Monday, July 10, 2006

ஜானி-ரஜனி,ஸ்ரீதேவி,பிரேமி வரும் பாடல் காட்சி!

ஜானி படத்தை பத்தி நான் ஏற்கனவே 'எனைஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே' எழுதி இருந்தேன்! விஷவலா கதை சொல்ல அப்ப மகேந்திரன் வந்திருந்தாருன்னு! அப்புறம் 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்'ங்கிற பதிவிலே இப்ப இருக்கக்கூடிய ஒளிப்பதிவாளர்களுக்கெல்லாம் முன்னோடி அஷோக் குமார்ன்னு எழுதி இருந்தேன். நேத்து திருப்பி ஜானி படம் பார்க்கிற வாய்ப்புக்கிடைச்சது. படம் பார்த்தோன நான் அந்த காலத்துக்கே போய்ட்டேன்! அவ்வளவு அருமை! கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அந்த காட்சிகளோட தாக்கம் இன்னும் இருக்கு! அதான் அழகா படம் புடிச்ச 'என் வானிலே'ங்கிற பாட்டை உங்களுக்காக இங்கே வீடியோ கிளிப் ஒன்னு போட்டிருக்கேன், பாருங்களேன், நான் சொன்னது உங்களுக்குப் புரியும்!

ரஜினி கொள்ளை அடிக்கிறதை விட்டுட்டு, ஸ்ரீதேவி பாட்ல மயங்கி, பூகொத்து கொடுக்க முடியாம போயி, ஒரு பூந்தோட்டத்தையே ஸ்ரீதேவி வீட்டுக்கு அனுப்பி வைப்பாரு! அப்புறம் பீச்சில அவரு பாடன பாட்டை ரஜினி கேட்டுக்கிட்டு இருக்கிறப்ப, அவரை பிரத்யோகமா தன் வீட்டுக்கு அழைச்சி அவருக்காக மட்டுமே பாடக்கூடிய பாடல் இது! இதிலெ சிறப்பு என்னான்னா, வீட்டுக்குள்ளேயே கேரக்டர்களை காமிக்கிற அழகு, அப்புறம் ஸ்ரீதேவிக்கு துணையா இருக்கிற பிரேமியைக்கூட அழகா எடுத்திருப்பாரு! கண்ணத்திலே கைவச்சி அழகா ஸ்ரீதேவி பாட்டை ரசிக்கிறதாகட்டும், இல்லை ரஜினியை க்யூட்டா காமிச்சிறக்கதாகட்டும். அப்புறம் ஸ்லோ மோஷன்ல ஒடி காட்சிகளின் கோர்வை ஆகட்டும், அப்புறம் அழகா கடற்கரையிலே பியனோ வாசிச்சுக்கிட்டு பாட்டு பாடி அதை ரஜினி ரசிக்கிறதாகட்டும், நீங்க உங்களையே மறந்து அப்படியே ஒன்றி போய்டுவீங்க! இது இப்ப இந்த மாதிரி காட்சிகள் அமைக்கிறது புதுசா இல்லாம இருக்கலாம், ஆனா ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே நினைச்சிப்பாருங்க!

நான் எழுதின மாதிரி அடிக்கடி அந்த 'Depth of field and focus' டெக்னிக்ல காட்சிகளின் கட்ஸ் வரும்! நல்லா கவனிச்சு பாருங்க! ஸ்ரீதேவியின் கள்ளம் கபடமில்லாத குழந்தை தனமான மூஞ்சு! இதெல்லாம் அப்புறம் முக்கு சரி பண்றேன்னு கெடுத்துக்கிட்டு அசிங்கம் பண்ணிக்கிட்டதாலே அப்பறம் எனக்கு ஸ்ரீதேவியை பார்க்கவே புடிக்கல! ம்..'ஜால்பாஸ்', 'Mr India'யாவிலே ஷிபான் சாரி கட்டிக்கிட்டு சீத்துருவா வந்தப்ப செக்ஸ்வல் அட்ராக்ஷன்ல வேற மாதிரி நினைப்பு வந்தது என்னமோ உண்மை தான்! ஆனா இந்த பதினாரு வயதினிலே, ஜானி படம் சின்னபுள்ள மூஞ்சி மனசுல பச்சக்னு ஒட்டிக்கிட்ட மாதிரி இல்லங்கிறது தான் இங்க நான் சொல்ல வர்றது! ம்..என்ன இருந்தாலும் அந்த காலம் திரும்பி வருமா!

சரி இவ்வளவு சொல்லிட்டு நம்ம இளையராஜாவை சொல்லலேன்னா எப்படி! சூப்பரா இந்த படத்திலே கிளப்பி இருப்பாரு! அதென்னமோ தெரியிலே மகேந்திரன் படத்துக்குன்னு பிரத்யோகமா ம்யூசிக் போட்டு கொடுத்துடுவாரு அப்ப எல்லாம்! அதுவும் ஜென்ஸி ஆண்டோனிங்கிற அம்மாவும் சும்மா தூள் கிளப்பன நேரம் அப்ப! அவங்க பாடின பாட்டு தான் இது, 1980ல வந்த படம் இந்த படம்! அநத காலகட்டத்திலே காலேஜ் படிச்சி திரிஞ்ச நம்ம சினேகதங்கெல்லாம் வந்து பாட்டை பார்த்துட்டு எப்படி இருந்தது உங்க காலம்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க! முக்கியமா தாணுவும் மதுமிதாவும் வந்து பார்த்துட்டு பின்னோட்டம் போட்டு குரல் கொடுங்க!

சரி ரொம்ப போரடிக்கல்ல, பாட்டை பார்த்துட்டு, பார்க்காத சின்னபுள்ளங்க எப்படி இருந்துச்சுன்னும் எழுதுங்க! என்ன சரியா!

12 comments:

said...

நாதர் நானும் மிக ரசித்த படம்+பாடல்கள் இது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை சன் டிவி இந்த படம் இருக்கு, பாருங்க.

ஜென்ஸி பாடின மற்றொரு பாடல், "தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்...." அதுவும் சூப்பர்.(உல்லாசப் பறவைகள்)

அப்புறம் உதிரிப்பூக்கள், அழகிய பெண்ணே உறவுகள் நீயே மகேந்திரன் இளையராஜா ஸ்பெஷல்.

நீங்கள் சொன்ன எல்லா காட்சிகளும் நானும் ரசித்தது ஜானியில். ஸ்கூல் படிக்கும் போது ரஜினி கமல் படங்க ளின் கட் ஆன பிலிம் எல்லாம் பேப்பரில் சுற்றி ஒட்டி வச்சுருப்பாங்க,10 பைசா கொடுத்து பிச்சு பார்க்கலாம். ஜானி படம் பிலிம் நான் நிறைய வாங்கியிருக்கேன். அதுல ஒரு பிலிம் நீங்க சொன்ன ஸ்லோமோஷனில் ஓடிவரும் ரஜினி என்ட ரொம்ப நாள் இருந்தது.

said...

வெளிகண்டநாதர், இந்த திரைப்படத் துண்டை இட்டு எங்கேயோ கூட்டிச் சென்று விட்டீர்கள். மிக்க நன்றி. இந்தப் படத்தை திருமணம் ஆன புதிதில் நாங்கள் இருவரும் செங்கல்பட்டு அங்கமுத்து தியேட்டரில் பார்த்து இரசித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. இந்த படமும் பாடல்களும் எனக்கும் மிகவும் பிடித்தவை.

said...

சார்,

பாடலுக்கு நன்றி.

said...

ஜானி, மகேந்திரனின், ரஜினியின் favourite படங்களில் ஒன்று. ஜென்சியின் குரல், இளையராஜாவின் இசை ஆகியவை அருமையாக இருக்கும். மகேந்திரனின் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் பின்னனியாகவோ அல்லது பாடுபவர் பாடகர்களாகவோ தான் இருக்கும். எப்பொழுது என் கணினியில் மெல்லிசைகள் கேட்டாலும், இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும்.

said...

வெ. நா,
விழிக்கும் செவிக்கும் விருந்தளித்தமைக்கு மிக்க நன்றி.

said...

மறந்து விட்டேனே, இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் பாத்திரப்படைப்பு அருமையாக இருக்கும். காதலித்தவன் திருடன் என்று தெரிந்த பிறகும் அவனை மறக்க முடியாமல், பாடுவதையே நிருத்தி விடும், சீவனுள்ள பாத்திரம். மறுபடியும் VCD-ல் பார்க்க தூண்டிவிட்டீர்கள்.

said...

மனசு, சின்ன வயசிலே அனுபவிச்ச இந்த மாதிரி சினிமா பாடல் காட்சிகளை அசை போடுவது ஒரு தனி சுகம் தான்!

said...

//இந்தப் படத்தை திருமணம் ஆன புதிதில் நாங்கள் இருவரும் செங்கல்பட்டு அங்கமுத்து தியேட்டரில் பார்த்து இரசித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.// கல்யாணம் பண்ணப் புதுசுல பார்த்த படங்கள் மனசை விட்டு அகலாது, மணியன்! ம்.. பழசை நினச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம் நான் உங்களுக்கு கொடுத்ததிலே ஒரு சந்தோஷம் தான்!

said...

சிவபாலன், பாட்டை ரசித்ததற்கு நன்றி!

said...

சீனு, படம் சன்ன் டிவியிலேயும் போட போறங்காளாம்! VCD வாங்கி இந்த மாதிரி படங்களை எல்லாம் 'எனக்கே எனக்குன்னு' வச்சிக்கிட்டா நல்லது தான்!

said...

வெற்றி, பழைய படங்கள், அந்த காலத்திலே பார்த்து ரசிச்சது எல்லாமே எப்பவும் விருந்து தான்!!

said...

லபக்தாஸ், ஜென்சி,, இப்ப கேரளாவிலே டீச்சரா இருக்கிறதா கேள்விபட்டேனே!