Monday, March 13, 2006

நியூசிலாந்து பகுதி-துளசிக்கு பிராக்ஸி!

துளசி லீவு எடுத்துட்டு போனாலும் போனாங்க, திரும்பி வந்தும் நியூசிலாந்து பகுதி பதிவு போடமாட்டேங்கிறாங்க, நானும் பின்னோட்டம் எழுதி போட்டும் போடல. சரி அவங்க ரொம்ப பிஸியா இருக்கிறதால, ஏன்னா நிறைய அரியர்ஸ் வச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்கிறதால, அவங்களுக்கு பிராக்ஸி கொடுப்போமேன்னு இந்த பதிவு. அவங்க நியூஸிலாந்து பகுதி 21 படிச்சவங்களுக்கு கீழே ஒரு வீடியோ கிளிப்பு போட்டிருக்கேன் பாருங்க. எப்படி மவோரிங்க வணக்கம் சொல்லி வரவேற்கிறாங்கங்கிறதை இதுல பாருங்க. நான் ரோட்டரோ போயிருந்தப்ப, எடுத்தது. இந்த இடம் நியூசிலாந்தின் வடக்குத் தீவுல இருக்கிற இடம். இந்த இடம் ஒரு கந்தக பூமி, ஆமா, பூமியிலருந்து வெண்ணித்தண்ணி ஊத்தை நீங்க பார்க்கலாம், அப்புறம் அப்படியே மண்குழம்புகள் கொதிக்கறதையும் பார்க்கலாம். அதை 'Mud Geyser'ம்பாங்க! அந்த ஊர்லதான் இந்த மவோரி இனத்தவங்களோட கலைநிகழ்ச்சி பார்க்கலாம். அப்படி பார்த்தப்பதான் எடுத்தது இந்த வீடியோ. சும்மா தமிழ் மணத்தில போடறேன்னு கொஞ்சம் இளையராஜா பாட்டைபோட்டு ரீரிக்கார்டிங் பண்ணி படம் ரிலீஸ் பண்ணிட்டேன். நீங்க இதை நூறு நாள் ஓட்டனும், இல்ல நல்லா இருக்கா, இல்லையான்னு பின்னோட்டம் போடனும். சரியா, ரைட்,ரைட், சவுண்டு...சயிலெண்ட்...

4 comments:

said...

ரொம்ப நன்றி உதயகுமார். 'மார்கழிப் பொன்னே வருக' பாட்டு நிஜமாவே பொருத்தமா அமைஞ்சுருச்சு:-)))))

சரித்திர வகுப்புக்கு மாணவர்கள் வரமாட்டேன்னு 'ஸ்ட்ரைக்' செய்யறாங்களே பார்க்கலையா?
அவுங்களுக்கு பயணக்கதைதான் வேணுமாமே(-:

ஆமாம், 'நாலு' போட்டாச்சா?

said...

சரி பயணக்கதை முடிச்சிட்டு சீக்கிர்ம் ஆரம்பிங்க நியூசிலாந்து கதையை! நாலை இனிமே தான் போடனும்!

said...

ஏங்க வெ.க. நாதரே,
மேல் சொல்லியிருக்கிறதெல்லாம் டூப்புதானே?
நீங்களே வேஷம் கட்டி ஆடிக்கிட்டு...நல்லாவே கம்பு சுத்துறீங்களே.. :-)

said...

அட நீங்க ஒன்னு, நான் கம்பு சுத்தலாம்னுதான் பார்த்தேன், அதுக்குள்ள இந்த மவோரி ஆளுங்க ஆட்டம் காட்டிட்டாங்க போங்க! என்னமோ படம் அமோகமா போவது, முதல்காட்சி ரசிகர்களுக்கு புடிச்ச படம்னா நூறு நாள்தான்!