Monday, February 27, 2006

வல்லவனுக்கு வல்லவன்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய பயணத்தை ஒட்டி, இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் சர்ச்சைகளில் ஒன்னு, இந்த நியூக்ளியர் டீலை பத்தினது. இது என்னான்னு அதிகமா நம்ம வெகுஜன மக்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. நானும் தொடர்ந்து இது பத்தி இரண்டு மூணு இடுகைகள் படிச்சி பின்னோட்டமும் போட்டேன், இந்த ஃபீல்ட்ல வேலை செஞ்ச ஆளுங்கிற முறையில கொஞ்சம், இந்த டீல்ல இருக்கிற சில சூட்சமங்களை எடுத்து விட்டிருக்கேன் கீழே படிங்க!

திடீர்னு என்னடா இந்த நியூக்ளியர் மோகம் எப்படி வந்ததுன்னா, அதுக்கு காரணம் இருக்கு! நான் ஏற்கனவே எழுதின 'வேண்டும் ஒரு புதிய ஷக்தி' பதிவு படிச்சிங்கன்னா உங்களுக்கு தெரியும். உலகத்தோட ஒட்டு மொத்த பொருளாதாரமே, பூமியிலருந்து கிடைக்கிற இந்த கச்சா எண்ணய்ய கொண்டு தான். அது அதிகமா கிடைக்கும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் திறதன்மை ஆட்டங்கண்டதாலேயும், மேற்கொண்டு இஸ்லாமிய நாடுகள்ல உண்டான தீவிரவாத தன்மையும் ஒரு காரணம். அதனால வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், ஏற்கனவே இந்த நியூக்ளியர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தாலும், சில பெரிய அணு உலை விபத்துக்கள் மற்றும் அதவிட மலிவா கிடைக்கும் கச்சா எண்ணைய் கிடைச்சதாலே, அதில அவ்வளவு கவனம் செலுத்தில. இன்னொன்னு, அதற்கு உண்டான முதலீடு ரொம்ப ஜாஸ்தி. அடுத்தது, கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயு பேன்றவற்றில் எந்த வில்லங்கமும் இல்லை. ஏன்னா எரிஞ்சு தீர்ந்திடும். ஆனா நியூக்ளியர் அப்படி இல்ல, எரிஞ்சோனதான் அதோட வேலையே, 'நியூக்ளியர் பாம்' செஞ்சுப்புடலாம்ங்கிறதுனால, எல்லா நாடுகள்யும் போய் சுலபமா மூலதனம் போட்டுத் தொடங்கிடமுடியாது. அதுக்கு தடை உண்டு, அப்புறம் எல்லாருமே கைய முறுக்கிக்கிட்டு 'டேய் டூய்'ன்னு 'எங்கிட்ட நியூக்ளியர் பாம் இருக்குன்னு' உதார் விட்டுக்கிட்டு இருப்பாங்க எல்லாரும். ஆகையால், இதற்கு பெரும்பாலும் முதலீடு செய்வது அந்தந்த அரசாங்கங்களே! நம்ம நாட்டிலேயும் இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிறுவனம்.

இந்தியாவில இந்த நியூக்ளியர் வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்தவர் 'ஹோமி பாபா'. ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னே அவரு வடிவமைச்ச திட்டம் தான் மூணு அடுக்கு திட்டம். அந்த திட்டம் என்னான்னு சொல்றதுக்கு முன்னே, இந்த நியூக்ளியர் மின்னனு ஆலை எப்படி செயல்படும்னு சொல்றேன். அதாவது யுரேனியங்கிற ஒரு வஸ்துவை, அதன் அணுக்களை பிளந்தா, வெளிப்படக்கூடிய வெப்ப சக்திய உபயோகிச்சு தண்ணிய கொதிக்க வச்சு, அதிலருந்து வர நீராவியை பெரிய டர்பைன்கள சுழல செஞ்சு அதோட மின்சாரம் உற்பத்தி பண்ற ஜெனேரட்டரை இணைச்சு சுழல செஞ்சு மின்சாரம் உற்பத்தி பண்றது தான் இந்த நியூக்ளியர் பிளான்ட்டோட வேலை. நம்ம மெட்ராஸ் பக்கத்தில இருக்கிற கல்பாக்கம் யாரும் போயிருந்தா அங்க அந்த அணு உலை டூம்மை நீங்க பார்க்கலாம். அப்ப்டி எரிச்ச யுரேனியத்திலருந்து வெளிவரும் புளுட்டோனியம்ங்கிற இன்னொரு வஸ்துதான் பாம் செய்யக்கூடிய பொருள். நான் முன்ன சொன்னமாதிரி எரிச்சு முடிஞ்சு தான் வில்லங்கமே! ஆனா, நான் சொன்ன மாதிரி அவ்வளவு ஈசியா இந்த யுரேனியத்தை பிளந்திட முடியாது. இயற்கையா கிடைச்ச யுரேனியத்தை கொஞ்சம் போல அணுபிளக்க கூடிய பலமான யுரேனியமா மாத்தனும். அதுக்கு பேரு ஆங்கிலத்தில 'Enriched Uranium'. இப்படி பலமான யுரேனியமா மாத்த உண்டான தொழில்நுட்பம் அவ்வளவு ஈசியா கிடைச்சிடாது. ஏன்னா, இந்த பலமான யுரேனியத்தை வச்சு பாம்மு பண்ணிபுடலாம். அதனால, இந்த தொழில்நுட்பம் தெரிந்த நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் எல்லாம் ஒன்னுக்கூடி வளராத நாடுகளை தங்க பார்வையில வச்சுக்கினும்னு ஒரு மசோதா கொண்டு வந்தாங்க, அது தான் 'NPT'ன்னு படிச்சிருப்பீங்க, அந்த விவரத்துகெல்லாம் நான் போகலை இப்ப! அதில கையப்பம் இட்டா உங்களுக்கு அந்த தொழில்நுட்பம் உண்டு. நாம அதில கை எழுத்து போட்டா அவங்களுக்கு அடிமை, அதனால,

நம்ம பாபா என்ன பண்ணுனார்னா, இந்த பலமான யுரேனியம் இல்லாம அணுமின்நிலையம் கட்டமுடியாதான்னு யோசிச்சப்ப, கனடா நாட்டுக்காரங்கட்ட இயற்கையான யுரேனியத்தை உபயோகிச்சு கட்டன அணு ஆலை தெரியவந்து, அவங்களோட ஒப்பந்தம் போட்டு, ராஜஸ்த்தான்ல ஒரு அணுமின்நிலையம் கட்டினாங்க, அவங்க துணையோட. அதுக்கு முன்ன இந்த பலமான யுரேனியத்தை உபயோகிச்சு கட்டின அணுமின்நிலையம் தாரப்பூர்ல, அமரிக்காவின் தொழில்நுட்பத்தில கட்டினது. அதுக்குள்ள 1974 ல நம்ம அணுகுண்டு வெடிக்க போயி, கனடா, அமெரிக்கா, எல்லாரும் அம்போன்னு நம்பல விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்புறம் இங்க , அங்க கையேந்தி இந்த மின்நிலையத்தை ஓட்டினோம். அப்படி தொடர்ந்து ஓட்டுனும்னா, International Atomic Energy Agency (IAEA)ங்கிற நிறுவனத்தின் மேற்பார்வையில இந்த அணு ஆலைகள் எல்லாம் கண்கானிக்கப்பட்டு ஓட்டப்படனும். பிறகு முட்டி மோதி நம்மலா தொழில்நுட்ப வளர்ச்சியை பெருக்கி, நிறையா அணு உலைகளை கட்டிட்டோம். அந்த அணு உலை எல்லாம் 'IAEA'கீழே கண்காணிப்பில இல்ல.

அப்புறம் பாபாவின் மூணு அடுக்கு திட்டத்தில முதல இயற்கையான் யுரேனியத்தை உபயோகிக்கிறது, இரண்டாவது கட்டமா, அது வெந்த உலையிலயிருந்து கிடைக்கும் புளுட்டோனியத்தையும் யுரேனியத்தையும் கலந்து 'Fast Breeder Reactor'ன்னு இன்னொரு மாதிரி அணு உலை கட்டறது. பிறகு மூணாவதா, நம்ம நாட்ல அளவுக்கு அதிகமா 'தோரியம்'னு ஒரு வஸ்து கிடைக்கிது, அது அப்படியே 'decay' ஆனா 'U233, அதாவது யுரேனியமாயிடும், பிறகு அதை அணு உலையில உபயோகிக்கலாமும்னு மூணாவது கட்ட திட்டம். இந்த தோரியத்தில செஞ்சது தான் 'லாந்தர்', அதாவது பெட்ரோமாஸ் லைட்டுன்னு கேள்விபட்டிருக்கிங்களா, அதில வெள்ளையா ஒன்னு, பம்பு பண்ணோன்ன சும்மா 'பளிச்'னு எரியும் பாருங்க, அதை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க முன்னெல்லாம், இந்த தோரியத்தோட அருமை தெரியற வரைக்கும். நம்ம கேரளா, திருநெல்வேலி, கன்னியாக்குமரி கடற்கரை மணல்ல இருந்து எடுக்கபடுவது. நம்ம நாட்ல உலகத்தில இருக்கிற ரிசர்வ்ல்ல முப்பது சதவீதம் இருக்கு, தெரியமா? இதெல்லாம் தெரிஞ்சு திட்டம் போட்டு, ஆராய்ச்சி பண்ணி இப்ப நம்ம இதை உபயேகிக்க முதலிடத்தில இருக்கிறோம். வேணும்னா இந்த ரிப்போர்ட்ட படிச்சு பாருங்க, சுட்டி இதோ. இதல்லாம் தெரிஞ்சு வராரு அய்யா இப்ப அமெரிக்கா நம்மகிட்ட, டீல் பண்ண! என்னான்னு விவரம் கேளுங்க சொல்றேன்.

1999ல திருப்பி அணுகுண்டு வெடிச்சோன, நமக்கு 'சூப்பர் கம்ப்யூட்டர்லருந்து எந்த தொழில்நுட்பமும் கிடைக்காது போ'ன்னு துரத்திவிட்டவரு, இப்ப என்ன சொல்றாருன்னா, நான் உனக்கு உதவுரேன், உன்னுடய ஆக்க பூர்வமான அணு உபயோகத்துக்குன்னு! ஆனா சில கண்டிஷன், அத நீ கேட்டகணும் அப்படின்னு. அங்க தான் வில்லங்கமே! போன ஜீலையில நம்ம பிரதமர் வாஷிங்க்டன் வந்தப்ப ஒரு அக்ரிமென்ட்ல கை எழுத்து போட்டுட்டு போனார். அதாவது நம்ம கிட்ட இருக்கிற நியூக்ளியர் சொத்தை ரெண்டா பிரிக்கிறது. அதாவது ஆக்கபூர்வமா மின்சாரம் தயாரிக்கிற வசதிகள், இன்னொன்னு மிலிட்ரிக்கு தேவையான பாம் செய்யக்கூடிய வசதிகள். அப்படி ஆக்கபூர்வமா மின்சாரம் தயாரிக்கிற வசதிகளை உலகநாடுகள் நிறுவனம் IAEA மூலமா கண்காணிக்கப்படும். அப்படி என் கண்கானிப்பில இருந்தின்னா, நீ கேட்கிற தொழில்நுட்பமெல்லாம் நான் தரேன்னு. அப்படி பிரிக்கிறதல தான் இப்ப வில்லங்கமே. நம்ம நியூக்ளியர் விஞ்ஞானிங்க என்ன சொல்றாங்கன்னா, அமெரிக்கா போட்டு கொடுத்த லிஸ்ட் படி எல்லா வசிதியும் சேர்க்க கூடாது, நம்ம 'Fast breeder reactor', நம்ம முயற்சில கண்டுபிடிச்ச வசதியை முக்கியமா சேர்க்க கூடாது, ஏன்னா அவங்க கண்காணிப்புல நாம இருந்தோமுன்னா, நம்ம மூணு அடுக்கு திட்டத்துக்கு அமெரிக்கா இடையூரு விளைவிக்கும். அப்புறம் நம்ம தனி சக்தியா வளர்றது அம்பேல்ன்னு!

வாஸ்த்தவமான பேச்சு! இப்ப நம்ம வளர்ந்து வரது அவங்களுக்கு கொஞ்சம் காய்ச்சலாதான் இருக்கு. ஏற்கனவே, பொழுதென்னைக்கும், இந்தியா, சைனான்னு தான் பேச்சே! ஏன்னா நம்ம பொருளாதார வளர்ச்சி அவங்களை அசர வைக்கிது. இன்னொன்னு தெரியுமா, நம்ம உலகத்தில சொத்து வாங்குனும்னா, இவங்களை கேட்டுத்தான் வாங்கனுமா? இது எப்படி? இப்ப தற்சமயம் இந்தியா சிரியா நாட்ல இருந்து 'Oil and Gas' சொத்து வாங்க போனப்ப ஒரே கூச்சல் போட்டு, ரகளை வுட்டுடாங்க இந்த அமெரிக்காவினர்! அதே மாதிரி ஏகப்பட்ட மிரட்டல். நான் சொன்னமாதிரி கை எழுத்து போடலைன்னா, அப்புறம் நடக்கிறதே வேறே, நம்ம உறவு அவ்வளவு நல்லா இருக்காதுன்னு ஏகபட்ட பூச்சு காமிச்சிகிட்டு இருக்காங்க!

இன்னொன்னு என்னா தெரியுமா, சமீபமா, அமெரிக்கா செனட்ல ஒரு பில்லு பாஸ் பண்ணுனாங்க, அது என்னான்னா, அமெரிக்காவை காப்பதே-கல்வி, ஆராய்ச்சி (Education and Research), அப்புறம் சக்தி (Energy), பிறவு நிதி(Finance), இந்த மூணுலேயும் அமெரிக்காவை காப்பதே! அதாவது, அதுக்கு பேரு 'PACE' (Protest America's Competitive Edge)ன்னு. இப்ப சொல்லுங்க, இதே மாதிரி நம்மலும் ஒரு பில்லு பாஸ் பண்ணுவோம், நம்முடய விருப்பு வெறுப்புகளை பாதுகாக்க! எதுக்காக சொல்றேன்னா, அவங்களை எதிர்த்து வாய்ஸ் கொடுத்த வாஜ்பாய்ய, மறுத்து அறிக்கை விட வச்சுருக்காரு அமெரிக்க தூதர் மில்ஃபோர்ட், அப்புறம் மகாராணி கண்ட்லேசா, என்னா மிரட்டு மிரட்டுறாங்க தெரியுமா, ஆக குரல் கொடு, நாமும் வல்லமை படைத்த சக்தின்னு.

வல்லவனுக்கு வல்லவன்!

19 comments:

said...

Informative article, thanks Mr.Velikanda Naathar.

said...

Nice article to know abt the Nuclear deal...Thanks -remo

said...

நன்றாக புரியும்படி எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

இந்த மாதிரி வில்லங்கங்கள் எல்லாம் இருப்பது மன்மோகனுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் தெரியாதா என்ன? என்ன அது, சின்னப்புள்ளத் தனமா இல்லே இருக்கு?

said...

வெளிகண்ட நாதர்! ரொம்ப பயனுள்ள கட்டுரை. புரியற மாதிரி ரொம்ப எளிமையான நடையில் கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி.
அணுவை எப்படி பிளப்பார்கள் என்றும் சொல்லுங்களேன்.

said...

லைட்டா பௌன்சர் போறமாதிரி இருந்தாலும் புரிந்ததுங்க. இன்னும் பிஜேபி, காங்கிரஸ், லெப்ட், அமேரிக்கா, இந்தியா இப்படி நியூக்ளியரை சார்ந்துள்ள அரசியல் இதுமாதிரி எழுதுங்க.

அரசியலைப்பத்தி எழுதணும்னா எழுதிறுவேன். என்ன பிம்பம் உடைஞ்சுறுமேன்னு பார்க்கிறேன். :-)

said...

நன்றி நாகராஜன், ரெமொ அவர்களே!

said...

துபாய்வாசி, தெரியாம இல்ல, ஆனாலும் இது உலக அரசியல், புஷ் வரதுக்கு முன்னாடி, இந்த் டீல்ல கையெப்பமிட, அத நாலாவண்ணம் ஆராஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க, இருந்தாலும் இந்த மாதிரி 'constructive criticism' தேவையா இருக்கு!

said...

சொல்லிட்டா போச்சு சிவா, அணு பிளக்கும் முறையை ஒரு சினிமா காட்சி போல அடுத்த பதிவில எல்லாருக்கும் புரியற மாதிரி போடுறேன்!

said...

//லைட்டா பௌன்சர் போறமாதிரி இருந்தாலும் புரிந்ததுங்க// அணுவியலும் அப்படி தான், கணனி பத்தின சமாச்சாரமும் அப்படித்தான். ஆனாலும் கறபனை சக்தி அதிகமுள்ள உம்ம போல ஆளுங்களுக்கு இது ஒன்னும் பெரிசில்ல அப்பு! இன்னொன்னு தெரியுமா, கதை, கவிதையுன்னு ஆழமா கற்பனயில் ஈடுபடறவங்க, இந்த சப்ஜெக்ட் எல்லாம் ஈசியா புரிஞ்சுக்குவாங்க!

said...

Thanks for the Constructive Criticism Sir.

Now, Sir, our thorium cyle is far from being mature isnt it?

Besides, with the FBRs our of IAEA inspections I believe we have a fair deal in j'18 agreement

//நம்ம 'Fast breeder reactor', நம்ம முயற்சில கண்டுபிடிச்ச வசதியை முக்கியமா சேர்க்க கூடாது, ஏன்னா அவங்க கண்காணிப்புல நாம இருந்தோமுன்னா, நம்ம மூணு அடுக்கு திட்டத்துக்கு அமெரிக்கா இடையூரு விளைவிக்கும். அப்புறம் நம்ம தனி சக்தியா வளர்றது அம்பேல்ன்னு!//

எனக்கு தெரிந்தவரை IAEAவில் அமெரிக்க உளவு நிறுவனம் நன்றாக ஊடுருவி இருப்பதாக சொல்கிறார்கள்.

அதனால் தான் Breederகளை சோதனைகளுக்கு திறந்துவிட எதிர்ப்பாம்.

Breederகள் கட்டுவதை அனேகமாக அனைத்து நாடுகளும் நிறுத்திவிட்டதால் கடைசியில் நமது Thorium Cycle Mature ஆன பின்னர் நாமே நமது உலைகலை ஏற்றுமதி செய்யும் நிலையும் வரலாம் அல்லவா?

மேலும், Anil Kakodkar அவர்களின் பேட்டிகளை படித்தீர்களா? மன்மோகன் சிங் மற்றும் பி.எம்.ஓ சேர்ந்து அற்புதமான Good cop - Bad cop நாடகம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

said...

சமுத்ரா, தோரியம் உபயோகித்து மூணாம் கட்ட நிலை அடைய வெகு தூரம் செல்ல வேண்டும். அதற்கு இரண்டாம் கட்ட Fast Breeder Reactors' களை கமர்சியலாக ஓட்டி வெற்றி கண்ட பின்னால் தான், அதன் அனுபவம், பிறகு byproduct core extraction செய்து, பிறகு தோரியத்தை அதன் மீது wrap செய்து மூணாம் கட்ட நிலை, அதாவது முழுமையாக, தோரியம் உபயோகிப்பதை அடைய முடியும். Yes, as you said, we have not reached or the technology is not matured sofar. But thatswhat is the longterm plan. In between, fast breeder technology is not well apperciated worldover due to technical complexity of handling certain issues. So, it is a catch here! How we are going to master the technology with fast improvements to all known problems on fast breeder. But if we overcome all, we can be the champion and we can sell this form of energy world over and we can become gaint in Nuclear power. But there are lot of if and buts!.

You are right, Americans are watchful, what we are doing, and may curtle our growing stature to be a super power in this regard!

said...

மிக நல்ல கட்டுரை உதயகுமார் சார். நிறைய விஷயங்கள் புரிந்தது.

said...

நன்றி குமரன், இத பற்றி இன்னுமும், பிரகு மோகன் தாஸ் கேட்ட மாதிரி அமெரிக்க, இந்தியா look outs ஐயும் அப்புறம் ஒரு தனி பதிவி போடறேன்!

said...

Simply superb... Its an eye opener for people like me who do not know much about this N - deal.

I would like to know do we have any positives signing this deal? or is it an all negative deal for us

said...

வெளிகண்ட நாதர் இவ்வளவு அருமையான கட்டுரையை மிக தாமதமாக வாசிப்பதற்காக வருத்தப்படுகிறேன். நல்ல விவரங்களோடு எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! இன்றைய உலக அரசியலே அணு சக்தியை வைத்துதான் நடைபெறுகிறது. எனவே இன்னும் கூட இந்தக் கட்டுரைகளை அப்-டேட் செய்துக் கொண்டே இருந்தால் தமிழ் வாசகர்கள் பெரும் பயனடைவர். குளிப்பாக கட்டுரை தலைப்புகளில் - அணுவை சேர்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் அது, ஏதோ ஒரு விஷயம் என்று கவனிக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இதற்கு நானே உதாரணம்.

said...

வெளிகண்ட நாதர் இவ்வளவு அருமையான கட்டுரையை மிக தாமதமாக வாசிப்பதற்காக வருத்தப்படுகிறேன். நல்ல விவரங்களோடு எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! இன்றைய உலக அரசியலே அணு சக்தியை வைத்துதான் நடைபெறுகிறது. எனவே இன்னும் கூட இந்தக் கட்டுரைகளை அப்-டேட் செய்துக் கொண்டே இருந்தால் தமிழ் வாசகர்கள் பெரும் பயனடைவர். குளிப்பாக கட்டுரை தலைப்புகளில் - அணுவை சேர்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் அது, ஏதோ ஒரு விஷயம் என்று கவனிக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இதற்கு நானே உதாரணம்.

said...

அருமையான பதிவு.
அணுசக்தி உடன்படிக்கையின் மறுபக்கத்தை அருமையா எளிதாய் சொல்லியிருக்கீங்க.

நன்றி.

said...

வருகை தந்தமைக்கு நன்றி சந்திப்பு! தொடர்ந்து அப்டேட் செய்கிறேன், மேற்கொண்டு அணுவையும் சேர்க்கிறேன்.

said...

சிறில் அலெக்ஸ், வருகைக்கு நன்றி!