Thursday, February 23, 2006

வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!

சென்ற பிப்ரவரி, 21ம் தேதி, திங்கள் கிழமை, குடியரசு தலைவர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது, அந்நாள், அமெரிக்க அதிபர், புதியதொரு முழக்கமிட்டார். அது 'வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!' அது என்னான்னு பெரும்பாலான நம்ம தமிழ்ஜனங்களுக்கு தெரியுமா? அப்ப அப்ப சினிமா, வெட்டியா பொழுது போக்கும் மத்த சமாச்சரங்களை படித்து நாட்போக்கும் என் இன மக்களே, இதெயும் கொஞ்சம் படிங்க!

இது வரைக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார ஷக்தியில பெரும் பங்கு வாய்க்கிறது, அது செலவிடும் எரிபொருள் தான். அதாவது கச்சா எண்ணையிலருந்து வர பெட்ரோலிய பதார்த்தங்கள்.
அமெரிக்கா உபயோகிக்கும் இந்த வஸ்து, 75 சதவீதம், இது அத்தனையும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்ல இருந்து வர்து தான். ஆனா அந்த நாடுகள்ல மாறி வரும் அரசியல் நிலை, மற்றும் தீவிரவாதங்கள் சூழந்த அந்த பகுதி, அமெரிக்காவை பெரும் பகை நாடா நினப்பத்தால, தடங்கல் இல்லாமல் இனி தொடர்ந்து, இந்த எரிபொருள் ஷக்தி கிடைக்குமாங்கிறது இனி சந்தேகம் தான். அவங்கலை நம்பி இனி வாழமுடியாது, மேற்கொண்டு இந்த கச்சா எண்ணையை அதிகம் நம்பி, அந்த கிழக்கு ஆசிய நாடுகள் அரசியல் பிளாக்மெயில்லருந்து தப்பணும், அதே சமயத்தில அவங்க வாழும் ஆடம்பர வாழ்க்கை நிலையில தடுமாற்றம் உண்டாகம இருக்க, வேற வழிவகுக்கும், இந்த நிலையை மாற்ற என்ன வழின்னு யோசிச்சப்பதான் இந்த முழக்கம்!

அதாவது மாற்று ஷக்தி என்னென்ன உண்டோ, அதில இனி நம்ம ஷக்தி எல்லாம் செலவழிச்சு, புதிய ஷக்திகளை கண்டுபிடிக்க வழி செய்வது! இதற்காக அமெரிக்க அரசாங்கம் இன்னும் 22 சதவீதம் அதிகம் செலவழிக்க முனைப்பா இருக்கு. ஏற்கனவே அது 10 பில்லியன் டாலர்களை 2001லிருந்து செலவழிச்சிக்கிட்டு இருக்கு. மேற்கொண்டு, உலக மாசு கட்டுப்பாடு கொண்ட, இப்பொழுது கிடைக்கும் எண்ணைய் எரிபொருளுக்கு சமமா இருக்கக்குடிய, ஷக்தியை கண்டுபிடிக்க உண்டான ஆராய்ச்சியை முடிக்கிவுட்டுடிச்சு.

ஏற்கனவே இந்த 'Global warm' ங்கால, என்ன ஆயிகிட்டு இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில 'Greenland' என்கிற தேசத்தில உள்ள பனிக்கட்டிகள் (glacier) எல்லாம் அளவுக்கு அதிகமா உருகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! இந்த நிலை தொடர்ந்தா, கடல் மட்டம் இன்னும் 100 வருஷத்தில ஒரு 7 மீட்டர் உயர்ந்து, கடல்மட்டத்துக்கு தாழ்வா இருக்குற நகரங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடும் தெரியுங்களா. இதுல்ல எந்த ஊர் எல்லாம் உள்ள போகப்போவுதுன்னு தெரியுமா? ஹாலந்து நாட்ல உள்ள ரொட்டர்டாம்லிருந்து, நியூஆர்லென்ஸ், லண்டன், பங்களாதேஷ் கடலோர பகுதிகள், ஏன் நம்ம சென்னையும் கடலுக்குள்ள போயிடும் போங்க!(இவங்க எல்லாம் ஏன் தான் இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் கவலைப் படறாங்களோ! நம்ல பாருங்க குஷ்புக்கும், சுஹாசினிக்கும் வெளக்கமாத்த காமிக்கவே நேரம் சரியா போவுது, இதில கழுதை, இதப்பத்தி என்னத்த யோசிக்கிறது!)

அதனால என்னென்ன வழிமுறைகள்ல அவங்க மாற்று ஷக்தி தேட முனைஞ்சிருக்காங்க தெரியுமா?

மாற்று வழி - வீடுகள் மற்றும் வியாபரத்துக்கு!
சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்திலயும், சுத்தமான, பாதுகாப்பான அணுஷக்தியிலயும், சூரிய ஒளியில் கிடைக்கும் ஷக்தியும், மற்றும் காற்றாலைகள் இருந்து வரக்கூடிய ஷக்தியிலயும் துரித ஆராய்ச்சி பண்ணி அதிலருந்து வெளிப்படும் ஷக்தியை கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் ஷக்திக்கு மாற்றாக கொண்டு வருவது. இதுக்காக அவெங்க செலவழிக்க போவது கொஞ்சம் நஞ்சமில்ல, பல பில்லியன் டாலர்கள்!

மாற்று வழி - வாகனங்களுக்கு!
இங்க இனி ஒடப்போகும் கார்கள், வாகனங்கள் எல்லாம் இப்ப உபயோகத்தில இருக்கிற பெட்ரோல், டீசல் விட்டுட்டு "Cellulosic Ethanol" ங்கிற ஒரு புது எரிபொருள்ல ஓட்ட வைக்க போறாங்க.
அப்புறம் பெட்ரோல்யும், அதிகம் உழைக்ககூடிய பேட்டரியலயும் மற்றும் ஹைட்ரஜன்லயும் ஓடப்போற "Hybrid" கார் வரப்போகுது! இதற்காகவும் பல கோடி டாலர்கள் செலவிட தயாரகிட்டாங்க( ஏற்கனவே "Hybrid" காருங்க இங்க நிறைய ஓடிகிட்டு இருக்கு, அந்த மாதிரி காரு வாங்கினா, வரிகள் எல்லாம் கம்மிபண்னி, மக்களை அரசாங்கம் இந்த மாதிரி காருங்களை உபயோகிக்க ஊக்கவிக்கிறாங்க!)

ஆக அடுத்த 20 வருஷத்தில, அதாவது 2025ல இந்த 75 சதவீத எண்ணய் இறக்குமதிய சுத்தமா நிறுத்தி, மாற்றிய ஷக்திகள்ல வாழ்க்கையை அமைக்கப்போறாங்க. பார்த்தீங்களா, எப்படி தொலைநோக்குப் பார்வையோட திட்டமிட்டு வேலைசெய்றாங்கன்னு. இந்த பிரகடனத்தை வாசிச்ச புஷ்ஷை டிவியில பார்க்க எவ்வளவு நல்லா இருந்திச்சு தெரியுங்களா! நம்ம அரசியல் தலைவர்கள் நம்ம நாட்டு பிரச்சினைகளை வழி வச்சி ஏன் இப்படி தொலைநோக்கு பார்வையில மக்களை வழி நடத்த மாட்டேங்கிறாங்க?

தமிழக மக்களே, இதோ, மறுபடியும் எலெக்ஷன் வருது, 'போடுங்கம்மா ஓட்டு இரட்டை எலையை பாத்து, இல்ல உதயசூரியனைப்பாத்து, இல்ல மாங்காயோ, தேங்காயோ, புளியங்காயோ பாத்து போடுங்கம்மா ஓட்டு! யாரு நல்ல பாட்டு பாடறன்னும் பாத்து ஓட்டு போடுங்க!

6 comments:

said...

Wow,this is really exciting!The question marks,the exclamation marks,the random words in between!Awesome!!

said...

மாற்று எரிபொருள்களுக்கான தேவை மற்றும் அது குறித்தான குறித்து உங்கள் பதிவுக்கு நன்றி.
இந்தியா தனது மரபு சாரா ஆற்றல் மூலங்களைக்குறித்த ஆய்வையும், பயன்பாட்டையும் வேகமாக்கவேன்டும். மறுபடியும் மேற்குலகு கண்டுபிடித்து தரும் என்று நம்பிக்கையில் இராமர் கோவில் கட்டிக்கொண்டு இருத்தல் நல்லதல்ல.

அது சரி, ஏன் ஷக்தி என்றே சக்தியை சொல்லியிருக்கிறீர்கள்!

said...

// நம்ம அரசியல் தலைவர்கள் நம்ம நாட்டு பிரச்சினைகளை வழி வச்சி ஏன் இப்படி தொலைநோக்கு பார்வையில மக்களை வழி நடத்த மாட்டேங்கிறாங்க? //


இந்தியா அனுசக்தி துறையில் தீவிரமாக இறங்க போகிறதே..அதற்க்கும் நமது பல மத்திய அரசுகள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார்களே.

ஒரு உதாரனமாக பாபா அவர்கள் ஐம்பதுகளிலேயே Three Stage Nuclear power programmeஐ பற்றி திட்டமிட்டு அதன்படி தான் இன்று வரை நமது அனுசக்தி கொள்கை வடிவமைக்கபட்டு வருகிறது.

நமது மக்களுக்கு தான் ஆர்வமில்லையே தவிர, மத்திய அரசுகள் செய்யவேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கின்றன்ர்.

அனால் பத்தாது....இன்னும் நிறைய செய்யவேண்டும்..அதற்க்கு மக்கள் மத்தியில் விழிப்பினர்வு ஏற்படவேண்டும்.

said...

ரேவன், தங்கமணி, மற்றும் சமுத்ரா, அனைவருக்கும் நன்றி!

சக்தியை, ஷக்தின்னு எல்லோரும் உணர்ச்சியா படிக்கனும்னு தான்!

said...

// 20 வருஷத்தில, அதாவது 2025ல இந்த 75 சதவீத எண்ணய் இறக்குமதிய சுத்தமா நிறுத்தி //

சார்

நல்ல பதிவு!

said...

நன்றி சிவபாலன்!