களையோ, இல்ல அதிர்ச்சிகளையோ கதையின் போக்கினை மாத்த அந்த காரெக்டர் மேலே போக்கஸ் விழும்!
அது மாதிரி கும்பல கோய்ந்தா போட்ட ஆளை, திடீர்னு போக்கஸ் போட்டு காமிச்சிட்டாங்க, என்னாலே முடிஞ்ச மட்டும் நல்ல கட்டுரைகள், விஷயங்கள், அனுபவங்கள், சில பயண அனுபவங்கள் எல்லாம் எழுதி போட்டு விடுகிறேன். ஆக தொடர்ந்து இந்த வாரம் வந்து படிச்சு, ரொம்ப அந்நியோனியமாக பின்னோட்டம் போட்டு கதை அடிக்கலாம் வாங்க!

ஆக வாய்ப்புக் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நன்றி! தொடர்ந்து இந்த வாரம் நம்ம கூட வந்து எல்லாரும் சேர்ந்த கூட்டு நட்சத்திர கேலக்கஸி வாரமாக்குவோம், வாருங்கள் என் அன்பு தமிழ்மண மக்களே!

80 comments:

said...

வாழ்த்துக்கள்.

பல விஷயங்களை எதிர்பார்க்கிறேன்.

said...

வாழ்த்துக்கள் வெளிகண்ட நாதரே.கலக்கல் வாரமாக கொடுப்பீர்கள் என்பது தெரியும்.இந்த வாரத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

said...

வாங்கையா வாங்க.சாதாரணமாகவே அடிச்சி ஆடுகிற ஆளு, இப்ப கேட்கணுமா :-)

said...

இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திர வாரம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

said...

ur personal profile also seems to be very interesting! I've been trying to get ur mail id, u know! :-)

said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் உதயகுமார்.

அட்டகாசமான வாரமாக இருக்கப்போகுது போல.

ம்ம்ம் நடத்துங்க. ஜாம் ஜாமுன்னு நடத்துங்க.

said...

அன்பின் வெளிகண்ட நாதர்,
இவ் வார தமிழ்மண நட்சத்திரமே!
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் நட்சத்திர வார முதல் பதிவே அசத்தல். பாரதிராஜா, மற்றும் அண்ணன் வைகோ போன்றவர்களை நினைவுபடுத்தியது உங்களின் குரல்.

உங்களின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். அரிய பல விடயங்களை மிகவும் சுலபமாக அனைவரும் புரியக்கூடிய வகையில் அழகாகத் தரும் உங்களின் எழுத்து நடையை பல தடவைகள் இரசித்துப் படித்திருக்கிறேன். குறிப்பாக சில மாதங்களுக்கு முன் நீங்கள் எழுதிய சூடான் ஆதிகுடி மக்கள் பற்றிய கட்டுரை இன்றும் என் மனதில் அப்படியே உள்ளது.

இந்த வாரம் முழுவதும் நல்ல படைப்புகள் உங்களிடமிருந்து வருமென்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

said...

என் பேரை வச்சிருக்கீங்க, கலக்குவீங்கன்னு உறுதியா சொல்வேன்!!!

said...

வாழ்த்துகள் நண்பரே!

அருமையான பதிவுகள் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

said...

வாழ்த்துகள்...

said...

வாங்க நன்மனம், நீங்கள் எதிர்பார்ப்பது போல, பல விஷயங்களை பதிவிட எண்ணம்!

said...

நன்றி செல்வன், உங்க அளவுக்கு கலக்க முடியாது, பாண்டேஜ் பாண்டியன் மாதிரி நகைச்சுவை பதிவுகள் எழுதறது கொஞ்சம் கஷ்டம் தான்:-)

said...

உஷா, ரொம்ப அடிச்சி எங்கேயாவது எகிறிடப் போப்போது, நிதானமா ஆடலாம்! எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும்-:)

said...

நாமக்கல் சிபி, ஸ்ருசல், நனறி!

said...

அட வாங்க ராம்கி, ரஜ்னி இல்லாம இந்த வாரம் போகாது! நான் வேணும்னா உங்களுக்கு மெயில் அனுப்புறேன்! புரெஃபைல் இருக்கிற இமெயில் ஓகேயா?

said...

வாங்க துளசி, கூட இருந்து எல்லாத்தையும் ஜாம் ஜாமுன்னு முடிச்சி கொடுத்துட்டு போவணும்-:)

said...

நன்றி வெற்றி, நல்ல படைப்புகளை தர முயற்சிக்கிறேன்! கூடிய மட்டும் நிறைய விடயங்களை தரவும் முயற்சிக்கிறேன்!

said...

உதயகுமார், நம்ம பேருக்கு தகுந்த மாதிரி கலக்கிடுவோம்-:)

said...

கண்டிப்பாக உண்டு பரஞ்சோதி, பாரதிராஜாவின் பரஞ்சோதி பத்தி பேசலாமுன்னு இருக்கிறேன், கண்டிப்பா மறந்துறாம வந்து நம்ம பதிவை படிங்க!

said...

நன்றி ஷங்கர்!

said...

இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்க இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாங்க வெளிகண்டநாதர்,

நட்சத்திர வாழ்த்துக்கள்! பெயர்க்காரணம் அறிந்தோம்! :)

இப்போதைக்கு தென்னிந்தியாவில் பிரகாஷ்ராஜ்க்குதான் போட்டியே இல்லை! தமிழ், தெலுங்கு, கன்னாடா ன்னு அனைத்து மொழி ஹீரோக்களையும் துரத்தித்துரத்தி அடிக்கறாரு! நீங்க மட்டும் கோடம்பாக்கம் வந்தீங்கன்னா... ஹிஹி...

said...

வாழ்த்துகள் நாதரே,

பலவகையான பதிவுகள் இட்டுத் தாக்குவீங்கன்னு எதிர்பார்ப்புடன்.

பெத்தராயுடு

said...

பாராட்டுக்கள் நண்பரே.

வித்தியாசமான படைப்புகள் எழுதி நட்சத்திரத்தை பிரசாசமாக்குங்கள்.

said...

இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துக்கள். சும்மா அட்ச்சி தூள் கெளப்புங்க....

said...

இந்த வார நட்சத்திரமே,
வெளிக்கண்ட நாதனின் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் உதயா இந்த வாரம் இனிய வாரமாக திகழ அந்த வெளிக்கண்ட நாதர் அருள் புரியட்டும்.

வாழ்த்துக்கள்.

said...

அதென்ன வெளிகண்ட நாதர்னு பேருன்னு ரொம்ப முந்தியே நான் கேட்டு பதில் சொன்னீங்க..ஆனா இப்பதான் நிஜப் பெயர் இதுன்னு நிச்சயமா தெரியும். துளசி மட்டும் உங்களை உதயகுமார்னு 'கூப்பிடறதை' பார்த்திருக்கேன்(கேட்டுருக்கேன்?).

நட்சத்திர வார வாழ்த்துக்கள். அரிதாரம் இன்னும் இருக்கில்ல?

said...

வாழ்த்துக்கள் வெளிகண்ட நாதர். ரொம்ப நாளா நீங்கதான் உதயகுமார் என்று நினைத்திருந்தேன்.
சும்மாவே உங்க பதிவு வாசிக்காமலிருக்க முடியாது. நட்சத்திர வாரத்தில் கண்டுக்காம இருக்க முடியுமா? கலக்குங்க.

said...

நட்சத்திரவாரத்திற்கும், நல்ல பல படைப்புக்களுக்கும் இனிய வரவேற்பு.
வாருங்கள்
வணக்கம்.

said...

இந்த வார நட்சத்திரத்திற்கு என் இனிய வாழ்த்துக்கள்.

said...

என்றென்றும் விண்மீனாய் தினம் ஒரு பதிவு போட்டு தினசரி நடத்தும் வெளிகண்ட நாதரே. நீங்க தினம் போடற பதிவுகளையே உடனுக்குடன் படிக்க முடியாம திண்டாடுறவன் நான். இப்ப தமிழ்மண விண்மீனாய் வேற அயிட்டீங்க. இந்த வாரம் என்ன ஒரு முப்பது பதிவாவது போடுவீங்களா? எல்லாத்தையும் இந்த வாரம் படிக்கிறது கஷ்டம் தான். என்ன எல்லாப் பதிவுகளும் அருமையா இருக்கும். அதனால ஒரு மாசம் ஆனாலும் எல்லாத்தையும் படிச்சுற வேண்டியது தான்.

வாழ்த்துகள் வெளிகண்டநாதர்.

said...

வணக்கம் வெளிகண்ட நாதர் ,

நீங்கள் இனிமேல் நட்சத்திரம் கண்ட நாதர்,வாழ்த்துகள்! ஆரம்பத்தில் படிக்கவில்லை உங்களது எனையாண்ட அரிதாரம் இப்பொழுது தான் படித்து வருகிறேன், அதே போல் சுவையாக உங்களது கலையுலக படையெடுப்பின் அனுபவங்கள் இருக்கும் என நினைக்கிறேன் ,எழுதி தூள் கிளப்புங்க நாதர்!

said...

பாபா ஐயா (உதயகுமார் ஐயா, வெளிகண்ட நாதர் ஐயா) பதிவை படிக்காமலும் உங்கள் குரலைக் கேட்காமலும் நீங்கள் நட்சத்திரம் என்பதை அறிந்தவுடன் முதல் பின்னூட்டம் இட்டேன். இப்போது தான் பதிவைப் படித்தேன். உங்கள் குரலையும் 'சிவசக்த்யா யுக்தோ யதி பவதி'ங்கற எனக்கு மிகவும் பிடித்த சௌந்தர்யலஹரிப் பாடலையும் கேட்டேன். புதுமையும் அருமையுமான வித்தியாசமான முயற்சி. நன்றாக இருக்கிறது. :)

said...

வாழ்த்துக்கள் வெளிகண்டநாதரே! உங்களின் அறிவியல் கட்டுரைகளும் அனுபவக் கட்டுரைகளும் எனக்கு பிடித்தவை. இந்த வாரத்தில் பலதரப்பட்ட இடுகைகள் இருக்குமென்று பாரதிராஜா பாணியில் கூறியிருக்கிறீர்கள். இரசிகர்கள் காத்திருக்கிறோம்.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வெளிகண்டவரே!

அடிச்சி ஆடுங்க.....

said...

வாங்க வெ.க.நாதரே,

உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கறோம். நல்லதொரு வாரத்தைத் தாருங்கள்.

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் வெளிகண்ட நாதரே...நிறைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...

said...

வாழ்த்துகள் வெளி கண்ட நாதர்.

சும்மாவே நீங்க பல விதமான டாபிக்லயும் பதிவு போடுவீங்க.. நட்சத்திர வாரம் வேற.. கலக்குங்க.. :). காத்திருக்கோம்..

said...

நான் நினைத்ததைவிட மூத்தவராக உள்ளீர்கள். நல்ல வாரமாக மலர வாழ்த்துக்கள்.

said...

வெளிகண்ட நாதரின் விளிசங்கின் ஓசை கேட்டு மகிழ்ந்தேன்
ஜொலிக்கும் விண்மீனாய் ஏழு நாட்கள் தவழ்ந்து
களிக்க வைக்க வேணுமாய்க் கட்டளை இடுகிறேன்!
வாழ்த்துகள்!!

said...

நாகை சிவா, மிக்க நன்றி!

said...

வாங்க இளவஞ்சி, நமக்கு கன்னடம் தான் தெரியாது, மத்தபடி தமிழ், தெலுங்கு, மாலையாளம், பூந்து விளையாடிலாம்! ஏன் டப்பிங் பேசிட்டா போவுது~! ஆமா நீங்க சாப்பாடு பொட்லம் வாங்கி கொடுத்திங்கல்ல, அந்த டைரக்டர் பசங்களை தெரியுமில்லை, கேட்டு விசாரிச்சு எழுதுங்க!

said...

பெத்த ராயுடு, பலவகை இருக்கும், மறக்காம் வந்திடுங்க!

said...

வித்தியாசமான படைப்புகள் இருக்குமென நம்புகிறேன் நிலவு நண்பரே!

said...

அட்ச்சி தூள் கிளப்பிட்டா போது சுதர்சன்.கோபால்!

said...

மஞ்சூர் ராசா, வெளிகண்டரின் அருளால் நல்ல இனிய வாரமாக வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள் பல!

said...

தருமி சார், அரிதாரமில்லாமலா-:)

said...

தாணு, சாட்சாத் நானே தான்! தொடர்ந்து வாரம் மூழுக்க நம்ம வீட்டுக்கு வந்து கையை நனைச்சு, இல்லே கிளிக்கிட்டு போங்க!

said...

மலைநாடன், சிவ முருகன் நன்றி!

said...

குமரன், இந்த ஒரு வாரம் மட்டும் 'backlog' இல்லாம பார்த்துக்குங்க!! அப்ப அப்ப சூடா படிச்சி முடிச்சி பின்னோட்டம் போட்டுடுங்க!

said...

சார்

நட்சத்திர வார பதிவுக்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுச்சு கலக்குங்க சார்...

said...

சார்

நட்சத்திர வார பதிவுக்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுச்சு கலக்குங்க சார்...

said...

கலக்குங்கள் நாதர்! வாழ்த்துக்கள்...

said...

வவ்வால், நம்ம அரிதாரம் தான் தமிழ்மணத்திலே பேமஸ், தொடர்ந்தூ வந்து படிங்க!

said...

மணியன், நல்ல கட்டுரைகளை தர முயற்சிக்கிறேன்!

said...

வாய்யா, மோகன் தாஸ்ஸு, என்ன ஆளையே கொஞ்ச நாளு காணோம்!

said...

நன்றி செந்தழல் ரவி, உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

said...

வாம்மா பொன்ஸ், ரெகுலரா வந்து போங்க!

said...

முத்து, இன்னும் இளமை ஊஞ்சலாடிக்கிட்டுத்தான் இருக்கு!~

said...

வாங்க எஸ்கே, நன்றி!

said...

சிவபாலன், என்ன ரொம்ப லேட்டு நம்ம வீட்டு பக்கம் வந்து பாக்க! அடுச்சு கலக்கிடுவோம்!

said...

//வவ்வால், நம்ம அரிதாரம் தான் தமிழ்மணத்திலே பேமஸ், தொடர்ந்தூ வந்து படிங்க!

//

????

அப்படியா? அப்ப நான் மட்டும் ஏன் தொடர்ந்து அதைப் படிக்காம விட்டுவிட்டுப் படிக்கிறேன்? ரசனையில்லாத ஜென்மமோ நான்????? :-((((

said...

//வவ்வால், நம்ம அரிதாரம் தான் தமிழ்மணத்திலே பேமஸ், தொடர்ந்தூ வந்து படிங்க!

//

????

அப்படியா? அப்ப நான் மட்டும் ஏன் தொடர்ந்து அதைப் படிக்காம விட்டுவிட்டுப் படிக்கிறேன்? ரசனையில்லாத ஜென்மமோ நான்????? :-((((

said...

முந்தையப் பின்னூட்டம் உங்களைக் கலாய்ப்பதற்காக. :-)))))

said...

வெளிகண்ட நாதரினி, விண்வெளி கண்ட நாதராகிவிட்டார்! நட்சத்திரம் அல்லவா? அருமையான விஞ்ஞான, செறிவுள்ள துவக்கம். வாழ்த்துக்கள்!!
மரபூர் ஜெய.சந்திரசேகரன்
http://maraboorjc.blogspot.com

said...

உங்கள் பக்கம் இப்போதான் வர்றேன்,
வாழ்த்துக்களுடன் மீண்டும் நாளை

said...

குமரன், ரொம்பதான் கலாய்க்கிறீங்க-:)

அரிதாரம் எல்லா ஒன்னா பிரிண்ட் எடுத்துட்டு போய் மொத்தமா படீச்சிடுங்க, விட்டுவிட்டு படிக்க தேவை இல்லாமப் போயிடும்-:)

said...

வாங்க சந்திரசேகரன், வணக்கம், நன்றி!

said...

தங்கள் வரவு நல்வரவுவாகுக சித்தன். சித்த மருத்துவம் பத்தி பதிவு போடறீங்களா??

said...

வாழ்த்துக்கள் நாதர், நட்சத்திரதிற்கும் முகம் காட்டியதிற்கும். சீக்கிரம் நேரில் சந்திப்போம்

said...

வெளி கண்ட நாதர் சார்,

நட்சத்திரத்தை வாழ்த்த வயதில்லை வணக்குகிறேன் :-). பின்ன உங்க போட்டோவை பார்த்த அப்புறமும் வேற என்ன சொல்ல, இந்த ஸ்டாண்டர்ட் வசனத்தை விட்டா.

ஹும் இன்னும் ஒரு காரணம் இருக்கு..நான் முந்தி வேலை பார்த்த கடைல என்னோட ரிப்போர்டிங் V.P உங்களை மாதிரியே இருப்பார்.என்னோட கேரியர்ல அவர் கூட வேலை பார்த்தது ஒரு மைல் ஸ்டோன் எனக்கு.

உங்க போட்டோவை பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னோட பங்குக்கு மெயில் அனுப்புனா அவனுக்கும் ஒரே ஆச்சர்யம். உலகத்துல ஒரே மாதிரி 7 பேரு இருப்பாங்கன்னு சொல்லுறது நிஜம்தான் போல.

'சிவசக்த்யா யுக்தோ யதி பவதி'ங்கற சௌந்தர்யலஹரிப் பாடலுக்கு அப்புறம் வர்றது உங்க வாய்ஸ்சா ?

said...

வாங்க சிவா, கடைசியில் முகம் கண்டுக்கிட்டீங்க! சீக்கிரமே சந்திப்போம்!

said...

அப்படியா கார்த்திக்! உங்க அந்த VP போட்டோவை அனுப்புங்க, ஒன்னா இருக்கும் உருவத்தை நானும் பார்க்கிறேன்!

அதே மாதிரி 'சிவா' ன்னு ஒரு படம் வந்தப்ப, அதில வந்த நாகர்ஜுணாவை பார்த்துட்டு எல்லாரும் நீ அவனைப் போல இருக்கேம்பாங்க, ஒரு முகச்சாயல் அப்படி இருந்ததும் உண்மை! இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி உலகத்திலே ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்களோ!

பாட்டுக்கப்பறம் வருவது என் குரலே!

said...

அடடடடா! இந்த வார நட்சத்திரம் நீங்கதானா? வாழ்த்துகள், பாராட்டுகள்.

கலக்குங்க.

said...

வெளிகண்ட நாதர் சார்,

எனக்கு V.P யோட போட்டோ சிக்கல.ஆனா ஒரு பிரின்டட் போட்டோ வீட்டுல இருக்குன்னு நினைக்கிறேன்..

இந்தியா போகும் போது அதை ஸ்கேன் பண்ணி அனுப்புறேன்.

said...

வருகைக்கு நன்றி சுந்தர்!

said...

எப்ப கிடைக்கிதோ அப்ப அனுப்பங்க, கார்த்திக்!

said...

சார்,

உங்க போட்டோவை பார்த்ததும் மிகவும் பரிச்சயமான முகம் போன்று தோன்றியது.

said...

hi thaths :-) intha vara natchathiram neengalo ...kalakapovathu yaru?? thaths than:-)