Saturday, February 11, 2006

ரங் தே பசந்தியும், ஆயுத எழுத்தும்...

தொடர்ந்து பால்ய பார்வை பார்த்து வந்த நான் இனி இந்நாட்களில் என்னை பாதிக்கும் விஷ்யங்கள் சிலவற்றையும் இதே இடுகையில், அந்த பால்ய நாட்களில் இருந்த அதே உத்வேகத்துடன், எப்படி என்னை பாதித்ததோ அப்படியே பாதிப்பதால் இதே தளத்தில் பதிக்கலாம் என்று இன்று இதை பதிக்கிறேன்!

நேத்து ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படம் பார்த்தேன். படம் பார்த்திட்டு, ஏண்டா இப்படி தமிழ் படங்கள் வரமாட்டங்கிதுன்னு ஒரு ஆதங்கம் வந்திச்சு, யோசிச்சு பார்த்தப்ப, நம்ம மணி எடுத்த ஆயுத எழுத்தின் கத கருவும், இந்த படக்கருவும் கிட்டத்திட்ட ஒரே மாதிரி இருந்திச்சு. அதனால தான் என்னமோ, அதில நடிச்ச மாதவனும், சித்தார்த்தும் இந்த ஹிந்தி படத்தில நடிச்சிருக்காங்க!
அப்புறம் இந்த ஹிந்தி படத்தில நடிக்கிறதுக்கு நம்ம சூர்யாவையும் அப்ரோச் பண்ணாங்கன்னு கேள்விப் பட்டேன், அவரு நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும், ஆனா எந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணிருப்பாங்கன்னு தெரியல. இந்த படத்தில அந்தக்கால ஆராதனா அழகி ஷர்மிளா டாகூர், (ரூப் தேரா மஸ்தானான்னு பாட்டு கேட்ருக்கிங்களா, சரியா போச்சு, நீங்க சுத்த தமிழுன்னு, சிவாகாமியின் செல்வன் படம் ஒன்னு வந்தது ஞாபகம் இருக்கா, நம்ம சிவாஜி வாணிஸ்ரீயயை அதே மாதிரி பாடி டாவுவுட்டு புள்ளையை குடுத்துட்டு போய் சேர்ந்துடுவாரு புண்ணியவான், பிறவு பைலட்டா வந்து நம்ம வாத்தியாரு உரிமைக்குரலை ரூட்டு போடுவாரே, ஆங்.. அதே கதைதான் ஹிந்தில இந்த அம்ணி நடிச்சது) அவங்க பொண்ணு, சோஹா அலிகான், நடிச்சிருக்கு, ஓ.. பெருவாரியான தமிழ் ஜனம், நீங்க படம் பார்த்திருக்க மாட்டீங்கள்ள!


கதை இதுதான், 1930கள்ல நடந்த இந்திய சுதந்திர போரட்டத்தில ஈடுபட்ட இளைஞர்களையும், இந்தக்கால இளைஞர்களையும் ஒரு சமமா யோசிச்சு பார்த்து, அவங்க போரடற நோக்கங்களை ஒரு மாறுபட்ட சிந்தனையோட அணுகினா அது எப்படி இருக்கும்ங்கிறதான். அப்ப இந்திய சுதந்திர போராட்டத்துக்காக, வெள்ளையர்களை எதிர்த்து போராடின, ஜாலியினவாலாபாக்ல படுகொலை செய்த ஜென்ரல் டயரை எதிர்த்து போரடின இளைஞர்கள் கூட்டத்தை, இன்னைக்கு ராணுவ தளவாட ஊழல், மற்றும் அதிகார துஷ்பிரயோகம், செஞ்சு மக்களை அழிக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுகிற இளைஞர்களோடு ஒப்பிட்டு நாடு அந்த கால சுதந்திர புரட்சி செஞ்ச மாதிரி இந்த இளைஞர்கள் புரட்சி படைக்கிற மாதிரி ஒரு புது மாதிரியா கதை சொல்லி இருக்காங்க!

இதில விஷேஷம் என்னான்னா, நம்ம ஏ ஆர் ரஹமான் சும்ம பட்டையை கிளப்பி இருக்கிறாரு. முன்னாடி எல்லாம் கூட்டத்துக்கு பாட்டு கட்டுனவரு இப்பெல்லாம் கிளாஸ் கும்பலுக்கு மெட்டு போடறாரு. அத்தனை பாட்டும் தேன், அதுவும் அவரும், லதா மங்கேஷ்கருக்கும் பாடியிருக்கிற 'லுக்கா சுப்பி'ன்னு ஒரு பாட்டு, கேட்டுப்பாருங்க, கிளாஸ்! அதாவது தாயும், மகனும் ஓடி ஒளிஞ்சு விளையாடி பாட்டு படிச்சிகிட்டா எப்படி இருக்கும்.அவரு பாடன வந்தேமாதரம் பாட்டுத்தான் திரும்ப ஞாபகம் வருது, இதுவும் தேன்! மத்த பாட்டுகள் பஞ்சாபி பிளன்ட், தளிர் மெகந்தின்னு ஒரு பங்கரா பாட்டு பாடகர், டில்லி பக்கம் இருக்கிற நம்ம தமிழ் ஆளுங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், இவரைப் பத்தி, பாப், பங்கராவையும் கலந்து அடிக்கிற ஆளு, அவரும் ஒரு பாட்டு பாடி அச்த்தி இருக்கிறாரு.

ஆயுத எழுத்துலயும், மூணு இளைஞர்களை வெவ்வேற கோணத்தில எடுத்திட்டுப்போயி, கடைசியில அவங்களை ஒரே நேர்கோட்டுக்கு கொண்டு வந்து, பிரச்சினையின் நடுமையத்தில சுழல விட்டுருப்பாரு நம்ம மணி. நல்ல ட்ரீட்மெண்ட், அந்த திரைக்கதை அமச்ச உத்தியத்தான், இந்த ஹிந்திப்பட் டைரக்டரும் கையாண்டு கடந்த, நிகழ் கால கட்டங்களை ஒன்னா கொண்டு வச்சு, பிரச்சினையை சொல்லப் பார்த்திருக்கார். கதை கருவோட நோக்கம் ரெண்டுக்கும் ஓன்னுத்தான். படம் பார்த்திட்டு வெளியில வரப்ப ஒரு சரியான தாக்கம் இருந்திச்சு. மொத்தத்தில இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழ்ல்லயும், ஹிந்தில்லையும் வரதில்லை. எப்பாவாது அத்தி பூத்தமாதிரி. ஹிந்திப்படம்னு ஒதுக்கிடாம போய் பாருங்க, நல்லா இருக்கு.

இந்தப்படத்தை பத்தி எழுதலாம்னு இணையத்த பீராஞ்ச்ப்ப, நிறைய தகவல் கிடச்சுது, உலகம் சுருங்கி வர்து நல்லாவே தெரியுது. ஆக இனம், மொழி, மத்த எந்த எல்லைகளும் இல்லாம எல்லாமும் எல்லாருகிட்டயும் நெருங்குது. இந்த படத்தில வேலை செஞ்ச பாதி பேரு தமிழர்ங்கன்னா ஆச்சிரியமா இல்ல! டெக்னிக்கல்லா இது மாதிரி படங்களை விமர்சனம் பண்ணி நிறை பதிவுகள் தளத்தில கிடச்சுது, அதனால நான் நிறைய பேசல, சும்மா, வாய்வழி விமரிசனம் செய்ய ஆளுக்கிடைக்காம இதை படம் பாத்துட்டு ஒரு தாக்கம் வந்து உந்துதலால எழுதிப்போட்டேன். இதையே, என்னுடய பால்ய பருவ்ம்னு எடுத்துக்கிட்டா, ஒரு வாரம் பேசி தீர்த்துருபோம், அக்கு வேற ஆணி வேற கழட்டி போட்டு இருப்போம், விவாதிக்க, என் தனபாலோ, இல்ல மனோகரனோ,ஷாஜகானோ, குமரோ என்கூட இப்ப இல்லை. எல்லாம் பால்ய சினேகதங்கே!. இப்ப யாரு இருக்கா, சினேகம்னு சொல்ல உங்களை விட்டா!

7 comments:

said...

//இப்ப யாரு இருக்கா, சினேகம்னு சொல்ல உங்களை விட்டா!//

வா மச்சி! ;)

said...

அதான் நாங்க இருக்கோம்ல...நீங்க சொல்லுங்க.
ஆக நம்ம ஃ, இந்தப் படம் அப்புறம் அந்த ஒரிஜினல் படம் (பேரு மறந்து போச்சே) - இவைகள்ல எது நல்லா இருந்திச்சுன்னு எழுதுங்களேன் - ஒரு compartive study.
எனக்கு அந்த ஒரிஜினல் பக்கத்தில நம்ம ஃ வரலைன்னு படுது..treatment-ல.

said...

வாங்க நாரயன், பெரிய ஆளுங்க சினேகம் கிடைச்சிதல ரொம்ப சந்தோஷம், நிறைய விஷயங்கள் உங்க பிளாக் நான் படிக்கிறதுண்டு, அதிகம் நம்மலை காமிச்சிக்கற்தில்லை, இனி பரஸ்பரம் உரையாடலாம் வாங்க!

said...

தருமி எதை சொல்றீங்க, 'அமோரஸ் பெரஸ்'ஸை சொல்றீங்களா!, இல்லை 'LA Confidential'ஐ சொல்றீங்களா! 'Structural treatment' பத்தி கண்டிப்பா ஒரு தடவை எனக்கு புரிபட்டதை எழுதுறேன்!

said...

யாரும் குத்தம் சொல்ல வேணாம் ஏதோ எழுத்து பிழை, 'ஆய்த எழுத்து', 'ஆயுத எழுத்தா' வந்திருச்சு, மன்னிக்கவும்!

said...

நாதர் நல்ல படம் அத்தோட தாக்கம் வெளியே வந்து ரொம்ப நேரம் இருந்தது. என்னை அறியாமல் கண்கள் கலங்கி இருந்தது(மற்றோரு நண்பனின் கண்களும் கலங்கி இருந்தது). நிறைய யோசிக்க வைத்தது. அதுவும் என்னுடைய கையாலாகாத நிலைமையை நினைத்து ரொம்ப வருந்தினேன். ஊழலை எதிர்த்து உயிரைவிட்ட பிகாரை சேர்ந்த என்ஜினியர் தான் என் நினைவுக்கு வந்தனர்.

said...

ஆமாம் சந்தோஷ்,எப்பவாது நம்ம நிஜ வாழ்க்கையோட ஒத்து போற சம்பங்களை கொண்ட படங்களை பார்க்கிறப்ப நம்ம கண்ணு கலங்கறது வாஸ்த்தவம் தான்!